Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 27 August 2014

நவதானியங்கள்

நவதானியங்கள் :-
+++++++++++++++

உடலை ஆரோக்கியமாக்கி புத்துணர்வு தரும் ;

முந்தைய காலத்தில் விளைவிக்கப்பட்ட உணவுகள், யாருக்கும் பாதிப்பின்றி, உடலுக்கும் ஆரோக்கியமாக அமைந்தது. ஆனால், இன்றைய காலத்தில் இயற்கை உரங்களை மறந்து செயற்கை உரங்களை பயன்படுத்தி விளைவிக்கப்படும் பயிர்களில் இருக்கும் உண்மையான சத்துகள் கூட நமது உடலுக்கு கிடைப்பதில்லை. இன்றைய இளைஞர்கள் பலர் சத்தான உணவுகளை புறந்தள்ளிவிட்டு, உடலுக்கு தீமையை ஏற்படுத்தும் உணவுகளை பெரிதும் நாடி செல்கின்றனர். இருந்தாலும், சில இடங்களில் தற்போது பழைய உணவு பழக்கம் மாறி வருகிறது. அந்தவகையில், நம்மால் புறக்கணிக்கப்பட்ட நவதானியங்களாக வர்ணிக்கப்படுவதில் சில :

நெல்:

உமியுடன் கூடிய அரிசி, நெல் எனப்படுகிறது. உமியை நீக்கி அரிசியைப் பயன்படுத்துகிறோம். அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என்பவை குறிப்பிடத்தக்கவை. பச்சரிசி என்பது நெல்லைக் குத்தி அரிசி எடுத்து அப்படியே பயன்படுத்துவதாகும். நெல்லை முறையாக அவித்து குத்தி பெறுவது புழுங்கலரிசி. பச்சரிசி எளிதில் ஜீரணிக்காது. கொழுப்பு சத்தை அதிகமாக்கும். இதனால், உடல் பருமனாகும். உடல் இளைத்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம். வயிறு தொடர்பான நோய் உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும். புழுங்கல் அரிசி உடல் நலனுக்கு ஏற்றது. மலச்சிக்கல் ஏற்படாது. சம்பா அரிசி வகையில் சீரகச்சம்பா ஆரம்பநிலை வாத நோய்களை போக்க வல்லது. பசியை ஊக்குவிக்கும். ஈர்க்குச்சம்பா அரிசி சாப்பிட ருசியானது. ஆனால், பித்தம்கூடும். குண்டுசம்பா, மிளகு சம்பா, மல்லிகை சம்பா, மணிச்சம்பா, கோரைச்சம்பா, கடைச்சம்பா, குறுஞ்சம்பா போன்றவை மருத்துவகுணம் நிறைந்தவை.

சோளம்;

சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம் சத்துக்கள் அடங்கி உள்ளன. சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்லது. உடல் பருமனை குறைக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். வாய் நாற்றத்தை போக்கும். மூல நோயாளிகளுக்கு சோள உணவு ஒத்துக்கொள்ளாது.

கம்பு;

கிராமங்களில் கம்பங்கஞ்சியும், கம்பஞ்சோறும் சாப்பிடுபவர்கள் மிக அதிகம். தாய்மார்களுக்கு பால் உற்பத்தியை பெருக்கும். உடல் வலிமையை அதிகரிக்கும். கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும், உயிர்சத்துக்களும் உள்ளன. அரிசியை விட பல மடங்கு சத்து மிகுந்த உணவு, ஜீரண சக்தி அதிகரிக்கும். உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து பருமனைக் குறைக்கும்.

வரகு;

நவதானிய வகைகளில் வரகும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில், புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச்சத்து உள்ளது. இது உடல் எடையை குறைக்கக்கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகை சமைத்து சாப்பிடுவது நல்லது.

கேழ்வரகு;

தானியங்களில் அதிக சத்துமிக்கது கேழ்வரகு. ராகி என்றும் இதை குறிப்பிடுவது உண்டு. இதில், புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச்சத்து மற்றும் உயிர் சத்துக்களும் இருக்கின்றன. இது உடல் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். குடலுக்கு வலிமை அளிக்கும். நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம். கேழ்வரகை கொண்டுதான் ராகி மால்ட் தயாரிக்கப் படுகிறது.

கோதுமை;

அரிசியை விட கோதுமையில் அதிகமான சத்துக்கள் உள்ளன. வட இந்திய மக்கள் கோதுமையை முழுநேர உணவாக பயன்படுத்துகின்றனர். எண்ணை நெய்விடாது சப்பாத்தியாக செய்து சாப்பிடுவது நல்லது. உடல் நலனுக்கு உகந்தது. கோதுமையில் புரதம், சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின், நியாசிக் போன்ற பல சத்துக்கள் உள்ளன. இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாகும். மலச்சிக்கல் உண்டாகாது.

பார்லி;

உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடையை குறைக்கும். உடல் வறட்சியை போக்க வல்லது. நீடித்த மலச்சிக்கல் உள்ளவர்கள் பார்லியை சாப்பிட்டால் குணமாகும். காய்ச்சலை தடுக்கும். வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். சிறுநீர் தாராளமாக பிரிய உதவும்.

இத்தகைய மருத்துவக்குணங்களை வாய்ந்த நவதானியங்களயை நாம் நம் உடல் ஆரோக்கியத்துக்காக பயன்படுத்துவோம் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்வோம்; வாழ்வில் வளம் பெறுவோம்.

5 மசாலா பொருட்களின் மருத்துவ குணங்கள் :-

5 மசாலா பொருட்களின் மருத்துவ குணங்கள் :-
++++++++++++++++++++++++++++++++++++++++++

நாம் அன்றாட சமையலுக்கு பொதுவாக பயன்படுத்தக்கூடிய ஆயுர்வேத மசாலாக்கள் உணவில் சுவை கூட்டுவதாகவும், போஷாக்கு நிறைந்த உணவாகவும் கருதப்படுகிறது.

கொத்தமல்லி ;

உண்மையாகவே சமையலுக்கு சிறந்த நண்பனாக உதவி புரிவது கொத்தமல்லி விதைகள். இதை சமையலில் தனியாக பயன்படுத்தாமல் மசாலா பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்துகின்றனர். கொத்தமல்லி விதைகள் ஆயுர்வேதத்தில் உடல் மற்றும் மனதை சமநிலைப் படுத்துவதற்காக பயன்படுத்துகின்றனர்.. ஆரோக்கியமான உடலுக்கு நன்மை சேர்க்கும் கொத்தமல்லி விதைகள் செரிமான பிரச்சனையை தவிர்த்து சுவாச பிரச்சனைகள், சிறுநீர் கோளாறுகள், பித்தம் அதிகமாகுவதால் ஏற்படக்கூடிய தோல் வியாதி ஆகியவற்றை சரிசெய்கிறது.. பித்தம் அதிகமாகி பித்த வாந்தி ஏற்பட்டால் கொத்தமல்லி விதைகளை இடித்து போட்டு காபி குடித்தால் பித்தம் தெளியும்.

இஞ்சி ;

பெரும்பாலோனர் வீட்டில் இஞ்சி இல்லா சமையலை காண்பது அரிது. சமையலறையில் இருக்க வேண்டிய மிக முக்கியமான ஒரு நறுமணப்பொருள் இஞ்சி. இது உணவிற்கு சுவையை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் செரிமானத்திற்கும் பயன்படுகிறது. பிரபஞ்ச மருந்து என அழைக்கப்படும் இஞ்சியானது கபம் மற்றும் வாதம் தீவிரமடைவதால் ஏற்படக்கூடிய மூச்சு பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது. காய்கறிகள் மற்றும் பயறுகள் உட்கொள்வதால் நமது உடலில் ஏற்படக்கூடிய உற்சாகத்தை, நறுமணப்பொருளான இஞ்சி நமக்கு தருகிறது. மேலும் ஜலதோஷம், இருமலை குணப்படுத்தக்கூடிய மூலிகை தேநீராகவும் பயன்படுத்தபடுகிறது.

சீரகம் ;

இது பெரும்பாலும் சுவையை கூட்டுவதற்காக ஊறுகாய் மற்றும் குழம்பு வகைகளில் சேர்க்கப்படும் நறுமணப்பொருளாக உள்ளது. இது செரிமான கோளாறை போக்கி கிருமிநாசினியின் தூண்டியாக செயல்படுகிறது. அதாவது உடலில் திரட்டப்பட்ட நச்சுகளை சுத்தப்படுத்தும் போது அவற்றிலிருந்து வெளியாகும் சிறந்த சத்துக்களை உறிஞ்சி நமது உடலை பாதுகாக்கிறது. கல்லீரல் மற்றும் கணையத்தின் செயல்பாட்டை இது மேம்படுத்துகிறது.

வெந்தயம் ;

உடல்நலத்திற்கு தேவைப்படும் சிகிச்சைமுறை பண்புகளை மிகச்சிறப்பாக கொண்டுள்ளது வெந்தயம். இந்த வெந்தயமானது செரிமானம், சுவாச கோளாறு, நரம்பு மற்றும் மாதவிடாய் கோளாறுகளை சீர்படுத்த பெரிதும் பயன்படுகிறது, மேலும் தோல்களை தூய்மைபடுத்துகிறது. எடைக்குறைப்புக்கு மிக எளிய முறையில் வெந்தயம் பயன்படுத்தப்படுகிறது. இரவில் ஊறவைத்த வெந்தயத் தண்ணீரை குடிப்பதால் உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. இந்திய சமையலில் வெந்தயத்தை வாசனைப்பொருளாகவும் பயன்படுத்துவார்கள்.

மஞ்சள் ;

இந்தியாவைப் பொறுத்தவரை மஞ்சள் மங்கள அடையாளம். எந்தவொரு நல்ல நிகழ்விலும் மஞ்சளுக்குத்தான் முதலிடம். -இந்தியாவின் குங்குமப்பூ என்று மஞ்சளை குறிப்பிடுகிறார்கள். கசப்பை கட்டுபடுத்தக்கூடிய காரமான வாசனை கொண்ட மஞ்சள் பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. நம் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை அழிப்பதில் மஞ்சளுக்குப் பெரிய பங்கு உண்டு. -டைப் 2 நீரிழிவுக்காரர்களுக்கும் மஞ்சள் சிறந்த மருந்து. மஞ்சளானது இன்சுலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது குளூக்கோஸ் கட்டுப்பாட்டை ஒரே அளவில் தக்க வைத்துக்கொள்ள உதவுகிறது. நம் உடம்பில் எந்த இடத்தில் புண் வந்தாலும் வீக்கத்தைக் குறைத்து விரைவில் ஆற வைப்பதில் மஞ்சளுக்கு நிகர் வேறில்லை. மஞ்சள் மிகச் சிறந்த ஆன்ட்டி ஆக்சிடன்ட் மருந்தாகும். நாம் சாப்பிடுகிற உணவுப் பொருட்களின் வழியே உள்ளே செல்கிற நச்சுக் கிருமிகளை அழித்து, நம் ரத்தத்தை சுத்திகரிக்க வல்லது .

குழந்தைகளை மனிதனாக வளர்ப்பது பெற்றோர்களின் பொறுப்பு தானே?''

குழந்தைகளை மனிதனாக வளர்ப்பது பெற்றோர்களின் பொறுப்பு தானே?''

''ஆனால், அது அவர்கள் கட்டுப்பாட்டில் மட்டும் உள்ள விஷயமல்ல!

நெருங்கிய நண்பர் ஒருவர் தன் கிராமத்துத் திரு விழாவுக்குக் குடும்பத்துடன் தனி காரில் செல்லும்குதூ கலத்துடன் ஏற்பாடுகளைச் செய்தார். தனக்கும் மனைவிக்கும் ஆறு மாதங்களாக விடுமுறைகள் சேர்த்து, ஊர்க்காரர்களிடம் சொல்லிவைத்து சகலத் துக்கும் ஏற்பாடு செய்துவிட்டார். மூன்று நாட்களுக்கு முன் பையனுக்கு ஸ்கூலில் லீவு சொல்லி இருந்தார். மறுநாள், முகம் இருண்டுபோய் ஸ்கூலிலிருந்து திரும்பி இருக்கிறான் அந்தப் பையன். சாப்பிடாமல், பேசாமல், ஓடியாடாமல் ஜன்னி வந்தது போல தூங்கிப்போயிருக் கிறான். தூக்கத்தில் 'நான் வேஸ்ட் இல்லை. நான் வேஸ்ட் இல்லை. நான்தான் கிரேட்!' என்று புலம்பி இருக்கிறான். என்னவோ ஏதோ என்று எழுப்பி விசாரித்தால், 'நீங்க ஸ்கூலுக்கு வந்து லீவு சொல்லிட்டுப் போனதும் எங்க மிஸ் என்னைத் திட்டுதிட்டுன்னு திட்டிட்டாங்க. 'மூணு நாளு ஸ்கூலுக்கு லீவு போட்டுட்டு நீ ஊர் சுத்தப் போறியா? நீ எதுக்கும் லாயக்கில்லை. நீ சுத்த வேஸ்ட். இந்த மூணு நாள் பாடங்களை நீ எப்படி பிக்கப் பண்ணுவ... நீ வேஸ்ட்'னு இன்னிக்குப் பூரா திட்டிட்டே இருந்தாங்க. ப்ளீஸ்ப்பா! நான் ஊருக்கு வரலை. நான் வேஸ்ட் இல்லப்பா... நான் கிரேட்!' என்று இன்னும் என்னென்னவோ புலம்பியிருக்கிறான். மகனின் நிலையைப் பார்க்கச் சகிக்காமல் டூரையே கேன்சல் செய்துவிட்டார் நண்பர். இத்தனைக்கும் அந்தப் பையன் படிப்பது ஒன்றாம் வகுப்பு!

பச்சிளம் பாலகனுக்கு அந்த வார்த்தைகள் எத்தனை பெரிய மென்டல் அட்டாக்! இப்போது சொல்லுங்கள், பெற்றோர்கள் மட்டும்தான் 'மனிதர்'கள் உருவாகாமல் போவதற்குக் காரணமா?''

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!