Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 11 August 2014

TNTET Article

TNTET Article: மேலே கழுகுகள் வட்டமிடுகின்றன!

மேலே கழுகுகள் வட்டமிடுகின்றன!வெற்றிபெற்றவர்களுக்கு :

         தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் ... உங்கள் வாழ்வில் ஒளி ஏற்றிவைத்துள்ள ஆசிரியப்பணிக்கு கைமாறாக எண்ணற்ற ஏழை மாணவர்களின் மனதில் கல்வி ஒளியையும் அவர்கள் வாழ்வில் அறிவு ஒளியையும் ஏற்றிவைத்து கூடவே அன்பு, அறம், ஒழுக்கம், தியாகம், கருணை, வீரம் போன்ற விழுமியங்களையும் கற்றுத்தாருங்கள் .........

தோல்வியடைந்தவர்களுக்கு : 

          உங்கள் தோல்விகளை விதையுங்கள், நம்பிக்கை எனும் உரமூட்டுங்கள், தொடர்ந்து முயற்சி எனும் நீர்வார்த்து வாருங்கள், நாளை உங்கள் கைகளிலும் வெற்றிக்கனி வந்து விழலாம் ! வெற்றி பெற்றவர்கள் தங்கள் வாழ்க்கையை வரலாற்றில் வெறுமனே பதிவு செய்துவிட்டு மட்டும் செல்கிறார்கள். தோல்வியடைந்தவர்கள்தான் தங்கள் வாழ்க்கையையே ஒரு பாடமாக விட்டுச் செல்கிறார்கள் ! தோல்வி நமது தகுதிகளையும் திறமைகளையும் இன்னும் ஒருபடி மேலே இட்டுச்செல்வதற்கான ஒரு தளம் ! தோல்வியடைந்தவர்களே மனம் தளராதீர்கள் ! அரசுப்பணி பெற்றவர்களின் பெயர்களை எல்லாம் வரலாறு தமது பக்கங்களில் எழுதிக்கொள்வதில்லை ! ஒரு விவேகானந்தர் அரசுப்பணியாளர் அல்ல , ஒரு வைரமுத்து அரசுப்பணியாளர் அல்ல, ஒரு சச்சின் டெண்டுல்கர் அரசுப்பணியாளர் அல்ல , ஒரு அம்பானி அரசுப்பணியாளர் அல்ல, ஒரு ரஹ்மான் அரசுப்பணியாளர் அல்ல , இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் !

" இதையெல்லாம் வெளியிலிருந்து சொல்வதற்கு நன்றாகத்தான் இருக்கும் . தோல்வியடைந்தால்தான் தெரியும் அதன் துக்கமும் வலியும். " என்று சொல்பவர்களுக்கு

இந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் நானும் மோசமான முறையில் தோல்வியைத் தழுவியவன்தான் ! இந்தத் தோல்வியை முன்கூட்டியே உத்தேசித்து நானெழுதிய ஒரு கவிதை :

ஒரு தோல்வியை
அதன்
பச்சை வாசனையோடு
அப்படியே
அப்படியே
எதிர்கொள்ளப் போகிறேன் !

என்
நம்பிக்கையெனும் தீவுகளை
ஒரு சுனாமியென
அது
ஆக்கிரமிக்கட்டும் !

தன்
பள்ளத்தாக்கைக் காட்டி
அது என்னை
பயமுறுத்தினாலும்
தற்கொலைக் கிளைகளை
நாடப்போவதில்லை
நான் !

ஒரு
சிகெரெட் புகையைப் போல
நுரையீரல் முழுக்க
இதமாய்ப் பரவட்டும்
விரக்தி !

என்
முயற்சிகளுக்கு அடிக்கும்
சாவுமணியோசையில்
தியானம் பழகவேண்டும்
நான் !

தோல்வியின் மயானத்தில்
செவ்வனே நடக்கட்டும்
என்
காத்திருப்புகளின்
இறுதிச்சடங்கு !

ஒரு வெற்றியை
அத்தனை தயாரிப்புகளோடும்
கொண்டாட
காத்திருப்பது போல
நான்
காத்திருக்கிறேன் .............

வா
தோல்வி
வா !

விரைவில் பணி நியமன ஆணை--------- தினமலர்

முதுகலை, பட்டதாரி ஆசிரியர்கள் பட்டியல் வெளியீடு : விரைவில் பணி நியமன ஆணை--------- தினமலர்

முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு தகுதியானவர்கள் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நேற்று வெளியிட்டது.

தமிழக அரசு பள்ளிகளில், மேல்நிலைப் பள்ளிகள் அளவில், காலியாக இருந்த, 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களில், தமிழ் பாடத்திற்கான இறுதி தேர்வு பட்டியல், பல மாதங்களுக்கு முன்னரே வெளியிடப்பட்டு, பணியிடங்களும் நிரப்பப்பட்டு விட்டன.
       
                                                                 


இந்நிலையில், ஆங்கிலம், கணிதம், வரலாறு உள்ளிட்ட, பாடங்களுக்கான மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள், ஜனவரியில் வெளியிடப்பட்டன. இதில், சிக்கல்கள் எழுந்து வழக்கு தொடரப்பட்டதால், முதுகலை ஆசிரியர் நியமனம் தாமதமாகியது. கோர்ட்டில், சமீபத்தில், இயற்பியல், வணிகவியல் மற்றும் பொருளாதார பாடங்கள் தொடர்பான உத்தரவு வெளியானது.

இந்த உத்தரவின் படி, ஆசிரியர்கள் பட்டியலை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.இந்நிலையில், எஞ்சியுள்ள ஆங்கிலம், கணிதம், தாவரவியல், உயிரியல், நுண் உயிரியல், வரலாறு உள்ளிட்ட பாடங்களில், 1,326 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான, தகுதியானவர்கள் பட்டியலை டி.ஆர்.பி., வெளியிட்டது.

பட்டதாரி ஆசிரியர்கள்ஆசிரியர் தகுதித்தேர்வில் (டி.இ.டி.,) வெற்றி பெற்ற, 43,242 பேரின் இறுதி மதிப்பெண் பட்டியலை, கடந்த மாதம், 14ம் தேதி, டி.ஆர்.பி., வெளியிட்டது. இதில், ஆசிரியர் பணிக்கு தகுதி வாய்ந்த, 10,726 பேரது பட்டியல், விரைவில் வெளியாகும் என,அறிவிக்கப்பட்டது.

இதன்படி, பட்டதாரி ஆசிரியர்கள், 10,726 பேருக்கான தேர்வுப்பட்டியலையும், டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்கள் குறித்த பட்டியல், சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாக, டி.ஆர்.பி., அதிகாரிகள் தெரிவித்தனர். இம்மாத இறுதிக்குள், இவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்படும் எனவும் தெரியவந்துள்ளது.

இடை நிலை ஆசிரியர்கள்இவர்கள் தவிர, இடை நிலை ஆசிரியர்கள், 4,000 பேருக்கான இறுதிப்பட்டியலும், இந்த மாத இறுதிக்குள் தயாரிக்கப்பட்டு, அவர்களுக்கும் விரைவில், பணி நியமனம் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு நான்கு மண்டலங்களில் இன்று துவக்கம்

           ஆசிரியர் தகுதித் தேர்வில் (2012-13) தேறியோரின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி, 4 மண்டலங்களில் இன்று துவங்குகிறது.கடந்த 2012 ல் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சியடைந்து, இதர அரசுப் பணி கிடைத்தும் செல்லாமல் காத்திருப்போருக்கு, இந்த முகாமில் வாய்ப்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், விழுப்புரம், கடலுார், காஞ்சிபுரம், வேலுார், திருச்சி, தஞ்சை, நாகபட்டினம், கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் நடக்கிறது.
        சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், பெரம்பலுார், அரியலுார், புதுக்கோட்டை, நெல்லை, துாத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ஆக.,13, 14 ல் நடக்கிறது.

        விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி கன்டோன்மென்ட் வெர்சரி ஆங்கிலோ இந்தியன் பள்ளி, மதுரை ஓ.சி.பி.எம்., பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சேலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் 4 நாட்கள் இப்பணி நடக்கிறது.
         பிறந்த தேதி, ஜாதி, மதிப்பெண் சான்றிதழ்களில் உள்ள பிழைகளை திருத்தம் செய்யவும், தமிழ் வழி பயின்ற சான்றிதழை சமர்ப்பிக்கவும் அசல் சான்றிதழ்களுடன் இதில் பங்கேற்கலாம்.

இயற்பியல், வணிகவியல், பொருளாதாரம் பாடங்களுக்கான‌ தேர்வு பட்டியல் அடுத்த கட்டமாக வெளியிடப்படும்

இயற்பியல், வணிகவியல், பொருளாதாரம் பாடங்களுக்கான‌ தேர்வு பட்டியல் அடுத்த கட்டமாக வெளியிடப்படும்

         இயற்பியல், வணிகவியல், பொருளாதாரம் பாடங்களுக்கான‌ தேர்வு பட்டியல் அடுத்த கட்டமாக வெளியிடப்படும் -- தின தந்தி நாளிதழ்

          தமிழ்நாடு முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக இருக்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வாணையம் அதற்குரிய முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்துள்ளது.

                   ஏற்கனவே சில பாடங்களுக்கு உரிய முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன பட்டியலை வெளியிட்டுள்ளது. நேற்று ஆங்கிலம், கணிதம், வேதியல், தாவரவியல், வரலாறு, மைக்ரோ பயாலஜி ஆகிய 6 பாடங்களுக்கு உரிய முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மொத்தம் 1,326 பேர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்ந்தெடுத்து அவர்களின் பட்டியலை நேற்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (trb.tn.nic.in) வெளியிட்டுள்ளது. இயற்பியல், வணிகவியல், பொருளாதாரம் ஆகிய 3 பாடங்களுக்கு உரிய முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு பட்டியல் அடுத்த கட்டமாக வெளியிடப்படும்.

              இந்த தகவலை ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் விபுனய்யார், உறுப்பினர் அறிவொளி ஆகியோர் தெரிவித்தனர்.

பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு---புதிய தலைமுறை

பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு---புதிய தலைமுறை


முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.


                                                                     


பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கப்பள்ளி துறைகளில் 11 ஆயிரம் பணியிடங்கள் இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மாதம் அறிவித்தது. இதையடுத்து 2012 மற்றும் 13 ஆம் ஆண்டுகளில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களிடம் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான இறுதித் தேர்வு பட்டியலை தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இதேபோல், கடந்த ஆண்டு ஜூலை 21ஆம் தேதி நடைபெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதித் தேர்வு பட்டியலும் , ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் பாடத்தில் தேர்வான 543 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஏற்கனவே பணி நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆங்கிலம், கணிதம், வரலாறு உள்ளிட்ட 6 பாடங்களின் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுப் பட்டியல் வெளியாகியுள்ளது.

தேர்வுப் பட்டியலை வெளியிட வலியுறுத்தி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த வாரம், ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு பட்டியலை விவரங்களை www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வானோர், பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கப்பள்ளி துறைகள் மூலம் பணிநியமனம் செய்யப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

மா நில அரசு ஊழியர்களுக்கு வாகன மற்றும் கணினி முன்பணம் வழங்குதல்

தொடக்கக் கல்வி - கடனும் - முன்பணமும் - மா நில அரசு ஊழியர்களுக்கு வாகன மற்றும் கணினி முன்பணம் வழங்குதல் சார்ந்த இயக்குனரின் அறிவுரைகள்எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!