Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 29 October 2014

BT TO PGT PROMOTION

BT TO PGT PROMOTION
        BT TO PGT PROMOTION | 2014-15 கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப்பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள 450 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் 31-ந்தேதி காலை 10 மணி முதல் இணையதளம் மூலம் நடைபெற உள்ளது.

Interim Relief and Merger of DA Issue

Interim Relief and Merger of DA Issue
          Interim Relief and Merger of DA Issue - Holding of National Convention of the National Council (JCM)(Staff Side) 11th December 2014
           The Staff Side, JCM National Council had, as desired by the 7th CPC, submitted a separate memorandum on Interim Relief and Merger of DA, copy of which had also been sent to the Finance Ministry.

            During the Informal Discussions the Staff Side had with the Pay Commission, they had assured us to take up the issue with the Government seeking amendment to the Terms of Reference to enable them to act upon our memorandum. We have received reply from the Finance Ministry, which is indicative of a refusal of both the demands. The NDA Government has adopted the same plea made by the UPA II Government to reject our demands. The 7th CPC have so far not communicated to us, the decision they have taken on our memorandum.

      From the steps so far taken by the BJP Government, it is unambiguous that they would be pursuing the neo-liberal economic policies with much more intensity than even the UPA Government. Having got a clear majority in the Parliament, they would be able to push through necessary legislations to pursue reforms.

The outsourcing of Railway functions, privatization of Defence manufacturing Units, increased FDI inflow in various core sectors of economy, dismantling of the administrative price mechanism, de-nationalization efforts in the Banking, Insurance and Coal Sectors and above all the adherence to New Contributory Pension Scheme are some of the bold anti worker steps taken by the new Government.

The matter of fact approach and urgency which was visible in the initial days of the 7 th CPC appears to have vanished. It is a matter of pride for all of us that we could submit our final memorandum on common issues to the Commission within the stipulated time frame. We are also happy to note that almost all service organizations of Central Government employees have endorsed our formulations on the wage structure and other service benefits. It is also a fact that all these organizations have submitted their memoranda on department-specific issues before 31st July, 2014. Despite having received such large number of memoranda, the 7thCPC has so far not commenced taking oral evidence giving an indubitable impression that the Commission might not be able to submit its report within the stipulated time of 18 months.

All these issues came up for the consideration of the members of the Staff side when they met a few days back. The unanimous opinion was to pursue the issues through organizational methods. Accordingly, it was decided to hold a National Convention, eliciting the participation of the representatives of all Service organizations participating in the JCM to discuss the emerging situation and decide upon future course of action. Incidentally, we must mention that the JCM conceived as a negotiating forum has been made ineffective by the Government over the years by not convening its meetings periodically.

The National Convention will be held at MPCU Shah Auditorium, Sree Gurjarathi Samaj, Raj Niwas Road, Civil Lines(Opposite Civil Lines Metro Station), Delhi, on 11th December, 2014. The Convention will commence at 12 Noon and will be concluded by 4.00 PM. 740 delegates will participate in the convention, of which 370 shall be Railwaymen(AIRF and NFIR), 150 will be Defiance Civilian employees (AIDEF and INDWF) and the rest 220 will be represented by other Central Government employees (Confederation of Central Government employees and workers). The participating organizations will issue separate circular letter indicating the number of delegates of each Branch/Unit, Divisions/Zones,Circles/States, and affiliates may deploy to the Convention.

The Staff side will meet again to finalize the draft declaration to be placed before the Convention for discussion and adoption.

10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கல்

10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கல்
            கடந்த செப்டம்பர், 25 முதல் அக்டோபர், 4ம் தேதி வரை எஸ்.எஸ்.எல்.ஸி., துணைத் தேர்வெழுதிய தனித் தேர்வர்களுக்கு மதிப்பெண்கள் சான்றிதழ்கள், தேர்வு எழுதிய மையங்களில் வழங்கப்பட்டு வருகின்றன.

           இதனை நேரில் சென்று பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த தேர்வு முடிவுகள், இணையதளத்தில் வெளியிடப்படமாட்டாது. மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், அரசு தேர்வுத்துறை சேவை மையங்கள் மூலம் இன்று, (29ம் தேதி) வரை நேரில் சென்று மறு கூட்டல் கட்டணத்துடன் கூடுதலாக ஆன்லைன் பதிவு கட்டணமாக, 50 ரூபாயை செலுத்தி பதிவுசெய்து கொள்ள வேண்டும்.

             மறு கூட்டலுக்கான கட்டணமாக, இருதாள் கொண்ட ஒவ்வொரு பாடத்திற்கும் 305 ரூபாயும், ஒரு தாள் கொண்ட ஒவ்வொரு பாடத்திற்கும் 205 ரூபாயும் செலுத்த வேண்டும்.

மார்ச், ஏப்ரல், 2015ல் நடைபெறவுள்ள எஸ்.எஸ். எல்.ஸி., பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், இன்று முதல் அடுத்த மாதம், 7ம் வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுத்துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை, ஆன்லைனில் பதிவுசெய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை பண்பு வளர்த்தல் குறித்த ஐந்து நாள் பயிற்சி

தலைமை பண்பு வளர்த்தல் குறித்த ஐந்து நாள் பயிற்சி
          அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் சார்பில், தலைமை பண்பு வளர்த்தல் குறித்த, ஐந்து நாள் பயிற்சி துவங்கியது.

           அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, தலைமை பண்பு வளர்த்தல் குறித்த பயிற்சி, ஆண்டுதோறும் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டிற்கான பயிற்சி காஞ்சிபுரம் மாவட்டத்தில் துவங்கியது.

                காஞ்சிபுரம் அரசு நகரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெறும் இந்த பயிற்சியில், 44 அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி நவ., 1ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தலைமை பண்பை எப்படி வளர்ப்பது குறித்து முனைவர் நடராஜன், தலைமை ஆசிரியர் களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

நூலகர் பணி தேர்வு விண்ணப்பதாரர் தேர்வு பட்டியல் வெளியீடு

நூலகர் பணி தேர்வு விண்ணப்பதாரர் தேர்வு பட்டியல் வெளியீடு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்நேற்றுவெளியிட்டஅறிவிப்பு:

           தமிழ்நாடு பொது சார்நிலைப் பணியில் அடங்கிய நகர் மற்றும் ஊரமைப்பு துறையின் 2012&2013 ஆண்டிற்கான நூலகர் நிலை1 பணியிடத்திற்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி எழுத்துத் தேர்வும், கடந்த ஜூன் 21ம் தேதி நேர்காணல் தேர்வும் நடத்தப்பட்டது.
                    விண்ணப்பதாரர்கள் எழுத்து மற்றும் நேர்காணல் தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண், அப்பதவிக்கான அறிவிப்பில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் அப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர் பதிவெண் கொண்ட தேர்வு பட்டியல் தேர்வாணைய இணையதளம் www.tnpsc.gov.in
மற்றும் தேர்வாணைய அலுவலக அறிவிப்புப் பலகையிலும் வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் கல்விக்கு அடுத்த ஆண்டு புதிய பாடத்திட்டம்

ஆசிரியர் கல்விக்கு அடுத்த ஆண்டு புதிய பாடத்திட்டம் : தேர்வு மதிப்பீடு முறையில் வருகிறது மாற்றம்
         ஆசிரியர் பயிற்சி கல்விக்கு, அடுத்த ஆண்டு, புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. மாணவர்களின் தேர்வு மதிப்பீடு முறையில் மாற்றம், மாணவர்களின் செயல்
               வழியிலான அணுகுமுறை திட்டங்களுக்கு, அதிக முக்கியத்துவம் உள்ளிட்ட, பல புதிய திட்டங்களை அமல்படுத்த, மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
600 பள்ளிகள் :
தமிழகத்தில், 600 ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதில், இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி பட்டயக் கல்வி அளிக்கப்படுகிறது. இந்த படிப்பை படிப்பவர்கள், ஆரம்ப பள்ளி ஆசிரியராக பணி புரியும் தகுதியை பெறுகின்றனர்.
மாணவ சமுதாயத்தின் அடித்தளமாக உள்ள, ஆரம்ப கல்வியை வலுப்படுத்தவும், ஆரம்ப கல்வி கற்பிக்கும் ஆசிரியரை, தரமுள்ளவர்களாக, திறமையானவர்களாக உருவாக்கவும், தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசு உருவாக்கிய, 'ஆசிரியர் கல்விக் கொள்கை - 2009'ன் படி, பல மாநிலங்கள், ஆசிரியர் பயிற்சிக்கான பாடத்திட்டங்களை மாற்றி உள்ளன.
கற்பித்தலில் புதிய யுக்தி :
வலுவான பாடத்திட்டம், கற்பிக்கும் முறையில், புதிய யுக்திகள், மாணவர்களை, உளவியல் ரீதியாக அணுகி, சிறப்பான முறையில், கல்வி கற்பித்தல், கற்றல் - கற்பித்தலில், தகவல் தொழில்நுட்ப பயன்பாடு, கம்ப்யூட்டர் வழியிலான கற்பித்தல் என, பல புதிய திட்டங்கள், புதிய பாட திட்டங்களில் அமல்படுத்தப்படுகின்றன. கேரளாவில், கடந்த ஆண்டு, புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆந்திரா, கர்நாடகாவில், புதிய பாடத் திட்டம் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. தமிழகத்தில், மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம், வரைவு பாடத் திட்டத்தை தயாரித்துள்ளது. முதல் ஆண்டிற்கு, ஏழு பாடம், இரண்டாவது ஆண்டிற்கு, ஏழு பாடம் என, 14 பாடங்கள் இருக்கின்றன.
வரைவு பாடத்திட்டம் தயார் :
ஒவ்வொரு பாடத்திற்கும், ஐவர் அடங்கிய குழுவை அமைத்து, நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு அனுப்பி, அங்குள்ள நிலவரங்களை நேரில் ஆய்வு செய்ய, இயக்குனரகம் நடவடிக்கை எடுத்தது. குழுவினர், பிற மாநிலங்களின் பாடத் திட்டம், கற்பித்தல் முறை, புதிய திட்டங்கள் ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டு, இயக்குனரகத்திற்கு அறிக்கை அளித்தனர். அதனடிப்படையில், தேவையான மாற்றங்கள் செய்து, வரைவு பாடத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அனுமதி அளித்ததும், பாடத் திட்டம் எழுதும் பணி துவங்கும். அடுத்த ஆண்டு, புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தவும், துறை திட்டமிட்டுள்ளது.
மதிப்பீடு முறை மாறுகிறது :
இதுகுறித்து, சென்னை மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவன முதல்வர், அய்யப்பன் கூறியதாவது:
தற்போதைய பாடத் திட்டம், எழுத்து தேர்வின் அடிப்படையில், மாணவர்களை மதிப்பீடு செய்வதாக உள்ளது.
புதிய பாடத்திட்டத்தில், தேர்வு அடிப்படையிலான மதிப்பீடு குறைவாகவும், உளவியல் ரீதியிலான மதிப்பீடு, கவனிக்கும் ஆற்றலின் அடிப்படையிலான மதிப்பீடு, பேச்சுத் திறன் அடிப்படையிலான மதிப்பீடு என, பல வகையான மதிப்பீட்டின் கீழ், மாணவர்களை மதிப்பீடு செய்ய திட்டமிட்டுள்ளோம்.
மேலும், கற்றல், கற்பித்தலில் கம்ப்யூட்டர் பயன்பாடு, கற்பித்தலில், புதிய அணுகுமுறையை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட திட்டங்களும் இடம்பெறும். இவ்வாறு, அய்யப்பன் தெரிவித்தார்.

கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிக்கு பதிவுமூப்பு அறிவிப்பு

கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிக்கு பதிவுமூப்பு அறிவிப்பு
              ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடத்திற்கு மாநில பதிவுமூப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
           இப்பணிக்கு பி.எட்., படிப்புடன் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது பி.சி.ஏ., அல்லது பி.எஸ்சி., தகவல் தொழில்நுட்பம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.7.2014 அன்று 57 வயதுக்குள் இருக்க வேண்டும்.
           முன்னுரிமைதாரர்: எஸ்.சி., அருந்ததியினர் பொது 31.1.2011 வரை, எஸ்.சி., பொது 3.9.2011 வரை, எம்.பி.சி.,பொது 3.9.2011, பி.சி.,பொது 3.9.2011, பி.சி.,பெண்கள் 15.10.2012 (ஆதரவற்ற விதவை), பி.சி.,முஸ்லிம் பொது 19.3.2013, பகிரங்க போட்டியாளர் பொது 28.9.1988 வரை.
            மாற்றுத்திறனாளிகள்: எஸ்.சி., பெண்கள் 13.9.2014, எஸ்.சி.,பொது 29.9.2014, எம்.பி.சி.,பெண்கள் 29.9.2014, எம்.பி.சி.,பொது 26.9.2014, பி.சி.,பெண்கள் 29.9.2014, பி.சி.,பொது 19.3.2014, பி.சி.,முஸ்லிம் பொது 25.8.2014, பகிரங்க போட்டியாளர் பொது 20.8.2013 வரை.
முன்னுரிமை இல்லாதவர்: எஸ்.டி. பொது 3.9.2011, எஸ்.சி.அருந்ததியினர் பொது 20.12.2010, எஸ்.சி.,பொது 24.4.2008, பி.சி.,பொது 23.2.2007, எம்.பி.சி.,பொது 21.8.2008, பி.சி.முஸ்லிம் பொது 17.8.2009, பகிரங்க போட்டியாளர் பொது 22.8.2008 வரை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தகுதியுள்ளவர்கள் தங்கள் கல்விச்சான்று, வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையுடன் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அக்.,30ம் தேதி, காலை 11 மணிக்கு நேரில் வந்து சரிபார்த்துக் கொள்ளலாம் என, உதவி இயக்குனர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

வினா - விடை புத்தகங்கள்

வினா - விடை புத்தகங்கள் மாவட்டங்களில் விற்பனை
         பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுக்கான வினா - விடை புத்தகங்கள், 32 மாவட்டங்களிலும் விற்பனை செய்ய, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

           பள்ளி கல்வித்துறையைச் சேர்ந்த, மாநில பெற்றோர் - ஆசிரியர் கழகம், பொதுத்தேர்வுக்கான வினா - விடை புத்தகங்களை, பாட ஆசிரியர் குழு மூலம் தயாரித்து, குறைந்த விலைக்கு, ஆண்டுதோறும் விற்பனை செய்கிறது. இந்த விற்பனை, சென்னையில் மட்டுமே நடந்து வருகிறது. இதனால், தென் மாவட்டங்களைச் சேர்ந்த பெற்றோரும், வினா - விடை புத்தகங்களை வாங்க, சென்னை வர வேண்டிய நிலை உள்ளது. இந்த சிரமத்தை தவிர்க்க, மாவட்டங்களில், புத்தகங்களை விற்பனை செய்ய வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், 32 மாவட்டங்களிலும், வினா - விடை புத்தகங்களை விற்பனை செய்ய, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
அவரது அறிவிப்பு:
பத்தாம் வகுப்பு வினா - விடை புத்தகங்கள், தமிழ் வழியில், 205 ரூபாய்க்கும் (ஒரு செட்), ஆங்கில வழியில், 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும்.
பிளஸ் 2 வினா - விடை புத்தகங்கள், 25 ரூபாயில் இருந்து, 95 ரூபாய் வரை, தனித்தனியே விற்பனை செய்யப்படும். நவ., 10ம் தேதி முதல், அனைத்து மாவட்டங்களிலும், குறிப்பிட்ட மையங்களில், இந்த புத்தகங்கள் விற்பனை செய்யப்படும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
சென்னையில், அரசு மேல்நிலைப் பள்ளி - அரும்பாக்கம், ஜெயகோபால் கரோடியோ மேல்நிலைப் பள்ளி - சைதாப்பேட்டை, இ.எல்.எம்., மேல்நிலைப் பள்ளி - புரசைவாக்கம்,
எம்.சி.சி., மேல்நிலைப் பள்ளி - சேத்துப் பட்டு, ஜெயகோபால் கரோடியோ மகளிர் மேல்நிலைப் பள்ளி - சூளைமேடு ஆகிய ஐந்து பள்ளிகளில், புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

வேலைவாய்ப்பு : ஆன்லைன் மூலமாக உங்கள் கல்வித்தகுதியை பதிவு செய்வது எப்படி?

வேலைவாய்ப்பு : ஆன்லைன் மூலமாக உங்கள் கல்வித்தகுதியை பதிவு செய்வது எப்படி?
          தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களும் கணினி மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டள்ளன. முதுகலை பட்டபடிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவுமுறை 2001ம் ஆண்டு முதல் கொண்டு வரப்பட்டாலும், தற்போதுதான் முழுமையான நடைமுறைக்கு வந்துள்ளது எனலாம்மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட பதிவுதாரர்களை இணைப்பதற்கு 'சுசி லினக்ஸ்' என்னும் புதிய ஆன்லைன் சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.
                  தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித்தகுதியை பதிவு செய்ய முடியும் என்ற நிலை மாறி, தற்போது அனைத்து பணிகளையும் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள முடியும். ஏற்கனவே வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணையதளத்தில் தங்களது பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து கொள்ள முடியும்.

புதிதாக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?

* புதிதாக ஆன்லைனில் பதிவு செய்ய குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை கண்டிப்பாக கையில் வைத்திருத்தல் வேண்டும்.

* முதலில் டபுள்யூடபுள்யூடபுள்யூ.டிஎன்வேலைவாய்ப்பு.ஜிஓவி.இன் (http://tnvelaivaaippu.gov.in/Empower/) என்ற இணையதள முகவரிக்கு சென்று கிளிக் கியர் பார் நியூ யூசர் ஐடி ரெஜிஸ்டிரேஷன் என்று இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும்.

* அதில் ஐ அக்ரீ என்று கிளிக் செய்தால் அடுத்து வரும் பக்கத்தில் பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர், ஈமெயில் முகவரி, யூசர்ஐடி என்ற இடத்தில் புதிதாக ஒரு ஐடி கொடுக்கவும்.

* பின்பு அப்பா பெயர், பிறந்த தேதி, குடும்ப அட்டை எண்ணையும், இமேஜ் கோடு என்ற இடத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கோடுஐ கொடுத்து சேவ் செய்தால் உங்களுக்கென்று ஒரு ஐடி கிரியேட் ஆகிவிடும்.
* அடுத்து வரும் பக்கத்தில் உங்களது பர்சனல் டீடெய்ல், கான்டாக்ட் டீடெய்ல், குவாலிபிகேசன் டீடெய்ல், டெக்னிக்கல் டீடெய்ல் ஆகியவற்றை பூர்த்தி செய்து சேவ் செய்தால் உங்களது ரெஜிஸ்டர் நெம்பர் கிரியேட் ஆகிவிடும்.

கவனிக்க 1:

குவாலிபிகேஷன் டீடெய்ல் பூர்த்தி செய்தவுடன் யேடு என்ற பட்டன் இருக்கும். அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும். அதில் கிளிக் செய்து சேவ் கொடுக்கவும். இதே போன்று டெக்னிக்கல் டீடெய்லும் செய்ய வேண்டும்.
கவனிக்க 2:

மேலே சொன்ன அனைத்தும் முடிவடைந்தவுடன் ஹோம் பகுதிக்கு சென்று பார்த்தால் பிரின்ட் ஐடி கார்டு என்று இருக்கும் அதை கிளிக் செய்து பிரின்ட் எடுத்து கொள்ளலாம்.
கவனிக்க 3:
ஏதேனும் தவறு செய்திருந்தால் ஹோம் பகுதியில் மாடிபை கான்டாக்ட் பகுதிக்கு சென்று மாற்றி கொள்ளலாம்.
கவனிக்க 4:
அப்டேட் ப்ரொபைலில் சென்று ரெனிவல் செய்து கொள்ளலாம்.
ரெனிவல் செய்வதற்கான விபரம்: உதாரணத்திற்கு, ரெஜிஸ்டர் நம்பர்: ஏஆர்டி2012 எம்00007502 (ரெஜிஸ்டர் நம்பர் இப்படித்தான் இருக்கும்)

      வேலைவாய்ப்பு அலுவலகத்தின் குறியீட்டு எண்: சியூடி-என்பது (வேலைவாய்ப்பு அலுவலகம் - கூடலூர்)
பதிவு செய்த ஆண்டு :2010

ஆண்/ பெண்: M/F

பதிவு எண்: 7802

          பதிவு எண் என்பது 8 இலக்க எண்ணாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் 4 இலக்க எண்ணாக இருந்தால் முன்னதாக 4 பூஜ்ஜியங்களை சேர்த்து கொள்ளவும்.
யூசர்ஐடி: ஏஆர்டி2012எம்00007502

பாஸ்வேர்டு: டிடி/எம்எம்/ஒய்ஒய்ஒய்

             கடவுச்சொல்லில் உங்களது பிறந்த தேதியை கொடுக்கவும். உங்களது ஐடி கார்டு இப்படித்தான் இருக்கும். அவ்வளவு தான் நண்பர்களே... இனி கால விரையமின்றி வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து பயனடையுங்கள்.

தலைமை ஆசிரியர் பணிக்கு பதவி உயர்வு கலந்தாய்வு

தலைமை ஆசிரியர் பணிக்கு பதவி உயர்வு கலந்தாய்வு 31-ந்தேதி நடக்கிறது
          பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
             2014-2015 கல்வி ஆண்டில் 100 அரசு மேல்நிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மேலும் சில அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாகக்கிடக்கின்றன. தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளுக்கும், தலைமை ஆசிரியர் காலியாக இருக்கும் மேல்நிலைப்பள்ளிகளுக்கும் தலைமை ஆசிரியர்களை நியமிப்பதற்கான கலந்தாய்வு 31-ந்தேதி நடக்கிறது.
              இதைத்தொடர்ந்து அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முது நிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.
தரம் உயர்த்தப்படும் 100 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு 31-ந்தேதி நடக்கிறது. இந்த கலந்தாய்வுகள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இணையதளம் மூலம் நடத்தப்படுகிறது.
இந்த தகவலை வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!