Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 22 December 2014

எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)..!

எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)..!

கண்டிப்பாக படித்து பகிரவும் ....

தமிழகக் கோயிற் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளாகட்டும், தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும், இன்னும் ஆதித்தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம், இதைப்பற்றிய தேடலை நாம் மேற்கொள்ள வேண்டாமா..?!

அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அரிய விடயத்தை உங்களுடன் பகிர்கிறேன்.

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> 6,0393476E-9 --> nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.

இவ்வளவு நுண்ணியமான கணிதம் அந்தக் காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள், கணினியையும், கணிதப்பொறியையும் (கால்குலேடரையும்) தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம்
சாதித்து விட்டோம்..!

அரசுக்கு ஐகோர்ட் ஆலோசனை ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதி தேர்வு

அரசுக்கு ஐகோர்ட் ஆலோசனை ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதி தேர்வு
               காலிப்பணியிடங்களை நிரப்பவும், காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு பணி வழங்கவும் ஆசிரியர் தகுதித்தேர்வை ஒவ்வொரு ஆண்டும் நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கி உள்ளது.

              திண்டிவனத்தை சேர்ந்த ஜி.நாகராஜன், நெல்லை மாவட்டம், மடத்தூரை சேர்ந்த சித்ரா ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த 2013 ஏப்ரல் மாதம் நடந்தது. அதன் பிறகு தேர்வு நடைபெறவில்லை. கட்டாய கல்வி சட்டத்தின்கீழ் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க முடியாது. ஆனால், இந்த ஆண்டு தேர்வு நடத்தப்படவில்லை. எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர்களாக பணியாற்றுமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்‘‘ என குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி அரிபரந்தாமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு:

இதே கோரிக்கையுடன் வந்த பல ஆசிரியர்களுக்கு இந்த நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரலில் உத்தரவு பிறப்பித்து அவர்கள் மேலும் 5 ஆண்டுகள் ஆசிரியர் பணியில் நீடிக்க உத்தரவிடப்பட்டது. தற்போது, தமிழகத்தில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், உள்ளாட்சிகள் சார்பில் நடத்தப்படும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன என்று மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும். இதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் முழு தகுதி பெற்றிருந்தும் அவர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாததால் அவர்களால் பணியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு இதை கருத்தில் கொண்டு தகுதித் தேர்வுகளை நடத்த வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

வறட்டுக் கவுரவம் தான் காரணம்!

வறட்டுக் கவுரவம் தான் காரணம்!

அரசுப் பள்ளிகளில், இன்று எல்லாமே இருக்கிறது. அப்படி இருந்தும், மக்கள், அரசுப் பள்ளிகளை நாடாமல், ஆங்கிலப் பள்ளிகளை நாடுவதற்கு, ஆங்கில மோகம் தான் காரணம் என, பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், சத்தியமாக அது காரணம் இல்லை; வறட்டுக் கவுரவம் தான் காரணம்!எல்.கே.ஜி.,க்கே, 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணம் வாங்கும் ஆங்கிலப் பள்ளியில், தாய், தன் இரண்டரை வயது குழந்தையை சேர்க்கிறார் என்றால், அதில் உள்ள பெருமையை அனுபவிப்பதற்காக மட்டுமே என்பது, எத்தனை பேருக்குப் புரியும்!

*எம் புள்ளையை, எல்.கே.ஜி.,யில் சேர்க்கிறதுக்குள்ள, எனக்கு போதும் போதும்னு ஆயிருச்சு; இதுவரைக்கும், 10 ஆயிரம் ரூபாய்க்கும் மேலே செலவாயிருச்சு.
*எம் புள்ளைக்கு, சுத்தமா தமிழே வர மாட்டேங்குது. நானும் சொல்லிக் குடுக்குறேன்... படிக்க மாட்டேங்கிறான்.
*அந்த ஸ்கூல்ல இடம் கிடைக்கிறது சாதாரணமில்லை. அதுக்காக நாங்க, பெரிய பெரிய ஆட்களை எல்லாம் சிபாரிசு பிடிச்சு, ஒரு வழியா எம் புள்ளையை அந்த ஸ்கூல்ல சேர்த்தோம்.மேற்கண்ட இந்த வசனங்களை பேசாத பெண்களை, காண்பது அரிது. இந்தப் பெருமைக்காகவே, அவர்கள், எத்தனை லட்சம் ரூபாய் வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராக உள்ளனர்.கணவனின் சம்பளம் எவ்வளவு, வீட்டு மாத பட்ஜெட் எவ்வளவு... அனைத்தும் அறிந்திருந்தாலும், வெளியே பெருமை பேசுவதின் ஆனந்தம் எப்படி இருக்கும் என்று, அனுபவிப்பவர்களுக்குத் தான் தெரியும்.இப்படி, அக்கம் பக்கத்துப் பெண்கள், 'டாம்பீகம்' பேசும்போது, அக்கூட்டத்தில், 'என் பிள்ளை அரசுப் பள்ளியில் படிக்கிறான்' என்று சொன்னால், அந்தக் கூட்டத்தில் தனிமைப்பட்டு விடுவோம் என்ற காரணத்திற்காகவே, எத்தனை பெண்கள், அடம்பிடித்து, கணவன்களை கடன்காரனாக்கி, பெருமைக்காக, பிள்ளைகளை ஆங்கில மீடியத்தில் சேர்க்கின்றனர் தெரியுமா!பொதுவாக ஆண்கள், தன் குழந்தை, அரசுப் பள்ளியில் படிப்பதைத் தான் விரும்புவர்; ஆனால், மனைவியரின் தொல்லை தாங்காமல், சக்திக்கு மீறி கடன் வாங்கி, நகையை அடகு வைத்து, கடைசியில் நடுத்தெருவுக்கு வரும்போது தான், இதற்கு மேல் செலவு செய்ய முடியாது என தோன்றும்.இறுதியில், அக்குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்க்கின்றனர். குழந்தை, ஆங்கிலமும் புரியாமல், தமிழும் தெரியாமல் திணறுவான்.இப்போது, எந்தக் குழந்தை, வீட்டில் விளையாட அனுமதிக்கப்படுகிறது? அதிகாலையில் எழுந்து குளியல், இறுக பற்றிய சீருடை, பள்ளியில் கண்டிப்பு, பள்ளி முடிந்ததும் டியூஷன், இரவு வீட்டுப் பாடம்... பாவம்!என்றைக்கு நம் பெண்களின் இந்த வறட்டுக் கவுரவம் போகுமோ, அன்றைக்குத்தான், இந்த கொடுமையும் போகும்

அன்பு என்னும் சாட்டையைக் கையில் எடுங்கள்!

அன்பு என்னும் சாட்டையைக் கையில் எடுங்கள்!

பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கூட, 'டாஸ்மாக்'கிற்கு போகும் கலாசாரம் உருவாகியுள்ளது. டாஸ்மாக் பற்றிய கவலைகள் மட்டுமின்றி, சில ஆசிரியர்கள், மாணவியருக்கு தரும் பாலியல் தொல்லைகள், மாணவர்களுடன் ஓரினச் சேர்க்கை தொடர்பான குற்றங்கள், மாணவர்கள் பொது இடங்களில் அநாகரிகமாக நடந்து கொள்ளும் விதம், 'ராகிங்' என்ற பெயரில், சக மாணவர்களை துன்புறுத்தும் செயல்கள் என, பலவிதமான செய்திகளும், அடிக்கடி செய்தித் தாள்களில் இடம் பெறுகின்றன.

தமிழ் சினிமாவில் வலம் வரும், 'வீரதீர' கதாநாயகர்கள் செய்யும் சேட்டைகளை உண்மை என்று நம்பி, தாங்களும் கதாநாயகர்களாக மாறத்துடிக்கும் அப்பாவி மாணவர்கள், தங்கள் பெற்றோரிடம் நவீன பைக்குகளையும், பெரிய சைஸ் மொபைல்களையும் வாங்கித் தர சொல்கின்றனர்.தங்கள் பிள்ளைகளை எப்படியாவது படிக்க வைத்து, கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வேலைக்கு அனுப்பி, லட்சங்களை அள்ளுவது ஒன்றையே கொள்கையாக வைத்திருப்பவர்கள் தானே, தற்கால பெற்றோர்!அக்கால மாணவர்களின் படிப்பு என்பது, அவர்களுடைய தனிப்பட்ட விருப்பமாக இருந்தது. தங்கள் அறிவிற்கு ஏற்ற கல்வியை, விரும்பி படிக்கலாம் என்ற சுதந்திரமும் இருந்தது. ஆனால் தற்காலத்தில், தங்கள் பிள்ளைகள் என்ன படிக்க வேண்டும்; எங்கே படிக்க வேண்டும் என்பதையே, பெற்றோர் தான்
தீர்மானிக்கின்றனர்?ஒரு மாணவனோ, மாணவியோ தாங்கள் விரும்பும் படிப்பை படிக்கும், தாங்கள் விரும்பும் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமை இங்கே பறிக்கப்படுகிறது. இதுவும் ஒரு வகையில் வன்முறை செயலே.

இன்றைய பெற்றோர், தங்கள் குழந்தைகளை விளையாட கூட அனுமதிப்பதில்லை. அற்புதமான வீடு கூட, இந்த இடத்தில் குழந்தைகளுக்கு சிறைச்சாலையாகி போகிறது.நடுத்தர வர்க்க பெற்றோரிடையே தற்போது பரவியுள்ள இந்த கல்வி மனநோய் காரணமாக, குழந்தைகளும் மெல்ல மெல்ல மனநோய்க்கு ஆளாகிப் போகின்றனர். 10ம் வகுப்பிற்குப் பின், சிறைச்சாலைகள் போல நடத்தப்படும் குறுக்குவழி கல்வி சிறைச்சாலையிலிருந்து, இரண்டு ஆண்டு கல்வித் தண்டனையை அனுபவித்து விடுதலை பெற்று வரும் மாணவன், கல்லூரிகளின் சேரும் போது சுதந்திரப் பறவையாகி விடுகிறான்.இரண்டு ஆண்டு மனஅழுத்தத்தையும், கேவலமான கல்வியையும் பெற காரணமான தங்கள் பெற்றோரை பழி வாங்க வேண்டும் என்ற ஆத்திரத்தின் காரணமாக, தங்கமான மாணவர்கள், திசை மாறிப் போகின்றனர்.

தற்போது, சென்னையில் கல்லூரி மாணவர்கள், 'பஸ் டே' கொண்டாட்டம் என்ற பெயரில் நடத்தும் அராஜக செயல்களால், பொதுமக்கள் அடையும் துன்பங்களை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. காவல் துறையினர், தங்கள் கைகளுக்கு தாங்களே விலங்கிட்டு வேடிக்கை பார்க்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. காரணம், இத்தகைய சமூக சீர்கேடுகளை கண்டிக்க வேண்டிய சீர்திருத்தவாதிகள் சிலர், சுயநலத்திற்காக, அராஜகம் செய்யும் மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர்.தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிக்கவும், தண்டிக்க வேண்டிய நேரத்தில் தண்டிக்கவும் வேண்டும். இல்லையென்றால், அது தவறு செய்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திவிடும்.

ஒவ்வொரு மாணவனும், மாணவியும் ஒரு நாளில் அதிகபட்சமான நேரத்தை, அதாவது எட்டு மணி நேரத்தை செலவிடுவது ஆசிரியர்களுடன் மட்டுமே. அந்த காலத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தெய்வமாக தெரிந்தனர். ஆனால், தற்போதைய நிலைமையே வேறு. மாணவர்கள், ஆசிரியர்களை பார்த்து பயந்து, ஒழுக்கமாக நடந்தது போய், ஆசிரியர்கள், மாணவர்களை பார்த்து பயந்து நடக்கும் காலம் வந்து விட்டது.தவறு செய்யும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தண்டனை தரக்கூடாது என்று, சில நவீன மனித உரிமை ஆர்வலர்கள் துணை நிற்கும் போது, மாணவர்களுக்கு தவறு செய்தால் நமக்குத் துணையாய் நிற்க சிலர் இருக்கின்றனர் என்ற எண்ணம் இயல்பாகவே உருவாகிவிடுகிறது.

தற்போதைய சூழ்நிலையில், ஆசிரியர்கள் தங்கள் கைகளுக்கு தாங்களே விலங்கிட்டு, தங்கள் மாணவனோ, மாணவியோ சீரழிவை நோக்கிப் போகும் போது, வேடிக்கை பார்க்க வேண்டிய துர்பாக்கியமான சூழ்நிலையில் சிக்கியுள்ளார். இந்தநிலை நீடித்தால் எதிர்காலத்தில் மாணவர்கள் துப்பாக்கியுடன் பள்ளிக்கு வரும் சூழ்நிலை கூட உருவாகலாம்.ஆசிரியர்கள், காவல் துறை நண்பர்கள் என, எல்லாருமே ஒரு வகையில் பெற்றோரே. எல்லாருக்கும் மனதில் ஈரமும், சமுதாயம், நாடு குறித்த அக்கறையும் இருக்கிறது. எந்த ஒரு பிரச்னைக்கும் ஒரு தீர்வு இருக்கத் தான் செய்கிறது. நாமெல்லாம் ஒன்றாய் சேர்ந்து வளர்த்து விட்ட இந்த தலையாய பிரச்னைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்துவிட முடியாது. ஆனால் சில விஷயங்களை யோசித்து, உடனடியாக
நிறைவேற்றி எதிர்காலத்தில் சரி செய்துவிடலாம்.

முதலில் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் மனதில் நாட்டுப் பற்றை விதைக்கப் பழக வேண்டும். நம் நாட்டைப் பற்றிய உயர்வான விஷயங்களை அவர்களின் மனதில் பதிய வைக்க வேண்டும். படித்து முடித்து நம் நாட்டிலேயே வேலை செய்ய வேண்டும் என்று அவர்களிடம் போதிக்க வேண்டும்.வெளிநாடுகளில் தரப்படும் கணிசமான சம்பளம், தற்போது நம் நாட்டிலேயே கிடைக்கிறது. மேலும் ஆசிரியரை தெய்வமாக மதிக்க வேண்டும் என்றும், தவறு செய்தால் அவர் தரும் தண்டனையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.பெற்றோர் தங்கள் விருப்பத்தை குழந்தைகளின் மனதில் திணிக்காமல், அவர்கள் விரும்பும் படிப்பை படிக்க உறுதுணையாக இருக்க வேண்டும். இன்றைய மாணவ, மாணவியர் பெற்றோரை விட நன்றாகவே முடிவெடுக்கின்றனர். பெற்றோர் தங்களுக்கு எத்தகைய வேலை பளு இருந்தாலும், தினமும் அரை மணி நேரம், தங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக செலவழிக்க பழக வேண்டும்.

நம் குறிக்கோளும் மகிழ்ச்சியும் நம் குழந்தைகளின் சிறப்பான எதிர்காலம் தானே. தாங்கள் வாழ்க்கையில் சமாளித்த சிக்கலான சூழ்நிலைகளை பெற்றோர், அவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்போது தான் வாழ்க்கை என்பது விளையாட்டல்ல என்பது அவர்களுக்குப் புரியும்.நம் மாணவர்கள் உருப்பட வேண்டுமென்றால், அதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது... பெற்றோர், ஆசிரியர், காவல் துறையினர் ஆகிய மூவரும் அன்பு என்னும் சாட்டையைக் கையிலெடுக்க வேண்டும். இந்த சாட்டை வேலை செய்யவில்லை என்றால், உடனடியாக உண்மையான சாட்டையை கையிலெடுத்து, தவறு செய்யும் மாணவர்களை தயவு தாட்சண்யம் பார்க்காமல் அந்தந்த நிமிடமே தண்டித்து திருத்த வேண்டும். நம் நாட்டின் மீது அக்கறை உள்ள ஒவ்வொரு இந்திய குடிமகனும் இதை உணர்ந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!