Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 24 February 2014

மூலிகை செடிகளும் அதன் பயன்களும்

                பூனை வணங்கி
    சாதாரணமாக விலங்குகள் அனைத்தும் ஏதாவது ஒரு மூலிகைக்கு கட்டுப்பட்டு நிற்கும். மதம் கொண்ட யானை முதல் சாதுவான பூனை வரை இதற்கு விதிவிலக்கல்ல. கொடூரமான புலி, சிங்கம் உட்பட பல மிருகங்களும் தங்கள் உடலை வளைத்து நெளித்து சமன் செய்து கொள்ளும். புலி போன்ற தோற்றம் உடைய பூனை மிகுந்த சாதுவான மிருகம். ஆனாலும் எவ்வளவு பழகினாலும் சில நேரங்களில் சீறும் குணம் கொண்டது. அதனை கட்டுப்படுத்தும் மூலிகைதான் பூனை வணங்கி. இந்த மூலிகை அருகே பூனை செல்லாது.
    தமிழகம் உட்பட இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் தானாகவே வளரும். முக்கோண வடிவ இலை ஓரங்களில் அரும்பு அரும்பாக இருக்கும். சிறு செடியான இதன் இலை. இடுக்குகளில் வெண்மை நிறப்பூக்களும், மிளகு அளவிலான காய்களும் இருக்கும். அதிமஞ்சரி, அண்டகம், அக்கினி சிவன், பூனை வணங்கி, அனந்தம் என பல்வேறு பெயர்களில் இந்த மூலிகைச்செடி அழைக்கப்படுகிறது.
    இந்த மூலிகை செடியின் கீரையை (இலை) ஆமணக்கு எண்ணெய்யில் தாளித்து 48 நாட்கள் தொடர்ந்து சுடுசோற்றில் கலந்து சாப்பிட்டு வந்தால் வாய்வு தொடர்பான பல்வேறு நோய்களும் நம்மை விட்டு போகும். இதன் சாற்றை எடுத்து 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 2 தேக்கரண்டி அளவு கொடுத்தால் வயிற்றை கழியச்செய்து கோழையை அகற்றி வயிற்றில் உள்ள புழுக்களை கொல்லும். மாந்திரீக மூலிகையான இது அனைவரையும் வசீகரப்படுத்தும். கோழை நீக்குதல், இருமலை கட்டுப்படுத்துதல், விஷக்கடி, ரத்தமூலம், வாதம், நமைச்சல், ஆஸ்துமா, குடல்புழுக்கள், மூட்டுவலி, தலைவலி, மலமிளக்கி என பலவற்றுக்கும் நிவாரணியாக இந்த இலை உள்ளது. இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளம் சூட்டில் கட்டினால் படுக்கை புண்கள் ஆறும். இதன் இலையில் மஞ்சள் மற்றும் கல் உப்பு கலந்து அரைத்து போட்டால் அனைத்து வகை சொறி சிரங்குகளும் தீரும். வேருடன் செடியை பிடுங்கி நிழலில் உலர்த்தி சூரணம் செய்து 2 முதல் 5 கிராம் வரை பசு நெய்யில் கலந்து காலை மாலை வேளைகளில் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் 18 வகையான மூலம் தீரும். மோரில் கலந்தும் குடிக்கலாம். இந்த மருந்தை சாப்பிடும்போது புளி, காரம் போன்றவற்றை சமையலில் நீக்கினால் சிறப்பான பலன் கிடைக்கும். வேர் சூரணம் 1 பிடி இலை ஆகியவற்றை 1 லிட்டர் நீரில் போட்டு 8 ல் ஒரு பங்காக காய்ச்சி குடித்தால் கீரி பூச்சி, நாடாப்புழு, நாக்குப்பூச்சி நீங்கும். பேதியாகும் தன்மை கொண்டது. எனவே சிறுவர்களுக்கு பாதியளவு கொடுக்கவேண்டும். இலை சாற்றில் உப்பு, சுண்ணாம்பு கலந்து ஆமணக்கு எண்ணெய்யுடன் தடவினால் மேகப்புண் ஆறும். இலை பொடியை மூக்குப்பொடி போல் போட்டுக்கொண்டால் தலைவலி தீரும். முழு செடியையும் காய வைத்து சூரணம் செய்து சிட்டிகை அளவு காலை மாலை ஒரு மண்டலம் (48 நாள்) சாப்பிட்டால் பவித்தரம் தீரும். முழங்கால் வலி இருந்தால் இதன் வேரை அரைத்து அதனுடன் சமஅளவு சுண்ணாம்பு, வசம்பு, கருப்பட்டி சேர்த்து பற்று போட்டு வந்தால் வலி பறந்து போகும். இத்தகைய சிறப்புகளை கொண்ட பூனை வணங்கியை எங்கே போய் தேடுவது?
    


    பூனை வணங்கி என்றால் எந்த செடி? என எண்ணி குழம்ப வேண்டாம். எங்கும் பரவிக்கிடக்கும் குப்பைமேனி செடிதான் அது. முன்னோர் கண்டறிந்து கூறிய குப்பைமேனியை பயன்படுத்தி குப்பையாக மாறும் மேனியை பயனுடையதாக்கி நலமுடன் வாழ்வோம்.                                 
துளசி

* துளசி இலைகளை, வெயிலில் நன்கு உலர்த்தி, பொடி செய்து, ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, தேனில் குழைத்து சாப்பிட்டால், பூச்சி, வண்டுக்கடி காரணமாக ஏற்படும் விஷம் மாறும்.* துளசி இலைகளை காய வைத்து இடித்து, தயார் செய்த கஷாயத்துடன், தேன், பசுவின் பால் கலந்து உண்டால், கணையச் சூடு அகலும்.


* துளசி சாற்றில், சம அளவு தேன் கலந்து, ஐந்து நாட்கள் உட்கொள்ள, வாயு தொடர்பாக ஏற்படும் நோய்கள் குணமாகு
ம்.
                     

சிறு தானிய வகைகளும் பயன்களும்

   "கொள்ளு" பற்றிய செய்தி

கொள்ளுவை ஆங்கிலத்தில் "ஹார்ஸ் கிராம்" என்று அழைப்பர். பெயருக்கு  ஏற்றாற்போல் குதிரையின் சக்தியை உடலுக்கு கொடுக்கவல்லது. இதில் இரும்புச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து, நார்ச்சத்து போன்றவை  அடங்கியுள்ளன. இது உடலில் இரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைக்கக்கூடியது. சிறுநீரகத்தில் கற்கள் சேரவிடாமல் தடுக்கக்கூடியது. இதை ஊறவைத்து அந்த நீரை குடித்துவந்தால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். மேலும் கொள்ளை தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து அந்நீரை குடிக்க ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களை பலப்படுத்தும். கண் நோய்கள், வயிற்றுப்போக்கு போன்றவற்றை குணமாக்கும். பெண்களுக்கு வெள்ளைப்போக்கை கட்டுப்படுத்தும். கொள்ளும், அரிசியும் கலந்து செய்த கஞ்சியை குடித்தால் நல்ல பசி  எடுக்கும். மேலும் கொழுப்பு, ஊளை சதையை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உண்டு.

பள்ளி / கல்லூரிச் சான்றிதழ் தொலைந்தால் புதிய சான்றிதழ் பெறுவது எப்படி?

வீட்டில் பத்திரமாக இருக்கும் பள்ளிச் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள் இவற்றை சில சமயங்களில் சரிபார்த்தல் (Verification) அல்லது நேர்காணல் போன்ற காரணங்களுக்காக வெளியில் எடுத்துச் செல்ல நேரலாம். அப்படி செல்லும்போது பயணத்தில் தொலைந்துவிட்டாலோ அல்லது
சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களினால் அழிந்துவிட்டாலோ அல்லது எதிர்பாராதவிதமாக தீ விபத்துகளில் சேதமாகியிருந்தாலோ, கரையான்களால் பழுதுபட்டிருந்தாலோ மீண்டும் புதிய சான்றிதழை விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளவேண்டும்.

ஏனெனில் இந்தச் சான்றிதழ்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் பயன்படக்கூடிய முக்கிய ஆவணங்களாகும். மேற்படிப்பு பயில, அரசின் கடன் உதவி பெற, வேலைகளில் சேர போன்றவற்றிற்கு மட்டுமல்லாது வயதுச் சான்றாகவும் பயன்படுகிற ஆவணங்கள் இவை. பள்ளி / கல்லூரிச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்கள் தொலைந்துபோனால் எப்படி புதிய சான்றிதழ்கள் பெறுவது எப்படி?

பள்ளி மாற்றுச் சான்றிதழ் தொலைந்து போனால்:
பள்ளி மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate) தொலைந்துபோனால் உடனடியாக காவல் நிலையத்தில் புகாரளிக்க வேண்டும். அவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிற சான்றை வழங்குவர்.

விண்ணப்பத்துடன் வட்டாட்சியரிடம் பள்ளி மாற்றுச் சான்றிதழ் தொலைந்துவிட்டது என்ற சான்றிதழை வாங்கி இணைத்துக் கொடுக்க வேண்டும். இத்துடன் பள்ளிச் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தையும் செலுத்தி ரசீதை இணைக்க வேண்டும்.

எந்தப் பள்ளியில் படித்தீர்களோ அந்தப் பள்ளித் தலைமை ஆசிரியரிடமே விண்ணப்பிக்கலாம். இணைக்க வேண்டிய ஆவணங்கள்: மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், கட்டணம் செலுத்திய ரசீது.

கல்லூரிச் சான்றிதழ் தொலைந்து போனால்:
கல்லூரி மாற்றுச் சான்றிதழ் தொலைந்துபோனால் உடனடியாக காவல் நிலையத்தில் புகாரளிக்க வேண்டும். அவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிற சான்றை வழங்குவர்.

அத்துடன் சான்றிதழ் தொலைந்தது குறித்து வட்டாட்சியரிடம் மனு செய்ய வேண்டும். அவர் அந்தப் பகுதி வருவாய் ஆய்வாளரால் விசாரணை நடத்திய பின்னர் சான்றிதழ் தொலைந்தது உண்மை எனச் சான்று வழங்குவார்.

பின்னர் காவல்துறை அளித்த சான்று, வட்டாட்சியர் அளித்த சான்று இவற்றுடன் கல்லூரி நிர்ணயம் செய்த தேடுதல் கட்டணத்தைச் செலுத்தி கல்லூரி முதல்வருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பள்ளி மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து போனால்:
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து போனால் முதலில் அந்தப் பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் புகாரளிக்க வேண்டும்.

அத்துடன் மதிப்பெண் பட்டியலின் எண், பதிவு எண், தேர்வு நடந்த வருடம், மாதம் ஆகிவற்றைக் குறிப்பிட்டு அந்தப் பகுதியில் உள்ள ஒரு முன்னணி நாளிதழில் அறிவிப்பு விளம்பரம் வெளியிட வேண்டும்.

பின்னர் காவல் நிலையத்தில் புகாரளித்ததற்கான ரசீது, பிரசுரமான விளம்பரம் ஆகியவற்றை இணைத்து பள்ளித் தலைமை ஆசிரியர் வழியாக மாவட்டக் கல்வி அதிகாரிக்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.

இதனுடன் தேடுதல் கட்டணம் வங்கி வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும்.

மனுவைப் பரிசீலித்து மாவட்டக் கல்வி அதிகாரி மாநில பள்ளிக் கல்வித்துறைக்கு விண்ணப்பம் செய்வார்.

கல்லூரி மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து போனால்:
கல்லூரி மதிப்பெண் சான்றிதழ் தொலைந்துவிட்டால் கடைசியாகப் படித்த கல்லூரி முதல்வருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்.

விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட கல்லூரி முதல்வர் மதிப்பெண் சான்றிதழின் எண், பதிவு எண், தேர்வு நடந்த வருடம் ஆகியவற்றைச் சரிபார்த்து பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிக்குப் பரிந்துரைத்து எழுதுவார்.

இத்துடன் மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தை வங்கி வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும். மனுவைப் பெற்றுக் கொண்ட தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி மதிப்பெண் சான்றிதழ் வழங்குவார்.

விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்களுக்குள் இச்சான்றிதழ்கள் கிடைக்கப்பெறும்.

தனித்தேர்வர்களுக்கு:
தனித்தேர்வர்கள் நேரடியாக தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.

பின்குறிப்பு:
பள்ளி / கல்லூரி மாற்றுச் சான்றிதழ்கள், பள்ளி / கல்லூரி மதிப்பெண் சான்றிதழ்கள் புதிதாகப் பெற அந்தந்த பள்ளித் தலைமையாசிரியரையோ அல்லது கல்லூரி முதல்வரையோ அணுகி மேலதிக விவரங்களையும், கட்டண விவரங்களையும் தெரிந்துகொள்ளவும்....

படி! படி! நூலைப்படி!

நூலை எடுத்துப் படி - தக்க
வேளை அறிந்து படி
நாளை படித்திடலாம் - என்பது
நன்றல்ல இன்றே படி! (நூலை...)

விளையாட்டை நினைத்தபடி - நாளும்
வீண்பொழுதைக் கழித்தபடி
அலையாதே இட்டப்படி - எதற்கும்
அளவுண்டு எண்ணிப் படி. (நூலை...)

ஆசானைக் கேட்டுப் படி - புதியவை
அறிந்திட விரும்பிப் படி
கூசி வருந்தும்படி - சொல்லும்
குறைகளை விலக்கிப் படி! (நூலை...)

எதையும் ஆழ்ந்து படி - மனத்தில்
என்றும் இருக்கும் படி!
மதிப்பெண் உயரும் படி! - இந்த
மாநிலம் புகழும் படி! (நூலை...)

வெற்றி கிட்டும்படி - உன்றன்
விருப்பம் நடக்கும் படி!
கற்றலில் இதுவே படி - கல்வி
கரையில தொடர்ந்து படி! (நூலை...)

பெற்றோர் மகிழும்படி - அவர்தம்
பணச்செலவை நினைத்துப் படி!
சற்றும் சளைக்காமல் படி - நீ
சாதிக்க வேண்டும் படி! (நூலை...)
பொறியியல் மருத்துவம் படி - நல்ல
பண்புயர இலக்கியம் படி!
அறிவியல் கணினி படி - நீ
அருந்தமிழ்வழிக் கல்வி படி! (நூலை...)

நீதி நேர்மை நிலைக்கப் படி! - நாட்டில்
நிலவும் ஊழல் ஒழிக்கப் படி!
சாதி வேற்றுமை அகற்றப் படி - நீ
சான்றோனாக வாழப் படி! (நூலை...)

மாதிரி சட்டசபை நடத்தி அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள்

நாமக்கல்: மாதிரி சட்டசபை நடத்தி அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள் மாத இதழ் நடத்தி 'சந்தா' வசூலிப்பு; தனியார், பிற அரசு பள்ளிகள் வியப்பு
நாமக்கல் அருகே மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் கல்வி மட்டுமின்றி நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்ற விஷயங்களில் மாணவ, மாணவியர் திறமையுடன் செயல்பட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர்.

தனியார் பள்ளிகளில் தங்களது குழந்தைகள் கல்வி கற்பதை பெற்றோர் கவுரவமாக கருதுகின்றனர். இந்தச்சூழலில், நாமக்கல் அருகே மேலப்பட்டி என்ற குக்கிராமத்தை சேர்ந்த மக்கள் இதற்கு நேர்மாறாக உள்ளனர்.

இங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மட்டுமே தங்களது குழந்தைகளை படிக்க வைக்கின்றனர். தங்கள் பள்ளியில் சேர்க்குமாறு அருகே உள்ள தனியார் பள்ளி நிர்வாகம் விருப்பம் தெரிவித்தாலும், பெற்றோர் ஒப்புதல் அளிப்பதில்லை. அப்படி என்ன தான் அந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி யில் உள்ளது என்ற கேள்விக்கு பதிலாக பள்ளி தலைமை யாசிரியர் வே. அண்ணா துரை, உதவி தலைமையாசிரியர் கா.இளங் கோவனும் கூறியது:

மேலப்பட்டி கிராமத்தை சேர்ந்த 27 மாணவர்கள் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் படிக்கின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் மாணவர்களுக்கு கல்வியுடன் நடைமுறை வாழ்க்கைக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களையும் கற்றுத்தர வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டது. அதன் முதல் படியாக மாணவர்களிடம் பொது அறிவை வளர்க்கும் விதத்தில் ஆங்கில மற்றும் தமிழ் நாளிதழ் வாங்கத் துவங்கினோம். காலையில் பள்ளிக்கு வந்தவுடன் மாணவர்கள் நாளிதழை படிப்பர். அதன்பலனாக மாத இதழ் துவங்கும் எண்ணம் மாணவர்களுக்கு ஏற்பட்டது.

'குதூகலம்' மாத இதழ்

அதன்படி கடந்த 2009-ல் 'குதூகலம்' என்ற மாத இதழை துவங்கினர். அதற்கு மாணவர்களே பதிப்பாசிரியர், உதவி ஆசிரியர் களாக உள்ளனர். அந்த மாதத்தில் வரும் முக்கிய நிகழ்வுகள், வரலா ற்றுத் தலைவர்கள், அறி வியல் கண்டுபிடிப்பாள ர்களின் பிறந்த நாள், நினைவு தினம், அவர்கள் குறித்த கட்டுரை, மாணவர்களின் சிறுகதை, கவிதைகள் ஆகியவை குதூகலத்தில் இடம் பெறும்.இதழுக்குரிய அனைத்து விஷயங்களையும் மாணவர்களே ஆலோசித்து முடிவு செய்வர்.

அவரவர் எடுத்துக் கொண்ட தொகுப்பை வெள்ளைத்தாளில் எழுதி வழங்குவர். அதை புத்தகம்போல் தைக்கப்படும். முறைப்படி வெளியாகும் மாத இதழ் போல் இப்புத்தகம் இருக்கும். மாணவர்களின் இத்தொகுப்பை அருகே உள்ள பள்ளியினர் மாத சந்தா ரூ.10 செலுத்தி வாங்கி வருகின்ற னர். மாணவர்களின் இதழை பிரதிகள் போட்டு விற்கவும் செய்கின்றனர். அவ்வாறு வசூலாகும் தொகை சேமிக்க படுகிறது. அதற்காக பள்ளியில் வங்கி உள்ளது. மாணவர்களே வங்கி மேலாளர், காசாளர் பணியிடம் தனித்தனியாக உள்ளது.

மாணவர்களின் வங்கி

பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் வங்கியில் கணக்கு உள்ளது. வங்கி பாஸ் புத்தகம் போல் மாணவர்கள் பாஸ் புத்தகம் தயாரித்து வைத்துள்ளனர். வங்கியில் மாணவ ர்கள் செலுத்தும் தொகை, மாத இதழ் மூலம் வசூலாகும் தொகை சேமிக்க படுகிறது. மாணவர்கள் செலுத்தும் தொகை அவர்களது பாஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்படும். அந்த வகையில் பள்ளி வங்கியில் ரூ.154 சேமிப்பு உள்ளது.

மாணவர்களிடையே இது சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது.அதேபோல், பள்ளியில் உள்ள நியாய விலைக்கடையில், பேனா, பென்சில்கள் விற்கப்படுகிறது. இந்தக் கடையையும் மாணவர்களே நடத்துகின்றனர்.

ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

நியாய விலை கடைக்கு தேவையான பொருட்கள் அடங்கிய பட்டியலை எங்களிடம் வழங்குவர். அதை நாங்கள் வாங்கி வரவேண்டும். அதற்கு தாமதமானால் பள்ளியில் செயல்படும் மாதிரி சட்டசபையின் முதல்வர் மூலம் எங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும். கேட்பதற்கு ஆச்சர்யமாகத்தான் இருக்கும். ஆம், பள்ளியில் உள்ள மாதிரி சட்டசபைக்கு சபாநாயகர், முதல்வர், கல்வித்துறை, சுகாதாரத் துறை, விளையாட்டுத்துறை, உணவுத்துறை மற்றும் சட்டமன்ற உறுப்பினர் என்பது போன்ற பதவியிடங்கள் உள்ளன.

வாரந்தோறும் மாதிரி சட்டசபை கூடும். கூட்டத்திற்கு சபாநாயகர் தலைமை வகிப்பார். கூட்டத்தில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்புவர். பள்ளி மற்றும் அவர்கள் நடத்தும் நியாய விலைக்கடை, சத்துணவு, விளையாட்டு சம்மந்தப்பட்ட கேள்விகள் எழுப்பப்படும். அதற்கு சம்மந்தப்பட்ட துறை அமைச்சர் பதில் அளிப்பர். பின், அந்த கோரிக்கை நிறைவேற்றப்படும். ஆசிரியர் தரப்பில் குறையிருந்தாலும், அது விவாதிக்கப்படும். இவை அனைத்தும் மாணவர்களே தயார் செய்வர். ஒரு முறை மட்டும் நாங்கள் சொல்லிக் கொடுத்துள்ளோம்.

இதேபோல், பள்ளியில் தபால் நிலையமும் செயல்படுகிறது. சக மாணவர்களுக்கும், ஆசிரியர்க ளுக்கும் எழுதப்படும் தபால்கள், பெட்டியில் சேகரிக்கப்பட்டு, பின் பட்டுவாடா செய்யப்படும். கடந்த 2009-ல் மாநில அளவில் சிறந்த பள்ளி விருதை தொடக்க கல்வித் துறை எங்களுக்கு வழங்கியது’’ என்றனர்.

தனியார் கான்வென்ட் பள்ளிகளுக்கு நிகராக சவால் விடும் வகையில் இந்தப் பள்ளி மற்ற அரசுப் பள்ளிகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது என்றால் அது மிகையாகாது. நாமக்கல் அருகே மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாதிரி சட்டசபை நடத்தி, பள்ளியில் உள்ள பிரச்சினைகளை விவாதிக்கும் மாணவர்கள்

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!