Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 18 November 2014

முட்டாள்’

ரெண்டு முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க.

ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள்’ னு.

மறுத்த அடுத்தவர், ‘வாய்ப்பே இல்ல, என் வேலைக்காரனப் பத்தி தெரியாம சொல்றீங்க’ ன்னாரு.

சரி சோதிச்சு பாத்துடுவோம்னு சொல்லி, மொத ஆளு தன்னோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.

பத்து பைசாவை கொடுத்து ‘கடைக்கு போய், நல்லா பாத்து இன்னோவா கார் ஒன்னு வாங்கிட்டு வா’ ன்னாரு.

‘சரிங்க அய்யா’ ன்னு பவ்வியமா வாங்கிட்டு போயிட்டான்.

‘பாத்திங்களா, என் ஆளு எப்படி, என்ன வாங்க சொன்னேன்னும் தெரியாது, பத்து பைசா செல்லுமான்னும் தெரியாது, ஆனா சொன்ன உடனே வாங்க கிளம்பிட்டான் பாருங்க’ ன்னாரு.

‘கொஞ்சம் பொறுங்க’ ன்னு சொல்லி அடுத்தவர் அவரோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.

அவன் இன்னும் மொத ஆளவிட அதிகமான பவ்யமா வந்தான்.
‘சொல்லுங்கைய்யா என்ன செய்யனும்’ னான்.

‘அவசரமான விஷயம், வீட்டுல போயி நான் இருக்கிறேனான்னு பாத்துட்டு வா’ ன்னாரு.

‘உடனே பாத்துட்டு வர்றேன்’ னு அவனும் கிளம்பிட,

‘பாத்திங்களா, என் ஆள’ ன்னாரு. மொத ஆளு ‘எப்பா உன் ஆளுதான் அருமை ’ னு தோல்விய ஒத்துகிட்டாரு.

அதே நேரம், வேலைக்காரங்க ரெண்டு பேரும் வழியில சந்திச்சிட்டாங்க. ஏற்கனவே பாத்துகிட்டதனால, ஒருத்தன் சிரிச்சுகிட்டே இன்னொருத்தன் கிட்ட,

‘என் மொதலாளிய மாதிரி முட்டாள் இந்த உலகத்திலேயே இல்ல’ ன்னான்.

‘எப்படி சொல்றே’ ன்னான் அடுத்தவன்.

‘பத்து பைசாவ கொடுத்து என்னமோ வாங்கிகிட்டு வர்ற சொல்றானே?, இன்னிக்கு ஞாயித்து கிழமை, கடை இருக்குமா’ ன்னான்.

‘அட அதாவது பரவால்ல, மறந்து போயி சொல்லியிருக்கலாம், ஆனா எங்க ஆளு போயி அவரு இருக்காரான்னு வீட்டுல போயி பாத்துட்டு வரனுமாம். அவருகிட்டதான் செல் போன் இருக்குல்ல, போன் பண்ணி தெரிஞ்சுக்கலாம்ல’ ன்னான்.

எவ்வளவு தான் துன்பங்கள் இருந்தாலும் நகைச்சுவை நம் கவலைகளைப் போக்கி நம்மை உற்சாகப்படுத்துகின்றது. சிரிக்க வைக்க முயற்சி செய்யாவிடினும்,  நகைச்சுவைகளை படித்து, கேட்டு, பார்த்து சிரித்து மகிழ்வோம்..
இனிய  காலை வணக்கம் ,......

ஊழல்

ஊழ்+அல்
ஊழல் என்ற சொல், ஊழ்+அல் என்று பிரிக்கப்படும். ஊழ் என்பது விதி. அது இயற்கை விதியாகவும் இருக்கலாம், மனிதனால் இயற்றப்பட்டதாகவும் இருக்கலாம். அல் என்றால் அல்லாதது; புறம்பானது என்று பொருள். ஊழல் என்பது விதிகளுக்குப் புறம்பானது என்று அறிகிறோம்.

விதிக்கு மாறானது ஒரு நிறுவனத்தில் பரவலாக நடைபெறுகிறது என்றால், அந்நிறுவனம் அழியும் நிலையை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது.இன்று, நம் நாட்டில் ஊழல் மலிந்துவிட்டது என்று கூறுகின்றனர். 'ஊழல் உலகு எங்கும் வியாபித்துள்ளது; எல்லா நாடுகளிலும் உள்ளது போலவே நம் நாட்டிலும் இருக்கிறது. அதை ஒழிக்க முடியாது; அதோடு நாம் வாழ வேண்டியதுதான். ஊழல் மூலம் நாம் நமக்கு வேண்டியதைச் சாதித்து கொள்ள வேண்டியதுதான். அகப்பட்டால் தானே திருடன் என்பதால், நமக்கு வாய்ப்பு கிடைத்தால் நாமும் அகப்படாமல் ஊழலில் ஈடுபட்டு பொருள் சேர்ப்பதுதான் புத்திசாலித்தனம்' என்று பலர் நினைக்கின்றனர்.ஊழல் என்பது புற்று நோய் போன்றது. புற்று நோய் வந்த பின், மற்ற நல்ல சதை, தசைகளை வளரவிடாது, புற்றுநோய் தாக்கப்பட்ட சதை, தசை மட்டுமே எப்படி வளரு மோ அப்படி ஊழல் புகுந்த நிறுவனத்திலும், நாட்டிலும் ஊழல் புரிபவர்கள் எண்ணிக்கையும், ஊழலின் பரிமாண மும் பெருகும்; நல்லோரின் எண்ணிக்கை குறையும். ஒரு நிலையில் ஊழலின் பரிமாணம் தாங்க முடியாததாகி, ஊழல் மலிந்த நிறுவனம்,சமுதாயம், நாடு அழிந்து போகும்.

கீழ்மக்கள் தவறு செய்யாமல் இருப்பதற்கு காரணம், அகப்பட்டுக் கொள்வோமோ, தண்டனை கிடைக்குமோ என்ற அச்சம் தான்.நம் நாட்டில் எப்போதும், இப்போது போல ஊழல் மலிந்திருந்தது என்று சிலர் கூறுவது உண்மையல்ல. முன்பு, ஊழல் தலை காட்டினால் ஊழல் செய்தவர் தண்டிக்கப்பட்டார். அவர் பணியாற்றிய நிறுவனத்தில், நேர்மையானவர் பதவியை ஏற்றார். மறுபடியும் நிறுவனம் நேர்மையைக் கடைப்பிடித்தது. அந்த நிலையே நாம் வேண்டத்தக்கது.நமக்கு ஒரு பிரச்னையை தீர்க்க வேண்டியுள்ளது, அதற்கு உதவி தேடுகிறோம்; கிடைக்கவில்லை. உதவி வரும் என்று ஓரளவுக்கு மேல் காத்து இருப்பதில் பயனில்லை. சோர்வு இல்லாது முயல வேண்டும்; பிரச்னையைத் தீர்க்க எவ்வாறு செயலில் இறங்க வேண்டும் என்று சிந்திப்போம்.இது செய்வதற்கு அருமையானது என்று சோர்வு கொள்ளாது, முயன்றால் பெருமை நம்மை வந்து அடையும் என்றார் வள்ளுவர் (குறள் 611). மேலும் அவர், அறிய வேண்டியதை அறிந்து முயலாதிருப்பதே பழி என்கிறார் (618).நமக்கு பழி வராதிருக்க, நாம் ஏற்ற முறையை அறிந்து செயலில் இறங்கி வெற்றி காண்போம்.

பதவியுடன் வருவது பொறுப்பு; அந்த பொறுப்பை நிறைவேற்ற தேவையானது அதிகாரம். இன்று, பதவியைத் தேடுவதே அதிகாரத்திற்கு என்று பலரும் கருதுகின்றனர். ஆனால், நம் இலக்கியங்கள், பதவி என்றால் அதற்கு என்று கடமைகள் உண்டு. அவற்றை நிறைவேற்ற முடியவில்லை என்றால், தானாகவே முன் வந்து பதவி விலகவேண்டும் என்று அறிவுறுத்துகின்றன.இன்று ஆட்சிக்கு வந்துள்ள, வர முயல்பவர்கள் யாவரையும் மக்களாகிய நாம், 'அந்த பதவிக்கு பல கடமை கள் உண்டு. அவை யாவையும் உங்களுக்குத் தெரியுமா? அக்கடமைகளை ஆற்ற தேவைப்படும் திறமைகளை நீங்கள் வளர்த்துக் கொண்டீர்களா?' என்று கேட்க வேண்டும்.அவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள நாம் ஊக்கப்படுத்த வேண்டும்; உதவ வேண்டும். இக்கருத்தை, அனைத்து மக்களும் உணரச்செய்ய வேண்டும்.மேலும், நாம் தேர்ந்து எடுத்து ஆட்சிக்கு அனுப்பியவர், செம்மையாகச் செயல்படவில்லை; நாம் அறிவுறுத்தியும் அவர் தன் தரத்தை மேம்படுத்திக் கொள்ளவில்லை என்றால், அவர் தொடர்ந்து ஆட்சி செய்யாமல் விலகச் செய்வதும் நம் கடமை. காந்திஜி, 'ஒத்துழையாமை' இயக்கத்தின் மூலம், சூரியன் அஸ்தமிக்காத உலகத்தின் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை ஆண்ட ஆங்கிலேயர்களை, நம் நாட்டை விட்டு வெளியேற்றினார். அதே போல, நாம் நினைத்தால் ஊழல் செய்பவர்கள் தொடர்ந்து ஆட்சி செய்ய முடியாமல் ஓடச் செய்ய முடியும்.ஆட்சிப் பொறுப்பில் இருப்பவரிடம் நாம் என்ன எதிர்பார்க்க வேண்டும்?

தகுதி, நற்பண்புகள், பொறுப்புகளை நிறைவேற்றும் செயல் திறமை, இலவசங்கள் அளிப்பது, மக்கள் நலத்திட்டம் என்று சொல்ல இயலாது. இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டில் பரந்துகெடுக உலகு இயற்றியான் (குறள் 1062) என்றார் வள்ளுவர்.இப்பரந்த உலகில் மற்றவரிடம் கையேந்தித்தான் உயிர் வாழ வேண்டும் என்ற நிலையில் சிலர் இருக்கத்தான் வேண்டும் என்றால், இவ்வுலகை படைத்தவன் கெடுவானாக. நம் மக்கள் உலகைப் படைத்தவன் இறைவன். ஆட்சி செய்பவர் கண் கண்ட இறைவன் என்று நம்புகின்றனர். ஆகவே, இலவசத்தை எதிர்நோக்கும் மக்கள் சிலர் ஒரு நாட்டில் இருக்கின்றனர் என்றால், அது கண் கண்ட தெய்வமான ஆட்சி செய்பவருக்கு இழுக்கு.இன்றைய சூழலில் மக்கள் நல அரசு, மக்கள் அனைவருக்கும் உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும், தரமான கல்வியும், தேவையான உடல்நல வசதிகளும் கிடைக்கச் செய்ய வேண்டும். அதாவது, அவற்றைப் பெற்றுக் கொள்ளத் தேவைப்படும் அளவுக்கு, அவர்களின் இயற்கையான திறமைகளை மேம்படுத்த வேண்டும்.தேவைப்படும் தகுதிகள், நற்பண்புகள், திறன்களை அனைத்துக் குழந்தைகளும் பெறும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அதாவது, அனைவருக்கும் கல்வி வசதிகள் செய்யப்பட வேண்டும். தரமான கல்வி பெற்ற மக்கள் வாழும் நாட்டில், நல்லரசு (வல்லரசு அல்ல) நிலவும். மக்கள் அனைவரும் மகிழ்ச்சி நிறைந்த நல்வாழ்வு வாழ்வர்; அங்கு, சாந்தி நிலவும்.

நம் கண் எதிரே தவறு நடப்பதை நாம் காண்கிறோம்; தவறு என்பதை உணர்கிறோம். நாம் என்ன செய்ய வேண்டும் என்றும் நமக்குத் தெரிகிறது; ஆனால், செயலில் இறங்கத் தயங்குகிறோம். வரலாற்றைப் பார்த்தால், ஒரு சில தீயவர்களால் சமுதாயங்கள் அழியவில்லை. சமுதாயத்தில் உள்ள பல நல்லவர்கள் தீமையைக் கண்டும் வாளா இருந்ததே காரணம் என்பது விளங்கும். யாராவது ஒருவர் முதல் கல்லை எடுத்து எறிய வேண்டும். அதன் பின், பலரும் செயலில் இறங்குவர். அந்த முதல் கல்லை எறிபவர் ஏன் நாமாக இருக்கக்கூடாது?

ஒற்றைப் பெண் குழந்தைக்கு கல்வி உதவித்தொகை: யுஜிசி அறிவிப்பு

ஒற்றைப் பெண் குழந்தைக்கு கல்வி உதவித்தொகை: யுஜிசி அறிவிப்பு
          சுவாமி விவேகானந்தா ஒற்றைப் பெண் குழந்தைக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தை யுஜிசி அறிமுகப்படுத்தியுள்ளது.
               சமூக அறிவியல் மற்றும் அறிவியலில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் பெண்களுக்கு இந்த உதவித்தொகை அறிவித்துள்ளது.

கல்வி கொள்கையின் முக்கிய குறிக்கோளாக பெண்கள் கல்வி மேம்பாடு விளங்குகிறது. சமூகத்தில் பெண்களுக்கு சமஉரிமை வழங்க வேண்டியது அவசியமாகும். அந்தவகையில் குடும்பத்தில் ஒற்றைப் பெண் குழந்தைக்கான சிறப்பு சலுகையை இந்திய அரசு வழங்கி வருகின்றது.

அங்கிகாரம் பெற்ற பல்கலை, கல்லூரி, கல்வி நிறுவனங்களில் சமூக அறிவியல் மற்றும் அறிவியலில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவிகள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம்தோறும் ரூ.8 ஆயிரமும், மூன்று மற்றும் நான்காம் ஆண்டுகளில் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். சூழ்நிலை அடிப்படையில் ஐந்தாம் ஆண்டும் உதவித்தொகை நீட்டிக்கப்படும்.

இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பவர் குடும்பத்தில் ஒரு பெண் குழந்தையாக இருக்க வேண்டும். முழுநேர படிப்பை மேற்கொள்பராக இருக்க வேண்டும். நவ.,31ம் தேதிக்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க கடைசி தேதியாகும்.

கூடுதல் தகவல்களுக்கு யுஜிசி இணையதளத்தை அணுகலாம்.

TRB மூலம் வேளாண்மை பட்டதாரி ஆசிரியர் 25 பேர் விரைவில் நியமனம்

TRB மூலம் வேளாண்மை பட்டதாரி ஆசிரியர் 25 பேர் விரைவில் நியமனம்
          அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு வேளாண்மை கல்வி கற்பிப்பதற்காக 25 ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். அரசு உத்தரவுப்படி பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா 25 பேர்களை தேர்வு செய்யும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியத்தலைவர் விபுநய்யரிடம் ஒப்படைத்துள்ளார்.
           ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட உள்ளவர்கள் பி.எஸ்சி. வேளாண்மையுடன் பி.எட். படித்திருக்க வேண்டும் அல்லது பி.எஸ்சி.தோட்டக்கலையுடன் பி.எட். படித்திருக்க வேண்டும்.
எழுத்து தேர்வு எழுதவேண்டும். அதில் அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கு ஆசிரியர் பணி கிடைக்கும்.
இதற்கான அறிவிப்பு விரைவில் வெளி வர உள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
          புதுக்கோட்டை மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியை அமைச்சர்கள் ந.சுப்பிரமணியன், டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் திறந்து வைத்தனர். மிகச் சிறந்த படைப்புகள் தேர்வு.

         பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 2014-2015 ஆம் கல்வியாண்டிற்கான புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அளவிலான் அறிவியல் கண்காட்சி திறப்பு விழா இன்று 16.11.2014 (ஞாயிற்றுக்கிழமை) புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் செ.மனோகரன் தலைமை வகித்தார். விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் புதுக்கோட்டை வி.ஆர்.கார்த்திக்தொண்டைமான், ஆலங்குடி கு.ப.கிருஷ்ணன் , திருமயம் பி.கே.வைரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்து அறிவியல் கண்காட்சியைப்பற்றி பாராட்டி பேசினார்கள். விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் வரவேற்று பேசினார். விழாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ந.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு அறிவியல் கண்காட்சியினையும், மாற்றுச்சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மாற்றுச்சான்றிதழ் வழங்கியும் , இந்த வருடம் நோபல் பரிசு பெற்ற சாதனையாளர்கள் பற்றி அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்டத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த மலாலா அரங்கத்தையும் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து விழாப்பேருரை ஆற்றினார்கள்.

          இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் வி.சி.ராமையா, புதுக்கோட்டை நகர்மன்றத்தலைவர் ரா.ராஜசேகரன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட ஊராட்சித் துணைத்தலைவர் ஆர்.சந்திரன் , புதுக்கோட்டை நகர்மன்றத் துணைத்தலைவர் எஸ்.ஏ.எஸ். சேட் (எ) அப்துல் ரகுமான், 33 வது நகர்மன்ற உறுப்பினர் கு.ஆயிரம் வள்ளிக்குமார், தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் அருட்திரு.இராபர்ட்தன்ராஜ், கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் க.கணேசன் , புதுக்கோட்டை  மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் (பொ) நா.செல்லத்துரை, புதுக்கோட்டை மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வர் ஆர்.சுசிலா, புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர் (பொ) ப.மாணிக்கம், அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெ.ராதிகாராணி பிரசன்னா, அனைவருக்கும்  கல்வி இயக்க உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.ரவிச்சந்திரன் ,  தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அ.பன்னீர்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டு கண்காட்சியின் அறிவியல் படைப்புகளையும், இதனை படைத்த மாணவர்களையும், அதற்கு தூண்டுகோலாக விளங்கிய தலைமையாசிரியர்கள் , ஆசிரியர், ஆசிரியைகளையும் வாழ்த்தி பேசினார்கள். இந்த அறிவியல் கண்காட்சியில் புதுக்கோட்டை கல்வி மாவட்டம் மற்றும் அறந்தாங்கி கல்வி மாவட்டம் ஆகியவற்றில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த 106 ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் 212 மாணவ,மாணவிகள் செய்திருந்த சிறந்த படைப்புகளாக தேர்வு செய்யப்பட்ட 106 படைப்புகள்  இடம் பெற்றிருந்தது.

          இதில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஒரு நிலையாக வைத்து நடுவர் குழுவினர் தேர்வு செய்ததில் பொன்பேத்தி , அரசு உயர்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை இராணியார் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அறந்தாங்கி செலக்சன் மெட்ரிக் பள்ளி ஆகியவை தேர்வு செய்யப்பட்டது. இதேபோல் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ஒரு நிலையாக வைத்து தேர்வு செய்ததில் போசம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, காமராஜபுரம், நகராட்சி உயர்நிலைப்பள்ளி, புத்தாம்பூர், அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவை தேர்வு செய்யப்பட்டது. அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தின் கீழ் 7 தலைப்புகளில் மாணவர்களின் படைப்புகளை நடுவர்குழுவினர் தேர்வு செய்ததில் புத்தாம்பூர் , அரசு மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை, இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கந்தர்வக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் மேல்நிலைப்பள்ளி, போசம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, கழனிவாசல், அரசு மேல்நிலைப்பள்ளி, அம்புகோவில், அரசு உயர்நிலைப்பள்ளி, காமராஜபுரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி, பொன்பேத்தி அரசு உயர்நிலைப்பள்ளி, மேலூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய 10 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் படைப்புகள் புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அளவில் மிகச்சிறந்த படைப்புகளாக தேர்வு செய்யப்பட்டது.  அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மேற்கண்ட 10 படைப்புகளுக்கும் ரொக்கப்பரிசாக ரூ.1000/- ம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. கண்காட்சியின் சிறப்பம்சமாக மாணவர்களிடம் அறிவியல் மனபான்மையினை வளர்க்கும் பொருட்டு இந்த வருடம் நோபல் பரிசு பெற்றவர்களின் சாதனைகள் குறித்து அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தின் சார்பில் மலாலா அரங்கம் அமைக்கப்பட்டு, குறுந்தகடுகள் மூலமாகவும், தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் வாயிலாகவும் காட்சிப்படுத்தப்பட்டது.

         மேலும் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் ஆய்வு செய்து வெளிக்கொணர்ந்த 1907ம் ஆண்டு முதன்முதலாக புதுக்கோட்டையில் நடைபெற்ற ஸ்ரீசரஸ்வதி கண்காட்சி பற்றிய தகவலும், கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது. அறிவியல் கண்காட்சியைப் பார்க்க வந்திருந்தவர்கள் நோபல் பரிசு பெற்ற சாதனையாளர்கள் குறித்து அமைக்கப்பட்ட அரங்கத்தினையும், புதுக்கோட்டையில் முதன் முதலாக நடைபெற்ற கண்காட்சி குறித்த தகவலையும் , காட்சிப்படுத்தப்பட்ட பள்ளிகள் அளவிலான மின் ஆளுமை நிர்வாகம் பற்றிய தகவலையும் மற்றும் சுகாதாரத் துறையின் சார்பில் டெங்கு விழிப்புணர்வு பற்றிய அரங்கத்தையும் ஆர்வமுடன் பார்வையிட்டனர். இறுதியில் அறந்தாங்கி மாவட்டக்கல்வி அலுவலர் (பொ) ஆர்.சண்முகம் நன்றி கூறினார். கண்காட்சி ஏற்பாடுகளை தலைமையாசிரியர்கள் , ஆசிரிய, ஆசிரியைகளைக் கொண்ட விழாக்குழுவினரும் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்ட அலுவலர்களும் செய்திருந்தினர்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!