Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 10 November 2014

'இளம் விஞ்ஞானி' படிப்புக்கு இப்போதே தேர்வு: சாதித்தார் வடுகபட்டி பள்ளி மாணவர்

'இளம் விஞ்ஞானி' படிப்புக்கு இப்போதே தேர்வு: சாதித்தார் வடுகபட்டி பள்ளி மாணவர்
ஒட்டடை அகற்றும் இயந்திரம், நடைமேடை மின்சார உற்பத்தி கருவி, பிளாஸ்டிக் வீடு... என புதிய கண்டுபிடிப்புகளை, பெரியகுளம் அருகே வடுகபட்டி மாணவன் யோகேஷ், 14, உருவாக்கியுள்ளார். இந்திய அறிவியல் ஆராய்ச்சிக்கழகத்தில் 'இளம் விஞ்ஞானி' ஆராய்ச்சி படிப்புக்கு தேர்வாகியுள்ளார்.
தேனி மாவட்டம் வடுகபட்டி வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன்; சுமை துாக்கும் தொழிலாளி. மனைவி சுப்புலட்சுமி வீட்டு வேலைகளை செய்கிறார். இவர்களது மகன் யோகேஷ், வடுகபட்டி வேளாளர் நடுநிலைப்பள்ளியில் ௮ம் வகுப்பு வரை படித்து, தற்போது அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார்.

கண்ணீர் கொட்டியது:

இரண்டு ஆண்டுகளுக்கு முன், பத்து வீட்டில் பாத்திரம் தேய்த்து, பத்து விரல்களும் காய்ப்பு பிடித்து பிள்ளைகள் படிப்பதற்காக உழைத்துக்கொண்டிருந்த தாய் சுப்புலட்சுமி போர்வைக்குள் முடங்கி கிடந்தார். கண்கள் கசிந்த தாயை பார்த்த யோகேசுக்கு கண்ணீர் கொட்டியது.
''வீட்டில் ஒட்டடை அடிக்கும் போது துாசு கண்ணில் விழுந்தது; துாசு எடுத்த பிறகும் கண் உறுத்தலாக இருக்கிறது,'' என சுப்புலட்சுமி கூறினார். சிகிச்சை அளித்தபோதும் ஒரு மாதம் வரை சுப்புலட்சுமி கண்வலியால் அவதிப்பட்டார்.தானியங்கி இயந்திரம் இதன்மூலம் 'தானியங்கி ஒட்டடை இயந்திரம்' தயாரிப்பதற்கான 'பொறி' யோகேசுக்கு தட்டியது. அறிவியல் ஆசிரியர் லட்சுமிநாராயணனிடம் இதை தெரிவித்த போது பாராட்டி ஊக்குவித்தார். எட்டாம் வகுப்பு படிக்கும் போது, சிந்தனை செயல்வடிவம் பெற்றது.பயன்படுத்திய பொருட்கள்: ஒரு புற உருளை கொண்ட சிறிய அளவிலான மின்மோட்டார், 10 அடி பி.வி.சி., குழாய், பழைய பிளாஸ்டிக் கூடை, 5 மீட்டர் நாடா, 15 வாட்ஸ் பேட்டரி, நுால்கண்டு ரோலர், பிளாஸ்டிக் நார் கொண்டு இதை தயாரித்தார். இதற்கான செலவு 1500 ரூபாயை வேளாளர் பள்ளி நிர்வாகம் ஏற்றுக்கொண்டது.மீண்டும் ஒரு முயற்சி இது தவிர, நடந்தால் மின்சாரம் உற்பத்தியாகும் 'நடை மேடை மின்சார கருவி'யையும் தயாரித்துள்ளார். இதை தயாரிக்க 1500 ரூபாய் செலவாகும். நடக்கும் அழுத்தத்தைக் கொண்டு 'பீசோ எலக்ட்ரிக்' என்ற விளைவின் மூலம் இதில் மின்சாரம் கிடைக்கிறது.

பிளாஸ்டிக் வீடு:

மேற்கூரையில் வேங்கைமரம், நாட்டுக் கருவேலமரம், முருங்கை மரம் ஆகியவற்றின் பிசினை மணலுடன் கலந்து 'பிளாஸ்டிக் வீடு' மாதிரியையும் உருவாக்கி உள்ளார். இந்த வீட்டில் வெப்பம் தாக்காது.தங்கப்பதக்கம்: சில ஆண்டுகளுக்கு முன் மாவட்ட 'இன்ஸ்பயர் விருது' அறிவியல் கண்காட்சி போட்டி தேனியில் நடந்தது. 183 மாணவவர்கள் கலந்து கொண்டனர். இதில், யோகேஷ் முதலிடம் பெற்றார்.திருச்சியில் நடந்த மாநில போட்டியில் 830 பள்ளிகள் கலந்து கொண்டன. அதிலும் யோகேஷ் முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். டில்லியில் நடந்த தேசிய போட்டியில் சிறப்பு பரிசு பெற்றார்.''ஊக்கம் கொடுத்த ஆசிரியர் லட்சுமிநாராயணன், தலைமை ஆசிரியர் பரமகுருசாமி, உதவி ஆசிரியர் சக்திவேலுக்கு என்றென்றும் கடமைப் பட்டுள்ளேன்,'' என யோகேஷ் தெரிவித்தார்.இளம் விஞ்ஞானி யோகேஷ் அறிவியல் பட்டப்படிப்பு (இளங்கலை, முதுகலை) படிக்கும் போது ஆண்டுக்கு 80 ஆயிரம் ரூபாய் வீதம் 5 ஆண்டுகளுக்கு உதவித் தொகையை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. முதுகலை முடித்தவுடன், இந்திய அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தில் 'இளம் விஞ்ஞானி' ஆராய்ச்சி படிப்புக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று முதல் மாதிரி வினாப் புத்தகங்கள்

10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று முதல் மாதிரி வினாப் புத்தகங்கள்

10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான மாதிரி வினாப் புத்தகங்கள் திங்கள்கிழமை (நவ.10) முதல் அந்தந்த மாவட்டங்களில் விநியோகிக்கப்பட உள்ளன.

இதற்காக மொத்தம் 7 லட்சத்துக்கும் அதிகமான மாதிரி வினாப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், வினா வங்கி, மாதிரி வினா ஏடுகள், தீர்வுப் புத்தகங்கள் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

நிகழாண்டும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வினா வங்கி, மாதிரி வினாப் புத்தகங்கள், தீர்வுப் புத்தகங்கள் தமிழ் வழி, ஆங்கில வழியில் ஒவ்வொரு பாட வரிசைக்கும் ரூ.25 முதல் ரூ.95 வரையில் விற்பனை செய்யப்படும்.

10-ஆம் வகுப்புக்கு 3 புத்தகங்களைக் கொண்ட ஒரு தொகுதியின் விலை ஆங்கில வழிப் புத்தகங்கள் ரூ.200-க்கும், தமிழ் வழி புத்தகங்கள் ரூ.205-க்கும் விற்பனை செய்யப்பட உள்ளன.

விற்பனை மையங்களின் விவரம்

1.சென்னை - அரசு மேல்நிலைப் பள்ளி, எம்.எம்.டி.ஏ. காலனி, அரும்பாக்கம், ஜெய்கோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை, இ.எல்.எம். ஃபேப்ரிஷியஸ் மேல்நிலைப் பள்ளி, புரசைவாக்கம், எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளி, சேத்துப்பட்டு, ஜெய்கோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப் பள்ளி, சூளைமேடு.

2. காஞ்சிபுரம் - அரசு மேல்நிலைப் பள்ளி, பீர்க்கங்கரணை, சென்னை-34.

3. திருவள்ளூர் - ஆர்.எம். ஜெயின் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்.

அக்னி - 2 ஏவுகணை சோதனை வெற்றி

அக்னி - 2 ஏவுகணை சோதனை வெற்றி

பாலாசூர்:அணு ஆயுதங்களை சுமந்து சென்று இலக்கை தாக்க கூடிய, அக்னி - 2 ஏவுகணை சோதனை, நேற்று வெற்றிகரமாக நடந்தது.

ஒடிசா மாநிலம் பாலாசூரில், நடமாடும் ஏவுதளத்தில் இருந்து, அக்னி - 2 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நேற்று நடத்தப்பட்டது. இதுகுறித்து, ராணுவ அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:அக்னி ஏவுகணைகள், தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்டு, அவ்வப்போது சோதித்து பார்க்கப்படுகின்றன. இதன்படி, அக்னி - 2 ஏவுகணை, கடந்தாண்டு ஏப்ரலில் சோதித்து பார்க்கப்பட்டது.தற்போது, இதில் சில நவீன தொழில்நுட்ப வசதிகள் சேர்க்கப்பட்டு மேம்படுத்தப் பட்டுள்ளன. குறிப்பாக, ஏவுகணையை துல்லியமாக இலக்கை நோக்கி செலுத்தக் கூடிய வகையிலான தொழில்நுட்ப வசதி புகுத்தப்பட்டுள்ளது.

மேலும், அதிநவீன ரேடார்கள் மூலம் இயக்கும் வகையில், இந்த ஏவுகணையின் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.ராணுவமும், பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு துறையும் சேர்ந்து இந்த ஏவுகணையை உருவாக்கிஉள்ளன. இந்த ஏவுகணை, 2,000 கி.மீ., துாரம் வரை சென்று தாக்க கூடியது; 1,000 கிலோ எடையுள்ள வெடி பொருட்களை சுமந்து செல்லும் திறன் உடையது.இவ்வாறு, ராணுவ அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!