Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 20 July 2014

வாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள்.

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

வாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள்.

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்
முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன்
சம்பாதியுங்கள்

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

3. யாரிடம் கற்கிறோமோ அவரே
ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான்
தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை.
அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம்
முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை
மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக்
குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை
ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை
வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும்
ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள்
இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு.
திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும்
பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில்
புறப்படுங்கள்

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால்
பழகிக்கொள்ளுங்கள்

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும்
நல்லவனாவாய்

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள்
இப்படித்தான் என எண்ணிக்கொள்

16. யார் சொல்வது சரி என்பதல்ல,
எது சரி என்பதே முக்கியம்

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை
முடிவெடுங்கள்

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது.
பயத்தை உதறி எறிவோம்

19. நியாயத்தின் பொருட்டு
வெளிப்படையாக ஒருவருடன்
விவாதிப்பது சிறப்பாகும்

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய்
பாதி உலகத்தை வலம் வந்துவிடும்

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான்
துணை வேண்டும்

22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத்
தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச்
செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக
ஏமாந்து போகிறான்

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும்
தம் பங்கை நடிக்கிறார்கள்

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் .
அப்போது தான் முன்னேற முடியும்

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது
வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன்
பணிபுரிவர்

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும்
வென்ற மனிதனாவான்

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக்
கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த
வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான்
சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான்
கடினம்

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால்
எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச்
செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச்
சிந்திக்க வைக்கிறது.
-RK

உன்னுடைய வாழ்க்கை

ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார்.

கடவுள்: "வா மகனே.......

.நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது......."

ஆச்சரியத்துடன் மனிதன் "இப்பவேவா?

இவ்வளவு சீக்கிரமாகவா?

என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?"

"மன்னித்துவிடு மகனே........

உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது........."

"அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?"

"உன்னுடைய உடைமைகள்........."

"என்னுடைய உடைமைகளா!!!.......அதாவது என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,.............?"

"இவை அனைத்தும் உன்னுடையது அல்ல........ அவை பூமியில் நீ வாழ்வதற்கானது........."

"என்னுடைய நினைவுகளா?............."
"அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........அவை காலத்தின் கோலம்........"

"என்னுடைய திறமைகளா?..........."
"அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........

அவை சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது......."

"அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா?......"
"மன்னிக்கவும்...........

குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழி.........."

"அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்கள்?"

"உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானது கிடையாது......... அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்............"

"என் உடல்?..........."

"அதுவும் உன்னுடையது கிடையாது..........உடலும் குப்பையும் ஒன்று........."

"என் ஆன்மா?"

"இல்லை........அது என்னுடையது.........."

மிகுந்த பயத்துடன் மனிதன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கி திறந்தவன் அதிர்ச்சிக்குள்ளாகிறான்........ காலி பெட்டியைக் கண்டு..........

கண்ணில் நீர் வழிய கடவுளிடம் "என்னுடையது என்று எதுவும் இல்லையா?" எனக் கேட்க,

கடவுள் சொல்கிறார், "அதுதான் உண்மை.

நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது.

வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான்.

ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வதுடன் நல்ல செயல்களை மட்டும் செய்.

எல்லாமே உன்னுடையது என்று நீ நினைக்காதே........"

-- ஒவ்வொரு நொடியும் வாழ்

-- உன்னுடைய வாழ்க்கையை வாழ்

-- மகிழ்ச்சியாக வாழ மறக்காதே......

.அது மட்டுமே நிரந்தரம்.......

-- உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது....

Interesting Thing About 2014:

Continuous 3 holidays in 2014.
15,16,17 Aug...
4, 5, 6 Oct...
1, 2, 3 Nov...
Highlights of this yr's leave calender.....
2nd oct-thursday-gandhi jayanti
3rd oct- friday-dussera
4th oct- saturday
5th oct- sunday
6th oct- monday-bakri Eid

Start planning for long vacation

Interesting Thing About 2014:

4.4.14-Friday
6.6.14-Friday
8.8.14-Friday
10. 10. 14-Friday
12. 12. 14-Friday

Interesting thing about sunday in 2014

01/01/2014
02/02/2014
03/03/2014
04/04/2014
05/05/2014
06/06/2014
07/07/2014
08/08/2014
09/09/2014
10/10/2014
11/11/2014
12/12/2014

Very interesting & meaningful msg to share:
This Saturday has 24.5 hours, Sunday has 25 hours.
This happens once in 1600 years , and is called Dollar sacks.
Interesting thing about Friday in 2014: 

4/4/2014 Friday 

6/6/2014 Friday 

8/8/2014 Friday 😋

10/10/2014 Friday 

12/12/2014 Friday 

We r going to use calender of 1947 in 2014 

Date & Day even Festivals are same 

Who said...
History does not repeat !! 😎😆

I hope, I am the first who inform u... 😋

Enjoy the year of 1947 in 2014....! n

So 

We are back in90s  

தகுதி

தகுதி!

பள்ளிக்கூட புத்தகப்பையை எடுத்துக் கொடுத்த விவசாயி

வினோபா பாவே ஒரு நூலகத்தைத் துவக்க எண்ணி, ஒவ்வொரு வீடாகச் சென்று பத்தாயிரம் புத்தகங்களை சேகரித்தார். புதுக்கட்டிடத்தில் பிரமாதமாக ஒரு நூலகத்தை நிறுவி, அதை ஒரு விவசாயியைக் கொண்டு திறக்க வைத்தார்! எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.

வினோபா பாவே, ""நான் கேட்டுக்கொண்டேன் என்ற ஒரே காரணத்திற்காக அப்பாவித்தனமாக தனது மகனின் பள்ளிக்கூடப் புத்தகத்தைக்கூட எடுத்துக் கொடுத்து விட்டார் இந்த விவசாயி. இவர்தான் உயர்ந்தவர். இவர்தான் இந்த நூலகத்தைத் திறக்க சரியான நபர்'' என்று சொல்ல, கூட்டமே மெய்மறந்து கை தட்டியது!

டூவீலரில் வரும் மாணவர்கள்

டூவீலரில் வரும் மாணவர்கள் விபத்தில் சிக்கினால் தலைமை ஆசிரியரே பொறுப்பு

ஓட்டுனர் உரிமம் இல்லாமல், பள்ளிகளுக்கு மாணவர்கள், டூவீலர்களில் வரக்கூடாது.மீறி வந்து அவர்கள் விபத்தில் சிக்கினால்,சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரே பொறுப்பாவார் என,என பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில்,'அனைத்து பள்ளிகளிலும்,பள்ளி மாணவ, மாணவிகள், முறையாக ஓட்டுனர் உரிமம் பெறாமல், பள்ளிக்கு டூவீலரில் வருவதால்,பல்வேறு விபத்துக்களும், உயிர் இழப்புகளும் ஏற்பட்டு வருவதாக,புகார் எழுந்துள்ளது. எனவே,முதன்மை கல்வி அலுவலர்கள் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி, மாணவ, மாணவிகள் டூவீலரில் ஓட்டி வருதல் கூடாது, என தெரிவிக்க வேண்டும். அவ்வாறு மாணவர் யாரும் வந்தால், அவர்கள் வாகனத்தின் சாவியை, தலைமை ஆசிரியர் எடுத்து வைத்து, மாணவரின் பெற்றோர் வந்த பிறகு அவர்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும். மேலும், அடுத்த முறை அவர் வராதவாறு பெற்றோருக்கு அறிவுரை கூற வேண்டும். இதை மீறி, லைசென்ஸ் இன்றி டூவீலரில் பள்ளிக்கு வரும் மாணவர்கள்,விபத்தில் சிக்க நேர்ந்தால்,அதற்கு சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரே முழு பொறுப்பு ஏற்க வேண்டும்”, இவ்வாறு கூறியுள்ளார்.

கொழுப்பைக் கரைக்கும் கொள்ளு :-

கொழுப்பைக் கரைக்கும் கொள்ளு :-
+++++++++++++++++++++++++++++++

கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முதலிடம். உடலிலுள்ள தேவையற்ற தண்ணீரைக் கொள்ளு எடுத்துவிடும்.

கொள்ளுத் தண்ணீர் ரத்தத்தை சுத்திகரிப்பதுடன், உடலிலுள்ள நச்சுத் தன்மைகளை எல்லாம் எடுத்து விடும். வளரும் குழந்தைகளுக்கும், உடற்பயிற்சி செய்வோருக்கும் மிகவும் உகந்தது. ஆயுர் வேதத்தில் கொள்ளை தலையில் வைத்துக்கொண்டாடாத குறைதான். பெரும்பாலான நோய்களுக்கு கொள்ளு மருந்தாகப் பயன்படுகிறது. பைல்ஸ் எனப்படுகிற மூல நோய்க்கு, ருமாட்டிசம் பிரச்னைக்கு, இருமல் மற்றும் சளியை விரட்ட, காய்ச்சலைக் கட்டுப்படுத்த… இப்படி கொள்ளு குணமாக்கும் பிரச்னைகளின் பட்டியல் நீள்கிறது.

அல்சர் எனப்படுகிற வயிற்றுப் புண்ணுக்கும், சிறுநீரகக் கற்களை வெளியேற்றவும், அதீத ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தவும்கூட கொள்ளு உதவுவதாக ஆயுர்வேதம் சொல்கிறது. சிக்குன்குனியா நோய் பாதித்தவர்களுக்குக் கூட கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சூப் வைத்துக் கொடுக்கச் சொல்லிப் பரிந்துரைக்கப்படுகிறது. ஆந்திராவில் மஞ்சள் காமாலை நோய்க்கு கொள்ளை மருந்தாக உபயோகிக்கிறார்கள். அது மட்டுமின்றி, கொள்ளை வேக வைத்து மசித்து, சருமப் பிரச்னைகளுக்குத் தடவுகிறார்கள்.

சூட்டைக் கிளப்புமா?

கொள்ளு சூட்டைக் கிளப்பும் என்றும், அதனால் அடிக்கடி அதை எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் மக்களிடையே ஒரு எண்ணம் உண்டு. கொள்ளு சூடானது என்பது உண்மைதான், அதாவது, வளர்சிதை மாற்ற விகிதத்தை வேகப்படுத்தும். அதனால்தான் கொழுப்பைக் குறைக்க கொள்ளு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

எப்படியெல்லாம் எடுத்துக் கொள்ளலாம்?

கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சிட்டிகை உப்பும், மிளகுத்தூளும் சேர்த்து தினமும் அப்படியே குடிக்கலாம். வேக வைத்த கொள்ளை, சாலட் போல சாப்பிடலாம். கொள்ளை வெறும் கடாயில் வறுத்துப் பொடித்துக் கொண்டு, சாம்பார், ரசம், பொரியல், கூட்டு என எல்லாவற்றிலும் சேர்க்கலாம். உணவின் மூலம் உடலுக்குள் சேரும் கொழுப்பிலிருந்து இது நம்மைக் காப்பாற்றும். அசைவம் சாப்பிடுகிறவர்கள், குறிப்பாக மட்டன் பிரியர்கள், அத்துடன் கொள்ளு சேர்த்து சமைக்கலாம். மட்டன் அதிக கொழுப்பு நிறைந்தது.

கொள்ளு அந்த கொழுப்பை உடலில் தங்க விடாமல் காக்கும். அதற்காக தினமும் மட்டன் சாப்பிட வேண்டும் என்கிற அவசியமில்லை. இது என்றோ ஒரு நாளைக்குத்தான். மதியமோ, இரவோ பலமான விருந்து சாப்பிடப் போகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அன்றைய தினம் காலையில் நொய்யரிசியும், கொள்ளும் சேர்த்துக் கஞ்சி செய்து குடித்தால், அடுத்தடுத்த வேளைகள் சாப்பிடப் போகிற உணவின் கொழுப்பினால் உடலுக்கு பாதிப்பு வருவது தவிர்க்கப்படும்.

இயற்கையாய் இயற்கையோடு வாழ..!
இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்..!
ஆலமர விழுதுகளாய் நாம் பகிர்வோம்..!
மனிதநேய விதைகளாய் மாறுவோம்..!

News

Kumbakonam School Fire Accident
94 Kids Death Case Final Judgement on Coming July 30.07.14- Thanjavur Dist Judge Mohammed Ali Announced

>Percentage of students Enrollment for Higher Studies has doubled says Higher Education Minister P.Palaniappan

>DEE- Elementary Dir seeks English Medium Schools List

>TET- Paper 1 & 2 expected cut-off marks avail in www.tnkalvi.com

>TN CM gave appoinment orders to 172 Associate Professors of TN Agricultural University

>Manonmaniam Sundaranar University
B.Ed 2years programme
Last Date 31.07.14
www.msuniv.ac.in

>Watch "NEEYA NAANA" Programme
Topic - Govt Schools vs Private Schools today 20.07.14 Sunday in Vijay TV

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!