Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 3 September 2014

நாடுகளின் அடிப்படையில் ஆசிரியர் நாளின் தேதி:

நாடுகளின் அடிப்படையில் ஆசிரியர் நாளின் தேதி:

ஆப்கானித்தான் அக்டோபர் 3;
அல்பேனியா மார்ச் 7;
அல்சீரியா பெப்ரவரி 28;
அர்ச்சென்டினா செப்டம்பர் 11;
ஆர்மீனியா அக்டோபர் மாத்ததின் முதல் ஞாயிறு;
ஆஸ்திரேலியா அக்டோபர் மாதத்தின் கடை வெள்ளி;
அசர்பைஜான் அக்டோபர் 5;
பக்ரைன் பெப்ரவரி 28;
பெலருஸ் அக்டோபர் மாத்ததின் முதல் ஞாயிறு;
புரூணை செப்டம்பர் 23;
பூட்டான் மே 2;
பொலிவியா ஜூன் 6;
பிரேசில் அக்டோபர் 15;
பல்கேரியா அக்டோபர் 5;
சிலி அக்டோபர் 16;
கொலொம்பியா மே 15;
சீன மக்கள் குடியரசு செப்டம்பர் 10
செக் குடியரசு மார்ச் 28;
எக்குவடோர் ஏப்ரல் 13;
எகிப்து பெப்ரவரி 28;
எல் சால்வடோர் ஜூன் 22;
எசுத்தோனியா அக்டோபர் 5;
செருமனி அக்டோபர் 5;
குவாத்தமாலா ஜூன் 25;
ஃகொங்கொங் செப்டம்பர் 10;
அங்கேரி ஜூன் மாத்ததின் முதல் ஞாயிறு;
இந்தியா செப்டம்பர் 5;
இந்தோனேசியா நவம்பர் 25;
ஈரான் மே 2;
ஈராக் மார்ச் 1;
யமேக்கா மே 6;
ஜோர்தான் பெப்ரவரி 28;
லித்துவேனியா அக்டோபர் 5;
லெபனான் மார்ச் 9;
லிபியா பெப்ரவரி 28;
மலேசியா மே 16;
மெக்சிகோ மே 15;
மொல்டோவா அக்டோபர் 5;
மங்கோலியா பெப்ரவரி மாத்ததின் முதல் சனி மற்றும் ஞாயிறு;
மொரோக்கோ பெப்ரவரி 28;
நேபாளம் நேபாள மாதம் அஷாதின் வறும் முழு நிலவு தினம்;
நியூசிலாந்து அக்டோபர் 29;
ஓமான் பெப்ரவரி 28;
பாக்கித்தான் அக்டோபர் 5;
பனாமா திசம்பர் 1;
பராகுவே ஏப்ரல் 30;
பெரு ஜூலை 6;
பிலிப்பீன்சு அக்டோபர் 5;
போலந்து அக்டோபர் 14;
கத்தார் அக்டோபர் 5;
உருமேனியா அக்டோபர் 5;
உருசியா அக்டோபர் 5;
சவுதி அரேபியா பெப்ரவரி 28;
செர்பியா அக்டோபர் 5;
சிங்கப்பூர் செப்டம்பர் மாத்ததின் முதல் வெள்ளி;
சிலோவாக்கியா மார்ச் 28;
தென் கொரியா மே 15; (சியோலில் 1963 முதல் மற்றும் சுன்சு நகரில் 1964 முதல்);
இலங்கை அக்டோபர் 6;
எசுப்பானியா ஜனவரி 29;
சிரியா மார்ச் 18;
தாய்வான் (சீனக் குடியரசு) செப்டம்பர் 28;
தாய்லாந்து ஜனவரி 16;
துனீசியா பெப்ரவரி 28 ;
துருக்கி நவம்பர் 24;
உக்ரைன் அக்டோபர் மாத்ததின் முதல் ஞாயிறு;
ஐக்கிய அரபு அமீரகம் பெப்ரவரி 28
அமெரிக்க ஐக்கிய நாடு மே மாதத்தின் முதல் வாரம் தேசிய ஆசிரியர் வாரமாகக் கொண்டாடப்படுகின்றது; அவ்வாரத்தின் செவ்வாய்க் கிழமை ஆசிரியர் நாள் ஆகும்.
உசுபெக்கிசுத்தான் அக்டோபர் 1;
வியட்நாம் நவம்பர் 20;
யெமன் பெப்ரவரி 28;
மொரிசியசு அக்டோபர் 5;

மனித மூளையை இயக்கும் செயற்கை 'சிப்' :

மனித மூளையை இயக்கும் செயற்கை 'சிப்' : விஞ்ஞானி சிவதாணுபிள்ளை தகவல்
            காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில், மின்னியல் துறை சார்பில் தேசிய அளவிலான 'அல்கானசி' என்ற கருத்தரங்கு துவங்கியது.

              இதில் பிரமோஸ் ஏவுகணை திட்ட இயக்குனர் சிவதாணு பிள்ளை பேசியதாவது: கி.மு., 5,000 முதல் கி.பி., 12- ம் நூற்றாண்டு வரை அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் இந்தியா முன்னோடியாக திகழ்ந்தது. அன்னியர் படையெடுப்பிற்கு பின், பொருளாதாரம், கல்வித் துறைகளில் பின்தங்கிவிட்டது. சுதந்திரம் பெற்ற பின் பசுமை, வெண்மை புரட்சி, ஐந்து ஆண்டு திட்டங்கள் மூலம் விவசாயம், பால்வள துறைகளில் வளர்ச்சி பெற்று விட்டது. முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் தலைமையில் 'அக்னி', 'பிருத்வி' போன்ற ஏவுகணைகள் உருவாக்கப்பட்டன.

               இந்த வளர்ச்சி பாதையை, இளைஞர் சமுதாயத்தினர் முன்னின்று வழி நடத்த வேண்டும். அதற்கு மாணவர்கள் தலைமைப் பண்பு பெற மாறுபட்ட சிந்தனை அவசியம்.பிரமோஸ் ஏவுகணை மூலம் 5,000 கி.மீ., இலக்கை நிர்ணயித்து ஏவமுடியும். மாணவர்கள் (பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு துறை (டி.ஆர்.டி.ஓ.,) சார்பில் நடக்கும் தேர்வுகளில் பங்கேற்று, ஆராய்ச்சி துறைக்கு வரவேண்டும். வரும் 2025, 2050-ல் தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்திருக்கும்.

மனித மூளையை செயற்கை 'சிப்' மூலம் செயல்பட வைக்க முடியும். வெளிநாட்டிலிருந்து 'ரோபோ' மூலம் அறுவை சிகிச்சைகளை இங்கு செய்ய முடியும். உடலில் 'சிப்' வைத்து நோய்களை கண்டறிந்து அதை குணப்படுத்த முடியும். இவ்வாறு பேசினார். முதல்வர் மாலா முன்னிலை வகித்தார். துணை முதல்வர் இளங்கோ, துறைத் தலைவர் ஜெபசல்மா பங்கேற்றனர்.

பாரத ஸ்டேட் வங்கியில் 2986 காலியிடங்கள்

பாரத ஸ்டேட் வங்கியில் 2986 காலியிடங்கள்

பாரத ஸ்டேட் வங்கி, அதன் அஸோஸியேட் வங்கிகளின் புரோபேஷனரி ஆபீஸர் பதவிகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. 2986 பணியிடங்களுக்குத் தகுதி உள்ள விண்ணப்பதாரர்களை இட்டு நிரப்ப பாரத ஸ்டேட் வங்கி திட்டமிட்டுள்ளது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்ய வேண்டும்.

காலிப்பணியிடங்கள்மொத்தம் 2986.

இதில் எஸ்பிடி- 1136,
எஸ்பிஹெச்-900,
எஸ்பிஎம்-500,
எஸ்பிபிஜே-350,
எஸ்பிபி-100.

வயது:

2014, செப்டம்பர் 1 அன்று 21-30 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது, 1984, செப்டம்பர் 2-லிருந்து 1993 செப்டம்பர் 1-க்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். அரசின் விதிமுறைப்படி எஸ்சி, எஸ்டி, ஓபிசி உள்ளிட்ட பிரிவினருக்கு வயது வரம்புச் சலுகை உண்டு.கல்விஅங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.விண்ணப்பக் கட்டணம்எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளி ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.100, பிற பிரிவினருக்கு ரூ.500. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனிலோ செலான் மூலமாகவோ கட்டலாம். செலான் மூலம் கட்டினால் விண்ணப்பித்த மூன்று வேலை நாள்களுக்குள் அருகிலுள்ள வங்கிக் கிளையில் கட்டணத்தைச் செலுத்திவிட வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

உரிய தகுதியுள்ளவர்கள் www.statebankofindia.com என்னும் இணையதளத்தில் அல்லது www.sbi.co.in என்னும் இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன்பு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும் கையெழுத்தையும் ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். முறையாக விவரங்களை உள்ளீடு செய்து முடித்த பின்னர் விண்ணப்பத்தைச் சேமித்த பின்னர் தரப்படும் ரெஜிஸ்ட்ரேஷன் எண், பாஸ்வேர்டு ஆகியவற்றைக் குறித்துவைத்துக் கொள்ள வேண்டும். விண்ணப்பத்தில் ஏதேனும் மாறுதல் செய்ய வேண்டுமெனில் மீண்டும் அதை மேற்கொள்ள இவைபயன்படும். விண்ணப்பத்தைச் சேமித்தவுடன் விண்ணப்ப கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அதன்பின்னர்தான் விண்ணப்பிக்கும் வழிமுறை நிறைவுபெறும்.

விண்ணப்பித்த பின்னர், விண்ணப்பத்தையும் பணம் செலுத்திய ஆன்லைன் ரசீதையும் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். எழுத்துத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை எஸ்பிஐ இணையதளத்தில் 27.10.2014 முதல் பதிவிறக்கம் செய்துபிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளலாம்.ஹால் டிக்கெட் அஞ்சல் வழியே அனுப்பப்பட மாட்டாது. எழுத்துத் தேர்வுக்குச் செல்லும்போது ஹால் டிக்கெட்டுடன் வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு போன்ற அடையாள அட்டை ஒன்றையும் கொண்டுசெல்ல வேண்டும். தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட 15 மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.

முக்கிய நாள்கள்

ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 01.09.2014

விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.09.2014

ஆன்லைனில் கட்டணம் செலுத்தும் நாள்கள்: 01.09.2014 -18.09.2014

செலான் மூலம் கட்டணம் செலுத்தும் நாள்கள்: 03.09.2014- 20.09.2014

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: நவம்பர் - 2014

கூடுதல் விவரங்களுக்கு www.sbi.co.in

Genuineness

Genuineness >Bharathidasan- 1000/degree

>Periyar-250

>Manonmaniam-500

>Annamalai- 600

>TNOU-500

>Madras University-Nil

>IGNOU-100

>Alagappa-250

>Bharathiyar-500

>Madurai Kamaraj-1500

>Sastra-500

>Periyar-250

>Tiruvalluvar-275

>Tanjore Tamil University-1000

Teachers Day song

Teachers Day song  Karthikeyan Rk YouTube video! http://www.youtube.com/watch?v=CBPQpTkVV5U&sns=sms

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!