Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 18 July 2014

பி.எட்., படிப்பு ஓராண்டு தான் உயர்கல்வி அமைச்சர் தகவல்

பி.எட்., படிப்பு ஓராண்டு தான் உயர்கல்வி அமைச்சர் தகவல்

               தமிழகத்தில், பி.எட்., படிப்பு காலம் ஓராண்டுதான்; மாற்றமில்லை,'' என, உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்தார்.சட்டசபையில், பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறை மானிய கோரிக்கை விவாதம்:

ம.ம.க., ஜவாஹிருல்லா:

         பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில், தேர்வு செய்யப்படுபவர்கள் பட்டியல் வெளிப்படையாக, இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும்.

            அமைச்சர் பழனியப்பன்: துணைவேந்தர் நியமனம் என்பது, உரிய குழுக்கள் அமைத்து தான் தேர்வு செய்யப்படுகிறது. பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) விதிமுறைப்படி தான், நியமிக்கப்படுகின்றனர். இதில் ஒளிவு மறைவு என்பது இல்லை.

          பார்வர்டு பிளாக், கதிரவன்: தமிழகத்தில், பி.எட்., படிப்பு, இரண்டாண்டாக மாற்றப்படுவதாக கூறப்படுகிறது. எனவே, டி.இ.டி., தேர்வு எழுத வேண்டுமா?

பழனியப்பன்:

             மத்திய ஆசிரியர் கல்வி வாரியம், பி.எட்., படிப்பை, இரண்டு ஆண்டு படிப்பாக மாற்றுவது தொடர்பான ஆலோசனையை தெரிவித்துள்ளது. மத்திய அரசோ, மாநில அரசோ, இதை அமல்படுத்தவில்லை. தமிழகத்தில், பி.எட்., படிப்பு ஓராண்டு மட்டும் தான். இவ்வாறு விவாதம் நடந்தது

தெரிந்துகொள்வோம்

தெரிந்துகொள்வோம் :

அந்த காலங்களில் நமது வீடுகளில் தண்ணிர் செம்பு குடங்களில் பிடித்து வைப்பார்கள் ஏன் தெரியுமா..?

கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பணத்தைத் தண்ணீராக செலவு செய்யும் காலமிது. ஆனால், ''வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம் நூற்றுகனகான ரூபாய் மிச்சமாகும்...

''மைசூர்ல இருக்கற அஜய் நினைவு குடிநீர் நிறுவனத்தைச் சேர்ந்தவங்க, செம்புப் பாத்திரத்துல தண்ணியை வெச்சி ஒரு ஆராய்ச்சி நடத்தினாங்க. அதோட முடிவுல, 'செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை'னு அந்த நிறுவனம் சொல்லியிருக்கு....

இந்தத் தகவல் தெரிஞ்சதிலிருந்து செம்புக் குடத்துல வெச்சிருந்துதான் தண்ணியைக் குடிக்கின்றார்கள். கிணத்துல கிடைக்கின்றத் தண்ணி, செம்புக் குடத்துக்குப் போனதும் மினரல் வாட்டர் மாதிரி அருமையாக மாறிவிடுகிறதாம்...

செம்பு குடம் இல்லனாலும் பரவாயில்லை. ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத் தண்ணி தரமானதா மாறிடும். மூணு நாளைக்கு ஒரு தரம் செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான்...

தகட்டைச் சுத்தமா கழுவிவிட்டு திரும்பவும் குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுகள்ல செம்புக்குடம்தான். இன்னிக்கும் சில கிராமங்கள்ல செம்பு குடத்துலதான் தண்ணி குடிக்கறாங்க...

என்னதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும் நம் முன்னோர்கள், முன்னோர்கள் தான்...!

கல்வி மானிய கோரிக்கை முழு விவரம் :

கல்வி மானிய கோரிக்கை முழு விவரம் :

2014-2015ஆம் கல்வியாண்டில் 3,459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்என்று சட்டசபையில் அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்தார். இது குறித்து சட்டசபையில் அமைச்சர் கே.சி.வீரமணி கூறியதாவது:

1. விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயாவிற்கு கட்டிடம் கட்டுதல்

கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களிலுள்ள பள்ளிச் செல்லாப் பெண் குழந்தைகள் மற்றும் இடைநின்ற பெண் குழந்தைகளுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய தரமான கல்வி கற்க வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், 61 கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த 61 பள்ளிகளில்,ஆசிரியர்குரல் 60 பள்ளிகள் சொந்த கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா மட்டும் தனியார் கட்டிடத்தில் தற்போது இயங்கி வருகிறது. முதலமைச்சர் அவர்களின் ஆணையின் பேரில், இக்கல்வியாண்டில் விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயாவிற்கு 60 இலட்சம் ரூபாய் செலவில் சொந்த கட்டடம் கட்டித் தரப்படும்.

2.இடைநின்ற பெண் குழந்தைகளுக்குச் சிறப்புப் பயிற்சி அளித்தல்

கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயாவில் எட்டாம் வகுப்பு வரை பயின்று, கல்வியைத் தொடராமல் இடைநின்ற 152 பெண் குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். இவ்வாறாக ஆசிரியர்குரல் கண்டறியப்பட்ட பெண் குழந்தைகளுக்கு, 38 இலட்சம் ரூபாய் செலவில் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அவர்களின் வயதிற்கேற்ற வகுப்புகளில் அருகாமையில் உள்ள பள்ளிகளில் இடைநிலைக் கல்வியை தொடரும் பொருட்டு சேர்க்கப்படுவர்.

3.பள்ளிகளுக்கு விளையாட்டுச் சாதனங்கள் வழங்குதல்

கல்வியில் மட்டுமல்லாது விளையாட்டிலும் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்பதில் ஆணித்தரமான நம்பிக்கை கொண்டுள்ள முதலமைச்சர் அவர்கள், பள்ளிகளில் சதுரங்கப் போட்டிகளை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். 2013-2014ஆம் கல்வியாண்டில் முதன்முறையாக விளையாட்டுத் தொடர்பான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் பொருட்டு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். அதன் தொடர்ச்சியாக, 2014-2015ஆம் கல்வியாண்டில் 100 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு 20 இலட்சம் ரூபாய் செலவில் விளையாட்டுச் சாதனங்கள் வழங்கப்படும்.

4.பெண் குழந்தைகளுக்குக் கராத்தே பயிற்சி அளித்தல்

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு, நலன் மற்றும் அவர்களின் நல்வாழ்வில் மிகுந்த அக்கறை கொண்டு பல முன்னோடித் திட்டங்களை தீட்டி அவற்றை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். இதன் ஆசிரியர்குரல் தொடர்ச்சியாக, 2014-2015ஆம் கல்வியாண்டில் பெண் குழந்தைகள் குறிப்பாக பழங்குடியினத்தைச் சார்ந்த பெண் குழந்தைகள் தங்களைக் தற்காத்துக்கொள்ள வழிவகை செய்யும் பொருட்டு பழங்குடியினர் அதிகம் வசிக்கும் நீலகிரி, நாமக்கல், சேலம், திருவண்ணாமலை மற்றும் தருமபுரி ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 482 அரசுப் பள்ளிகளில் பயிலும் 4,782 பெண் குழந்தைகளுக்குக் கராத்தே பயிற்சி 14 இலட்சம் ரூபாய் செலவில் அளிக்கப்படும்.

5.கல்வியில் பின்தங்கியுள்ள ஒன்றியங்களில் உள்ள 9ஆம் வகுப்புப் பயிலும் நலிவுற்ற வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவியர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளித்தல்

கல்வியில் பின்தங்கியுள்ள ஒன்றியங்களில் மாதிரிப்பள்ளிகள் மற்றும் பெண்கள் விடுதிகள் கட்டி முடிக்க 141.91 கோடி ரூபாயை பெருந்தன்மையுடன் அளித்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்பேரில், நடப்புக் ஆசிரியர்குரல் கல்வியாண்டில், இவ்வொன்றியங்களில் உள்ள பள்ளிகளில் 9ஆம் வகுப்பு பயிலும் நலிவுற்ற வகுப்பைச் சார்ந்த 32,563 மாணவ, மாணவியர்களுக்கு அவர்களின் செயல்திறன்களை மேம்படுத்தும் பொருட்டு 1.63 கோடி ரூபாய் செலவில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.

6.அறிவியல் கண்காட்சி

மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை ஊக்குவிப்பதற்காகவும், அறிவியல் திறன்களை ஆசிரியர்குரல் வளர்ப்பதற்காகவும் அனைத்து மாவட்டங்களிலும் அறிவியல் கண்காட்சிகள் நடத்த முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். அதனடிப்படையில், தமிழ்நாட்டில் 2014-2015ஆம் கல்வியாண்டில் 32 மாவட்டங்களிலும் அறிவியல் கண்காட்சி 32 இலட்சம் ரூபாய் செலவில் நடத்தப்படும்.

7.மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான உள்ளடங்கிய இடைநிலைக் கல்வி வழங்க சிறப்பு ஆசிரியர்கள் நேரடி நியமனம் மூலம் நியமித்தல்

முதலமைச்சர் அவர்கள், மாற்றுத் திறன் கொண்ட அனைத்து குழந்தைகளுக்காகவும், பெற்றோர்களுக்காகவும் நாட்டிலேயே முதன் முறையாக மாநில ஆதார வள மையம் (ளுவயவந சுநளடிரசஉந ஊநவேசந) அமைத்துள்ளார்கள். இதன் ஆசிரியர்குரல் தொடர்ச்சியாக அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான உள்ளடங்கிய இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ், தரமான கல்வி வழங்கும் பொருட்டு, 5.35 கோடி ரூபாய் செலவில் 202 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். இவ்வாசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்படும்.

8.தலைமை ஆசிரியர்களுக்கான சிறப்புப் பயிற்சி அளித்தல்

முதலமைச்சர் அவர்கள், 2012ஆம் ஆண்டு ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமாகத் தரம் உயர்த்தி ஆணையிட்டார்கள். அந்நிறுவனத்தின் வாயிலாக ஆசிரியர்களுக்கென பணியிடைப் பயிற்சிகள் நடத்தி மாணவர்கள் தரமான கல்வி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக நடப்புக் ஆசிரியர்குரல் கல்வியாண்டில் தலைமை ஆசிரியர்களின் கல்வி மற்றும் நிர்வாகத்திறனை மேம்படுத்தும் பொருட்டு 1,140 உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு, 55 இலட்சம் ரூபாய் செலவில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.

9.இரண்டு சட்ட அலுவலர் பணியிடங்கள் தோற்றுவித்தல்

முதலமைச்சர் அவர்கள் கடந்த மூன்றாண்டுகளில், நிர்வாக நலனைக் கருத்தில் கொண்டு பள்ளிக் கல்வித் துறைக்கென 20,025 ஆசிரியர் அல்லாத பணியிடங்களை அனுமதித்துள்ளார்கள். இதன் தொடர்ச்சியாக, மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தொடரப்படும் பள்ளிக்கல்வித் துறையைச் ஆசிரியர்குரல் சார்ந்த வழக்குகளில் நடவடிக்கை மேற்கொள்ள ஒரு சட்ட அலுவலர் பணியிடமும், ஆசிரியர் தேர்வு வாரியம் சார்ந்த வழக்குகளில் நடவடிக்கை மேற்கொள்ள ஒரு சட்ட அலுவலர் பணியிடமும் ஆக மொத்தம் புதிதாக இரண்டு சட்ட அலுவலர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.

10.ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத காலிப்பணியிடங்கள் நிரப்புதல்

மாணவர்களுக்குத் தரமான கல்வி வழங்க ஆசிரியர்கள் தேவை என்பதை உணர்ந்து, முதலமைச்சர் அவர்கள், கடந்த ஆசிரியர்குரல் மூன்று ஆண்டுகளில் 71,708 ஆசிரியர் பணியிடங்களை அனுமதித்துள்ளார்கள். இதன் தொடர்ச்சியாக 2014-2015ஆம் கல்வியாண்டில், 3,459 ஆசிரியர் பணியிடங்களும், 75 ஆசிரியர் சார்ந்த பணியிடங்களும், செம்மையான நிர்வாகத்திற்காக 340 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் நிரப்பப்படும்.

வரிசை எண் ஆசிரியர் பணியிடங்கள் எண்ணிக்கை

1. முதுகலை ஆசிரியர் 952

2. பட்டதாரி ஆசிரியர் 2,489

3. உடற்கல்வி இயக்குநர் 18

மொத்தம் 3,459

வரிசை எண் ஆசிரியர் சார்ந்த பணியிடங்கள் எண்ணிக்கை

1. முதுநிலை விரிவுரையாளர் (ளுஊநுசுகூ) 15

2. விரிவுரையாளர் (ளுஊநுசுகூ) 40

3. இளநிலை விரிவுரையாளர் (ளுஊநுசுகூ) 20

மொத்தம் 75

வரிசை எண் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் எண்ணிக்கை

1. உதவியாளர் 152

2. இளநிலை உதவியாளர் 188

மொத்தம் 34011.அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் காவலர்களுக்கு விடுமுறைக் காலத்தினைக் கணக்கில் எடுத்துக் கொண்டு ஈட்டிய விடுப்பு வழங்குதல்

அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள் கோடை விடுமுறையின்போதும் நிர்வாக நலன் கருதி பள்ளிக்கு வருகை புரிய வேண்டும். எனவே, இவர்கள் விடுமுறையற்ற (சூடிn ஏயஉயவiடிn னுநயீயசவஅநவே) பணியாளர்களாகக் கருதப்படுகின்றனர். ஆனால், ஆசிரியர்கள் விடுமுறைக் காலங்களில் பள்ளிகளுக்கு வருகை புரிவதில்லை. எனவே, இவர்கள் விடுமுறை உள்ள (ஏயஉயவiடிn னுநயீயசவஅநவே) பணியாளர்களாகக் கருதப்படுகின்றனர். தற்போது ஆசிரியர்களைப் போன்று விடுமுறையுள்ள பணியாளர்களாக அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் காவலர்கள் கருதப்படுகின்றனர். ஆனால், பள்ளி மற்றும் அங்கிருக்கும் தளவாடப் பொருள்களின் பாதுகாப்பு கருதி விடுமுறை நாட்களிலும் காவலர்கள் முழுநேரப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். எனவே, காவலர்களை விடுமுறையற்ற (சூடிn ஏயஉயவiடிn னுநயீயசவஅநவே) பணியாளர்களாக அறிவித்து, விடுமுறைக் காலத்தினை ஈட்டிய விடுப்பாகக் கணக்கிட்டு, தற்போது ஓராண்டிற்கு வழங்கப்படும் 17 நாட்கள் ஈட்டியவிடுப்பினை 30 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும்.

12.நடமாடும் நூலகங்கள் அமைத்தல்

தற்போது தமிழ்நாட்டில் 10 நடமாடும் நூலகங்கள் இயங்கி வருகின்றன. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, நூலகத்திற்கு வர இயலாத முதியவர்கள், உடல்நலமற்றோர், இல்லத்தரசிகள் போன்றோர் புத்தகங்கள், பருவ இதழ்கள் மற்றும் நாளிதழ்களைப் படிக்கும் வகையில், வாகனங்கள் வாயிலாக தருமபுரி, திருவள்ளூர், வேலூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மற்றும் விழுப்புரம் ஆகிய ஏழு மாவட்டங்களில் 70.00 இலட்சம் ரூபாய் செலவில் "நடமாடும் நூலகங்கள்" அறிமுகப்படுத்தப்படும்.

13.அரசின் நலத்திட்டங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள பொது நூலகத் தகவல் மேசை அமைத்தல்

பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து நலத்திட்டங்கள் பற்றிய முழுமையான தகவல்களைப் பொது மக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் பொருட்டு, கன்னிமாரா பொது நூலகத்தில் இலவசத் தொலைபேசி (கூடிடட கசநந) அழைப்பு எண்ணுடன் கூடிய "பொது நூலகத் தகவல் மேசை" 26 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

14.வீட்டுக்கொரு நூலகம்

அனைத்துக் குழந்தைகளும் புத்தங்களைப் படித்துத் தங்களது திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நோக்கம் ஆகும். ஆசிரியர்குரல் அந்நோக்கத்தினை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசால் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் இலவச மடிக்கணினிகளில், கன்னிமாரா பொது நூலகத்தில் மின்மயமாக்கப்பட்டுள்ள, காப்புரிமை கோர இயலாத, நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்கள், அரசு பதிப்பு நூல்கள் மற்றும் அரிய நூல்கள் 6.00 இலட்சம் ரூபாய் செலவில் பதிவேற்றம் செய்யப்படும்.

15.நூல்கள் பாதுகாப்பு மையம் அமைத்தல்

நூலகங்களில் இருப்பு நீக்கம் செய்யப்படும் பழமையான, அரிய நூல்களின் ஒரு பிரதியானது, நூல் ஆராய்ச்சியாளர் மற்றும் எதிர்காலச் சந்ததியருக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் வகையில் 1.50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும் நூல்கள் பாதுகாப்பு மையத்தில் பாதுகாக்கப்படும். மாநிலத்தில் முதற்கட்டமாக திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் "நூல்கள் பாதுகாப்பு மையம்" அமைக்கப்படும்.

16."நூலக ஆர்வலர்" விருது வழங்குதல்

பொது நூலகங்கள் மக்களுக்கு நன்கு பயன்படும் வகையில், சராசரி மனிதரின் படிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்தி நூலக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வரும் "வாசகர் வட்டம்" எனும் அமைப்புகளில், மாநில அளவில் நூலக இயக்கம் வளர முனைப்புடன் சிறப்பாகப் பங்காற்றும் 3 வாசகர் வட்டத் தலைவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்பேரில், இக்கல்வியாண்டு முதல் ரூ.5,000/- மதிப்புள்ள கேடயம் மற்றும் சான்றிதழென 15,000/-ரூபாய் செலவில் "நூலக ஆர்வலர்" விருது நூலக வார விழாவில் வழங்கப்படும்.

17.குழந்தைகளுக்கான விலையில்லா கற்றல் உபகரணப்பெட்டி வழங்குதல்

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர்களின் படிப்புத் திறனை மேம்படுத்தும் பொருட்டு, 2012-2013ஆம் கல்வியாண்டு முதல் புத்தகப்பை, கிரையான்கள், வண்ணப் பென்சில்கள், கணித உபகரணப் பெட்டி, வரைபடப் புத்தகம் உள்ளடக்கிய கற்றல் உபகரணங்களை 330.58 கோடி ரூபாய் செலவில் வழங்கி வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக, மாணவர்களிடையே படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு மாவட்ட மைய நூலகக் குழந்தைகள் பிரிவில், புதிய உறுப்பினராகச் சேரும் முதல் 100 குழந்தைகளுக்கு, அவர்களின் மனவளர்ச்சி மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்தும் நோக்கில், வரை உபகரணங்கள், வண்ணப் பென்சில்கள், களிமண் மற்றும் ஆசிரியர்குரல் பொருட்கள் அடங்கிய "விலையில்லா கற்றல் உபகரணப் பெட்டிகள்" 64 இலட்சம் ரூபாய் மதிப்பில் வழங்கப்படும்.

18.தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரஸ்வதி மகால் நூலகத்திலுள்ள தொன்மை வாய்ந்த அரிய நூல்களை இலக்க முறையில் பாதுகாத்தல்

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இந்தியாவில் உள்ள பழமையான நூலகங்களில் ஒன்றான தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரஸ்வதி மகால் நுhலகத்திற்கான மானியத்தை 2013-2014ஆம் ஆண்டு முதல் 40 இலட்சம் ரூபாயிலிருந்து 70 இலட்சம் ரூபாயாக உயர்த்தி ஆணையிட்டுள்ளார்கள். இதன் ஆசிரியர்குரல் தொடர்ச்சியாக இந்நூலகம் மற்றும் ஆய்வு மையத்திலுள்ள தொன்மை வாய்ந்த, விலைமதிப்பற்ற, அரிய நூல்கள் மற்றும் ஓலைச் சுவடிகளை, சாதாரண மக்கள் முதல் நூல் ஆராய்ச்சியாளர்கள் வரை பயன்படுத்தும் வகையில் 7.50 இலட்சம் ரூபாய் செலவில் உருப்படம் செய்யப்பட்டு, இலக்க முறையில் பாதுகாக்கப்படும்.

அரசுப் பள்ளிகளின் ஆங்கில வழி

அரசுப் பள்ளிகளின் ஆங்கில வழி பாடப் பிரிவுகளில் புதிதாக 1.06 லட்சம் மாணவர்கள்: அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்.

           அரசுப் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள ஆங்கில வழிப் பாடப் பிரிவுகளில்இந்த ஆண்டு புதிதாக 1 லட்சத்து 6 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.
             சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற உயர் கல்வி, பள்ளிக் கல்வி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் (தளி), அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளைத் தொடங்கி அரசே ஆங்கில வழிக் கல்வியை ஊக்கப்படுத்தக் கூடாது என்றார்.அப்போது குறுக்கிட்டு அமைச்சர் கே.சி.வீரமணி பேசியது:தமிழகத்தில் ஆங்கில வழிக் கல்வியை எதிர்த்துப் போராடுபவர்களும் அவர்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்க வைப்பதில்லை. ஏழை, எளியவர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகளும் ஆங்கிலம் கற்க வேண்டும் என்பதற்காகவே அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.இந்தப் பிரிவுகளில் இந்த ஆண்டு 1 லட்சத்து 6 ஆயிரம் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர்.பல பெற்றோர்கள் தங்களது பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிப் பிரிவுகளைத் தொடங்குமாறு கோரி வருகின்றனர்.

மடிக் கணினி:
ராமச்சந்திரன்: அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுயநிதிப் பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கப்படுவதில்லை. ஆனால், அவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. இந்த மாணவர்களுக்கும் மடிக் கணினி வழங்க வேண்டும்.

அமைச்சர் கே.சி. வீரமணி: அரசாணையின்படியே மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கப்படுகிறது. சைக்கிளின் விலை ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரைதான். ஆனால், மடிக் கணினியின் விலை ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை உள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு மட்டும் மடிக் கணினி வழங்குவது என்பது அரசின் கொள்கை முடிவு. மேலும், மக்களவைத் தேர்தல் காரணமாக கடந்த ஆண்டு பிளஸ் 2 மாணவர்களுக்கு மடிக் கணினி விநியோகம் தடைபட்டது.இப்போது மடிக் கணினி விநியோகம் நடைபெற்று வருகிறது.

இதுவரை 1.35 லட்சம் பிளஸ் 2 மாணவர்களுக்கும், 15 ஆயிரம் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் மடிக் கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.விரைவில் மீதமுள்ள மாணவர்களுக்கும் மடிக் கணினிகள் வழங்கப்படும்என்றார்

wordhippo

இணையதள முகவரி : http://www.wordhippo.com/
இந்த இணையதளத்தில் ஒரு சொல்லைத் தேர்வு செய்து, அந்த சொல்லிற்கு இணையாக வேறு என்ன சொற்களெல்லாம் இருக்கின்றன? இந்த சொல்லிற்கு எதிர்சொற்கள் (Opposite Word)என்னென்ன இருக்கின்றன? அந்த சொல்லைக் கொண்டு எப்படியெல்லாம் வாக்கியங்கள் (Sentense) அமைக்கலாம்? அந்த சொல்லுக்கு இணையாக (டச்சு - Dutch), (பிரெஞ்ச் - French), (ஜெர்மன் - German), (இத்தாலி - Italian), (போர்ச்சுக்கீசு - Portuguese), (ஸ்பானிஷ் - Spanish) போன்ற மொழிகளுக்கு மாற்றம் (Translate)செய்து வரும் சொற்கள், இந்த மொழிகளில், குறிப்பிட்ட மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மாற்றம் செய்தால் வரும் சொற்கள், ஒரு சொல்லுக்கு (பன்மைச் சொல் வடிவம் -Plural), (கடந்த காலம் -Past Tense), சொல் அல்லது( நிகழ் காலம் - Present Tense)சொல் என்ன? ஆங்கிலத்திலிருக்கும் அனைத்துச் சொற்களையும் கண்டறியும் வசதி, 2 முதல் 10 எழுத்துக்கள் என எழுத்துக்களைக் கொண்டும் அவை தொடங்கும் அல்லது முடியும் மற்றும் இருக்கும் எழுத்துக்களைக் கொண்டும் ஆங்கிலச் சொற்களைக் கண்டறியும் வசதியும் இந்த இணையதளத்தில் உள்ளது. எழுத்துக்களைக் கொண்டு போட்டிக் கேள்விகள் (Quiz)போன்றவையும் தரப்பட்டுள்ளன.

(Dictionary)மற்றும் மொழிமாற்றக் கருவி(Translator)தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் இத்தளத்தில் உள்ளன.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!