Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 30 June 2014

பள்ளியில் சிறப்பு வகுப்புகள்: பள்ளிக் கல்வித்துறை

பள்ளியில் சிறப்பு வகுப்புகள்: பள்ளிக் கல்வித்துறை
Posted: 29 Jun 2014 08:42 AM PDT

அரசு பள்ளிகளின் தேர்ச்சியை அதிகரிக்க கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளைஎடுத்து வருகிறது. இந்த ஆண்டு மாலை நேரம்
6ம் வகுப்பு முதல் பிளஸ் 2வரை மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடைபெறும். அதில் முக்கிய பாடங்களை படிக்க மற்றும் எழுத கற்பிக்கப்படும்.சிறப்பு தேர்வுகளும் நடத்தப்படும். இந்த சிறப்பு வகுப்புகள் ஜூலை மாதம்1ம் தேதி முதல் தொடங்குகிறது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சுமாராக படிக்கும் மாணவர்கள் மற்றும் கல்விதிறன் குறைவாக இருக்கும் மாணவர்கள் நடத்தும் பாடங்களை கவனிப்பது சிரமம் ஏற்படுகிறது. இதனால் இவர்கள் மீது தனி கவனம் செலுத்துவதற்காக சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. வாரத்தில் 5 நாட்களில் தினமும் 1 பாடம்என பிரித்துக்கொண்டு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்துவார்கள்.

Sunday, 29 June 2014

2014 ஜூலை மாத நாட்காட்டி

2014 ஜூலை மாத நாட்காட்டி
01-மருத்துவர்கள் தினம்/உலக சிரிப்பு தினம்
05-குறை தீர் சிறப்பு முகாம்
11-உலக மக்கள் தொகை தினம்
15-கல்வி வளர்ச்சி நாள்/காமராஜர் பிறந்த தினம்
24-வரையறுக்கப்பட்ட விடுப்பு
26-கார்கில் நினைவு தினம்
29-இரம்ஜான்

Saturday, 28 June 2014

காமராஜர்

காமராஜர்

காமராஜர் ஒருநாள்
வீட்டில் அமர்ந்து மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
.
அப்போது அவரை பார்க்க
ஒரு சிறுமியும் சிறுவனும் உள்ளே வந்தனர்.
.
பரட்டைத் தலையும் அழுக்குத் துணியும்
அவர்களின் நிலைமையைப் பறைசாற்றின.
.
பணியாளர் ஒருவர் அவர்களை அடித்து விட்டினார்.
கேட் வரை ஓடிய குழந்தைகள் தயங்கி தயங்கி நின்றார்கள்.
.
மீண்டும் வீட்டுக்குள்ளே வர முயன்றனர்.
.
தம்மை பார்க்க வந்த பிரமுகர்களை வாசல் வரை வந்து
வழியனுப்பிய பெருந்தலைவரின் கண்களில்
அந்த குழந்தைகள் பட்டுவிட்டனர்.

.
அடுத்த நிமிடம் உற்சாகம் பொங்க
என்ன யாரைப் பார்க்க வந்தீங்க என்று கேட்டபடி
அவரே குழந்தைகளிடம் வந்து விட்டார்.
.
சிறுமி தயங்கி பேசினாள். உங்களைத் தான் பார்க்க வந்தோம்.
.
எங்களுக்கு அப்பா இல்லை. அம்மா மட்டும் தான்.
அண்ணனுக்கு
டைப்ரைட்டிங் பரீட்சை பீஸ் கட்ட பணம் இல்லை.
.
உங்களை பார்த்தா உதவி செய்வீங்கன்னு
எல்லோரும் சொன்னாங்க அது தான் வந்தோம் என்றாள்.
.
அவர்களை அன்போடு தட்டிக்கொடுத்தபடி
அம்மா தான் அனுப்பிச்சாங்களா? என்று கேட்டார்.
.
இல்லை நாங்களாகத்தான் வந்தோம்.
அம்மா அப்பளம் போட்டு வீடு வீடா விக்கிறாங்க.
.
அதுல தான் எங்களை படிக்க வைக்கிறாங்க
என்று சிறுமி சொன்னதும் அதற்குமேல்
கேட்டுக்கொண்டிருக்க தலைவரால் முடியவில்லை.
.
அன்பு உள்ளம் உருகியது.
மாடிக்குச் சென்ற அவர் கையில் ஒரு கவருடன் வந்தார்.
.
சிறுமியிடம் கொடுத்து இதில் கொஞ்சம் பணம் இருக்கு.
.
அண்ணனுக்கு பீஸ் கட்டிடுங்க.
 அம்மா பேச்சை கேட்டு நல்ல பிள்ளைங்களா நடந்துக்கணும்
என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
.
மறுநாள் மீண்டும் அந்த குழந்தைகள் வந்தனர்.
.
வைரவன் குழந்தைகளை அழைத்து வந்தார்.
.
வாங்க... வாங்க.. என்று வாய் நிறைய வரவேற்றார் காமராஜர்.
.
பரீட்சைக்கு பணம் கட்டி விட்டோம் அய்யா.
.
அந்த ரசீதை அம்மா உங்களிடம் காட்டிட்டு வரச்சொன்னாங்க
என்று ரசீதை தலைவரிடம் சிறுமி நீட்டினாள்.
.
காமராஜர் கண் கலங்கி விட்டார்.
ஏழ்மையிலும் இவ்வளவு நேர்மையாப குழந்தைகள்
அவரை வணங்கினார்கள். அவர் குழந்தைகளை அன்போடு தட்டிக்கொடுத்துவாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார்

Friday, 27 June 2014

இட்லி சாப்பிடுங்கள்!

இட்லி சாப்பிடுங்கள்!
நாம் அடிக்கடி சாப்பிடும் டிபன் இட்லிதான் அந்த இட்லி சாப்பிடுவதினால் நன்மை என்ன?
என்று நம்மில் சில பேருக்கு தெரியாது இதோ தெரிந்து கொள்ளுங்கள்.
அரிசியையும் உளுத்தம் பருப்பையும் ஊறவைத்து பிறகு அரைத்து மறுநாள் காலையில் இட்லி, தோசையாகச் சாப்பிடுகிறோம்.
இது மிகச் சிறந்த இரண்டு மடங்கான சத்துணவு
என்று சமீபத்தில் உறுதிப் படுத்தியுள்ளன.
அரிசியிலும், உளுத்தம் பருப்பிலும் உள்ள வைட்டமின்கள்,
நார்ச்சத்துக்கள்,இரும்பு,கால்சியம்,பரஸ்பரஸ் போன்ற
உப்புக்கள் நோய் நச்சு முறிவு மருந்தாக உயர்கின்றன.
அமினோ அமிலங்களும் பன் மடங்கு அதிகரிக்கின்றன.
திசுக்களை பழுது பார்த்து புதுப்பிக்கும் லைசின் என்ற
அமினோ அமிலம் மூன்று மடங்கும் சிறுநீரகங்களின்
செயல்பாட்டுக்கு உதவும் காமா அமினோபட்ரிக் என்ற
அமினோ அமிலம் பத்து மடங்கும் அதிகரிக்கின்றன.
இதனால் இட்லி,தோசை முதலியவற்றில் இரவில் ஊற வைத்து சாப்பிடும் கொண்டை கடலையில் கிடைப்பது போல தாது உப்புக்களும், அமினோ
அமிலங்களும் கிடைக்கின்றன.
லைசின் அமிலம் பசி ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது இட்லி மூலம் இந்த அமிலம் உடனே கிடைப்பதால் பசியும் உடனே அகன்று மனத் திருப்தியும் கிடைக்கிறது.
இட்லி, தோசை வகைகள் முதலியவற்றை சாப்பிடும்
போது வைட்டமின் சி உள்ள முருங்கைக்கீரை பச்சடி,
முருங்கைக்காய் சாம்பார் நல்லது. அல்லது ஏதேனும் ஒரு கீரைப் பச்சடியும் தேவை. இல்லையெனில் புதினா,
கொத்தமல்லி போன்ற துவையல்.காரணம் லைசின் அமிலம் உடலில் பாதுகாப்பாக இருக்க உதவுவது வைட்டமின் சி தான் அது கீரைகளில் தாராளமாக
இருக்கிறது.
அதற்க்காக அதிகமாக சாப்பிடக்கூடாது அளவாகத்தான் சாப்பிட வேண்டும் 3 இட்லிக்கு மேல் சாப்பிட்டால் அது நல்லதள்ள எனவே அளவாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத் திற்க்கு நல்லது.
எனவே இட்லி,தோசை,அரிசி,கோதுமை சாதத்தை விடத் தரமான உணவுகள் என்பதை உணர்வோம்.

Thursday, 26 June 2014

அகமேற்பார்வை பயிற்சி

மா.க.ஆ.ப.நி - அரசு / அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்களுக்கு இரு நாட்கள் "அகமேற்பார்வை பயிற்சி" மாவட்ட அளவில் ஜுலை 8 முதல் ஜுலை 19 வரை நடைபெறவுள்ளது.

SCERT - TWO DAYS"SUPERVISING TRAINING" FOR MIDDLE SCHOOL HMs FROM JULY 7 TO 19 @ CONCERN DISTRICT LEVEL REG PROC CLICK HERE...

SCERT.642/E2/14 DT.24.06.14
Two Days Supervising Training for Govt/Aided Middle School HMs from July 7 to 19 @ concern district level.

DISTRICTS with 6 batches

Tanjore
Tiruvarur July 7&8
Dharmapuri July 9&10
Villupuram July 11&12
Cuddalore July 14&15
Perambalur July 16&17
Sivaganga July 18&19
Nilgiri
Krishnagiri
Trichy
Nagai
Ramnad
Karur
Tirunelveli


DISTRICTS with 5 batches

Namakkal
Dindigul
Virudhunagar
Erode July 8&9
Pudukottai
Vellore July 10&11
Madurai July 14&15
Kanyakumari
Chennai July 16&17
Coimbatore July 18&19
Theni
Salem
Kancheepuram
Tuticorin
Perambalur
Tiruppur

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!