Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 12 January 2014

இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி?


நம்மூரில் வரிசையில் நின்று ஏதேனும்
வேலையை முடிப்பது சத்திய
சோதனை மாதிரிதான். கரண்ட் பில்
கட்டணங்களை ஆன்
லைனிலேயே செலுத்துவது கஷ்டமா?
“இல்லை’ என்று சொல்லி அதற்கான
வழிமுறைகளைச் சொல்கிறார்
மின்வாரிய ஊழியர் ஜெய்சங்கர்.
1. தமிழ்நாடு மின்சார வாரியத்தின்
இணைய தளமான www.tneb.inக்குப்
போகணும். இதன் முகப்பில் உள்ள
www.tangedco.gov.inங்கிற இணைய தளத்தைத்
தேர்ந்தெடுத்து, இதில் நம்மைப்
பதிவு பண்ணிக்குறதுதான் முதல்
ஸ்டெப்.
முதல்முறையா கட்டணம் செலுத்த
மட்டுமே ரிஜிஸ்ட்ரேஷன் தேவை.
2. இந்த இணைய தளத்தின் முகப்புப்
பக்கத்தில் உள்ள “பில்லிங் சர்வீஸ்’ங்கிற
ஆப்ஷனை நெருங்கினாலே, மேலும் சில
ஆப்ஷன்கள் அடங்கிய லிஸ்ட் தெரியும்.
3. அதில் “ஆன்லைன் பில் பேமண்ட்’ங்கிற
ஆப்ஷனைத் தேர்வு செய்யணும்.
புதுசா திறக்கிற பக்கத்தில்
“நியூ யூசர்’ங்கிற ஆப்ஷனை க்ளிக்
செஞ்சா, பதிவு பண்றதுக்கான ஸ்டெப்கள்
ஒன்றன் பின் ஒன்றாக வரும். எந்த
முகவரிக்குக் கட்டணம்
செலுத்துறோமோ அதன் “ரீஜன் நம்பர்’
முதலில் கேட்கப்படும் உதாரணமா,
கோடம்பாக்கம்ன்னா அதன் ரீஜன் நம்பர் 225.
எந்தெந்த ஊர்கள் எந்த ரீஜன்களில் வரும்ங்கிற
விவரங்களை இதே பக்கத்தில்
“மை ரீஜன்’ங்கிற பகுதிக்குப் போய்
தெரிஞ்சுக்கலாம்.
4. நம்மோட மின் இணைப்பு எண்ணை டைப்
பண்ணணும்.
5. சில
விதிமுறைகளுக்கு உட்பட்டு யூசர்
நேமும் பாஸ் வேர்டும் கொடுக்கணும்.
6. நம்மோட செல்போன் நம்பர், இமெயில் ஐடி,
மின் இணைப்பைப் பயன்படுத்துபவரின்
பெயர், முகவரி போன்ற விவரங்களைக்
கொடுக்க வேண்டும்.
7. நமக்கு அக்கவுண்ட் தயார்ங்கிறதைத்
தெரிவிக்கும் வகையில் ஒரு யூஆர்எல்
லிங்க் நம்மோட மெயில்
ஐடிக்கு அனுப்பப்படும். இனி இந்த
அக்கவுண்ட்டைப் பயன்படுத்தி நாம்
ஆன்லைனிலேயே மின் கட்டணம்
செலுத்தலாம். ஒவ்வொரு முறையும்
கரண்ட் ரீடிங் முடிஞ்ச பிறகு, செலவான
யூனிட் அளவு, மின்கட்டணம், செலுத்த
வேண்டிய கடைசி தேதி ஆகிய விவரங்கள்
அடங்கிய இமெயில் நமக்கு வரும். கட்டிய
தொகைக்கான ரிசிப்ட் பெறுவதற்கான
வசதியும் இணைய தளத்தில் இருக்கு.
ஆன்லைன் வசதியைப் பயன்படுத்தி அடுத்த
மாத
மின்கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தவ
ும் முடியும்.
ஒரே அக்கவுண்ட்டை பயன்படுத்தி பல மின்
இணைப்புகளுக்குக் கட்டணம்
செலுத்தலாம்.

Employment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?


தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்த நிலையில், தற்போது
அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும். ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய
தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும்.

இன்று நாம் புதியதாக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி என்று பார்ப்போம். இதற்கு குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், 10th (or) 12th மதிப்பெண் அட்டை கண்டிப்பாக
கையில் வைத்திருத்தல் வேண்டும். முதலில் இணையதள முகவரி www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று

click here for new user ID registration என்று இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதில் I agree என்று சொடுக்கி அடுத்து வரும்
பக்கத்தில்

பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர், ஈமெயில் முகவரி, user id என்ற இடத்தில் புதியதாக ஒரு ID கொடுக்கவும், பின்பு அப்பா பெயர், பிறந்த தேதி, குடும்ப அட்டை
எண்ணையும் Image Code என்ற இடத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் codeஐ கொடுத்து Save செய்தால் உங்களுகென்று ஒரு ID Create ஆகி விடும். அடுத்து வரும்
பக்கத்தில்

உங்களது Personal detail, Contact detail, Qualification detail, Technical detail ஆகியவற்றை பூர்த்தி செய்து Save செய்தால் உங்களது Register Number
Create ஆகிவிடும்.

குறிப்பு 1 : Qualification detail பூர்த்தி செய்தவுடன் add என்று பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும் அதில் கிளிக் செய்து Save
கொடுக்கவும். இதே போன்று Technical Detailம் செய்ய வேண்டும்.

குறிப்பு 2 : மேலே சொன்ன அனைத்தும் முடிவடைந்தவுடன் Home பகுதிக்கு சென்று பார்த்தால் Print ID Card என்று இருக்கும் அதை கிளிக் செய்து பிரிண்ட் எடுத்து
கொள்ளலாம்.

குறிப்பு 3 : ஏதேனும் தவறாக செய்திருந்தால் Home பகுதியில் Modify Contact இருக்கும் அதில் சென்று மாற்றி கொள்ளலாம்.

குறிப்பு 4 : Update Profileல் சென்று Renewal செய்து கொள்ளலாம்.

Renewal செய்வதற்கான குறிப்பு :
உதாரணத்திற்கு Register Number இப்படித்தான் இருக்கும்.

Register Number : RPD2013M00007502

வேலைவாய்ப்பு அலுலகத்தின் குறியீட்டு எண்: ARD - என்பது ( வேலைவாய்ப்பு அலுவலகம், RAMANATHAPURAM )
பதிவு செய்த ஆண்டு : 2013
ஆண் / பெண் : M
பதிவு எண் : 7502

பதிவு எண் என்பது 8 இலக்க எண்ணாக இருத்தல் வேண்டும், அப்படி இல்லாமல் 4 இலக்க எண்ணாக இருந்தால் முன்னதாக 4 பூஜ்ஜியங்களை சேர்த்துக்கொள்ளவும்.

User ID : RPD2013M00007502
Password : dd / mm / yyyy

கடவு சொல்லில் உங்களது பிறந்த தேதியை கொடுக்கவும்.
உங்களது ID CARD இப்படிதான் இருக்கும்..
Photo: Employment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி? தெரிந்து கொள்வோம் தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்த நிலையில், தற்போது அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும். ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும். இன்று நாம் புதியதாக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி என்று பார்ப்போம். இதற்கு குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், 10th (or) 12th மதிப்பெண் அட்டை கண்டிப்பாக கையில் வைத்திருத்தல் வேண்டும். முதலில் இணையதள முகவரி www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று click here for new user ID registration என்று இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதில் I agree என்று சொடுக்கி அடுத்து வரும் பக்கத்தில் பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர், ஈமெயில் முகவரி, user id என்ற இடத்தில் புதியதாக ஒரு ID கொடுக்கவும், பின்பு அப்பா பெயர், பிறந்த தேதி, குடும்ப அட்டை எண்ணையும் Image Code என்ற இடத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் codeஐ கொடுத்து Save செய்தால் உங்களுகென்று ஒரு ID Create ஆகி விடும். அடுத்து வரும் பக்கத்தில் உங்களது Personal detail, Contact detail, Qualification detail, Technical detail ஆகியவற்றை பூர்த்தி செய்து Save செய்தால் உங்களது Register Number Create ஆகிவிடும். குறிப்பு 1 : Qualification detail பூர்த்தி செய்தவுடன் add என்று பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும் அதில் கிளிக் செய்து Save கொடுக்கவும். இதே போன்று Technical Detailம் செய்ய வேண்டும். குறிப்பு 2 : மேலே சொன்ன அனைத்தும் முடிவடைந்தவுடன் Home பகுதிக்கு சென்று பார்த்தால் Print ID Card என்று இருக்கும் அதை கிளிக் செய்து பிரிண்ட் எடுத்து கொள்ளலாம். குறிப்பு 3 : ஏதேனும் தவறாக செய்திருந்தால் Home பகுதியில் Modify Contact இருக்கும் அதில் சென்று மாற்றி கொள்ளலாம். குறிப்பு 4 : Update Profileல் சென்று Renewal செய்து கொள்ளலாம். Renewal செய்வதற்கான குறிப்பு : உதாரணத்திற்கு Register Number இப்படித்தான் இருக்கும். Register Number : RPD2013M00007502 வேலைவாய்ப்பு அலுலகத்தின் குறியீட்டு எண்: ARD - என்பது ( வேலைவாய்ப்பு அலுவலகம், RAMANATHAPURAM ) பதிவு செய்த ஆண்டு : 2013 ஆண் / பெண் : M பதிவு எண் : 7502 பதிவு எண் என்பது 8 இலக்க எண்ணாக இருத்தல் வேண்டும், அப்படி இல்லாமல் 4 இலக்க எண்ணாக இருந்தால் முன்னதாக 4 பூஜ்ஜியங்களை சேர்த்துக்கொள்ளவும். User ID : RPD2013M00007502 Password : dd / mm / yyyy கடவு சொல்லில் உங்களது பிறந்த தேதியை கொடுக்கவும். உங்களது ID CARD இப்படிதான் இருக்கும்..

நமக்கு தேவையான பயனுள்ள இணையதள முகவரிகள்


01. இந்தியதேர்தல் ஆணையம் – இணையதள முகவரி
http://www.elections.tn.gov.in/eroll
02. த‌கவல அறியும் உரிமைச் சட்டம் (RTI Act) – இணையதள முகவரி
http://www.rtiindia.org/forum/content/
03. இந்திய அரசின் இணையதள முகவரி
http://india.gov.in/
04. தமிழ்நாடு அரசின் இணையதள முகவரி
http://www.tn.gov.in/
05. உச்சநீதி மன்றத்தின் இணையதள முகவரி
http://supremecourtofindia.nic.in/
06. தமிழ்நாடு காவல்துறையின் இணையதள முகவரி
http://www.tnpolice.gov.in/
07. நீதிமன்றங்கள் (இந்தியா) இணையதள முகவரி
http://www.hcmadras.tn.nic.in/
08. இந்திய இரயில்வே-ன் இணையதள முகவரி
http://www.indianrailways.gov.in/indianrailways/indexhome.jsp
09. இந்திய தூதரம் – இணையதள முகவரி
http://www.indianembassy.org/
10. தமிழக அரசு பதிவுத்துறை இணைய தள முகவரி
http://www.tnreginet.net/
11. இந்திய பொது விவகாரத்துறை – இணையதள முகவரி
http://www.mca.gov.in/
12. சென்னை மாநகராட்சியின் இணைய தள முகவரி
http://www.chennaicorporation.gov.in/
13. தமிழ்நாடு – வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணைய தள முகவரி
http://tnvelaivaaippu.gov.in/EmploymentExchange/login/loginFrame.jsp
14. இந்திய அஞ்சல் (தபால் துறை) இணையதள முகவரி
http://www.indiapost.gov.in/nsdefault.htm
15. இந்திய சுற்றுலா – இணையதள முகவரி
http://www.incredibleindia.org/index.html
16. தமிழ்நாடு சுற்றுலா – இணையதள முகவரி
http://www.tamilnadutourism.org/
17 தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணைய தள முகவரி
http://www.tneb.in/

தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி....?

மொபைல் போன்கள் நமக்கு மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்ட இந்த் காலத்தில் அவற்றை பாதுகாப்பாய் வைத்திருக்க வேண்டியதும் அவசியமாகிறது. இதில் மிக முக்கியமாக தண்ணீரில் விழுந்த போனை எப்படி சரி செய்வதுஎன்று பார்ப்போம்.

சிலர் போன் தண்ணீரில் விழுந்த உடன் அவசர அவசரமாக ரெண்டு உதறு உதறி விட்டு உடனே ஆன் செய்து விடுவார்கள்.இதை மட்டும் நீங்கள் செய்யவே கூடாது.

உங்கள் போனில் இருந்து பாட்டரி, சிம்கார்ட் ,மெமரி கார்டு ஆகியவற்றை முதலில் கழட்டி விடவும். பின்னர் துணி அல்லது டிஸ்யூ பேப்பர் கொண்டு வெளி பாகங்களை துடைக்கவும்.

உங்கள் வீட்டில் Vaccum cleaner இருந்தால் அதனை Suction mode இல்வைத்து இப்போது உங்கள் போனை காட்டவும் இதனால் தண்ணீர் ஆவியாகி விடும்.

Vacuum cleaner இல்லை என்றால் கவலை வேண்டாம். உங்கள் வீட்டில் அரிசி வைத்து இருக்கும் பாத்திரம் இருந்தால் அதில் உங்கள் போனை வைத்து போன் தெரியாதபடி முழுவதுமாக மூடி விடவும். இதனால் தண்ணீர் முழுவதுமாக அரிசியால் ஈர்க்கப்பட்டு விடும். ஆனால் இதற்கு பொறுமை மிக அவசியம்.(குறைந் த பட்சம் இரண்டு மணி நேரம் ).

அத்துடன் ஏதேனும் சூடான கருவி கொண்டு கூட பாதுகாப்பாக நீரை எடுக்க முயற்சி செய்யலாம். Hairdryer போன்றவற்றை முயற்சி செய்யலாம்.

போன் நன்றாக காய்ந்த பின் அதில் நீர் இல்லை என்று உறுதி செய்து கொண்ட பின் அதை ஆன் செய்ய முயற்சிக்கவும். பெரும்பாலும் ஆன் ஆகிவிடும், இல்லை என்றால் வேறு பேட்டரி இருந்தால் அதை போட்டு முயற்சி செய்யவும். அப்போதும் ஆன் ஆனால் போன் ஓகே, பேட்டரி பிரச்சினை. அப்போதும் இல்லை என்றால் கடைக்காரரிடம் கொண்டு போய் கொடுக்கவும்

டிஇடி சான்று சரிபார்க்கும் பணி

டிஇடி சான்று சரிபார்க்கும் பணி வரும் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் நடைபெறுகிறது

              டிஇடி சான்று சரிபார்க்கும் பணி வரும் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் நடைபெறுகிறது. முதுநிலை பட்டதாரிகளை நியமிப்பதற்கான போட்டித் தேர்வின் இரண்டாவது தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.
 
             இதில் தாவரவியல், வரலாறு, வணிகவியல், வேதியியல், இயற்பியல் உட்பட 5  பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் டிஆர்பி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுதவிர, ஆசிரியர் தகுதி தேர்வில் தாள் ஒன்று தாள் இரண்டு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்று சாரிபார்க்கும் பணிகள் வரும் 20ம் தேதி முதல் 28 வரை  தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் நடக்கிறது. இதற்கான அழைப்பு கடிதங்கள், தேர்ச்சி பெற்றவர்களின் விபரங்கள் ஆசிரியர் தகுதி தேர்வு இணைய தளத்தில்  வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் 8 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு அதை விட 2400 கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ரிலாக்ஸ் ப்லீஸ்

ஒரு தந்தைக்கும், மகனுக்கும் இடையில் நடந்த ஒரு சிறிய சம்பவம். அனைவரும் கொஞ்சம் இத படிங்க!!

மகன் : அப்பா உங்க கிட்ட ஒரு கேள்வி கேக்கலாமா?

தந்தை: கேளேன்...

மகன் : ஒரு மணி நேரத்திற்கு நீங்கள் எவ்வளவு சம்பாதிகிறீர்கள்?

தந்தை: 100 டாலர் ...

மகன் : அப்படீனா எனக்கு 50 டாலர் தாங்கப்பா!

தந்தைக்கு மிகவும் கோபம் ஏற்பட்டது. ஆனாலும் மறுக்க முடியாமல் 50 டாலரை மகனிடம் கொடுத்தார்.

மகன் சிரித்த முகத்தோடும், சந்தோசமாகவும் அந்த பணத்தை வாங்கி கொண்டான். அப்படியே தனது தலையணைக்கு கீழே கை போட்டு அங்கிருந்த வேறு சில பணத்தை எடுத்தான்.

தந்தை: உன்கிட்ட நிறைய பணம் இருக்குத்தானே, பின் எதுக்காக என்னிடம் கேட்டாய்?

மகன் : முன்பு என்கிட்ட போதுமான பணமில்ல... அதான். ஆனா இப்ப என்கிட்ட 100 டாலர் இருக்கு. உங்க நேரத்துல ஒரு மணி நேரத்த நான் வாங்கி கொள்ளலாமா? நாளைக்கு நேரத்தோட வீட்டுக்கு வாங்க அப்பா. உங்க கூட சேர்ந்து உட்கார்ந்து ஒன்னா சாப்பிடனும்.

தந்தைக்கு மிகவும் கவலையும், கண்ணீரும் வந்தது. அப்படியே ஸ்தம்பித்து போனார். உடனே மகனை தனது நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கண்ணீர் மல்க, தன்னை மன்னிக்கும்படி வேண்டினார்.

இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் விசயம் என்னவென்றால் "தன்னை நேசிப்பவர்களுக்கு காட்டப்படும் அன்பை விட 100 டாலர் ஒன்றும் பெரிதல்ல".

குடும்பத்துக்காக உழைக்கும் நீங்கள் குடும்பங்களின் சந்தோசத்தையும் கவனியுங்கள். சில மணி நேரத்தை உங்கள் குடும்பத்தோடு செலவழியுங்கள். நாளை நாம் மரணித்தால் நாம் பணி புரிந்த நிறுவனம் நமக்கு பதிலாக வேறொருவரை பணிக்கு அமர்த்திக் கொள்ளும். ஆனால் நமது குடும்பம் துக்கத்தோடும், துயரத்தோடும் நம்மை எண்ணி எண்ணி வாழுமே! இதை யோசித்தீர்களா?

ரொம்ப யோசிக்க வேண்டாம்... நாளையெனும் .... நாளை ... பிறகு இல்லாமேலே போகலாம்.

TRB NEWS

புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்கும் விழாவை, விரைவில் நடத்துவதற்கு வசதியாக, தேங்கிக் கிடந்த பல தேர்வுகளின் முடிவை, ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடியாக வெளியிட்டது. பட்டதாரி ஆசிரியர் விடைத்தாள் அனைத்தையும், மறு மதிப்பீடு செய்து, நான்கு மதிப்பெண் கிடைக்க, வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது, ஏற்கனவே, 88, 89 மதிப்பெண் பெற்று, தோல்வி அடைந்த தேர்வர்களிடம், மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மறு மதிப்பீடு காரணமாக, தோல்வி அடைந்த தேர்வர், 2,500 பேர் வரை, தேர்ச்சி பெற்றுள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.
15 ஆயிரம் ஆசிரியருக்கு, பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சியை, பிரமாண்டமாக நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, அரசு முடுக்கி விட்டுள்ளதால், பல மாதங்களாக தேங்கியிருந்த தேர்வு முடிவுகள், இரு நாட்களாக, வரிசையாக வெளியிடப்பட்டன.
மேல்நிலை பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர் நியமனத்தில், முதலில், தமிழ் பாடத்திற்கு மட்டும், இறுதி தேர்வு பட்டியல் வெளியானது. காலை, ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட, 10 பாடங்களுக்கான மறு மதிப்பீட்டு முடிவை, டி.ஆர்.பி., வெளியிட்டது.இயற்பியல், வேதியியல், தாவரவியல், வரலாறு மற்றும் வணிகவியல் ஆகிய, ஐந்து பாடங்களுக்கான புதிய தேர்வு பட்டியல், நள்ளிரவு, வெளியானது.இவர்களுக்கு, ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து விட்டதால், பணி நியமன பட்டியல் தயாராக உள்ளது.
டி.இ.டி., முதல் தாள் (இடைநிலை ஆசிரியர்) மற்றும் இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) முடிவு மட்டும், நவம்பர், 5ல் வெளியானது. ஆனால், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவில்லை. சிலர் வழக்கு தொடர்ந்ததால், அடுத்தகட்ட நடவடிக்கைகள் முடங்கின.இந்நிலையில், கோர்ட் உத்தரவுப்படி, டி.இ.டி., முதல் தாள் தேர்வர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை,டி.ஆர்.பி., அறிவித்தது.
கோர்ட் உத்தரவின் அடிப்படையில், இரண்டாம் தாள் விடைத்தாள் அனைத்தையும், மறு மதிப்பீடு செய்து, புதிய தேர்வு முடிவை, டி.ஆர்.பி., வெளியிட்டது. இதில், தேர்வர்களுக்கு, நான்கு மதிப்பெண் கூடுதலாகக் கிடைக்க, வழிவகை செய்யப்பட்டுள்ளது. இரு கேள்விகளுக்கான விடையில், முதலில், ஒரு விடை மட்டுமே சரி என தெரிவித்திருந்த நிலையில், தற்போது, கூடுதலாக இரண்டு மற்றும் மூன்று விடைகளில் ஒன்றை, 'டிக்' செய்திருந்தாலும், மதிப்பெண் வழங்கப்படும் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.மேலும், 'ஏ' வகை கேள்வித்தாளில், 20வது கேள்வி மற்றும் 108வது கேள்வி, நீக்கப்பட்டுள்ளன. ஆனால், இதற்கு, தலா, 1 மதிப்பெண் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த இரு கேள்விகளுக்கு, விடை எழுதாதவர்கள் மற்றும் தவறாக எழுதியவர்களுக்கு, இரண்டு மதிப்பெண் கிடைக்கும். சரியான விடையை குறிப்பிட்டவர்களுக்கு, மதிப்பெண்ணில் மாற்றம் வராது.ஏற்கனவே, 88, 89 மதிப்பெண் எடுத்து தோல்வி அடைந்த, 2,500 தேர்வர், இந்த மறு மதிப்பீடு காரணமாக, தேர்ச்சி பெறுவர் என, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.
முடிவுகள் அனைத்தும் வெளியானதால், டி.இ.டி., தேர்வர்களுக்கு, 20ம் தேதி முதல், 27ம் தேதி வரை, அனைத்து மாவட்டங்களிலும், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இதற்கான கடிதங்கள், www.trb.tn.nic.in என்ற டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.தேர்வர், தங்கள் பதிவு எண்களை பதிவு செய்து, சான்றிதழ் சரிபார்ப்பு கடிதத்தை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.தேங்கிக் கிடந்த தேர்வு முடிவுகள் அனைத்தும் வெளியாகி விட்டதால், சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின், டி.இ.டி., இறுதி தேர்வு பட்டியல் வெளியாகும். இம்மாத இறுதிக்குள் அனைத்தும் முடிந்து விடும் என்பதால், பிப்ரவரி, முதல் வாரத்தில், பணி நியமன விழா நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் அதிரடி நடவடிக்கையால், தேர்வர்கள், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று தேசிய இளைஞர் தினம்

இந்திய கலாசாரம், பண்பாட்டை உலகுக்கு எடுத்துக்காட்டிய சுவாமி விவேகானந்தர் பிறந்த தினமான ஜன., 12ம் தேதியை இந்திய அரசு 1984ல் தேசிய இளைஞர் தினமாக அங்கீகரித்தது. இத்தினத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஊர்வலம், பேச்சுப்போட்டி, ஒப்புவித்தல் , இசை, கருத்தரங்குகள், யோகா, கட்டுரைப் போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகள் போன்றவை நடத்தப்படுகின்றன. ஒரு நாட்டின் எதிர்காலமே இளைஞர்கள் கையில் தான் உள்ளது. ஏனெனில் இளைஞர்களின் வளர்ச்சிக்கு ஏற்ப தான் நாட்டின் வளர்ச்சியும் அமைகிறது. நாட்டின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளது.

150வது பிறந்த தினம்: விவகானந்தர் 1863 ஜன., 12ம் தேதி கோல்கட்டாவில் பிறந்தார். இன்று இவரது 150வது பிறந்த தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இவரது இயற்பெயர் நரேந்திரநாத். இளம் வயதில் பிரம்மசமாஜத்தில் உறுப்பினரானார். தட்சணேஸ்வரத்தில் ராமகிருஷ்ணரை சந்தித்த விவேகானந்தர், அவரது தலைமை சீடரானார். 1893ல், அமெரிக்காவின் சிகாகோவில் நடந்த சர்வதேச அனைத்து சமய மாநாட்டில் "சகோதர, சகோதரிகளே' என அழைத்து அவர் பேசியது, இந்தியர்களின் இறை உணர்வையும், ஒழுக்க வாழ்க்கை முறைகளையும் உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் அமைந்தது. இதனால் உலகம் போற்றும் உன்னத ஆன்மீக நெறியாளராக விவேகானந்தர் கருதப்படுகிறார்.

விவேகானந்தரின் பார்வையில்: "ஒரு இளைஞன் தேசப்பற்று, வீரம், ஒழுக்கம், மனிதநேய பண்புகள், தளர்ந்து போகாத நெஞ்சம், உத்வேகம், பெரியவர்கள் மீது அன்பு மற்றும் மரியாதை போன்றவற்றைக் கொண்டிருந்தால் அந்த நாடும் முன்னேறும்' என்று விவேகானந்தர் கூறினார். மேலும் "நாட்டுப்பற்று மிக்க நூறு இளைஞர்களை தாருங்கள்... இந்தியாவையே உயர்த்திக் காட்டுகிறேன்' என்றார். இதிலிருந்து விவேகானந்தர் எந்த அளவிற்கு இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பது தெளிவாகிறது.

எதிர்பார்ப்பு:

இளைஞர்கள் சிலர் மது, புகையிலை மற்றும் போதை பழக்கத்துக்கு ஆளாகின்றனர். இதிலிருந்து விடுபடுவதற்கு அரசு தகுந்த விழிப்புணர்வு, வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இன்றைய இளைஞர்கள் தேசப்பற்று, அர்ப்பணிப்பு, விளையாட்டு, கல்வி போன்றவற்றில் திறமையானவர்களாக உள்ளனர்.

திசைகாட்டியாக இருக்க வேண்டிய இளைஞர்கள், திசை மாறாமல் ஆக்கப்பூர்வ பணிகளில் ஈடுபட்டு, நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என,

இத்தினத்தில் உறுதிமொழி எடுப்போம்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!