Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 7 April 2015

கல்வி செய்திகள்

கல்வி செய்திகள்

கற்றல் பெரு உவகைப் பள்ளி; புதுமை புனைதல் என்னும் தலைப்பின் கீழ் காணொலி ஆவணப் படம் தயாரித்தல்
Posted: 06 Apr 2015 10:44 AM PDT
தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயற்சி நிறுவன இயக்குனரின் செயல்முறைகளின் படி கற்றல் கற்பித்தல் புதுமை புனைதல் மற்றும்கல்வி சார் கணினி வளங்கள் சேகரிக்க இணையதள பக்கத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள சுமார் ஐந்தரை லட்சம் ஆசிரியர்களில் 1526 ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
பெறப்பட்ட இப் பட்டியலிலிருந்து முதற்கட்டமாக 75 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.75 ஆசிரியர்களில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் ஒருவர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் ( மேல்நிலை,உயர்நிலை,நடுநிலை,தொடக்கப் ) பள்ளிகளில் இப்பள்ளி ஒன்று மட்டுமே தேர்வாகி உள்ளது பாராட்டுதலுக்குரியது.

புதுமை புனைதல் என்னும் தலைப்பின் கீழ் காணொலி ஆவணம் செய்யும் பொருட்டு இயக்குநரின் ஆணைப்படி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனக் குழுவைச் சேர்ந்த படப்பிடிப்புக்குழு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிக்கு 5/5/2015அன்று வருகை புரிய உள்ளது. அச்சமயம் இப்பள்ளியில் ஆவணப்படம் தயாரிக்கப்பட உள்ளது.
ஈரோடு மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு.

ஈரோடு: இன்று  விடுமுறை

ஈரோடு மாவட்டத்திற்கு இன்று  உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு.சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழாவிற்காக விடுமுறை.
+2 பொருளியல் பாடத்தேர்வில் 2வினாக்களுக்கு கருணை மதிப்பெண் - அரசு தரப்பு.

+2 பொருளியல் பாடத்தேர்வில் 2வினாக்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கக்கோரிய வழக்கு.2 வினாக்களும் தேர்வர் விடையளிக்க முற்பட்டு இருந்தால் மதிப்பெண் வழங்கப்படும்: அரசு தரப்பு.
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது.ஒரு மதிப்பெண் வினா எண்.18, 20 புரியாமலும், குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தன: மனு
ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணையுங்கள்: ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

மத்திய அரசிடம் இருந்து ஓய்வூதியம் பெறும் முன்னாள் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் இறப்புக்கு பின்னர் குடும்ப ஓய்வூதியம் பெறும் வாரிசுகள் தங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். இவர்கள் அனைவரும் தங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்து, இது தொடர்பான தகவலை ஓய்வூதியம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என மத்திய அரசு இன்று அறிவுறுத்தியுள்ளது.

மேலும், இதுவரை ஆதார் எண்ணுக்கு பதிவு செய்து கொள்ளாத ஓய்வூதியதாரர்களும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களும், குடும்ப ஓய்வூதியம் பெறும் நபர்களும் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளும்படியும் கூறப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கு இடையூறு இல்லாமல் பணம் சென்றடைவதை உறுதிபடுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஓய்வூதியம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரும் நவம்பர் மாதம் தாங்கள் உயிருடன் இருப்பதற்கான ‘ஜீவன் பிரமான்’ டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிப்பதற்குள் இந்த நடைமுறைகளை பூர்த்தி செய்வது கட்டாயம் ஆக்கப்படும் என தெரிகிறது.
பிரிட்டனில் இனி தந்தையும் 25 வாரம் மகப்பேறு விடுமுறை எடுக்கலாம்: அரசின் முடிவால் மகிழ்ச்சி பெருக்கில் ஆண்கள்

உலகம் முழுவதும் அரசாங்கங்கள் குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு விடுமுறை அளிப்பது வழக்கமான ஒன்று. இந்த விடுமுறையில் பிரிட்டன் நாடு ஒரு முன்மாதிரி முடிவை எடுத்துள்ளது.
அந்நாட்டில் இனி குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு விடுமுறை அளிப்பது போல, தந்தைக்கும் விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இம்முடிவு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

அந்நாட்டில் குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு 50 வார விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இனி வரும் காலங்களில் இந்த விடுமுறையை கணவன், மனைவி இருவரும் சமமாக பிரித்துக்கொள்ளலாம்.அதாவது கணவன் 25 வாரமும், மனைவி 25 வாரமும் விடுமுறையை பிரித்துக்கொண்டு தங்கள் அன்பான குழந்தையை இருவரும் பராமரிக்கலாம். குழந்தையை தத்தெடுப்பவர்களும் இந்த 50 வார விடுமுறையை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பெண்கள் வெற்றிகரமாக வேலையை தொடர்வதா அல்லது குழந்தை பெற்றுக்கொள்வதா என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுவது அரசின் இம்முடிவால் தவிர்க்கப்பட்டுள்ளதுடன், தாயின் வேலை பறிபோவதை தடுக்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக குழந்தையை பெற்றெடுத்த காரணத்திற்காக தாயை வேலை விட்டு நீக்குவதுசட்டவிரோதம் என பிரிட்டன் சட்டம் இயற்றியிருந்தது. எனினும் பழைய நடைமுறைகளை மாற்றிக்கொள்வதில் தவறில்லை என்று தெரிவித்துள்ள அந்நாட்டு அரசு, எப்போதும் குழந்தைகளை வீட்டில் தாய் மட்டுமே கவனித்துக்கொண்டு வரும் நிலையில், ஆண்களும் தங்கள் குழந்தைகளை கவனித்துக்கொள்ள விருப்பப்படுகின்றனர். ஆகையால் அரசு எடுத்துள்ள இம்முடிவுஇருவருக்கும் மகிழ்ச்சியை தரும் என்று அந்நாட்டு துணை பிரதமர் நிக் க்ளெக்கூறினார். அரசின் இம்முடிவால் ஆண்டுதோறும் 2,85,000 தம்பதியர்கள் பயனடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகளில் 1.50 லட்சம் காலியிடங்களால் அரசுப்பணிகள் முடக்கம்

தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகளில் 1.50 லட்சம் காலிப்பணியிடங்கள் இருப்பதால் பணிகள் ஏதும் நடக்காமல் முடங்கியநிலையில் உள்ளது. இதை கண்டித்தும், அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசுக்கு எதிராக அனைத்து அரசு ஊழியர் சங்கங்களும் ஒருங்கிணைந்து விரைவில் போராட்டம் நடத்த போவதாக அரசுப்பணியாளர் சங்க மாநிலத்தலைவர் தமிழரசன் கூறினார்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கத்தின் மத்திய செயற்குழுக்கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. பின்னர் மாநிலத்தலைவர் தமிழரசன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது. தமிழகம் முழுவதும் தற்காலிக பணியாளர்களாக சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள், வளர்கல்வி ஊழியர்கள், கணினி பயிற்றுநர்களை இதுவரை தமிழக அரசு நிரந்தரம் செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது. குறிப்பாக 2003க்கு பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டத்தைஅமல்படுத்தி ஏமாற்றி வருகிறது.அதிமுக தேர்தல் வாக்குறுதியின்படி இதனை மாற்றிஅமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகளில் 1.50 லட்சம் காலிப்பணியிடங்கள் இருப்பதால் பணிகள் ஏதும் நடக்காமல் முடங்கியநிலையில் உள்ளது. தேர்வாணையம் மூலம் எடுக்கப்படும் ஊழியர்கள் போதுமானதாக இல்லை. காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப 5 சதவீதம் பேரைக்கூட தேர்வுசெய்யவில்லை. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்தவர்களும் காத்திருக்கிறார்கள். இதனால் அரசுஅலுவலகங்களில் மற்றவர்களுக்கு வேலைப்பளு அதிகரித்துள்ளது. அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற கடந்த பட்ஜெட்டிலும் எந்த அறிவிப்பும் வரவில்லை. இதனால் தலைமைசெயலக ஊழியர் சங்கத்துடன் அனைத்து சங்கமும் ஒருங்கிணைந்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
அறிவுத்திறன் போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்களின் பங்களிப்பை அதிகரிக்க சிறப்பு பயிற்சி

அறிவுத்திறன் சார்ந்த போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்களின் பங்களிப்பை அதிகரிக்க, சிறப்பு பயிற்சி நடத்துமாறு, ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் அரசு பள்ளிகளை காட்டிலும், தனியார் பள்ளி மாணவர்களின் பங்களிப்பு அதிகளவில் உள்ளது.
மாணவர்களின் தனித்திறன் மற்றும் பொது அறிவை வளர்ப்பதற்கு, அரசு பள்ளிகளில் போதிய பயற்சியின்மையே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.இதில், மிக குறைவான சதவீதத்தில் இருப்பது துவக்க மற்றும் நடுநிலை மாணவர்களே. இதை தவிர்க்கும் வகையில், மாணவர்களின் திறமையை அடிப்படை வகுப்பு முதலே வளர்க்கும் விதமாக, வரும் கல்வியாண்டு முதல், மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: பல்வேறு அமைப்புகள் சார்பில், குழந்தைகளுக்கான அறிவுத்திறன், கல்வி இணை செயல்பாடு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன. 10:1 என்ற வீதத்தில் கூட, அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்பதில்லை. இந்நிலையை மாற்றும் வகையில், மாணவர்களின் தனித்திறன்களை வளர்ப்பதிலும், போட்டிகளில் அவர்களை ஈடுபடுத்தும் வகையிலும், சிறப்பு பயிற்சிஅளிக்க, ஆசிரியர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.சில பள்ளிகளில், பொது அறிவு மற்றும் அன்றாட நடப்புகளை அறிந்து கொள்ளும் விதமாக, மாணவர்களுக்கு நாள்தோறும் சிறப்பு பயிற்சி அளித்து போட்டி நடத்தப்படுகிறது. வெற்றி பெறுவோருக்கு, பரிசு வழங்கி ஊக்கப்படுத்துகின்றனர். இந்நடைமுறையை, அனைத்து அரசு பள்ளிகளிலும் பின்பற்றலாம். இதுதொடர்பான சிறப்பு பயிற்சியை கட்டாயமாக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
பிளஸ்–2 தேர்வில் கட்ஆப் குறையும் எதிர்பார்ப்பில் மாணவர்களின் பெற்றோர்களுக்கு வலைவிரிக்கும் தனியார் கல்லூரிகள்

நடந்து முடிந்த பிளஸ்–2 தேர்வில் வேதியியல் மற்றும் உயிரியல் பாட வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து கூறினர். இதனால் இந்த பாடங்களில் மதிப்பெண்கள் குறைவாக கிடைக்கும் என அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.மருத்துவம், பொறியியல் கனவுடன் பிளஸ்–2 தேர்வில் கஷ்டப்பட்டு பல லட்சம் மாணவ, மாணவியர் பாடங்களை படித்தனர்.

சில தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் மற்றும் தனியாக டியூசன் கட்டணம் என பல லட்ச ரூபாய் செலவு செய்து பெற்றோர்கள்தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்துள்ளனர்.இப்படி மருத்துவம் அல்லது பொறியியல் என்ற ஒரே லட்சியத்துடன் தேர்வை எதிர் கொண்ட மாணவர்களுக்கு வேதியியல் மற்றும் உயிரியல் தேர்வுகள் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. அதில் கேட்கப்பட்ட கேள்விகள் இது வரை கேட்கப்பட்டது போல் இல்லாமல் புதுமையாக இருந்ததால் பதில் அளிப்பதில் மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இதனால் அந்த இரு பாடங்களிலும் முழு மதிப்பெண் எடுக்கும் மாணவர் எண்ணிக்கை குறைவதுடன் கட்–ஆப் மார்க்கும் குறையும் என கூறப்படுகிறது.இதனால் அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மெரிட்டில்படிக்க இடம் கிடைக்குமா? என்ற கவலை பெற்றோர் மற்றும் மாணவர் மத்தியில் எழுந்துள்ளது. கட்–ஆப் மார்க் குறைந்தால் தனியார் கல்லூரிகளில் கட்டணம் செலுத்தி படிக்கும் நிலை ஏற்படும் என்பதால் பெற்றோர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் கட்–ஆப் மார்க் குறைந்து அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்காத மாணவர்கள் பலர் தனியார் கல்லூரிகளில் சேரும் நிலை ஏற்படும் என்பதால் தனியார்கல்லூரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளன. கடந்த ஆண்டு தனியார் பொறியியல் கல்லூரிகளில் பல இடங்கள் மாணவர்கள் சேர்க்கை இன்றி காலியாக இருந்தன. ஆனால் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் தனியார் கல்லூரிகள் உள்ளன.இதனால் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகள் மாணவர்களின் பெற்றோர்களுக்கு இப்போதே எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பி தங்கள் கல்லூரியில் குறைவான இடங்களே உள்ளதாகவும், முன்பதிவு செய்தால் தான் இடம் கிடைக்கும் எனவும் கூறி வருகின்றன. இது பெற்றோர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.தனியார் கல்லூரிகளில் முன்பதிவு செய்ய தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். ஒருவேளை அரசு கல்லூரியில் இடம் கிடைத்தால் அந்த கட்டணத்தை திரும்ப பெற முடியாது. எனவே என்ன செய்வது என பல பெற்றோர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இதற்கிடையில் சில கல்லூரிகள் இடைத்தரகர்கள் மூலம் நேரிடையாக பெற்றோர்களை சந்தித்து தங்கள் கல்லூரியில் மாணவர்களை சேர்க்க வலை விரிக்கின்றன.உயர் கல்வி என்றால் மருத்துவமும், பொறியியலும் தான் என்ற எண்ணத்தை பெற்றோர் மாற்றி இன்னும் ஏராளமான படிப்புகள் உள்ளன என்பதை உணர்ந்து, தங்களது பிள்ளைகளின் விருப்பத்தையும் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப உயர் கல்வி படிப்புகளை தேர்வு செய்ய வேண்டும். அப்போது தான் தனியார் கல்லூரிகளின் மோகம்குறைந்து தரமான மாணவர்கள் உருவாகும் சூழல் ஏற்படும் என கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
மழலையர் பள்ளி வழக்கு : பள்ளிக்கல்வி செயலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மழலையர் பள்ளிகளை முறைப்படுத்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பள்ளிக்கல்வி செயலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
6 வாரத்தில் பதில் தர தலைமை நீதிபதி கவுல், நீதிபதி சிவஞானம் அமர்வு உத்தரவிட்டுள்ளது.கொள்கை முடிவு எடுக்க கால அவகாசம் கேட்டதற்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தலைமையாசிரியர் பதவி அளிக்க மறுப்பு: மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆசிரியை புகார்

தலைமையாசிரியர் பதவி உயர்வு, மருத்துவ விடுப்பை அனுமதிக்காமல் தனக்கு பள்ளிநிர்வாகம் நெருக்கடி அளித்து வருவதாக திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும்கூட்டத்தில் ஆட்சியரிடம் பெண் ஆசிரியை புகார் மனு அளித்தார்.
பாளையங்கோட்டையில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணி செய்து வருபவர் கே. சுந்தரராஜன் மனைவி பார்வதி, அளித்த புகார் மனு: இந்துஅறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் பாளையங்கோட்டையில் இயங்கி வரும் தொடக்கப் பள்ளியில் 1993 இல் இருந்து ஆசிரியராக பணி செய்து வருகிறேன். மூத்த ஆசிரியையான எனக்கு இப்பள்ளியின் தலைமையாசிரியர் பதவி வழங்காமல், என்னை விட பணியில் இளைய ஆசிரியை ஒருவருக்கு பதவி உயர்வை விட்டுக் கொடுக்குமாறு பள்ளி நிர்வாகம் தரப்பில் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.கல்வித்துறை மூலம் எனக்கு பதவி உயர்வு கிடைக்காமல் இருக்கும் வகையில் பள்ளியில் பணி செய்து வரும் பிற ஆசிரியர்களும் நிர்வாகத்துடன் சேர்ந்து எனக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ விடுப்பில் சென்ற 26 நாட்களை அனுமதிக்காமல் பள்ளி நிர்வாகம் கடந்த 7 மாதமாக இழுத்தடித்து வருகிறது.

பதவி உயர்வு, வருடாந்திர ஊதிய உயர்வு, மருத்துவ விடுப்பினை அனுமதிக்காமல் என்னை விருப்ப ஓய்வில் செல்லுமாறு நெருக்கடி அளித்து வருகின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1986-87 ஆண்டு வரையிலான ஆசிரியர் பட்டயச் சான்று பிளஸ் 2-க்கு இணையானது

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு, கடந்த 1987 ஆம் ஆண்டுக்குப் முன்பாகப் பெறப்பட்ட ஆசிரியர் பயிற்சிப் பட்டயச் சான்றானது, பிளஸ் 2 வகுப்புக்கு இணையானது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அண்மையில் வெளியிடப்பட்ட உத்தரவு:

கடந்த 1987-88 ஆம் ஆண்டு முதல் இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி பிளஸ் 2 என நிர்ணயிக்கப்பட்டது. அதற்கு முன்பு, 1986-87 ஆண்டு வரையில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் சேர்ந்து பயில அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இறுதியாக, 1986-87 ஆம் ஆண்டில் இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் முதல் ஆண்டில் சேர்ந்தவர்கள், 1987-88-ல் பயிற்சியை முடித்து தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றனர். அதில், ஒரு சில பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்கள், 1988-ஆம் ஆண்டுக்குப் பிறகே தோல்வியுற்ற பாடங்களில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றனர். அதுபோன்றே 1986-87 ஆம் ஆண்டுக்கு முந்தைய கல்வி ஆண்டுகளில் இடைநிலை

ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்து பயின்று தேர்வுகளில் தோல்வியுற்ற மாணவர்களும், பின்னர் வந்த ஆண்டுகளில், தோல்வியுற்ற பாடங்களில் தேர்வு எழுதித் தேர்ச்சி அடைந்திருக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே, அத்தகையோர் பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர் பயிற்சிச் சான்றுகளையும், பிளஸ் 2 தேர்ச்சிக்கு இணையாகக் கருதப்பட வேண்டிய நிலை உள்ளது.

இந்தக் கருத்தை செயலாக்கத்துக்குக் கொண்டு வர ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் திருத்தம் கொண்டு வரவேண்டும். அந்தத் திருத்தம் இப்போது கொண்டு வரப்பட்டுள்ளது.

திருத்தம் என்ன? பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின்னர் 1986-87 வரை (கடைசி பிரிவினர்) ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து பயின்று, அந்தப் பயிற்சியினை இரண்டு ஆண்டுகளில் நிறைவு செய்தவர்களும், அந்தப் பயிற்சியில் சில பாடங்களில் தோல்வியுற்று

பிறகு தேர்ச்சி பெற்றவர்களுக்கும் சலுகை அளிக்கப்படுகிறது. அதன்படி, அவர்கள் பெற்ற இரண்டு ஆண்டு ஆசிரியர் பயிற்சி பட்டயச் சான்றினை பிளஸ் 2 வகுப்புக்கு இணையாகக் கருதி உத்தரவு வெளியிடப்படுகிறது என அரசின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் போராட்டத்தில் அரசியல் தலையீடு: அரசு அதிர்ச்சி; பெற்றோர் கவலை- தினமலர்

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து உட்பட, பல கோரிக்கைகளை வலியுறுத்தி நடக்கும் ஆசிரியர்கள் போராட்டம் அரசியலாகியுள்ளது. வரும், 12ம் தேதி, 'ஜாக்டா' நடத்தும் உண்ணாவிரதத்தில், தி.மு.க., மற்றும் தே.மு.தி.க., உட்பட, சில கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து, தனியார் பள்ளிகள் புதிதாகத் துவங்க அனுமதிக்கக் கூடாது, தமிழகத்திற்கு தனிக் கல்விக் கொள்கை கொண்டு வர வேண்டும், தொகுப்பூதிய ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உட்பட, பல கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர் சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதில், 'ஜாக்டோ' ஆசிரியர் கூட்டுக்குழுவைப் போல், 'ஜாக்டா' கூட்டுக்குழுவும் தனியாக போராட்டங்களை அறிவித்துள்ளது. இக்குழுவின் நிர்வாகிகள் கூட்டம், சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. அதில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில், வரும், 12ம் தேதி நடத்த உள்ள உண்ணாவிரதப் போராட்டத்தை, கட்சிகள் ஆதரவு பெற்று தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி, உண்ணாவிரதத்தில், தி.மு.க., - தே.மு.தி.க., - காங்., - பா.ம.க., - பா.ஜ., - ம.தி.மு.க., - த.மா.கா., மார்க்சிஸ்ட் கம்யூ., உள்ளிட்ட கட்சிகள், பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்பதாக, 'ஜாக்டா' கூட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் இளமாறன் தெரிவித்தார். இதனால், எதிரணியில் உள்ள ஆசிரியர் சங்க நிர்வாகிகளும், அரசு அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். போராட்டத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க உள்ளதால், போராட்டத்தை எப்படி நிறுத்தலாம் என, பள்ளிக் கல்வித் துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

2016-17 ல் ப்ளஸ் 1 பாடத்திட்டத்தில் மாற்றம்

பிளஸ் 1 பாடத்திட்டம் 2016-17ம் கல்வி ஆண்டிலும் பிளஸ் 2 பாடத்திட்டம் அதற்கு அடுத்த கல்வி ஆண்டிலும் மாற்றி அமைக்கப்படுகிறது. தமிழகத்தில் 10ம் வகுப்பிற்கு பின்னர் பியூசியும் அதைத் தொடர்ந்து பட்டப்படிப்பு என்ற முறையும் கடந்த 1979ம் ஆண்டு வரை அமலில் இருந்தது.

இந்தக் கல்வி முறை 1980ல் மாற்றம் செய்யப்பட்டு பியூசி கல்வி அகற்றப்பட்டது.அதற்குப் பதிலாக எஸ்எஸ்எல்சியை தொடர்ந்து பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத்திட்டம் மேல்நிலைக்கல்வி என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்தே உயர்கல்வி பயில முடியும். இந்த கல்வித்திட்டம் அறிமுகமான கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் 38 ஆக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து தற்போது தேர்ச்சி 90 சதவீதத்தை எட்டியுள்ளது. ஆயினும் பிளஸ் 2வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து மருத்துவம், இன்ஜினியரிங்போன்ற உயர் கல்வியை தேர்வு செய்யும் மாணவர்கள் திறமையற்றவர்களாக விளங்குகின்றனர்.குறிப்பாக பொறியியல் கல்வி பயிலும் பல மாணவர்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகஅளவில் அரியர்ஸ் வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பிளஸ் 2வில் நன்றாக பயின்று அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் கூட உயர் கல்வியில் திணறும் நிலைநிலவுகிறது.

இதுகுறித்த ஆய்வில் மாணவர்கள் உயர் கல்வி பயில ஏற்ற அளவில் அவர்களது மேல்நிலைக் கல்வி பாடத்திட்டங்கள் போதுமானதாக இல்லை என்பது தெரியவந்தது. நவீன உயர்கல்வி பாடங்களை சிரமமின்றி கற்பதற்கும் எதிர்கால வேலைவாய்ப்பிற்கு ஏற்ற வகையிலும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத்திட்டங்களை மாற்றி அமைக்கவேண்டிய அவசியம் உணரப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டங்கள் மாற்றப்படாமல் இருப்பதும் மாணவர்களின் உயர்கல்வியில் தடுமாற்றத்திற்கு காரணமாக இருக்கிறது. இதையடுத்து பேராசிரியர்கள், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்வியாளர்கள் கொண்ட உயர்மட்ட குழு முழுமையாக ஆய்வு செய்து பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பது குறித்த விபரங்களை தயார் செய்தனர்.பின்னர் அதை கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் பார்வைக்கும் வழங்கி பல்வேறு திருத்தங்களுக்குப் பின்னர் இறுதி வடிவம் கொடுத்து கடந்த ஆண்டே கல்வித்துறைக்கு சமர்ப்பித்தனர்.

இதை இறுதி ஆய்வு செய்த கல்வித்துறை அரசின் அனுமதி பெற்று பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளது. அனேகமாக வரும் 2016-17ம் கல்வி ஆண்டில் பிளஸ் 1 கல்விக்கும், அதற்கு அடுத்த கல்வியாண்டான 201718ல் பிளஸ் 2 கல்விக்கும் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்ய வாய்ப்பு உள்ளது. இதை முறைப்படி அரசு அறிவிக்கும் என ஆசிரியர்கள் கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். அரசு அறிவித்ததும் புதிய பாடத்திட்டங்களுடன் கூடிய பாடப்புத்தகங்களை அச்சடிக்கும் பணி நடப்பு கல்வி ஆண்டிலேயே தொடங்க வாய்ப்பு உள்ளது.

10 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வு ரிசல்ட் இந்த மாதம் வெளியீடு

10.5 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வு ரிசல்ட் இம்மாத இறுதியில் வெளியிடப் படும் என்று டி.என்.பி. எஸ்.சி. தலைவர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.டி.என்.பி.எஸ்.சி. தலை வர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப்&4 பதவியில் காலியாக உள்ள 4963 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு டிசம்பர் 21ம் தேதி நடந்தது. இத்தேர்வை சுமார் 10.5 லட்சம் பேர்எழுதினர். இத்தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இம்மாத இறுதிக்குள் ரிசல்ட் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.2012ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வு நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நேர்முக தேர்வு நடந்தது. இந்த நிலையில், ஆய்வாளர் தேர்வையும், நேர்முக முடிவுகளையும் ரத்து செய்ய கோரி மதுரை கோர்ட்டில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால், இந்த தேர்வுக்கான ரிசல்ட்டும் விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மாநில நீதித்துறையில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவியில் 162 காலி பணியிடங்களை நிரப்ப எழுத்து தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் 1 மற்றும் 2ம் தேதிநடத்தப்பட்டது. இதில், 590 பேர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டனர். இதில் 341 பேர் நேர்காணல் தேர்விற்கு தற்காலிகமாக தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்தோனேசிய கரன்சியில் விநாயகர் படம்

இந்தோனேசிய கரன்சியில், விநாயகர் உருவம் பொறிக்கப்பட்டு உள்ளது. முழு முதற்கடவுளான விநாயகருக்கு, நம் நாட்டில் மட்டுமின்றி, இந்தோனேசிய நாட்டிலும்மதிப்பு அளிக்கப்படுகிறது.
அந்நாடு வெளியிட்டுள்ள, 20 ஆயிரம் ரூப்பியா நோட்டில், விநாயகர் உருவம் பொறிக்கப்பட்டு உள்ளது.அத்துடன், அந்நாட்டின் சுதந்திர போராட்ட வீரர் மற்றும் கல்விக்கு வித்திட்ட செம்மல், கிஹாஜர் தேவாந்தரானி உருவமும், மறுபுறம் கல்வி நிறுவன படமும் இடம் பெற்றுள்ளன.

இந்தோனேசியாவில், 1.7 சதவீத இந்துக்களே வசிக்கின்றனர்; அதிலும், அங்குள்ள பாலி தீவில் தான், அதிக இந்துக்கள்வசிக்கின்றனர். இந்த கரன்சி நோட்டை, ஆந்திர மாநிலம், அமலாபுரம் எஸ்.பி.ஐ., அதிகாரி ரவிசுப்ரமணியம்சேகரித்து வைத்து உள்ளார்.
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 1706 துணை ஆய்வாளர் பணி.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் நிரப்பப்பட உள்ள 1706 துணை ஆய்வாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது பணியாளர் தேர்வாணையம்.

நிறுவனம்: Central Armed Police Forces

பணி: Sub-Inspector

காலியிடங்கள்: 1706

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4200

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

வயதுவரம்பு: 20 - 25க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு கட்டணம்: ரூ.100. எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.ssconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.04.2015

மேலும் தேர்வு மையங்கள், தேர்வு திட்டங்கள் வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://ssc.nic.in/notice/examnotice/Notice_SI_in_CAPFs_ASI_and_Delhi_Police_2015_27_03_2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
லட்சுமி விலாஸ் வங்கியில் இளநிலை அதிகாரி பணி.

லட்சுமி விலாஸ் வங்கியில் நிரப்பப்பட உள்ள இளநிலை அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: லட்சுமி விலாஸ் வங்கி

பணி இடம்:
தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அனைத்து பகுதிகள்.

பணி: இளநிலை உதவியாளர்

தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி குறித்த அறிவு பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் மதேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு மையம்: சென்னை, கோயமுத்தூர், சேலம், மதுரை, கரூர், பெங்களூர், புதுதில்லி, ஹைதராபாத், விசாகப்பட்டினம், மும்பை, கோல்கத்தா, ராஞ்சி, அகமதாபாத்,போபால்.

தேர்வு கட்டணம்: ரூ.600. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

வயதுவரம்பு: 02.03.1988 - 01.03.1995 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.lvbank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.04.2015ஆன்லைன் தேர்வு மே மாதம் நடைபெறும்.ஆன்லைன் தேர்வின்போது பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை போன்ற அசல் அடையாள சான்றிதழ்களை காட்ட வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.lvbank.com/UserFiles/File/JO_Revt.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் சிறப்பு அதிகாரி பணி.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிரப்பப்பட உள்ள 53 சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: சிறப்பு அதிகாரி பணி

காலியிடங்கள்: 53

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Company Secretary – 01
2. Manager (Security) – 35
3. Officer (Data Analyst) – 01
4. Officer (Industry) - Mechanical - 03
5. Officer (Industry)-Textile – 01
6. Fire Officers – 09
7. Officer (Printing Technologist) – 03

தகுதி: இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் பி.இ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி, முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.400. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.pnbindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.04.2015

மேலும் விரிவான தகுதி, தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.pnbindia.in/new/Upload/En/HO_HRD_ADVT_53_SPL_OFFICERS_MP_26032015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
பல்லவன் கிராம வங்கியில் அலுவலக உதவியாளர் பணி.

பல்லவன் கிராம வங்கியில் நிரப்பப்பட உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: பல்லவன் கிராம வங்கி

காலியிடங்கள்: 116

பணி: அலுவலக உதவியாளர்,

சம்பளம்: அதிகாரி பணிக்கு மாதம் ரூ.31,407 வழங்கப்படும்.அலுவலக உதவியாளர் பணிக்கு மாதம் ரூ.17,368 வழங்கப்படும்.

வயதுவரம்பு: 18 - 28க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.pallavangramabank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.04.2015

மேலும் தகுதி, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.pallavangramabank.in/en/Downloads/Recruitment%20Notification%20III.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
25 வகை தொழிற்கல்வி படிப்பு அரசு பள்ளிகளில் துவக்கம்

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தில், தமிழக அரசு பள்ளிகளில், 25வகை தொழிற்கல்வி படிப்புகள் துவங்கப்பட உள்ளன. இதற்காக, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், வகுப்பறை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வுகள் நடக்கின்றன.
மாணவர்கள்தொழிற்கல்வியும் கற்க வேண்டும் என்பதற்காக, அந்தந்த பகுதிகள் சார்ந்துள்ள தொழில்களுக்கு ஏற்ப, ஐ.டி., எலக்ட்ரானிக்ஸ், விவசாயம், ஜுவல்லரி தயாரிப்பு உட்பட, 25 வகை தொழில் படிப்புகள் துவங்க, கல்வித் துறை முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக, ஒன்பதாம் வகுப்பில் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. ஒவ்வொரு பள்ளிகளிலும், அந்த பகுதிகளில் நிலவும் தொழில் சார்ந்த இரண்டு படிப்புகள் துவங்கப்படும்.
'வீட்டுக்கு ஒரு பட்டதாரியை உருவாக்குவேன்'- ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியரின் லட்சியப் பயணம்

தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வன்

“இன்னும் பத்து ஆண்டுக்குள் இந்த ஊரில் வீட்டுக்கு ஒரு பட்டதாரியையும் குறைந்தது ஐம்பது அரசு ஊழியர்களையும் உருவாக்கிவிட்டுத்தான் ஓய்வு பெறுவேன்” என்று உறுதிபடச் சொல்கிறார் தாமரைச்செல்வன்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகிலுள்ளது சித்தாதிக்காடு. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வன்.

15 ஆண்டுகளுக்கு முன்பே தனியார் பள்ளிக் குழந்தைகளைப் போல இந்தப் பள்ளிக் குழந்தைகளையும் சீருடை, டை அணிந்து மிடுக்காக நடக்கவைத்து அவர்களுக்கு தன்னம்பிக்கையை தந்தவர்.பொதுவாக கிராமத்துக் குழந்தைகளுக்கு பிறந்த நாள் கொண்டாட பெற்றோருக்கு நேரமும் இருக்காது; ஞாபகமும் வராது. இதனால் தனது பள்ளிக் குழந்தை களின் பிறந்த நாளுக்கு தனது செலவிலேயே கேக் வாங்கி வந்து குழந்தைகள் மத்தியில் அதை வெட்டவைத்து அவர்களை உற்சாகப்படுத்துகிறார் தாமரைச்செல்வன்.

இன்பச் சுற்றுலா, கல்விச் சுற்றுலா - இதெல்லாம் இந்தக் காலத்து பள்ளிக் குழந்தைகளுக்கு கனவாகிவிட்ட நிலையில் தாமரைச்செல்வனின் செலவில் இந்தப் பள்ளிக் குழந்தைகள் ஆண்டு தவறாமல் சுற்றுலா போகிறார்கள்.“இங்க படிக்கிற பிள்ளைங்க எல்லாருமே வறுமைக் கோட்டுல இருப்பவங்க. பெத்தவங்கள கேட்டால் ‘ஆடி மாசம் பொறந்தான்’னு தான் சொல்லுவாங்க. இந்த நிலைமையை மாத்தி, பிள்ளைகளின் பிறந்த நாளை அனைத்துப் பெற்றோருக்கும் தெரியவெச்சேன். ஒருவாரம் முன்னாடியே பிறந்த நாள் தேதியை பெத்தவங்களுக்கு தெரிவிச்சிருவோம். ஆரம்பத்துல கேக் மாத்திரமில்லாமல் புத்தாடையும் நானே எடுத்துக் குடுத்தேன். இப்ப, ஒன்றிரண்டு பேர் தவிர மத்தவங்க புத்தாடை எடுத்துடுறாங்க. கேக், சாக்லேட் மட்டும்தான் நம்ம செலவு. பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடத்து மேல நாட்டம் வந்தாதான் படிப்புல ஆர்வம் காட்டுவாங்க.

அதுக்காகத்தான் இப்படிச் சின்னச் சின்ன வேலைகளை செய்யுறோம். வீட்டில் நம்மபிள்ளைகளுக்கு பிறந்த நாள் கொண்டாட மாட்டோமா? அப்படித்தான் நினைச்சுக்குவேன்.வறுமையில இருந்தாலும் சில குடும்பங்களை குடி சீரழிக்குது. அதனாலேயே பிள்ளைகளை மேல்படிப்பு படிக்க வெக்க முடியாம திண்டாடுறாங்க. இன்னும் சிலருக்கு இயல்பாகவே வறுமை காரணமா படிப்பை தொடர முடியாம போயிடுது. அப்படி பாதியில் படிப்பை நிறுத்த வேண்டாம். மேலே படிக்க நான் உதவி செய்யுறேன்னு தைரியம் கொடுத்து பல பிள்ளைகளை கல்லூரி வரைக்கும் கொண்டு வந்துட்டேன்.மது அருந்தும் தகப்பன்களிடம், ‘நீ குடியை விடுறதா இருந்தா உன் பிள்ளையை நான் படிக்க வைக்கிறேன்’ என்று சொல்லி அவங்கள குடியிலிருந்தும் மீட்க முயற்சிக் கிறேன்.

எனது முயற்சிக்கு நல்ல பலன் கிடைச் சிருக்கு. இப்ப இந்தஊருல மொத்தம் 187 பட்டதாரிகள் இருக்காங்க. ஆனா அரசு ஊழியர் ஒருத்தர்கூட இல்லை.எஞ்சி இருக்கிற எனது பத்தாண்டு பணிக் காலத்துக் குள்ள இந்த ஊருல வீட்டுக்கு ஒரு பட்டதாரியையும் குறைஞ்சது 50 அரசு ஊழியர்களையும் உருவாக்கிக் காட்டுவேன். அதுக்காக விரைவில் இளைஞர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுறதுக்கான பயிற்சி வகுப்புகளை தொடங்கலாம்னு இருக்கேன்” என்கிறார் தாமரைச்செல்வன்.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பார்ம் பட்டதாரிகளுக்கு விரிவுரையாளர் பணி உயர் நீதிமன்றம் உத்தரவு

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!