Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 16 July 2014

நினைவாற்றலை அதிகரிக்கும் உணவுகள்


நினைவாற்றலை அதிகரிக்கும் உணவுகள்

உடலில் உள்ள எந்த உறுப்பையும்விட அதிக அளவு ஆக்ஸிஜனை எடுத்துக்கொள்வது மூளைதான்.

தேவையான சத்துணவு, தேவையான அளவு கிடைக்காதபோது மூளைக்குக் கிடைக்கும் ஆக்ஸிஜன் அளவு குறைகிறது. அதனால் மூளையின் செல்கள் அழிந்துவிடுதல், ‘அல்ஸீமர்ஸ்’ என்ற ஞாபகமறதி நோய், ஞாபகச் சக்தியை - ஒருமுகக் கவனத்துடன் செயல்படும் ஆற்றலை இழப்பது, பலவீனம், குழப்பம், நோய் தாக்குதல் முதலியவை ஏற்படுகின்றன.

மூளைக்கு எப்போதும் ஞாபகசக்தி இருக்க வேண்டும். அதற்குக் கொழுப்பு, வெண்ணெய், நெய் முதலியவற்றிலிருந்து கிடைக்கும் கொழுப்பு தீங்கானது. மூளைக்கு உதவும் சரியான உணவைத் தேர்ந்தெடுக்க ஓர் எளிய வழி உண்டு. ஒளிரும் நிறத்தில் இருக்கும் உணவு வகைகள் மூளையின் பசியைப் போக்கும் முக்கிய உணவு வகைகளாகும். ஏனென்றால், இந்த உணவு வகைகளில் போதுமான அளவு வைட்டமின்கள், தாது உப்புகள் போன்றவை உள்ளன.

ஞாபகசக்திக்கு

ஞாபகசக்தி குறைவாக இருப்பவர்கள் ஆரஞ்சு, கொய்யா, திராட்சை, ஆப்பிள், வாழைப்பழம், செர்ரி பழம், தக்காளி, முலாம் பழம், பேரீச்சம்பழம், காரட், அன்னாசி, காலி பிளவர், முட்டை கோஸ், பசலைக் கீரை, கொத்துமல்லி, வல்லாரை, முருங்கைக் கீரை, கறிவேப்பிலை, பச்சைப் பட்டாணி, பாசிப் பருப்பு, கொண்டைக் கடலை, பாதாம் பருப்பு, சோயா பீன்ஸ், சோயா எண்ணெய், பால், தயிர், அரிசி, கோதுமை, கேழ்வரகு போன்ற உணவு வகைகள் புதிய ரத்தச் செல்கள் உருவாகவும் மூளை சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகின்றன.

பாதாம் பருப்பு, சோயா பீன்ஸ் போன்றவற்றை அதிக அளவு உணவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது நம் உடலில் உள்ள சோடியம், பொட்டாசியம் போன்ற உப்பு வகைகளைச் சமன் செய்து உடலைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது.

ஆழ்ந்து சிந்தித்துச் செயல்படத் தண்டுக் கீரை, கொண்டைக் கடலை முதலியவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். பால், தயிர், சத்துள்ள உணவு வகைகளால் அதிக அளவு ஆற்றல் கிடைக்கிறது. அதனால் சோம்பேறித்தனம் நீங்கிச் சுறுசுறுப்பு அதிகமாகிறது.

மூளை சுறுசுறுப்புக்கு

அரிசி, கோதுமை, கேழ்வரகு போன்ற உணவு வகைகளுடன் இரும்புச் சத்து நிறைந்துள்ள பேரீச்சம் பழம், பட்டாணி போன்றவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்வதால் கோபம், பதற்றம் போன்ற உணர்ச்சிகள் மெல்ல மெல்லக் குறைந்து நரம்பு மண்டலம் அமைதியாகி மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.

மாதமொரு முறை கோதுமை அல்வா சாப்பிடுவதாலும், இயற்கை இனிப்பு வகைகளைச் சாப்பிடுவதாலும் ஞாபகச் சக்தி அதிகரிக்கிறது. சிந்தனை தெளிவும் உண்டாகிறது.

திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, காரட், செர்ரி பழம் முதலியவை மூளை சுறுசுறுப்பாக இருக்க நல்ல உணவு வகைகளாகும். மூளையின் செயல்திறன் பாதிக்காதபடி இவை பராமரித்துப் பாதுகாக்கின்றன.

இவற்றால் நல்ல மனப்பாங்கு, எப்போதும் செயல்வேகத்துடன் இருப்பது, மனஉறுதியுடன் எதையும் எடுத்துச் செய்துமுடிப்பது ஆகிய ரசாயன விளைவுகளை இந்த உணவு வகைகள் ஏற்படுத்துகின்றன.

ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்தபோது, காரட் சாப்பிட்டவர்களின் அறிவாற்றலும் ஆர்வமும் சிறப்பாக இருந்தது என்கிறது வர்ஜினியா பல்கலைக்கழகத்தின் மனோதத்துவப் பேராசிரியர் பால்கோல்ட் என்பவர் நடத்திய ஆய்வின் முடிவு.

வெள்ளை பூண்டு

மனத்தை அமைதிப்படுத்தித் தன்னம்பிக்கையை உணர்த்துகிறது வெள்ளை பூண்டு, மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை.

ஞாபகச் சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் உயிர் வாழ்கின்றன. எனவே, ஞாபகசக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மீன், மீன் எண்ணெய், மீன் மாத்திரை ஆகியவற்றை சாப்பிடுவது நல்லது என்கிறார் ஓரிகான் உடல்நல விஞ்ஞானப் பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறை பேராசிரியர் வில்லியம் கானர் - மூளையில் ஏற்படும் ஓட்டையைத் தையல்காரர் போல் சிறப்பாகத் தைத்து மூளையை ஒழுங்காகச் செயல்படுத்துபவை மீனும், மீன் எண்ணெயும், மீன் மாத்திரையும் என்கிறார் அவர்

News

DEE.017681 dt.16.06.14
Dir seeks primary/middle schools compound wall need list

>Hereafter No need to get Attestation from Gazetted Officer/Notary Public
At the end of verification have to submit original certificates enough- Central Govt

>TRB announced competitive exam for Assistant Professor post in Engineering College
Application Issue Date- 20.08.14
Last date - 05.09.14
Exam date - 26.10.14

>From the next Academic Year 2015-16 Regular B.Ed and M.Ed.,course duration raised to 2 years - NCTE

கல்வி

கல்வி:

*ஒழுக்கம் உண்டாக்காத இலக்கியக் கல்வியால் ஒருவித உபயோகமும் கிடையாது!- காந்தியடிகள்

*"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே!" - தம் ஆசிரியருக்கு ஒரு துன்பம் வந்தபோது உடன் சென்று அதனைத் தீர்ப்பதற்குத் துணைநிற்க வேண்டும். மிகுதியான பொருளை அவருக்குக் கொடுத்தாவது கல்விகற்றல் வேண்டும். - இலக்கியம்
மனித ஆளுமை அளவிட முடியாத திறன் வாய்ந்தது என்பதில் நான் திடமான நம்பிக்கை கொண்டுள்ளேன்; ஒவ்வொருவரும் ஒரு ஆக்கராக முடியும் - அவர்களின் தடயத்தை இவ்வுலகில் விட்டுச் செல்ல முடியும்.
காற்றில் அலைக்கழிக்கப்படும் தூசு போல ஒன்றுக்கும் உதவாதவன் என்று எவருமே இருக்கக் கூடாது; ஒவ்வொருவரும் ஒளிர வேண்டும் - கோடானுகோடி விண்மீன் திரள்கள், ஒவ்வொன்றும் ஒளிருவதைப் போல. --- வாசிலி சுகோம்லின்ஸ்கி ஆதாரம்
ஆயிரம் கோயில்கள் கட்டுவதைவிட ஒரு பள்ளிக்கூடம் கட்டுவது சிறந்தது.-மகா கவி பாரதி
கல்வி விரல்களுக்களைத்தான் வேலை வாங்குகிறதே தவிர மூளையையும் மனசையும் முழுமையாக்கவில்லை. - கவிஞர் வைரமுத்து
தேர்வு முறை என்பது அறியாமையை அளக்கிற அளவுகோல் தானே தவிர அறிவை அளக்கும் அளவுகோல் அல்ல. - கவிஞர் வைரமுத்து
கல்வி என்பது ஒரு மனிதனுக்குக் கற்பிக்கப்படவேண்டிய அவசியமெல்லாம் ஒருவன் தன் வாழ்நாளில் முழு சுதந்திரத்தோடு வாழ்வதற்குத் தகுதிபடுத்துவது என்பதேயாகும். அல்லது உலகில் நல்வாழ்க்கை வாழத் தகுதியுடையவனாக்குவது என்பதாகும். - தந்தை பெரியார்
இளமையில் கல்வியைப் புறக்கணித்தவன் இறந்த காலத்தை இழந்தவன்; எதிர்கால வாழ்விலும் இறந்தவன்! - யூரிபிடிஸ்
கற்காமல் இருப்பதைவிட பிறக்காமல் இருப்பதே நல்லது; ஏனெனில் அறியாமைதான் தீவினையின் மூலவேர்! - பிளேட்டோ
கல்வி ஒரு மூட்டை நூல்களை வாசிப்பது அன்று; அடக்கம், ஒழுங்கு, அறம், நீதி இவற்றின் முன்மாதிரியாகும்! - எட்மண்ட்பர்க்
கல்வி என்பது தெரியாததைத் தெரியச் செய்வதன்று: ஒழுக்கத்தை ஒழுகச் செய்வதும் இன்பம் அளிப்பதுமாகும்! - ரஸ்கின்
வாழ்க்கை அனுபவமில்லாத எவரும் கல்வி கற்றவராக முடியாது! - பெர்னார்ட்ஷா
நாம் கற்றுக் கொண்டதைப் போற்ற வேண்டும்; நமக்குத் தெரிந்தவற்றை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும்! - மூர்
சான்றோன் ஆக்காத கல்வி சாமர்த்தியமாய்க் கழித்த சோம்பலேயாகும்! - போலிங் புரூக்
-RK

ஆடி மாத குறிப்புகள்

ஆடி மாத குறிப்புகள்

தமிழ் தேதி
ஆங்கில தேதி
குறிப்புகள்
1
17-07-14
க்ருஷ்ணபக்ஷ ஷஷ்டி
5
21-07-14
ஆடி க்ருத்திகை
6
22-07-14
க்ருஷ்ணபக்ஷ சர்வ ஏகாதசி
8
24-07-14
க்ருஷ்ணபக்ஷ மஹாப்ரதோஷம்
10
26-07-14
ஆடி மாச சர்வ அமவாஸ்யை
14
30-07-14
சுக்லபக்ஷ சதூர்த்தி, ஆடிப்பூரம்
16
01-08-14
சுக்லபக்ஷ ஷஷ்டி
17
02-08-14
ஷஷ்டி வ்ரதம்
18
03-08-14
ஆடிப்பெருக்கு
19
04-08-14
குரு உதயம்
22
07-08-14
சுக்லபக்ஷ சர்வ ஏகாதசி
23
08-08-14
சுக்லபக்ஷ மஹாப்ரதோஷம், வ்ரலஷ்மீ வ்ரதம்
25
10-08-14
பௌர்ணமி, ச்ரவண வ்ரதம்
26
11-08-14
காயத்ரி ஜபம்
28
13-08-14
க்ருஷ்ணபக்ஷ மஹா சதூர்த்தி
30
15-08-14
க்ருஷ்ணபக்ஷ ஷஷ்டி
31
16-08-14
ஷஷ்டி வ்ரதம்

இனி கெசட்டட் ஆபீசர் கையொப்பம் தேவையில்லை

இனி கெசட்டட் ஆபீசர் கையொப்பம் தேவையில்லை - சுய சான்றொப்பமே போதுமானது.

அரசுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பங்களிலும் அரசு பதிவு பெற்ற கெசட்டட் ஆபிசர் அல்லது நோட்டரி பப்ளிக் ஆகியோரிடம் கையொப்பம்(அட்டஸ்டேஷன்) பெற வேண்டும் என்பது விதியாக இருந்தது. இது மாணவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் கடும் சிரமமாக இருந்தது.

ஒவ்வொரு தடவை கையொப்பம் வாங்கும்போதும் கையொப்பமிடும் அதிகாரிக்கு 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை பணம் செலுத்தவேண்டும். இது பொதுமக்களுக்கு சிரமத்தை தருகிறது. அதிலும் ஒரு சில அதிகாரிகள் சான்றிதழ் ஏதேனும் இல்லாவிட்டால் கையெழுத்திட மறுக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் கிராமப்புற மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக பழங்குடியின மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் மக்களின் சிரமங்களை உணர்ந்து இனி வரும் காலங்களில் விண்ணப்பிப்பவரே தனது விண்ணப்பத்தில் தானே சான்றொப்ப கையெழுத்தை போட்டுகொள்ள அரசு முடிவு செய்துள்ளது. இந்த முறையில் கடைசி கட்ட சரிபார்ப்பு பணியின்போது ஒரிஜினல் சான்றிதழை சமர்ப்பித்தால் போதுமானது. அரசின் இந்த முடிவு பொதுமக்கள் அனைவருக்கும் பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அரசின் இந்த நல்ல முடிவு குறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Today Headlines:

Today Headlines:

*பகுதிநேர ஆசிரியர்களுக்கு கூடுதல் பணி மறுப்பு: காற்றில் பறக்குது அரசாணை

*தஞ்சையில் உள்ள பார்வையற்றோர் அரசு உயர் நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு- அமைச்சர் வளர்மதி.

*பட்டதாரி ஆசிரியர் நியமனம்: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரம் பேரின் "வெயிட்டேஜ்' மதிப்பெண் வெளியீடு

*இடைநிலை ஆசிரியர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் பட்டியலையும், காலியிடங்கள் விவரத்தையும் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்.

*முதுகலை ஆசிரியர் பட்டியல் ஒரு வாரத்தில் வெளியீடு
நவம்பரில் அடுத்த ஆசிரியர் தகுதி தேர்வு.

*ஆசிரியர் தகுதி தேர்வில் இதுவரை தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்குவெயிட்டேஜ் மதிப்பெண் இணையதளத்தில் வெளியீடு. 30-ந் தேதி பட்டியல் வெளியீடு.

*RTI LETTER :இளநிலை உதவியாளர் காலிப்பணியிடங்களை 20% பணி மாறுதல் மூலம் நிரப்பலாம்- பள்ளிக்கல்வி இயக்குநர்.

*காகிதத்தில் காத்திருக்கும் கலவை சாதத்திட்டம்: மாணவர்கள் சத்துக்களை பெறுவது எப்போது?

*கல்விக்கண் திறந்த வள்ளலை நன்றியுடன் வணங்குகிறோம்!

*பட்டதாரி ஆசிரியர் மதிப்பெண் வெளியீடு: 30ம் தேதி 11 ஆயிரம் பேர் இறுதி பட்டியல்

For more details visit Kalvi seithi.
-RK

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!