Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 2 October 2014

October Diary 2014

October Diary 2014

>2- Gandhi Jayanthi/ Saraswathi Pooja

>3- Vijaya Dasami

>4- Grievance Day             Arafath (RL)

>5- World Teachers Day (UNESCO)

>6- Bakrid

>7- School Reopen after Ist Term Holidays

>2 week- Joy of Giving Week -

>9- World Postal Day

>11-Primary CRC- Discussion on children achievements

>15- Global Hand washing day

>16- World Food Day

>18- Upper Primary CRC Discussion on impact of maths science training

>22- Diwali

>23- Diwali fasting (RL)

>24- World Polio Day

>26- Hijiri New Year (1436)

வாழ்கையின் கடைசி நாள் "

ஒரு நாள் ...எமதர்மன் ஒரு மனிதனிடம் வந்து சொன்னான் :
"மனிதா! இன்று உன்னுடைய வாழ்கையின் கடைசி நாள் "
மனிதன் :!!!!ஆனா நான் உன்னுடன் வர தயாராக இல்லை !!
எமதர்மன் சொன்னான் : " நல்லது,இன்று உன்னுடைய பெயர்தான் பட்டியலின் முதலில் உள்ளது ....."
மனிதன்: " சரி,நீங்கள் இருக்கையில் உட்காருங்கள் ,நாம் இருவரும் புறப்படுவதற்கு முன் ஒரு COFFEE சாப்பிட்டு விட்டு போகலாம் "
எமதர்மன் : சரி,அப்படியே செய்யலாம் !
அந்த மனிதன் எமதர்மனுக்கு தூக்க மருந்து கலந்த COFFEE கொடுத்தான்,குடித்தவுடன் எமதர்மன் நன்றாக தூங்கி விட்டான்!!!
மனிதன் உடனே அந்த பட்டியலை எடுத்து முதலில் இருந்த தன் பெயரை எடுத்துவிட்டு,கடைசியில் கொண்டு எழுதி வைத்தான் ....
எமதர்மன் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் அந்த மனிதனிடம் சொன்னான் "நீ என்னிடம் மிகவும் நன்றாக, அன்பாக நடந்து கொண்டாய் ,அதனால் நானும் உனக்காக என்னுடைய முடிவை மாற்றி கொண்டேன்...என்னவென்றால் பட்டியலின் மேலிருந்து இல்லாமல் ,பட்டியலின் கிழே இருந்து உயிர்களை எடுக்க முடிவு செய்துள்ளேன் என்றான் "!!!
கதையின் நீதி :எல்லாம் விதியின்படிதான் நடக்கும் .......
நீ எவ்வளவு முயற்சி செய்தாலும் கூட ........

"ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி"

"ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி"

ஐந்து பெற்றால் என்பதில் வரும் அந்த ஐந்து விஷயங்கள்:

1) ஆடம்பரமாய் வாழும் தாய்,

2) பொறுப்பில்லாமல் வாழும் தந்தை,

3) ஒழுக்கமற்ற மனைவி,

4) ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்கூடிய உடன் பிறந்தோர் மற்றும்

5) சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள் என்பதாகும்..

இவர்களை கொண்டிருப்பவன், அரசனே ஆனாலும் கூட அவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும்.

பிளஸ் 2 தேர்வு தேதிமாற்றம்

பிளஸ் 2 தேர்வு தேதிமாற்றம்

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 6ம் தேதி நடக்க இருக்கும் பிளஸ் 2 தேர்வு 10ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்காக செப்டம்பர்,
அக்டோபர் மாதங்களில் துணைத் தேர்வு நடத்துவது வழக்கம். அந்த தேர்வு கடந்த மாதம் 25ம் தேதி முதல் நடக்கிறது. இந்நிலையில், வரும் 6ம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அரசு பொது விடுமுறையாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் 6ம் தேதி நடப்பதாக இருந்த வேதியியல், கணக்குப் பதிவியல் பாடத் தேர்வுகள் 10ம் தேதி அன்று நடக்கும். மற்ற பாடங்களுக்கான தேர்வுகள் அட்டவணையில் அறிவித்த தேதிகளில் நடக்கும்.

காந்தியின் வாழ்க்கை வரலாறு

காந்தியின் வாழ்க்கை வரலாறு

1869ல் குஜராத் மாநிலம் போர்பந்தரில் ஒரு ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தவர் மோகன்தாஸ்கரம்சந்த் காந்தி. பன்னிரண்டாவது வயதில் பார்த்த ‘அரிச்சந்திரா’ நாடகம், அவருக்குள் பெரும் மாற்றத்தை உருவாக்கியது. விசுவாமித்திரர் நடத்திய சோதனைகளை எல்லாம் ‘மன உறுதியால் தாங்கிக் கொண்டேன்’ என நாடகத்தில் அரிச்சந்திரன் சொன்னதைக் கேட்டு, உண்மையை மட்டுமே பேசும் புதிய மனிதராக மாறினார். அவர் மன உறுதி மற்றும் நேர்மையை வெளிநாடுகளில் படிக்கச் சென்றபோதோ அல்லது கடும் நோயுடன் மரணப் போராட்டம் நடத்திய போதோ எப்போதும் கைவிட்டதேயில்லை. ஒரு வழக்கறிஞராக தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றவர் நீதிமன்றத்துக்கு கொண்டு சென்ற வழக்குகளைவிட, நீதிமன்றத்துக்கு வெளியே பேசித் தீர்த்துவைத்த வழக்குகள்தான் அதிகம். தென்னாப்பிரிக்காவில் நடந்து கொண்டிருந்த நிறவெறியும் அடக்குமுறையும் காந்தியை ஒரு போராட்டக்காரராக மாற்றியது.

போராட்டம் என்றால் வெட்டு, குத்து என்று ரத்தம் சிந்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் உலகிலேயே முதல்முறையாக ‘அஹிம்சை’ போராட்டத்தை அறிமுகப்படுத்தினார். “ஆயுதம் கொண்டு தாக்குவதைவிட, எதிரியின் முன் மனஉறுதியுடன் நின்று சாத்வீகமாக போராடுவது தான் உண்மையான வீரம். எதிரியிடம் காட்ட வேண்டியது எதிர்ப்பை மட்டுமே தவிர, வன்முறையல்ல” என்ற காந்தியின் அஹிம்சை போராட்டத்தை ஆரம்பத்தில் கிண்டலும் கேலியும் செய்தார்கள். ஆனால் இந்த கோட்பாடுதான் சிதறிக்கிடந்த இந்திய சுதந்திரதாகத்தை ஒன்று சேர்த்து வலிமையாக்கியது. அதிக எண்ணிக்கையில் பெண்களை சுதந்திரப் போராட்டத்தில் இணைத்தது. ஆனாலும் இந்த போராட்டத்தின் வெற்றி குறித்து சந்தேகங்கள் எழும்போது, “மன உறுதியுடன் போராடினார், வெற்றி நிச்சயம்” என்று உறுதியுடன் சொன்னார் மகாத்மா காந்தி.

1930ம் வருடம் 61 வயதான காந்தி உப்புக்கு வரி போட்ட ஆங்கில அரசாங்கத்தை எதிர்த்து தண்டியாத்திரையை தொடங்கினார். 241மைல் தூரத்தை 24 நாட்களில் கடந்த காந்தி ஆயிரக்கணக்கான காவலர்கள் முன்னிலையில் தண்டியில் உப்பு எடுத்தார். நாடெங்கும் பல்வேறு தலைவர்கள் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கைது செய்யப்பட்டார்கள். காந்தியின் மன உறுதியையும் அஹிம்சையையும் பலத்தையும் கண்டு மக்கள் மலைத்து நிற்க ஆங்கிலேயர்கள் பயந்து போனார்கள்.

1947ம் வருடம் காந்தியின் இடைவிடாத போராட்டத்தால் இந்தியாவுக்கு கத்தியின்றி ரத்தமின்றி சுதந்திரம் கிடைத்தது. இந்தியாவின் தலைமைப் பொறுப்பு தேடி வந்ததும் அதனை ஏற்றுக் கொள்ளாமல் தீண்டாமை, ஏழ்மை, மதக்கலவரம் போன்றவற்றுக்கு எதிராக மன உறுதியுடன் மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தார்.

120 வயது வரை வாழ்ந்தால் மட்டுமே தான் நினைத்திருக்கும் எல்லா காரியங்களையும் செய்து முடிக்க முடியும் என்ற காந்திஜியை 78வது வயதில் மூன்று துப்பாக்கி குண்டுகளுடன் முடித்து வைத்தான் கோட்ஸே என்ற கொடியவன். காந்தி மறைந்தாலும், மனஉறுதி எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் வெற்றி உருவத்தில் அவரை தரிசிக்க முடியும்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!