Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 19 January 2014

முருகனுக்குரிய வேறு பெயர்களும் அதன் பொருளும்

முருகனுக்குரிய வேறு பெயர்களும் அதன் பொருளும் தெரிந்து கொள்வோம்.

1. முருகன் - அழகன்.
2. பிள்ளையார் - சிவனுக்குப் பிள்ளை. தற்போது கணபதிக்குரிய இப்பெயர் முற்காலத்தில் முருகனுக்கும் இருந்தது என்கிறார் நச்சினார்க்கினியர்.
3. சித்தன் - அன்பர்களுக்கு ஸித்தியை வழங்குபவன்.
4. சேயோன் - செந்நிறம் உடையவன்.
5. வேள் - எல்லாரலும் விரும்பப்படுபவன், நீண்ட புகழ் <உடையவன்.
6. வேலன் - வெற்றி தரும் வேலை உடையவன். அரன் மகன் - சிவனின் புத்திரன்.
7. அறுமீன் காதலன் - கார்த்திகை மாதர்களால் வளர்க்கப்பட்டவன்.
8. அறுமுகன் - ஆறு முகங்களை உடையவன்.
9. குரு - சிவனுக்கு பிரணவமாகிய ஓம் என்பதன் பொருள் <உரைத்தவன்.
10. கோழிக்கொடியோன் - சேவலைக் கொடியாக உடையவன்.
11. கங்கை மைந்தன் - தீப்பொறிகளைச் சுமந்த கங்கையின் மகன்.
12. கடம்பன் - கடம்ப மலர் மாலை உடையவன், நித்ய சுத்தமானவன்.
13. கந்தன் - வலிமையான தோள்களை உ<டையவன், பார்வதியால் ஒன்று சேர்க்கப்பட்டவன்.
14. காங்கேயன் - கங்கை மைந்தன்
15. கார்த்திகேயன் - கார்த்திகைபெண்களால் வளர்க்கப்பட்டவன்.
16. குகன் - மலைக்குகைகளில் குடி கொண்டிருப்பவன், பக்தர்களின் மனக்குகையில் இருப்பவன்.
17. குமரன் - சிவனின் மைந்தன், அருவருப்பை அழிப்பவன், ஆணவத்தைப் போக்குபவன்.
18. குழகன் - அழகன், இளமையானவன்.
19. குறிஞ்சி வேந்தன் - மலைகளில் ஆட்சி புரிபவன், மலை போல் உயர்ந்த மனங்களில் இருப்பவன்.
20. குன்றெறிந்தோன் - கிரவுஞ்ச மலையைத் தகர்த்தவன்.
21. கவுரி நந்தனன் - உமாதேவியின் மைந்தன்.
22. சண்முகன் - ஆறு முகம் கொண்டவன்.
23. சரவணபவன் - நாணற்புல் நிறைந்த பொய்கையில் தோன்றியவன்.
24. சிலம்பன் - காலில் சிலம்பணிந்தவன், மலைகளில் இருப்பவன்.
25. சுரேசன் - துன்பம் நீக்குபவன்.
26. சூர்ப்பகைவன் - எதிரிகளுக்கு அச்சமூட்டுபவன்.
27. செட்டி - உப்பூரிகுடி கிழார் மகனாய் செட்டி மரபில் தோன்றியவன்.
28. சேந்தன் - சிவப்பு நிறமுடையவன்
29. சேவற்கொடியோன் - சேவலைக் கொடியில் தாங்கியவன்.
30. தெய்வானை காந்தன் - தெய்வானையின் கணவன்.
31. தேவசேனாபதி - சேனைக்குத் தலைவன்.
32. பாவகி, பாவகாத்மஜன் - பரிசுத்தம் உடையவன்.
33. மஞ்ஞையூர்தி - மயிலை வாகனமாகக் கொண்டவன்.
34. மாயோன் மருகன் - திருமாலின் மருமகன்.
35. வள்ளி மணாளன் - வள்ளியின் கணவன்.
36. பாகுலேயன் - கார்த்திகேயன்.
37. விசாகன் - வைகாசி விசாக நட்சத்திரத்தில் பிறந்தவன், மயலில் சஞ்சரிப்பவன்.
38. சங்கத்தலைவன் - கலைகளை உணர்ந்த புலவன்.
39. சாமி - செல்வன்.
40. முத்தையன் - முத்துப்போல் சிறந்தவன், மாபெரும் குரு.
41. சுப்பிரமணியன் - வேதங்களின் தலைவன், ஆனந்தமயமான சிவனிடமிருந்து பிறந்தவன்.

திறனாய்வுத் தேர்வு சிறப்பு பயிற்சி

திறனாய்வுத் தேர்வு எழுதும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் முறையாக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


           பள்ளிகளில் படிக்கும் திறமையான மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்காக தேசிய திறனாய்வுத் தேர்வு, தேசிய வருவாய் மற்றும் திறன் தேர்வு, கிராமப்புற மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு என பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

         தேசிய வருவாய் மற்றும் திறன் தேர்வு 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காக நடத்தப்படும் தேர்வு ஆகும். இந்த தேர்வை அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் மட்டும் எழுதலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

மாதம் ரூ.500 உதவித் தொகை

           இந்த தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு முடிக்கும் வரை மாதந்தோறும் ரூ.500 உதவித் தொகை வழங்கப்படும். தேசிய வருவாய் மற்றும் திறன் தேர்வு மூலமாக தமிழ்நாட்டில் 6,695 பேருக்கு உதவித் தொகை கிடைக்கும்.

          2014-ம் ஆண்டுக்கான தேர்வு வரும் பிப்ரவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு 57 ஆயிரம் பேர் திறனாய்வுத் தேர்வு எழுதினர். இந்த ஆண்டு திறனாய்வுத் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தேர்வுத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

சிறப்பு பயிற்சி

         ஒரு பள்ளியில் இருந்து குறைந்தது 10 மாணவர்களை தேர்வு எழுதச் செய்யுமாறு தலைமை ஆசிரியர்கள் அறி வுறுத்தப்பட்டு இருக்கிறார்கள். திறனாய்வுத் தேர்வில் அதிக மாணவர்களை பங்கெடுக்கச் செய்யுமாறு மாநகராட்சி கல்வி அதிகாரிகளுக்கு தேர்வுத் துறை கடிதமும் அனுப்பியுள்ளது.

            திறனாய்வுத் தேர்வு, வழக்கமான பாடத் தேர்வு போல் இல்லாமல் மாணவர்களின் சிந்தனைத் திறன் மற்றும் படைப்பாற்றலை அறியும் வகையில் அமைந்திருக்கும். இதை கருத்தில் கொண்டு திறனாய்வுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல்முறையாக சிறப்பு பயிற்சி அளிக்க அரசு தேர்வுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம்

              அந்தந்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன (டயட்) முதல்வர்கள், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பர். அதைத் தொடர்ந்து, பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் திறனாய்வுத் தேர்வு குறித்து மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்து வார்கள் என்று அரசு தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இட்லி, தோசை மாவு

 கடந்த 10 ஆண்டுகளில் இட்லி, தோசை மாவை விலைக்கு விற்கும் பழக்கம் விரிவடைந்துக் கொண்டே போகிறது. இட்லி, தோசை மாவு விற்கப்படுவதால் ஒரு புறம் பெண்களின் வேலைச்சுமை குறைகிறது. மறுபுறம் வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்டும் தொழிலாக மாவு விற்பனை நடைபெறுகிறது.மேலும் சிறிய மளிகைக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை இட்லி, தோசை மாவு பாக்கெட்டுகளில் கிடைக்கிறது. இந்த மாவு ஒரு உயிர்கொல்லி – ஸ்லோ பாய்ஸன் என்பது ஏனோ பலருக்கும் தெரிவதில்லை.இதன் பின் விளைவுகளை சற்று அலசிப் பார்த்தால் நம் உதிரமும் உறைந்து போகும் அளவிற்கு அதிபயங்கரமான விளைவுகள் தெரிய வருகின்றது! 1. 6 நாட்கள் வரை புளிப்பு வாசனை வராமல் இருக்க,நம் உடலில் ஏற்படும் காயத்திற்கும்,புண்ணிற்கும், கேரம் போர்ட் விளையாட பயன்படுத்தும் Boric Acid, ஆரோட் மாவு போன்றவற்றைக் கலந்து விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். 2. அதாவது ஒரு நாளைக்கு 3 – 6 மணி நேரம் அரைக்க வேண்டிய கிரைண்டர்கள், 12- 18 மணி நேரம் தொடர்ந்து ஓட்டுவதால் அந்த கல் கொஞ்சம் கொஞ்சமாக தேய்மானம் ஏற்பட்டு மாவுடன் கலந்து விடுகின்றது. இதனால் சிறு நீரகத்தில் கல் உண்டாகும் அபாயம் இருக்கின்றது. 3. என்னதான் நல்ல அரிசி உளுந்து போட்டாலும் நல்ல தண்ணீரை ஊற்றி தான் மாவு அரைக்க வேண்டும். ஆனால் பெரும்பாலும் உவர்தன்மையைக் கொண்ட கிணத்தடி தண்ணீர் மற்றும் உப்பு தண்ணிரே பயன்படுத்தப்படுகின்றது. 4. நம் முன்னோர்கள் இட்லிக்கு மாவு அரைக்கும்போது ஒரு கை வெந்தயத்தை போட்டு அரைப்பார்கள். வெந்தயம் ஒரு இயற்கையான நோய் நிவாரணி( ஆண்டி பயாடிக்) இது, உடம்பு உஷ்னம், வாய் நாற்றம், குடல் புண்(அல்சர்) போன்ற நோய்களைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது.கடை மாவில் யாரும் வெந்தயத்தை சேர்ப்பதில்லை! மேலும், பால், தயிறு, முட்டை, காய்கறி, மாட்டிறைச்சிகளில் கானப்படும் ஈகோலி (E-COLI) எனப்படும் ஒருவகை பாக்டீரியாவானது,( – 24 )மைனஸ் 24 டிகிரிக்கு கீழே இருந்தால் தான் கொஞ்சமாவது கட்டுபடும் அவ்வகை பாக்ட்டீரியாக்கள் மாவுகளில் உருவாகி சிலருக்கு சாப்பிட்டவுடன் ஃபுட் பாயிஸன் என்றும், சிலருக்கு ஸ்லோ பாய்ஸனாக உடலில் கலந்து உயிரையேக் கொல்லும் அபாயமும் உள்ளது. எனவே தாம் சென்னை மாநகராட்சி கடைகள்,மற்றும் மாவுஅரைக்கும் இடங்களில் பரவலாக சோதனை (ரெய்டு) நடத்தி தரம் குன்றிய மாவுகளைக் கைப்பற்றி,அபராதமும் விதித்து வருகின்றது. எனவே,நமக்கு நன்கு தெரிந்த கலப்படம் செய்யாத நேர்மையானவர்கள் அரைத்து விற்பனை செய்யும் இட்லி,தோசை மாவுகளை மட்டும் வாங்குவதோடு,முன்,பின் தெரியாதவர்கள் தயாரித்து கடைகளில் விற்கும் மாவுகளை முற்றிலுமாகத் தவிர்ப்பது நலம்

வீட்டின் மாடியில் காய்கறித் தோட்டம்

வீட்டின் மாடியில் காய்கறித் தோட்டம் அமைக்க 50 சதவீத மானியம் வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

"நீங்களே செய்து பாருங்கள்' என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம் முதல் கட்டமாக சென்னை மற்றும் கோவையில் புதன்கிழமை (டிச.18) தொடங்கப்பட்டது.

இதற்கான தொடக்க விழா வேளாண்துறை அமைச்சர் செ.தாமோதரன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இந்தத் திட்டத்தின் கீழ், வீட்டு மாடியில் தோட்டம் அமைக்கத் தேவையான காய்கறி விதைகள், உரங்கள், பாலிதீன் பைகள் உள்ளிட்டவை 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகின்றன.

என்னென்ன காய்கறிகள்: கத்தரி, வெண்டை, தக்காளி, மிளகாய், அவரை, கொத்தவரை, முள்ளங்கி, கீரைகள், கொத்தமல்லி ஆகியவற்றை மாடி தோட்டத்தில் வளர்க்கலாம்.

இந்த செடிகள் அனைத்தையும் வளர்க்க மொட்டை மாடியில் 160 சதுர அடி இடம் இருந்தால் போதுமானது. இதற்கான மகசூல் காலம் 30 நாள்களில் இருந்து 6 மாதங்கள் வரை ஆகும்.

மாடித் தோட்டம் அமைப்பதன் மூலம் 1 கிலோ முதல் 15 கிலோ வரை காய்கறிகள் மற்றும் கீரைகளை மகசூலாகப் பெறலாம். இதற்கு தேவையான பொருள்கள் மானிய விலையில் தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன.

மானியமாக கிடைக்கும் பொருள்கள்: 2 கிலோ தேங்காய் நார் கழிவுடன் கூடிய 20 பாலிதீன் பைகள், 9 வகையான காய்கறிகளின் விதைகள், 6 வகையான உரங்கள், மண் கரண்டி, மண் அள்ளும் கருவி, நீர்த் தெளிப்பான், பிளாஸ்டிக் பூவாளி, குழித்தட்டுகள் மற்றும் பாலிதீன் விரிப்புகள் உள்ளட்டவை மாடித் தோட்டம் அமைக்க தேவையான பொருள்களாகும்.

ரூ.2 ஆயிரத்து 414 மதிப்பு கொண்ட அந்த பொருள்களை, 50 சதவீத மானியத்தில் ரூ.1,207-க்கு தமிழக அரசு வழங்குகிறது. ஒரே நபருக்கு 5 முறை மானிய விலையில் தோட்டம் அமைக்கத் தேவையான மூலப் பொருள்கள் வழங்கப்படும்.

எங்கு அணுகுவது?: சென்னை - தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகம், மாதவரம், சென்னை - 51. தொலைபேசி: 044 - 25554443.

கோவை - தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகம், 8, தடாகம் சாலை, கோவை - 641013, தொலைபேசி: 0422 - 2453578.

www.tnhorticulture.tn.gov.in என்ற தோட்டக்கலைத் துறையின் இணையதளம் வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம்.

முன்னதாக இந்த திட்டத்தின் தொடக்க விழாவில் அமைச்சர் தாமோதரன் பேசியது:

இந்தியாவில் காய்கறி உற்பத்தி அதிகரித்ததற்கு தமிழகத்தின் பங்கு மிக முக்கியமானது. உற்பத்தி திறனில் தேசிய அளவில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.

சென்னை மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள நகரவாசிகள், தங்களுடைய வீட்டின் மொட்டை மாடியில் காய்கறித் தோட்டம் அமைப்பதற்காக ரூ.5 கோடி செலவில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை வெற்றி பெறச் செய்வதில் பெண்களுக்கு பெரும்பங்கு உள்ளது என்றார் அவர்.

மாடி தோட்டம் அமைக்கும் திட்டத்தின் தொடக்க விழாவில் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி பேசியதாவது: இந்த திட்டம் சென்னை மற்றும் கோவையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு தேவையான உரங்களைத் தயாரிக்க சென்னையில் அதிக வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால் இங்கு உணவுக் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள், மக்கும் குப்பைகள் என அனைத்து விதமான குப்பைகளும் கிடைக்கின்றன.

இந்த திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த சென்னை மாநகராட்சி தனி கவனம் செலுத்தும் என்று மேயர் தெரிவித்தார்.
— with Shiek Fareeth and 5 others.
Photo: வீட்டின் மாடியில் காய்கறித் தோட்டம் அமைக்க 50 சதவீத மானியம் வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. "நீங்களே செய்து பாருங்கள்' என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம் முதல் கட்டமாக சென்னை மற்றும் கோவையில் புதன்கிழமை (டிச.18) தொடங்கப்பட்டது. இதற்கான தொடக்க விழா வேளாண்துறை அமைச்சர் செ.தாமோதரன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இந்தத் திட்டத்தின் கீழ், வீட்டு மாடியில் தோட்டம் அமைக்கத் தேவையான காய்கறி விதைகள், உரங்கள், பாலிதீன் பைகள் உள்ளிட்டவை 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகின்றன. என்னென்ன காய்கறிகள்: கத்தரி, வெண்டை, தக்காளி, மிளகாய், அவரை, கொத்தவரை, முள்ளங்கி, கீரைகள், கொத்தமல்லி ஆகியவற்றை மாடி தோட்டத்தில் வளர்க்கலாம். இந்த செடிகள் அனைத்தையும் வளர்க்க மொட்டை மாடியில் 160 சதுர அடி இடம் இருந்தால் போதுமானது. இதற்கான மகசூல் காலம் 30 நாள்களில் இருந்து 6 மாதங்கள் வரை ஆகும். மாடித் தோட்டம் அமைப்பதன் மூலம் 1 கிலோ முதல் 15 கிலோ வரை காய்கறிகள் மற்றும் கீரைகளை மகசூலாகப் பெறலாம். இதற்கு தேவையான பொருள்கள் மானிய விலையில் தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன. மானியமாக கிடைக்கும் பொருள்கள்: 2 கிலோ தேங்காய் நார் கழிவுடன் கூடிய 20 பாலிதீன் பைகள், 9 வகையான காய்கறிகளின் விதைகள், 6 வகையான உரங்கள், மண் கரண்டி, மண் அள்ளும் கருவி, நீர்த் தெளிப்பான், பிளாஸ்டிக் பூவாளி, குழித்தட்டுகள் மற்றும் பாலிதீன் விரிப்புகள் உள்ளட்டவை மாடித் தோட்டம் அமைக்க தேவையான பொருள்களாகும். ரூ.2 ஆயிரத்து 414 மதிப்பு கொண்ட அந்த பொருள்களை, 50 சதவீத மானியத்தில் ரூ.1,207-க்கு தமிழக அரசு வழங்குகிறது. ஒரே நபருக்கு 5 முறை மானிய விலையில் தோட்டம் அமைக்கத் தேவையான மூலப் பொருள்கள் வழங்கப்படும். எங்கு அணுகுவது?: சென்னை - தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகம், மாதவரம், சென்னை - 51. தொலைபேசி: 044 - 25554443. கோவை - தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகம், 8, தடாகம் சாலை, கோவை - 641013, தொலைபேசி: 0422 - 2453578. www.tnhorticulture.tn.gov.in என்ற தோட்டக்கலைத் துறையின் இணையதளம் வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம். முன்னதாக இந்த திட்டத்தின் தொடக்க விழாவில் அமைச்சர் தாமோதரன் பேசியது: இந்தியாவில் காய்கறி உற்பத்தி அதிகரித்ததற்கு தமிழகத்தின் பங்கு மிக முக்கியமானது. உற்பத்தி திறனில் தேசிய அளவில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. சென்னை மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள நகரவாசிகள், தங்களுடைய வீட்டின் மொட்டை மாடியில் காய்கறித் தோட்டம் அமைப்பதற்காக ரூ.5 கோடி செலவில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை வெற்றி பெறச் செய்வதில் பெண்களுக்கு பெரும்பங்கு உள்ளது என்றார் அவர். மாடி தோட்டம் அமைக்கும் திட்டத்தின் தொடக்க விழாவில் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி பேசியதாவது: இந்த திட்டம் சென்னை மற்றும் கோவையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு தேவையான உரங்களைத் தயாரிக்க சென்னையில் அதிக வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால் இங்கு உணவுக் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள், மக்கும் குப்பைகள் என அனைத்து விதமான குப்பைகளும் கிடைக்கின்றன. இந்த திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த சென்னை மாநகராட்சி தனி கவனம் செலுத்தும் என்று மேயர் தெரிவித்தார்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!