Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 15 September 2014

பேரானந்தம்

படித்தது:
'மகனே அங்க என்னா சத்தம்?'

'அது ஒண்ணுமில்லப்பா... காக்கா... கத்துது'

இரண்டு நிமிடங்கள் கழித்து...

'மகனே அங்க என்னா சத்தம்?'

'காக்காப்பா.... சொன்னனே...'

இரண்டு நிமிடங்கள் கழித்து,

'மகனே அங்க என்னாடாப்பா சத்தம்?'

'உனக்கு எத்தன தடவப்பா சொல்றது... காக்கா காக்கான்னு.... ஏன் உயிர வாங்குற இப்புடி...ச்ச....'

தந்தை தன் இருப்பிடத்தை விட்டு மெல்ல எழுந்து சென்று பெட்டியைத் திறந்து தன் பழைய டைரியை எடுத்து ஒரு பக்கத்தைப் படித்துவிட்டு அழுகிறார். மகன் சத்தம் கேட்டு வந்து அந்த டைரியை பிடுங்கிப் படிக்கிறான்.

எழுதியிருந்தது:

"இன்று என் மகனைக் கொல்லைப் புறம் அழைத்துச் சென்று வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தேன். முருங்கை மரத்தின் மீதிருந்த பறவையைக் காட்டி, என்னப்பா அது? எனக் கேட்டான்... 'காகம்' என்றேன்.... திரும்பத் திரும்ப அதையே கேட்டுக் கொண்டே இருந்தான்... நானும் சொல்லிக் கொண்டே இருந்தேன்... அதையே திரும்பத் திரும்ப கேட்டாலும், அவன் பேசியதை விடப் பேரானந்தம் எனக்கு எதுவுமில்லை... மகிழ்ச்சியாயிருந்தது இன்று".

- இதைப் படித்த மகன், தந்தையைக் கட்டிக் கொண்டு அழத் தொடங்கினான்.

ஞாபக மறதியை தடுக்க

ஞாபக மறதியை தடுக்க உங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைக்க உதவும் ஐந்து வழிமுறைகள்

திங்கள் ,தற்போதைய வேகமான உலகில் பல துறை சாதனையாளராக வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது.  எனவே பல துறைகளில் சாதிக்க வேண்டும் என்று விரும்புவர்கள் நல்ல கூர்மையான கவனிக்கும் திறன் இருக்க வேண்டும். சுறுப்புடனும், மூளையும் சுறுசுறுப்புடன் இயங்கினால்தான்  பல துறைகளில் சாதிக்க வேண்டும் என்ற மேற்கண்ட மக்களின் விருப்பம் சாத்தியம்.

ஆனால் இந்த வகையான மன ஆரோக்கியத்தை கொண்டு வருவது சில நேரங்களில் அவ்வளவு எளிதல்ல. எனவே உங்கள் மூளையை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்க சில வழிகள் இங்கே தரப்படுகின்றன அவை வருமாறு:-

சரியானதை  சாப்பிடுங்கள்:

மூளை சுறுசுறுப்புடன் இயங்குவதற்கு முறையான உணவு உட்கொள்ளுதல் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். எனவே,  தினசரி உணவில் பச்சை இலை காய்கறிகளை சேர்த்துகொள்ளுங்கள் .புதிய பழங்களை சாப்பிடுங்கள், உங்களின் சரியான உணவு முறை மூளை சேதத்தை தடுக்கும் ஆண்டியாக்ஸிடண்ட்களாக  உள்ளன.  மீன் மற்றும் உலர்ந்த பழவகைகளான பாதம் போன்ற பொருட்களும்  உங்கள் மூளை சக்தி பெற உதவும்

நன்றாக தூங்குங்கள்:

நல்ல தூக்கத்திற்காக மாற்றாக எதுவே கிடையாது. இன்றைய பரபரப்பான உலகில் தொந்தரவு இல்லாத தூக்கம் மிகவும் அத்தியாவசமானது. ஆழ்ந்த தூக்கம் உங்களின் மூளையை மட்டும் அல்லாமல் உடலையும் சமநிலைப்படுத்தும்.

மன அழுத்தத்தை தவிருங்கள்:

உங்கள் மூளைக்கு ஆக்ஸிஜன் செல்வதை மன அழுத்தம் கடினப்படுத்துகிறது. இதன் காரணமாக மூளை செல்கள் இறக்க தொடங்குகின்றன.எனவே, மன அழுத்தத்தை கட்டுபடுத்த நீங்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். மன அழுத்தத்தில் இருந்து, உடனடியாக விடுபட ஆழமான மூச்சுப்பயிற்சி உள்ளிட்டவைகளை முயற்சி செய்யுங்கள்

நுண்ணறிவு விளையாட்டுகள்:-

புதிர்கள், செஸ், சுடோகு, குறுக்கெழுத்து போட்டிகள் போன்ற மூளை விளையாட்டுகள் எனப்படும் நுண்ணறிவு விளையாட்டுகளில் ஈடுபடுவது உங்கள் மூளை செல்களை தூண்டி வேகமாக இயங்க வைக்க உதவும்

திட்டமிடல்:-

திட்டமிட்ட வாழ்க்கை என்பது தேவையில்லாத மன அழுத்தத்தில் இருந்து விடுபட மிகவும் அவசியமானது ஆகும். திட்டமிடுதல்  பரிச்சயமான உணர்வை கொடுத்து தேவையில்லாத மன அழுத்தை தவிர்க்க உதவுகிறது.

தோப்புக்கரணம்.....

தோப்புக்கரணம்.....

நம் நாட்டில் விநாயகரை வழிபடும் போதும்....,

படிக்கும் வயதில் ஆசிரியர் தண்டனையாக செய்ய சொல்வதும் “தோப்புக்கரணம்” . தோப்புக்கரணத்தின் பயன்கள்..

மூளைசெல்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன . நாடிகள் சுத்தம் பெறுகின்றன. . நம் உடலிலுள்ள நரம்பு மண்டலங்கள் அனைத்தும் சேருமிடம் காது மடல்கள். . தோப்புக்கரணம் செய்யும் போது காது மடல்களை இழுப்பதால் அனைத்து நரம்புகளும் தூண்டப்படுகின்றன. . செய்முறை: . முதலில் கால்களுக்கு இடையில் ஒரு ஜான் அளவு இடவெளி விட்டு நிற்க வேண்டும். . இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக்கொண்டு.. . மூச்சை இழுத்துக்கொண்டே அமரவும் அமர்ந்த நிலையில் ஒரு மூச்சு விட்டு..

பிறகு எழ வேண்டும் இப்பொழுது நின்ற நிலையில் ஒருமூச்சு விட வேண்டும்.

இவ்வாறு பத்து முறை தினமும் செய்தால் மாற்றம் உங்களுக்கே தெரியும்..

இதனை நம் முன்னோர்கள் பல வருடங்களுக்கு முன்னமே நமக்கு காட்டியுள்ளார்கள் ஆனால் நாம் அதை அலட்சியப்படுத்திவிட்டோம்.

இதனை வெள்ளைக்காரன் ஆராய்ச்சி செய்து அவன் பணம் சம்பாரிக்கிறான்.......

சந்தேகமெனில் Youtube- ல் super brain yoga -

https://www.youtube.com/watch?v=l6YxNZIZLLw

அறிய வேண்டிய தகவல்கள்!

18+ அறிய வேண்டிய தகவல்கள்!
1)பிறக்கும்போது மனித உடலில் 300 எலும்புகள் உள்ளனவாம்;வளர்ந்த பின் 206 தான் உள்ளனவாம்!(94 ஐ யாரோ திருடிட்டுப் போயிட்டாங்க போல)
2)மனித இதயம் ஒரு நாளைக்கு 1,00,000 தடவைக்கு மேல் துடிக்கிறதாம்
3)தலை வெட்டுப்பட்டாலும் ஒரு கரப்பு பல நாட்கள் வாழுமாம்;கடைசியில் அது பட்டினியால் சாகிறதாம்!
4)பூமியின் எடை-6,600,000,000,000,000,000,000 டன்களாம்.
5)ஒரு சதுரக் காகித்த்தை ஏழு தடவைக்கு மேல் பாதியாக மடிக்க முடியாதாம்,
6)கிளினோஃபோபியா என்பது படுக்கையைக் கண்டு பயப்படுவதாம்
7)ஒரு வயலினில் கிட்டத்தட்ட 70 மரத்துண்டுகள் உள்ளனவாம்
8)மின்னலால் உண்டாகும் சூடு,சூரியனின் பரப்பில் உள்ள சூட்டை விட 5 மடங்கு அதிகமாம்.
9)சமாதானத்துக்கான நோபல் பரிசு மெடலில் தோள் மேல் கை போட்டு நிற்கும் மூன்று நிர்வாண ஆண்களின் உருவம் உள்ளதாம்
10)உலகில் மிக அதிகமாக உள்ள பெயர் முகமது என்பதுதானாம்
11)சீட்டுக் கட்டில் ஆட்டின் ராஜாவுக்கு மட்டும் மீசை இல்லையாம்.
12)மின்சார பல்ப் கண்டு பிடித்த எடிசனுக்கு இருட்டைக் கண்டால் பயமாம்
13)உலகில் 10 லட்சம் விதமான மிருகங்கள் உள்ளனவாம்
14)ஒரு சராசரி மனிதன் ஒரு ஆண்டில் 1460க்கும் மேற்பட்ட கனவுகள் காண்கிறானாம்.
15)முள்ளம்பன்றிகள் தண்ணீரில் மிதக்குமாம்.
16)சூரியன் ,பூமியை விட 330330 மடங்கு பெரியதாம்.
17)காட்டுத்தீ,மலையில் கீழ் நோக்கிப் பரவுவதை விட,மேல் நோக்கி வேகமாகப் பரவுமாம்.
18) ஒரு 75 வயது மனிதன் வாழ்வில் 23 ஆண்டுகள் தூங்கியிருப்பானாம்!
18+1))ஆக்டோபஸ்ஸுக்கு 3 இதயங்கள் உள்ளனவாம்
மொத்தம் 18+ தகவல்கள்
சரிதானே!

''மூளைச்சாவு''

''மூளைச்சாவு'' என்ற
பெயரில் உடல்
உறுப்புகளுக்காக
செய்யப்படும் உயிர் கொலை...!

அண்மைக்காலமாக சாலைவிபத்துகளில்
கீழே விழுந்து தலையில் அடிப்பட்டு மயக்கமான
நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றால்,
அவருக்கு ''மூளைச்சாவு''
ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லி உயிரோடு இருக்கும்
அவரை அறுத்து, அவரது உடலில் நல்லவிதமாக
இயங்கிக்கொண்டிருக்கும் இதயம், கண்கள், சிறுநீரகம்,
கணையம், கல்லீரல்
போன்றவற்றை அப்படியே வெளியே எடுத்து அதன்
இயக்கம் அடங்குவதற்குள் குறிப்பிட்ட நேரத்திற்குள்,
வேகமாக அந்த உறுப்புகள்
பாதிக்கப்பட்டு மாற்று உறுப்புக்காக
காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு அறுவை சிகிச்சையின்
மூலம் பொருத்தப்பட்டு அவர்களை உயிர்பிழைக்கச்
செய்கிறார்கள். மூளைச்சாவு ஏற்பட்ட
ஒருவரை இப்படியாக
சாகடித்து குறைந்தது ஐந்து பேரையாவது
உயிர்பிழைக்கச் செய்கிறார்கள்.

இது ஓர் அங்கிகரிக்கப்பட்ட ''உயிர் கொலை''
என்று தான் சொல்லவேண்டும்.

இதை சட்டமும்,
அரசாங்கமும் எப்படி அனுமதிக்கிறது என்று தான்
புரியவில்லை.

உடல்நிலை முற்றிலும்
பாதிக்கப்பட்டு உயிர்வாழ முடியாதவர்களுக்கு
கூட ''கருணை கொலைக்கே'' அனுமதியளிக்காத
சட்டம் இந்த உயிர்
கொலையை எப்படி வேடிக்கைப்பார்க்கிறது என்று தான்
புரியவில்லை.

மூளைச்சாவு ஏற்பட்டவர்களுக்கு இதயம் இயங்கும்,
மூச்சுக்காற்று உள்ளே போய் வெளியே வரும், இரத்த
ஓட்டம் இருக்கும், நாடி துடிப்பு இருக்கும்,
சிறுநீரகங்களும் அதன்
வேலையை செய்துகொண்டுதான் இருக்கும்,
வயிறு உணவு கேட்கும், அதுமட்டுமல்ல
மருத்துவர்களால் மூளை இறந்து விட்டதாக
சொல்லப்படும் மூளை கூட இயங்கிக்கொண்டுதான்
இருக்கும்.

ஆனால் எந்தவித சலனமும் அசைவும்
இல்லாமல் படுத்துக்கொண்டிருப்பார்.
உயிரோடு தான் இருப்பார்.

அப்படி உயிரோடு இருப்பவர்களை அறுத்து இயங்கிக்கொண்டிருக்கும்
உடலுறுப்புகளை எடுத்து ஒருவரை சாகடிப்பது என்பது எந்தவகையில்
நியாயமாகும்.

பல தனியார் மருத்துவமனைகளில்
சிறுநீரகம் திருடுவதற்கும் இதற்கும்
வித்தியாசமில்லை. இரண்டும் ஒன்று தான்.

மூளை இறந்துவிட்டால் மேலே சொன்ன
அத்தனை இயக்கமும் நின்றுவிடும். அதனால்
இது மூளைச்சாவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்றும் அறியாத அப்பாவிகள் தான் இதில்
பெரும்பாலும் பலியாகிறார்கள். அறிவியல் மற்றும்
மருத்துவம் அதீதமாக வளர்ந்துவிட்ட இன்றைய
காலக்கட்டத்தில் தலையில்
அடிப்பட்டு கோமா நிலைக்கு போனவர்களை இந்த
மருத்துவத்தால் காப்பாற்றமுடியாதா...?

நிச்சயம்
முடியும். அதற்கு காலதாமதம் ஆகலாம். நேரமும்
பணமும் செலவாகலாம். அதுவரையில் அவர்
உயிரோடு தான் இருப்பார். நிச்சயமாக ஒரு நாள்
எழுந்து நடமாடுவார்.

ஆனால் அதுவரையில்
காத்திராமல், தனியார்
மருத்துவமனையை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டவரின்
குடும்பத்தை ''மூளைச்சலவை''
செய்துவிடுகிறார்கள்.

கோமாவில் இருப்பவர்
எழுந்து நடமாட வாய்ப்பில்லை என்று சொன்னால்
கூட பரவாயில்லை. உயிர்பிழைக்க
வாய்ப்பில்லை அல்லது எழுந்து நடமாட அதிக காலம்
பிடிக்கும், அதற்கு அதிக செலவாகும்,
அதற்கு மாதங்களாகலாம், வருஷங்களாகலாம்
அல்லது எழுந்திருக்காமல் கூட போய்
இறந்து விடலாம் என்றெல்லாம்
குழப்பி உடலுறுப்பு தானத்திற்கு சம்மதிக்க
வைத்துவிடுகிறார்கள்.

சரி... இந்த உடலுறுப்புகளை அந்த
அப்பாவிகளிடமிருந்து தானமாக
பெறுகிறார்களே தவிர, உடலுறுப்புகள்
பாதிக்கப்பட்டவர்களுக்கு தானமாக
பொருத்தி அறுவை சிகிச்சை செய்வதில்லை.

அந்த
மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு பல
இலட்சங்களை பெறுகிறார்கள். அப்படியென்றால்
இதுபோன்ற
மாற்று அறுவை சிகிச்சை என்பது வசதிபடைத்தவர்களுக்கு மட்டுமே நடத்தப்படுகிறது.

உடலுறுப்புகள் பாதிக்கப்பட்டவர்கள் தனியார்
மருத்துவனையில் மாற்று அறுவை சிகிச்சைக்காக
அனுமதிக்கப்படும் போதே, நகரம் முழுதும் உள்ள மற்ற
எல்லா மருத்துவமனைகளிலும், அது சம்பந்தப்பட்ட
மருத்துவர்களிடமும் உடனடியாக பதியப்படுகிறது.
சாலைவிபத்தில்
மூளைச்சாவு அடைந்து வருபவர்களை அவர்களுக்கு மருத்துவம்
செய்து நடமாட வைப்பதற்கு பதிலாக,
''உடலுறுப்புதானம்'' என்ற பெயரில் உயிர்
கொலை செய்துவிடுகிறார்கள்.

இனியாவது அரசாங்கமும், சட்டத்துறையும்,
பொதுமக்களும் விழித்துக்கொள்ள வேண்டும்.
எதிர்காலத்தில் இது போன்ற
உயிர்கொலையை விசாரிக்க வேண்டும். மேலும்
நடக்காமல் தடுத்து நிறுத்தவேண்டும்......

Cell phone danger

Cell phone danger: http://youtu.be/_Vn6V6VhYzg

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!