Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 25 November 2014

பள்ளிகளில் பணிபுரியும் காவலர்களை விடுமுறையற்ற பணியாளர்களாக அறிவித்து,

▶பள்ளிக்கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் காவலர்களை விடுமுறையற்ற பணியாளர்களாக அறிவித்து, விடுமுறைக் காலத்தினைக் கணக்கில் கொண்டு ஓராண்டிற்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு வழங்கி அரசு உத்தரவு

GO.181 SCHOOL EDUCATION DEPT DATED.14.11.2014 - 30 DAYS EARNED LEAVE SANCTIONED FOR WATCHMEN THOSE WHO R WORKING IN GOVT HIGH / HR SEC SCHOOLS REG ORDER

▶ அகஇ - பகுதிநேர பயிற்றுநர்களுக்கு ரூ.2000/- ஊதிய உயர்வு நவம்பர் 2014 மட்டும் வழங்கவும், நிலுவைத் தொகையை நிதி நிலைமை கருத்தில் கொண்டு வருகின்ற மாதங்களில் வழங்கப்படும் என உத்தரவு

உதவி மருத்துவப் பணி

தமிழகத்தில் காலியாக உள்ள 1,727 உதவி மருத்துவப் பணியிடத்துக்கு ஆட்கள் தேர்வு
                   தமிழகத்தில் காலியாக உள்ள 1,727 உதவி மருத்துவப் பணியிடத்துக்கு ஆட்கள் தேர்வு நடத்தப்படவுள்ளது. அரசு மருத்துவமனையில் உள்ள 36 சிறப்புப் பிரிவுகளில் உதவி மருத்துவர் தேர்வு நடக்கிறது.

            'வாக் இன்' தேர்வு முறையில் 1,727 பணி இடங்களும் நிரப்பப்படும் என தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தகுதியுள்ள மருத்துவர்கள் வரும் டிசம்பர் 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் தேர்வு எழுத www.mrb.tn.gov.in என்ற இணையத்தளத்தில் ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு
தினமலர் நாளிதழ் சார்பில் தேனியில் நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கான இலவச ஆலோசனை முகாமில் ஏராளமான வாசகர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங் நிர்வாக இயக்குனர் வெங்கடாச்சலம் வழங்கிய ஆலோசனைகள்:
பத்தாம் வகுப்பு தகுதியாக கொண்டு இந்த தேர்வு எழுதப்படுகிறது. ஆனால் இதற்கு விண்ணப்பித்தவர்களில் பட்டதாரிகள், பொறியியல் பட்டம் பெற்றவர்களும் என லட்சக்கணக்கில் உள்ளனர். ஏன் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. காரணம் திட்டமிட்டு படிக்காதது. தேர்வு குறித்தும் அதன் பாடத்திட்டம் குறித்தும், தகுந்த வழிகாட்டுதல் உடன் திட்டமிட்டு படித்தால் வெற்றி நிச்சயம். 12 மணி நேரம் தொடர்ந்து படிப்பது முக்கியம் கிடையாது. எந்த பாடத்தை எப்படி படிப்பது என்பது தான் புத்திசாலிதனம். ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள சமச்சீர் பாட புத்தகங்கள் கண்டிப்பாக உங்களிடம் இருக்க வேண்டும். இதில் இருந்து தான் வினாக்கள் வரும்.
பொது அறிவு பிரிவில் 100 வினாக்களும், பொது தமிழில் 100 கேள்விகளும் இருக்கும். முதல் பிரிவில் பொது அறிவில் 75 வினாக்களும், திறனறிவு தேர்வில் 25 மதிப்பெண்களுக்கும் வினாக்கள் இருக்கும். பொது அறிவு அனைவரும் படிப்பர். எனவே "கட் ஆப்' மார்க்கில் உயர்ந்த இடத்தை பிடிக்க, திறனறி தேர்வு, நடப்பு கால நிகழ்ச்சி, பொது தமிழ் இவைகளில் கவனம் செலுத்தி படித்து அதிக பட்ச மதிப்பெண் பெற்றால் அரசு வேலை உறுதி. பொருத்துக, இணை தேர்வு, பொருந்தாது என சிக்கலான வினாக்கள் இருக்கும். எனவே இவற்றை கவனமுடன் படித்து, சரியான பதிலை தேர்வு செய்ய வேண்டும். நாளிதழ்: புத்தகத்தில் இல்லாத கேள்விகள் நடப்பு கால நிகழ்வாக 15 வினாக்கள் கேட்கப்படும். இதற்கு நாளிதழ் படிப்பது அவசியம். மத்திய அமைச்சர்கள், உலக நிகழ்வுகள், விருதுகள், கண்டுபிடிப்புகள், விளையாட்டில் சாதனையாளர்கள் நடந்த இடம், நடைபெற உள்ள இடம். உலக தலைவர்களின் பெயர்கள், அவர்கள் வகிக்கும் பதவிகள் என அனைத்தையும் குறித்து வைத்து படிக்கவேண்டும். கடந்த ஒரு ஆண்டு நடந்த நிகழ்வுகளை குறித்து வைத்து ஞாபகப்படுத்துவது நல்லது.
வரலாற்று பாடத்தில் கால சுவடு அமைத்து படிக்கவேண்டும். கற்காலம் முதல் சுதந்திரம் பெற்றது வரை முக்கிய ஆண்டுகளை வரிசை படுத்தி அந்த சம்பவங்களை குறித்து வைத்து படிக்க வேண்டும். போர்கள் நடந்த ஆண்டு, யாருக்கு வெற்றி, அதில் ஏற்பட்ட ஒப்பந்தம் என வரிசை படுத்தி படிக்கவேண்டும்.
அறிவியல் பாடம்: 20 முதல் 25 வினாக்கள் கேட்கப்படுகிறது. இயற்பியல் பாடம் படிக்கும் போது 6 ம் வகுப்பில் காந்தவியல் பகுதி படித்தால், தொடர்ந்து ஏழாம் வகுப்பிலும், எட்டாம் வகுப்பு என பத்தாம் வகுப்பு வரை உள்ள காந்தவியலை படித்து குறிப்பு எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இது போல் ஒவ்வொரு பாடத்தையும் ஒரு வகையில் படிக்க வேண்டும். உயிரியல் பாடத்தில் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள், விட்டமின்கள் போன்றவற்றை கண்டிப்பாக படித்து குறிப்பெடுக்க வேண்டும். நாள்தோறும் படிப்பை துவங்குவதற்கு முன்னதாக படித்ததை நினைவு படுத்தி படித்த பின்பு தான், புதிய பாடத்தை படிக்க துவங்க வேண்டும். பாடதிட்டத்தை தேர்வு செய்து, தன்னம்பிக்கையுடன், திட்டமிட்டு பாட புத்தகத்தை தெளிவாக படித்தால் அரசு வேலை உறுதி, என்றார்.
மதுரை மன்னர் கல்லூரி தமிழ் துறை உதவி பேராசிரியர் செந்தில்குமார் பேசியதாவது:பொது அறிவும், பொதுத்தமிழும் இரு கண்கள். பொது தமிழ் பாடத்தை ஆழ்ந்து கவனமுடன் படித்தால் வெற்றி நம் வசப்படும். இதற்கு முன் இருந்த பொது தமிழ் வினாக்கள் எளிமையாகவும், நேரிடையாகவும் இருக்கும். ஆனால் தற்போது வினாக்கள் சற்று கடினமாக உள்ளது. எனவே வினாக்களை நன்கு படித்து, புரிந்து நிதானமாக அதே நேரத்தில் விரைவாக விடை அளிக்கவேண்டும். இதற்காக நீங்கள் கஷ்டப்பட வேண்டாம். 6 முதல் 10 வகுப்பு வரை உள்ள சமச்சீர் பாடங்களில் உள்ள தமிழ் பகுதிகளை படிக்க வேண்டும். மூன்று பகுதிகளாக பிரித்து படிக்க வேண்டும். இலக்கணத்தில் 32 முதல் 50 வினாக்கள் கேட்கப்படும். இலக்கியத்தில் 22 முதல் 30 வினாக்கள் கேட்கப்படும். இதில் திருக்குறள் தொடர்பாக கண்டிப்பாக இரண்டு வினாக்கள் இடம் பெறும். தமிழ் அறிஞர்கள், தொண்டுகள் பகுதியில் 16 முதல் 20 வினாக்கள் கேட்கப்படும். பாரதியாார் உள்ளிட்ட கவிஞர்கள், அவர்களின் புனை பெயர்கள், அவர்கள் எழுதிய புத்தகங்கள் என விரிவாக படிக்க வேண்டும். இலக்கணத்தை புரிந்து படிக்க வேண்டும். தமிழ் பாடத்தில் மட்டும் 100 வினாக்கள் கேட்கப்படும் இதில் 95 வினாக்களுக்கு சரியாக பதில் அளிக்கும் வகையில் தயார் படுத்திகொண்டால் அரசு வேலை உங்களுக்காக காத்திருக்கும், என்றார்.

கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம்
                     மாவட்டக் கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் தொடக்க கல்வி அலுவலர்கள் பங்குபெற்ற ஆய்வுக் கூட்டம் நேற்று 24/11/2014 அன்று அண்ணா பல்கலைகழக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.

         மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்வாய்வுக் கூட்டத்தில், உயர்திரு பள்ளிக்கல்வி துறை செயலாளர் திருமதி.சபீதா அவர்கள், அனைவருக்கும் கல்வி இயக்கம்  திட்ட இயக்குனர் உயர்திரு.பூஜா குல்கர்னி உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ஆய்வு கூட்டத்தில் மாணவர்களுக்கான நலத்திட்டங்கள்  முழுமையாக நடைபெற்றதா என்பதை ஆய்வு செய்தனர்.காலாண்டுத் தேர்வில் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த ஆண்டு 10 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வில் 95% தேர்ச்சி இலக்கை அடையவேண்டும் அதற்கான முழு முயற்சிகளை கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

6,7,8 ஆகிய வகுப்புகளில் வாசித்தல், எழுதுதல் மற்றும் கணிதத் திறன்கள் மாணவர்களுக்கு அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!