Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 9 November 2014

சிறந்த வகுப்பறை நடைமுறைகள்: ஆராய்ச்சி கட்டுரைக்கு அழைப்பு

சிறந்த வகுப்பறை நடைமுறைகள்: ஆராய்ச்சி கட்டுரைக்கு அழைப்பு

சிறந்த வகுப்பறைக்கான நடைமுறைகள் குறித்து ஆய்வு கட்டுரைகள் சமர்பிக்க ஆசிரியர்களுக்கு, மாநில கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
மாநில கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், 21-ம் நுாற்றாண்டில் சிறந்த வகுப்பறைக்கான நடைமுறைகளை கையாள்வது குறித்த கருத்தரங்கம் டிச.18, 19 ல் சென்னை பள்ளி கல்விஇயக்குனரகத்தில் நடக்க உள்ளது.

இதற்காக ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்க ஆசிரியர்களுக்கு அறிவிப்பு செய்துள்ளனர்.21-ம் நுாற்றாண்டில் சிறந்த வகுப்பறை நடைமுறை, ஆசிரியர்களின் திறன் மேம்பாடு, கற்பித்தலில் புதிய உத்திகள், பள்ளி மேம்பாட்டுக்கு தேவையான நடைமுறைகள், புதிய தொழில் நுட்பத்தில் உள்ளடங்கிய வகுப்பறை எனும் ஐந்து தலைப்புகளில் கட்டுரைகள் சமர்ப்பிக்க வேண்டும். அறிமுக கட்டுரையை நவ.15 க்குள் சென்னை மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்ப வேண்டும். இதில் தேர்வாகும் கல்வியாளர்கள் பட்டியல் நவ., 20 க்குள் வெளியாகும்.முழு அளவிலான கட்டுரையை நவ., 28 க்குள் அனுப்பவேண்டும்.

ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்து தேர்வாகும் ஆசிரியர்களுக்கு, சென்னை கருத்தரங்கில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதிக்க வேண்டுமா உங்கள் குழந்தைகள்!

சாதிக்க வேண்டுமா உங்கள் குழந்தைகள்!

உங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் பில்கேட்ஸ் போல, அம்பானிகளைப் போல சாதிக்க வேண்டுமென நினைக்கிறீர்கள். அதைச் செயல்படுத்த வேண்டுமானால் என்ன செய்வது? இளமை முதலே குழந்தை களுக்கு தரப்படும் பயிற்சியே எதிர் காலத்தில் அவர்களை ஜெயிக்க வைக்கும்.
சுவாமி சிவானந்தர் இது பற்றி சொல்லும் போது, “உங்கள் பாக்கெட்டில் எப்போதும் ஒரு குறிப்பு புத்தகத்தோடு ஒரு பென்சிலையும் வைத்திருங்கள். சுறுசுறுப்பான நபர்களும் அதிசய மனிதராகத் திகழ வேண்டும் என்ற எண்ணமுடையவர்களும், நடந்து கொண்டிருந்தாலும் சரி, வேறு ஏதேனும் செய்து கொண்டிருந்தாலும் சரி... ஒரு உயரியஎண்ணம் தோன்றிய அந்த நிமிடத்திலேயே அதே இடத்தில் குறிப்பெடுத்துக்கொள்ள வேண்டும். அதையும் சுருக்கெழுத்தில் அல்லது அவரவருக்கு புரியும் வகையில் குறித்துக் கொள்ள வேண்டும். பின்னர், நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்த குறிப்புகளை உங்கள் நிரந்தர டைரியில் விரித்து எழுதிக் கொள்ள வேண்டும். இதுவே வெற்றியின் ரகசியம். வெறும் ஏட்டுப்படிப்பு மனிதனுக்கு உதவாது,” என்றார்.உங்கள் ஊருக்குள்ளேயே பல விஷயங்களைப் பற்றி உங்களுக்கு தெரியாது. உதாரணமாக, உங்கள் ஊரின் மக்கள் தொகை என்னவென்று கேட்டால், எத்தனை பேர் உருப்படியாக பதில்சொல்வார்கள்? எனவே வெளியில் செல்லும் போது, உங்கள் கண், காதுகளை கூர்மையாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து அலுவலகங்களில்உள்ள போர்டில் இந்த விபரம் இருக்கும். இப்படி சிறிய விஷயங்கள் என்று நம்மால் ஒதுக்கப்பட்டவற்றைக் கூட தெரிந்து கொண்டால் தான், பெரிய விஷயங்களை நம்மால் சாதிக்க முடியும்.அதுபோல், அறிஞர்கள் பேசும் கூட்டத்திற்கு செல்லும் போது அவர்கள் சொல்வதைக் கருத்துடன் கேளுங்கள். சிரத்தை எனப்படும் கவனமும் உங்களை உயர்த்தும் காரணிகளில் ஒன்று என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஒருவருடன் பேசும்போது, அவரிடமிருந்து உருப்படியான தகவல் ஒன்று கிடைக்கிறது என்றால் உடனே உங்கள் குறிப்பு நோட்டில் எழுதி வைத்து விடுங்கள். குறித்தவைகளை வாரம் ஒருமுறையாவது திருப்பிப் பாருங்கள்.இன்னொரு முக்கிய விஷயம். யாரொருவர் அதிகாலையில் சோம்பலின்றி எழப்பழகுகிறாரோ அவரும் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்.உங்கள் காலை நேரத்தை எப்படி திட்டமிட வேண்டும் தெரியுமா!தினமும் காலை 4.30 மணிக்கு எழுந்து, 20 நிமிடங்களுக்குள் காலைக்கடன் முடித்து, சிறிது நேரம் கண்மூடி தியானம் செய்யுங்கள். பின் நீராடி பூஜை செய்யுங்கள். 6.30 - 7.30 அன்றைய செய்தித்தாள்களை புரட்டுங்கள். பிறகு, உங்கள் அன்றாடப்பணிகளைக் கவனிக்கத் தொடங்கி விடுங்கள்.இது எப்படி சாத்தியம் என்பதற்கும் விடை இருக்கிறது.

இரவில் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் உறங்கச் சென்று விட வேண்டும்.பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளுக்கு இந்த வழக்கங்களை கற்றுக் கொடுங்கள். அதற்கு முன், நீங்கள் இந்த பழக்கங்களைக் கொண்டிருக்க வேண்டுமே! நீங்களும் துவங்குங்கள் இதை!

ரீபைண்ட் ஆயில்( Refined Oil) - மெல்லக்கொல்லும் நஞ்சு ( Slow Poison )

ரீபைண்ட் ஆயில்( Refined Oil) - மெல்லக்கொல்லும் நஞ்சு ( Slow Poison )
          உங்கள் உயிருக்கு முக்கிய செய்தியுடன் உங்கள் மருத்துவ நண்பன் Dr.சுரேஷ் குமார், ரீபைண்ட் ஆயில்( Refined Oil) - மெல்லக்கொல்லும் நஞ்சு ( Slow Poison )ரீபைண்ட் ஆயில் பயன்படுத்தாதிங்க! நோயை விலை கொடுத்து வாங்காதிங்க !
        நாமெல்லாம் நினைக்கிறது போல ரீபைண்ட் ஆயில்னா சுத்திகரிக்க பட்ட எண்ணெய் மட்டும் இல்லங்க சுத்தமா உயிர் சத்துகளே இல்லாத எண்ணெய்.
ரீபைண்ட் ஆயில் எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா?

மில்லில் இருந்து பெறப்பட்ட எண்ணெய்யில் காஸ்டிக் சோடாவை சேர்த்து கொதிக்க வைத்து முதலில் அதிலிருந்து சோப்பு எடுக்கிறார்கள்.

பிறகு அதிகம் இருக்கும் காஸ்டிக் அமிலத்தின் மூலம் அகற்றி நீயூட்ரலைஸ் செய்து அதில் இருக்கும் வாசனையை அறவே நீக்கிவிடுகிறார்கள்.

பிறகு அதை சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்சன் மூலம் பிரித்து எடுக்கிறார்கள்.
இதை எல்லாம் நேரில் பார்த்தால் நம்மில் பலருக்கு சாப்பிடவே பிடிக்காது.

திரைமறைவில் நடக்கும் இந்த வேலைகள் எல்லாம் மக்களுக்கு தெரியாத காரணத்தால் " சுத்தம் செய்யப்பட்ட எண்ணெய் " என்று நினைத்து ரீஃபைண்ட் ஆயிலை உபயோகித்து கொண்டு இருக்கிறார்கள்.

உண்மையில் ரீஃபைண்ட் ஆயில் என்பது அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம்.

சமையலுக்கு இதை பயன்படுத்தும் போது சூடு தாங்காமல் உருக்குலைந்து
உடல் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும் ஒரு ரசாயன கலவையாக மாறுகிறது.

எண்ணெய் விஷமாக மாறிவிட்டதால் இன்று மக்கள் பலவிதமான் நோய்களுக்கு உள்ளாகி சிகிச்சைகள் எடுத்து கொள்வதற்க்காக பெரிய தொகைகளை செலவளித்து கொண்டு இருக்கிறார்கள்.

நமக்கு வரும் நோய்களுக்கு எல்லாம் சுற்றுசூழல் மாசுப்பட்டு இருப்பது தான் காரணம் என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம்.

கடந்த 60-70 ஆண்டுகளில் நோய்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது. இதற்க்கான காரணங்களில் முக்கியமான இடத்தை பிடித்து இருப்பது ரீஃபைண்ட் ஆயில்.

யோசிச்சு பாருங்க இவ்வளவு தீமையான ஒரு பொருளை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தி, நம் ஆரோகியத்தை நாமே விலை கொடுத்து பாழ்படுத்தி கொள்கிறோம்.

அப்போ என்ன எண்ணெய் தான் வாங்குறது?
ரீபைண்ட் செய்யாத நல்லெண்ணெய், கடலை எண்ணெய்,தேங்காய் எண்ணெய் வாங்கி பயன்படுத்தலாம். இதை தானே நம்ம தாத்தா பாட்டி பயன்படுத்தினாங்க.

ஒரு வேலை நீங்க இப்படி கேட்டா : அய்யய்யோ அதுல நிறைய கொழுப்பு இருக்குனு சொல்லு வாங்களே! அது மட்டும் இல்லாம கொழுப்பு உள்ள எண்ணெய் பயன்படுத்தினா ஹார்ட் அட்டேக், B.P. வரும், ரொம்ப வெய்ட் போடும்னு சொல்லு வாங்களே!

நான் : சரிங்க ரீபைண்ட் ஆயில் தானே இப்போ பெரும்பாலும் பயன்படுத்துறோம். யோசிச்சு பாருங்க உங்க ஊர்ல ஹார்ட் வர்றவங்களோட எண்ணிக்கை குறைஞ்சு இருக்கா இல்ல கூடி இருக்கா. என்ன கொடுமைனா முன்னயாவது 60, 70 வயசு ஆனவங்களுக்கு பெரும்பாலும் ஹார்ட் அட்டாக் வந்தது. இப்போ தெல்லாம் 25,30,35 வயசு உள்ளவங்களுக்கே ஹார்ட் அட்டக் வருது. அப்போ ரீபைண்ட் ஆயில் உபயோகிச்ச பிறகு நோயின் அளவு ஜாஸ்தி தானே ஆகியிருக்கு?..

ஒரு வேலை நீங்க இப்படி கேட்டா : சரி ரைட்டு வேற எண்ணெய் வாங்கலாம்னா அதாவது,எள் எண்ணெய் (நல்லெண்ணெய்), கடலை எண்ணெய்,தேங்காய் எண்ணெய் வாங்கலாம்னு பார்த்தா விலை பட்ஜெட்ல அடங்காது போல இருக்கே!.

நான்: ஒரு லிட்டர் கடலை எண்ணெய் 170 ரூபாய், ஒரு லிட்டர் ரீபைண்ட் ஆயில் 85 ரூபாய், அப்போ ரீபைண்ட் ஆயில் வாங்குனா உங்களுக்கு பாதி பணம் அதாவது 85 ருபாய் மிச்சம். அந்த பணத்தை சேர்த்து வச்சு என்னா செய்விங்க? நான் சொல்லட்டுமா!!! இப்படி மிச்சம் பிடிச்ச பணத்தை பேங்குல போட்டு வச்சு வட்டியும் முதலுமா டாக்டர் கிட்ட குடுபிங்க..

ஆரோகியத்திர்க்கு கேடு விளைவிக்கும் பொருளை குறைந்த விலையில் கிடைக்குதேன்னு வாங்கி உபயோக படுத்திட்டு பின்னால் நோய் வந்த பிறகு மிச்சம் பிடிச்ச பணத்தை டாக்டர் கிட்ட குடுத்துட்டு, உங்களையும் கஷ்ட படித்திக்கிட்டு இருக்கறதுக்கு, நல்ல தரமான பொருளை வாங்கி பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழலாமே!!! ஆரோக்கியம் தானே மிக பெரிய செல்வம்..
எண்ணெய் விலையை நாம் நினைத்தால் குறைக்கலாம்.

அது எப்படி ?
நாம் எந்த பொருளை விரும்புகிறோமோ அதை வியாபாரிகள் தயாரித்து கொடுக்க தயாராக இருக்கிறார்கள். எதை அதிகமாக வாங்குகிறோமோ அதன் தயாரிப்பும் அதிகரிக்கும். தயாரிப்பு அதிகரித்தால் விலை குறையும். தரமான பொருளை அதிகாமாக வாங்கினால் அதன் தயாரிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலம் தரமான பொருளை நியாயமான விலையில் வாங்க முடியும். மட்டமான பொருளை விற்கிறார்களே என்று வியாபாரிகளை குறை சொல்லி பயனில்லை. நாம் எதை கேட்கிறோமோ,எதை அதிகம் வாங்குகிறோமோ அதை தானே அவர்கள் விற்ப்பார்கள்.

நீங்கள் விஷம் குடுங்கள் என்று கேட்டால் விஷம் தான் கொடுப்பார்கள்!. அதை விடுத்து அய்யய்யோ விஷத்தை ஏன் வாங்குகிறீர்கள் அதை சாப்பிட்டால் இறந்து விடுவீர்கள் என்று விளக்கம் சொல்லி கொண்டு இருக்க மாட்டார்கள். விஷம் சாபிட்டால் இறந்து விடுவீர்கள் என்று தெரிந்து கொள்ளவேண்டியது உங்கள் பொறுப்பு.

மேலும் அவர்கள் எதை தயாரிகிறார்களோ, அதை ஆஹா ஓஹோ என்று தான் விளம்பரபடுத்துவார்கள். அது அவர்கள் வியாபாரயுக்தி.ரீபைண்ட் ஆயில் தயாரிப்பாளர்கள் ரீபைண்ட் ஆயில், பயன்படுத்தினால் கேன்சர் வராது என்று சொல்லி தான் விற்பார்கள். அனால் அது உண்மையா பொய்யா என்று நாம் யோசித்து வாங்க வேண்டும்.

நாளைக்கே அந்த நிறுவனம் ரீபைண்ட் ஆயில் தயாரிப்பை நிறுத்திவிட்டு எள்ளெண்ணெய் விற்றால் அப்போது சொல்லுவார்கள் ரீபைண்ட் ஆயில் பயன்படுத்தினால் கேன்சர் வரும் என்று!!!!

நம் முன்னோர்கள் அந்த காலத்தில் செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெயையும்.,நல்லெண்ணையையும் அப்படியே உபயோகித்தனர்.
இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும்., நிறமாகவும்., மணமாகவும் இருக்கும்.இதற்கு காரணம் அந்த எண்ணெய்களில் உள்ள ஊட்டசத்துக்கள் தான்.

இதனால் தான் உடல் ஆரோக்கியத்திற்க்கு தேவையான புரோட்டீன்கள், வைட்டமின்கள்,தாதுப்பொருள்கள், நார்ச்சத்துக்கள் , குளோரோபில்,
கால்சியம், மெக்னீசியம்,காப்பர், இரும்பு, பாஸ்பரஸ்,வைட்டமின் " இ " போன்றவை நமக்கு கிடைத்து வந்தன..

இந்த தாதுப்பொருட்கள் மூலம் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருள்கள் மூட்டுகளுக்கு சென்று., எலும்பு தேய்மானத்தை தடுத்தன.

நம் முன்னோர்கள் உடற்பயிற்சி செய்து முடித்ததும் ஒரு கிண்ணம் நிறைய
நல்லெண்ணெய் குடிக்கும் வழக்கத்தையும் வைத்து இருந்தனர்.

இதை உணவுக்கு மட்டுமின்றி. குளியலுக்கும், மசாஜ் செய்வதற்க்கும் உபயோகித்த காரணத்தால் அவர்கள் 80 வயது வரை மூட்டு வலியின்றி
கால்நடையாகவே சென்று வந்தனர்.

அதனால் தான் எல்லாம் அறிந்த நம் முன்னோர்கள் இதை எள் எண்ணெய் என்று சொல்வதற்கு பதிலாக " நல்ல எண்ணெய் " என்று சொன்னார்கள்.
வெளிநாட்டில் கூட இதை " Queen of Oil " என்று அழைக்கிறர்கள்.

ஆனால் இன்று நாம் உபயோகிக்கும் ரீஃபைண்ட் ஆயிலில் உயிர்சத்துக்கள்
எதுவுமே இல்லை என்பது அதிர்ச்சியான உண்மை.

புதுசா புதுசா எதை எதையோ கண்டுபிடுச்சு அதை குறைந்த விலையில் விற்று நம்மை சோதனை எலிகளை போல் பயன்படுத்துகிறார்கள். இதன் முடிவு பத்து வருஷம் கழித்து தான் தெரியும்.அப்போ தான் சொல்வார்கள் இதை பயன்படுத்தியதால் தான் இப்படி என்று! அனால் அப்போது தெரிந்து என்ன பயன்.யோசிங்க நீங்க சோதனை மனிதராக இருக்க ஆசை படுரிங்களா? இல்லை ஏற்கனவே நம்ம முன்னோர்கள் காலம் காலமாக உபயோக படுத்திய உணவு முறையை பின்பற்றி அவர்கள் போலவே 80, 90 வயது வரை ஆரோக்கியமாக வாழ ஆசை படுறிங்களா?.அட்லீஸ்ட் வாழும் காலம் வரை நோயில்லாமல் வாழ வேண்டும் என்பது தானே அனைவரது விருப்பமும்.

இனிமேலும் நாம் ஏமாறினால் அது நம் வருங்காலத்தையே கேள்வி குறியாக்கி விடும். எதை வாங்குகிறோம் என்பதில் தெளிவாக இருப்போம். ஏனெனில் வரும் காலம் இன்று நாம் எடுக்கும் முடிவில் தான் இருக்கிறது. மிச்சம் பிடிக்கிறேன் பேர்வழி என்று நம் குழந்தைகளுக்கு மெல்ல சாகும் விசத்தை அளிக்காதீர்கள்!

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைகிறது

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைகிறது
           சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைக்கப்பட வாய்ப்புள்ளது.

             எண்ணெய் நிறுவனங்களுக்கு அதிகாரம்பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை தொடர்ந்து, டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரமும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, 15 நாட்களுக்கு ஒருமுறை, பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால், கடந்த 31-ந் தேதி நள்ளிரவு, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. கச்சா எண்ணெய்அந்த விலை குறைப்புக்கு பிறகு, கடந்த 7 நாட்களில் கச்சா எண்ணெய் விலை மேலும் சரிந்து வருகிறது. கடந்த 31-ந்தேதி, கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 5 ஆயிரத்து 209 ரூபாய் 96 காசுகளாக இருந்தது. அது, தற்போது பீப்பாய்க்கு 4 ஆயிரத்து 939 ரூபாய் 44 காசுகளாக சரிந்துள்ளது. அதாவது, 5.19 சதவீதம் விலை சரிந்துள்ளது.விலை குறையும்கச்சா எண்ணெய் விலையை பொறுத்தே, பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கச்சா எண்ணெய் விலை மீண்டும் சரிந்துள்ளதால், அதற்கேற்ப பெட்ரோல், டீசல் விலையும் மீண்டும் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதுதொடர்பான விலை குறைப்பு அறிவிப்பை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 15-ந்தேதி வாக்கில் வெளியிடும் என்று கருதப்படுகிறது.

பட்டதாரிகளுக்கு உளவுத்துறையில் அதிகாரி பணி.

பட்டதாரிகளுக்கு உளவுத்துறையில் அதிகாரி பணி.

           மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உளவுத்துறையில் உதவி மத்திய புலனாய்வு அலுவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant Central Intelligence Officer, Grade-II/Executive

பணிப்பிரிவு: General Central Service Group "C", Non-Gazetted/Non-Ministerial

காலியிடங்கள்: 750

வயதுவரம்பு: 09.11.2014 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவு பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, நன்னடத்தை ஆய்வு, மருத்துவ சோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் செய்யப்படுவார்கள்.

தேர்வு மையங்கள்: சென்னை, பெங்களூர், திருவனந்தபுரம், ஹைதராபாத் உள்பட நாட்டில் 33 மையங்களில் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100.

விண்ணப்பிக்கும் முறை: www.mha.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.11.2014 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mha.nic.in என்ற ிணையதளத்தை பார்க்கவும்

குரூப்-4 தேர்வு; 6 லட்சம் பேர் விண்ணப்பம்: டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்

குரூப்-4 தேர்வு; 6 லட்சம் பேர் விண்ணப்பம்: டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்
      தமிழகத்தில் குருப் 4 தேர்வு எழுத இதுவரை 6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

              தமிழகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் குருப் 2 தேர்வு நடைபெற்று வருகிறது. 1064 பதவிகளுக்கு நடைபெறும் தேர்வில் 11497 பேர் 2 கட்ட ஆன்லைன் தேர்வு மற்றும் விரிவான எழுத்து தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த தேர்வுகள் நேற்று நடைபெற்றது. பல்லாவரத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆன்லைன் கணினி தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலை வர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டார். தேர்வாணைய தேர்வு கட்டு பாட்டு அலுவலர் வி.ஷோபனா மற்றும் அதிகாரிகள் உடன் வந்தனர்.

              பின்னர் பாலசுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறுகையில்: குருப் 2 இரண்டாம் கட்ட எழுத்து தேர்வு நடைபெறுகிறது. 1064 பணியிடங்களுக்கு 11,497 பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழகத்தில் 8 மாவட்டங்களில் 44 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. சென்னையில் 12 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.

காலையில் ஆன்லைன் கணினி மூலம் தேர்வுகளும், மாலையில் விரிவான எழுத்து தேர்வும் நடைபெறும். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் விகிதாச்சார அடிப்படையில் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதன் பிறகு தேர்ச்சி பெற்றவர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்படும். குரூப் 2 பிரதான தேர்வு கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படுவது போல விரைவில் பிற தேர்வுகளும் இதே முறையில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குருப் 4 தேர்வுகளுக்கு இதுவரை 6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். விஏஒ தேர்வு முடிவு: தமிழகத்தில் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ) தேர்வு முடிவுகள் இன்னும் 4 வாரங்களில் வெளிவரும். அதில், தேர்வு செய்யப்பட்டவர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்படும்.

பள்ளிக்கல்வி - EMIS

பள்ளிக்கல்வி - EMIS - மாணவ/மாணவிகளின் எடை, உயரம், அலைபேசி எண் உள்ளிட்ட தகவல்களை சேகரித்து தயார்நிலையில் வைக்க இயக்குனர் உத்தரவு

https://docs.google.com/file/d/0ByAIJo2ODgwFWldkdGJxbDh0RFk/edit?pli=1

சல்யூட் யுவா இந்தியா !

சல்யூட் யுவா இந்தியா !
பழங்குடி இனத்தைச் சேர்ந்த 18 சுட்டிகள் சேர்ந்து தேசத்தையே திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறார்கள்.
ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற 14 வயதினருக்கு உட்பட்ட கால்பந்துப் போட்டியில், ஜார்கண்ட் மாநிலத்தின் ‘யுவா இந்தியா’ என்னும் இந்த சுட்டிப் பெண்கள் பட்டாளம் பங்கேற்றது. 36 சர்வதேச அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில், மூன்றாம் இடம் பிடித்து, வெண்கலம் வென்றிருக்கிறார்கள்.

ஃப்ரான்ஸ் காஸ்லர் (Franz Gastler) என்ற 30 வயது அமெரிக்க இளைஞர் ஆரம்பித்ததுதான் இந்த யுவா இந்தியா அமைப்பு. அமெரிக்காவின் மின்னசோட்டா (cc) மாகாணத்தைச் சேர்ந்தவர் இவர். தற்காப்புக்கலைகள் மற்றும் கால்பந்து விளையாட்டில் மிகத் தேர்ந்தவர். இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பில் ஆலோசகராகப் பணியாற்றிய இவர், சமூக ஆர்வலராக 2008-ல் இந்தியாவுக்கு வந்தார்.

ஜார்கண்ட் மாநிலத்துக்கு வந்தவர், பின்தங்கிய கிராம மக்களை மேம்படுத்த எண்ணம் கொண்டார். மண் குடிசையில் தங்கிக்கொண்டு, கிராமப்புறப் பள்ளிகளுக்குப் பயணம் செய்து, ஆங்கிலம் கற்பித்தார்.குறிப்பாக பெண் குழந்தைகளின் கல்வி, விளையாட்டு ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்தினார். கால்பந்து விளையாட்டுக்காக, குழந்தைகளைச் சேர்த்தபோது, ஆரம்பத்தில் பெற்றோர்கள் ஆர்வம் காட்டவில்லை. சின்னச்சின்ன போட்டிகள் நடத்தி, பரிசுகள் கொடுத்து ஊக்குவித்ததும், பெற்றோர்கள் மனம் மாறி ஆர்வம்கொண்டனர். இப்போது, 650 பெண்கள் கால்பந்துப் பயிற்சியில் இருக்கின்றனர்.

இந்த அற்புத மனிதர் உருவாக்கிய 14 வயதுக்கு உட்பட்ட யுவா அணிதான் ஸ்பெயினுக்குச் சென்றது. அரசு முறையான நிதி உதவி அளிக்கவில்லை. கேஸ்ட்லரின் நண்பர்கள், தன்னார்வலர்கள் உதவியுடன் நிதி திரட்டினார்கள். ஸ்பெயினுக்குச் செல்ல, பாஸ்போர்ட் வாங்கக்கூட போராட்டம். பழங்குடியினக் குழந்தைகள் என்பதால், முறையான சான்றிதழ்கள் இல்லை.

காவல்துறை அதிகாரி ஒருவரின் துணையால், சான்றிதழ்களைப் பெற்றார்கள். இந்தப் பழங்குடியினப் பெண்கள்தான் மூன்றாம் பரிசைத் தட்டி வந்திருக்கிறார்கள். 14 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கால்பந்துக் கூட்டமைப்புக் கோப்பை போட்டியில் இந்திய அணி வென்றதில், யுவா இந்தியாவைச் சேர்ந்த புஷ்பா, முக்கியக் காரணமாக இருந்தார். நீதா குமாரியும் மனிஷா திர்க்கியும், இலங்கையில் நடைபெற்ற கால்பந்துப் போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்று பெருமை சேர்த்தனர்.

ஆனால், இந்திய கால்பந்துக் கூட்டமைப்புத் தலைவர் பிரபுல்ல படேல், ‘ஸ்பெயினில் நடைபெற்ற கால்பந்துப் போட்டி, இந்திய கால்பந்து கூட்டமைப்பின் அங்கீகாரம் பெற்ற போட்டி அல்ல’ என்று சொல்லி இருந்தாலும் அதைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல், மத்திய அரசுக்கு மனுவை அனுப்பியது யுவா அமைப்பு. மத்திய அரசு, இவர்கள் வெற்றியைப் பரிசீலனை செய்து, ராஞ்சியைச் சுற்றி மூன்று இடங்களில் விளையாட களம் அமைத்துக்கொடுக்க முடிவெடுத்திருக்கிறது.

‘யுவா இந்தியச் சுட்டிகளைப் போல நாடெங்கிலும் உள்ள திறமையான குழந்தைகளைக் கண்டறிந்து ஊக்குவித்தால், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டில் இந்தியாவும் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தும்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!