Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 31 July 2015

TODAYS NEWS...

TODAYS NEWS...
கல்விச்சிறகுகள்
☎☎☎☎☎☎☎☎☎
*ஒட்டுமொத்த தமிழகமும் கலாமுக்கு அஞ்சலி

*7th Pay Commission Likely to Hike Salaries By 4b0%: Credit Suisse

*Flash News: கலந்தாய்வு நெறிமுறைகளில் மாற்றம்: 3ஆண்டுகள் என்பது ஓராண்டாக குறைப்பு?

*ஜேக்டோ சார்பில் 15 அமசக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் தொடர் முழுக்க உண்ணாவிரதப் போராட்டம்

*திட்டமிட்டப்படி ஆகஸ்டு 1ஆம் தேதி ஜாக்டோவின் "மாபெரும் தொடர் முழுக்க உண்ணாவிரதப் போராட்டம்" சென்னையில் நடைபெறும்

*03.08.2015-வல்வில் ஓரி விழா-நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் செயல்முறை

*CTET: செப்., 20 மத்திய பள்ளிகளுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு

*தமிழகத்தில் 7,243 நர்ஸ் தேர்வு:தடை விதிக்க ஐகோர்ட்மறுப்பு
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

Thursday, 30 July 2015

கல்விச்சிறகுகள் தலைப்புச்செய்திகள்

கல்விச்சிறகுகள் தலைப்புச்செய்திகள்
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

📕30/07/2015 அன்று நடைபெற இருந்த ஆதி திராவிட நல பள்ளிகளின் பொதுமாறுதல் கலந்தாய்வு தேதிகள் மாற்றம் செய்து உத்தரவு

📕TNPSC: குரூப் - 2 'கீ ஆன்சர்' குறித்து ஆக., 4க்குள் கருத்து சொல்லலாம்

📕சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக அரசு பள்ளிகளில் சிறப்பு பாடத்திட்டம்

📕TNPSC: நேர்காணல், கவுன்சிலிங் தேதிகள் மாற்றம்

📕10-ம் வகுப்பு மாணவர்களின் முழு விவரங்களை பள்ளி அளவில் தயாரிக்க அரசு தேர்வுத்துறை உத்தரவு

📕மைக்ரோசாப்டின் விண்டோஸ்-10 இன்று வெளியாகிறது: விண்டோஸ்-7, 8 வைத்திருப்பவர்கள் இலவசமாக அப்டேட் செய்யலாம்

📕ஆசிரியர்கள் பொது மாறுதல் - ஓராண்டு பணிபுரிந்தாலே கலந்து கொள்ளலாம் என அரசாணை விரைவில் வெளிவரலாம்.

📕TNPSC GR.II EXAM(26/07/2015) - OFFICIAL ANSWER KEY PUBLISHED BY TNPSC

📕தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 தேர்வுக்கான விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

📕புதுச்சேரியில் இன்று  பொதுவிடுமுறை; கடைகள் அடைப்பு

📕கற்பித்தலில் அலட்சியம்: இடைநிலை ஆசிரியர் சஸ்பெண்ட்
பள்ளிக்கல்வி - தகவல்

📕தொழில் நுட்பத்தை பள்ளியில் சிறப்பாக பயன்படுத்தும் ஆசிரியர்களுக்கு "ICT" திட்டத்தின் கீழ் தேசிய விருது - ஆசிரியர்களின் பட்டியல் வெளியிட்டு இயக்குனர் செயல்முறைகள்

📕TNPSC:சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு ஹால் டிக்கெட்

📕அப்துல் கலாமை உயர்த்திய அரசு பள்ளிகள்

📕அரசு ஊழியர்களுக்கு ஆதார் அட்டை இனி, கட்டாயம்! 60 நாட்களுக்குள் எடுக்க காலக்கெடு

📕தமிழகத்தில் ஒரு வாரம் துக்கம்அரை கம்பத்தில் தேசியக்கொடி

📕விரைவில் அமலுக்கு வருகிறது புதுத்திட்டம் - ஆதார் அட்டை நகல் வழங்காத போலீசாருக்கு சம்பளம் கட்

📕அஞ்சலகங்களில் ஓய்வூதியம் பெற ஆதார் எண் அவசியம்

📕விருப்ப ஓய்வுக்கு பின் பணியாற்றக்கூடாது - உயர்நீதிமன்றம்
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

Wednesday, 29 July 2015

கல்வி தலைப்புச்செய்திகள்

கல்வி தலைப்புச்செய்திகள்
கல்வி சிறகுகள்
📗📕📗📕📗📕📗📕📗

📚கலாம் இறுதிச்சடங்கை முன்னிட்டு ஜூலை 30-ம் தேதி அரசு விடுமுறை

📚TNTET:ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது நடத்தப்படும்?

📚CTET: CENTRAL TEACHER ELIGIBILITY TEST – SEPT 2015

📚SSA-மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு நிரந்தர பயணப்படி 01.04.2015 முதல் உயர்த்துதல் ஆணை !!

📚கட்டாயப்படுத்தி திறக்கப்படும் பள்ளிகள்:பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை

📚 தமிழக அரசு.
ஆசிரியர் இடமாறுதல் விதிமுறைகளை மாற்ற திட்டம் 'கவுன்சிலிங்' தேதி அறிவிப்பு திடீரென தள்ளிவைப்பு

📚மாணவர்கள் 'டாப் - ரேங்க்'குக்கு திட்டம்

📚ஆசிரியர்களுக்கான பணியிடமாறுதல்: 3 ஆண்டுகள் நிபந்தனையை குறைக்க ஆலோசனை.

📚தொடக்க கல்வியில் 50:50 முறை மீண்டும் வருமா: ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

📚ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு வரும் 29 ம்தேதி முதல் தொடங்கும் என்று தமிழக அரசு அறிவிப்பு

📚Adi Dravidar and Tribal Welfare Department online counselling for Teachers Transfers and postings

📚'ஆசிரியர் பணியை நேசித்தவர்'
அறிவியல் விழாவில் அரசு பள்ளிகள்!

📚பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆக.1-ல் கலந்தாய்வு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

📚சென்னை கணித அறிவியல் நிலையத்தில் உதவித்தொகையுடன் பயிற்சி

📚பொறியியல் பொது கலந்தாய்வு இன்றுடன் முடிகிறது

📚கலாம் இறுதிச்சடங்கை முன்னிட்டு ஜூலை 30-ம் தேதி அரசு விடுமுறை
🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓

Tuesday, 28 July 2015

Kalvi Siragukal seithigal

Kalvi Siragukal seithigal
🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓

🙏திரு.அப்துல் கலாம் அவர்கள் மறைவு-கல்விச்சிறகுகள் செய்தியின் ஆழ்ந்த இரங்கல்

🙏அப்துல் கலாம் மறைவு
கலாம் மறைவு: 7 நாட்கள் அரசுமுறை துக்கம் அனுசரிப்பு

🙏இன்று  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: புதுச்சேரி அரசு அறிவிப்பு

🙏ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு
"அப்துல்கலாம்"‬ என்றொரு தமிழன் - வாழ்க்கையும் கல்வியும்...

🙏ஆசிரியர்கள் இடமாற்றம்: புதிய விதிகளுக்கு ராமதாஸ் எதிர்ப்பு
இடமாறுதல் கவுன்சலிங் நெறிமுறைகளில் மாற்றம்: ஆசிரியர்கள் எதிர்ப்பு எதிரொலி

🙏பொது கலந்தாய்வு நாளை முடிகிறது: என்ஜினீயரிங் காலி இடங்கள் ஒரு லட்சத்தை தாண்டுகிறது

🙏அரசாணை தேவை
தமிழகத்தில் தமிழைப் படிக்காமலேயே பட்டம் பெறும் அவல நிலை: கருணாநிதி குற்றச்சாட்டு

🙏DEE - PAY AUTHORIZATION FOR 1610 SEC.GR.TEACHERS

🙏ஆதி திராவிடர் பள்ளி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு.

🙏மோடி சுற்றுப்பயணம் செல்லாத நாடு எது?: தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் பரபரப்பு

🙏அகஇ - மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வாயிலாக பள்ளிகளில் கழிவறைகள் கட்டிதருதல் சார்ந்து மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்....

🙏ஆசிரியர்களுக்கு பயிற்சி கட்டாயம்:தற்செயல் விடுப்புக்கு அனுமதி மறுப்பு.

🙏மதுவின் தீமைகள்: மாணவர்களுக்கு அறிவுறுத்த கல்வித்துறை உத்தரவு

🙏அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: சென்னையில் 29-இல் ஆலோசனை

🙏TNPSC: குழந்தை நல அலுவலர்கள் நியமன அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்: டி.என்.பி.எஸ்.சி தலைவர் அறிவிப்பு

🙏உதவி பேராசிரியர் நியமிக்க உயர் நீதிமன்றம் தடை

🙏முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு எதிரொலி : ஓவியம், தையல் பாடங்களுக்கு புதிய பாடத்திட்டம் தயாரிக்க குழு அமைப்பு

🙏பொதுத்தேர்வுக்கு பெயர் பட்டியல் பிளஸ்2 மாணவர்கள், பெற்றோரிடம் உறுதிமொழிப்படிவம் வாங்க வேண்டும்: தேர்வுத்துறை உத்தரவு
📓📓📓📓📓📓📓📓📓

Monday, 27 July 2015

TODAYS NEWS

TODAYS NEWS...
KALVI SIRAGUKAL
📚📚📚📚📚📚📚📚📚

*TNPSC: 2 மாதத்தில் குரூப் 2 தேர்வு முடிவு

*பள்ளிக்கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் 29.07.2015 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.

*"CRC" எஸ்கேப் ஆசிரியர்களுக்கு ஆப்சென்ட் எச்சரிக்கை

*228 சத்துணவு சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

*ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய வாய்ப்பு! தபால் மூலமும் விண்ணப்பிக்கலாம்

*பணிநிரவல் ஆசிரியர்கள் எதிர்ப்பு

*அரசு எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்பு: அனைத்து இடங்களும் நிரம்பியது

*அதிகார பிரச்னைகளால் பி.எட்., சேர்க்கை இழுபறி:உச்சகட்ட குழப்பத்தில் தடுமாறும் கல்வித்துறை

*பணத்தை ரீபண்ட்’ பெற விரும்பினால் ‛ஆன்-லைன்’மூலமே வருமான வரி தாக்கல்

*மத்திய அரசின் புதிய திட்டம்: இனி அரசு பள்ளி மாணவர்களும் இங்கிலிலீஷில் பேசலாம்!

*தமிழகத்தில் 75 கல்வி அலுவலர் பணியிடங்கள் காலி.

*.தினமும் சுமார் 4 மணி நேரம் ஆபாசப் படங்களை பார்க்கும் மாணவர்கள்: ஆய்வக தகவல்.

*முந்தைய ஆண்டு அடிப்படையில் பணிநிரவல்: ஆசிரியர்கள் எதிர்ப்பு

*மாவட்டந்தோறும் உள்ள பள்ளிகளை கண்காணிக்க இணை இயக்குனரை தலைவராக கொண்ட கண்காணிப்பு குழு- பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தகவல்

*அரசு பள்ளி பராமரிப்பு நிதியில் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்க உத்தரவு

*சென்னை அரசு பள்ளியில் லட்சக்கணக்கில் வசூல் பட்டியலுடன் பெற்றோர் - ஆசிரியர் கழகம் புகார்

*ஓவியம், தையல் பாடம் ஆய்வு செய்ய சிறப்பு குழு

*சமச்சீர் கல்வி தரம் தாழ்ந்து விட்டது:தனியார் பள்ளி சங்கத்தினர் புகார்

*மாணவர்களுக்கு ஆதார் முகாம்:பள்ளிகளில் நடத்த ஏற்பாடு
✅✅✅✅✅✅✅✅✅

Sunday, 26 July 2015

கல்விச்சிறகுகளின் கல்வி தலைப்புச்செய்திகள்

கல்விச்சிறகுகளின் கல்வி தலைப்புச்செய்திகள்
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

📚ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு விதிகளில் மாற்றம் வர வாய்ப்புள்ளது - பள்ளிக்கல்வி இயக்குனர்

📚மெட்ராஸ் உயர் நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றமாக விரைவில் பெயர் மாற்றம்

📚ஆசிரியர்கள் எதிர்பார்த்த பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு ஆக.,1 அல்லது 2ம் தேதி துவங்க வாய்ப்பு?
ஆக.,1ல் ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு?

📚ஓய்வூதிய திட்ட கணக்கில் குளறுபடி: பல ஆயிரம் கோடி ரூபாய் 'அம்போ!'

📚குடித்துவிட்டு வந்த மாணவர்களுக்கு " TC " - மீண்டும் சேர்க்க மாவட்ட ஆட்சியர் பரிந்துரையை நிராகரித்த தலைமை ஆசிரியை - விளக்கம் கேட்டு தலைமை ஆசிரியைக்கு நோட்டீஸ்

📚இன்று  டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு.

📚TNPSC தேர்வு விவரம் இணையதளத்தில் வெளியீடு

📚பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு: மதிப்பெண் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யலாம்-

📚பத்தாம் வகுப்பு தேர்வு வினாத்தாளில் மாற்றம்: பள்ளி கல்வி இயக்குனர் பேட்டி

📚பிளஸ் 2 மாணவர்களின் ரேஷன், ஆதார் எண் சேகரிப்பு

📚ஆடிப் பெருக்கு தருமபுரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

📚மாணவர்களுக்கு சைக்கிள்தாமதமின்றி வழங்க உத்தரவு
மருத்துவ நுழைவுத்தேர்வு: நாடு முழுவதும் 6.3 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்பு

📚ஹெல்மெட் அணிவதில் உள்ள நடைமுறை சிரமங்கள் கருத்தில் கொள்ளப்படும்: உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் கருத்து

📚பவுன் விலை ரூ.18,752 ஆக சரிவு: நகைக் கடைகளில் விற்பனை 40% அதிகரிப்பு - அலைமோதும் மக்கள் கூட்டம்
📕📗📒📕📗📒📕📗📒

Wednesday, 22 July 2015

ஆர்கே கல்வி தலைப்புச்செய்திகள்

ஆர்கே கல்வி தலைப்புச்செய்திகள்
📚📚📚📚📚📚📚📚📚

📕ஆசிரியர் தகுதித்தேர்வு -தமிழக அரசு மேல்முறையீடு! வழக்கு 2 வாரகாலத்துக்கு ஒத்திவைப்பு!

📕அரசு 1200 பள்ளிகளை மூடும் முடிவை கைவிட வேண்டும்: கருணாநிதி

📕இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு 2-வது கட்ட கலந்தாய்வு ஆக.7-ம் தேதி: ஜூலை 23 முதல் விண்ணப்பிக்கலாம்

📕கம்ப்யூட்டர் மூலம் பாடம் கற்பித்தல்: அரசு பள்ளி ஆசிரியருக்கு விருது!

📕எந்தவொரு அரசுப் பள்ளியையும் மூடும் எண்ணம் கிடையாது: தமிழக பள்ளிக் கல்வித்துறை

📕TET வழங்கின் தற்போதய நிலை...

📕ஆசிரியர் கலந்தாய்வு குறித்து "WhatsApp" வந்த செய்தி தவறானதா???? - பள்ளிக்கல்வி இயக்குனர் விளக்கம்

📕TET தொடர்பான வழங்குகள் 21.07.15 இன்று விசாரணைக்கு வருகிறது.

📕தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 4 வகுப்புகளுக்குSABL - LESSON PLAN எழுத தேவை இல்லை

📕அனைவருக்கும் கல்வி திட்ட பயிற்சி:ஆசிரியர்கள் பங்கேற்பு அவசியம்

📕தமிழகத்தில் பள்ளிகள்: ஒரு புள்ளி விவரம்
அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்துக்கு புதிய இணை இயக்குநர்

📕வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர்

📕உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழகம் முதலிடம்'

📕கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு: ஆகஸ்ட் 6-ல் கலந்தாய்வு தொடக்கம்

📕டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக பட்டப்படிப்பு கலந்தாய்வு தொடக்கம்: பொதுப்பிரிவில் பங்கேற்க 306 மாணவர்களுக்கு அழைப்பு

📕தமிழக அரசின் 3-ஆம் கட்ட தடுப்பூசி முகாம்: 7 மாவட்டங்களில் இன்று தொடக்கம்

📕ப்ளே ஸ்கூல்' திருத்திய விதிமுறைகள் வெளியீடு

📕அழகப்பா பல்கலை. தொலைநிலைக் கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு

📕பி.எப்., அலுவலகத்தில் அதிகரிக்கும் காலியிடங்கள்

📕ராணுவத்தில் சேர 'ஆன் - லைனில்' விண்ணப்பம்
அரசு இணையதளத்தில் வேலை
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

Tuesday, 21 July 2015

TODAYS NEWS

TODAYS NEWS...
RK KALVI
🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺
*ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு: உத்தேச அட்டவணை இன்னும் உறுதி செய்யப்படவில்லை, விரைவில் தேதி அறிவிப்பு

*CRC பயிற்சி வகுப்பு புறக்கணிப்பு:4,000 ஆசிரியர்களுக்கு அதிரடி "நோட்டீஸ்'

*தமிழகத்தில் 1200 அரசுப் பள்ளிகள் மூடலா?- ராமதாஸ் அதிர்ச்சி

*மதுரையில் 6 தொடக்கப் பள்ளிகளை மூட முடிவு: ஆசிரியர்கள் சங்கக் கருத்தரங்கில் கண்டனம்

*தொடக்கக்கல்வி - இனிவரும் CRC பயிற்சி வகுப்புகளுக்கு தொடக்க/உயர்தொடக்க நிலை ஆசிரியர்கள் வருகையை கண்காணிக்க மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவர்களுக்கும், உதவித் தொடக்கக்கல்வி அலுவர்களுக்கும் இயக்குனர் உத்தரவு

*டிப்ளமோ நர்ஸிங் படிப்புக் காலம் 3 ஆண்டுகளாக குறைப்பு: நடப்பு கல்வி ஆண்டில் இருந்து அமலுக்கு வருகிறது

*வருமான வரி தாக்கல் செய்வதற்காக எளிமையாக்கப் பட்ட புதிய படிவம் வருமான வரி அலுவலகத்தில் இன்று முதல் விநியோகம்

*பள்ளிக்கல்வி - தொழிற்கல்வி - அரசானை எண்: 35 இன் படிமுறையான ஊதிய விகிதத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் பணிவரன் முறை சார்ந்த விவரங்களை கோரி இயக்குனர் செயல்முறைகள்

*2,160 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வு.

*பொது வேலை நிறுத்தத்தில் ஆசிரியர்கள்:மாநில செயலாளர் பேட்டி

*மாணவர் சேர்க்கையில் புதிய மாற்றம்: பொறியியல் பட்டதாரிகளும் பி.எட். படிப்பில் சேரலாம்

*பிளாஸ்டிக் தேசிய கொடிக்கு தடை

*நிரந்தர பணிக்கு ஆசிரியர்கள் தேவை

*பூஜ்ஜியத்தை அழுத்தினால் மானியம் ரத்தாகாது இந்தியன் ஆயில் நிறுவன உயர் அதிகாரி அறிவிப்பு

*மாணவர்கள் எண்ணிக்கை குறைவால் 1,200 அரசு பள்ளிகளை மூட முயற்சி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு

*இடைநிலை ஆசிரியர்களுக்கு மறுக்கப்படும் ஊதியமும் இழைக்கப்படும் அநீதியும் :-

*அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் போராட்ட அறிவிப்பு

*வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களை பள்ளிக்கு அனுப்ப அரசு முன்வர வேண்டும்

*கால்நடை மருத்துவப் படிப்பு சேர்க்கை: தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு

*மாணவர்களின் உயர்வுக்கு மூன்று யோசனைகள்: நெல்லை சு.முத்து

*"டிப்ளமோ நர்சிங்' 22ல் விண்ணப்பம்

*தனியார் பள்ளிகளுக்கு ஆதரவு அரசு மீது கல்வி வல்லுனர் புகார்
✅✅✅✅✅✅✅✅✅

Monday, 20 July 2015

ஆர்.கே. கல்விச்செய்திகள்

ஆர்.கே. கல்விச்செய்திகள்
📚📚📚📚📚📚📚📚📚

☎அரசு பள்ளி ஆசிரியர் இடமாறுதல், பதவி உயர்வுக்கு கலந்தாய்வு: ஜூலை 29 முதல் ஆக.18 வரை நடத்த கல்வித்துறை ஏற்பாடு

☎IGNOU- B.Ed. Prospectus for January 2016

☎சத்துணவு பணியாளர் சங்க நிர்வாகிகள் தேர்வு

☎C.M Cell Petition Regarding Web Pay Roll System

☎பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க 10 பாடங்களில் சிறப்பு பயிற்சி

☎CPS திட்டத்தில் உள்ளவர்கள் 25% தொகையை திரும்ப பெற்று கொள்ள வகைசெய்யும் ஆணை

☎பி.எட்., படிப்பில் புது விதிமுறைகளை அமல்படுத்த உத்தரவு

☎சென்னையில் 1.70 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண் இல்லை சிறப்பு முகாம்கள் நடத்த பள்ளி கல்வித்துறை ஏற்பாடு

☎வரிகள், கட்டணங்களை ஒரே இடத்தில் செலுத்தலாம்: 22 மாவட்டங்களில் 152 இ-சேவை மையங்கள் - முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்

☎விதிமுறைகளுக்கு கட்டுப்படாமல் அங்கீகாரமின்றி இயங்கும் சுயநிதி மெட்ரிக் பள்ளிகளை மூட வேண்டும்' -TNPTF

☎நர்ஸிங், பி.பார்ம் 19,740 விண்ணப்பம் சமர்ப்பிப்பு
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

Sunday, 19 July 2015

கல்வி தலைப்புச் செய்திகள்

கல்வி தலைப்புச் செய்திகள்
ஆர். கே.கல்வி
📗📕📗📕📗📕📗📕📗
🍀TET தொடர்பான வழங்குகள் 21.07.15 அன்று விசாரணைக்கு வருகிறது.

🍀காவல்உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு முடிவு வெளியீடு.

🍀2015-16 ம் கல்வி ஆண்டு பள்ளி கல்வித்துறை வேலை மற்றும் விடுமுறை நாட்கள் உத்தேச பட்டியல்

🍀ஆசிரியர்கள் கலந்தாய்வு - நிபந்தனைகள்

🍀வேளாண்மை கலந்தாய்வு: 644 விண்ணப்பங்கள் நிராகரிப்பு.

🍀தட்கல் முன்பதிவில் விதிமுறை தளர்வு: செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது

🍀புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது கண்காட்சி. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவா் திரு சு.கணேஷ் இ.ஆ.ப அவா்கள் தலைமை தாங்கி திறந்து வைத்தார்.

🍀விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியம்,வெள்ளையாம்பட்டு - ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகள் சாதனை.

🍀பள்ளிக்கல்வி - குறுவள மைய பயிற்சி - 25.07.2015 அன்று நடைபெறவுள்ள குறுவள மைய பயிற்சியில் உயர்நிலை / மேல்நிலையில் பணிபுரியும் ஆசிரியர்கள் 100% கலந்து கொள்ள இயக்குனர் உத்தரவு

🍀கவுன்சலிங்கில் பழைய முறையை அமல்படுத்த ஆசிரியர்கள் கோரிக்கை.

🍀பி.எட்., மாணவர் சேர்க்கை விதிமுறைகள் அறிவிப்பு

🍀பாடத்திட்டம் இல்லாமல் எப்படி பாடம் நடத்துவது ஓவிய ஆசிரியர்கள் முதல்வர் அலுவலகத்தில் மனு.

🍀ஒழுக்கமற்ற செயல்பாடுகளில் ஈடுபடும் மாணவர்களை தடுக்க நடவடிக்கை.

🍀டான்சி நிறுவனத்தில்: இளநிலை உதவியாளர், கணக்காளர் காலியிடத்திற்கு மாநில அளவில் பரிந்துரை

🍀வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31 கடைசி நாள்

🍀அரசு கணினி சான்றிதழ் தேர்வு முடிவு வெளியீடு.

🍀மருத்துவப் படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு, வரும் 22-ம் தேதி தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது.
☎☎☎☎☎☎☎☎☎

Saturday, 18 July 2015

உங்கள் வீட்டில் இருக்கா 15 மூலிகைகள்?

உங்கள் வீட்டில் இருக்கா 15 மூலிகைகள்?
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

அந்தக் காலங்களில் வீட்டுக்கு வீடு தாத்தா, பாட்டிகள் இருப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு எந்த நோய் என்றாலும் அதற்கான மூலிகைகளைக் கொண்டு கை வைத்தியம் செய்தே குணப்படுத்திவிடுவார்கள். ஆனால், இன்று அநேக வீடுகளில் தாத்தா பாட்டிகளே இல்லை. பணம், வேலை என்று பிள்ளைகள் நகர வாழ்க்கையைத் தேடிச் சென்று விட்டதால் தாத்தா, பாட்டிகளின் முக்கியத்துவம் இன்றைய குழந்தைகளுக்கு தெரியாமல் போய்விட்டது.

இன்று 60 சதவீத குழந்தைகளுக்கு தாத்தா பாட்டியின் பாசம், அரவணைப்பு கிடைப்பதில்லை. சின்னத் தும்மல், தலைவலி வந்தால் கூட இன்று உடனே டாக்டரிடம் தூக்கிச் சென்று விடுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் தலைவலி முதல் பிரசவம் வரை வீடுகளிலேயே கை வைத்தியத்தால் பார்த்திருக்கின்றனர். வீட்டில் வளரும் மூலிகைகளைப் பறித்து உரல் அல்லது அம்மியில் வைத்து அரைத்து கசாயம் போட்டு கொடுக்க இன்று பாட்டிமார்கள் இல்லை. கஷாயம் குடிக்க மறுக்கும் பேரனை ஓடிப் போய் பிடித்து மடியில் உட்காரவைக்க தாத்தாக்களும் இல்லை. ஆனாலும், தாத்தா, பாட்டிகள் இல்லாத குறையைப் போக்க மூலிகை இருக்கிறது நம்மிடம்.

வீட்டில் இருக்க வேண்டிய 15 மூலிகைகள், அவற்றின் பயன்பாடுகள் குறித்து நெல்லை மாவட்டம், பாபநாசத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் மைக்கேல் ஜெயராசு விளக்குகிறார். “பெரும்பான்மையான வீடுகளில் மூலிகை வளர்ப்பதை விட்டுவிட்டு அழகுக்காக மலர்ச் செடிகளை வளர்த்து வருகின்றனர். ஒரு வீட்டில் 15 மூலிகைகள் எப்போதும் இருக்க வேண்டும். அவை என்னவென்றால் துளசி, தூதுவளை,சோற்றுக்கற்றாழை, மஞ்சள் கரிசாலங்கண்ணி, பொன்னாங்கண்ணி, நேத்திரப்பூண்டு, நிலவேம்பு, பூலாங்கிழங்கு, ஓமவள்ளி, அருகம்புல், பூனை மீசை, ஆடாதொடை, நொச்சி, தழுதாழை, கழற்ச்சி ஆகியவைதான் இந்த மூலிகைகள். இந்த மூலிகைகள் ஒவ்வொன்றையும் எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

1. துளசி

துளசியுடன் மிளகு, வெற்றிலை மற்றும் வேம்பு பட்டை ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் காய்ச்சல் குணமாகும். துளசி இலையை புட்டு போல அவித்து, இடித்து, பிளிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி குணமாகும். துளசி இலையை சாதரணமாக மென்றுத் தின்றால் ஜீரண சக்தி அதிகரிப்பதோடு, பசியும் அதிகரிக்கும்.

2. தூதுவளை

தூதுவளையுடன் மிளகு சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் வறட்டு இருமல் குறையும். தூதுவளை பழத்தை வத்தலாக காயவைத்து, வதக்கி சாப்பிட்டால் கண் குறைபாடுகள் நீங்கும். தூதுவளையில் கால்சியம் சத்துக்கள் அதிகமுள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளை கீரையுடன் பருப்பு மற்றும் நெய் சேர்த்து சமைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும். இதன் முள்செடி, தண்டு, இலை, வேர் ஆகியவற்றை நிழலில் 5 நாட்கள் காயவைத்து பொடி செய்து தேன் அல்லது பாலில் கலந்து சாப்பிட ஆஸ்துமா குறையும். காதுமந்தம், நமச்சல், பெருவயிறு மந்தம் ஆகியவற்றிற்கும், மூக்கில் நீர்வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நோய் ஆகியவற்றிற்கும் தூதுவளை கீரை சிறந்தது.

3. சோற்றுக்கற்றாழை

இளம் பெண்களுக்கு வரும் எல்லா நோய்களையும் இது குணப்படுத்துவதால் சோற்றுக்கற்றாழைக்கு குமரிகற்றாழை என்று வேறு பெயரும் உண்டு.சோற்றுக்கற்றாழையை வெட்டி பச்சை நிறத்தோலை நீக்கிவிட்டு, 7 முதல் 8 முறை தண்ணீர்விட்டு நன்கு கழுவி சுத்தம் செய்து, அடுப்பில் ஏற்றி 1 கிலோ கற்றாழைக்கு 1 கிலோ கருப்பட்டியைத் தட்டிப்போட்டு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். கருப்பட்டி தூள் கரைந்து பாகு பதத்திற்கு வந்ததும் அதனுடன் கால் கிலோ தோல் உரிக்கப்பட்ட பூண்டினை போட்டு மீண்டும் கிளற வேண்டும். பூண்டு வெந்த பதத்திற்கு வந்தவுடன் இறக்கிவிட்டு தயிர்கடையும் மத்தினால் கடைய வேண்டும். அல்வா பதத்திற்கு வந்தவுடன் அதை தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். காலை, மதியம் மற்றும் இரவு ஆகிய மூன்று வேளைகளும் உணவிற்குப்பின் 1 ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல், நீர்க்கட்டிகள், நீர் எரிச்சல், மாதவிடாய்க் கோளாறுகள்,பெண்மலடு ஆகியவை உடனே சரியாகும். பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து உடல் வலுவாகும்.

4. மஞ்சள் கரிசாலாங்கண்ணி

ஞானத்திற்குரிய மூலிகை இது. இதைக் கீரையாக சாப்பிட்டால் கல்லீரல் வலுப்படும்.

5. பொன்னாங்கண்ணி

வயல்வெளிகளில் கொடுப்பை என்ற பெயரில் விளையும் மூலிகைதான் பொன்னாங்கன்னி கீரை. 'பொன் ஆகும் காண் நீ' என்பதன் சுருக்கமே பொன்னாங்கண்ணி என்பதாகும். இதை கீரையாக சமைத்து உப்பு சேர்க்காமல் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை உரி பெற்று கூர்மையாகும்.

6. நேத்திரப்பூண்டு

இதற்கு நாலிலை குருத்து, அருந்தலைப் பொருத்தி ஆகிய வேறு பெயர்களும் உண்டு. இதன் இலைகளை தேங்காய் எண்ணையில் ஊற வைத்து வெயிலில் 5 நாட்கள் வைத்து வடிகட்டி கண்களில் இரண்டு சொட்டுகள் விட்டு வந்தால் தொடக்கக் கால கண்புரை நோய் தடுக்கப்படும்.

7. நிலவேம்பு

நிலவேம்பிற்கு சிறியாநங்கை என்ற பெயரும் உண்டு. பார்ப்பதற்கு மிளகாய்ச்செடி போன்று இருக்கும். நிலவேம்பு இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு சிறிது மிளகு சேர்த்து சாப்பிட்டால் விஷக்கடிகள் இறங்கும். நிலவேம்பு இலைகளை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து 30 கிராம் பொடியுடன் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து அதை கால் லிட்டர் அளவுக்கு வற்ற வைத்து கஷாயமாக குடித்தால் தீராத காய்ச்சலும் தீரும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குடும்பத்திலுள்ள அனைவருமே மாலையில் ஒரு கப் கஷாயம் குடிக்கலாம். இதற்கு ஞாயிற்றுக்கிழமை கஷாயம் என்றே பெயர் உண்டு.

8. பூலாங்கிழங்கு

கிச்சிலி கிழங்கு என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும். மஞ்சளுடன் சேர்த்து அரைத்து பூசி குளித்தால் உடல் நாற்றம், வியர்வை நாற்றம் இருக்காது. குழந்தைகளை குளிப்பாட்ட ஏற்றது.

9. ஓமவள்ளி

கற்பூரவல்லி என்ற பெயரும் உண்டு. இதன் தண்டு, இலைச்சாறை காலை, மாலை குடித்து வந்தால் தொண்டை சதை வளர்ச்சி குணமாகும். இதன் பருமனான இலைகளை வாழைக்காய் பஜ்ஜி போல பஜ்ஜி மாவில் கலந்து பஜ்ஜியாக சுட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

10. அருகம்புல்

அருகம்புல், வெற்றிலை, மிளகு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருவதோடு ரத்த ஓட்டமும் சீராகும். தோல் நோய்களும் குணமடையும். இவையெல்லாம் தொட்டிகளில் வைத்து வளர்க்க வேண்டியவை.

11. ஆடாதொடை

எல்லா இருமல் மருந்துகளும் ஆடாதொடையிலிருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. 100 கிராம் ஆடாதொடையை அரை லிட்டர் தண்ணீருடன் சேர்த்து காய்ச்சி 125 மில்லியாக வற்ற வைத்து வடிகட்டி அதனுடன் 100 கிராம் வெல்லத்தை போட்டு மீண்டும் அடுப்பேற்றி பாகுபதத்தில் இறக்கி குழந்தகளுக்கு கொடுத்தால் இருமல் குணமாகும். பேருகால கர்ப்பிணிகள் 8வது மாதம் முதல் இதன் வேரை கஷாயம் செய்து தினமும் குடித்து வந்தால் சுகப்பிரசவமாவது உறுதி. ஆடாதொடை இலையை நிழலில் காயவைத்து, பொடி செய்து காலை, மாலை பாலில் சேர்த்து குடித்து வந்தால் காரணமில்லாமல் வரும் இரத்த அழுத்தம், படபடப்பு குறையும்.

12. பூனை மீசை மற்றும் விஷநாராயணி

இவை இரண்டுமே நமது நாட்டு மூலிகையல்ல. இதன் பூக்கள் பார்ப்பதற்கு பூனை மீசை பேன்று இருக்கும். இதன் இலைகளுடன், மிளகு, பூண்டு ஆகியவற்றை அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து காலை, மாலை உணவுக்குப்பின் சாப்பிட்டால் சிறுநீரக செயலிழப்பு மற்றும் சிறுநீரக கோளாறுகளுக்கும், உப்புநீர் நோய்க்கும் உகந்தது.

13. நொச்சி

நீல நொச்சி, கரு நொச்சி, வெள்ளை நொச்சி என பல வகை நொச்சிகள் உள்ளது. ஆனால், எல்லவற்றிற்குமான மருத்துவ குணம் ஒன்றுதான். நொச்சி இலை, மஞ்சள் சேர்த்து ஆவி பிடிக்க எல்லா தலைவலியும் குறையும் அல்லது நொச்சி இலைகளைப் பறித்து நிழலில் மூன்று நாட்கள் உலர்த்தி தலையணை உறைக்குள் இந்த இலைகளைப் போட்டு நிரப்பி தூங்கினால் ஒற்றைத் தலைவலி குறையும். தலைவலி மாத்திரை, தலைவலி தைலம் என எதுவுமே தேவையில்லை.

14. தழுதாழை

தழுதாழையை வாதமடக்கி இலை என்றும் கூறுவார்கள். இந்த இலையை வெந்நீரில் போட்டு ஆவி பிடித்தால் உடல்வலி குறையும். மூட்டு வலி, மூட்டு வீக்கம் உள்ள இடத்தில் இந்த இலைகளை வைத்து கட்டினால் வலி குறையும். ஒரு செடி வைத்தாலே போதும். இதன் வேர்கள் வேகமாக பரவி பக்கக் கன்றுகள் அதிகம் முளைக்கும்.

15. கழற்ச்சி

இதன் காய் பல வருடங்களுக்கு முன்பு விளையாட்டுப் பொருளாகவும், தராசுகளில் எடைக்கல்லாகவும் பயன்படுத்தப்பட்டது. இதன் விதைப் பருப்பை மிளகு சேர்த்து பொடியாக செய்து சாப்பிட்டு வந்தால் விதை வீக்கம் குணமாகும். இதன் இலையை விளக்கெண்ணெயில் போட்டு வதக்கி விதைப்பையில் கட்டினாலும் வீக்கம் குறையும்'' என்றார்.

-இர.கார்த்திகேயன்

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!