Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 23 August 2014

புத்தகம் பற்றிய பொன்மொழிகள்:-

புத்தகம் பற்றிய பொன்மொழிகள்:-

1. நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து

என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.

-ஆபிரகாம் லிங்கன்

2. ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி!

- ஜூலியஸ் சீசர்

3. உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்..

- டெஸ்கார்டஸ்

4. போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா... ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு...

- இங்கர்சால்

5. சில புத்தகங்களை சுவைப்போம்... சிலவற்றை அப்படியே

விழுங்குவோம்... சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!

- பிரான்சிஸ் பேக்கன்

6. புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட

பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே!

- லெனின்

7. உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை!

- ஆஸ்கார் வைல்ட்

8. உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!

- சிக்மண்ட் ஃப்ராய்ட்

9. பழங்காலத்திய மகா புருஷர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? நூலகத்துக்குப் போ...

- மாசேதுங்

10. ஒரு எழுத்தாளன் ஒரு புத்தகத்தைத் தொடங்கி வைக்கிறான்...

வாசகன் அதனை முடித்து வைக்கிறான்.

எட்டு மணிநேர தூக்கம் அவசியம் :-

எட்டு மணிநேர தூக்கம் அவசியம் :-
+++++++++++++++++++++++++++++

இன்று நீங்கள் சுறுசுறுப்பாக, உற்சாகமாக செயல்பட வேண்டும் என்றால்- அதற்கு நீங்கள் நேற்று இரவு நிம்மதியாக தூங்கியிருக்கவேண்டும்! ஆழ்ந்த தூக்கம் மனதிற்கும், உடலுக்கும் ஆரோக்கியத்தை தரும். நன்றாக தூங்கியிருக்காவிட்டால் சோர்ந்துபோய் காணப்படுவீர்கள்.

அடுத்தடுத்த நாட்கள் நீங்கள் தேவையான அளவு தூங்கியிருக்காவிட்டால் உடல், பல்வேறு நோய்களுக்கு அச்சாரமிடும். மனம், அழுத்தத்திற்கு உள்ளாகிவிடும். இன்றைய நமது வாழ்க்கை முறை தூக்கத்தை தொலைக்கக்கூடியதாக இருக்கிறது. பரபரப்பு நிறைந்த பகல் வேலையில் மூழ்கி, இரவு வருவதே பலருக்கு தெரிவதில்லை.

அதனால் பாதி இரவு வரை அலுவலகத்தில் இருந்து வேலை பார்த்துவிட்டு, வீட்டிற்கு செல்கிறார்கள். அங்கு டி.வி., கம்ப்யூட்டர் என்று பொழுதை போக்கிவிட்டு தாமதமாகவே தூங்கச்செல்கிறார்கள். அதனால் தூக்கம் அவர்களை விட்டு தூரவிலகிவிடுகிறது.

நல்ல திறமைசாலி, புத்திசாலி, உழைப்பாளிக்கு முழுமையான தூக்கம் இன்றியமையாதது என்பதை மக்கள் புரிந்துகொண்டதால், விழிப்படைந்து அதை நோக்கி பலரும் ஓடத் தொடங்கியிருக்கிறார்கள். பொதுவாக பெரியவர்களுக்கு எட்டு மணிநேர தூக்கம் அவசியம் என்பார்கள். ஆனால் எல்லோருக்கும் ஒன்று போல் அல்ல!

தனிப்பட்ட நபர்களுக்கு தக்கபடி தூக்கத்தின் நேரம் அதிகரிக்கவோ, குறையவோ செய்யும். உடல் உழைப்பு அதிகம் கொண்டவர்களைவிட, சிந்தனை உழைப்பு அதிகம் கொண்டவர்கள் அதிக நேரம் தூங்க வேண்டும். நோயாளிகளும், குழந்தைகளும் அதிக நேரம் தூங்கவேண்டியதிருக்கும். ஒருவர் தூங்கத் தொடங்கிய முதல் 2 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரம் வரை ஆழ்ந்து தூங்குவார்.

அப்போதுதான் உடல் உறுப்புகள் அனைத்தும், அதிக அளவு ஓய்வெடுக்கும். அந்த தூக்கத்திற்கு பங்கம் வந்தால், அது மறுநாள் அவரது சிந்தனை, செயல்பாட்டை பாதிக்கும். தூங்கும் நேரத்தில் குழந்தைகளுக்குத்தான் முதலிடம். பிறந்த குழந்தை 20 முதல் 22 மணி நேரம் வரை தூங்கும். ஒரு வயதாகும்போது அது 12 முதல் 16 மணி நேரமாக குறையும்.

பின்பு பகல் தூக்கம் மறைந்து, மதிய உணவுக்கு பிந்தைய தூக்கமாக மாறும். நான்கு வயது வரை அந்த நிலை நீடிக்கும் என்றாலும், பள்ளிக்கு சென்ற பின்பு தூக்க நேரம் வெகுவாக குறைந்து போகும். விளையாட்டு ஆர்வத்தில் அவர்கள் தூக்கத்தை குறைத்தாலும், அந்த பருவத்தில் அவர்களுக்கு தினமும் 12 மணி நேர தூக்கம் அவசியம் என்பதை பெற்றோர் உணர்ந்துகொள்ளவேண்டும்.

கர்ப்பகாலத்தில் பெண்கள் தூக்கத்தில் தனிக் கவனம் செலுத்தவேண்டும். அவர்களுக்கு தினமும் பத்து மணி நேர தூக்கம் அவசியமாகும். பகல் நேரத்தில் அவர்கள் தூங்கித்தான் ஆகவேண்டும் என்றில்லை. ஆனால் தேவையான அளவு ஓய்வு எடுத்தாகவேண்டும்.

அவர்களது வயிறு பெரிதாகிவிடுவதால், சுவாச கட்டமைப்புகளுக்கு நெருக்கடியும், முதுகுக்கு அழுத்தமும் தோன்றும். அதனால் தூக்கத்திற்கு தொந்தரவு ஏற்படுவதுபோல் தோன்றும். அதற்கு தகுந்தாற்போன்று உடல் நிலைப்பாட்டை மாற்றி, தலையணை போன்றவைகளை வைத்து, தூக்கத்திற்கு ஏற்ற சவுகரியங்களை உருவாக்கிக் கொள்ளவேண்டும்.

பிரசவத்திற்கு பிறகு அவர்களது தூக்கத்தில் நெருக்கடி அதிகரிக்கும். குழந்தை விழிக்கும்போதும், அதற்கு பால் தேவைப்படும்போதும் தாய் விழித்திருக்கவேண்டும். அந்த காலகட்டத்தில் சூழ்நிலைக்கு தக்கபடி, தேவையான நேரம் தூங்க தாய் பழகிக்கொள்ள வேண்டும்.

நல்ல தூக்கத்தை விரும்புகிறவர்கள், முதலில் படுக்கை ரகசியம் அதற்கான சூழ்நிலையையும், சவுகரியத் தையும் உருவாக்கவேண்டும். இரவு உணவை சாப்பிட்ட உடன் தூங்க முயற்சிக்காதீர்கள். பத்து மணிக்கு தூங்க வேண்டும் என்றால், எட்டு மணிக்குள் சாப்பிட்டுவிடுங்கள்.

தூங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரம் இருந்தால், அந்த நேரத்தை உடற்பயிற்சி செய்வது, டி.வி. பார்ப்பது, புகைபிடிப்பது போன்ற செயல்களில் செலவிடாதீர்கள். மென்மையான இசையை கேட்கலாம். மனதை அலைபாய விடாத புத்தகத்தை படிக்கலாம். 10,15 நிமிடங்கள் தியானம் செய்யலாம்.

சிந்த னையை அலைபாய விடும் புத்தகங்களையோ, தீவிரமாக சிந்திக்கவைக்கும் விஷயங்களையோ அப்போது வாசிக்காதீர்கள். பிரச்சினைக்குரியவர்களிடம் பேசாதீர்கள். தூங்கச் செல்வதற்கு முன்னால் ஆழமாக சில முறை மூச்சை உள்ளிழுத்து விடுங்கள். அது ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகுக்கும்.

இரவு நன்றாக தூங்கவேண்டும் என்றால், பகலில் தூங்கக்கூடாது. கட்டாயம் பகலில் தூங்கித்தான் ஆகவேண்டும் என்றால், அரை மணி நேரம் மட்டும் தூங்குங்கள். தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வது, இரவு நன்றாக தூக்கம் வர ஒத்துழைக்கும்.

தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கச்செல்லவேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் விழிக்கவும் பழகிக்கொள்ளவேண்டும். தூங்கச் செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே, எவ்வளவு முக்கிய வேலை என்றாலும் அதை நிறுத்தி விடுங்கள். பின்பு இதமான சுடுநீரில் உடலை கழுவிவிட்டு தூங்கச் செல்லுங்கள்.

படுக்கை அறைக்குள் வெளிச்சம் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. இருட்டுதான் தூக்கத்திற்கு ஏற்றது. வெளிச்சம் என்பது தூக்கத் திற்கானது அல்ல, விழிப்பிற்கானது என்பதை உணருங்கள். வெளியே இருந்து அறைக்குள் வெளிச்சம் பாய்ந்து வருவதாக இருந்தால் அதை திரை மூலம் தடுத்து விடுங்கள்.

சுத்தமான, காற்றோட்டமான, சவுகரியமான படுக்கையும் நல்ல தூக்கத்திற்கு மிக அவசியம். படுக்கை முக்கியம் என்பதுபோல் அதில் எப்படி படுக்கிறீர்கள் என்பதும் முக்கியம். இடதுபுறமாக ஒருக் களித்து படுப்பதுதான் நல்லது என்று பொதுவாக சொல்வார்கள்.

ஆனால் எல்லோரும் ஒரே மாதிரியான நிலையில் படுப்பதில்லை. ஒவ்வொருவரும் அவரவர் உடல் சவுகரி யத்திற்கு ஏற்றபடித்தான் படுப்பார்கள். உடலின் ஏதாவது ஒருபகுதிக்கோ, உறுப்புக்கோ அழுத்தம் கொடுக்கும்படி படுக்கக்கூடாது.

படுத்தால் அது, ஆரோக்கிய பிரச்சினையை உருவாக்கும். ஒரே நிலையில் யாராலும் படுத்து தூங்க முடியாது. புரளவும், கை-கால்களை தூக்கிப்போடவும் படுக்கையில் சவுகரியம் இருக்கவேண்டும்.

எட்டு” நடை பயிற்சி முறை

எட்டு” நடை பயிற்சி முறை

. ஒருவர் தினமும் 30 முதல் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும், பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். நடைப்பயிற்சி சாதாரணமாக செய்யாமல் எட்டு வடிவத்தில் நடப்பது மிகமிகச்சிறந்ததாகும்

பயிற்சியும் செய்முறையும்

கீழ்கண்ட படத்தில் இருப்பது போல் 6 அடி அகலம் மற்றும் 8 முதல் 12 அடி நீளம் அளவில் தரையில் எட்டு ஒன்று வரைந்து கொள்ளவும். அதை வடக்கு தெற்கு முகமாக வரைந்து கொள்ளவும். படத்தில் உள்ளது போல் அம்பு குறியிட்டு காட்டியது போல் பாதையில் “1″ குறியில் இருந்து ஆரம்பித்து “5″ வரை சென்று மீண்டும் “1″ வர வேண்டும். நடக்கும் பொழுது மிகவும் வேகமாகவோ அல்லது மிகவும் மெதுவாகவோ நடக்கலாகாது. மிகவும் இயல்பாக நடக்க வேண்டும். தினமும் காலையும் மாலையும் 15 – 30 நிமிடங்கள் நடப்பது மிகச்சிறப்பு. நடக்கவேண்டிய நேரம் காலை அல்லது மாலை மணி 5 – 6 (am or pm). வெளியே செல்ல முடியாதவர்கள், வீட்டுக்குள் நடக்கலாம். நல்ல முறையில் பயன் பெற, இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும். நடைப்பயிற்சி முடியும்வரை மெளனமாக நடக்க வேண்டும்.. மனதிற்குள் மந்திரம் ஜெபித்தபடி நடக்கலாம். முத்திரைகள் செய்ய தெரிந்திருந்தால் பிரான முத்திரையில் நடக்கலாம் பலன்கள்

தினமும் “எட்டு” நடைப்பயிற்சி செய்வதால் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும். உடல் பருமன், இரத்த அழுத்தம், இதய நோய், ஆஸ்துமா, கண் நோய்கள், மூக்கடைப்பு, தூக்கமின்மை, மூட்டுவலி, முதுகுவலி, மன இறுக்கம், போன்ற கொடிய நோய்கள் கூட மெல்ல மெல்ல பூரணமாக குணமாகி விடுகின்றன. நல்ல முறையில் பயன் பெற, இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும். வாழ்க வளமுடனும் நலமுடனும் வாழ்க வளமுடனும் நலமுடனும்

YOGA MY SCHOOL

Watch "Yoga chinnarampatti school" on YouTube - Yoga chinnarampatti school: http://youtu.be/YTffW98VxXs