Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 4 September 2014

பதினெண் மேல்க்கணக்கு :

பதினெண் மேல்க்கணக்கு :
1,நற்றிணை
2, குறுந்தொகை
3, ஐங்குறுநூறு
4, பதிற்றுப்பத்து
5, பரிபாடல்
6, கலித்தொகை
7, அகநானூறு
8, புறநானூறு ---- இந்த எட்டும் எட்டுத்தொகை.

9, திருமுருகாற்றுப்படை
10, பொருநராற்றுப்படை
11, சிறுபாணாற்றுப்படை
12, பெரும்பாணாற்றுப்படை
13, முல்லைப்பாட்டு
14, மதுரைக்காஞ்சி
15, நெடுநல்வாடை
16, குறிஞ்சிப்பாட்டு
17, பட்டினப்பாலை
18, மலைபடுகடாம் - -- இந்தப் பத்தும் பத்துப்பாட்டு.

பதினெண் கீழ்க்கணக்கு:

1,நாலடியார்
2, நான்மணிக்கடிகை
3, இன்னா நாற்பது
4,இனியவை நாற்பது
5 களவழி நாற்பது
6,கார் நாற்பது
7,ஐந்திணை ஐம்பது
8, திணைமொழி ஐம்பது
9, ஐந்திணை எழுபது
10, திணைமாலை நூற்றைம்பது
11, திருக்குறள்
12, திரிகடுகம்
13, ஆசாரக்கோவை
14, பழமொழி நானூறு
15,சிறுபஞ்சமூலம்
16,முதுமொழிக்காஞ்சி
17, ஏலாதி
18, கைந்நிலை

"ஆசிரியர் நாள்" வாழ்த்துச் செய்தி

"ஆசிரியர் நாள்" வாழ்த்துச் செய்தி

ஆசிரியப் பணிபுரிந்து, அறிவாற்றலால் உயர்ந்து, தம் சான்றாண்மைக் குணங்களால்சிறந்து, சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத் தலைவராகவும், பின்னர்
இரண்டாவது குடியரசுத் தலைவராகவும் விளங்கிப் புகழ் படைத்தவர் டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன். அவர்தம் பிறந்த நாள் - செப்டம்பர் 5ஆம் நாள் நாட்டின், "ஆசிரியர்
நாள்" என - ஆசிரியப் பெருமக்களின் அரிய தொண்டுகளைப் போற்றி ஆண்டுதோறும் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது.

இந்நன்னாளில் அடுத்த தலைமுறை மக்களை அறிவிலும், ஆற்றலிலும், செயல்பாட்டுத் திறனிலும், சீரிய பண்பாட்டு உணர்விலும் சிறந்தவர்களாக உருவாக்கிடும் திருப்பணியில் வாழ்நாள் முழுதும் தொண்டுகளாற்றிடும் பெருமைக்குரிய ஆசிரியப் பெருமக்களுக்கு அரசு சார்பில் "டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் விருது" வழங்கிப் பெருமைப்படுத்தப்படுகிறது.

ஆசிரியர் சமுதாயம் முழுதும் மகிழும் வகையில்,"நல்லாசிரியர் விருது" என வழங்கப்பட்ட விருதின் பெயரை, 1997இல் "டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் விருது" என்றும், விருதுக்குரிய பரிசுத் தொகை ரூ.500 என்பதை 1989இல் ரூ.1,000 என்றும், 1997இல் ரூ.2,000 என்றும், பின் 2008இல் ரூ.5,000 என்றும் உயர்த்தியது திராவிட
முன்னேற்றக் கழக அரசே என்பதை இவ்வேளையில் நினைவுபடுத்துகிறேன்.

"ஆசிரியர்கள் ஏங்கினால் வகுப்பறைகள் தேங்கும்" என்று கூறிய பேரறிஞர் அண்ணா அவர்களின் மணிமொழியை இதயத்தில் தாங்கி, ஆசிரியர் சமுதாயத்திற்கு
அளவிலாச் சலுகைகள் பலவற்றை வழங்கியது திராவிட முன்னேற்றக் கழக அரசு.

1959இல் 5 கோடி ரூபாய்ச் செலவில் முதலாவது ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதற்கு மாறாக; 1967இல் கழக அரசு அமைந்ததைத் தொடர்ந்து அண்ணா அவர்களுக்குப் பின் நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் 1965இல் அமைக்கப்பட்டிருக்க வேண்டிய இரண்டாவது ஊதியக் குழுவினை 4.9.1969இல் அமைத்து, அதன் பரிந்துரைகளை 2.10.1970 முதல் ஆண்டுக்கு 21 கோடி ரூபாய்ச் செலவில் நடைமுறைப்படுத்தினேன்.

அடுத்து, 1989இல் கழகம் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தபோது, மாநில அரசின் ஐந்தாவது ஊதியக்குழு அமைத்து - மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக
மாநில அரசு ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்குவது உட்பட அக்குழு அளித்த பல்வேறு பரிந்துரைகளை ஏற்று 1.6.1988 முதல் ஆண்டுக்கு 430 கோடி ரூபாய்ச் செலவிலும்;

1996இல் கழகம் நான்காவது முறையாக ஆட்சிக்கு வந்தபோது மத்திய அரசின் ஐந்தாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் கழக அரசு நியமித்த
ஊதியக்குழு அளித்த பரிந்துரைகளை ஏற்று; 1.1.1996 முதல் ஆண்டுக்கு 1230 கோடி ரூபாய்ச் செலவிலும்;

2006இல் கழகம் ஐந்தாவது முறையாக ஆட்சிக்கு வந்தபோது மத்திய அரசின் ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் கழக அரசு நியமித்த ஊதியக்குழு
அளித்த பரிந்துரைகளை ஏற்று; 1.1.2006 முதல் ஆண்டுக்கு 5,155 கோடியே 79 லட்ச ரூபாய் கூடுதல் செலவிலும் - என 19 ஆண்டுகால முதலமைச்சர் பொறுப்பில் நான்கு
ஊதியக்குழுக்களை அமைத்து; அவற்றின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி ஆசிரியர்,அரசு ஊழியர் குடும்பங்களின் சமூக, பொருளாதார நிலைகளை உயர்த்தி, அவர்களின்
வாழ்க்கைத் தரம் மேம்பட வழிவகுத்தவன் நான் என்பதில் பெருமிதம் அடைகிறேன்.

அதேநேரத்தில் 2001ல் அமைந்த அ.தி.மு.க. அரசு, கழக அரசு அளித்த சலுகைகளை எல்லாம் பறித்துக் கொண்டதால் அதை மீண்டும் வழங்கக்கோரி போராடிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது அடக்குமுறைகளை ஏவி, நள்ளிரவு என்றும், பெண்கள் என்றும் பாராமல் வீடுபுகுந்து அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்ததையும்; அத்துடன் அந்த அரசு ஒரே கையொப்பத்தில் 1 லட்சத்து 71 ஆயிரம் ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் நிரந்தரமான வேலை நீக்கத்தைப் பரிசாகத் தந்ததையும் எவரும்
மறந்திட முடியாது. தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் ஆசிரியர் நியமனங்களிலும், மாறுதல்களிலும், வெளிப்படைத் தன்மையே அற்றுப் போய் விட்டதோடு, ஏராளமான குளறுபடிகளும் நுழைந்து விட்டன. தங்களுடைய குறைகளைத் தெரிவித்துப் போராடும்
ஆசிரியப் பெருமக்களை ஆட்சியினர் சந்திக்க மறுப்பதும், அதன் காரணமாக விரக்தியடைந்து ஆசிரியர்கள் தற்கொலைக்கு முயற்சிப்பதும் மிகுந்த வேதனையைத்
தருகிறது. அந்த அ.தி.மு.க. ஆட்சிபோல் அல்லாமல் ஆசிரியர், அரசு ஊழியர் நலனில் என்றும் அன்பும், அக்கறையும்; கனிவும், கரிசனமும் கொண்டு எண்ணற்ற
நலத்திட்டங்களையும், ஏராளமான சலுகைகளையும் வழங்கியவன் நான் என்பதைச் சுட்டிக்காட்டிட விரும்புகிறேன்.

தந்தை பெரியார் அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களும், மறைமலை அடிகளார் உள்ளிட்ட பல தமிழ் சான்றோர்களும் ஊட்டிய தன்மான உணர்வுகளால் தமிழக
நலன்கருதி தமிழ் மொழி, இனச் சிந்தனைகள் செழித்தது. மறைந்து கொண்டிருந்த தமிழ் மொழியை மீட்கும் வகையில் பல்லாண்டு காலம் போரிட்டு உயிர்ப்பலி தந்து தமிழகத்தில்
நடைமுறையில் இருந்த "ஆகாஷவாணி" என்பதை "வானொலி" என்றும்; "பிராந்திய செய்திகள்" என்பதை "மாநிலச் செய்திகள்" என்றும்; "லோக்சபா" என்பதை "மக்களவை" என்றும்; "கனம் மந்திரி" என்பதை "மாண்புமிகு அமைச்சர்" என்றும்; "சட்டசபை" என்பதை
"சட்டமன்றம்" என்றும் இவைபோல் வடசொல் ஆதிக்கத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான தமிழ்ச் சொற்களை மீட்டெடுத்து, புழக்கத்தில் கொண்டு வந்து - எல்லாம் தமிழாகி படிப்படியாக வடசொல்லாதிக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேசியம் என்ற
பெயரில், "ஆசிரியர் நாள் விழா" என நாம் அழைத்து வரும் தமிழ்ச் சொற்றொடர் மதிப்பிழக்கும் வகையில், "குரு உத்சவ்" எனும் வடசொல் தமிழகப் பள்ளிகளில் புகுத்தப்படுகின்ற கொடுமை தற்போது அரங்கேற்றப்படுகிறது. இதை சாதாரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்நிலையில் வளரும் பிஞ்சுக் குழந்தைகள் நெஞ்சில் அறிவு வளர்ச்சிப் பயிர் செய்திடும் பொறுப்பில் உள்ள ஆசிரியப் பெருமக்கள் நாட்டுப் பற்று உணர்வை வளர்த்திட வேண்டும். தமிழ் மொழிப்பற்று உணர்வை வளர்த்திட வேண்டும். தமிழகத்தின் நலனை - தமிழ்ச் சமுதாயத்தின் தன்மானத்தைக் காக்கும் பொறுப்பினையும் மேற்கொண்டிட
வேண்டும் என்பதை எனது வேண்டுகோளாகத் தெரிவித்து; தமிழக ஆசிரியப் பெருமக்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், எனது "ஆசிரியர் நாள்"நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

ஆசிரியர் தினத்தை ஒட்டி முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தினத்தை ஒட்டி முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: ஆசிரியராகத் தன்னுடைய வாழ்வைத் தொடங்கி இயதியக் குடியரசுத் தலைவராக உயர்யத தத்துவ மேதை டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் திங்கள் 5-ஆம் நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி மகிழும் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“நாட்டின் எதிர்காலம், பள்ளி வகுப்பறைகளிலேயே தீட்டப்படுகின்றது” என்று ஆசிரியப் பணியின் உயர்வினை டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள் புகழ்ந்துரைத்துள்ளார். ஆசிரியப் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் கற்பிப்பதல்ல - நல்லொழுக்கத்தையும், சிறந்த பண்பையும், பொது அறிவையும், சமூக சிந்தனைகளையும் மாணவச் சமுதாயத்திற்கு கற்பிப்பதாகும்.

எதிர்கால இந்தியாவின் தூண்களான மாணவச் செல்வங்களுக்கு தரமான கல்வியை அளிப்பதுடன், அவர்களை சிறந்த குடிமக்களாக உருவாக்கிடும் மகத்தான பணியினை ஆற்றி வரும் ஆசிரியர்களைப் பாராட்டி தமிழக அரசு ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. தமிழக அரசு சிறந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்கிடும் வகையில் கடந்த மூன்று ஆண்டுகளில் 53,288 ஆசிரியர்களை பணி நியமனம் செய்துள்ளது.

மேலும், 14,700 ஆசிரியர் பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட்டு வருகின்றன. ஆசிரியர் பெருமக்களின் நல்வாழ்விற்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி

“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்” என்று ஆசிரியர் பெருமக்களை பெருமைப்படுத்தி கூறுவதற்கேற்ப, மாணவர் சமுதாய மேம்பாட்டிற்கென இடை விடாது உழைத்திடும் ஆசிரியப் பெருமக்களின் கல்விப் பணி மேன்மேலும் சிறந்தோங்கிட வேண்டுமென வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என வாழ்த்துச் செய்தியில் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்

'Happy Teachers Day

RK's Kalvi Siragukal:
Advance 'Happy Teachers Day'.We r the back bone of the society.We r the eyes to d children.So,v give our 100+ and make our India to d best

ஆசிரியர் தின வாழ்த்து .....!! ( செப்டம்பர் -5 )

ஆசிரியர் தின வாழ்த்து .....!! ( செப்டம்பர் -5 )

அறியாமை இருள் நீக்கி
அறிவொளி கொடுக்கும்
ஞாயிறு நீ .....!!

ஏட்டுக் கல்வியோடு
நல்லொழுக்கம் போதிக்கும்
ஞானி நீ ....!!

வருங்கால சமுதாயத் தூண்களை
பாங்காய் செதுக்கும்
சிற்பி நீ ......!!

மாணவர் மனமெனும் களர்நிலத்தை
பண்படுத்தி விளைநிலமாக்கும்
உழவன் நீ ....!!

நெறிதவறும் மாணாக்கர்க்கு
அறிவுரை புகட்டி ஆதரிக்கும்
ரட்சகன் நீ ....!!

கற்போன் கண்டபடி பேசினாலும்
சொல்லாலடித்தாலும் கடமை தவறா
கர்ம வீரன் நீ ....!!

எண்ணும் எழுத்தும் கண்ணெனக் கற்பித்து
ஏணிப் படிகளாய் ஏற்றுவித்து
கீழிருந்து அழகு பார்க்கும் குணாளன் நீ ...!!

முதுகுக்குப் பின்னே
முள்ளாய்க் குத்தினாலும்
தாயாய் மன்னிக்கும் தயாளன் நீ ....!!

தட்டுத் தடுமாறி தவிப்போர்க்கு
படிப்பில் பிடிப்பை ஏற்படுத்தும்
சாதகன் நீ......!!

திக்குத் தெரியாமல் திணறுவோர்க்கு
சாரதியாய் வழிகாட்டி ஒளிகாட்டும்
கலங்கரைவிளக்கம் நீ ...!!

அறிவுச் செல்வங்களை
அகில அரங்கில் நிலை நாட்டும்
போதி விருட்சம் நீ ...!!

மாணவர் சிகரம் எட்ட
தன்னலமில்லா உழைப்பைத் தரும்
தர்மவான் நீ ....!!

கல்விக் கூட கோவில்களின்
கருவறைத் தெய்வங்களே ...
கரம் கூப்பி சிரம் தாழ்த்தி
தொழுகின்றோம் ....!! -நும்
பணி சிறக்கட்டும் ...
வாழிய ....பல்லாண்டு ....பல்லாண்டு ..... !!!

வணக்கத்துக்குறியவர்கள்

எததனை ஆயிரம் ஆசிரியர்கள்-ஆனால்
நோக்கம், லட்சியம் ஒன்று தானே
என் மாணவன் முன்னேற வேண்டும்
தேர்ச்சிப்பெற வேண்டும்
வெற்றி பெற வேண்டும்
ஆஹா !
எத்தனை உயரிய எண்ணம்
நீங்கள் அல்லவா
வணக்கத்துக்குறியவர்கள்


எத்தை கேலிகள்
எத்தனை கிண்டல்கள்
எத்தனை துன்பங்கள், தொல்லைகள்
உங்களுக்கு செய்தோம்
இன்று நினைக்கையில்
என் உள்ளம் வலிக்கிறதே
உங்கள் காலில் விழுந்து
மன்னிப்பு கோருகிறோம்
எங்களை மன்னியுங்கள் - ஐயா

இன்று வரையிலும் , இனிமேலும்
நாங்கள் காணும் வெற்றிகளுக்கு
நாங்கள் அடையும் புகழ்களுக்கு
உரியவர்கள் நீங்கள் தானே - ஐயா !

கல்வி என்னும் கரும் பலகை

கல்வி என்னும் கரும் பலகையில்
கற்ற உயிர் மெய் எழுத்தை நம்
கைவண்ணம் தொட்டு காகித தட்டில்
எழுதி படிக்க கற்று கொடுத்து

நம் தமிழ் மொழி சிறக்க நம்மை
அடிமனதில் ஆணி அடித்தார் போல்
அறிமுகம் பதித்து இன்முக சிரிப்புடன்
பொன் முக கனவில் என் முகம்
மேல் அறிவு கண்டு மென் மேலும் சிறக்க

அதே இடத்தில நின்று தான்
கற்று தெளிந்ததை என் தலைமுறை
தாண்டியும் பின் தலைமுறை தளிர்க்கவும்
உழைக்கும் ஆசானே உன்னை குருவே
தெய்வமாய் வணங்குவதில் பெருமை கொள்கிறேன் !

ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்

ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்
கை எடுத்து வணங்குகிறேன்
நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்

நான் வாழ ! நான் முன்னேற!
எனக்காக உழைத்தவர்கள்
நான் இன்று இன்பம் காண
அன்று துன்பம் பொறுத்தவர்கள்

நான் முத்து சேர்க்க
மூச்சடக்கி முத்து குளித்தவர்கள்
என் இளம் வயதில் கண்ட
நடமாடும் தெய்வங்கள் !
என் ஆசிரியர்கள்

உலக மக்களின் வாழ்வுக்குச் செய்திடும் சேவை ஆசிரியர் தின வாழ்த்து!

உலக மக்களின் வாழ்வுக்குச் செய்திடும் சேவை ஆசிரியர் தின வாழ்த்து!

எழுத்ததை அறிவிப்பான் இறைவனாம் என்றே-என
   எண்ணியே ஆசிரியர் பணிசெய்ய நன்றே
அழுத்தமாய் பசுமரத் தாணியைப் போன்றே-நீர்
    ஆற்றிட வந்தீராம் சேவையாம் இன்றே
செழித்திட உலகது வேண்டுதல் நன்றே-என்
    சிரம்தாழக் கரம்கூப்பி செப்புதல் ஒன்றே
அழியாது இயற்கையைக் காப்பீரா மென்றே-வகுப்பு
    அறைதனில் மாணவர் முன்னாலே நின்றே
  
பருவங்கள் மாறிட உலகமே மாறும்-இதை
   படிக்கின்ற மணவர் உணரவே கூறும்
வருங்கால உலகமே அன்னாரின் கையில்-அதை
   வகுப்பது வகுப்பறை அறிவீரா பொய்யில்
தருகின்ற அழிவிற்கு ஜப்பானே சாட்சி-முன்னர்
   தமிழ்நாடு கண்டதும் அழியாத காட்சி
திருமிகு இப்பணி செய்திடின் நீரும்-நல்ல
   திருப்பணி யாகவே மலர்ந்திடும் பாரும்

பலவாறு பருவங்கள் மாறிட யிங்கே-தினம்
   பார்கின்றோம் யார்செய்த தவறுதான் எங்கே
நிலமகள் நடுங்கியே குலுங்கிட அந்தோ-தம்
  நெடும்வாயே திறந்துயிர் விழுங்கிட தந்தோம்
அலையாக பேராழி புகுந்திட உள்ளே-உலகு
  அழிகின்ற காட்சிகள் திரையது சொல்ல
விலையாக அழிப்பதோ நாள்தோறும் தன்னை-மேலும்
  விடுவாளா எண்ணுங்கள் இயற்கையாம் அன்னை

சுற்றும் சூழலும் கெட்டேதான் போச்சே-தினம்
   சுற்றிடும் உலகெங்கும் மாசாக ஆச்சே
கற்றும் பாடமே தெளியவே இல்லை-என்ன
   காரணம் யாருக்கும் புரியவே இல்லை
பெற்றவள் இயற்கையாம் அன்னையைக் காத்தே-நாம்-
   பேணுவோம் உலகென்னும் நம்பெரும் சொத்தே
மற்றெவர் போனாலும் மாணவர்  சேவை–உலக
   மக்களின் வாழ்வுக்குச் செய்திடும்  சேவை

                    புலவர் சா இராமாநுசம்

ஆசிரியர் தின வாழ்த்துக் கவிதை

ஆசிரியர் தின வாழ்த்துக் கவிதை 

ஆயிரம் ஆண்டுகள்  ஆயிரம் பிறவிகள்
பூமியில் பிறந்திட விரும்புகின்றேன்.
அத்தனை பிறப்பிலும் ஆசான் பணியை
         ஏற்றிட விரும்புகிறேன் .

மூங்கில் காட்டில் புல்லாங்குழலை தேடும் வேலை இது
முழுதாய் பாறையில் சிற்பம் செதுக்கும் முக்கிய வேலை இது
மனிதம் வாழ அறிவைத் தந்திடும் மகத்துவ வேலை இது
புனிதர்பலரும் போற்றிச் சொன்ன புண்ணிய வேலை இது

அதனால் அடுத்த பிறவிகள் பலவும் எடுத்து வந்தாலும்
அத்தனை பிறப்பிலும் ஆசிரியராக இருந்திட விரும்புகின்றேன்.       1

சித்திரம் வரைந்து வண்ணம் தீட்டும் சீரிய பணியிதுவாம்
நித்திரை மறந்து நித்தியம் செய்ய  விரும்பும் பணியிதுவாம்
சொத்துக்கள் சேர்த்து வாழ நினைப்பவர் விரும்பாப்  பணியிதுவாம்
முத்துக்கள் தேடி ஆழ்கடல் நீரில்  மூழ்கிடும் அரிய பணியிதுவாம்

எத்தனை ஆண்டுகள் எத்தனை பிறவிகள் எடுத்து வந்தாலும்
அத்தனை பிறப்பிலும் ஆசான் பணியை ஏற்றிட விரும்புகின்றேன்.   2

ஐந்தும் மூன்றும் அடுக்காய்  இருந்தால் சமைப்பது கடினமல்ல
இருப்பதை வைத்து அறுசுவை உணவு படைப்பது சுலபமல்ல
படிப்பறிவில்லா பாமர மக்கள் கல்வியை பெற்றிடவும்
அடிப்படை கல்வி அனைவர்க்கும் என்ற நோக்கம் வென்றிடவும்

ஆசான் அதிகம் உழைத்திட வேண்டும் என்பதை உணர்கின்றேன்
அயரா உழைப்புடன் உறுதி கொண்டப்பணி தொடர்ந்திட  
                                                  விரும்புகின்றேன்

ஈன்ற குழந்தை 'அம்மா" என்றால் அன்னை மகிழ்ந்திடுவாள்
சான்றோனாகி  சரித்திரம் படைத்தால் தந்தையும் மகிழ்ந்திடுவார்
சான்றோன்  ஆனதன் காரணம் எந்தன் ஆசான் என்றுரைத்தால்
ஈன்றாள், தந்தை  இருவரை விடவும் ஆசான் மகிழ்ந்திடுவார்

அந்தப் பெருமை எனக்கும் கூட கிடைத்திட விரும்புகின்றேன்.
அடுத்த பிறப்பிலும் ஆசானாக இருந்திட விரும்புகின்றேன்.       4

ஆடை அழகாய் அமைவதில்தானே தைப்போர் திறனை அறிவதுண்டு
ஓடை நீரின் நிலத்தின் தன்மை நிலத்தால்தானே திரிவதுண்டு
கூடையில் உள்ள பூவின் வாசம் கூடைக்கும் கூட வருவதுண்டு
மேடையில்  உள்ளோர் புகழில் அவரவர் குருவுக்கும் கூட பங்கு உண்டு

எனக்கும்  அதுபோல்கொஞ்சம் பங்கு இருந்திட நினைக்கின்றேன்
அதனைப்  பெறவே ஆசான் பணியை நானும் விரும்புகின்றேன்  5

பழுத்த  பழங்கள் நிறைந்த  மரத்தை பறவைகள் தேடிவரும்
இனித்த கரும்பை கடித்து சுவைக்க எறும்புகள் ஓடிவரும்
படித்த ஞானம் நிறைந்த குருவை மாணவர் சூழ்ந்திடுவார்
நிலைத்த புகழை நிச்சயம் பெற்று நித்தியம் வாழ்ந்திடுவார்

அத்தகு  புகழும் சிறிதே எனக்கு கிடைத்திட வேண்டுகின்றேன்
இத்தரை மீதில் ஆசிரியர்பணியை அதனால் விரும்புகின்றேன். 6

தீயில் சுடாத தங்கம் என்றும் அணிகலன் ஆவதில்லை
அழுத்தித் துவைக்காத் துணிகள் என்றும் வெளுப்பும் அடைவதில்லை
ஆலையில் கரும்பைப் பிழிந்தெடுக்காமல் சர்க்கரை கிடைப்பதில்லை
                                                            - கல்விச்
சாலையில் மாணவர் பயிற்சி பெறாமல் சான்றோர் ஆவதில்லை

சான்றோன் ஆக்கும் பணியில் நானும் சாதனை படைத்திடவே
ஆசான் பணியே அடுத்த பிறப்பிலும் செய்திட விரும்புகின்றேன்     7

ஆதியில்  வாழ்ந்த மனிதர்களிடத்தில் சாதிகள் இருந்ததில்லை
பாதியில் வந்து பாதகம் செய்தது இதுபோல் எதுவுமில்லை
சாதம் உண்டு சோம்பித் திரிந்தவர் செய்திட்ட பேதமன்றோ
பேதம் மறைந்திட கல்வியைத் தருவது ஆசான் திறனன்றோ

அந்தத் திறனை நானும் பெற்றிட மனதில் நினைக்கின்றேன்
அடுத்த பிறப்பிலும் ஆசான் பணியே தொடர்ந்திட விரும்புகின்றேன். 8

முன்னோர் வகுத்த நெறிமுறை அடுத்த தலைமுறை உணர்த்திடவும்
பின்னோர் அதனை மறந்துவிடாமல் போற்றிக் காத்திடவும்
வன்முறை என்பதை அறியாத் தலைமுறை உருவாக்கி வைத்திடவும்
நன்முறை மட்டும் நாடும் இளைஞர்கள் நிறைந்து பெருகிடவும்

என்னாலியன்ற பணியினைச் செய்து என்றும் உழைத்திடுவேன்.
அடுத்தபிறவி எடுத்து வந்தாவது என் பணி முடித்திடுவேன்.       9.

சேவை  செய்து குருவுடன் வசித்து கற்றது  பழைய கதையாகும்
தேவை அறிந்து கற்றலில் செயல்வழி புகுத்திடல் புதிய முறையாகும்
மாற்றம் என்பது மானிட இனத்தின் மாறா இயல்பாகும்
ஏற்றம் பெற்றிட இதனை உணர்வது ஆசான்  கடனாகும்

ஆயிரம் ஆண்டுகள் ஆயிரம் பிறவிகள் எடுத்திட விரும்புகின்றேன்.
அத்தனை பிறப்பிலும் ஆசான் பணியைப் போற்றிட விரும்புகின்றேன்.

என்னிடம் கற்றவர் என்னை மதித்திட மறந்து போனாலும்
ஏற்றிய ஏணியை எட்டி உதைத்து தள்ளிட நினைத்தாலும்
ஏழை ஆசான் என்றனை எண்ணி ஏளனம் செய்தாலும்
பேழையில் செல்வம் சேர்த்திட அறியா பேதை என்றாலும்

ஆவல்  கொண்டே ஆசான் பணியை அகத்தில் துதித்திடுவேன்.
அந்தப்  பணியே ஆயுள் முழுதும் செய்ய முனைந்திடுவேன்  11

சில  பேர்மட்டும் ஆசான் திறனை அறிந்து போற்றிடுவார்
சிலபேர்  சேர்ந்து ஆசான்களையே பலமாய் தூற்றிடுவார்
தூற்றல் போற்றல் இரண்டையும் சமமாய் தூர வைத்திடுவோம்
ஆற்றும் பணியில் ஆர்வம் கொண்டே அயராதுழைத்திடுவோம்

ஆயிரம் ஆண்டுகள் ஆயிரம் பிறவிகள் எடுத்திட விரும்புகிறேன்
அத்தனை பிறப்பிலும் ஆசான்பணியை செய்திட விரும்புகின்றேன்.-  
                                  புகழ் எய்திட விரும்புகிறேன்.

ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ...

ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ...

    அன்னையும் பிதாவும் முன் வர
    தெய்வத்தை பின் தள்ளிய என் ஆசானே
    தூரத்து புள்ளியாய் காலங்கள் கடந்தாலும்
    தூறலாய் என் நெஞ்சில் உங்களின் சாரல் என் அகல் விளக்கே

    என் அகக் கண் திறந்து
    இடம் சுட்டி காட்டினீர்கள் என் அறிவை,.. தமிழை

    என் குரலில் திருக்குறளை
    அவையில் ஒலிக்கச் செய்த என் அம்மையே

    உங்கள் கிரணம் பரப்பி அதில் என்னை
    மினுங்கச் செய்த ஆதவமே
    உங்கள் பெயருக்குள் என்னை பொதிந்து நிற்கிறேன்
    உங்கள் பெருமை கண்டு உருகி நிற்கிறேன்.

    உங்களுக்காய்
    உள்ளொளி கொடுக்கும் உலகை காக்கும் ஆசிரியர்களுக்காய்
    வாழ்த்த வருகிறது என் தமிழ்

    அன்பினை வழக்கும் அட்சய பாத்திரங்களே
    அறிவுச் சுடர் ஏத்தும் அணையா தீபங்களே
    அறிவுப் பசி தீர்க்கும் கற்பக விருட்சங்களே
    அன்பின் வழி நடத்தும் முன் மாதிரிகளே
    பின்தங்கிய சமுதாயம் உயர்த்தும் உன்னத உள்ளங்களே
    பிறர்க்காய் மெழுகென உருகி ஒளி தரும் தியாக துருவங்களே

    சக்தியுள்ள சமுதாயம் படைத்து
    நற்குணங்களை என்றும் காத்து
    தீயசக்திகள் அழித்து..
    முத்தொழில் செய்து மூவுலகை ஆளும் பரம் பொருள் சக்திகளே!!!!

    அறிவுச் சுடர் தந்து அறம் தழைக்க
    அச்சாணியாய் விளங்கும் ஆசான்களே -உங்கள்
    அடிமலர் பணிகிறேன்
    உங்கள் ஆத்தமார்த்த அறிவுப் பணிக்கு
    என் ஆசிரியப்பா வாழ்த்துக்கள்

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!