Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 9 October 2014

பள்ளிகளில் மொட்டை மாடியில் முன்மாதிரி காய்கறி தோட்டம்

மாநகராட்சி பள்ளிகளில் மொட்டை மாடியில் முன்மாதிரி காய்கறி தோட்டம்!

மதுரையில் இரண்டு மாநகராட்சி பள்ளிகளில் முன்மாதிரியாக, மொட்டை மாடியில்காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. சொக்கிகுளம் காக்கை பாடினியார் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மற்றும் பிபிகுளம் பாண்டியன் நெடுஞ்செழியன்மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கான முயற்சியை கமிஷனர் கதிரவன் துவக்கியுள்ளார்.இதுகுறித்து, மாநகராட்சி கழிவுநீர் புல் பண்ணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது: விவசாயத்தை, காய்கறி உற்பத்தியை மாணவர்கள் அறியும் வகையில், கமிஷனர்தான் ஏற்பாடு செய்தார். முதற்கட்டமாக இரு பள்ளிகளை தேர்ந்தெடுத்தோம். வாடிப்பட்டி அக்ரீடு தொண்டு நிறுவனம் மூலம் காய்கறி வளர்ப்பதற்கான பைகள், தென்னை நார் கழிவு, உரங்களை இலவசமாக பெற்றோம். பள்ளிக்கு தலா 50 பைகள் வீதம் ஓரளவு வளர்ந்த செடி நாற்றுகளைதந்தோம்.தற்போது இரு மாதங்களாக காற்கறிகள் வளர்ந்து வருகின்றன. செடி வளர்ப்பு குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். அடுத்தகட்டமாக மாணவர்களும் இதில் ஈடுபடலாம். சாப்பிடும் காய்கறிகள் எப்படி காய்க்கிறதுஎன்பதை மாணவர்களும் தெரிந்துகொள்ள முடிகிறது.

இதையே ஒவ்வொரு மாணவர் வீட்டிலும் கடைபிடிக்கலாம், என்றார்.காக்கை பாடினியார் பள்ளி தலைமையாசிரியை எழிலரசி கூறுகையில், "கத்தரி, வெண்டை, தக்காளி, கொத்தவரை, கீரை, பச்சை மிளகாய் செடிகள் உள்ளன. தினமும் கிடைக்கும் காய்களை பறித்து, சத்துணவு சமைப்பதற்கு தருகிறோம். ஆசிரியர்கள் ஆர்வமாக செடிகளை வளர்க்கின்றனர். தேசிய பசுமைப்படை, எஸ்.எஸ்.எஸ்., மாணவிகளைக் கொண்டு செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுகிறோம். மாணவிகளுக்கும் செடிகளைப் பார்ப்பதில் தனி சந்தோஷம்" என்றார்.

உணவு சாப்பிட்டவுடன் செய்யக்கூடாதவை!

உணவு சாப்பிட்டவுடன் செய்யக்கூடாதவை!

அறிவோம்
சாப்பிட்ட உடனே சில விஷயங்களை செய்யக்கூடாது என வீட்டுப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். அந்த ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு அறிவியல் காரணம் உண்டு தெரியுமா?

* உடனே பழங்கள் சாப்பிடக் கூடாது.ஏன்?
வயிற்றில் வாயுவை உருவாக்கி உப்பச் செய்துவிடும். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகோ அல்லது உணவு எடுத்துக்கொள்ளும் ஒருமணி நேரத்துக்கு முன்போ பழங்களை சாப்பிடுவது நல்லது.

* தேநீர் குடிக்கக் கூடாது. ஏன்?
தேயிலை அதிக அளவு அமிலங்களை உள்ளடக்கியது. இது உணவில் உள்ள புரத மூலக்கூறுகளுடன் சேர்ந்து உணவு செரிப்பதை சிக்கலாக்கி விடும்.

* புகை பிடிக்கக் கூடாது. ஏன்?
உணவு எடுத்தவுடன் பிடிக்கும் ஒரு சிகரெட், 10 சிகரெட்டுகள் பிடிப்பதற்கு சமமான விளைவை ஏற்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் புற்றுநோய் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.

* இடுப்பு பெல்ட்டை தளர்த்தக் கூடாது. ஏன்?
சாப்பிட்ட பிறகு லேசாக இருக்கட்டுமே என இடுப்பில் உள்ள பெல்ட்டை இறக்கிவிடுவார்கள் அல்லது தளர்த்தி விடுவார்கள். இதனால் சாப்பிட்ட உணவு உடனடியாக குடலுக்கு சென்று விழுவதால் சரியானபடி வேலை செய்ய முடியாமல் செரிமானக்கோளாறு ஏற்படும்.

* குளிக்கக் கூடாது. ஏன்?
சாப்பிட்டவுடன் குளிப்பதால் கை, கால்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் உணவு செரிக்க தேவைப்படும் ரத்த ஓட்டம் குறைந்து வயிற்றில் உள்ள உணவின் செரிமானத்தை குறைக்கிறது.

* உடனே நடக்கக் கூடாது. ஏன்?
சாப்பிட்ட உடனே நடந்தால் உடலுக்கு நல்லது என ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இது தவறானது. இப்படி உடனடியாக நடப்பதால் உணவில் உள்ள சத்துகளை உணவு மண்டலத்தால் எடுக்க இயலாமல் போய்விடும். இதனால் சாப்பிட்டும் சரியான சத்துகள் நம் உடலில் சேராது.

* சாப்பிட்டதும் தூங்கக் கூடாது. ஏன்?
சாப்பிட்டவுடன் படுக்கைக்கு சென்றால் நாம் சாப்பிட்ட உணவுகள் சரியாக செரிமானம் ஆகாது. வயிற்றுக்குத் தேவை இல்லாத வாயுவும் நோய்க்கிருமிகளும் வர வழிவகுக்கும்.

மாணவ, மாணவிகளை சுற்றுலா

மாணவ, மாணவிகளை சுற்றுலா அழைத்து செல்கையில் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்: அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இயக்குநர் உத்தரவு
அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில் மாணவ, மாணவிகளை சுற்றுலா அழைத்துச் செல்கையில் பாதுகாப்பு விதிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும் என திட்ட இயக்குநர் பூஜாகுல்கர்னி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இயக்குநர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோருக்கு அனுப்பியுள்ள சுற்றரிக்கை விவரம்: பல்வேறு திட்டங்களின் அடிப்படையில் ஒவ்வொரு பள்ளிகளிலிருந்தும் மாணவர்கள், ஆசிரியர்கள் அடங்கிய குழுவினர் சுற்றுலா சென்று திரும்புகின்றனர். அவ்வாறு, சுற்றுலா செல்கையில் ஏற்படும் பிரச்னைகளை தடுக்க பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதற்காக அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இயக்குநரின் பாதுகாப்பு குறித்த அறிவுரைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

சுற்றுலா அழைத்துச் செல்வது என்பது மாணவ, மாணவிகளுக்கு பயனுள்ளதாகவும், வகுப்புகளுகுரிய பாடப்பொருள் சார்ந்தாகவும் அமையுமாறு தலைமையாசிரியர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். உடன் வரும் மாணவ, மாணவிகளின் விவரங்கள், பெற்றோர், அலைபேசி, மின்னஞ்சல் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய தகவல் இருக்க வேண்டும். அதோடு, பாதுகாப்பு அடையாள அட்டையை ஒவ்வொருவரும் அணிந்திருக்கிறார்களா என்பதையும் ஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், முக்கியமாக மாணவர்களுக்கு முதுநிலை ஆசிரியரும், மாணவிகளுக்கு முதுநிலை ஆசிரியை ஆகியோரும் பாதுகாப்புக்கு உடன் செல்ல வேண்டும்.

அணைக்கட்டுக்கள், மின்சக்தி நிலையங்கள், கடற்கரைகள் போன்ற இடங்களுக்குச் செல்லும் முன்பு ஆட்சியரிடமும், உரிய கல்வித்துறை அலுவலர்களிடம் அனுமதியும் பெற வேண்டும். சுற்றுலா செல்லும் போது அனைத்து விதிமுறைகளுக்கும் உள்பட்டு நடந்து கொள்வேன் என்றும், இதை உறுதி செய்யும் வகையில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆகியோரிடம் இருந்து மாணவர் அனுமதி கடிதம் முன்னதாகவே அளித்துள்ளனரா என்பதை தலைமையாசிரியர்கள் சரிபார்த்த பின்னர் பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

இதைத் தொடர்ந்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் உடனே ஒவ்வொரு பள்ளிக்கும் சுற்றுலா தொடர்பாக பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்தான தகவலை ஒவ்வொரு பள்ளியின் தலைமையாசிரியர்களுக்கும் உடனே அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இயக்குநர் சுற்றரிக்கையில் தெரிவித்துள்ளார்

வேதியியலுக்கான நோபல் பரிசு

வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!!
             2014 ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்காவின் எரிக்பெட்சிக், வில்லியம் மோர்சென் மற்றும் ஜெர்மனியின் ஸ்டபான் ஹெல் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

உலக அஞ்சல் தினம் -அக்டோபர் 9

உலக அஞ்சல் தினம் -அக்டோபர் 9

உலக அஞ்சல் தினம் அக்டோபர் 09ஆம் தேதி சர்வதேச ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது. 1874ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 09ஆம் தேதி சுவிற்சர்லாந்தின் பேர்ன் நகரில் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் தாபிக்கப்பட்ட தினமே சர்வதேச அஞ்சல் தினமாக கொள்ளப்படுகிறது

சர்வதேச ரீதியில் தரமான அஞ்சற்சேவையினை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு "சர்வதேச அஞ்சல் ஒன்றியம்" அமைக்கப்பட்டது. இதன் எண்ணக்கரு யாதெனில் 1863 இல் ஐக்கிய அமெரிக்காவில் அஞ்சல் அதிபர் நாயகமாகவும் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் மந்திரி சபையின் உறுப்பினராகவும் விளங்கிய மொன்கெமேரி பிளேயரின் எண்ணத்தில் உதித்ததன் பலனாக பாரிஸ் நகரில் கூட்டப்பட்ட மாநாட்டில் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த பதினைந்து பிரதிநிதிகள் சந்தித்து பரஸ்பர நம்பிக்கையுடன் கூடிய பொதுவான அமைப்பினை ஏற்படுத்துவதற்கு இணக்கம் கண்டனர். இதன் பின் ஜேர்மன் நாட்டின் அஞ்சல் பணிப்பாளர் நாயகத்தின் பெரு முயற்சியினால் 1874 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஒன்பதாம் திகதி சுவிற்சலாந்து நாட்டின் பேர்ன் நகரில் கூட்டப்பட்ட மாநாட்டில் இருபத்திரண்டு நாடுகளின் பிரதிநிதிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு "அஞ்சல் பொது ஒன்றியம்' உருவாக்கப்பட்டது. இப்பெயரானது 1878 இல் நடைபெற்ற இரண்டாவது மாநாட்டில் "சர்வதேச அஞ்சல் ஒன்றியம்" (Universal Postal Union) எனப் பெயர் மாற்றம் பெற்றது.

இதனைத் தொடர்ந்து ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 09ஆம் திகதி உலக அஞ்சல் தினமாக பிரகடனம் செய்யப்பட்டு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

உலக அஞ்சல் தின பிரகடனம்
"உலகின் பல்வேறு நாடுகளுக்கே உரிய புவியியல், அரசியல், மதம் போன்ற பல்வேறு எல்லை மற்றும் தடைகளைத் தாண்டி எமது மக்களை முழு உலகுக்கும் இணைக்கின்றோம். மக்கள் அவர்களுக்குரிய பிரத்தியேகமானதும் மிகப் பெறுமதி வாய்ந்ததுமான தகவல்களையும் பொருட்களையும் எம்மிடம் ஒப்படைப்பது. அவற்றைப் பாதுகாத்து மிக வேகமாகவும் மிகக் கவனத்துடனும் அதன் உரிமையாளர்களுக்கு ஒப்படைப்பார்கள் என்ற எம்மீதுள்ள பெரு நம்பிக்கை என்பதை நாம் அறிந்துள்ளதோடு அவர்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை உயர் செயற்றிறமையுடனும் நேர்மையுடனும் பாதுகாப்புடனும் இரகசியத் தன்மையைப் பேணி அவர்களுடைய தகவல்களையும் பொருட்களையும் உரிமைகளையும் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் நேற்றைய தினத்தை விட நன்றாக இன்றைய தினத்திலும் இன்றைய தினத்தை விட நன்றாக நாளைய தினத்திலும் திறமையான சேவையை மக்களுக்கு வழங்குவதற்கு அர்ப்பணத்துடன் செயற்படுவதாக" என்பதாகும்

சில அஞ்சல் செய்திகள்

- அஞ்சல் அட்டையை முதன் முதலில் அறிமுகப்படுத்திய நாடு ஆஸ்திரியா.
- ஆசியாவில் முதன்முதலில் தபால் தலை வெளியிட்ட நாடு இந்தியா.
- இந்திய தபால் தினம் அக்டோபர் 10ம் தேதி.
- உலக தபால் தினம் அக்டோபர் 9ம் தேதி கொண்டாடப்படுகிறது.
- கடிதங்களில் பின்கோடு இடும் முறை இந்தியாவில் 1972ம் ஆண்டு அறிமுகப்படுத்தப் பட்டது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!