Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 14 July 2014

வலிக்கும் உண்மை..

வலிக்கும் உண்மை..
1.செல்போன்ல பட்டன பாத்த
கடைசி தலைமுறை நம்மளாதான்
இருக்கும்.
2.கேலண்டர் அட்டையில்
தேர்வெழுதிய
கடைசி தலைமுறை நம்மளாதான்
இருக்கும்.
3.மயில் இறகை நோட்டுக்குள்ள
வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின
கடைசி தலைமுறை நம்மளாதான்
இருக்கும்.
4.வெட்டிப்போட்ட
நுங்கை வைத்து வண்டியோட்டிய
கடைசி தலைமுறை நம்மளாதான்
இருக்கும்.
5. தந்தியில் மரணச்
செய்தி அறிந்ததும்,
தந்திக்கே மரணம் வந்ததையும்
அறிந்த
கடைசி தலைமுறை நம்மளாதான்
இருக்கும்.
6.கல்யாண மண்டபங்களில்
உறவினர்கள் கையால்
உணவு உண்ட
கடைசி தலைமுறை நம்மளாதான்
இருக்கும்.
7.காதல்கடிதத்தை கவரில்
வைத்து மஞ்சள்
தடவி ,பூஜை போட்டு ,பயந்து கொண்டே காதலியிடம்
கொடுத்து திரும்பிப்பார்க
்காமல் ஓடி வந்த
கடைசி தலைமுறை நம்மளாதான்
இருக்கும்.
8. நண்பர்களுக்கு கடிதம்
எழுதிய
கடைசி தலைமுறை நம்மளாதான்
இருக்கும்.
9.
மாமா பொண்ணு ,அத்தை பொண்ணு என
ஏகப்பட்ட முறைப்பொண்ணுங்க
சூழ வந்த
கடைசி தலைமுறை நம்மளாதான்
இருக்கும்.
10 .மஞ்சள் பூசிய பெண்கள்
முகத்தை பார்த்த
கடைசி தலைமுறை நாமாதான்...!
11.ஒளியும் ஒலியும் பாத்த
கடைசி தலைமுறையும்
ஓனிடா மண்டையன பாத்த
கடைசி தலைமுறையும்
நம்மளாதான் இருக்கும

வேலை வாய்ப்புகளுக்கு இணையதளம் தொடங்கியது மத்திய அரசு!

வேலை வாய்ப்புகளுக்கு இணையதளம் தொடங்கியது மத்திய அரசு!

         புதிய வேலைவாய்ப்புகளை அடையாளம் காணவும், திறமையுள்ளவர்களுக்கு வேலை கிடைக்கவும் உதவும் வகையில் மத்திய அரசின் சார்பில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. www.niesbudnaukri.com என்ற பெயரில் இதை மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா தொடங்கி வைத்துள்ளார்.

          இந்த இணையதளத்தில் வேலைக்கு ஆள் தேவை என நிறுவனங்கள் இலவசமாக தகவல் வெளியிட வழி செய்யப்பட்டுள்ளது.

           அதேபோல, வேலை தேடுவோரும் இலவசமாக பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்து பயன்பெறலாம் என்றும் அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா கூறினார்.

சுமார் 150 பிரிவுகளின் கீழ் வேலைவாய்ப்புகள் இந்த இணையதளத்தில் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

Today Head News:

Today Head News:

*பள்ளிக்கல்வி - 2014ம் ஆண்டில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் ஜுலை 15ஐ கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட அரசு அனுமதித்து உத்தரவு.

*15 நாட்களில் 20 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் -தினத் தந்தி

*TNTET:ஆசிரியர் தகுதி தேர்வில் தேறாத ஆசிரியர்களுக்கு 'கெடு!': அடுத்த ஆண்டு ஆகஸ்டுக்குள் 'பாஸ்' ஆக வேண்டும்.

*SPECIAL TET: திருத்தப்பட்ட முடிவு வெளியீடு. ஜூலை 1, 2-ம் தேதிகளில் நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள இயலாதவர்களுக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு.

*2.87 லட்சம் அரசு பணியிடங்கள் காலி:அரசு ஊழியர் சங்க செயலர் தகவல்.

*கற்றல் - கற்பித்தல் நாள் பள்ளிகளுக்கு உயர்வு.

*10ம் வகுப்பு செய்முறை பயிற்சி: மாணவர்கள் முன் செய்துகாட்ட ஆசிரியர்களுக்கு உத்தரவு.

*கருணை வேலை கோரும் பெண்களுக்கு 'கட் - ஆப்' தேதி சரியா?தொழிலாளர் நல துறை உத்தரவு ரத்து.

*மத்திய அரசு சார்பில் வேலைவாய்ப்பு இணையதளம்: அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா தொடக்கி வைத்தார்.

*நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை மறுஆய்வு செய்ய TRB மனுதாக்கல்.

*தேர்ச்சியை அதிகரிக்க தனிக்கவனம் வியூகம்:கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை.

*மாணவர்கள் சேராததால் பள்ளிக்கு மூடுவிழா

*ஜூலை 23-இல் ஏழாவது ஊதியக் குழுக் கூட்டம்.

*குரூப்-1 தேர்வில் 1,045 பேரின் விண்ணப்பங்களை நிராகரித்தது டிஎன்பிஎஸ்சி.

*பள்ளிக்கல்வித்துறையின் கிழ் உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் குறித்து விவரங்களை உடனடியாக விரைந்து அளிக்க தலைமையாசிரியர்களுக்கு இயக்குனர் உத்தரவு.

*காமராஜர் பிறந்த நாள்-ஜூலை 15- கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடிட அரசாணை.
-For more details visit
 Kalvi seithi. com.
----RK

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!