Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 22 January 2015

Wednesday, 21 January 2015

2015ம் கல்வியாண்டிற்கான உதவி / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவி

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 2015ம் கல்வியாண்டிற்கான உதவி / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட ஆசிரியர்களின் பட்டியலை மாவட்ட அளவில் தயார் செய்து அனுப்ப இயக்குனர் உத்தரவு.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 2015ம் கல்வியாண்டிற்கான உதவி / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 5 தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று 31.12.2009 முடிய முழு தகுதிப்பெற்ற நடு நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பட்டியலை மாவட்ட அளவில் தயார் செய்து அனுப்ப இயக்குனர் உத்தரவு.

English CD

English CD

Friday, 16 January 2015

தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு

தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு

தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வரும் 18 ஆம் தேதி சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதுதொடர்பாக சென்னையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் மாநிலம் முழுவதும் 43 ஆயிரத்து51 சொட்டு மருந்து முகாம்கள் ஏற்படுத்தப்படும் என்றும், ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.மேலும், 5 வயதிற்குட்பட்ட 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளதாகவும், இரண்டு தவணைகளாக சொட்டு மருந்து வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. முதல் தவணையாக வரும் 18 ஆம் தேதியும், இரண்டாம் தவணையாக அடுத்த மாதம் 22 ஆம் தேதியும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Sunday, 11 January 2015

கொசுவை விரட்டஸ்டிக்கர்

கொசுவை விரட்டஸ்டிக்கர் உதவுகிறது!

தொழு நோயாளிகளுக்கு கொசு விரட்டி, 'ஸ்டிக்கர்'களைத் தயாரித்து வழங்கும் காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டைச் சேர்ந்த சையத் தாஜுதீன்: என் அப்பா கே.ஏ.சையத் ஹசனுதீன், கால்நடை மருத்துவர். மாடுகளுக்கு அடிக்கடி கோமாரி நோய் தாக்கும். நோய் தாக்கிய ஆடு, மாடுகளைக் கொசு கடிக்காமல் இருக்க, அவற்றுக்கு வேப்பெண்ணெய் கற்பூரம் கலந்து தடவச் சொல்வார்;
இந்த வாசனைக்கு கொசு வராது என்பார். அந்தக் கருத்து, என் மனதில் ஊன்றி விட்டது. அவரின் நினைவாக மனிதர்களுக்கு, குறிப்பாக தொழு நோயாளிகளுக்கு, கொசு விரட்டி ஸ்டிக்கரை தயாரித்து இலவசமாக வழங்கி வருகிறேன்.பி.டெக்., படித்த நான், எக்ஸ்போர்ட் பிசினஸ் செய்வதால், அடிக்கடி வெளிநாடுகளுக்குப் போய் வருவேன். ஒரு முறை ஹாங்காங் சென்றபோது, அங்கே ஒரு கம்பெனியில் வேலை செய்யும் தொழிலாளி கள், கையில் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தனர்.அதுகுறித்து கேட்ட தற்கு, 'இது கொசு விரட்டி ஸ்டிக்கர்'என்றனர். 'இங்கு தான் அவ்வளவு கொசு இருக்காதே... ஏன் இதை ஒட்டியிருக்கிறீர்கள்?' என்றதற்கு, 'இருக்கிற கொஞ்ச கொசு கூட, கடிக்கக் கூடாதுன்னு கம்பெனி தந்திருக்கிறது' என்றனர். அந்த ஸ்டிக்கரில், 'லெமன் கிராஸ் ஆயில், சிட்ரோநெல்லா ஆயில்' கலந்திருந்ததும், அவை இந்தியாவிலிருந்து தான் கொண்டு செல்கின்றனர் என்பதும் தெரிந்தது. இயற்கையான இந்த பொருட்கள், மனித உடலுக்குத் தீங்கு செய்வதில்லை என்பதுடன், தயாரிப்பு செலவும் குறைவு. நல்ல நிலையில இருப்போருக்கு, கொசு கடித்தால் தெரியும். ஆனால், தொழு நோய் பாதித்தோருக்கு ஏற்கனவே புண் இருக்கும். கொசு கடித்தாலும் அவ்வளவு தெரியாது; இந்த ஸ்டிக்கரை, புண் உள்ள இடத்தின் அருகிலேயே ஒட்டலாம்; அலர்ஜி ஏற்படாது.இதை உடலில் ஒட்டிக் கொண்டால், நம்மைச் சுற்றி ஒரு, 'லேயரை' உருவாக்கும். ஸ்டிக்கரை வேறு வேறு அளவுகளில் தருகிறோம். அதில் வாசனை இருக்கும் வரை, 2 - 3 நாளுக்கு பயன்படுத்தலாம். இதையே மருந்தாக்கி, 'ஸ்ப்ரே'வும்தருகிறோம்.பரனூர் தொழு நோய் காப்பகத்துக்கும், ஆதம்பாக்கத்தில் உள்ள, 'உதவும் உள்ளங்கள்' இல்லத்துக்கும், ஸ்டிக்கர்களை இலவசமாக வழங்கி வருகிறோம். இதற்காக, நான், என் அண்ணன், அக்காவின் வருமானத்தில், 5 சதவீத தொகையை ஒதுக்குகிறோம். தமிழகம் முழுக்க நோயாளிகள் மற்றும் முதியவர்களுக்கு இதை கொடுக்கத் திட்டமிட்டுள்ளோம். ஏற்கனவே, வழங்கப்பட்டவர்களுக்கு ஸ்டிக்கர் தீர்ந்து விட்டாலும், மற்ற பகுதி யில் தொழுநோய் பாதித்தோர் கேட்டா லும் அனுப்பி வைப் போம். இந்த ஸ்டிக்கரை சேவை மனப்பான்மையோடு இலவசமாக செய்து தர முன்வருவோருக்கு, இதன் செய்முறையைக் கற்றுத் தருவோம்

மொழியின் பயணம்!

மொழியின் பயணம்!

மொழி என்பது அறிவு கிடையாது. அது மனிதர்கள் அறிவால் கண்டுபிடிக்கப்பட்டது. மனிதர்கள் அறிவு, மொழி வழியாகச் சொல்லப்படுகிறது. அதோடு, அறிவைப் பெறுவதற்கு மொழி ஒரு காரணமாக இருக்கிறது.

மொழி வழியாக யாரும் சிந்திப்பதில்லை. தன் சிந்தனையில் தோன்றிய கருத்துகளை, கண்ட காட்சிகளை, கற்பனைப் புனைவுகளை மொழி வழியாகச் சொல்ல முடிகிறது. அதன் காரணமாகவே, மனிதர்களின் மகத்தான கண்டு பிடிப்புகளில் மொழி முதல் இடத்தில் இருக்கிறது.
மொழி மனிதர்களின் முதல் கண்டுபிடிப்பல்ல. பலவிதமான கருவிகளைக் கண்டுபிடித்து, பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்கள் பேசும் மொழியைக் கண்டு பிடித்துக் கொண்டார்கள். அது வெளியில் இருந்து - இன்னொரு பொருளில் இருந்து உருவாக்கப்படவில்லை. தன் உடம்பில் இருக்கும் வாய், மூக்கு, நாக்கால் எழுப்பப்படும் ஒலியில் இருந்து உருவாக்கப்பட்டது.
மொழி என்பது ஒலி. அதாவது சப்தம். மொழி திருத்தம் பெற்று ஐம்பதாயிரம் ஆண்டுகள் ஆகின்றன என்று சரித்திரம் பற்றி ஆராய்ந்தவர்கள் சொல்கிறார்கள்.
மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட எல்லா மொழிகளும் எப்போதும் நீடித்திருப்பதில்லை. புலம் பெயர்வு, போர், இயற்கை இடர்கள், அரசின் ஆணை - இவற்றால் பல மொழிகள் மறைந்து விடுகின்றன. பண்டைய காலத்தில் இருந்த எகிப்து, கிரேக்கம், யவனம், மாயன், சிந்துவெளி மக்கள் பேச்சு மொழிகள் எல்லாம் மறைந்துவிட்டன. ஆனால், எழுதப்பட்ட மொழிகள் படிக்கப்படுகின்றன.
ஏசுநாதர் பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பாபிலோனியாவை ஆண்ட ஹம்முராபி என்ற மன்னன் அக்காட்டன் மொழியில் சட்டம், நீதி பற்றி 282 கல்வெட்டுகளில் பொறித்து வைத்திருக்கிறான். அசோகர் பாலி மொழியில், பிராமி எழுத்துகளில் பாறைகளில் எழுதி வைத்திருக்கிறார்.
தமிழர்கள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பனைவோலைகளில் எழுதி வைத்திருத்த கவிதைகள் படிக்கக் கிடைக்கின்றன. மனித அறிவு, ஞானம் என்பது ஒரு மொழிக்குத்தான் சொந்தம் என்பதில்லை.
மக்கள் உள்ளக்கிடக்கையை, அன்பை, காதலை, இறை நேசத்தை, பரிவை சொல்லிக் கொண்டிருந்த மொழியை ஆட்சியாளர்கள் கைப்பற்றிக் கொண்டார்கள். ஹம்முராபி போல குற்றம், தண்டனை என்றார்கள். மொழி பயங்கரமான ஆயுதமாகியது. போர் பிரகடனங்கள் செய்தார்கள். வரி வசூல் பண்ணினார்கள். எளிய மக்களின் அந்தரங்கப் புரிதல் சார்ந்திருந்த மொழி அதிகார ஆயுதமாக மாறியது.
600 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் மொகலாய ஆட்சி ஏற்பட்டதும் பாரசீகம் ஆட்சி மொழியானது. பெரும்பான்மையான மக்கள் அறியாத ஒரு மொழி ஆட்சி அதிகாரம் செலுத்தியது. ஆனால், மக்கள், கவிஞர்கள் தங்கள் தாய்மொழியில் பேசிக் கொண்டும் கவிதைகள் புனைந்து கொண்டும் இருந்தார்கள்.
500 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பியர்கள் கடல் வாணிபத்தில் ஈடுபட்டு உலகத்தின் பல பகுதிகளுக்கும் சென்றார்கள். கிறிஸ்துவ பாதிரிகள் உடன் சென்றார்கள். தொழில் புரட்சி, அச்சு புத்தகங்கள், மொழி, அறிவு என்பவற்றை முன்னெடுத்துச் சென்றனர். பலவிதமான பனுவல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டன. வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் - என்று பல நாடுகளிலும் கிறிஸ்துவ சமயமும் ஆங்கில மொழியும் முதன்மை பெற்றன.
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி ஏற்பட்டது. பாதிரிகள் சமய நோக்கத்தோடு இந்தியாவின் பல பகுதிகளிலும் பள்ளிக்கூடங்களை ஏற்படுத்தினார்கள். அவற்றில் ஐரோப்பிய முறையைப் பின்பற்றி கணிதம், வாணிபம், தொழில் ஆங்கில மொழி ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்தார்கள். அந்தப் படிப்பில் இந்தியாவில் இருந்த சம்ஸ்கிருத, பாரசீக முறை சார்ந்த சமயக் கல்வி இல்லை. பொதுவான படிப்பு.
பாதிரியார் பள்ளிக்கூடத்தில் படித்தவர்கள் அரசு வேலைக்கு வந்தார்கள்; சம்பளம் வாங்கினார்கள்; புதிய வாழ்க்கை ஏற்பட்டது. அரசுக்கு ஏராளமான பணியாளர்கள் தேவைப்பட்டார்கள். உயர் அதிகாரம் கொண்ட வேலைகள் பார்க்க ஆங்கிலேயர்கள் இருந்தார்கள். சிறிய வேலைகளைப் பார்க்க இந்தியர்களைத் தயாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
பல மொழிகள் கொண்ட நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு எந்த மொழியைக் கற்றுக் கொடுப்பது? அரசு நிர்வாகத்தை எப்படி நடத்துவது என்ற பிரச்னை ஏற்பட்டது.
இந்திய சமூக சீர்திருத்தவாதியான ராம் மோகன்ராய் இந்தியர்களுக்கு சம்ஸ்கிருதம், அரபு, பாரசீகம் ஆகிய மொழிகளில் கல்வி கற்பிக்கக் கூடாது. ஆங்கில மொழி ஒன்றில்தான் கல்வி கொடுக்க வேண்டும். அதுவே அவர்களை நவீன மனிதர்களாக்கும் என்றார்.
1818-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் ஆங்கிலவழி பள்ளிக்கூடத்தை ஆரம்பித்தார். கொல்கத்தா தலைநகரமாக இருந்தபடியால் பலரும் ஆங்கிலம் படித்தார்கள். பெரிய வேலைகளுக்குச் சென்றார்கள். அதைக்கண்டு இந்தியர்கள் ஆங்கிலம் படித்தால்தான் சர்வதேச மைய நீரோட்டத்தில் தன் மேதைமையை நிலைநாட்ட முடியும் என்று நம்பினார். அரசுக்கு நிறைய கோரிக்கைகள் அனுப்பி வைத்தார். அவர் உயிரோடு இருந்தவரையில் அவர் கோரிக்கைகள் முக்கியத்துவம் பெறவில்லை.
கவர்னர் ஜெனரலாக பெண்டிங் இருந்த காலத்தில் கவனிப்பு பெற்றது. அவர் 1832-ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினரும், சரித்திர ஆசிரியருமான தாமஸ் பாபிங்டன் மெக்காலேவிடம் இந்தியர்களுக்கு எந்த மொழியில் கல்வி கற்றுக் கொடுப்பது என்று பரிந்துரைக்கும்படி கேட்டுக் கொண்டார்.
இந்தியர்கள் தங்கள் பெருமைகள் மீது அவநம்பிக்கை கொள்ளவும், அடிமைகள் போல வேலை செய்யவும் ஆங்கிலம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று மெக்காலே பரிந்துரைத்தார்.
1835-ஆம் ஆண்டில் ஆறாம் வகுப்பில் இருந்து ஆங்கிலம் கற்பிக்கப்பட்டது. பல்கலைக்கழகங்கள் ஏற்பட்டதும் ஆங்கிலமே உயர் கல்விக்கான மொழியாகியது. இந்திய சரித்திரத்தில் அடிமைத்தனத்தை படிப்பு வழியாகக் கொண்டுவர முயற்சித்தவர் என்றும், கொல்லும் மொழியைக் கொண்டு வந்தவர் என்றும் மெக்காலே விமர்சிக்கப்படுகிறார்.
மெக்காலே ஆசைக்கு விரோதமாகவே ஆங்கிலம் இந்தியாவில் செயல்பட்டது. இந்திய மக்கள் ஆங்கில மொழி அறிவால் தங்களை அறிந்து கொண்டார்கள். அடிமைத் தனத்தை ஒழிக்கத் தீவிரமாகச் செயல்பட்டார்கள். பல்வேறு மொழிகளால் பிரிந்திருந்த மக்களை ஆங்கில மொழியே ஒன்று சேர்த்தது. இந்திய மொழிகளை தன்போக்கில் வளர்த்தது.
ரவீந்திரநாத் தாகூர், சுப்பிரமணிய பாரதியார், அரவிந்தர், விவேகானந்தர் - எல்லோரும் ஆங்கில மொழி வழியாக உருவானவர்கள்தான். அவர்களுக்கு ஆங்கிலம் என்பது இந்தியர்களோடும் - சர்வதேச விற்பன்னர்களோடும் தொடர்பு கொள்வதற்கான மொழியாக இருந்தது. சர் சி.வி. ராமன் தன் ஆய்வுகளை ஆங்கிலத்தில் எழுதித்தான் நோபல் பரிசு பெற்றார். அமர்த்யா சென்னும் அதே பாணியில்தான் பயணித்தார்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவர் ஜவாஹர்லால் நேரு. அவர் தாய்மொழி காஷ்மீரி. உத்தர பிரதேசத்தில் வாழ்ந்ததால் ஹிந்தி. ஆனால், அவர் படிப்பு மொழி ஆங்கிலம். ஒரு புத்தகம்கூட அவர் காஷ்மீரியிலோ, ஹிந்தியிலோ எழுதவில்லை.
சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் மராட்டிய மாநிலத்தில் தலித் குடும்பத்தில் பிறந்தார். அவர் ஆரம்பப் படிப்பு மராத்தியில்தான் இருந்தது. பின்னர், அவர் ஆங்கிலம் படித்தார். அதுவே அவர் மொழியாகிவிட்டது.
தன் வாழ்க்கையின் நோக்கத்தையும், தன் மேதைமையையும் அதன் வழியாகவே புலப்படுத்தினார். அவர் மராத்தி மொழியில் அதிகம் எழுதவில்லை.
மகாத்மா காந்தி தாய் மொழி குஜராத்தி. பிரிட்டன் சென்று ஆங்கிலம் படித்து பாரிஸ்டராகி இருந்தார். தென்னாப்பிரிக்காவில் பதினைந்து ஆண்டுகள் நிற வெறி, இன வெறியை எதிர்த்துப் போராடியபோது தமிழ், உருது, இந்துஸ்தானி, ஆங்கிலம் படித்துக் கொண்டார்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் களம் இறங்கியபோது ஆங்கில மொழிக்கு எதிராக இருந்தார். சுதந்திர நாட்டில் அன்னிய மொழி ஆட்சி மொழியாக இருக்க முடியாது என்றார். ஹிந்துஸ்தானிதான் இந்திய ஆட்சி மொழி என்பதில் அதிகமான அக்கறை காட்டினார். ஆனால், அவர் கைமீறி ஹிந்தி ஆட்சி மொழியாகி விட்டது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தலைவர்கள் ஆங்கில மொழியை அடிமைத்தனத்தின் எச்சமாகவே கருதினார்கள்.
அவர்களின் நோக்கம் அன்னிய மொழியை நீக்கிவிட்டு தாய் மொழியில் படிப்பைக் கொண்டுவர வேண்டும் என்பதுதான். அதோடு, நிர்வாகம் தாய் மொழியில் நடைபெற வேண்டும் என்பதாகவும் இருந்தது.
22 மொழிகள் பிரதானமான பேச்சு மொழியாகவும் எழுத்து மொழியாகவும் உள்ள இந்தியாவின் ஆட்சி மொழி ஹிந்தி ஒன்றுதான் என்று அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
பல மொழிகள் கொண்ட நாட்டில் ஒரு மொழிதான் ஆட்சி மொழி என்பதால், மாநில மொழிகள் இயல்பாகவே காலப் போக்கில் அழிந்துவிடும். உயர் கல்வி, ஆய்வுக்குப் பயன்படாத தேச மொழி மறைந்து போய்விடும்.
அறிவே மொழி இல்லை. தாய் மொழி, தேச மொழி, ஆட்சி மொழி, இறை மொழி என்பதற்காக ஒரு மொழி நீடித்து இருக்க முடியாது. வளமான வாழ்க்கையைத் தரும் மொழி, தன் மேதைமையை நிலைநாட்டப் பயன்படும் மொழிதான் வெல்லும் மொழியாக இருக்கும்.
அதனால்தான், உலகம் முழுவதிலும் ஆட்சி மொழிகளுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளில். ஐரோப்பிய யூனியன் நாடுகளின் ஆட்சி மொழியை வெல்லும் மொழியாக ஆங்கிலம் வருகிறது.
ஆதிமனிதர்கள் ஒரு மொழியைப் பேசிக் கொண்டு நல்வாழ்க்கையைத் தேடி புலம் பெயர்ந்து சென்றார்கள். பெரும் கூட்டமாகச் சென்ற அவர்கள் தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்தார்கள். அதனால், புதிய புதிய மொழிகள் தோன்றின.
அவர்களின் நீண்ட பயணம் திரும்புகிறது. ஆதியில் அவர்கள் பேசிய மொழி என்னவென்று பெயர் சொல்லத் தெரியவில்லை. ஆனால், தற்போது கற்கத் தலைப்பட்டிருக்கும் மொழி தெரிகிறது.
அது ஆங்கில மொழி

Friday, 9 January 2015

>01.01.2015 நிலவரப்படி பதவி உயர்விற்குத் தகுதியான தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தல்

>01.01.2015 நிலவரப்படி பதவி உயர்விற்குத் தகுதியான தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தல் அறிவுரைகள்-நெறிமுறைகள் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை
DEE-00322/D1/15-dt-7.1.15
Ele.dir.seeks New panel preparation to all teachers 1.1.15 as on date.

>DGE- For Plus Two March 2015 Public Exams candidates can apply under Tatkal Scheme from Feb 5.2.15 to 7.2.15

>DGE- Plus Two Private Candidates can download the Hall Ticket from Feb 2.2.15 to 4.2.15 for Public Exams

>DSE- Dir ordered HMs to conduct Special classes in morning & evening for 10th & 12th std students.

Wednesday, 7 January 2015

அரசு ஊழியர்களுக்கு கம்ப்யூட்டர் அறிவு கட்டாயம்

அரசு ஊழியர்களுக்கு கம்ப்யூட்டர் அறிவு கட்டாயம்: 50 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு உத்தரவு
      பெங்களூரு: 'அரசுத் துறைகளில், 50 வயதிற்கு உட்பட்ட, 'சி' பிரிவு ஊழியர்கள் அனைவரும், கம்ப்யூட்டர் கல்வி கற்பது அவசியம்' என, கர்நாடக அரசு உத்தரவிட்டு உள்ளது. அரசு நிர்வாகத்திலுள்ள துறைகள், கம்ப்யூட்டர் மயமாகி வருகின்றன. இதனால், 'சி' குரூப் ஊழியர்களில், 50 வயதுக்குட்பட்டவர்கள், கண்டிப்பாக கம்ப்யூட்டர் கல்வி கற்க வேண்டும் என, கடந்த 2ம் தேதி, அரசு உத்தரவிட்டு உள்ளது.

800 ஊழியர்கள்:

தற்போது, சட்டசபையில், 800 ஊழியர்கள் உள்ளனர். இவர்களில், 200 பேர், 'சி' குரூப் ஊழியர்கள். இவர்களில், 20 பேர் அடங்கிய குழுக்கள் வீதம், ஒவ்வொரு குழுவினருக்கும், 5ம் தேதியிலிருந்து, கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது. அரசுக்கு சொந்தமான, கர்நாடக மாநில எலக்ட்ரானிக் வளர்ச்சித் துறை (கியோனிக்ஸ்) மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த பயிற்சி மற்றும் தேர்வுகள், வரும் மார்ச் 13ம் தேதியுடன் முடிவடைகிறது. அனைத்து ஊழியர்களும், இப்பயிற்சியில் கண்டிப்பாக சேர வேண்டும் என, அரசு உத்தரவிட்டிருப்பதோடு, இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு, சட்டசபை செயலகம் சான்றிதழ் வழங்கும். ஐந்து அல்லது ஆறு நாட்களுக்கு, கம்ப்யூட்டர் அடிப்படை பயிற்சிகளான வார்த்தை சேர்க்கை, எம்.எஸ்.ஆபீஸ், பிரிண்டிங், இன்டர்நெட், கன்னடம் அச்சடிப்பு மென்பொருள் போன்றவைகளில் பயிற்சி அளிக்கப்படும்.

90 நிமிட தேர்வு:

பின், கர்நாடக பொது சேவை (கம்ப்யூட்டர் கல்வி தேர்வு) வைக்கும், 90 நிமிட தேர்வில், 80 மதிப்பெண் பெற்றால், அடுத்த பதவி உயர்வு, ஆண்டுதோறும் அளிக்கப்படும் சம்பள உயர்வு ஆகியவைகளை பெற, தகுதி உடையவர்களாகின்றனர்.

ரூ.5,000 ஊக்கத்தொகை!

கம்ப்யூட்டர் கல்வியை முடித்து, தேர்வில் தேர்ச்சி பெற்று, அதற்கான சான்றிதழை, சட்டசபை செயலகத்தில் சமர்ப்பித்தால். 5,000 ரூபாய் ஊக்கத்தொகை, ஒரே தவணையில் வழங்கப்படும்.

'குரூப்-டி'க்கும் பொருந்தும்:

'குரூப் - டி' ஊழியர்களும் (டிரைவர்கள், வனத்துறை பாதுகாவலர்கள், ஏட்டுகள், கலால் துறை பாதுகாவலர்கள், உதவியாளர்கள்), பதவி உயர்வு தேவையெனில், கம்ப்யூட்டர் கல்வியில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் தாக்கல் செய்வது அவசியம் என, சட்டசபை செயலகம் அறிவித்துள்ளது.

10 (ஏ) அடிப்படையில் அரசுப் பணி நியமனம் என்ற விதி செல்லாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

10 (ஏ) அடிப்படையில் அரசுப் பணி நியமனம் என்ற விதி செல்லாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
              வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே பணி  நியமனம் செய்ய வழிவகுக்கும் அரசுப் பணிகளின் விதி 10 (ஏ) செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

           எஸ்.விமல்ராஜ், ஜி.ஜோசப் தாமஸ் ரிச்சர்டு, வி.முருகையா உள்பட ஐந்து பேர் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், நாங்கள் 2006-08-ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்தோம்.
 
அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படுகிறது. இதற்கு, அரசுப் பணிகளின் விதி 10 (ஏ) வழிவகை செய்கிறது. இந்த விதியால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம்.

இந்த விதி அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. எனவே, இந்த விதியை ரத்து செய்ய வேண்டும், செல்லாதது என அறிவிக்க வேண்டும் என மனுவில் கோரினர்.

இந்த மனுவை விசாரணை செய்த தனி நீதிபதி அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து மனுதாரர்கள் ஐந்து பேரும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், பி.ஆர்.சிவகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: உயர் நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்களில் காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான ஒரு வழக்கில், வேலைவாய்ப்பு அலுவலகங்களிலிருந்து பதிவு மூப்புப் பட்டியல் பெறுவது மட்டுமில்லாமல், இரண்டு பத்திரிகைகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து விளம்பரம் செய்ய வேண்டும். அதில், ஒன்று, அதிகம் படிக்கக் கூடிய வட்டார மொழி பத்திரிகையாக இருக்க வேண்டும்.

அவ்வாறு விளம்பரம் செய்து, அதன் மூலம் வரும் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்தும் பணி நியமனம் செய்ய வேண்டும் என கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

இதே போன்று, சென்னை உயர் நீதிமன்றமும் ஒரு வழக்கில் கடந்த ஆண்டு ஒரு உத்தரவு பிறப்பித்தது. ஆனால், அரசுப் பணி விதி 10 (ஏ) வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்ய வகை செய்கிறது.

எனவே, இந்த விதியை செல்லாது என அறிவிக்கிறோம் என நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

Friday, 2 January 2015

தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு BRITISH COUNCIL மற்றும் "EARLY LITERACY PROGRAMME என்ற தலைப்பில் 4 நாட்கள் வட்டார அளவில் பயிற்சி

தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு BRITISH COUNCIL மற்றும் "EARLY LITERACY PROGRAMME என்ற தலைப்பில் 4 நாட்கள் வட்டார அளவில் பயிற்சி

அகஇ - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு BRITISH COUNCIL மற்றும் அகஇ இணைந்து "EARLY LITERACY PROGRAMME (DEVELOPING READING, WRITING SKILLS IN ENGLISH) என்ற தலைப்பில் 4 நாட்கள் வட்டார அளவில் பயிற்சி மூன்று கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக
05.01.2015 அன்று கலந்துகொள்ளும் ஆசிரியர்கள் பள்ளிகளில் நடைமுறைபடுத்தி அடுத்தபடியாக 19.01.2015, 27.01.2015 மற்றும் 03.02.2015 ஆகிய தேதிகளில் கலந்துகொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

British council English Training for Primary Teachers-3 batch dates

>1st batch-Jan 5,19,27 & Feb 3

>2nd batch-Jan 6,20,28 & Feb 4

>3rd batch-Jan 7,21,29 & Feb 5

பாடநூல்- கல்வியியல் கழக செயலராக அறிவொளி நியமனம்

பாடநூல்- கல்வியியல் கழக செயலராக அறிவொளி நியமனம்
           தமிழ்நாடு பாடநூல்-கல்வியியல் பணிகள் கழகத்தின் செயலாளர் பொறுப்பு க.அறிவொளியிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் இயக்குநராக அறிவொளி உள்ளார்.

                 பாடநூல்-கல்வியியல் பணிகள் கழகத்தின் செயலாளராக இருந்த அன்பழகன், கடந்த 31-ஆம் தேதியன்று பணியில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அந்தப் பொறுப்பு கூடுதலாக, அறிவொளியிடம் அளிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!