Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 1 October 2014

சிலைக்கு பால்

சிலைக்கு பால் ஊற்றியதால்...
விளம்பர பதாகைக்கு பால் ஊற்றியதால்...
செத்துப்போன.... அறிவுக்கும் பாலை ஊற்றியதால்...
வாங்க இயலாமல்...
விலையேறிப்போன நிலையில்...
எங்களுக்கான பாலே கேள்விக்குறியாய்...
இதில் நீயுமா பூனையே.....

உலக முதியோர் தினம்

குடும்பத்தின் வழிகாட்டி முதியோர்: உலக முதியோர் தினம்
இன்றைய சூழலில் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2050ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடுகளில், குழந்தைகளை விட முதியோர் அதிகளவில் இருப்பர். அதே போல, வளரும் நாடுகளிலும் முதியோரின் எண்ணிக்கை இருமடங்காக உயரும் என ஐ.நா., மதிப்பிட்டுள்ளது. வயதான காலத்தில், இவர்களை நன்றாக கவனிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அக்., 1ம் தேதி, சர்வதேச முதியோர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகள், முதியோர்களை மகிழ்விக்கும் விதமாக சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. இன்றைய விரைவான உலகில் குடும்ப உறவுகள் என்பது முன்பு இருந்ததை போல இல்லை. பெற்ற பிள்ளைகளால் கவனிக்கப்படமால் கைவிடப்பட்டு, பொருளாதாரத்தாலும் பாதிக்கப்பட்டு, அனாதைகளை போல வாழும் நிலைக்கு முதியோர் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களை பாதுகாக்க ஒவ்வொரு பிள்ளையும் முன்வர வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது.

முதியோர் சுமையா

முதியோர் குழந்தைகளுக்கு சமம் என கூறுவார்கள். 50 வயதினை கடந்தவர்கள் முதியோராக கருதப்படுகின்றனர். உடல் மற்றும் மனதளவில் அவர்களின் செயல்பாடுகள் மாறிவிடும். முதியோர்களின் அறிவு மற்றும் வழிகாட்டி இன்றைய தலைமுறையினருக்கு மிகவும் அவசியமானது. அவர்களை சுமையாக கருதாமல், வரமாக கருதுங்கள். குடும்பத்தில் முதியோரை அரவணைத்து செல்லுங்கள்; நாமும் எதிர்காலத்தில் முதியோர் ஆவோம் என்பதை நினைவில் நிறுத்தி, அந்த சுயநலத்துக்காவது முதியோர்களை கவனிக்க முன்வர வேண்டும்.

குறையுமா முதியோர் இல்லம்

பிள்ளைகள் நல்ல வசதியோடு இருந்தும், பெற்றோர்களை தாங்களே பார்த்துக்கொள்ளாமல் முதியோர் இல்லங்களில் சேர்க்கும் கொடுமையும் நம் நாட்டில் தான் நடக்கிறது. யாருடைய பெற்றோராவது முதியோர் இல்லத்தில் இருந்தால், மீண்டும் வீட்டுக்கு அழைத்துவர இத்தினத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அரசும் முதியோருக்கு, பென்சன் உள்ளிட்ட சிறப்பு சலுகைகளை வழங்க வேண்டும்.

இன்று சிவாஜி கணேசன் பிறந்த நாள்

இன்று சிவாஜி கணேசன் பிறந்த நாள்
திருச்சி சங்கிலியாண்டவர்புரத்தில் சின்னையா மன்றாடியார்-ராஜாமணி தம்பதியருக்கு நான்காவது மகனாக 1928 அக்., 1ல் பிறந்தார் சிவாஜி.
கணேசமூர்த்தி என பெற்றோர் பெயர் வைத்தனர். அவர் பிறந்த போது, தந்தை சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.சங்கிலியாண்டவர்புரத்தில் பள்ளிப்படிப்பை துவங்கிய சிவாஜிக்கு படிப்பு மீது நாட்டம் இல்லை. அக்கம் பக்கத்து தெருக்களில் நடந்த பாவைக்கூத்துகளும், புராண நாடகங்களும், சிறுவன் சிவாஜியை கவர்ந்தன. அருகில் வசித்த காக்கா ராதாகிருஷ்ணனுடன் இணைந்து திருச்சி தேவர்ஹால் நாடகக்குழுவில் சேர்ந்தார். பின் பொன்னுச்சாமி பிள்ளையின் நாடகக்குழுவில் காக்கா ராதாகிருஷ்ணன், சிவாஜியை சேர்த்து விட்டார்.சில நாடகங்களில் நடித்த சிவாஜிக்கு திருப்பமாக அமைந்தது அண்ணாத்துரை எழுதிய, 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்' நாடகம். சென்னையில் அரங்கேற்றப்பட்ட நாடகத்தில் கணேசனாக இருந்தவர், சிவாஜியாக நடித்தார். அண்ணாத்துரை காகப்பட்டராக நடித்தார். நாடகத்திற்கு தலைமை வகித்து ரசித்த பெரியார், கணேசனை பாராட்டி, 'சிவாஜிகணேசன்' என பெயரிட்டார்.

முத்தாய்ப்பாய் முதல் படம்துவக்கத்தில் திராவிட இயக்கத்தில் இணைந்த சிவாஜி, 'பராசக்தி' நாடகத்தில் நடித்தார். அதன் பெருமை அறிந்த நேஷனல் பிக்சர்ஸ் பி.ஏ.பெருமாள் முதலியார், ஏ.வி.மெய்யப்பசெட்டியாருடன் இணைந்து படமாக எடுக்கவும், அதில் சிவாஜியை நடிக்க வைக்கவும் முடிவு செய்தார். ஏதையும் ஆராய்ந்து முடிவு செய்யும் ஏ.வி.மெய்யப்பசெட்டியாருக்கு புதிய நடிகரான சிவாஜியை வைத்து சினிமா எடுத்தால் ஓடுமா என்ற சந்தேகம் எழுந்தது. அன்றைய சூழலில் பிரபலமாக இருந்த கே.ஆர்.ராமசாமியை நடிக்க வைக்கலாம் என ஆலோசனை கூறினார். அதை ஏற்க மறுத்த பெருமாள்முதலியார், 'சிவாஜியே நடிக்கட்டும்' என்ற உறுதியுடன் 1951ல் அப்படம் எடுக்கப்பட்டது. முதல் வசனமாக 'சக்ஸஸ்' என சிவாஜி பேசிய இடம் இன்றும் ஏ.வி.எம்., ஸ்டூடியோவில் நினைவு சின்னமாக திகழ்கிறது.காலத்தால் அழியாத கதாபாத்திரங்கள்காலத்தால் அழியாத பராசக்தி படம், அன்றைய அரசின் அவலங்களை கூறியதால் படத்தை தடை செய்ய பல முயற்சிகள் நடந்தன. அதைமீறி வெற்றிகரமாக ஓடியதால் சிவாஜிக்கு சினிமா வாய்ப்புகள் பெருகின. உத்தமபுரத்திரன், மனோகரா, மகாகவி காளிதாஸ், காத்தவராயன், புதையல், சித்தூர் ராணி பத்மினி, தூக்கு தூக்கி, குறவஞ்சி போன்ற புராணப் படங்கள் சிவாஜிக்கு புகழை தந்தன. கதாபாத்திரமாகவே ஒன்றி நடித்தததால், அவை இன்றும் மக்கள் மனதில் நிற்கிறது.சிவாஜிக்கு 'பா'எம்.ஜி.ஆருக்கு தாய்க்கு பின் தாரம், தாயை காத்த தனயன், தாய் சொல்லை தட்டாதே என 'தா' என்ற எழுத்தில் துவங்கும் படங்கள் வெற்றியாக அமைந்தது போல, சிவாஜிக்கு 'பா' வரிசையில் அமைந்த படங்கள் வெற்றியை தந்தன. அண்ணன் தங்கை பாசத்தை விளக்கும் பாசமலர், மகளுக்கும் தந்தைக்கும் உள்ள பாசத்தை விளக்கும் பார் மகளே பார், படித்தால் மட்டும் போதுமா, பாலும் பழமும், நிச்சய தாம்பூலம் போன்ற படங்கள் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றன.

மறக்க முடியாத படங்கள்வீரபாண்டிய கட்டபொம்மனாக, கப்பலோட்டிய தமிழனாக, பாட்டுக்கொரு புலவன் பாரதியாக, கர்ணனாக சிவாஜி நடித்தது வரலாற்றின் பதிவு. கட்டபொம்மன் இப்படி இருப்பார் என்று சிவாஜியின் நடிப்பை பார்த்து தானே தெரிந்து கொண்டோம். திருமால் பெருமை,
திருவருட்செல்வர், திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் போன்ற படங்கள் அவர் நடிப்பின் பெருமை கூறுபவை. திரிசூலம், வசந்த மாளிகை, டாக்டர் சிவா, புதிய பறவை, சிவந்த மண் போன்றவை அவரின் நடிப்பு பரிணாமத்தை காட்டின. சிவாஜி நடித்த 'தெய்வமகன்' ஆஸ்கர் விருதிற்கு அனுப்பப்பட்ட முதல் தமிழ் படம்.

தமிழில் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். வாழ்நாளின் இறுதிவரை தொழில் பக்தி, நேரம் தவறாமை போன்ற குணங்களால் போற்றப்பட்டார்.தனி கட்சி துவக்கம்துவக்கத்தில் திராவிடக்கழகத்தில் இருந்தாலும், இந்திரா, காமராஜர் மீது பற்றுக் கொண்டு 32 ஆண்டுகள் காங்கிரசில் இருந்தார். பின் தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியை துவக்கினார். பிறகு 1989ல் அப்போதைய பிரதமர் வி.பி.சிங்கை சந்தித்து, கட்சியை இணைத்து கொண்டார். தமிழக ஜனதா தள தலைவராகவும் திகழ்ந்தார். திரையுலகில் நடிக்க தெரிந்த சிவாஜிக்கு அரசியலில் நடிக்கத் தெரியவில்லை.சக நடிகர் மீதும் மதிப்புசிவாஜி ரசிகர் என்ற அடிப்படையிலும், சிவாஜி குடும்பத்தில் உதவியாளராக என் சகோதரர் திருப்பதி ஆறுமுகம் பணிபுரிந்ததன் அடிப்படையிலும் அவருடன் பழகும் வாய்ப்பை பெற்றேன். 1972ல் மதுரை முள்ளிபள்ளம் பகுதியில் 'பட்டிக்காடா பட்டணமா' படப்பிடிப்பு நடந்தது. பள்ளியில் படித்த நான், சிவாஜி மன்றத்தினருடன் சேர்ந்து அவரை பார்க்க சென்றேன். வைகையாற்றில் இரு கதாநாயகிகளுடன் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. சிவாஜி கிராம ஜமீன்தார் வேடத்தில் இருந்தார். பச்சைக்கலர் பெல்ட் அணிந்து, கொண்டை வைத்த தலைமுடியுடன் காட்சியளித்தார். அவரை பார்த்தபோது, ''டே பசங்களா அங்கே ஒரு அம்மா உட்கார்ந்திருக்கு. அங்கேயும் சென்று பார்த்து சொல்லுங்கள்,'' என்றார். அங்கு அமர்ந்திருந்தவர் ஜெயலலிதா. தன்னுடன் நடிக்கும் அனைத்து நடிகர்களையும் மதிக்கத் தெரிந்தவர் சிவாஜி என இது காட்டியது.தேடி வந்த விருதுகள் கருணாநிதியின் வசனம், கண்ணதாசனின் எழுத்து, டி.எம்.சவுந்திரராஜனின் குரல், எம்.எஸ்.விஸ்வநாதனின் இசை ஆகியவற்றால் சிவாஜியின் படப்பாடல்கள் இன்றும் பட்டிதொட்டிகளில் அன்றாடம் ஒலிக்கின்றன. கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூஷண், தாதாசாகிப் பால்கே விருதுகள் அவருக்கு பெருமை சேர்த்தன. வீரபாண்டிய கட்டபொம்மன் படம், ஆப்ரிக்கா உலக திரைப்பட விழாவிற்கு அனுப்பப்பட்டது. 1962 ல் அமெரிக்கா நியூயார்க் மாகாண நயகரா நகரின் 'ஒரு நாள் மேயர்' சிறப்பு அந்தஸ்தை பெற்றார். 2001ல் அவர் மறைந்த போது, மத்திய அரசு தபால் தலை ெவளியிட்டது. சிவாஜி என்ற மிகப்பெரும் நடிகரின் சுவடுகள் தமிழ் மண்ணிலும், தமிழர் மனதிலும் என்றும் பதிந்து ருக்கும்.-

தேசிய இரத்ததான தினம்

தேசிய இரத்ததான தினம்

தேசிய இரத்ததான தினம் இந்தியாவில் அக்டோபர் 1 ஆம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

Holiday for Bakrid on 6th oct

Flash News

>G.O.MS.NO.882 (Public Dept) Dt.01.10.14
Holidays- Holiday for Bakrid on 6th oct 2014 - change in the date of observance of the festival- Revised Orders- Issued

சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை விஜயதசமி

சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை
விஜயதசமி

சரஸ்வதி பூஜை அன்று நமது தொழில் கருவிகள், கணக்குப் புத்தகங்கள், படிக்கும் புத்தகங்கள், வாகனங்கள் ஆகியவற்றை வைத்து சரஸ்வதி படத்துக்க வெள்ளை நிற மலர்களால் அலங்காரம் செய்து, விநாயகர் அகவல், அபிராமி அந்தாதி படித்து நைவேத்தியம் செய்து தீபாராதனை செய்ய வேண்டும்.
சரஸ்வதி பூஜையில் புதிய புத்தகம் ஒன்றை வாங்கி வைத்து வழிபட்டு மறுநாள் படித்தல் மிகவும் சிறப்பானது.

ஆயுதம் என்பதன்  உண்மையான பயனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது எனலாம்.உயிர்ப்பொருள்கள், உயிரற்றப் பொருட்கள் அனைத்திலும் நீக்கமற இறைபொருள் உறைந்துள்ளது. வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை எனவும் சொல்லலாம்.

ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து தேவையெனில் வண்ணம் தீட்டி, எண்ணைப் பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பம்சமாகும்.

ஆயுத பூஜையன்று எல்லா ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு மட்டுமே இந்த உபகரணங்கள், ஆயுதங்களை பயன்படுத்துவோம், மற்ற அழிவு செய்கைகளுக்கு பயன்படுத்தமாட்டோம் என்று உறுதி எடுத்துக் கொள்வோமே.

விஜயதசமி

தசமி என்றால் பத்து. விஜயம் என்றால் வெற்றி, வாகை, வருகை என்று பல பொருள்கள் உண்டு. இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்று மூன்று சக்தி அவதாரங்கள் எடுத்த அன்னை இறுதியில் எல்லாம் கலந்த மகாசக்தியாகத் தோன்றி, மகிஷாசுரனை, சும்ப, நிசும்பனை , சண்ட முண்டனை வதம் செய்த நன்னாள் விஜயதசமி. இன்று ஸ்ரீ அன்னையை வழிபட அனைத்து நன்மைகளும் பெருகும். வாழ்வில் எல்லா வளங்களும் கிடைக்கும்.

ஸ்ரீ துர்கா தேவி

விஜயதசமி என்பதற்கு மற்றொரு பொருளும் உண்டு. நவராத்திரியின் ஒன்பது நாளும் விரதமிருந்து தூய்மையான உள்ளத்துடனும், பக்தியுடனும் வழிபட்டவர்கள் இல்லம் தேடி, பத்தாம் நாளான தசமி அன்று ஸ்ரீ அன்னை விஜயம் செய்யும் நாளே ’விஜயதசமி’ என்றும் கூறப்படுகிறது. அன்று ஸ்ரீ அன்னையே நம் இல்லம் தேடி வருகிறாள் என்பதே இந்நாளின் மிகப் பெரிய சிறப்பு.

அன்றுதான் ராவணாசுரனை ஸ்ரீ ராமன் வதம் செய்தான். பாண்டவர்கள் தங்களது போரின் வெற்றிக்கு நன்றி கூறும் விதமாக அன்னை எனும் மகாசக்திக்கு, தாங்கள் போரிட்ட ஆயுதங்களை முன் வைத்து வழிபாடு செய்த நன்னாளும் இதுவே!

இப்படிப் பல்வேறு சிறப்புகளை உடைய இந் நன்னாள் மற்றொரு விதத்திலும் மிகுந்த சிறப்புப் பெற்றதாகிறது. ஆம், இந் நன்னாளில் தான் மகா அவதார புருடர் ஸ்ரீ ஷிர்டி சாயிபாபா மகா சமாதி அடைந்தார். அது மட்டுமல்ல ஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகள் ஜீவ சமாதி கொண்ட தினமும் இதுவே!

விஜய தசமியன்று புதிதாகத் தொழில் தொடங்குவோர், கல்வி பயில ஆரம்பிப்போர் தங்கள் பணிகளை ஆரம்பித்தல் நன்று.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!