Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 8 April 2015

கல்வி செய்திகள்

கல்வி செய்திகள்
www.rkkalvisiragukal.blogspot.com

🌺🍀மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

🌺🍀துணை கலெக்டர், போலீஸ் துணை சூப்பிரண்டு உள்ளிட்ட 60 பணியிடம் கொண்ட புதிய குரூப்-1 தேர்வு இந்த மாதம் அறிவிப்பு வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி

🌺🍀சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: தீர்ப்பு வழங்க இடைக்காலத் தடை.

🌺🍀கல்வி உரிமை சட்டத்தின்கீழ் சேர்க்கை வழங்காத பள்ளிகள் மீது வழக்கு

🌺🍀அரசு அச்சகத்தில் 147 பணியிடங்கள்: விண்ணப்பிக்க வரும் 17 கடைசி

🌺🍀மழலையர் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

🌺🍀அரசு பள்ளிகளில் விடுமுறைக்கு முன்னரே மதிய உணவு கட்!

🌺🍀பள்ளி, கல்லூரி பாடத் திட்டத்தில் 25% குறைக்க வேண்டும்: கலாம் யோசனை

🌺🍀மணியார்டர் சேவை நிறுத்தமா?- தபால் துறையை வீழ்த்த தனியார் நிறுவனங்கள் அவதூறு பரப்புகின்றன- மத்திய தபால்துறை அதிகாரி சுற்றறிக்கை

🌺🍀தெலுங்கு இடைநிலை ஆசிரியர் தேவை

🌺🍀குரூப்1, 2 பிரிவில் காலியாக உள்ள 1060 பணியிடத்துக்கு இம்மாதம் தேர்வு தேதி அறிவிப்பு

🌺🍀(கணினி ஆசிரியர்) 20,000 பணியிடங்கள் நிரப்பாவிடில் தலைமை செயலகம் முற்றுகை

🌺🍀1,000 குரூப் - 2 பணியிடங்களுக்கு இம்மாத இறுதியில் தேர்வு

🌺🍀10ம் வகுப்பு அறிவியல் தேர்வு 'ஈசி': 'சென்டம்' அதிகரிக்கும்

🌺🍀மாணவர்களுக்கு 'சீட்' மறுப்பு: நான்கு பள்ளிகள் மீது வழக்கு

🌺🍀இளநிலை பயிற்சி அலுவலர் பதவிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரை

🌺🍀பிளஸ் 2 பொருளாதார பாடத் தேர்வில் 2 கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

🌺🍀பிளஸ் 2 மாணவர்களுக்கான புத்தகங்கள் இந்த வார இறுதிக்குள் முழுமையாக விநியோகம்

🌺🍀மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: தேர்வானோர் எண்ணிக்கை இரு மடங்காக உயர்வு

🌺🍀ஒருங்கிணைந்த பாடத் திட்ட விவரம் மே மாதத்தில் வெளியீடு

🌺🍀"தொடக்கப் பள்ளிகளில் தமிழே பயிற்று மொழியாக வேண்டும்'
🌺🍀
www.rkkalvisiragukal.blogspot.com🌺🍀

ல்வி செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted: 07 Apr 2015 10:19 AM PDT
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு ஜனவரி 2015 முதல் வழங்க இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைகூட்டத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளது.இதையடுத்து
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
SSLC MARCH / APRIL 2015 - VALUATION TIME TABLE
Posted: 07 Apr 2015 07:34 AM PDT

துணை கலெக்டர், போலீஸ் துணை சூப்பிரண்டு உள்ளிட்ட 60 பணியிடம் கொண்ட புதிய குரூப்-1 தேர்வு இந்த மாதம் அறிவிப்பு வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி
Posted: 06 Apr 2015 09:06 PM PDT
துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட 60 பணியிடங்களைநிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பு இந்த மாதம் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை ஐகோர்ட்டில் தட்டச்சுப்பணியாளர்கள் 139 பணியிடங்களுக்கு 383பேர்களை அழைத்து சான்றிதழ் சரிபார்த்தல் பணி நேற்று பிராட்வே அருகே உள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் தொடங்கியது. அப்போது தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சான்றிதழ் சரிபார்த்தல்

தட்டச்சு பணியாளர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் பணி நேற்று தொடங்கியது. அது இன்று(செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது. தோட்டக்கலை அதிகாரிகளுக்கான சான்றிதழ் சரிபார்த்தல் கடந்த (மார்ச்) மாதம் 30-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதுவும் இன்று முடிகிறது. மேலும் குரூப்-2 தேர்வில்தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்த்தல் கடந்த மாதம் 26-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இது மே மாதம் 8-ந்தேதி முடிவடைகிறது. 3 சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெறுவதால் 27 பெஞ்சுகள் போடப்பட்டு 250 ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களை நிரப்ப ஏற்கனவே தேர்வு நடத்தப்பட்டு நேர்முகத்தேர்வும் முடிந்துவிட்டது. வேலைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டோர் பட்டியல் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படும். குருப்-1 , குரூப்-2 தேர்வுகள் இந்த மாதம் அறிவிப்புதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி தேர்ந்து எடுக்கும் பதவிகளில்பெரிய பதவி துணை கலெக்டர், துணை சூப்பிரண்டு ஆகிய பதவிகள் ஆகும். 13 துணை கலெக்டர் பணியிடங்களும், 25 துணை சூப்பிரண்டு பணியிடங்கள் உள்பட மொத்தம் 60-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு குருப்-1 தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கான அறிவிப்பு இந்த மாதத்திற்குள் வெளியிடப்படும். அதுபோல நேர்முகத்தேர்வு கொண்ட குரூப்-2 தேர்வுக்கு காலிப்பணியிடங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவை உள்ளன. இந்த எண்ணிக்கையை விட கூடுதலாக வரலாம். இந்த அறிவிப்பும் இந்த மாதத்திற்குள் வர இருக்கிறது. இந்த தேர்வு முறையில்மாற்றம் கொண்டு வரலாமா? என்று பரிசீலனை நடந்து வருகிறது.

இந்த மாதத்திற்குள் வெளியீடு

ஏற்கனவே குருப்-4 தேர்வு நடந்து முடிந்துவிட்டது. அந்த தேர்வை 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதினார்கள். ஆவலுடன் தேர்வு முடிவு எப்போது வரும் என்று தேர்வு எழுதியவர்கள் காத்திருக்கிறார்கள். இந்த முடிவும் இந்த மாதத்திற்குள் வர இருக்கிறது. இவ்வாறு சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: தீர்ப்பு வழங்க இடைக்காலத் தடை.
Posted: 07 Apr 2015 02:25 AM PDT
ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் பெங்களூரு உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை பிறப்பித்துள்ளது.
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் அரசு வழக்குரைஞராக பவானி சிங் ஆஜராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்பழகன் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று இறுதி தரப்பு வாதம் நிறைவு பெற்றது.

முதலில் அன்பழகன் சார்பிலும், பிறகு ஜெயலலிதா சார்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.பிறகு, வழக்கின் தீப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார். இதற்கிடையே, பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை ஏப்ரல் 15ம் தேதி வரை வழங்கக் கூடாது என்று இடைக்கால தடை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.
கல்வி உரிமை சட்டத்தின்கீழ் சேர்க்கை வழங்காத பள்ளிகள் மீது வழக்கு
Posted: 06 Apr 2015 11:32 PM PDT

பெங்களூரு:கல்வி உரிமை சட்டத்தில் மாணவர்களுக்கு, ’சீட்’ கொடுக்க மறுத்த, நான்கு கல்வி நிலையங்கள் மீது, முதன்முறையாக வழக்கு பதிவாகியுள்ளது.தனியார் பள்ளிகளில், கல்வி உரிமை சட்டத்தில் 1.11 லட்சம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
முதல் சுற்றில், 81 ஆயிரத்து 536 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
இரண்டாவது சுற்று, இன்னும், 10 நாட்களில் துவங்கவுள்ளது. கல்வி உரிமை சட்டத்தின் கீழ், மாணவர்களை சேர்க்க மறுத்ததற்காக, எட்டு பள்ளிகளுக்கு, ’நோட்டீஸ்’ அனுப்பப்பட்டது.இதற்கிடையில், கல்வி உரிமை சட்டத்தில் இடஒதுக்கீடு செய்ய மறுத்ததற்காக, நான்கு பள்ளிகள் மீது லோக் ஆயுக்தா வழிகாட்டுதலின்படி, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.அச்சிவ் ஸ்கூல் ஆப் எஜுகேஷன் செயலர் பவன் கூறியதாவது: நாங்கள் மைனாரிட்டி பிரிவில், எங்கள் பள்ளிகளை சேர்க்க விண்ணப்பித்துள்ளோம். கல்வித்துறை அதிகாரிகள், எந்த முடிவையும் தெரிவிக்காமல், கடந்தாண்டு செப்டம்பர் முதல் இழுத்தடிக்கின்றனர்.

இதுகுறித்து, ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், அந்த உத்தரவையும் எதிர்பார்த்து உள்ளோம்.

இவ்வாறு, அவர் கூறினார்.
அரசு அச்சகத்தில் 147 பணியிடங்கள்: விண்ணப்பிக்க வரும் 17 கடைசி
Posted: 06 Apr 2015 10:52 PM PDT

தமிழ்நாடு அரசு அச்சகத்தில் பல்வேறு நிலைகளில் காலியாகவுள்ள 147 பணியிடங்கள்நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 17 கடைசியாகும். இதுகுறித்து, எழுதுபொருள்-அச்சுத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு அரசு அச்சகம் சென்னை, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, சேலம், விருத்தாசலம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இந்த இடங்களில் பல்வேறு நிலைகளில் காலிப் பணியிடங்கள் உள்ளன. அச்சகர், அலுவலக உதவியாளர் என பல்வேறு நிலைகளில் காலியாகவுள்ள 147 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 17 ஆம் தேதி கடைசியாகும். எழுதுபொருள்-அச்சுத் துறை இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ள்ற்ஹற்ண்ர்ய்ங்ழ்ஹ்ல்ழ்ண்ய்ற்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய்) இருந்து தேவையான விவரங்களையும், விண்ணப்பப் படிவத்தையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழலையர் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Posted: 06 Apr 2015 10:46 PM PDT

மழலையர் பள்ளிகளை ஒழுங்குபடுத்தவில்லை என்றால், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மழலையர் பள்ளிகளுக்கான விதிமுறைகளை வகுக்க அரசு தரப்பில் மேலும் 6 மாத காலம் அவகாசம் கோரப்பட்டது.

இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், மழலையர் பள்ளிகளை ஒழுங்குபடுத்துவது குறித்து பலமுறை உத்தரவு பிறப்பித்தும் அரசு அதனை இறுதி செய்யவில்லை என்று கூறினர்.மேலும் அங்கீகாரம் பெற்ற மழலையர் பள்ளிகள் குறித்த விவரங்களை இணையதளத்தில் வெளியிடுதல் உள்ளிட்ட விதிகளை அரசு வகுக்க வேண்டும் என்றும், அடுத்தகட்ட விசாரணையின் போது இந்த விதிகள் வகுக்கப்படாவிட்டால், தமிழக பள்ளிக் கல்வித் துறைசெயலாளர் சபீதா, ஜூன் 16-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
அரசு பள்ளிகளில் விடுமுறைக்கு முன்னரே மதிய உணவு கட்!
Posted: 06 Apr 2015 09:54 PM PDT

பள்ளி வேலை நாட்கள் முடிந்ததால், தமிழகத்தில் பல்வேறு உயர்நிலைப் பள்ளிகளில், மதிய உணவு நிறுத்தப்பட்டு உள்ளது; மாணவ, மாணவியர் பட்டினியுடன் பரீட்சை எழுதும் நிலை ஏற்பட்டு உள்ளது.
அனைத்து குழந்தைகளும் தொடக்கக் கல்வி பெற வேண்டும்; சத்துணவுக் குறைவால் குழந்தைகள் மரணம் கூடாது; பசியால் கல்வி தடைபடக் கூடாது என்ற நோக்கங்களுடன், தமிழகத்தில், சத்துணவு மற்றும் மதிய உணவுத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

புகார்கள்:

ஆனால், இத்திட்டத்திற்கான கொள்முதலில் ஊழல் நடப்பதாகவும், மாணவ, மாணவியருக்கு சரியாக உணவு அளிக்கவில்லை என்ற புகார்களும் உள்ளன. இதன் உச்சகட்டமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மார்ச் 31ம் தேதியுடன் சத்துணவு நிறுத்தப்பட்டு உள்ளது. விடுமுறை முடிந்து, நேற்று பள்ளிக்கு வந்த மாணவர்கள், மதியம் உணவு சாப்பிட சென்ற போது, சத்துணவு மையம்; சமையலறைகள் பூட்டி இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். 10ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவ, மாணவியரும், பிற்பகலில் பள்ளிக்கு வந்த ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியரும், பட்டினியுடன் இருக்கும் நிலை ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு ஒன்றியத்திலுள்ள, ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட பகுதி பள்ளிகளில், இந்தநிலை ஏற்பட்டது.சத்துணவு அமைப்பாளர்களிடம் மாணவ, மாணவியர் கேட்ட போது, 'அரசு உத்தரவுப்படி, மார்ச் 31 வரை மட்டுமே சத்துணவு போட முடியும்; இனி, ஜுன் மாதம் பள்ளி திறந்த பின்தான், மதியஉணவு கிடைக்கும்' என்றனர்.'எங்களைப் போன்ற ஏழைக் குடும்பத்தில், பெற்றோர், காலையிலேயே கூலி வேலைக்குச் சென்று விடுவர்; நாங்கள் பள்ளி வந்து மதிய உணவு சாப்பிடுவோம்; மதிய உணவை திடீரென நிறுத்தி விட்டனர்; மாலையில் பெற்றோர் வீட்டுக்கு வந்து சமைக்கும் வரை, பசியுடன் இருக்க வேண்டும்' என, மாணவ, மாணவியர் புலம்பினர்

200 நாட்கள்:

இதுகுறித்து, சத்துணவு அமைப்பாளர்கள் கூறியதாவது:எங்களுக்கு, 200 நாட்கள் மட்டுமே வேலை நாள்; அதற்கு மேல் வேலை நாட்கள் இருந்தால், அரிசி, பருப்பு, சமையல் கூலி, செலவு எதும் கிடைக்காது; இந்தாண்டு, மார்ச் 31ம் தேதியுடன், 200 நாட்கள் முடிந்து விட்டன;ஆனால், ஏப்., 23 வரை பள்ளிகள் செயல்படும். 'ஆடிட்டிங்'கில், 200 நாட்களுக்கு மேல் ஏற்காததால், சத்துணவு தர இயலாது. ஆரம்பப் பள்ளிகளில் மட்டும், ஏப்., 30வரை சத்துணவு கிடைக்கும். ஒருசில மாவட்டங்களில், மாவட்ட ஆட்சியரிடம் கூடுதல் நாட்களுக்கு அனுமதி பெற்று, உணவு பரிமாறப்படுகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தமிழக சத்துணவு அமைப்பாளர்கள் சங்க, முன்னாள் பொதுச் செயலர் மேகநாதன் கூறுகையில், ''ஒவ்வொரு ஆண்டும் பள்ளி வேலை நாட்களும், மதிய உணவு தரும் நாட்களும் வேறுபடுவதால், இந்த சிக்கல் தொடர்கிறது. இதற்கு கல்வித் துறை, சமூகநலத் துறையும் சேர்ந்து, கூடுதல் நாட்களுக்கு மதிய உணவு தரும் உத்தரவை, முன்கூட்டியே பிறப்பித்தால், இந்த சிக்கல் தீரும்,'' என்றார்.
பள்ளி, கல்லூரி பாடத் திட்டத்தில் 25% குறைக்க வேண்டும்: கலாம் யோசனை
Posted: 06 Apr 2015 09:50 PM PDT

தொழில்முனைவோர் உருவாக வேண்டும் என்றால் தற்போதுள்ள பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் 25 சதவீதம் குறைக்க வேண்டும் என்றார் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்.கும்பகோணத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ‘வளர்ந்த இந்தியாவும்,இளைய சமுதாயமும்’ என்ற தலைப்பில் இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு சார்பில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் அப்துல் கலாம் பேசியதாவது: ‘இந்தியா 2020’ என்ற திட்டம், நாட்டை நிலைநிறுத்த வழிவகை செய்யும் திட்டம். அப்படிச் செய்தால் வறுமையில்வாடும் 30 சதவீத மக்களை அதிலிருந்து விடுவித்து, விவசாயம் மற்றும் தொழில் துறை வேலைவாய்ப்பை பெருக்கி, தனிநபர் வருமானத்தை உயர்த்த முடியும்.மத்திய, மாநில அரசுகள் இந்த லட்சியத்தை அடைய முயற்சித்து வருகின்றன. அதுமட்டும் போதாது. இளைய சமுதாயம் நம்பிக்கையுடன் உழைத்தால், தேவையான தகுதித் திறனை வளர்த்துக் கொண்டால் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி பெறும்.கிராமத்துக்கும் நகரத்துக்கும் இடையிலான சமூகப் பொருளாதார இடைவெளி குறைந்தநாடாக, சுத்தமான தண்ணீர், அனைவருக்கும் எரிசக்தி சமமாகக் கிடைக்கும் நாடாகஇந்தியாவை மாற்ற வேண்டும்.மேக் இன் இந்தியா திட்டத்தில் வெளிநாட்டு கம்பெனிகள், இங்கு 21 துறைகளில் தடம் பதிக்க உள்ளன.

இந்த திட்டத்தில் இந்திய நிறுவனங்களும் தங்களது திறமை, தொழில்நுட்பம் வெளிப்படும் வகையில் முன்னோடிகளாக உருவாக வேண்டும்.தற்போதுள்ள பாடத்திட்டத்தில் 25 சதவீதம் குறைத்து, புதிதாக தொழில் திறன், தொடர்பு திறன், பண்பாட்டு திறன், அறிவுத்திறன், உடல்நலம் மற்றும் மனநலன் மேம்பாடு போன்ற பாடத் திட்டங்களை அறிமுகப்படுத்தி, கல்லூரி முடித்து வெளியேறும் மாணவர்களை, உலகத் தரச் சான்றிதழுடன் வேலைக்கு செல்லும் வகையிலும், தொழில் முனைவோராகவும் உருவாக்கிட வேண்டும்.ஊழல் என்பது நாட்டில் மிகப்பெரிய வியாதியாக உருவெடுத்துள்ளது. ஊழல் என்பதுஎனக்கு இழுக்கு என்று ஒவ்வொருவரும் நினைக்ககூடிய சூழல் வரவேண்டும் என்றார்.இதில், நிறுவனர் டாக்டர் சேதுராமன், கல்லூரி துணைத் தலைவர் செந்தில்குமார்உள்ளிட்டோர் பங்கேற்றனர்,முன்னதாக பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களை கலாம் வழங்கினார்.

இதையடுத்து, தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மீனாட்சி மருத்துவமனை சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கலாம் தொடங்கி வைத்தார்.
மணியார்டர் சேவை நிறுத்தமா?- தபால் துறையை வீழ்த்த தனியார் நிறுவனங்கள் அவதூறு பரப்புகின்றன- மத்திய தபால்துறை அதிகாரி சுற்றறிக்கை
Posted: 06 Apr 2015 09:48 PM PDT

சாமானிய மக்களும் அதிகளவில் பயன்படுத்தும் மணியார்டர் சேவை நிறுத்தப்படவில்லை. சில போட்டி தனியார் நிறுவனங்கள் இதுபோன்ற தவறான செய்தியை பரப்புகின்றன என்று தபால் துறை விளக்கமளித்துள்ளது.
நாட்டின் கடைக்கோடி பகுதியில் வசிக்கும் சாமானிய மக்களும் அவசர தேவைகளுக்காக எவ்வித சிரமமும் இன்றி பணம் அனுப்புவதற்கு தபால் துறையின் மணி ஆர்டர் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், “மணியார்டர் சேவை நிறுத்தப்பட்டுவிட்டது” என்று இந்தியா போஸ்ட்டின் துணை இயக்குநர் ஷிவ் மதுர்குமார் கூறியதாக தகவல்கள் வெளியாகின.இதனால், அச்சேவையை பயன்படுத்திவரும் ஏராளமானோர் அதிர்ச்சியடைந்தனர். அது பற்றி தெரிந்துகொள்வதற்காக அருகில் உள்ள தபால் நிலையங்களில் பொதுமக்கள் குவிந்தனர்.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் இந்தியா போஸ்ட் (தபால்கள்) பிரிவின் செயலாளர் அலுவலகத்தில் இருந்து நேற்று அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:மணி ஆர்டர் சேவை நிறுத்தப் படுவதாக தகவல்கள் பரவிவருகின் றன. தமது சிறப்பான செயல்பாட்டால், இதே துறையில் ஈடுபட்டுள்ள பல தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாக தபால்துறை விளங்கிவருகிறது. அந்நிறுவனங்கள், சமீப காலமாக, செல்போன் மூலமாக பணம் அனுப்பும் சேவையிலும் ஈடுபட்டுள்ளன. அச்சேவைக்கு, தபால்துறையின் மணி ஆர்டர் சேவை போட்டியாக அமைந்துள்ளது. அதனால், பொய்யான தகவலை பரப்பிவருகின்றன.

இது தொடர்பாக அனைத்து அஞ்சலக வட்டாரத் தலைவர்களும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும், உடனுக்குடன் பணம் அனுப்பும் ‘இன்ஸ்டன்ட் மணி ஆர்டர்’, ‘மொபைல் மணி ஆர்டர்’, ‘சர்வதேச மணி ஆர்டர்’ போன்ற புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப் பட்டிருப்பதையும் மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, சென்னையில் உள்ள தமிழ்நாடு வட்டார தலைமை அலுவலகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் நேற்று கூறியதாவது:தபால் துறையின் மணி ஆர்டர் சேவை நிறுத்தப்பட்டதாக வெளியான தகவல்கள் தவறானவை. வழக்கமான மணி ஆர்டர், அதனையொத்த மின்னணு மணி ஆர்டர் (இ.எம்.ஓ.) ஆகியவை தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளன. மணி ஆர்டர் (அட்டை) படிவத்துக்கு பதிலாக, கம்ப்யூட்டர் மூலமாக தலைமை தபால் அலுவலகங்களுக்கு சில விநாடிகளில்மணி ஆர்டர் பற்றிய தகவல்களை அனுப்பும் இ.எம்.ஓ.வும் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. இத்திட்டத்தின்படி, பணத்தை ஒரு கிளையில் செலுத்திவிட்டால், போய்ச் சேர வேண்டிய கிளைக்கு சில விநாடிகளில் தகவல் அனுப்பப்படும். அங்கிருந்து தபால்காரர்கள் மூலம் பணம் உரியவருக்கு உடனே போய் சேரும். தமிழகத்தில் கடந்த 2014-15 நிதியாண்டில் மட்டும் 3 கோடி மணி ஆர்டர்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதில், 11 லட்சம் மணி ஆர்டர்கள், தமிழக அரசின் சமூகநலத் திட்டங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு அனுப்பப்பட்டவையாகும்.
தெலுங்கு இடைநிலை ஆசிரியர் தேவை
Posted: 06 Apr 2015 06:40 PM PDT

குரூப்1, 2 பிரிவில் காலியாக உள்ள 1060 பணியிடத்துக்கு இம்மாதம் தேர்வு தேதி அறிவிப்பு
Posted: 06 Apr 2015 06:38 PM PDT

குரூப்1, 2வில் காலியாக உள்ள 1,060 காலி பணியிடங்களை நிரப்புவதற்கானஅறிவிப்பு இம்மாதம் இறுதியில் வெளியிடப்படும்’ என்று டி.என். பி.எஸ்.சி.தலைவர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
குரூப்2 பதவியில் 1130 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு 5239 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை பிரா ட்வேயில் உள்ள டி.என்.பி. எஸ்.சி. தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.

மேலும், சென்னை ஐகோர்ட்டில் காலியாக உள்ள 139 தட்டச்சர் பதவி, தோட்டக்கலை துறை அதிகாரி பதவியில் காலியாக உள்ள 189 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பும் நேற்று துவங்கியது.ஒரே நாளில் 3 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுவது இதுவே முதல் முறை. இப்பணிகளை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியன், செய லாளர் விஜயகுமார் ஆகியோர் பார்வையிட்டனர். அதன் பின்னர், டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியன் அளித்த பேட்டி: குரூப் 1 பதவியில் போலீஸ் டி.எஸ்.பி (25 காலி பணியிடம்), துணை கலெக்டர்(13 காலி பணியிடம்) என 60க்கும்மேற்பட்ட காலி பணியிடங்கள், குரூப் 2வில்(நேர்முக தேர்வு பதவி) 1000காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு இந்த மாத இறுதியில்அறிவிக்கப்படும். அறிவிப்பு வெளியான மறுநிமிடமே ஆன்லைன் மூலம் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பணி தொடங்கப்படும். இந்தாண்டுக்கான கால அட்டவணையில் 10,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போதைய சூழ்நிலையில், இந்த பணியிடங்கள் எண்ணிக்கை 15,000 ஆக உயர்ந்துள்ளது.

இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதிய குரூப் 4 தேர்வுக்கான ரிசல்ட் இந்த மாதத்துக்குள் வெளியிடப் படும். அதே போல, டி.இ.ஓ. தேர்வுக்கான ரிசல்ட் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும்.தேர்வுகள் அனைத்தும் உடனுக்குடன் நடத்தி விரைவில் தேர்வு முடிவு களை வெளியிட நடவடிக்கைகளை டிஎன்பிஎஸ்சி தூரிதப்படுத்தியுள்ளது. தேர்வு முடிவுகளை காண விரும்புவோர் டி.என்.பி. எஸ்.சி. இணையதளத்தில் தேர்வு எண், பிறந்தநாள் தேதியை டைப் செய்து பார்க்க வேண்டும். அதில், அவர்களது மதிப்பெண் மட்டும் தான் தெரியும். மற்றவர்கள் மதிப்பெண்ணை பார்க்க முடியாது. தற்போது, இந்த முறை மாற்றப்பட்டுள்ளது.

அதாவது, ஒருவரின்மதிப்பெண்ணை மட்டுமல்ல தேர்வு எழுதிய அனைவரின் மதிப்பெண்ணை பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனால், மற்றவர்கள் எவ்வளவு மார்க் வாங்கி உள்ளனர் என்பதை பார்க்க முடியும். இவ்வாறு பாலசுப்பிரமணியன் கூறினார்.
(கணினி ஆசிரியர்) 20,000 பணியிடங்கள் நிரப்பாவிடில் தலைமை செயலகம் முற்றுகை
Posted: 06 Apr 2015 06:04 PM PDT
'இருபதாயிரம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பாவிட்டால், வரும் மே மாதம் தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம்,” என தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இச்சங்கம் சார்பில், திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகம் அருகே, ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். அவர் பேசியதாவது: 2011ல் சமச்சீர் கல்வியில் கணினி அறிவியல் புத்தகம் 6 முதல் 10ம் வரையுள்ள வகுப்புகளுக்கு வழங்கப்பட்டது. அந்த புத்தகங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன. மீண்டும் புத்தகங்களை புழக்கத்தில் விட்டு நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் வேலையின்றி 20 ஆயிரத்துக்கும் அதிகமான பி.எட்., கணினி அறிவியல் ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களில் அமர்த்த வேண்டும். அரசுப்பள்ளிகளில் 10க்கும் மேற்பட்ட பணிகள் கணினியை சார்ந்தே உள்ளன. கணினி அறிவியல் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்., அரசு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். வட்டார வளமையங்களில் காலியாக உள்ள கணினி அலுவலர் பணியில் எங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தும் போது கணினி அறிவியல் பாடத்திட்டத்திற்கான பணியிடங்களை உருவாக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால் வரும் மே மாதம் 20 ஆயிரம் பேருடன் தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம், என்றார்.

1,000 குரூப் - 2 பணியிடங்களுக்கு இம்மாத இறுதியில் தேர்வு
Posted: 06 Apr 2015 06:03 PM PDT

தமிழக அரசுத் துறையில், 1,000 குரூப் - 2 பணியிடங்கள் மற்றும் 60 குரூப் - 1 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என்று, டி.என்.பி.எஸ்.சி., (தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்) தலைவர் பாலசுப்பிரமணியன் கூறினார்.

உயர் நீதிமன்றத்தில்:

தட்டச்சர் பணி, தோட்டக்கலை அலுவலர் பணி மற்றும் குரூப் - 2 பணிகள் ஆகியவற்றுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடந்து வருகிறது.

இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் சி.பாலசுப்பிரமணியன் கூறியதாவது: டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வுப் பணிகள் முன்பை விட விரைவுபடுத்தப்பட்டு, மிகவும் வெளிப்படையான முறையில் நடக்கிறது; தேர்வு முடிவுகள் தாமதமின்றி வெளியிடப்படுகின்றன. கடந்த ஆண்டு நடந்த மாவட்டக் கல்வி அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள், இவ்வார இறுதியிலும், குரூப் - 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியிலும் வெளியிடப்படும். ஏற்கனவே தகுதித் தேர்வு நடத்தப்பட்ட, குரூப் - 1 பதவிகளுக்கு, மே 2, 3 மற்றும் 4ம் தேதிகளில் முதன்மைத் தேர்வு நடத்தப்படும். இந்த ஆண்டு அரசுத் துறைகளில், 50 ஆயிரம் காலியிடங்கள் உருவாக வாய்ப்புள்ளது. புதிய பணி நியமனத்துக்கான பட்டியல், அலுவலர் தேர்வுக் குழு பட்டியலின் படி நடக்கும். குரூப் - 2 பதவிகளுக்கு, 1,000 இடங்கள் காலியாக உள்ளன. இதேபோல், சப் - கலெக்டர், போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் மற்றும் வணிகவரி அதிகாரி போன்ற, குரூப் - 1 பதவிகளுக்கு, 60 இடங்கள் காலியாக உள்ளன. இவற்றுக்கான தேர்வு தேதி, இம்மாத இறுதிக்குள் வெளியிட வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

10ம் வகுப்பு அறிவியல் தேர்வு 'ஈசி': 'சென்டம்' அதிகரிக்கும்
Posted: 06 Apr 2015 06:02 PM PDT

பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு வினாத்தாள் எளிதாக இருந்ததால், இந்த ஆண்டு நூற்றுக்கு நூறு, 'சென்டம்' எடுப்போர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வில், நேற்று அறிவியல் தேர்வு நடந்தது. இதில் மொத்தம், 75 மதிப்பெண்களுக்கு, 'சாய்ஸ்' உட்பட, 53 வினாக்கள் இடம் பெற்றன; இரண்டு 'டயாக்ராம்' வினாக்களுடன், பல சுவாரஸ்யமான வினாக்கள் இடம் பெற்றிருந்தன. நீர்த்தட்டுப்பாடு ஏற்படக் காரணம்; நீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்கும் முறை; கிராமங்களில் அதிகம் பரவிய மற்றும் பெரும்பாலான மக்களை தாக்கிய நோய் எது என்று எலிக்காய்ச்சல், டெங்கு மற்றும் சிக்குன் குனியா கொடுக்கப்பட்டிருந்தன; ஆதி மனிதன் தோன்றிய நாடு எது; கருப்பு வைரம் எது; மலேரியா கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் போன்ற கேள்விகள் இடம் பெற்றிருந்தன. தேர்வு முடிந்து வந்த மாணவ, மாணவியர் கூறுகையில், 'வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்தது; அனைத்துக் கேள்விகளும் விடைகள் தெரிந்தவையாகவே இருந்தன; பரீட்சைக்கு முறையாக தயாரான, பெரும்பாலான மாணவ, மாணவியர் சென்டம் வாங்குவோம்' என்றனர். ஆசிரியர்கள் கூறுகையில், 'அறிவியல் தேர்வு வினாத்தாள், 'ஈசி'யாக இருந்தது; ஏற்கனவே, கணித வினாத்தாளும் எளிதாக இருந்ததால், இரு பாடத்திலும் அதிக மாணவர்கள், முழு மதிப்பெண் பெறுவர். இதனால், வரும் கல்வியாண்டில், பிளஸ் 1 வகுப்பில், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் சேர போட்டி ஏற்படும்' என்றனர்.

மாணவர்களுக்கு 'சீட்' மறுப்பு: நான்கு பள்ளிகள் மீது வழக்கு
Posted: 06 Apr 2015 06:02 PM PDT

பெங்களூரு: கல்வி உரிமை சட்டத்தில் மாணவர்களுக்கு, 'சீட்' கொடுக்க மறுத்த, நான்கு கல்வி நிலையங்கள் மீது, முதன்முறையாக வழக்கு பதிவாகியுள்ளது.

தனியார் பள்ளிகளில், கல்வி உரிமை சட்டத்தில், 1.11 லட்சம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதல் சுற்றில், 81 ஆயிரத்து 536 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இரண்டாவது சுற்று, இன்னும், 10 நாட்களில் துவங்கவுள்ளது. கல்வி உரிமை சட்டத்தின் கீழ், மாணவர்களை சேர்க்க மறுத்ததற்காக, எட்டு பள்ளிகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. இதற்கிடையில், கல்வி உரிமை சட்டத்தில் இடஒதுக்கீடு செய்ய மறுத்ததற்காக, நான்கு பள்ளிகள் மீது, லோக் ஆயுக்தா வழிகாட்டுதலின்படி, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அச்சிவ் ஸ்கூல் ஆப் எஜுகேஷன் செயலர் பவன் கூறியதாவது: நாங்கள் மைனாரிட்டி பிரிவில், எங்கள் பள்ளிகளை சேர்க்க விண்ணப்பித்துள்ளோம். கல்வித்துறை அதிகாரிகள், எந்த முடிவையும் தெரிவிக்காமல், கடந்தாண்டு செப்டம்பர் முதல் இழுத்தடிக்கின்றனர். இதுகுறித்து, ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், அந்த உத்தரவையும் எதிர்பார்த்து உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

இளநிலை பயிற்சி அலுவலர் பதவிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரை
Posted: 06 Apr 2015 06:01 PM PDT
இளநிலை பயிற்சி அலுவலருக்கான பணிக்காலியிடத்திற்கு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் பரிந்துரை செய்யப்பட இருக்கின்றனர்.

இது தொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராமநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணை இயக்குநரால்(கைவினைஞர் பயிற்சி) இளநிலை பயிற்சி அலுவலர் பணிக்காலியிடத்திற்கு தகுதியுடைய பதிவுதாரர்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரைக்கப்பட உள்ளனர்.கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு மற்றும் அரசு அங்கிகாரம் பெற்ற பாலிடெக்னிக் கல்லூரியில் 3 ஆண்டு பட்டயம் பெற்று பதிவு செய்திருப்பது அவசியம் ஆகும். இதில், மெக்கானிக்கல் என்ஜினியரிங், கணிப்பொறி தொழில்நுட்பம், கேட்டரிங் டெக்னாலஜி, ஆட்டோமொபைல் என்ஜினியரிங், எலெக்ட்ரிக்கல் என்ஜினியரிங், மெரைன் என்ஜினியரிங், டூல் அண்ட் மை மேக் என்ஜினியரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் என்ஜினியரிங், பேஷன் டெக்னாலாஜி, எம்ராயட்ரி நீடில் ஆர்ட் ஆகிய பிரிவுகளில் பட்டயம் பெற்று பதிவு செய்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.1.2015 அன்றைய நாளில் ஆதிதிராவிடர் பழங்குடியினர், அருந்ததியினர் ஆகியோருக்கு 40 வயதிற்குள்ளும், பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட வகுப்பினருக்கு 37 வயதிற்குள்ளும், இதர பிரிவினருக்கு 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி வயது வரம்பு தளர்வு உண்டு.

இப்பணிக்கான மாநில அளவிலான பதிவு மூப்பு, கல்வித் தகுதி, வயது வரம்பு போன்ற விவரம் சூலக்கரையில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வருகிற 8-ம் தேதி காலை 11 மணிக்கு வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, கல்வி சான்றுகளுடன் நேரில் வந்து தங்கள் பெயர் பரி்ந்துரை செய்யப்படும் விவரங்களை அறிந்து கொள்ளலாம். எனவே மேற்குறிப்பிட்ட நாளுக்கு பின்னர் வருவோரின் கோரிக்கைகள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 பொருளாதார பாடத் தேர்வில் 2 கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
Posted: 06 Apr 2015 05:58 PM PDT
பிளஸ் 2 பொருளாதார பாடத் தேர்வில் 2 கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்படும் என, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.

பிளஸ் 2 பொருளாதார பாட விடைத்தாள் திருத்துவதற்குத் தடைவிதிக்கக் கோரி தமிழ்நாடு முதுகலை ஆசிரியர்கள் சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவர் எம்.சந்திரன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

மனுவில், பிளஸ் 2 பொருளாதார பாடத்தேர்வு கடந்த மார்ச் 27 ஆம் தேதி நடைபெற்றது. இதில் "ஏ' பிரிவில் ஒரு மதிப்பெண் கேள்விகளில் 18, 20 ஆம் கேள்விகள் தவறானதாகவும் விடையளிக்க முடியாததாகவும் உள்ளன. மேலும் "டி' பிரிவில் 78 ஆவது கேள்வி கடினமானதாக உள்ளது. 20 மதிப்பெண்கள் அளிக்கக்கூடிய இந்தக் கேள்வி, தலா 10 மதிப்பெண் அளிக்கக்கூடிய இரு கேள்விகளை ஒருங்கிணைத்து கேட்கப்பட்டுள்ளது. பாடப் புத்தகத்தில் உள்ள 10 பக்கங்களில் இருந்து விடையளிக்கக் கூடியதாக இந்தக் கேள்வி உள்ளது. குறிப்பிட்ட கேள்விக்கான விடை பொருளாதார பாடத்தில் தேவை, விநியோகம் என்ற பாடத்தில் உள்ளது. புத்தகக் குழு பரிந்துரைப்படி இந்தப் பாடத்தில் இருந்து புத்திக் கூர்மையை பரிசோதிக்கும் கேள்வி கேட்கப்பட வேண்டும். ஆனால் பயன்பாடு அடிப்படையில் கேள்வி இடம் பெற்றுள்ளது. இது தவறாகும். கடந்த 10 ஆண்டுகளாக இது போன்ற கடினமான கேள்வி கேட்கப்படவில்லை. எனவே வடிவமைப்பு விதிகளுக்கு மாறாக கேள்வி கேட்கப்பட்டு உள்ளதால் 18, 20, 78 ஆவது கேள்விகளுக்கு விடையளித்து இருந்தால் அவர்களுக்கு அதற்குரிய முழு மதிப்பெண்களை வழங்க உத்தரவிட வேண்டும். விடைகளில் தகுந்த மாற்றம் செய்யும் வரையில் விடைத்தாளை திருத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இம்மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, "ஏ' பிரிவில் 18, 20 ஆவது கேள்விகளுக்கு விடையளித்துள்ள அனைவருக்கும் கருணை மதிப்பெண் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

பிளஸ் 2 மாணவர்களுக்கான புத்தகங்கள் இந்த வார இறுதிக்குள் முழுமையாக விநியோகம்
Posted: 06 Apr 2015 05:57 PM PDT
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 புத்தகங்கள் விநியோகம் தொடங்கியுள்ளது. இந்த வார இறுதிக்குள் மாணவர்களுக்கான புத்தகங்கள் முழுமையாக விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பொதுத்தேர்வு மாணவர்கள் கோடை விடுமுறையிலும் படிக்கும் வகையில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே விநியோகம் செய்யப்படுகின்றன.

அதன்படி, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான பிளஸ் 2 புத்தகங்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிகளில் பிளஸ் 1 முடித்த மாணவர்களுக்கு பிளஸ் 2 புத்தக விநியோகம் தொடங்கியுள்ளது.

விழுப்புரம், தஞ்சாவூர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பாலான மாணவர்களுக்கு பிளஸ் 2 புத்தகங்கள் திங்கள்கிழமை விநியோகிக்கப்பட்டன. இந்த வார இறுதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தனியார் பள்ளி மாணவர்களுக்கு....

தனியார் பள்ளி மாணவர்களுக்கான பிளஸ் 2 புத்தகங்கள் தமிழ்நாட்டுப் பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத்தின் வட்டார அலுவலகங்கள் மூலம் பள்ளிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த அலுவலகங்களில் பணத்தைச் செலுத்தி தனியார் பள்ளிகள் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

சில்லறை விற்பனை எப்போது?

அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கான புத்தக விநியோகம் நிறைவடைந்த பிறகே பிளஸ் 2 புத்தகங்களின் சில்லறை விற்பனை தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒன்பதாம் வகுப்பு தேர்வுகள் நிறைவடைந்த பிறகு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்புக்கான புத்தக விநியோகம் தொடங்கும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: தேர்வானோர் எண்ணிக்கை இரு மடங்காக உயர்வு
Posted: 06 Apr 2015 05:57 PM PDT
சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் 2 தாள்களையும் சேர்த்து 37,472 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு 2 தாள்களிலும் 80,187 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சி.பி.எஸ்.இ. பாடத் திட்டப் பள்ளிகள், கேந்த்ரிய வித்யாலய பள்ளிகள் உள்ளிட்டவற்றில் பணியாற்றுவதற்கு சி.பி.எஸ்.இ. நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

1 முதல் 5-ஆம் வகுப்பு வரை கற்பிக்க முதல் தாள் தேர்வும், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை கற்பிக்க இரண்டாம் தாள் தேர்வும் எழுத வேண்டும். இந்த ஆண்டு மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு பிப்ரவரி 21-ஆம் தேதி நடைபெற்றது. தேர்வு முடிவுகள் ஏப்ரல் 1-ஆம் தேதி வெளியிடப்பட்டன.

இந்தத் தேர்வு முடிவுகள் குறித்த விவரங்கள் சி.பி.எஸ்.இ. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

அதன் விவரம்: முதல் தாள் தேர்வை 2 லட்சத்து 7,522 பேர் எழுதினர். இவர்களில் 37,153 பேர் (17.90) தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டாம் தாள் தேர்வை 4 லட்சத்து 70 ஆயிரத்து 32 பேர் எழுதினர். இவர்களில் 43,034 பேர் (9.16 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் தாள் தேர்வில் பொதுப்பிரிவில் 25.18 சதவீதம், இதர பிற்படுத்தப்பட்டவர்கள் பிரிவில் 17.19 சதவீதம், எஸ்.சி. பிரிவில் 10.77 சதவீதம், எஸ்.டி. பிரிவில் 6.04 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இரண்டாம் தாள் தேர்வில் பொதுப்பிரிவில் 13.80 சதவீதம், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 8.23 சதவீதம், எஸ்.சி. பிரிவில் 3.88 சதவீதம், எஸ்.டி. பிரிவில் 4.86 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி விகிதம் முதல் தாளில் 11.95 சதவீதமாகவும், இரண்டாம் தாளில் 2.80 சதவீதமாகவும் இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த பாடத் திட்ட விவரம் மே மாதத்தில் வெளியீடு
Posted: 06 Apr 2015 05:56 PM PDT
பல்வேறு பட்டப் படிப்புகள் குறித்த தெளிவான புரிதலை மாணவர்களுக்கு வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பாடத் திட்ட விவரம் சேகரிக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த மாத இறுதிக்குள் அவை இறுதி செய்யப்பட்டு, மே மாதமே அந்த விவரங்களை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் எடுத்து வருகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு, தனியார் கல்லூரிகள், தன்னாட்சி கலை அறிவியல் கல்லூரிகளில் பல வகையான படிப்புகள், இளங்கலை, முதுகலை பாடப் பிரிவுகளில் கற்பிக்கப்படுகின்றன.

தொழில் நிறுவனங்களின் தற்போதைய தேவை, உடனடி வேலைவாய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இதுபோன்று புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்படுவதாக அதன் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு அறிமுகம் செய்யப்படும் புதியப் படிப்புகளை முடிக்கும் மாணவர்கள், அரசு பணியிலோ அல்லது ஆசிரியர் பணியிலோ சேர முடியாத நிலை ஏற்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் இந்தப் படிப்புகளை கணக்கில் கொள்வதே இல்லை.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!