Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 17 August 2014

திறனாய்வு தேர்வு: ஆக., 22 கடைசி : தேர்வு துறை அறிவிப்பு

திறனாய்வு தேர்வு: ஆக., 22 கடைசி : தேர்வு துறை அறிவிப்பு
         ''அடுத்த மாதம் நடக்க உள்ள ஊரக திறனாய்வு தேர்விற்கு, 8ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்க, ஆக., 22 கடைசி நாள்,'' என, அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.

        அவரது உத்தரவு: அரசுத் தேர்வுத் துறையால் ஆண்டு தோறும், தமிழக ஊரகப்பகுதி 8ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. செப்டம்பரில் நடக்க உள்ள இத்தேர்விற்கான விண்ணப்பங்களை, 'ஆன்-லைன்' மூலம், நாளை காலை, 10:00 மணி முதல், www.tndge.in என்ற இணையதள முகவரி யில், அனைத்துப் பள்ளிகளிலும் பதிவிறக்கம் செய்யலாம். மாணவர்களிடமிருந்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ஆக., 22க்குள் பெற்று, ஆக., 25 முதல் 28 வரை தலைமையாசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும். அதற்கான 'யூசர் - ஐ.டி., பாஸ்வேர்டு' வழங்கப் பட்டுள்ளது. ஆக., 22க்குப் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்க வேண்டும். தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். மாணவர்களிடம் தலா, 10 ரூபாய் தேர்வுக்கட்டணம் வசூலிக்க வேண்டும்.

          தேர்வு மைய பட்டியலை, 25ம் தேதிக்குள் முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனுப்ப வேண்டும். வினாத்தாள் அனுப்புவதில் ஏற்படும் சிக்கலை தவிர்க்க, தேர்வர்களின் எண்ணிக்கையை துல்லியமாக குறிப்பிட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது. கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இத்தேர்வில் ஊரகப்பகுதி மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஆண்டிற்கு, 1,000 ரூபாய் வீதம் நான்கு ஆண்டிற்கு அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்' என்றார்.

'10 சதவீதம் பேர் கூட நூலக உறுப்பினராக இல்லை'

'10 சதவீதம் பேர் கூட நூலக உறுப்பினராக இல்லை'
        தமிழகம் முழுவதும், நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், நகர்ப்புற மற்றம் ஊர்ப்புற பகுதி களிலும் செயல்பட்டு வருகின்றன. இந்த நூலகங்கள் தொடர்பான தணிக்கை, சென்னை பொது நூலக இயக்குனரகம் மற்றும், 32 மாவட்டங்களில், மாதிரி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட, நான்கு மாவட்ட நூலக அலுவலகங்களிலும், 2010 - 13ம் ஆண்டிற்கான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன.

      இதுதவிர, 45 இதர நூலகங்கள், சென்னை கன்னிமாரா நூலகமும் சோதனை செய்யப்பட்டன.  தணிக்கையில் கண்டறிந்தவை:

     சென்னை மாநகராட்சி, 2008 முதல், 2013 வரை, 53.43 கோடி ரூபாய் மேல் வரியை வசூலித்தது. இந்த தொகையை, சென்னை மாவட்ட நூலக அதிகாரியிடம் அளிக்கவில்லை.

    மாவட்ட வாரியான நூலக உறுப்பினர்கள், அம்மாவட்ட எழுத்தறிவு பெற்றவர்களை ஒப்பீடு செய்ததில், அரிய லூர், கடலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, மதுரை, புதுக்கோட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில், எழுத்தறிவு பெற்றவர்களை விட, நூலக உறுப்பினர்கள், 10 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளனர்.
மதுரை மாவட்டத்தில், நடமாடும் நூலகம் செயல்படாமல் இருந்தது. சோதனை செய்யப்பட்ட, 35 கிளை நூலகங்களில் மூன்றில், நூலக கட்ட டங்கள் பாழடைந்த நிலையில், நூலகப் பணியாளர்கள், பார்வையாளர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் நிலையில் இருந்தன.
தணிக்கை செய்யப்பட்ட நூலகங்களில், 32 நூலகங்களில் இடப்பற்றாக்குறை, இருந்ததுடன், பார்வையாளர்கள், பணியாளர்களுக்ான கழிப்பறை வசதிகள் இல்லை.
பொது நூலகங்கள் இயக்குனர், மாவட்ட நூலக அலுவலர், நூலகர், பதிவு எழுத்தர் மற்றும் காவலாளி ஆகிய பணியிடங்கள் பெரிய அளவில் காலியாக இருந்தன.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் மதிப்பெண் பெற மாணவர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி

கூடுதல் மதிப்பெண் பெற மாணவர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி
           தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில், அதிக மதிப்பெண் பெறுபவர்களின் பட்டியலை தயாரித்து, அவர்கள், அரசு விருது பெறும் மாணவர்களாக மாறும் அளவுக்கு சிறப்பு பயிற்சியளிக்க, பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

          தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே, தேர்வு முடிவுகளில் தனியார் பள்ளிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. குறிப்பாக, இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட பின், பிளஸ் 2 மதிப்பெண்களை குறியாக வைத்தே, தனியார் பள்ளிகளில் பயிற்சியளிக்கப் படுகிறது. அதுமட்டுமின்றி, தங்கள் பள்ளியில் படிக்கும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை விளம்பரப்படுத்தியும், தேர்ச்சி விகிதத்தை காட்டியுமே, அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கட்டணத்தையும் பல மடங்கு உயர்த்தி விடுகின்றன.

         இப்பள்ளி மாணவர்களுடன் அரசுப் பள்ளி மாணவர்கள் போட்டி போட முடியாத நிலை உள்ளது. கடந்த சில ஆண்டுகளில், மாநில மற்றும் மாவட்ட அளவிலான தேர்வு முடிவுகளில், தனியார் பள்ளி மாணவர்களே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை சரிவதை தொடர்ந்து, சில ஆண்டுகளாக, பள்ளிக் கல்வித் துறை அரசு பள்ளிகளின் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறது. கடந்த இரு ஆண்டுகளாக, அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில், படிப்பில் சராசரிக்கும் கீழ் உள்ள மாணவர்களை தேர்வு செய்து, பள்ளி பாட நேரம் முடிந்த பின்பும், சனிக்கிழமைகளிலும் சிறப்பு பயிற்சியளிக்கப்படுகிறது. இதன் பயனாக, அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. இதே போல், நன்கு படிக்கும் மாணவர்களையும் கண்டறிந்து, சிறப்பு கவனம் செலுத்த நடப்பாண்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்த, முதல் இடைத்தேர்வில், ??ம் வகுப்பில், 450 மதிப்பெண்ணுக்கு அதிகமாக பெற்றவர்கள் மற்றும் பிளஸ் 2 வகுப்பில், 950 மதிப்பெண்ணுக்கு மேல், அதிகமாக எடுத்தவர் பட்டியல் தயாரிக்கவும், தொடர்ந்து அவர்களுக்கு தனிக் கவனம் கொடுத்து, சிறப்பு வகுப்பு எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

         கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது: கடந்த கல்வியாண்டில், அரசுப்பள்ளி களின் தேர்ச்சிச் சதவீதம் அதிகரித்தது. ??ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாணவ, மாணவியர் பலர் மாநில, மாவட்ட அளவிலான ரேங்க் பட்டியலில், இடம் பெற்றனர்.

           இதற்கு, மாணவர்களை அவர்களின் கற்றல் திறனுக்கேற்ப பிரித்து, பயிற்சியளித்ததும் முக்கிய காரணம். அதையடுத்து, ரேங்க் ஹோல்டர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க நடப்பாண்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்த, முதல் இடைத்தேர்வில், அதிகபட்ச மதிப்பெண் பெற்ற மாணவர் பட்டியல், பள்ளி வாரியாக கேட்கப்பட்டு உள்ளது. அந்த மாணவர்களை அடையாளம் கண்டு, தேவையான வசதி செய்து கொடுத்து, அதிகபட்ச மதிப்பெண் எடுக்க வைக்க, தற்போதே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்வித் துறையின் புதிய உத்தரவால், பொதுத்தேர்வில் அரசுப்பள்ளி மாணவரின் தேர்ச்சி சதவீதம், மேலும் அதிகரிக்கவும், அரசு பள்ளி மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று, மருத்துவம், தொழில்நுட்ப கல்லூரியில் சேர வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!