Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 29 December 2014

அடுத்த கல்வியாண்டு முதல் கேரளாவில் டிஜிட்டல் புத்தகங்கள்

அடுத்த கல்வியாண்டு முதல் கேரளாவில் டிஜிட்டல் புத்தகங்கள்

திருவனந்தபுரம்:கேரள பள்ளிகளில், 'டிஜிட்டல்' பாடபுத்தகங்கள், அடுத்த கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. நாட்டிலேயே முதல் முறையாக, பள்ளிப் பாடங்கள் அனைத்தும், மல்டிமீடியா பாடங்களாக மாற்றப்பட்டு, காட்சிகள் மற்றும் ஒலிகள் மூலம் பாடங்கள்கற்றுக் கொடுக்கப்பட உள்ளன.

கேரளாவில், காங்கிரசை சேர்ந்த, உம்மன் சாண்டி முதல்வராக உள்ளார். பள்ளிப் பாடங்களை, டி.சி.டி., எனப்படும், 'டிஜிட்டல் கொலாபொரேடிவ் டெக்ஸ்ட்புக்' என்ற முறையில், அறிமுகம் செய்ய, முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. பாட திட்டத்தின் படி, ஒவ்வொரு வகுப்பிற்குமான பாடங்கள், டிஜிட்டல் பைல்களாக மாற்றப்பட்டு, அதனுடன் பிற ஒளி, ஒலி சேர்க்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் மூலம் மாணவர்கள் கற்றுக் கொள்ளுமாறு செய்யப்படும்.'டேப்ளட்' எனப்படும், சிறிய அளவிலான கம்ப்யூட்டர், 'இ-ரீடர்' எனப்படும், டிஜிட்டல் மயமாக்கப்பட்ட புத்தகங்களில் தொகுப்பு கருவி போன்றவற்றை பயன்படுத்தி, மாணவர்கள் பாடங்களை படிக்கலாம்.

அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த புதிய கல்வித் திட்டத்திற்காக, டேப்ளட் பிசி, இ-ரீடர் போன்றவை ஏராளமாக வாங்கப்பட உள்ளன. முதற்கட்டமாக, இந்த திட்டத்திற்கு, 50 கோடி ரூபாய்ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த புதிய திட்டத்தின் கீழ், 37 லட்சம் மாணவர்களுக்கும், இரண்டு லட்சம் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

எஸ்.எஸ்.சி ஆன்லைனில் நடத்த பரிந்துரை

எஸ்.எஸ்.சி ஆன்லைனில் நடத்த பரிந்துரை: 10 நாள்களுக்குள் கருத்து தெரிவிக்க அரசுத் துறைகளுக்கு உத்தரவு

மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) நடத்தி வரும் தேர்வு முறையை"ஆன்லைனில் நடத்துவது' உள்பட, நிபுணர் குழு அளித்துள்ள பரிந்துரைகள் குறித்து 10 நாள்களுக்குள் கருத்து தெரிவிக்க வேண்டும் என அனைத்து அரசுத் துறைகளுக்கும் மத்திய அரசு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, எஸ்எஸ்சி தேர்வு முறையை மேம்படுத்துவது தொடர்பாக மத்தியப் பணியாளர் தேர்வாணைய முன்னாள் உறுப்பினர் ஐ.எம்.ஜி. கான் தலைமையிலான நிபுணர் குழுவை மத்திய அரசு கடந்த பிப்ரவரியில் நியமித்தது. இக்குழு பல்வேறு நிலைகளில் ஆய்வு நடத்தி அதன் அறிக்கையை மத்திய அரசிடம் அளித்தது.

நிபுணர் குழு பரிந்துரைகள்:

தேசிய அளவிலான தேர்வு, அதில் தொழில்நுட்ப ரீதியாக எதிர்கொள்ளப்படும் பிரச்னைகள், எஸ்எஸ்சி தேர்வு தொடர்பான விழிப்புணர்வு, மத்திய ஆயுதக் காவல் படை (சிஏபிஎஃப்) பணிகளுக்கான தேர்வு முறைகள் ஆகிய மூன்று முக்கிய அம்சங்கள் குறித்து நிபுணர் குழு, அரசுக்கு சில பரிந்துரைகளை அளித்துள்ளது.மத்திய ஆயுதப் படைகள் தேர்வுக்கான "செயல் நடவடிக்கை குழு' ஏற்கெனவே அளித்திருந்த பரிந்துரைப்படி, +2 கல்வித் தகுதிக்கு கீழான கல்வித் தகுதிக்கானபணியிடங்களை எஸ்எஸ்சி நடத்தக் கூடாது என்று கூறியிருந்தது. அதை ஐ.எம்.ஜி. கான் தலைமையிலான குழு ஏற்றுக் கொண்டது.மேலும், "மத்திய உள்துறை ஒப்புதல் தெரிவித்தால், காவலர் போன்ற பணியிடங்களுக்கானதேர்வை மத்திய ஆயுதப் படையே நேரடியாக நடத்திக் கொள்ளலாம்.

மத்திய உள்துறை ஒப்புதல் தெரிவிக்காவிட்டால், நக்சல், தீவிரவாத அச்சுறுத்தல் நிலவும் மாவட்டங்கள் நீங்கலாக, பிற பகுதிகளில் "ஆன்லைன்' மூலம் எஸ்எஸ்சி தேர்வு நடத்தி 60 சதவீத இடங்களை நிரப்பலாம். மீதமுள்ள 20 சதவீத இடங்களை எல்லைப்புற மாவட்டங்களிலும், அடுத்த 20 சதவீத இடங்களை இடதுசாரிப் பிரிவினைவாதிகள் ஆதிக்கம் நிறைந்த மாவட்டங்களிலும் தேர்வெழுதுவோரிடம் விண்ணப்பம் பெற்று தேர்வு நடத்தலாம். இதில், முன்னேற்றம் ஏற்படாவிட்டால் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி இடங்களை நிரப்பலாம்' என்று நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.தேசிய அளவிலான தேர்வு, தொழில்நுட்ப முறை தொடர்பான பரிந்துரையில் "எஸ்எஸ்சி தேர்வை தாமதமின்றி ஆன்லைனில் நடத்த வேண்டும். யுபிஎஸ்சி தேர்வெழுதுவோர் முதல் முறையாகத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது ஆன்லைனில் அவர்களின் விவரங்களைப் பதிவு செய்வது போல, எஸ்எஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போதும் தேர்வெழுதுவோர் ஆன்லைனில் தங்கள் விவரங்களைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட வேண்டும்.

இதிலிருந்து வடகிழக்கு மாநிலங்கள், எல்லைகளில் தொலைத்தொடர்பு, இணையவசதி இல்லாத பகுதிகளில் இருந்து தேர்வெழுத விண்ணப்பிப்போருக்கு மட்டும் விலக்கு அளிக்கலாம்.எஸ்எஸ்சி தேர்வுக்கு "மொபைல் அப்ளிகேஷன்' மூலம் விண்ணப்பிக்கவும் அனுமதிக்கலாம்' என்று நிபுணர் குழு கூறியுள்ளது.ஆனால், இப்பரிந்துரை தற்போதைக்கு நடைமுறை சாத்தியமில்லை என்று மத்திய ஆயுதப்படைகளுக்கான செயல் நடவடிக்கை குழு கருத்துத் தெரிவித்துள்ளது. மற்றொரு பரிந்துரையில், "வினாத்தாள் கட்டுப்பாட்டை முழுமையாக எஸ்எஸ்சி நேரடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். பல்வேறு வகைகளில் வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு, அதை வெவ்வேறு மையங்களுக்கு கலவை முறையில் அனுப்ப வேண்டும். தவறான பதில் அளிப்போருக்கு"மதிப்பெண் குறைப்பு' நடவடிக்கை கட்டாயமாக்கப்பட வேண்டும்' என்று நிபுணர் குழு கூறியுள்ளது.

வாட்ஸ்ஆப் ப்ளஸ் செயளி பற்றி தெரியுமா உங்களுக்கு

வாட்ஸ்ஆப் ப்ளஸ் செயளி பற்றி தெரியுமா உங்களுக்கு

வாட்ஸ்ஆப் ப்ளஸ் செயளி வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் புதிய செயளி தான், முந்தைய செயளியை விட அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள வாட்ஸ்ஆப் ப்ளஸ் செயளி இணையங்களில் பதிவிறக்கம் செய்ய முடியும்.
பழைய வாட்ஸ்ஆப் மற்றும் புதிய வாட்ஸ்ஆப் ப்ளஸ் ஒரே கருவியில் பயன்படுத்த முடியாது. ஏற்கனவே உங்க கருவியில் வாட்ஸ்ஆப் இருந்தால் புதிய வாட்ஸ்ஆப் ப்ளஸ் செயளியை பதிவிறக்கம் செய்ய முடியாது.

முந்தைய செயளியை ஒப்பிடும் போது புதிய செயளியின் டிஸ்ப்ளே வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் சில சிறப்பம்சங்கள் இவை தான்...

பதிவிறக்கம் செய்யக்கூடிய தீம்கள்:
இந்த செயளியில் இருந்து மட்டும் சுமார 1000 தீம்களை பதிவிறக்கம் செய்ய முடியும்.

திரை வடிவமைப்பு:
உங்களுக்கு பிடித்தமாதிரியான வடிவமைப்புகளை மாற்றியமைக்கலாம். இது போன்ற மேலும் சில சிறப்பம்சங்கள் இந்தசெயலியில் இருக்கின்றது. அவைகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள். மேலும் இந்த செயளியை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஆங்கிலத்தில் மார்க் அள்ளுவது எப்படி?

ஆங்கிலத்தில் மார்க் அள்ளுவது எப்படி?
           மொழிப்பாடங்களில் ஒப்பீட்டளவில் தமிழை விட எளிமையானது ஆங்கிலம். தமிழ் அளவுக்கு மெனக்கெடல் ஆங்கிலத்தில் தேவையில்லை. ஆங்கிலத்தை ஊன்றிப் படிப்பவர்களால் இதை உணர முடியும்.
கை கொடுக்கும்
தொழிற்கல்விக்கான கட் ஆஃப் மதிப்பெண்களில் பலர் ஒரே புள்ளிகளைப் பெறும்போது, பிறந்த தேதிக்கு அடுத்தபடியாக ஆங்கிலத்தில் எடுக்கும் மதிப்பெண் முன்னுரிமையாகக் கொள்ளப்படும். அதனால், தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்காதவர்கள் கூட ஆங்கிலத்தில் அதிக மதிப்பெண்கள் பெற உழைப்பார்கள். கட்டுரை மற்றும் பாராகிராஃப் அளவான விடைகளைத் தரவேண்டிய வினாக்கள் தவிர இதர பகுதிகளில் மதிப்பெண்களைக் குறைப்பதற்கு அதிக வாய்ப்பேயில்லை. எனவே கூடுதல் மதிப்பெண்களைக் குவிக்க ஆங்கிலமே அதிகம் கைகொடுக்கும்.

சராசரியானவர்கள், சிறப்பிடம் பெறுபவர்கள் என சகல மாணவர்களுக்கும் பயனளிக்கும் குறிப்புகளை இங்கே வழங்குகிறார், புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆங்கில முதுகலையாசிரியர் எம்.சலீம்.
பொதுவானவை
ஆங்கிலத்தின் 2 தாள்களையும் பொறுத்தவரை, நேரம் தாராளமாக இருக்கும் என்பதால், அனைத்துப் பகுதிகளிலும் நன்றாகத் திட்டமிட்டு எழுதி, சரிபார்த்தாலே அதிக மதிப்பெண்கள் பெறலாம். தேர்வின் தொடக்கத்தில் கிடைக்கும் 15 நிமிடங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
பெரும்பாலானோர் தான் படித்த கேள்விகள் வந்திருக்கிறதா என்று பார்ப்பதோடு சரி, முழு வினாத்தாளையும் படிப்பது இல்லை. அப்படிப் படித்துத் பார்த்தால் கவனக்குறைவால் நிகழும் ஒன்றிரண்டு மதிப்பெண்கள் இழப்பைத் தடுக்கலாம். கவனக்குறைவால் கட்டுரைகள் மற்றும் பாராகிஃராப் அளவிலான விடைகளை மாற்றி எழுதிவிடுவார்கள். E.R.C-ல் Poem அடையாளம் காண்பதில் அலட்சியம் காரணமாக மதிப்பெண்களை இழக்க நேரும்.
Presentation மற்றும் கையெழுத்தில் கவனம் செலுத்துவது , மொழிப்பாடத்துக்கு மிகவும் முக்கியம். இடமில்லை என்று வாக்கிய முடிவில் ஒரு வார்த்தையை உடைத்து, அடுத்த வாக்கியத்தின் தொடக்கமாக எழுதுவது கூடாது. பக்கத்தின் கடைசியில் ஒரு சில வரிகள் எழுதவே இடம் இருக்கிற நிலையில் புதிய பிரிவுக்கு விடை எழுத ஆரம்பிப்பதைவிட, கால் பக்கத்துக்குக் குறைவான அந்த இடங்களை பென்சிலால் அடித்துவிட்டு அடுத்த பக்கத்தில் எழுதுவது நல்லது. படிப்பது, எழுதிப் பார்ப்பது போன்ற பயிற்சிகள் மூலமே ஆங்கிலத்தில் எழுத்துப் பிழைகளை தவிர்க்க முடியும். சரியான கேள்வி எண்ணைக் குறிப்பிட்டிருக்கிறோமா என்று தேர்வின் இறுதியில் சரிபார்க்க வேண்டும்.
முதல்தாள்- குறிப்புகள்
முதல் 10 வினாக்கள் Synonyms, Antonyms போன்ற ஒரு மதிப்பெண் வினாக்களில் அனைவரும் முழு மதிப்பெண்களைப் பெறலாம். இதற்கு ஒவ்வொரு பாடத்தின் முடிவில் இருக்கும் Glossary-யைத் தொடர்ந்து படித்து வருவதும், முந்தைய தேர்வு வினாத்தாள்களில் பயிற்சி பெறுவதுமே போதும். அடுத்த 10 வினாக்கள், தலா 2 மதிப்பெண்ணுடன் 20 மதிப்பெண்களைத் தரக்கூடிய, எளிமையான ஆங்கில இலக்கணம் பற்றிய வினாக்கள்.
இதில் மதிப்பெண் இழப்பது, அலட்சியம் காட்டுபவர்களுக்கு மட்டுமே நேரும். கேள்வி எண் 13-ல் Abbriviations, Acronym ஆகியவற்றில் எழுத்துப் பிழை அதிகம் வரும் என்பதால் சராசரி நிலையில் உள்ள மாணவர்கள், அவற்றை சாய்ஸில் விடலாம். கே.எண் 23-ல் Clipped word மற்றும் Sentence என 2ஐயும் எழுத மறப்பது பெரும்பாலானோரின் வாடிக்கையாக இருப்பதால், அதில் கவனம் அதிகம் இருக்கட்டும். இந்த 2 மார்க் வினாக்களிலும் முழு மதிப்பெண்கள் பெற பாட இறுதியில் இருக்கும் பயிற்சிகளை அவ்வப்போது திருப்புதல் மேற்கொண்டாலே போதும்.
கீழ் வகுப்புகளில் இருந்தே அடிப்படையான ஆங்கில இலக்கணத்தில் தேர்ந்தவர்கள், அடுத்த 10 வினாக்களுக்கும் எளிதில் முழு மதிப்பெண்கள் பெறலாம். மற்றவர்களுக்குச் சற்றுக் கூடுதல் பயிற்சி தேவை. கே.எண் 36, 37,38 ஆகியவற்றில் முழு மதிப்பெண்கள் பெற பாடநூலில் 294 -297 பக்க பயிற்சிகளில் தேறினாலே போதும். அதிக மதிப்பெண்களை எதிர்பார்ப்பவர்களுக்கு இப்பகுதிகளில் கவனம் வேண்டும். பிரிவு C-ன் 15 மதிப்பெண்களைப் பெற, வாசித்து அர்த்தம் புரிந்தாலே போதும், முழு மதிப்பெண்கள் பெறலாம்.
அடுத்ததாக Poem (20மார்க்) பிரிவில் கெய்டுகளை விட, சொந்தமாக ஒரு நோட்டில் தனக்கான வகையில் தயார் செய்து அவற்றை கெய்டாகப் பாவிப்பது மதிப்பெண்களை அள்ளித்தரும். E.R.C தலா 3 மதிப்பெண் கேள்வியில், Poem மற்றும் Poet பெயர் எழுதினாலே 2 மதிப்பெண் கிடைக்கும். விரிவாக எழுதுபவர்களுக்கு கூடுதலாக 1 மதிப்பெண்தான். Poem அடையாளம் காண, ஆசிரியர் சொல்லித்தரும் Key words களை நினைவில் நிறுத்தப் பழகுங்கள்.
2-ம் தாள்- குறிப்புகள்
2-ம் தாளில் 20 மதிப்பெண்களுக்கு (Aural and Oral skills) திட்டமிட்டுத் தயாராவதன் மூலம் 80 மதிப்பெண்களையும் எளிதாக வசமாக்கலாம். தேர்வுத்தாள் திருத்துபவர் விடையின் கூறுகளுக்குத் தனி மதிப்பெண்களை வழங்குவார் என்பதால், உள்ளடக்கம் சுமாராக எழுதினாலும் தொடக்கம் முதல் முடிவு வரை, ஆசிரியரின் அறிவுறுத்தலின்படி விடைக்கான கூறு நிலைகளைச் சரியாக அதன் வரிசைப்படி எழுதுவதன் மூலமே மதிப்பெண்களை அள்ளலாம்.
7 துணைப்பாடங்கள்(Non-details) உள்ளடங்கிய பாடங்களை ஆசிரியர் நடத்தும்போதே நன்றாகக் கவனித்துக், கதைகளை அதன் நிகழ்வுகள், பெயர்களோடு உள்வாங்கியிருந்தாலே போதும், சராசரி மாணவர்களுக்குக் கூட மதிப்பெண்கள் உத்திரவாதம் உண்டு. 25 மதிப்பெண்களுக்கான பிரிவு ஏ-க்கு கட்டுரை தவிர்த்து, ஏனையவற்றில் இந்த வகையில் மதிப்பெண் பெறலாம். பிரிவு-B Study Skills-ல் சிறு கவனக்குறைவால் மதிப்பெண்களை இழப்பார்கள். உதாரணத்திற்கு இமெயில் குறித்த பதிலில் வெப்சைட் எழுதுபவர்கள் அதிகம். இதே பிரிவில் வரும் spot the errors, 5 மதிப்பெண்களையும் அடிப்படை இலக்கண அறிவுடன் எளிதில் அள்ளலாம்.
பிரிவு C-ல் 5 மதிப்பெண்ணுக்கான Summary Writing பதில் எழுதுகையில் Title, Rough copy, Fair copy ஆகிய கூறுகளை முன்வைப்பதன் மூலமே 4 மார்க் பெற்றுவிடலாம். அதே போல அடுத்து வரும் 10 மார்க்கிற்கான Wanted (கே.எண்:24)கேள்வியிலும் From, to, Salutation, Body, Biodata கூறுகள் மூலமே 10 மார்க் பெற்றுவிடலாம். அடுத்த 15 மார்க்கிற்கான பிரிவு D-யிலும் (Non-Lexical Fillers மற்றும் Road map)ஓரளவு பொது அறிவோடு அணுகினால் போதும்.
கட்டுரைகள் கவனம்:
சராசரி மாணவர்கள் தவிர்ப்பதும், நன்றாகப் படிப்பவர்கள் சறுக்குவதுமான கட்டுரை பகுதிக்குத் தனிக்கவனம் வேண்டும். முதல்தாளில் பிரிவு டி, ஒன்றிரண்டு மதிப்பெண்கள் குறைக்க வாய்ப்புள்ள கட்டுரை மற்றும் பாராகிஃராப் அடங்கியது. இதில் ஆங்கில வழி மாணவர்கள் கூட சுலபமாக மதிப்பெண் இழப்பார்கள். அலட்சியம், அவசரம் ஆகியவற்றாலே பிழைகள் நேர வாய்ப்புள்ளது என்பதால், சொந்தமாக எழுதுவதைத் தவிர்க்கலாம்.
அப்படிச் சொந்தமாக எழுதுவதாக இருப்பின், முன்பே தயார் செய்ததை ஆசிரியரிடம் சரிபார்த்த பிறகு அவற்றைப் படித்து எழுதுவது சிறப்பு. சொந்த வார்த்தைகளைவிட, பாடத்தின் சொற்களஞ்சியத்தையே பின்பற்றலாம். இவை பிழைகளை தவிர்க்க உதவும். மேலும், முக்கிய இடங்களை வேறு நிற மையினால் (நீலம் அல்லது கறுப்பு) எழுதி வேறுபடுத்தி காட்டுவது, பென்சிலால் அடிக்கோடிடுவது, ஏற்கனவே பயிற்சி செய்த மேற்கோள்களை (Quotations)பயன்படுத்துவது ஆகியவை ஒன்றிரண்டு மதிப்பெண் இழப்பையும் தவிர்க்கும்.
நன்றாகப் படிப்பவர்கள், எல்லோரும் பதிலளிக்க வாய்ப்புள்ள முதல் பாட கேள்விகளை சாய்ஸில் விட்டு, இதர பாடங்களை எழுதுவது தனித்தன்மையைப் பறைசாற்றும். தாமதமாகத் தேர்வுக்குத் தயாராகுபவர்கள் முதல் 2 பாடங்களை மட்டுமே ஊன்றிப் படித்து கட்டுரை, பாராகிஃராப் வினாக்களை எதிர்கொள்ளலாம். பிரிவு E, poetry பகுதியில், 3-ல் 1 என சாய்ஸில் எழுதலாம் என்பதால், முதலிரண்டு poemக்கான paragaraphs தயார் செய்தாலே போதும்.
இது தற்போதுதான் படிக்க ஆரம்பித்திருக்கும் மாணவர்களுக்கான யோசனை மட்டுமே. 2-ம்தாளில் கட்டுரைக்கான கே.எண்: 12-ல், கதைதானே என்று கதைவிடுதல் கூடாது. படித்து சென்று எழுதுவதே நலம். சொந்தமாக எழுதும் மீத்திறன் மாணவர்கள் கூட, தங்களது சொல்லாக்கத்தில் பாடப்பகுதி சொற்களஞ்சியத்திலிருந்து கட்டுரையாக்குவது நல்லது. சராசரி மாணவர்கள் கட்டுரைகளைத் தவிர்த்து விடுவார்கள். கொடுத்திருக்கும் குறிப்புகளை வைத்தே எழுத வேண்டிய கட்டுரை என்பதால், 10 மதிப்பெண் கேள்வியைத் தவிர்க்காது எழுதுவது மதிப்பெண் சரிவைத் தடுக்கும்.
பிரிவு-F,10 மார்க் பொதுக்கட்டுரையில், வெறுமனே கதையாக அல்லாது தகவல்கள் நிரம்பிய தனிப்பட்டவை மற்றும் அறிவியல் தொடர்பான தலைப்புகளை சாய்ஸில் தெரிந்தெடுத்து எழுதுவது மார்க் குறைக்க வாய்ப்பளிக்காது. மேற்கண்ட தலைப்புகளில் முன்பே தயார் செய்து அவற்றை எழுதுவதே தவறுகளையும் தவிர்க்கும்.

சத்துணவு ஊழியர் சம்பள முரண்பாடு தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சத்துணவு ஊழியர் சம்பள முரண்பாடு தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
   ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா கடம்பூரை சேர்ந்த சண்முகசுந்தரம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

       சத்துணவு அமைப்பாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வெளியிடப் பட்ட அரசாணையில் உள்ள முரண்பாடுகளை களைய 28.2.2011ல் ஒரு கமிட்டி ஏற்படுத்தப்பட்டது.ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக பி.காம். படித்த நான், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறேன்.

      ஆனால், என்னுடன் பணியில் சேர்ந்த பெண் சத்துணவு அமைப்பாளர்கள் பலர் ரூ.20 ஆயிரம் சம்பளத்துடன் 2ம் நிலை கண்காணிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர். எனவே, சம்பள முரண்பாட்டை போக்க அமைக்கப்பட்ட கமிட்டி முடிவை விரைவில் வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி டி.ராஜா, மனு குறித்து சமூக நலத்துறை முதன்மை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் மாற்றம் வருமா? - எதிர்பார்ப்பு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் மாற்றம் வருமா? - எதிர்பார்ப்பு
         பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை - கிராமப்புற மாணவர்கள் பாதிப்பு

           கடந்த சில நாட்களுக்கு முன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டது. இந்த அட்டவணை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

           பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 19ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டடுள்ளது. இந்த ஆண்டு வழக்கத்தை விட 15 நாட்கள் முன்னதாகவே தேர்வுகளை தொடங்குவது மாணவர்களுக்கு அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 12ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 31ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் அதனிடையே பத்தாம் வகுப்பு தேர்வை நடத்த வேண்டிய அவசியம் என்ன என கல்வியாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். இதனால் செலவு குறையும் என  கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டாலும், தேர்வு விவகாரங்களில் இது போன்ற நடவடிக்கை தவறென என குறிப்பிடுகின்றனர். ""தமிழக அரசு ஆண்டுதோறும் பல கோடி ரூபாய்களை மாணவர்கள் நலனுக்காக பள்ளிகள் தொடங்குவதிலும், விலையில்லா திட்டங்களை நிறைவேற்றுவதிலும் செலவிடுகிறது. இதனை ஒப்பிடுகையில் 10ம் வகுப்பு தேர்வை முன்கூட்டியே நடத்துவதன் மூலம் மிக சொற்பமான தொகையையே மிச்சப்படுத்த இயலும். மாணவர்களின் எதிர்கலத்தை பாதிக்கக்கூடிய தேர்வு விஷயத்தில் கல்வித்துறை கவனமாக இருக்க வேணடும்,'' என்று குறிப்பிடுகின்றனர். மேலும் தேர்வை முன்கூட்டியே நடத்துவதால், பட்டதாரி ஆசிரியர்கள் கண்காணிப்பு மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு முன்னதாகவே சென்றுவிடுவர். இதனால் 6 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாதிப்பு எற்படும்.

           தேர்வு அட்டவணையில் ஆங்கிலத்தேர்வுக்கு விடுமுறை எதுவும் அறிவிக்கப்படவில்லை. தனியார் சுயநிதி பள்ளிகளில் மாணவர்கள் ஆங்கில வழி கல்வி கற்பதால் அவர்கள் ஆங்கிலத் தேர்வை எளிதில் எதிர்கொள்ள இயலும். ஆனால் கிராமப்புறங்களில் அரசுப்பள்ளி மாணவர்களின் நிலையோ பரிதாபமானது. இது குறித்து அரசுப்பள்ளியில் பணியாற்றும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் ஒருவர் குறிப்பிடும் போது, ""9ம் வகுப்பு வரை முப்பருவ கல்விமுறையில் பயின்ற மாணவர்கள் இந்த ஆண்டு தான் 100 மதிப்பெண் தேர்வுகளை எதிர்கொள்ள உள்ளனர். குறிப்பாக ஆங்கில பாடத்தில் கேள்வித்தாள் முற்றிலுமாக மாறியிருக்கும். இந்நிலையில் ஆங்கிலத்தேர்வுக்கு விடுமுறை இல்லை என அறிவித்திருப்பது கண்டிப்பாக தேர்ச்சி விகிதத்தை பாதிக்கக்கூடிய நடவடிக்கை. இதனால் தேர்ச்சி விகிதம் குறைந்தால் ஆசிரியர்களே பலிகடா ஆக்கப்படுவர்கள். அடுத்த ஆண்டு நடைபெறும் ஆய்வுக்கூட்டங்களில் தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகளிடம் காரணம் கேட்கும் போது, பொதுத்தேர்வு அட்டவணையை காரணமாக கூறக்கூடாது என அறிவுறுத்தப்படும். இந்த அட்டவணை ஆங்கில ஆசிரியர்கள் மற்றும் கிராமப்புற மாணவர்களிடையே கடுமையான குழப்பத்தை எற்படுத்தியுள்ளது, '' என்று குறிபிடுகிறார்.

          பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் மாற்றம் வருமா என மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

TET Posting...அரசுக்கு கண்ணீருடன் கோரிககை....... அரசுக்கு கண்ணீருடன் கோரிககை.......

TET Posting...அரசுக்கு கண்ணீருடன் கோரிககை.......
அரசுக்கு கண்ணீருடன் கோரிககை.......

         கலப்பு திருமணம் மற்றும் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட2010-2011 ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரியிடையாக தேர்ந்து எடுக்கப்பட்ட ஆசிரியர்கள் மத்தியில் பீதி...மிகுந்த மன வேதனையில் ஆசரியர்கள்..... பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களை கவனிக்க முடியாமல் மனவேதனை..

           செப்டம்பர் மாதம் பள்ளி கல்வி துறை இயக்குனர் அவர்களால் வெளியடபட்ட ஒரு  அரசானையே காரணம்..

        ஆகஸ்ட் 2010 க்கு முன் சான்றிதழ் சரிபார்க்கபட்டு அதற்கு பின்னரும் வேலையில் சேர்ந்த ஆசரியர்கள் மட்டும் தகுதி தேர்விலிருந்து விளக்கு அளிக்கப்பட்டு அவர்களின் தகுதிகாண் பருவும் மட்டும் உடன் முடித்து தருமாறு அறிவுறுத்த பட்டுள்ளுது...

             ஆகஸ்ட் 2010 முன்னர் மே மாதம் மட்டும் ஒரு முறை மட்டும் நடந்துள்ளது.. ஆனால் அதற்கு பிறகு அதே அரசானையில் GO NO:62,GO.NO:152 & GO NO 153 (தேதி O3 -06-2010) ,அதே காலி பணியடத்தை காண்பித்து நவம்பர்-2010 ,டிசம்பர் 2010 மற்றும் பிப்ரவரி 2011 நடைபற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று ஆசரியர்களாக பணியில் சேர்த்துள்ளவர்களின் நிலை மிகவும் கவலை அடையசெய்துள்ளது..

         இவர்களுக்கான பணி முன்னரே தொடங்கியுள்ளது .அரசானை வெளியடப்பட்டது மற்றும் பணிகள் தொடங்கப்பட்டது அனைத்தும் ஆகஸ்ட்  2010  முன்னர், மேலும் வேலைவாய்ப்பு அலுவலகம் எங்களது பெயரை  தேர்ந்து எடுத்து  அரசு அனுப்பிய கடித எண் ஜூன் 2010 மாதமே ,வெளியடப்பட்டுள்ளது. எனினும் பணிகள் முன்ன்னரே நடந்திருந்தாலும் எங்களுக்கு மட்டும் தகுதி தேர்விலிருந்து விலக்கு கிடைக்கவில்லை...

         நவம்பர் 2010  ,டிசம்பர் 2010 மற்றும் பிப்ரவரி 2011 நடைபற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று ஆசரியர்களாக பணியில் சேர்த்துள்ளவர்களின் தகுதிகாண் பருவம்,பயன்கள் எதுவும் கிடைக்காமல்,மேலும் மருத்துவ விடுப்பு கூட கிடைக்காமல் மூன்று வருடங்களாக எந்த பயனும் இல்லாமல் நாங்கள் தவித்து வருகிறோம்.

         எனவே அரசு மே,நவம்பர்,டிசம்பர் 2010,மற்றும் பிப்ரவரி 2011சான்றிதழ் சரிபார்த்தவர்கள் அனைவருக்கும் விலக்கு அளித்து அரசானை வழங்க உதவவேண்டும். மதுரை நீதிமன்றம் ஜூலை 2013 வெளியிட்ட தீர்ப்பில் மே 2010 முதல் பிப்ரவரி 2011 வரை சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்கள் தகுதி தேர்வு எழுத தேவையில்லை என தீர்ப்பு வழங்கி உள்ளது...

       கலப்பு திருமணத்தை வரவேற்கும் அரசு....எங்களையும் வாழ வழி காணவேண்டும். கலப்பு திருமணம் செய்து கொண்டதால் சமூகம் மற்றும் உறவினர்களால் ஒதுக்கப்பட்டு வேதனையுடன் இருந்த போது எங்களுக்கு உதவி செய்து அரசு எங்களின் வாழ்க்கை மேம்பட உதவ வேண்டுகிறோம்...

அரசு  ஆசரியர்கள் மனக்கவலையை தீர்க்க வேண்டும்..

     5000 ஆசரியர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பணிபுரிந்து,  அரசின் நல்ல முடிவை எதிர்பார்த்து உள்ளோம்... அரசின் கடை கண் இவர்கள் மீது விழுமா...  நன்றியுடன்...ஆசிரிய சமூகம்..

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!