Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 30 November 2015

Tamil Nadu Open University B.Ed.,/B.Ed(SE).,/M.Ed(SE).,/PGPDSE & PGPCSE - DECEMBER 2015 Hall Ticket.

எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி: ரத்து செய்ய 13 மாநிலங்கள் கோரிக்கை

பள்ளி மாணவர்களுக்கு எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் கொள்கையை ரத்து செய்யும் வகையில், கல்வி உரிமைச் சட்டத்தில் (ஆர்டிஇ) திருத்தம் மேற் கொள்ளப்பட வேண்டும் என்று பஞ்சாப் உள்ளிட்ட 13 மாநிலங்கள், மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.

6 வயது முதல் 14 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி அளிக்கும் வகையிலும், பள்ளி மாணவர்களின் இடைநிற்றலைக் குறைக்கும் நோக்கிலும், அவர்களுக்கு எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் கொள்கை தற்போது நடைமுறையில் உள்ளது. கல்வி உரிமைச் சட்டத்தின் முக்கிய அம்சமான இந்தக் கொள் கையால், மாணவர்கள் தங்களுக்கு நடத்தப்படும் ஆண்டுத் தேர்வுகளை தீவிரமாகக் கருதுவதில்லை. இதனால், அவர்களின் கல்வித் தரம் குறைவதுடன், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ளும்போது, அவர்கள் மிகுந்த சிரமம் அடைவதாகவும் பல்வேறு மாநில அரசுகள் கருதுகின்றன.
இதையடுத்து, கட்டாயத் தேர்ச்சிக் கொள்கை தொடர்பாக, மாநில அரசுகளின் கருத்தை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கோரியிருந்தது. இந்நிலையில் பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்கள், கட்டாயத் தேர்ச்சி கொள்கையை ரத்து செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஒரே கல்வி ஆண்டில் வெவ்வேறு தேர்வு கால அட்டவணையில் வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் பட்டம்(B.Sc) மற்றும் இளம் கல்வியியல்(B.Ed) பட்டப்படிப்பு முடித்தால் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தகுதி உண்டு


பெட்ரோல், டீசல் விலை குறைப்பு; இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரங்களுக்கு ஏற்ப இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன. பெட்ரோல் விலை லிட்டருக்கு 58 காசுகளும், டீசலின் விலை லிட்டருக்கு 25 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பாக கடந்த 16-ந்தேதி பெட்ரோலின் விலை லிட்டருக்கு 36 காசுகள் உயர்த்தப்பட்டிருந்தது. அதேபோல், அக்டோபர் மாதம் முதல் 3 முறை டீசலின் விலை 87 காசுகள் உயர்த்தப்பட்டிருந்தது. இந்திய ரூபாயில் ஏற்படும் மாற்றங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்தே வரும் மாதங்களில் பெட்ரோல், டீசலின் விலையில் ஏற்ற, இறக்கம் இருக்கும் என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

SASTRA UNIVERSITY-B.ED DISTANCE EDUCATION ADMISSION NOTIFICATION...


பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு உயருமா ஊதியம் சரியாகுமா சிக்கல் ?

ஊதிய உயர்வு :

தமிழகத்தில் அரசாணை எண்177 நாள் 11.11.2011ன் படி16549 பகுதிநேர சிறப்பாசிரியர்கள்ரூபாய்5000 தொகுப்பூதியத்தில்நியமிக்கப்பட்டனர். பின்னர் நிரந்தரஊழியர்களுக்கு பலமுறைஅகவிலைப்படி உயர்வு
வழங்கப்பட்ட நிலையில், ரூபாய்7000 ஆகஊதியம்உயர்த்தப்பட்டது.
தற்பொழுது அகவிலைப்படி உயர்வுசதவிகிதம்100% ஐயும் தாண்டி 119% ஆக உயர்ந்துள்ளது.மத்திய அரசுஊழியர்களுக்கு அகவிலைப்படிஉயர்வு எப்போதெல்லாம்அறிவிக்கப்படுகிறதோஅதை பின்பற்றிதமிழகஅரசும்உடனே அகவிலைப்படிஉயர்வைஅரசுஊழியர்களுக்கு அறிவித்து வருகிறது.
ஆனால் பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்குஇதற்குஇணையானஅகவிலைப்படி உயர்த்தப்பட்டுவழங்கப்படவில்லை.
மேலும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள்பணிநிரவல்என்றபெயரில்,மாணவர்களின்எண்ணிக்கையைகாரணங்காட்டி, தொலைத்தூரங்களில்உள்ளபள்ளிகளுக்குபணியிடமாறுதல்  செய்யப்பட்டுள்ளனர். சுமார் 100 கி.மீக்கும்அதிகமாக பிரயாணம்செய்யும்பகுதிநேரசிறப்பாசிரியர்கள் எண்ணிக்கைஅதிகரித்துவிட்டது. இவர்களின்ஊதியம்பயணத்திற்கு செலவிடவேபோதவில்லை. பயண நேரம், செலவுத்தொகைஇவைகளை கருத்தில்கொண்டுபார்த்தால்முழுநேர ஊழியராக்கி, முழுஊதியம்வழங்கினால் மட்டுமே பணியைசிறப்பாக செய்யமுடியும்.

PAY ORDER FOR 4393 POSTS - SSA HEAD LAB ASST IN RMSACPS: பங்களிப்பு ஓய்வுதியத் திட்டத்தில் (CPS) உள்ளோர் கவனத்திற்கு...

*பங்களிப்பு ஓய்வுதியத் திட்டத்தில் (CPS) உள்ளோர் கவனத்திற்கு.* 2013 மார்ச் மாதம் முதல் 2015 பிப்ரவரி மாதம் வரை உள்ள கணக்கீட்டுத்தாள்(Account slip) மாநிலப் புள்ளி விபர மையத்தால் (Govt Data centre) வெளியிடப்பட்டுள்ளது.

*இதில் உங்கள் சம்பளத்திலிருந்து மாதந்தோறும் பிடிக்கப்படும்(10%) தொகை , அகவிலைப்படி நிலுவை ,ஊக்க ஊதியஉயர்வு நிலுவை ஆகியன வரவு வைக்கப்படுகின்றது.
 
* அவ்வாறு வரவு வைப்பதில் ஏதேனும் விடுபட்டு இருந்தால் அதை Missing credit என்றும், அதற்கு உரிய Token Number & dateVoucher Number & date.Bill cross & Net amount,Total Cps Amount.இதனுடன் விடுபட்ட தொகையினையும் சேர்த்தால் தான் உங்கள் கணக்கில்சேரும்.கணக்கு விபரங்களை ஓப்பிட்டு பிழைகள் மற்றும் விடுபட்டு இருந்தால் சம்பந்தப்பட்ட PDO (Pay drawing officer ) யை தொடர்பு கொள்ளலாம். 

விடுமுறை .'' நாட்களுக்கு பதில், வேறு நாளில் பணிபுரிய வேண்டும், பணிபுரியாவிட்டால் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்...

மழைக்கால விடுமுறையிலிருந்த பகுதி நேர ஆசிரியர்கள், அதற்குப் பதில், மாற்று நாட்களில் பணியாற்ற வேண்டும்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டமான, எஸ்.எஸ்.ஏ., இயக்குனரகக் 

கட்டுப்பாட்டில், கணினி, ஓவியம், உடற்கல்வி உட்பட, பலபகுதி நேர பாடப் பிரிவுகளுக்கு, 16 ஆயிரம் சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாரத்துக்கு மூன்று வகுப்புகள் பாடம் எடுக்க வேண்டும். ஆனால், பெரும்பாலும் பள்ளிகளில், முழு நேர ஆசிரியர்களாகவே பணியாற்றுகின்றனர்.இவர்களுக்கு, ஒவ்வொரு மாதமும், பணிபுரியும் நாட்களுக்கு மட்டுமே சம்பளம்வழங்கப்படும்.
மே மாத விடுமுறை காலத்தில் மாத சம்பளம் கிடையாது. தற்போது மழை காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில், 12 வேலை நாட்கள் வரை விடுமுறை விடப்பட்டது.''இந்த நாட்களுக்கு பதில், வேறு நாளில் பணிபுரிய வேண்டும். அவ்வாறு பணிபுரியாவிட்டால் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்,''என, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் சுற்றிக்கையாருக்கெல்லாம் 3வது ஊக்க ஊதிய உயர்வு பொருந்தும் - இயக்குநரின் செயல்முறை'கேட்' தேர்வு: பி.இ.,க்கள் ஆர்வம்


மத்திய அரசின், உயர் கல்வி நிறுவனங்களில், எம்.பி.ஏ., படிப்புகளில் சேர்வதற்கான 'கேட்' தேர்வில், சென்னையில் மட்டும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இவர்களில், பி.இ., எனப்படும், இன்ஜினியரிங் பட்டதாரிகள் மற்றும் மாணவர்கள் அதிகம்.

300 மையங்களில்...:

வரும் கல்வி ஆண்டில், எம்.பி.ஏ., படிப்பதற்கான, கேட் எனப்படும், பொது மாணவர் சேர்க்கை தேர்வு,நாடு முழுவதும், 300 மையங் களில் நேற்று நடந்தது. 2.19 லட்சம்பேர் தேர்வுக்கு பதிவு செய்திருந்தனர். மூன்று தாள்கள், தலா ஒரு மணி நேர, 'ஆன்லைன்' தேர்வு நடந்தது.தமிழகத்தில், சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நாமக்கல், தஞ்சாவூர்மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில், 30 தேர்வு மையங்களில், இந்த தேர்வு நடந்தது. சென்னையில், 10 ஆயிரம் பேர் உட்பட, தமிழகத்தில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.80 சதவீதம்இவர்களில், 80 சதவீதம் பேர், பி.இ., இறுதி ஆண்டில் படிக்கும் அல்லது கடந்த ஆண்டு, பி.இ., முடித்தவர்கள்.அதிகமானோர் எழுத காரணம்இந்த தேர்வு, 2007ல் துவங்கிய போது, 2.50 லட்சம் பேர் தேர்வு எழுதினர். பின், படிப்படியாகக் குறைந்தது. 2014ல், 1.96 லட்சம் பேர் பங்கேற்றனர்; இந்த ஆண்டு, 2.19 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.இதுகுறித்து, ஐ.எம்.எஸ்., எனப்படும், முன்னணி தனியார் பயிற்சி மையம் ஒன்றின், சென்னை மைய இயக்குனர் டோனி சேவியர் கூறுகையில், ''ஐ.ஐ.எம்., எண்ணிக்கை, 19 ஆக அதிகரித்துள்ளதால், இடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது; தேர்வும் கொஞ்சம் எளிதாகியுள்ளது. இன்ஜி., மாணவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் வருவதால், எம்.பி.ஏ., படிக்க விரும்புகின்றனர்.

இந்த விழிப்புணர்வு சமீப காலமாக அதிகரித்துள்ளது,'' என்றார்.வணிகவியல் படிப்புக்குஇன்ஜினியர்கள் ஆசை:எம்.பி.ஏ., எனப்படும் மேலாண் நிர்வாக படிப்பு, வெறும் வணிகவியல் தொடர்பான படிப்பாக இருந்த நிலை மாறி, தற்போது அனைத்து பட்டதாரிகளுக்கும் தேவையான படிப்பாக மாறி விட்டது. பி.இ., - பி.டெக்., மாணவர்கள், எம்.பி.ஏ., படிக்க அதிக ஆர்வம் கொண்டுள்ளனர்.அதிலும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும், உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்களில் படிக்க, இன்ஜி., பட்டதாரிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.எம்.பி.ஏ., படித்தால் தனியார் நிறுவனங்களில், ஆரம்பத்திலேயே அதிக சம்பளத்துடன் வேலை கிடைப்பதோடு, பதவி உயர்வுக்கும் வாய்ப்புகள் உள்ளதே காரணம்.

பள்ளிகளுக்கு ரூ.125 கோடி சேதம்


தமிழகத்தில், தொடர் மழையால், பள்ளிக்கல்வித் துறைக்கு, 125 கோடி ரூபாய் சேதம் மற்றும் செலவு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், 6ம் தேதி முதல், 25ம் தேதி வரை கனமழை பெய்ததால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் போன்ற மாவட்டங்களின், பள்ளி, கல்லுாரி கட்டடங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மழையால் ஏற்பட்ட சேதம் குறித்து, பள்ளிக்கல்வித் துறை செயலகத்துக்கு, அதிகாரிகள் அறிக்கை அனுப்பியுள்ளனர். மொத்தம், 125 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், அவற்றில், 85 கோடிக்கு நேரடி சேதமும், 40 கோடிக்கு மறைமுக செலவும் ஏற்பட்டுஉள்ளதாக கணக்கிட்டுள்ளனர்.அதில் தெரிவித்துள்ளதாவது:ஓட்டை, உடைசல் கட்டடங்கள், மழையில் இடிந்து விழுந்துள்ளன. பல பள்ளி கட்டடங்களின் சுவரில், விரிசல் ஏற்பட்டுள்ளதால் மூடப்பட்டுள்ளன. பாட புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகளுக்கு இரண்டாவதாக கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. பள்ளி வளாகங்களில் நீரை வெளியேற்றுதல், மின் கருவிகளை பழுது பார்த்தல், மாற்று கட்டடங்கள் ஏற்பாடு என, பலவகை யில் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்

மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை: இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை!


'வங்கக்கடலில், மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால், இன்று முதல், ஐந்து நாட்களுக்கு கனமழை நீடிக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இரண்டு வாரங்களுக்கும் மேலாக வெளுத்து வாங்கிய மழை, கடந்த சில நாட்களாக சற்று குறைந்துள்ள நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

இந்நிலையில், 'தமிழகம், புதுச்சேரியில், இன்று முதல், ஐந்து நாட்களுக்கு, கனமழை நீடிக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:தென் மேற்கு வங்கக்கடலில், இலங்கை அருகே நிலை கொண்டிருந்த காற்றுஅழுத்தத் தாழ்வு நிலை, அதே இடத்தில் நீடிக்கிறது.அதே நேரத்தில், தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமானில், புதியகாற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.இது, தமிழக கடல் பகுதிக்கு நகர்ந்து வருவதால், அடுத்த, 24 மணி நேரத்தில், தமிழகம், புதுச்சேரியில், ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும். வடகடலோர மாவட்டங்களில், பல இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்யும். இவ்வாறு அவர் கூறினார்.இந்நிலையில், 'தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில், இன்று, புதிதாக ஒரு, காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது; இதனால், டிசம்பர், 5ம் தேதி வரை, கனமழை தொடரும்' என, இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, கன்னியாகுமரி - 4, பாபநாசம் - 3, காட்டுக்குப்பம், மாமல்லபுரம், செங்கோட்டை - 2 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

சென்னைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தில் சேர கால அவகாசம் நீட்டிப்பு


சென்னைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தில், 2015-16 கல்வியாண்டுக்கான பல்வேறு படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஒற்றைச் சாளர சேர்க்கை மையத்தை வருகிற டிசம்பர் 19-ஆம் தேதி வரை மாணவர்கள் நேரடியாகத் தொடர்புகொண்டு சேர்க்கை பெறலாம்.

இந்த மையம் சனி, ஞாயிறு உள்பட அனைத்து நாள்களும் செயல்படும். மேலும், விவரங்களுக்கு www.unom.ac.in, www.ideunom.ac.in ஆகிய இணையதளங்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் என பல்கலைக்கழக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிய உத்தரவு: அரசு கல்லூரி பேராசிரியர்கள் அதிருப்தி


போலி கல்விச் சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்துள்ளனரா என்பதைக் கண்டறிவதற்காக, அரசுக் கல்லூரி பேராசிரியர்களின் அனைத்துச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிய உயர் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருப்பதோடு, இதைக் காரணம் காட்டி, தங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பணி மேம்பாட்டை கல்லூரிக்கல்வி இயக்குநர் அலுவலகம் நிறுத்தி வைப்பதாகவும் பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ராஜஸ்தானில் போலி கல்விச்சான்றிதழ்கள் விநியோகம்:

ராஜஸ்தான் அரசின் உயர் கல்வித் துறையிடமிருந்து அனைத்து மாநில உயர்கல்வித் துறைகளுக்கும், அனைத்துப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுக்கும் கடிதம் ஒன்று அண்மையில் அனுப்பப்பட்டது.அதில், 2014 டிசம்பர் 17-ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட வழக்கு (எண்.15) 14 குறித்து ராஜஸ்தான் போலீஸார் விசாரணை நடத்தியபோது, ஜோத்பூர் தேசியப் பல்கலைக்கழகம் என்ற தனியார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் கல்வி மையத்திலிருந்து ஒரு மென்பொருளைப் பறிமுதல் செய்தனர். அதை ஆய்வு செய்தபோது, ஜோத்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் பெயரில் ஏராளமான போலியான கல்விச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.இந்தப் போலிச் சான்றிதழ்கள் யார் யாருக்கு வழங்கப்பட்டுள்ளன என்ற பட்டியல், ராஜஸ்தான் கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.எனவே, இதன் மூலம் எவரேனும் பணியில் சேர்ந்துள்ளனரா என்பதை ஆய்வுசெய்து, தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சான்றிதழ்களை ஆய்வு செய்ய கல்லூரிகளின் முதல்வர்களுக்கு உத்தரவு: இந்தக் கடிதத்தின் நகலை கல்லூரி கல்வி இயக்குநர், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள தமிழக உயர்கல்வித் துறை துணைச் செயலர், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அண்மையில் அறிவுறுத்தியுள்ளார். இதனடிப்படையில், அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கும் கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அதில், கல்லூரிகளில் உள்ள அமைச்சுப் பணியாளர்களின் கல்விச் சான்றிதழ்கள், உரிய முறையில் உண்மைத்தன்மை அறியப்பட்டு பணிப் பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது. ஆனால், இதுநாள் வரை அரசுத் தேர்வுத் துறை, பல்கலைக்கழகங்கள் மூலம் பணியில் சேர்ந்தவர்களின் கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை அறியப்படாத நிலையினைத் தவிர்க்கும் பொருட்டு, இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்களின் அனைத்துக் கல்விச் சான்றிதழ்களையும் அந்தந்த அரசுத் தேர்வுத் துறை, பல்கலைக்கழகங்கள் மூலம் உண்மைத்தன்மையை அறிந்து இயக்குநர் அலுவலகத்துக்கு விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரிகளும் நடவடிக்கையில்தீவிரம்:

இதனடிப்படையில், ஒவ்வொரு பேராசிரியரின் 10-ஆம் வகுப்பு சான்றிதழ் முதல், பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, எம்.ஃபில்., பிஎச்.டி. என அனைத்து கல்வித் தகுதியின் உண்மைத் தன்மையை அறியும் நடவடிக்கையை கல்லூரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. இதற்கு கல்லூரிப் பேராசிரியர்களிடையே கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

அறிக்கையை அளிக்க அவகாசம்நீட்டிப்பு:

இதுகுறித்து கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலக உயர்அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:ஏற்கெனவே பள்ளிகள் அளவில் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கல்லூரிகளில் பேராசிரியர்களின் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை அறிய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதுநிலை பட்டப் படிப்பு, எம்.ஃபில்., பிஎச்.டி. தகுதிக்கான் சான்றிதழ்களுக்கான உண்மைத் தன்மை அறிக்கை மட்டுமே கேட்கப்பட்டிருக்கிறது. இதுதவிர்க்க முடியாதது. இந்த அறிக்கையைச்சமர்ப்பிக்க பேராசிரியர்களுக்கு இப்போது மேலும் கால அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது என்றார் அவர்.

"வற்புறுத்துவது ஏற்புடையது அல்ல'

இதுகுறித்து தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் மன்றப் பொதுச் செயலர் சிவராமன் கூறியதாவது:சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிவது, அந்தந்தத் தேர்வு வாரியத்தின் பணி. ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் தேர்வு செய்யப்படும்போதே, அனைத்துச் சான்றிதழ்களும் முழுமையாக ஆய்வு செய்யப்படுகின்றன. இந்த நிலையில், பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் பேராசிரியர்களின் கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என வற்புறுத்துவதுஏற்புடையது அல்ல. உண்மைத்தன்மை அறிக்கை பெற ஒவ்வொரு கல்வித் தகுதிக்கும் ரூ.600 முதல் ரூ.1000 வரை பல்கலைக்கழகத்துக்கு கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதை உயர் கல்வித் துறை மறு பரிசீலனை செய்ய வேண்டும்என்றார் அவர்.

ஆசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை


'பொதுத் தேர்வு எழுதும் மாணவர் பட்டியலில் தவறுகள் இருந்தால், ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வித்துறைஎச்சரித்துள்ளது.பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன. மாவட்டம் தோறும், தேர்வு மையங்களின் எண்ணிக்கை, மாணவர் எண்ணிக்கை விவரங்கள், பள்ளிகளிலிருந்து சேகரிக்கப்படுகின்றன.

இந்தப் பட்டியலில் தவறுகள் வருவதால், தேர்வு நடத்தும் போது, பல மாணவர்களுக்கு, ஹால் டிக்கெட் இல்லை; பட்டியலில் பெயர் இல்லை என்பன போன்ற குழப்பங்கள் ஏற்படுகின்றன.இந்த ஆண்டு இதுபோன்ற குழப்பங்களைத் தடுக்க, ஆசிரியர்களுக்கு விடப்பட்டுள்ளஉத்தரவுகள்:*தேர்வு எழுதும் மாணவர் எண்ணிக்கை சரியாக இருக்க வேண்டும்
*பட்டியலில் தவறுகள் இருக்கக்கூடாது. பெயர், விவரம், முகவரியில்பிழைகள் இல்லாமல் கணினியில் பதிவு செய்ய வேண்டும்.
'பட்டியலில் தவறு இருந்தால், ஆசிரியர், ஊழியர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்'என, தேர்வு மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மழை விடுமுறை ,ஆசிரியர்களுக்கு கூடுதல் பணி


'மழைக்கால விடுமுறையிலிருந்த பகுதி நேர ஆசிரியர்கள், அதற்குப் பதில், மாற்று நாட்களில் பணியாற்ற வேண்டும்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டமான, எஸ்.எஸ்.ஏ., இயக்குனரகக் கட்டுப்பாட்டில், கணினி, ஓவியம், உடற்கல்வி உட்பட, பலபகுதி நேர பாடப் பிரிவுகளுக்கு, 16 ஆயிரம் சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாரத்துக்கு மூன்று வகுப்புகள் பாடம் எடுக்க வேண்டும். ஆனால், பெரும்பாலும் பள்ளிகளில், முழு நேர ஆசிரியர்களாகவே பணியாற்றுகின்றனர்.இவர்களுக்கு, ஒவ்வொரு மாதமும், பணிபுரியும் நாட்களுக்கு மட்டுமே சம்பளம்வழங்கப்படும்.

மே மாத விடுமுறை காலத்தில் மாத சம்பளம் கிடையாது. தற்போது மழை காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில், 12 வேலை நாட்கள் வரை விடுமுறை விடப்பட்டது.''இந்த நாட்களுக்கு பதில், வேறு நாளில் பணிபுரிய வேண்டும். அவ்வாறு பணிபுரியாவிட்டால் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்,''என, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார்.

கல்வி உதவித் தொகை தேர்வு(NMMS): விண்ணப்பங்களைஇன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்


தேசிய வருவாய் வழி- திறன் கல்வி உதவித் தொகை (என்.எம்.எம்.எஸ்.) தேர்வுக்கான விண்ணப்பங்களை திங்கள்கிழமை (நவ. 30) முதல் பதிவிறக்கம் செய்யலாம்.எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்காக, ஜனவரி 23-இல் இந்தத் தேர்வு நடைபெறும். விண்ணப்பங்களை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்திலிருந்து நவம்பர் 30 முதல் டிசம்பர் 11 வரை பதிவிறக்கம் செய்யலாம். கூடுதல் விவரங்களை இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

5 நாட்கள் பணி 10 ஆயிரம் சம்பளம் பகுதி நேர ஆசிரியர்கோரிக்கை.

வாரத்தில் ஐந்து முழு நாட்கள் வேலை, ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும், என பகுதி நேர ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் 2012 மார்ச்சில் 16,549 பகுதி நேர கலை, ஓவியம், உடற்பயிற்சி, தையல், இசை ஆசிரியர்கள் பணியில் சேர்க்கப்பட்டனர். வாரத்தில் மூன்று அரை நாட்கள் பணி, மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் முதல் ரூ.2ஆயிரம் சம்பள உயர்வு வழங்கப்பட்டது. மூன்று நாட்கள் பணி என்பதை ஐந்து நாட்கள் முழுநேர பணி, மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கவேண்டும் என அவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். பகுதிநேர ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது: வாரத்தில் 5 நாட்கள் வேலைக்கு வருகிறோம். ரூ.10 ஆயிரம் சம்பளம் தாருங்கள் என அரசிடம் கேட்டுள்ளோம். ஒரு சில வாரங்களில் இதற்கான முடிவு எட்டப்படும், என அதிகாரிகள் தரப்பில் கூறியுள்ளனர். சமீபத்தில் ஜாக்டோ சார்பில் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது, பகுதி நேர ஆசிரியர்கள் முழு நேரம் பணியாற்றினர். அரசுக்கு ஆதரவாக, எந்த நிலையிலும் வேலை பார்க்க தயார் என அறிவித்தோம். ஆனால், அரசு எங்களுக்கு சம்பள உயர்வு அளிக்க தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறது. பகுதி நேர ஆசிரியர்களுக்குரிய சம்பளம் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என கூறப்பட்டது. பழைய முறையில், தலைமை ஆசிரியர் மூலமே வழங்கப்படுகிறது. தற்போது பணிமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்பட்டது.

இதில் பெண் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கியதால், ஆண்கள் ஏற்கனவே பணியாற்றிய இடத்திலிருந்து கூடுதலாக100 கி.மீ., அலைய வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே பொதுப்பிரிவு கவுன்சிலிங்கை மறுபடியும் வைக்க வேண்டும், என்றார்.

10ம் வகுப்பு பொது தேர்வு செய்முறை தேர்வு உண்டு


'பத்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வில், அறிவியல் பாட செய்முறைத் தேர்வு, கண்டிப்பாக உண்டு' என, பள்ளிக்கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. சில ஆண்டுகளாக, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், பிளஸ் 2 மாணவர்களுக்கு நடத்தப்படுவது போல், அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வு நடத்தப்படுகிறது.

இதற்கு, 25 மதிப்பெண்கள் தனியாக வழங்கப்படுகின்றன. இத்தேர்வுக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியலுக்கு தலா, நான்கு செய்முறைப் பயிற்சிகள் வழங்கப்படும். பின், அவற்றில், தலா ஒரு பயிற்சி, செய்முறைத் தேர்வில் வினாவாக வரும். இதற்காக, செய்முறைத் தேர்வு பயிற்சி புத்தகம், கல்வித் துறையிலிருந்து வழங்கப்படும். இந்த ஆண்டு, பயிற்சிப் புத்தகம் வழங்கப்படாததால், செய்முறைத் தேர்வு உண்டா என, மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை கண்ணப்பன் கூறியதாவது:செய்முறைத் தேர்வுக்கான பயிற்சி வினாக்கள், அறிவியல் பாடப் புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ளன; இந்த ஆண்டு தனியாக புத்தகம் வழங்கப்படாது. அதிலுள்ள, 15 செய்முறைப் பயிற்சிகள் குறித்து, ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க வேண்டும். பொதுத் தேர்வுக்கு கட்டாயம் செய்முறைத் தேர்வு உண்டு; எந்த மாற்றமும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

'சர்' ஜகதீஷ் சந்திர போஸ் (அறிவியல் மேதை) - வரலாற்று நாயகர் பிறந்தநாள்

வணக்கம் நண்பர்களே, நமது இந்திய தேசத்தின் விஞ்ஞானியுமான, அறிவியல் ஆராய்ச்சியாளருமான 'சர்'ஜகதீஷ் சந்திர போஸ் அவர்களுக்கு இன்று (30/11/2015) 157ஆவது பிறந்தநாள். தாவரங்களுக்கும் உயிர் உண்டு. அவைகளுக்கும் மகிழ்ச்சி, துன்பம் போன்ற உணர்ச்சிகள் உண்டு என்ற உண்மையை கண்டறிந்து சொன்ன அந்த அதிசய விஞ்ஞானியின் பிறந்த நாளான இன்று அவரது வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

உணவில் இரண்டு வகை உண்டு சைவம், அசைவம். சைவ உணவை விரும்பி உண்பவர்கள் அசைவத்தை வெறுப்பதற்கு கூறும் முக்கிய காரணம் உயிருள்ள விலங்குகளைக் கொன்று அவற்றை புசிப்பது பாவம் என்பதுதான். அந்தக்கூற்றுக்குப் பின்னனியில் இலைமறைக் காயாக இருக்கும் ஒரு நம்பிக்கை தாவரங்களுக்கு உயிர் இல்லை என்பதாகும் அப்படித்தான் உலகம் நம்பியிருந்தது பல்லாண்டுகளாக, 19 நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு விஞ்ஞானி அந்த நம்பிக்கையை பொய்யாக்கி அனைத்துவகை தாவரங்களுக்கும் உயிர் இருக்கிறது என்பதை நிரூபித்துக்காட்டி உலகின் புருவங்களை உயர்த்தினார். தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்றால் அவற்றை உண்பதும் பாவமா? என்ற சர்ச்சைக்கெல்லாம் நாம் போக வேண்டாம். அப்படிப்பட்ட நுணுக்கமான உண்மையை ஆராய்ந்து சொன்ன அந்த விஞ்ஞானிக்கு வானம் வசப்பட்ட கதையைத் தெரிந்துகொள்வோம். அவர்தான் இந்தியாவின் உலகப்புகழ்பெற்ற விஞ்ஞானிகளில் ஒருவரான 'சர்' ஜகதீஷ் சந்திரபோஸ்.

1858 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி இந்தியாவின் அப்போதைய கிழக்கு வங்காளத்தின் (தற்போது பங்களாதேஷ் நாட்டின் பகுதி)ஃபரீத்பூர் மாவட்டத்தில் மைமென்சிங் என்ற ஊரில் பிறந்தார் போஸ். அவரது தந்தை ஒரு மருத்துவர். தம் ஆரம்பக்கல்வியை முடித்த பிறகு கல்கத்தாவின் செயிண்ட் சேவியர் கல்லூரியில் பட்டப்படிப்பை மேற்கொண்டார் போஸ். 19 வயதில் பட்டம் பெற்ற பிறகு இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு சென்றார். அங்கு தாவரவியல், விலங்கியல் ஆகிய துறைகளில் அதிக ஆர்வம் காட்டினார். இங்கிலாந்தில் இருந்தபோது லார் ரிலே (Lore Rele) என்ற விஞ்ஞானியின் நட்பு போஸ்க்கு கிடைத்தது. அவருடைய வழிகாட்டுதல் மற்றும் தூண்டுதலின் பேரில் தாவரங்களைப் பற்றிய நுண்ணிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார் போஸ். கேம்பிரிட்ஜில் கல்வியை முடித்து இந்தியா திரும்பிய பிறகு கல்கத்தா மாநிலக் கல்லூரியில் இயற்பியல் பிரிவில் விரிவுரையாளராக சேர்ந்தார்.

அப்போது இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடப்பில் இருந்ததால் ஒரு விநோதமான பழக்கம் நடைமுறையில் இருந்தது. இந்திய மண்ணில் ஒரு வேலையைச் செய்வதற்காக ஒரு ஆங்கிலேயருக்கு கொடுக்கும் சம்பளத்தில் மூன்றில் இரண்டு பங்குதான் அதே வேலையைச் செய்யும் இந்தியருக்கு கொடுக்கப்பட்டது. அந்தப்பழக்கம் அந்தக் கல்லூரியிலும் பின்பற்றப்பட்டது. இந்தியர்கள் அறிவியல் துறையில் பின்தங்கியவர்கள் என்பதால் முழு ஊதியம் பெற தகுதியற்றவர்கள் என்பதுதான் அதற்குக்கூறப்பட்ட காரணம். ஜகதீஸ் சந்திரபோஸ் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை தனது அறிவுக்கூர்மையைப் பயன்படுத்தி நன்கு கற்பித்ததோடு மட்டுமன்றி பல ஆராய்ச்சிகளையும் செய்தார். அவரது பணியில் முழு திருப்தியடைந்த கல்லூரி நிர்வாகம் போஸ்க்கு முழு ஊதியம் வழங்க ஆணையிட்டதோடு ஏற்கனவே பணியாற்றிய காலத்திற்கு தரப்பட வேண்டிய நிலுவைத் தொகையையும் வழங்க உத்தரவிட்டது. "பொறுத்தார் பூமி ஆள்வார்" என்பதற்கு அந்த சம்பவம் ஒரு நல்ல சான்று.

அவ்வாறு கிடைத்த தொகையைக் கொண்டு ஒரு அறிவியல் ஆய்வுக்கூடத்தை நிறுவினார் போஸ். அந்த ஆய்வுக்கூடத்தில் தாவரவியல், இயற்பியல் துறைகளில் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். அடிப்படையில் அவர் ஒரு இயற்பியல் வல்லுநராக இருந்தாலும் ரேடியோ வேவ்ஸ் (Radio waves) எனப்படும் வானொலி அலைகள் பற்றியும் ஆராய்ச்சிகள் செய்தார். உண்மையில் வானொலியின் தந்தை என போற்றப்படும் விஞ்ஞானி மார்கோனிக்கு முன்னரே கம்பியில்லா ஒலிப்பரப்பு அமைப்பு முறையை போஸ் உருவாக்கிவிட்டார் என்று ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது. ஆனால் அந்தக்கண்டுபிடிப்பை அறிவியல் உலகம் அப்போது கண்டுகொள்ளவில்லை என்றும் அந்தக்குறிப்பு குறித்து வைத்திருக்கிறது.

சரி மீண்டும் நாம் தாவரங்களுக்கு வருவோம் தாவரங்களுக்கு உணர்வு உண்டு என்று நம்பிய போஸ் அசைவுகளையும், சலசலப்புகளையும் அளக்கும் பல்வேறு நுண்ணிய உணர் கருவிகளை சொந்தமாக உருவாக்கி அவற்றைக்கொண்டு தாவரங்களின்மீது பல்வேறு சோதனைகளைச் செய்தார். அந்த சோதனைகளின் மூலம் வெப்பம்,குளிர், ஒளி, ஒலி போன்ற stimuli அதாவது புறத்தூண்டுதல்கள் எப்படி மனிதர்களையும், விலங்குகளையும் பாதிக்கின்றனவோ அவ்வாறே தாவரங்களையும் பாதிக்கின்றன என்பதை நிரூபித்துக் காட்டினார். போஸ் ஒரு புகழ்பெற்ற பரிசோதனையையும் செய்து காட்டினார் புரோமைட் (Bromide) என்ற நச்சுத் தனிமத்தை ஊசி மூலம் ஒரு எலிக்குள் செலுத்தினார். அதே நேரத்தில் அதே தனிமத்தை ஓர் தாவரத்திலும் செலுத்தினார். எலி, தாவரம் இரண்டுமே மரணத்தின் விளிம்பில் போராடியதைக் கண்டு வியந்த அறிவியல் உலகம் போஸின் ஆய்வுகளை கைதட்டி பாராட்டியது.

தனது பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவுகளைக் கொண்டு இரண்டு புகழ்பெற்ற நூல்களை வெளியிட்டார் போஸ். (Response in the Living and Non-Living), (The Nervous Mechanism of Plants) என்ற அந்த இரண்டு நூல்களும் சொன்ன கருத்து உலகை வியப்பில் ஆழ்த்தியது. தாவரங்களுக்கும் உயிர் உண்டு அவை மனிதர்களைப் போலவே உணவு உண்டு செரிப்பதுடன், இரவில் உறங்கி காலையில் விழிக்கின்றன. தாவரங்களுக்கும்கூட பிறப்பும், இறப்பும் உண்டு, நம்மைப்போலவே மகிழ்ச்சி, துன்பம் ஆகிய உணர்ச்சிகளும் உண்டு. இவைதான் அந்த நூல்கள் சொன்ன கருத்துகளாகும். தாவரங்களை நேசிப்பவர்கள் ஒன்று சொல்லக் கேள்விப்பட்டிருப்போம் அவற்றுடன் தினசரி அன்பாக பேசினால் அவை நன்றாக வளருமாம். ஜகதீஸ் சந்திரபோஸின் ஆய்வு முடிவுகளைப் பார்க்கும்போது அந்தக்கூற்றும் உண்மை என்றே தோன்றுகிறது.

அறிவியல் ஆராய்ச்சியில் அவரது பங்களிப்பை கெளரவிக்கும் வகையில் ஜகதீஷ் சந்திர போஸ்க்கு 'சர்' பட்டம் வழங்கி சிறப்பித்தது அப்போது இந்தியாவில் செயல்பட்ட பிரிட்டிஷ் அரசாங்கம். 1920 ஆம் ஆண்டில் லண்டன் ராயல் கழகத்தின் உறுப்பினராக அவர் சேர்த்துக் கொள்ளப்பட்டார். "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய” வள்ளலாரைத் தந்த நமது இந்திய தேசம்தான் அந்தப்பயிர்களுக்கு உயிர் உண்டு என்ற உண்மையைக் கண்டு சொன்னவரையும் தந்திருக்கிறது. அந்த அற்புத விஞ்ஞானி 1937 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் நாள் தமது 82 ஆவது வயதில் காலமானார்.

தோல்வியிலிருந்துதான் உண்மையான வெற்றி கிடைக்கிறது என்று ஒருமுறை கூறினார் 'சர்' ஜகதீஷ் சந்திர போஸ். “எல்லா உயிரினங்களுக்கும் உள்ள உயிர் ஒன்றே; மனித உயிரும் அத்தகையதே; எனவே அனைத்து உயிரினங்களும் பொறுமை, ஒற்றுமை, இணைந்து வாழ்தல் ஆகியவற்றைக் கடைபிடிக்க வேண்டும். இதில் மனிதர்களின் பங்கு மகத்தானது. எல்லா நாட்டு மக்களும் ஒருவர் மீது ஒருவர் பகைமை பாராட்டாமல், அவநம்பிக்கை கொள்ளாமல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.” என்று கூறியதோடு மட்டுமல்லாமல் அதனை வாழ்ந்தும் காட்டிய அவருக்கு வானம் வசப்பட துணை புரிந்த பண்புகள் ஈடுபாடு, துணிச்சல், மன உறுதி, தன்னம்பிக்கை, சோர்வின்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய பண்புகளாகும். அவர் கடைப்பிடித்தப் பண்புகளில் சிலவற்றைப் பின்பற்றினால்கூட போதும் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்படும்.

(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.
www.rkkalvisiragukal.blogspot.com

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!