Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 22 June 2015

கல்வி செய்திகள்

கல்வி செய்திகள்

2005-ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களை மாற்ற இறுதி கெடு
Posted: 21 Jun 2015 07:05 AM PDT
2005-ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூ. 500, ரூ. 1,000 உள்ளிட்ட ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து புதிய நோட்டுக்களாக மாற்றிக் கொள்வதற்கான காலக்கெடு, இன்னும் 10 நாள்களுக்குள் (ஜூன் 30) முடிவடைகிறது.
இந்த ஆண்டு முதல் பி.எட் படிப்புக்காலம் 2ஆண்டுகள் ஆகிறது
Posted: 20 Jun 2015 09:50 PM PDT

10th English Study Material 5 Mark Paragraph Questions
Posted: 21 Jun 2015 02:20 AM PDT

10th English Study Material 5 Mark Paragraph Questions part1- click here...

SSLC(10th) English paper l&ll click here...

இன்று தந்தையர் தினம்: தந்தையை போற்றுவோம்
Posted: 20 Jun 2015 10:47 PM PDT
‘நான் பட்ட கஷ்டம், என் பிள்ளைகளும் படக்கூடாது’ எனக் கருதி தன் வாழ்நாள் முழுவதையும் குடும்பத்துக்காகவும், பிள்ளைகளின் முன்னேற்றத்துக்காகவும் அர்ப்பணிப்பவரே தந்தை.
அனைவரின் முதல் ரோல் மாடலும், முதல் ஹீரோவுமான அந்த தந்தையை போற்றும் வகையில் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் தினமாக ஆண்டுதோறும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. ஜூன் மாதத்தின் 3வது ஞாயிற்றுக் கிழமையை தந்தையர் தினமாக கொண்டாடும் வழக்கம் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எப்படி தோன்றியது?:
கடந்த 1862ம் ஆண்டுகளில் அமெரிக்க ராணுவ வீரராக இருந்தவர் வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட். இவர் வாஷிங்டன் அருகே உள்ள ஸ்போகேனே என்ற நகரில் மனைவி எல்லன் விக்டோரியா சீக் ஸ்மார்ட்டுடன் வசித்து வந்தார். இந்த தம்பதியின் முதல் குழந்தையாக மகள் சொனாரா ஸ்மார்ட் டோட் 1882ல் பிறந்தார். சொனாராவுக்கு 16 வயதாகும் போது, எல்லன் 6வது முறையாக கர்ப்பமடைந்து ஆண் குழந்தையை பிரசவித்து இறந்து போனார்.
பிறந்த குழந்தையுடன், 4 மகன்களையும், மகள் சொனாரா என 6 பிள்ளைகளையும் தனி ஆளாக போராடி காப்பாற்றுவதை தனது வாழ்க்கையின் லட்சியமாக ஏற்றார் வில்லியம் ஜாக்சன். அதனால் மறுமணம்கூட செய்து கொள்ளாமல் குழந்தைகளை பராமரிப்பதிலேயே கவனம் செலுத்தினார். கைக்குழந்தையை வைத்துக் கொண்டு தந்தை படும் சிரமங்களை நேரில் பார்த்து வளர்ந்த மகள் சொனாராவுக்கு தந்தையின் மீது அளவு கடந்த பாசமும் மரியாதையும் ஏற்பட்டது.

இந்நிலையில், 1909ம் ஆண்டு அமெரிக்காவில் அன்னையர் தினம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை அறிந்த சொனாரா, தனது தந்தை போன்றவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் தந்தையர் தினம் கொண்டாட வேண்டும் என 1910ம் ஆண்டில் கோரிக்கை விடுத்தார். தனது தந்தையின் பிறந்த நாளான ஜூன் 5ம் தேதி கொண்டாட தேவாலயத்தில் அனுமதி கோரினார். ஆனால், ஏற்பாடுகளை செய்ய கால அவகாசம் தேவைப்பட்டதால், முதல் தந்தையர் தினம் ஜூன் 19, 1910ம் ஆண்டில் ஸ்போகேனே நகரில் கொண்டாடப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆண்டு தோறும், ஜூன் மாதத்தின் 3வது ஞாயிற்றுக்கிழமையை தந்தையர் தினமாக கொண்டாடி அதை பிரபலப்படுத்தி வந்தார் சொனாரா. நாடு முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்பட வேண்டுமென கருதிய சொனாரா இது குறித்து அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அவரின் கோரிக்கை நிறைவேற 50 ஆண்டுகளுக்கு மேல் ஆனது. 1966ம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜான்சன் ஜூன் மாதம் 3வது ஞாயிற்றுக் கிழமையை தந்தையர் தினம் என அறிவிக்கலாம் என சட்ட முன் வடிவில் கையொப்பமிட்டார்.

அதற்கு 6 ஆண்டுகளுக்குப்பிறகு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அதிபர் ரிச்சர்ட் நிக்சன் 1972ல் அதிகாரப்பூர்வமாக தேசிய அளவில் தந்தையர் தினம் அனுசரிக்க ஆணை பிறப்பித்தார்.  இன்றைக்கு அமெரிக்காவில் மட்டுமல்ல பெரும்பாலான நாடுகள் தந்தையர் தினம் என்று உச்சரிக்கத் துவங்கியுள்ளதை சொனாராவின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்றே சொல்லலாம். சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு, தந்தையை மதிக்க கற்றுத் தருவதே இத்தினத்தின் நோக்கம். எனவே இந்த நன்னாளில் உங்களின் தந்தை உங்களுக்காக செய்த தியாகங்களையும், பட்ட கஷ்டங்களையும் எண்ணிப் பாருங்கள். அவருக்கு மரியாதை செய்யுங்கள்.

நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தக் கோரிஜூலை 2-ல் ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு
Posted: 20 Jun 2015 09:51 PM PDT
நிலுவையில் உள்ள அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து அரசு ஊழியர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தி ஜூலை 2-ம் தேதி மாநில அளவில் 1,000 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தலைவர் ஆர்.தமிழ்செல்வி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அனைத்துத் துறை அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் திருச்சி மன்னார்புரத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற அரசின் ஒவ்வொரு துறை சார்ந்த கோரிக்கைகள் குறித்து அரசு ஊழியர் சங்கப் பிரதிநிதிகளிடம், சங்கத் தலைவர் ஆர்.தமிழ்செல்வி கருத்துகளைக் கேட்டறிந்தார்.பின்னர் அவர் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டி: தமிழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றபோது கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. காலிப் பணியிடங்களுக்கு பணியாளர்கள் நிரப்பப்படாததால், பணியிலிருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரித்துள்ளது. ஆனால், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்ந்து நிலுவையிலேயே உள்ளன.நிலுவையில் உள்ள கோரிக்கைள் குறித்து, அரசு ஊழியர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்து முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்.

பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தவேண்டும் என்பன உள்ளிட்ட20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 2-ம் தேதி மாநில அளவில் 1,000 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, ஜூலை 22-ல் மாவட்டத் தலைநகரங்களில் கோரிக்கை விளக்கப் பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.இதையடுத்து மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்துசெப்டம்பர் 2-ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது. இதையொட்டி ஆகஸ்ட் 22-ம் தேதி வேலைநிறுத்த ஆயத்த மாநாடும், ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை வேலைநிறுத்தப் பிரச்சார நடைபயணமும் நடைபெறும் என்றார்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் பொதுப் பிரிவு கலந்தாய்வு: அரசு மருத்துவக் கல்லூரிகளில்முதல் நாளில் 501 இடங்கள் ஒதுக்கப்பட்டன
Posted: 20 Jun 2015 09:51 PM PDT
எம்பிபிஎஸ், பிடிஎஸ் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 501 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரியில் ஒரு இடமும் ஒதுக்கப்பட்டன. எம்பிபிஎஸ்,
பிடிஎஸ் படிப்புக் கான முதல்கட்ட கலந்தாய்வு சென்னை அண்ணா சாலை பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நேற்று முன் தினம் தொடங்கியது.முதல்நாளில் சிறப்புப் பிரிவினருக்கான 76 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் ஒரு பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு நடந்தது. இதில் மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவில் 68 இடங்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக் கான பிரிவில் 5 இடங்கள், விளையாட்டு வீரர் பிரிவினருக்கான 3 இடங்கள் என 77 இடங்கள் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டன.

502 இடங்கள் ஒதுக்கீடு

பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று காலை 9 மணிக்கு தொடங்கியது. இதில் கலந்து கொள்ள 510 மாணவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பட்டு இருந்தது. ஆனால், 502 பேர் மட்டுமே கலந்தாய்வுக்கு வந்திருந் தனர். காலை 9 மணி, பகல் 11 மணி மற்றும் பிற்பகல் 2 மணி என 3 கட்டங்களாக கலந்தாய்வு நடத்தப்பட்டது.பொதுப் பிரிவு கலந்தாய்வு முதல் நாள் முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 501 மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட் டன. மேலும், தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரியில் ஒரு மாணவ ருக்கு எம்பிபிஎஸ் இடம் ஒதுக்கப் பட்டது. இன்று 2-ம் நாள் கலந்தாய்வில் பங்கேற்க 590 மாணவர் களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

முதல்கட்ட கலந்தாய்வு வரும் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது.கலந்தாய்வில் கலந்துகொண்ட மாணவர்களில் பெரும்பாலானோர், சென்னையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளை தேர்ந் தெடுத்தனர். சென்னை மருத்துவக் கல்லூரியில் (எம்எம்சி) 177 இடங்கள், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில்133 இடங்கள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் 52 இடங்கள்நிரப்பப்பட்டுள்ளன.முதல்நாள் கலந்தாய்வு முடிவில் சென்னை மருத்துவக் கல்லூரியில் 31, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் 72, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் 72 இடங்கள் காலியாக உள்ளன.

மீதமுள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 8 தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகளில் பெரும்பாலான எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 84 பிடிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன.எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசைப் பட்டியலில் 14 மாணவர்கள், 3 மாணவிகள் 200-க்கு 200 கட் ஆஃப் எடுத்து முதல் இடத்தைப் பிடித்தனர். இவர்கள் 17 பேரும் கலந்தாய்வில் சென்னை மருத்துவக் கல்லூரியை (எம்எம்சி) தேர்வு செய்தனர். முதல் இடம் பிடித்த தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த நிஷாந்த்ராஜன் கூறும்போது, ‘‘மருத்துவம் படித்து இதய சிகிச்சை நிபுணராக வேண்டும் என்பதே எனது லட்சியம். அதனால் பாரம்பரியம் மிக்க சென்னைமருத்துவக் கல்லூரியை தேர்வு செய்தேன்’’ என்றார்.

இன்று சிஎஸ்ஐஆர் நெட் தகுதித்தேர்வு தமிழகத்தில் சென்னை, காரைக்குடியில் நடக்கிறது
Posted: 20 Jun 2015 09:51 PM PDT
சிஎஸ்ஐஆர் நெட் தகுதித்தேர்வு நாடு முழுவதும் இன்று நடக்கிறது. தமிழகத்தில் சென்னை, காரைக்குடி ஆகிய இடங்களில் இந்தத் தேர்வு நடக்கிறது.கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பாடப் பிரிவுகளைச் சேர்ந்த முதுகலை பட்டதாரிகள் உதவி பேராசிரியர் பணியில் சேர
வேண்டுமானால் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்.) அமைப்பு நடத்துகிற “நெட்” தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.சிஎஸ்ஐஆர் நெட் தேர்வும் யுஜிசி நெட் தேர்வைப் போன்றே ஆண்டுக்கு 2 தடவை (ஜூன், டிசம்பர்) நடத்தப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான முதலாவதுநெட் தகுதித்தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடக்கிறது. தமிழகத்தில் சென்னை, காரைக்குடி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் இந்தத் தேர்வு நடக்கிறது.காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை ஒரு தேர்வும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றொரு தேர்வும் நடைபெறும் என்று சிஎஸ்ஐஆர் நெட் தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

அரசு பள்ளி மாணவனின் அசத்தல் சாதனை!
Posted: 20 Jun 2015 09:49 PM PDT

ஆசிரியர்கள் தமிழில் கையெழுத்திடுவதை ஆய்வு செய்ய வலியுறுத்தல்
Posted: 20 Jun 2015 08:02 PM PDT
பள்ளிகளில் வருகைப் பதிவேடு உள்ளிட்ட அலுவலக ஆவணங்களில் ஆசிரியர்கள் தமிழில்கையெழுத்திடுவதை ஆய்வு செய்யவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து,தமிழக தமிழாசிரியர் கழக மாநிலப் பொதுச் செயலர் இளங்கோ, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அலுவலகத்துக்கு அளித்துள்ளகோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

பள்ளிகளில் தமிழ் பாடத்தை 3, 4 ஆம் பாட வேளையாக வைத்துள்ளனர். எனவே, தாய்மொழியான தமிழை முதல் பாட வேளையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.பட்டதாரி ஆசிரியரான இளையோருக்குப் பின்னால் பணிமூப்பு தமிழாசிரியர் பெயர் எழுதுவதைத் தடுக்க, கல்வித் துறைக்கு வலியுறுத்த வேண்டும். மாணவர் வருகைப் பதிவேடுகள் சில பள்ளிகளில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு வருகின்றன.பெரும்பாலான பள்ளிகளில் மாணவர் பெயர் தமிழிலும், தந்தை பெயர் முன் எழுத்து (இனிஷியல்) ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுவருகின்றன. ஆசிரியர்கள் பள்ளி சார்ந்தவருகை மற்றும் அலுவலகப் பதிவேடுகளில் ஆங்கிலத்தில் கையொப்பமிட்டு வருகின்றனர்.

இந்நிலையை, மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை ஆய்வு செய்து, தமிழில் எழுதும் நிலையை நடைமுறைப்படுத்த வேண்டும். பெரும்பாலான பள்ளிகளில் வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழில் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப்பட்டு வருகின்றன. முதலில் தமிழிலும், பின்னர் ஆங்கிலத்திலும் எழுத வலியுறுத்த வேண்டும். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வுகளில் வழங்கப்படும் மதிப்பெண் பட்டியலில் மாணவர் பெயர், பள்ளிப் பெயர் ஆங்கிலத்தில்மட்டுமே பதிவு செய்யப்படுகின்றன. தமிழிலும் பதிவு செய்ய பள்ளித் தேர்வுத் துறைக்கு வலியுறுத்த வேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளார்.

இடைநிலை ஆசிரியர் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு:கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது
Posted: 20 Jun 2015 08:02 PM PDT
இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன், இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் 2015-16-ம் கல்வி ஆண்டுக்கான தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு (இடைநிலை ஆசிரியர் பயிற்சி) மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆன்லைன் வழியாக ஒற்றைச்சாளர முறையில் ஜூலை 1 முதல் 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

கலந்தாய்வுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள மாணவ-மாணவிகளின் தரவரிசைப் பட்டியல், மாவட்டங்களில் கலந்தாய்வு நடைபெறும் இடம் ஆகிய விவரங்கள் www.tnscert.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கலந்தாய்வுக்கான அழைப்புக்கடிதம் நாளை (திங்கள்கிழமை) முதல் அனுப்பப்படும். மேலும், அழைப்புக்கடிதத்தை மேற்கண்ட இணையதளத்தில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு பதிவிறக்கமும் செய்துகொள்ளலாம்.

கலந்தாய்வு நாள், பாடப்பிரிவு விவரம் வருமாறு:

ஜூலை 1 (புதன்) - ஆங்கில மொழியில் படித்த அனைத்து பாடப்பிரிவு மாணவிகள், தெலுங்கு மற்றும் உருது மொழியில் படித்த அனைத்துப் பாடப்பிரிவு மாணவ-மாணவிகள், சிறப்புப் பிரிவினர் (மாற்றுத்திறனாளிகள், சுதந்திர போராட்ட தியாகிகளின் பேரன், பேத்திகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள்)ஜூலை 2 (வியாழன்) - தொழிற்பிரிவு மற்றும் கலைப்பிரிவு மாணவிகள்ஜூலை 3, 4 (வெள்ளி, சனி) - அறிவியல் பிரிவு மாணவிகள்கலந்தாய்வு தினமும் காலை 9 மணிக்கு தொடங்கும்.

கலந்தாய்வுக்கு வரும் மாணவ-மாணவிகள் 10-ம் வகுப்பு, பிளஸ் டூ சான்றிதழ்கள், சாதி சான்று, இருப்பிடச்சான்று, மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் பேரன், பேத்திகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினர்கள் அதற்கான சான்றிதழை கொண்டுவர வேண்டும்.இவ்வாறு ராமேஸ்வர முருகன் கூறியுள்ளார்.

கல்வித்துறையில், மாவட்ட வாரியாக தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும் மாநாட்டில் தீர்மானம்
Posted: 20 Jun 2015 08:03 PM PDT
அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்திட மாவட்ட வாரியாக கல்வித்துறையில் தனிப் பிரிவு ஏற்படுத்திட வேண்டும் என கிருஷ்ணகிரியில் நடந்த பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநாடு

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள கலையரங்கில் பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் முதல் மாவட்ட மாநாடு நேற்று நடந்தது. இந்த மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முரளி வரவேற்று பேசினார்.மாநாட்டில் தமிழ்நாடு அரசு அலுவலர் கழக ‘சி‘ மற்றும் ‘டி‘ பிரிவு மாநிலத் தலைவர் சவுந்திரராஜன், பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் பால்ராஜ், மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரபிரசாத், மாநிலப் பொருளாளர்அதிகமான்முத்து, மாநில அமைப்பு செயலாளர் சீனிவாசன், மாநில கவுரவத் தலைவர் மதியழகன் மற்றும் மாநில பிரச்சார செயலாளர் நீதிமணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

பணியிடங்கள் வழங்க வேண்டும்

மாநாட்டில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தமிழரசு, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சின்னராஜ், மாவட்ட கல்வி அலுவலர்கள் கிருஷ்ணகிரி அகமதுபாஷா, ஓசூர் நாகேந்திரன் ஆகியோர் பங்கேற்று அரசுப் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசுகளை வழங்கினர். முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.மாநாட்டில், இணை இயக்குனர்களுக்கு நேர்முக உதவியாளர் பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும். அமைச்சுப் பணியாளர்களுக்கு என இணை இயக்குனர், துணை இயக்குனர் பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும். அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் நேர்முக உதவியாளர் (நிர்வாகம்) என்ற பணியிடத்தினை அமைச்சுப் பணியாளர்களுக்குஎன உருவாக்கிட வேண்டும். அரசுத் தேர்வுத்துறையில் நடத்தப்படும் தேர்வுகளை ஏற்கனவே இருந்த நடைமுறைப்படி அத்துறையின் பணியாளர்களை கொண்டு நடத்துதல் வேண்டும்.

கல்வித்துறையில் அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்திட மாவட்டம் வாரியாக தனி பிரிவு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்வின் போது பாதிக்கப்பட்ட அலுவலக பணியாளர்களுக்கு சட்ட ரீதியாகவும், சங்க ரீதியாகவும் விரைவாக தீர்வு கண்டு மீண்டும் பணியமர்த்திட நடவடிக்கை மேற்கொண்ட மாநில மையத்திற்கு மாநாட்டின் வாயிலாக நன்றியை தெரிவித்து கொள்வதுஎன்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

One time permission for change over from CPF to GPFScheme for teaching and non-teaching staff of KVS
Posted: 20 Jun 2015 07:52 PM PDT

ISRO Recruitment for Scientist / Engineer Posts 2015
Posted: 20 Jun 2015 07:49 PM PDT
CLICK FOR NOTIFICATION.......

APPLY ONLINE.....

Insurance Regulatory and Development Authority of India (IRDAI) Recruitment for Various Posts 2015
Posted: 20 Jun 2015 07:48 PM PDT
CLICK FOR NOTIFICATION......

APPLY ONLINE.....

சங்கம் தொடங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலகத்திலிருந்து அழைப்பிதழ்: விசாரணை நடத்த உத்தரவு
Posted: 20 Jun 2015 08:03 PM PDT
கல்வித்துறை அலுவலர்கள் சங்கம் தொடங்கும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ், திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி இயக்கக நண்பர்கள் சார்பில், புதிய சங்கம் தொடக்க விழா, நிர்வாகிகள் தேர்வு மற்றும் பணி ஓய்வுப் பெற்றவர்களுக்கு பாராட்டு என முப்பெரும் விழா நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிதொடர்பாக, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அழைப்பிதழ் அனுப்பும் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்றுள்ளது. இதனிடையே, திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலகத்திலிருந்து, சில பள்ளிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டதாக புகார் எழுந்தது.கல்வித்துறை தொடர்பான சுற்றறிக்கைகள் அனுப்புவதற்கு தனி மென்பொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகங்களிலிருந்து அந்தந்த பள்ளிகளுக்கு சுற்றறிக்கை மற்றும் விளக்கக் கடிதங்கள் அனுப்புவது வழங்கம். இந்த நிலையில், சங்கம் தொடங்குவதற்காக அழைப்பிதழ், திண்டுக்கல் மாவட்டக் கல்வி அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்டதை அறிந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆசிரியர் சங்கத்தினர், கல்வித்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். இதனை அடுத்து, கல்வித்துறைமென்பொருளை பயன்படுத்தி சங்க அமைப்பு தொடக்க விழா அழைப்பிதழ் அனுப்பிய அலுவலர் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ம.க.செ.சுபாஷினி கூறியது:திண்டுக்கல் கல்வி மாவட்ட அலுவலகத்திலிருந்து, பள்ளிக்கல்வி அலுவலர்கள் தொடங்கும் புதிய சங்கத்திற்கான அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாக பள்ளித் தலைமையாசிரியர்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி விளக்கம் அளிக்குமாறு திண்டுக்கல் மாவட்டக் கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு: நெய்வேலி பள்ளி மாணவர்கள் 21 பேர் தேர்ச்சி
Posted: 20 Jun 2015 08:04 PM PDT
இந்திய தொழில்நுட்பக் கல்வி நிலையங்களில் (ஐ.ஐ.டி.) பயில்வதற்கான ஐ.ஐ.டி.- ஜே.இ.இ. தேர்வில், நெய்வேலி ஜவகர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 21 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனமும், தெலுங்கு கலா சமிதியும் இணைந்து மத்தியபாடத் திட்டத்தின் கீழ் இயங்கும் ஜவகர் சி.பி.எஸ்.இ. பள்ளியை நடத்தி வருகின்றன.
இப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுக்கு ஒருங்கிணைந்த முறையில் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.

இதன்மூலம் ஒவ்வோர் ஆண்டும் இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் பல்வேறு இந்திய தொழில்நுட்பக் கல்வி நிலையங்களில் பயில இடம் பெறுகின்றனர்.தமிழகத்தில் முதலிடம்: இப்பள்ளியில் 2007-ஆம் ஆண்டு முதல் மேல்நிலைக் கல்வியை நிறைவு செய்து வெளியேறிய மொத்த மாணவர்கள் 355 பேரில் 284 பேர் ஐ.ஐ.டி, என்.ஐ.டி. போன்ற கல்வி நிலையங்களில் பயிலும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். தமிழகத்தில் உள்ள எந்த ஒரு பள்ளியும் இதுபோன்ற சாதனையை செய்ததில்லை.சிறப்பு நிபுணர்கள்: ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுக்குப் பயிற்றுவிக்கும் சிறப்புஅனுபவம் மிக்க ஆசிரியர்கள் இந்தப் பள்ளியில் பணியாற்றுகின்றனர். புதுதில்லி, விஜயவாடா, கோட்டா, ஹைதராபாத் ஆகிய நகரங்களிலிருந்து ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுப் பயிற்சிக்கான நிபுணர்கள் வந்து பயிற்சி அளிக்கின்றனர். மேலும், இப்பள்ளி மாணவர்கள், தங்களது பாடம் சார்ந்த சந்தேகங்களை காணொலிக் காட்சி மூலம், நாட்டின் தலைசிறந்த நிபுணர்களுடன் உரையாடி விளக்கம் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இங்கு பிரபல கல்வி நிறுவனங்கள் வழங்கும் பாடக்குறிப்புகள் பயன்படுத்தப்படுவதுடன், நுழைவுத் தேர்வுக்கு முந்தைய நிலையில், மாணவர்களுக்குபுத்துணர்வு வழங்கும் வகையில் தேசிய அளவில் சிறந்து விளங்கும் நிபுணர்களைக் கொண்டு இறுதிக்கட்ட அதிவிரைவு திருப்புதல் பயிற்சியும் வழங்கப்படுகிறது.இரண்டு கட்டத்தேர்வு: ஐ.ஐ.டி.யில் மாணவர்களைத் தேர்வு செய்ய இரண்டு கட்ட தேர்வுமுறை கடந்த ஆண்டு முதல் அறிமுகப் படுத்தப்பட்டது. இந்த ஆண்டுக்கான முதல் நிலைத்தேர்வு 4.4.2015-ல் நடைபெற்றது. நாடு முழுவதிலும் இருந்து சுமார் 15 லட்சம் மாணவர்கள் கலந்துகொள்ள, சுமார் 1.50 லட்சம் மாணவர்கள் தேர்வுபெற்றனர்.இதில், நெய்வேலி ஜவகர் பள்ளி மாணவர்கள் 68 பேர் தேர்வு எழுதினர். 51 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இறுதிக்கட்டத் தேர்வு மே 24-ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வில் நெய்வேலி ஜவகர் பள்ளி மாணவர்கள் 21 பேர் வெற்றிபெற்று ஐ.ஐ.டி.யில் பயிலத் தகுதி பெற்றுள்ளனர்.

இவர்கள் 5:2 என்ற சதவிகிதத்தில் தேர்வு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.பாராட்டு விழா: ஐ.ஐ.டி.யில் பயில தேர்வு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நெய்வேலி, தெலுங்கு கலா சமிதியில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற என்.எல்.சி. தலைவர் பி.சுரேந்திரமோகன், தகுதி பெற்ற அனைத்து மாணவர்களையும் பாராட்டினார்.மேலும், ஜவகர் பள்ளியின் முதல்வர் என்.யசோதா, துணை முதல்வர் எம்.சேதுமணி, ஆசிரியர்கள், நெய்வேலி தெலுங்கு கலா சமிதியின் பொறுப்பாளர்கள், மாணவர்களுக்குகாணொலிக்காட்சி வசதி செய்து தரும் ஹைதராபாத்தைச் சேர்ந்த "ஆல்டிட்யூட் கிளாஸஸ்' நிறுவனத்தின் பிரதிநிதி சந்திரசேகர் ஆகியோரையும் பி.சுரேந்திரமோகன் பாராட்டினார்.

இன்ஃப்ளூயன்சா வைரஸ் தொற்று தவிர்க்க தடூப்பூசி அவசியம்
Posted: 20 Jun 2015 08:05 PM PDT
பருவகால மாற்றத்தின்போது குழந்தைகளுக்கு அதிகமாக பாதிப்புகளை ஏற்படுத்தவல்லது "இன்ஃப்ளூயன்சா' வைரஸ் என தேசிய நோய் கட்டுப்பாடு, தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் ஃப்ளூ வைரஸ் பாதிப்பு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் மருத்துவர் பாலச்சந்திரன் பேசியது:
ஃப்ளூ வைரஸ் எனும் இன்ஃபுளூயன்சா வைரஸ் மூக்கு, தொண்டை, நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகளைத் தாக்கும் வைரஸ் தொற்றுநோயாகும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை விட குழந்தைகளிடேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது.மேலும், 10 மாதங்களில் மட்டும் உலக அளவில் 4 முதல் 6 வயது உடைய குழந்தைகள் அதிக பாதிப்புக்குள்ளாகி உள்ளனர் என தேசிய நோய் கட்டுப்பாடு, தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் சிறுநீரகம், நுரையீரல், ரத்தமண்டலம் உள்ளிட்டவற்றை வெகுவாக பாதிக்கக் கூடியது.தும்மல், இருமல், பேசும் போதும் காற்றுமூலம் பரவுகின்ற இந்த வைரஸ் பாதிப்பால், அதிக காய்ச்சல், தசை வலி, குளிர் நடுக்கம், களைப்பு, திடீர் தூக்கம், நிமோனியா உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும்.

மேலும், பருவகால மாற்றத்தின் போது இந்த வைரஸ் அதிக அளவில் நோய்த் தொற்றை ஏற்படுத்துவதால், இன்ஃபுளூயன்சா வைரஸ் அறிகுறிகள் ஏதேனும் தெரிந்தவுடன் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். வட இந்திய மாநிலங்களில் தற்போது இதன் அறிகுறிகள் தொடங்கியுள்ளன. எனவே இன்ஃபுளூயன்சா வைரஸ் தொற்றை தவிர்க்க தடுப்பூசி, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்டோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்றார்.

வேளாண் பல்கலை 'ரேங்க்' பட்டியல் வெளியீடு
Posted: 20 Jun 2015 08:05 PM PDT
கோவை, வேளாண் பல்கலையில், மாணவர் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது.கோவை, வேளாண் பல்கலையில், 2015 - 2016ம் கல்வி ஆண்டுக்கான பி.எஸ்சி., விவசாயம் உள்ளிட்ட, 13 வகையான பட்டப் படிப்புகளில், 2,340 இடங்கள் உள்ளன
.இவற்றுக்கு, 29,942 மாணவ, மாணவியர் விண்ணப்பித்தனர்.அவை சரிபார்க்கப்பட்டு, வேளாண் பல்கலை, 'டீன்' மகிமைராஜா முன்னிலையில், நேற்றுகாலை, தர வரிசை பட்டியல், இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!