Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 4 July 2015

ஆர்.கே. கல்விச்செய்திகள்

ஆர்.கே. கல்விச்செய்திகள்
📚📚📚📚📚📚📚📚

🌺பள்ளிகள் அருகே ஹெல்மெட் சோதனை கூடாது

🍀அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு முதல் 10 நாள் பயிற்சி

🌺ஊதிய பிரச்சனையும் உச்சநீதிமன்ற தடையும்.........TATA

🍀CRC & BRC பயிற்சி நாட்களுக்கு ஒரு ஆசிரியருக்கு வழங்கப்படும் செலவீனத்தொகை எவ்வளவு? கேள்விகளுக்கு RTI பதில்

🍀கிராமிய வங்கி பணிக்கான IBPS தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டிர்களா?

🌺பொதுத் தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு புதிய பயிற்சி

🍀வங்கிக் கணக்கில் ரேஷன் பொருட்கள் மானியம்: செப்டம்பரில் தொடங்க மத்திய அரசு முடிவு

🌺மொபைல் எண் மாறாமல் நிறுவனம் மாறலாம்: தேசிய அளவில் இன்று முதல் அமல்

🍀விரைவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் : முதல்கட்டமாக 10 ரூபாய் தாளில் சோதனை

🌺வருமான வரி கணக்கு தாக்கலுக்கு தயாராகிறது புது படிவம்

🍀தனியார் பள்ளிகளில் இலவச கல்வி: மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் அறிவிப்பு

🌺தங்கமகள் சேமிப்பு கணக்குகள் விவரம்: வங்கிகள் அளிக்க ரிசர்வ் வங்கி உத்தரவு

🍀அகஇ - ஜூலை மாத CRC - மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்

🌺7th Central Pay Commission ல் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.

🍀தமிழக பள்ளிகளில் 'எரிசக்தி கிளப்':தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு.
பள்ளிக்கல்வி இயக்ககம் :

🍀EMIS கீழ் மாணவர் தகவல் தொகுப்பு - ஆதார் எண் தொகுப்பறிக்கை அனுப்புதல் - சார்பு.

🌺பீகாரில் 1,400 ஆசிரியர்கள் ராஜினாமா

🍀கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் கல்விக் கடன் பெறுவது எப்படி?

🌺2-வது நாளில் 3,564 பேருக்கு பொறியியல் ஒதுக்கீட்டு ஆணை: இசிஇ-க்கு வரவேற்பு

🍀கல்வியால் சிறைபடாத மாணவச் செல்வங்கள்-முனைவர்.கெ.செல்லத்தாய்

🌺ஆசிரியர் பயிற்சி நிறுவனம் முடிவு: பள்ளிகளில் நீதிபோதனை வகுப்பு
for more details visit
www.rkkalvisiragukal.blogspot.com

விரிவான செய்திகள்

விரிவான செய்திகள்

பள்ளிகள் அருகே ஹெல்மெட் சோதனை கூடாது
Posted: 03 Jul 2015 09:34 AM PDT
பள்ளிகளுக்கு அருகிலும், தெருக்களிலும் ஹெல்மெட் சோதனை நடத்தக்கூடாது என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வீட்டருகே இருக்கும் பள்ளியில் குழந்தைகளை விடுவதற்கு வருபவர் களும்,
அருகே இருக்கும் தெருக்களில் உள்ள கடைகளுக்கு செல்பவர்களும் சாதாரண மாக மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வருவார்கள். அந்த இடத்தில் போலீஸார் நின்று கொண்டுசோதனை என்ற பெயரில் தங்களை சோதனை செய்வதாக கூறி கஷ்டப்படுத்து வதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.புறநகர் காவல் ஆணையராக ஜாங்கிட் இருந்தபோது, இதே போன்ற பிரச்சினை இருந்தது.அப்போது அது அவரது கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதைத் தொடர்ந்து, “பள்ளிகள், தெருக்கள் மற்றும் வீட்டின் அருகிலேயேசெல்பவர்களை பிடித்து சோதனை நடத்தக் கூடாது” என்று அவர் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து போலீஸார் இதுபோன்ற சோத னைகளைநிறுத்தினர். இப் போது மீண்டும் போலீஸார் பள்ளிகள் அருகே நின்று சோதனை என்ற பெயரில் பெற்றோரை கொடுமைப் படுத்துவதாக கூறப்படுகிறது. இதற்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர்.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு முதல் 10 நாள் பயிற்சி
Posted: 03 Jul 2015 07:29 AM PDT
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் இதுவரை ஆண்டுக்கு 5 நாள்களாக இருந்த பணியிடைப் பயிற்சி இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 10 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பணியிடைப் பயிற்சி ஆசிரியர்களுக்கு எந்த வகையில் உதவியாக இருந்தது என அவர்களிடம் ஆய்வும் நடத்தப்பட உள்ளது.
அதோடு, இந்தப் பயிற்சியில் அவர்கள் என்ன தெரிந்துகொண்டார்கள் என்பதைப் பதிவு செய்வதற்காக பயிற்சி அட்டைகளும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு பயிற்சியின்போது, கடந்த சில ஆண்டுகளில் அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு பொதுத் தேர்வுகளுக்காக தயாரிக்கப்பட்ட சி.டி.க்களின் பிரதிகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும். அதோடு, அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளின் ஆசிரியர்கள் தங்களது அனுபவத்தை ஆசிரியர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும், பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் கணிதம், ஆங்கிலம், அறிவியல் பாடங்களில்அதிக அளவில் தேர்ச்சி பெறுவதில்லை. எனவே, இந்தப் பாடங்களில் மாணவர்களைத் தேர்ச்சி பெற வைப்பதற்காக ஆசிரியர்களுக்கு தனியான பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.

ஊதிய பிரச்சனையும் உச்சநீதிமன்ற தடையும்.........TATA
Posted: 03 Jul 2015 07:29 AM PDTCRC & BRC பயிற்சி நாட்களுக்கு ஒரு ஆசிரியருக்கு வழங்கப்படும் செலவீனத்தொகை எவ்வளவு? கேள்விகளுக்கு RTI பதில்
Posted: 03 Jul 2015 01:17 AM PDTCRC-11.7.15: SABL SCIENCE POWER POINT...
Posted: 03 Jul 2015 02:22 AM PDT
CRC- SABL SCIENCE POWER POINT Click here...

கிராமிய வங்கி பணிக்கான IBPS தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டிர்களா?
Posted: 03 Jul 2015 02:31 AM PDT
இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் பணிபுரிய விரும்பும் இந்திய பணிபுரிய விரும்பும் இந்திய குடிமக்கள் அனைவரும் IBPS எனப்படும் வங்கி பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தற்போது நாடு முழுவதும் உள்ள Regional Rural வங்கிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக IBPS எழுத்துத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்த முழுமையான விவரங்கள் வருமாறு:

பணி: Office Assistant (Multipurpose)

வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று கணினியில் பணிபுரியும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் பணிபுரிய விரும்பும் வங்கி அமைந்துள்ள மாநிலத்தின் அலுவலக மொழியில் பேச தெரிந்திருக்க வேண்டும்.

பணி: Officer Scale - I

வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Agriculture, Horticulture, Forestry, Animal Husbandry, Veterinary Science, Agricultural Marketing and Cooperation, Information Technology, Management, Law, Economics and Accountancy போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது. மேலும் கணினி குறித்தும் படித்திருக்க வேண்டும்.

பணி: Officer Scale - II (General Banking Officer)

வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 - 32க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Banking, Finance, Marketing, Agriculture, Horticulture, Forestry, Animal Husbandry, Veterinary Science, Agricultural Engineering, Pisciculture, Agricultural Marketing and Cooperation, Information Technology, Management, Law, Economicsand Accountancy போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது. மேலும் வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

பணி: Officer Scale - II (Specialist Officer)

வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 21 - 32க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் Electronics, Communication, Computer Science, Information Technology போன்ற ஏதாவதொரு துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது CA அல்லது MBA முடித்திருக்க வேண்டும் அல்லது சட்டத்துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது விவசாயம், கால்நடை அறிவியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Officer Scale - III

வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 21 - 40க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: குறைந்தது 50 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Banking, Finance, Marketing, Agriculture, Horticulture, Forestry, Animal Husbandry, Veterinary Science, AgriculturalEngineering, Pisciculture, Agricultural Marketing and Cooperation, Information Technology, Management, Law, Economicsand Accountancy போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது. மேலும் வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்களை தேர்வு செய்வதற்காக வங்கிபணியாளர் தேர்வாணையம் IBPS-ஆல் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு நடத்தப்படும். PPB-CWE-IV-2015 எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் தற்காலிகமாக பணி நியமனம் செய்யப்படுவார்கள். பின்னர் தேவையான பயிற்சிக்குப்பின் நிரந்தர பணி வழங்கப்படும். நேர்முகத் தேர்வின்போது தேவையான சான்றுகளின் அசல் சான்றிதழ்கள் மற்றும் சுயகையெப்பமிடப்பட்ட நகல்கள்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஆன்லைன் விண்ணப்பித்த பிரிண்ட அவுட், கட்டணம் செலுத்தியதற்கான ரசீது ஆகியவற்றை சமர்பிக்கவேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.600. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100. Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.100. இதனை கிரிடிட், டெபிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம்ஆன்லைன் வழியில் மட்டும் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தியவுடன் கணினியில் வழங்கப்படும் e-recepit-ஐ பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ibps.in என்றஇணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட பின் தகுதியானவர்களுக்கு எழுத்துத் தேர்வு பற்றிய விவரங்கள் மொபைல் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கப்படும். தகவல் பெற்றவுடன் IBPS இணையத்தில்கொடுக்கப்பட்டுள்ள Call Letter-ஐ பதிவிறக்கம் செய்து தேவையான இடத்தில் புகைப்படம் ஒட்டி எழுத்துத் தேர்வுக்கு கொண்டு வரவேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.07.2015

விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 28.07.2015

ஆன்லைன் தேர்வுக்கு உரிய Call Letter-ஐ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டிய தேதி: 19.08.2015 முதல்ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: செப்டம்பர் 2015

தேர்வு முடிவு வெளியிடப்படும் தேதி: அக்டோபர் 2015

நேர்முகத்தேர்வுக்கு உரிய ்ழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டிய தேதி: நவம்பர் 2015

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: நவம்பர், டிசம்பர்-2015

தற்காலிக பணி நியமன ஆணை வழங்கப்படும் தேதி: ஜனவரி: 2016

மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கான முழுமையான விவரங்கள் அறிய www.ibps.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

பொதுத் தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு புதிய பயிற்சி
Posted: 02 Jul 2015 06:34 PM PDT
பொதுத் தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க 60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு புதிய பயிற்சி வழங்கப்பட உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தைவிட குறைவாக உள்ளது.
இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வில் 92.9 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். அதில் மாணவிகளைவிட மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 4.9 சதவீதம் குறைவாக இருந்தது.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் 90.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவிகளைவிட மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 5.9 சதவீதம் குறைவாகவே இருந்தது.எனவே, மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த ஆண்டு ஆசிரியர்களுக்கு புதிய பயிற்சியை வழங்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக, அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில் 10-ஆம் வகுப்புக்கு பாடம் நடத்தும் 60 ஆயிரம் ஆசிரியர்களுக்குபயிற்சி வழங்கப்பட உள்ளது.தேர்ச்சி விகிதத்தைப் பொருத்தவரை மாணவர்கள் மட்டும் படிக்கும் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது. அந்தப் பள்ளிகளுடன் ஒப்பிடும்போது, இரு பாலரும் படிக்கும் பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் சற்று அதிகமாக உள்ளது. மகளிர் மட்டும் படிக்கும் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் மிக அதிகமாக உள்ளது தேர்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.

இந்த ஆண்டு பயிற்சியின்போது, கடந்த சில ஆண்டுகளில் அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு பொதுத் தேர்வுகளுக்காக தயாரிக்கப்பட்ட சி.டி.க்களின் பிரதிகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும். அதோடு, அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளின் ஆசிரியர்கள் தங்களது அனுபவத்தை ஆசிரியர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும், பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் கணிதம், ஆங்கிலம், அறிவியல் பாடங்களில்அதிக அளவில் தேர்ச்சி பெறுவதில்லை. எனவே, இந்தப் பாடங்களில் மாணவர்களைத் தேர்ச்சி பெற வைப்பதற்காக ஆசிரியர்களுக்கு தனியான பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் இதுவரை ஆண்டுக்கு 5 நாள்களாக இருந்த பணியிடைப் பயிற்சி இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 10 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பணியிடைப் பயிற்சி ஆசிரியர்களுக்கு எந்த வகையில் உதவியாக இருந்தது என அவர்களிடம் ஆய்வும் நடத்தப்பட உள்ளது. அதோடு, இந்தப் பயிற்சியில் அவர்கள் என்ன தெரிந்துகொண்டார்கள் என்பதைப் பதிவு செய்வதற்காக பயிற்சி அட்டைகளும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் இதேபோன்று சிறப்புப் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

வங்கிக் கணக்கில் ரேஷன் பொருட்கள் மானியம்: செப்டம்பரில் தொடங்க மத்திய அரசு முடிவு
Posted: 03 Jul 2015 01:26 AM PDT
சமையல் எரிவாயு மானியத்தைத் தொடர்ந்து மண்ணெண்ணெய் உள்ளிட்ட ரேஷன் பொருட்களின் மானியத்தை பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டத்தை செப்டம்பரில் மத்திய அரசு தொடங்கவுள்ளது.

முதல் கட்டமாக
புதுச்சேரி, சண்டிகர் மற்றும் தாத்ரா நாகர்ஹவேலி ஆகிய மூன்று யூனியன் பிரதேசங்களில் செப்டம்பர் ஒன்றாம் தேதி இந்த திட்டம் தொடங்கும் என டெல்லியில் நிதி அமைச்சக இணைச் செயலர் பியூஷ் குமார் தெரிவித்துள்ளார்.இந்த திட்டத்தின்கீழ் ரேஷன் பொருட்களை மாநில அரசுகள் கொள்முதல் செய்யும் விலையைக் கொடுத்து நுகர்வோர் வாங்க வேண்டியிருக்கும் என்ற அவர், அவர்களது மானியத் தொகையாக சுமார் 500 முதல் 700 ரூபாயை வங்கிக் கணக்கில் அரசு வரவு வைக்கும் என்றும் கூறினார்.இந்த ஆண்டு இறுதிக்குள் ரேஷன் கார்டுகளை மின்னணுமயமாக்க மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் பியூஷ் குமார் தெரிவித்தார்.​

மொபைல் எண் மாறாமல் நிறுவனம் மாறலாம்: தேசிய அளவில் இன்று முதல் அமல்
Posted: 03 Jul 2015 01:24 AM PDT
மொபைல் ஃபோன் எண்ணை மாற்றாமல் அச்சேவையை தரும் நிறுவனத்தை மட்டும் மாற்றிக் கொள்ளும் வசதி நாடு முழுவதும் இன்று முதல் தொடங்கப்பட உள்ளது.இதன்படி
மொபைல் ஃபோன் பயன்படுத்துவோர் இந்தியாவின் எந்த பகுதிக்கு சென்றாலும் தங்கள் பழைய எண்ணையே தக்க வைத்துக் கொள்ள முடியும். அதே சமயம் விருப்பமான மொபைல் ஃபோன் சேவை நிறுவனத்தின் சேவைக்கும் மாறிக் கொள்ள முடியும்.

இச்சேவையை ஏர்டெல், வோடாஃபோன், ஐடியா பிஎஸ்என்எல் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் இன்று முதல் அமல்படுத்த உள்ளன.மொபைல் எண்ணை மாற்றாமல் சேவை நிறுவனம் மட்டும் மாற்றும் சேவையை தேசிய அளவில் வழங்க இன்று வரை தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு அரசு கெடு விதித்திருந்தது.இச்சேவை தொலைத்தொடர்பு மண்டல அளவில் கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் வழங்கப்படுகிறது​

விரைவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் : முதல்கட்டமாக 10 ரூபாய் தாளில் சோதனை
Posted: 03 Jul 2015 01:23 AM PDT
பிளாஸ்டிக் ரூபாய் தாள்களை சோதனை ரீதியில் பயன்படுத்தி பார்க்கும் திட்டம் விரைவில் தொடங்கும் என ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் காந்தி தெரிவித்துள்ளார்.சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர்,
முதலில் 10 ரூபாய் தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டு சோதிக்கப்படும் என்றும் பிறகு படிப்படியாக மற்ற மதிப்பிலான பிளாஸ்டிக் தாள்கள் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார்.கொச்சி, மைசூர், ஜெய்ப்பூர், புவனேஸ்வர், சிம்லா ஆகிய 5 நகரங்களில் பிளாஸ்டிக்ரூபாய் தாள்கள் சோதிக்கப்படும் என மத்திய அரசு கடந்த ஆண்டே தெரிவித்திருந்தது.

காகித ரூபாய் தாள்களை விட நீடித்து உழைக்க கூடிய பிளாஸ்டிக் தாள்களை கள்ள நோட்டாக அச்சடிப்பதும் கடினமாகும்.

வருமான வரி கணக்கு தாக்கலுக்கு தயாராகிறது புது படிவம்
Posted: 02 Jul 2015 06:35 PM PDT
வருமான வரி தாக்கல் செய்ய, புது படிவம் தயாராகி வருகிறது. பாஸ்போர்ட் உள்ளவர்கள், அது தொடர்பான விவரங்களை தெரிவிக்க வேண்டும்.ஆண்டுதோறும், மார்ச், 31ம் தேதிக்குள் வருமான வரியை செலுத்த வேண்டும். ஜூலை, 31ம் தேதிக்குள், அதற்குரிய விரிவான கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
கடந்த நிதி ஆண்டான, 2014 - 15 க்கான, விரிவான கணக்கை தாக்கல் செய்யும் காலம், ஆகஸ்ட், 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, வருமான வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஏற்கனவே இருந்த படிவம், தற்போது எளிமையாக்கப்பட்டு உள்ளது. தேவையற்ற தகவல்கள்என, சில நீக்கப்பட்டு, படிவத்தின் அளவு சுருக்கப்பட்டு உள்ளது. புதிய தகவல்கள் சில சேர்க்கப்பட்டும், படிவம் தயார் செய்யப்பட்டது. ஆனால், புதிய தகவல்கள் சிலவற்றுக்கு, கணக்கு கொடுப்பது கடினம் என, கருத்து பெறப்பட்டது. இதனால், புதிய படிவத்தில் மாற்றங்கள்செய்து, மீண்டும் படிவம் தயார் செய்யப்படுகிறது.படிவம் முழுமையாகத் தயார் செய்து வருவதற்கு, இன்னும் சில நாட்கள் ஆகலாம். அதனால், வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய, ஆகஸ்ட் வரை, நீட்டிப்பு அளிக்கப்பட்டுஉள்ளது. ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள், 'ஆன் - லைன்' மூலம் கணக்கை தாக்கல் செய்யவது கட்டாயம். அதற்கு கீழ் உள்ளவர்களே, படிவம் மூலம் தாக்கல் செய்ய வேண்டும். எனவே, புதிய படிவம் உருவாக்குவதன் மூலம், கணக்கை தாக்கல் செய்வதில் சிக்கல் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.ஆகஸ்டு வரை கால நீட்டிப்புமத்திய அரசின் புதிய கொள்கைப்படி, வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் படிவங்களை எளிமைப்படுத்தியும், புதிய தகவல்களை சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டது.

புதிய தகவல் சேர்ப்பின் கீழ், வருமான வரி செலுத்துவோர், ஆண்டுதோறும், அவர்கள்சென்ற வெளிநாட்டு விவரம், அதற்கான செலவுகளை, வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தில் தெரிவிக்க வேண்டும். 'இப்புதிய அணுகுமுறை தேவையற்றது. வெளிநாட்டில் எவ்வளவு செலவு செய்தோம்; எதற்கு செலவு செய்தோம் என்ற விவரங்களைதெரிவிப்பது கடினம்' என, பொதுமக்கள் தரப்பில் கருத்து கூறப்பட்டது.இதை ஏற்றுக்கொண்டு, 'பாஸ்போர்ட் எண்ணை மட்டும் குறிப்பிட்டால் போதும்' என, வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இதனால், புதிய படிவம் உருவாக்குவதற்கும், அதை வினியோகித்து, கணக்குகளைப் பெறவும், ஆகஸ்ட் வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.

தனியார் பள்ளிகளில் இலவச கல்வி: மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் அறிவிப்பு
Posted: 03 Jul 2015 01:16 AM PDT
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி பல்வேறு காலியிடங்கள் உள்ளதனியார் சுயநிதி பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கலாம் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் அறிவித்துள்ளது.இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்காக தனியார் சுயநிதி பள்ளிகளில் 25 சதவீதம் காலி இடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பல்வேறு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்கள் குறித்து www.tn matric schools.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.காலியிடங்கள் உள்ள பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் நேரடியாக பள்ளிகளில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கமகள் சேமிப்பு கணக்குகள் விவரம்: வங்கிகள் அளிக்க ரிசர்வ் வங்கி உத்தரவு
Posted: 03 Jul 2015 01:16 AM PDT
பெண் குழந்தைகளின் எதிர்கால நிதிப் பாதுகாப்புக்காக தொடங்கப்பட்ட சுகன்யா சம்ரிதி கணக்குகள் பற்றிய விவரத்தை அளிக்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்த திட்டத்தின் முன்னேற்றம் குறித்து மண்டலவாரியாக வார அடிப்படையில் தகவல்களை தாக்கல் செய்ய வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.தமிழகத்தில் தங்க மகள் சேமிப்பு திட்டம் என்ற பெயரில் சுகன்யா சம்ரிதி வங்கிக் கணக்கு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்துக்கு உள்ள வரவேற்பு குறித்து அறிவதில் மத்திய அரசு ஆர்வம் காட்டுவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இதற்கிடையே, சுகன்யா சம்ரிதி கணக்குகளை அதிக அளவில் தொடங்கியதில் பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் வங்கி ஆகியவை முன்னிலை வகிக்கின்றன.இந்த இரண்டு வங்கிகளில் மட்டும் இதுவரை சுமார் 10 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

அகஇ - ஜூலை மாத CRC - மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்
Posted: 03 Jul 2015 12:15 AM PDT

7th Central Pay Commission ல் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.
Posted: 02 Jul 2015 09:56 PM PDT
மத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (Expected DA என நம்மவர்கள் அனுப்பும் தகவல்கள் மத்திய அரசு ஊழியர்களின் இணையங்களின் தகவல்கள் மூலமே அனுப்பப்படுகின்றன) இவர்களின் கணக்கீடுகள் பெரும்பாலும் நம்பகத்தன்மை உடையதாகவே உள்ளது.
7th CPCல் ஊதியம் நிர்ணயம் செய்ய எதிர்பார்க்கப்படும் முறை பற்றி அவர்களின் இணையதளத்தில் உள்ளது கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

"7th CPC Pay in Pay Band = [(6th CPC Pay in Pay Band as on 01.01.2016+6th CPC Grade Pay)X 2.20]-6th CPC Grade Pay".
அதாவது 7th CPC ஊதியம் என்பது, 1.1.2016 அன்று உள்ள ஆறாவது ஊதியகுழு ஊதியம் + ஆறாவது ஊதியகுழு தர ஊதியம் x 2.20. அதன் பின்னர் ஆறாவது ஊதியகுழு தர ஊதியத்தை கழித்தால் கிடைப்பது ஆகும்.

உதாரணமாக ஆறாவது ஊதிய குழுவின் 5200+2800 ல் இருப்போரை வைத்துகணக்கிட்டு பார்த்தால் 5200 + 2800 =8000 x 2.20=17600 - GP2800 = 14800 என வரும். இது அடிப்படை ஊதியம் எனும் Entry Level Pay கணக்கிடுவதற்குரியது. இத்துடன்புதிய GP 8800 சேர்த்தால் 23600 வரும். அவர்கள் வெளியிட்டுள்ள பட்டியலிலும் இவ்வாறே அனைத்து தரப்பினருக்கும் கணக்கிடப்பட்டு வெளியிடப்பட்டிருக்கும்.இத்தகவல்கள் காணப்படும் பகுதிகள் கீழே இணைப்புகளுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.

2015 ஜூன் மாதம் இது போன்ற இணையங்களில் Multiplication factor 3.7 என்றும் ஊதியம் 4.5 மடங்கு கூடுதலாக இருக்கும் என்றும் தகவல்கள் உள்ளன. இருப்பினும் ஆறாவது ஊதியகுழு 1.86 முறையை விளக்கி அதை பின்பற்றி 2.20 வரலாம் என விளக்கியுள்ள 2.20 Multiplication factor முறை உங்கள்முன் விளக்கி கூறப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள Link ல் சென்று பார்க்கவும்.

7th Pay Commission Pay and Allowances Estimation - GConnect Calculator - http://www.gconnect.in/…/7th-pay-commission-pay-allowances-…

தமிழக பள்ளிகளில் 'எரிசக்தி கிளப்':தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு.
Posted: 02 Jul 2015 06:38 PM PDT
தேசிய எரிசக்தி மேலாண்மைக்குழு சார்பில், பள்ளி மாணவர்களுக்கு, 'எரியாற்றல் சேமிப்பு' குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பிரத்யேக வலைதளம் துவங்கப்பட்டுள்ளது.ஆண்டுதோறும் டிசம்பர், 14ல், ' தேசிய எரிவாயு பாதுகாப்பு தினம்' கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நாளில், எரியாற்றல் சார்ந்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடத்தப்படுகின்றன. பள்ளி மாணவர்களுக்கு, இதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், பிரத்யேக வலைதளம் ' www.enregysavers.co.in' என்ற பெயரில் துவக்கப்பட்டுள்ளது.

இதில், எரிசக்தி என்றால் என்ன, அதன் முக்கியத்து வம், எரிசக்கதி பாதுகாப்பு மற்றும் சேமிக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும், 1,735 பள்ளிகள் இந்த வலைதளத்தில் ஒருங்கிணைந்துள்ளன. மேலும், தமிழகம் உட்பட, 17 மாநிலங்களில்செயல்படும் பள்ளிகளில், 'எரியாற்றால் கிளப்' துவங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக தொடக்க கல்வித்துறையின் சார்பில், இந்த வலைதளத்தில் மாணவர்கள் உறுப்பினர்களாக அறிவுறுத்தவும், பயன்படுத்திக்கொள்ள வழிவகை செய்ய வும், பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி இயக்ககம் : EMIS கீழ் மாணவர் தகவல் தொகுப்பு - ஆதார் எண் தொகுப்பறிக்கை அனுப்புதல் - சார்பு.
Posted: 02 Jul 2015 10:36 PM PDT
பள்ளிக்கல்வி இயக்ககம் - EMIS கீழ் மாணவர் தகவல் தொகுப்பு - ஆதார் எண் பெற்ற மாணவர்கள், ஆதார் எண் கோரி பதிவு செய்துள்ள மாணவர்கள் மற்றும் ஆதார் எண் பெற இதுவரை மனு செய்யாத மாணவர்களை கண்டறிந்து பள்ளி வாரியாக தொகுப்பறிக்கை அனுப்புதல் - சார்பு.

SSA - STUDENTS DETAILS CALLED REG AADHAR REG PROC CLICK HERE...

பீகாரில் 1,400 ஆசிரியர்கள் ராஜினாமா
Posted: 02 Jul 2015 09:50 PM PDT
பீகாரில், போலி கல்விச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த, 1,400 ஆசிரியர்கள், மாநில அரசின் சட்ட நடவடிக்கைக்கு பயந்து, ராஜினாமா செய்துள்ளனர். மேலும் பல ஆசிரியர்கள் ராஜினாமா செய்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

போலி சான்றிதழ்

பீகாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்கு, ஆசிரியராக பணியாற்றும் பலர், போலியான கல்விச் சான்றிதழ் அளித்து, பணியில் சேர்ந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து, பாட்னா ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு: போலி கல்விச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள், ஜூலை, 8க்குள் ராஜினாமா செய்ய வேண்டும்; தவறினால், அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்; அவர்களுக்கு சம்பளமாகக் கொடுத்த தொகையும் பறிமுதல் செய்யப்படும்.

இவ்வாறு கோர்ட் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், தொடக்க கல்வி ஆசிரி யர்கள், 1,400 பேர், நேற்று ராஜினாமா செய்தனர். கெடு முடிவடைய, இன்னும் ஐந்து நாட்கள் உள்ளதால், மேலும் பலர் ராஜினாமா செய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.கல்வித்துறை பீகாரில், தொடக்க கல்வித் துறையில், 3.5 லட்சம் பேர் ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர். இவர்களில் கணிசமானோர், போலி கல்விச் சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்தவர்கள் என தெரியவந்து உள்ளது.

கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் கல்விக் கடன் பெறுவது எப்படி?
Posted: 02 Jul 2015 09:50 PM PDT
அண்ணா பல்கலைக்கழக வளா கத்தில் பொறியியல் பொது கலந்தாய்வுக்கு வரும் மாண வர்களுக்கு கல்விக் கடன் உடனுக்குடன் பெற வழி காட்ட பல்வேறு வங்கிகள் பல்கலைக்கழக வளாகத்தில் அரங்கங்களை அமைத்துள்ளன.
அங்கு நேரடியாக கல்விக் கடன் பெறுவதற்கான ஒப்புதலை சில வங்கிகள் வழங்குகின்றன.

சில வங்கிகள் தங்களது கிளைகளின் மூலம் ஒப்புதல் பெற அறிவுறுத்துகின்றன.அண்ணா பல்கலைக்கழகத்தில் கலந்தாய்வுக்கு பின், வழங்கப்படும் ஒதுக்கீட்டு ஆணையை பல் கலைக்கழக வளாகத்தில் அமைக் கப்பட்டுள்ள வங்கி அரங்கில் கொடுக்க வேண்டும். அதைப் பார்த்த பிறகு அரங்கில் உள்ள வங்கி பணியாளர்கள் கடனுக்கானஒப்புதல் கடிதத்தை தருவார்கள். சில வங்கிகள் ஒதுக்கீட்டு ஆணை இல்லாமலேயே ஒப்புதல் கடிதம் வழங்குகின்றன.அந்த கடிதத்தை எடுத்துக் கொண்டு வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள வங்கிக் கிளையை அணுக வேண்டும்.

கல்விக் கடன் பெறுவதற்கு வங்கி கிளையில் அளிக்க வேண்டிய சான்றிதழ்கள்

* அண்ணாப் பல்கலைக்கழகத்தில் கொடுக்கப்படும் ஒதுக்கீட்டு ஆணை.
* அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வங்கி அரங் கில் கொடுக்கப்படும் கடிதம்.
* பத்தாம், பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.
* வருமான சான்றிதழ்.
* ஆதார் அட்டை அல்லது பான் அட்டை.
* கல்லூரியிலிருந்து பெறப் படும் சேர்க்கை சான்றிதழ்.
* கல்லூரியிலிருந்து வழங் கப்படும் கட்டண விவரம்.
* அடையாளச் சான்று,
* இருப்பிடச் சான்று.இந்த ஆவணங்களை பரிசீலித்த பிறகு கல்விக் கடன் வழங்கப்படும். படிப்பு காலம்முடிந்து ஒரு வருடம் அல்லது வேலை கிடைத்த பிறகு 6 மாதங்கள்-எது குறுகிய காலமோ அந்த காலத்திலிருந்து கடனை திருப்பச் செலுத்த வேண்டும்.

படிக் கும் காலத்தில் கடனில் எந்த பகுதி யையும் திரும்பச் செலுத்த வேண் டிய அவசியமில்லை. ஆனால் கடனுக்கான வட்டியை படிக்கும் காலத்திலேயே தவறாமல் கட்டி வருபவர்களுக்கு வட்டி விகிதத்தில் சலுகை தரப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அரங்குகள் அமைத்துள்ள வங்கி களில், 4 லட்சத்துக்கு உட் பட்டு இருக்கும் கல்விக் கடனுக்கு கோரப்படும் வட்டி விகிதமும், வட்டியை படிக்கும் காலத்திலேயே கட்டுபவர்களுக்கு தரப்படும் சலுகை விகிதமும் அட்டவணையில் தரப்பட்டுள்ளது.

2-வது நாளில் 3,564 பேருக்கு பொறியியல் ஒதுக்கீட்டு ஆணை: இசிஇ-க்கு வரவேற்பு
Posted: 02 Jul 2015 09:49 PM PDT
பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வின் 2-வது நாளான நேற்று 4,621 மாணவ-மாணவிகள் அழைக் கப்பட்டனர். இதில் 3,564 மாணவ-மாணவிகளுக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.
கடந்த 2 நாள் நிலவரப்படி இ.சி.இ பிரிவையே அதிக மாணவ-மாணவிகள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

இதுவரை 968 பேர் இ.சி.இ பிரிவை தேர்ந்தெடுத்துள்ளனர். அதற்கு அடுத்த இடத்தில் 821 பேர் மெக்கானிக்கல்பிரிவையும், 3-வது இடத்தில் 659 பேர் சி.எஸ்.இ பிரிவையும் தேர்ந்தெடுத்துள்ளனர்.மாணவர்களை பொருத்தவரை முதல் விருப்பப் பாடமாக மெக்கானிக்கல் இருந்து வருகிறது. இதுவரை 807 மாணவர்கள் மெக்கானிக்கல் பிரிவை தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால் மாணவி கள் மத்தியில் இ.சி.இ படிப்பே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இரண்டு நாட்களில் 641 மாணவிகள் இந்த பிரிவை தேர்ந்தெடுத்துள்ளனர்.

விறுவிறுப்பான சேர்க்கை
முதல் 2 நாட்களில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம், எம்.ஐ.டி, கோவை ஜி.சி.டி மற்றும் பி.எஸ்.ஜி கல்லூரிகள், மதுரை தியாகராஜா கல்லூரி ஆகிய கல்லூரிகளில்விறுவிறுப்பாக மாணவர் சேர்க்கை நடைபெற்றது.இந்த கல்லூரிகளில் இ.சி.இ, மெக்கானிக்கல், சி.எஸ்.சி படிப்புகளில் பொது பிரிவில் தற்போது காலி யிடங்கள் இல்லை. மற்ற பிரிவினருக்கு குறைந்த எண்ணிக்கையிலேயே இடங்கள் உள்ளன.

கல்வியால் சிறைபடாத மாணவச் செல்வங்கள்-முனைவர்.கெ.செல்லத்தாய்
Posted: 02 Jul 2015 06:33 PM PDT
இன்றைய கல்வி என்பது கடைத் தெருவில் விற்கும் கத்தரிக்காய் ஆகிவிட்டது. கர்ப்பகிரகத்தில் இருக்கும் கடவுளை வணங்கலாமே தவிர, விற்பனை செய்யக் கூடாது. கேடில்லாத விழுச் செல்வம் கல்வி. இம்மைப் பயன்தருவது, அறியாமையை அறவே ஒழிக்கும்அற்புத மருந்து. கொடுக்கக் கொடுக்க குறையாதுஅட்சயப் பாத்திரத்தில் இருந்து வரும் அமிழ்தம் போன்றது.

இத்தகு அருமைமிகு கல்வியை 'கற்கை நன்றே! கற்கை நன்றே! பிச்சைப் புகினும் கற்கை நன்றே' என்றார் ஒளவை.'ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்' என்றும், 'காலை எழுந்தவுடன் படிப்பு' என நம் ஆன்றோர்கள் கல்வியின் சிறப்பை நமக்கு அறிவுறுத்தி உள்ளனர்.ஒரு குடும்பத்தில் பிறந்த குழந்தைகளில் மூத்தோனை வருக எனத்தாய் அழைக்காது, தான் பெற்ற பிள்ளைகளிலும் கல்வி கற்றவனையே முதலில் அழைப்பாள் என்றும், பிறப்பால் கீழ் நிலையில் உள்ளோர் கல்வி கற்றவராய் இருப்பினும் மேல் நிலையில் உள்ளோர் அவர்களின் கீழ் தான் கல்வி கற்க வேண்டும் என புறநானூறு கூறுகிறது.இது போல் கல்வியின் அவசியத்தைக் கூறாத நுால்களே இல்லை. எளிதில் யாரும் திருடமுடியாத தித்திக்கும் தேனமுதான கல்வியை கற்போன், சமுதாயத்தால் மதிக்கப்படுகிறான். ஒருவனை அறிவாலும், புகழாலும் வாழும் வரை பெருமை அடையச் செய்வது கல்வியே. கையில் உள்ள பொருட் செல்வத்தை விட நிரந்தரமான உண்மைச் செல்வம் கல்வி. மக்களுக்குப் பயன்படாத கல்வியை 'அற்பக் கல்வி', 'மண்படுகல்வி','பேடிக் கல்வி' என்று பாரதி பழிக்கின்றார்.

''வீதிதோறும் இரண்டொரு பள்ளிநாடு முற்றிலும் உள்ளனவூர்கள்நகர்களெங்கும் பலபல பள்ளி'' என்று பாரதியின் கனவு நனவானாலும் இன்று நம் கல்வியின் நிலையென்ன?படித்தவர்கள் முன்மாதிரி ''தரித்திரம் போகுது; செல்வம் வருகுது; படிப்பு வளருது; பாவம் தொலையும், படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான், போவான் ஐயோவென்று போவான்'' எனப் பாரதி உறுதிபடக் கூறினார். படித்தவர்கள் உயர்ந்த குணமுடையவர்களாக மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டார்.ஆனால் இன்று, கல்வி கற்ற உயரதிகாரிகள் கையூட்டு செய்வதில் கைதேர்ந்து விட்டனர். லஞ்சம் பெறுவதையே லட்சியமாகக் கொண்டனர். பாரதி சொன்னதையெல்லாம் நினைத்தால் நமக்கு சிரிப்பதா? அழுவதா? என்றே தெரியவில்லை.கலைமகள் தந்த கல்விக் கனியை, அகத்திக்கீரை, முருங்கைக்கீரை போல ஆளாளுக்கு கடைவிரித்து விட்டனர். ஓர் ஊருக்கு ஒன்பது கல்வி நிறுவனங்கள் இருந்தால் ஒன்று கூட உருப்படாமல் போய்விடும். தரமான கல்வி வேண்டுமா? தனியாரில் படிக்கலாம் என்ற நிலை மக்களிடம் உருவாகிவிட்டது.

வேலை பார்க்க மட்டும் அரசு தேவை. வீட்டுல வச்சா செல்வம் திருடு போயிடும், என்று மக்கள் கொண்டு போய் கொட்டுகின்றனர் கல்விச் சாலைகளில். பரம்பரைச் சொத்தை வித்து பள்ளிக்குப் பணம் கட்டு; காடுகரை எல்லாம் வித்து கல்லுாரிக்குப் பணம் கட்டு என்ற நிலை தான் இன்று.ஆனால் படிச்ச பிறகு சம்பாதிக்கலாம், மீண்டும் அடுத்த தலைமுறை படிப்புக்கு விற்கலாம் என்ற கனவெல்லாம் காற்றோடு போய்விட்டது. படித்தவனுக்கு மாதம் பத்தாயிரம் சம்பளம் என்றால்; படிக்காமலே புரோட்டா போடுபவருக்கு மாதம் ரூ.30,000 சம்பளம்.தரம் என்னானது இன்று நம் கல்வியின் தரம் என்ன? 'கல்வி நல்காக் கசடர்க்குத் துாக்கு மரம்' என்று பாரதிதாசன் கூறுகின்றார். 'நீ மட்டும் உயர்ந்தால் போதாதுஉன் உயரத்திற்கு கல்லாதவர்களையும் இலவசக் கல்வி மூலம் உயர்த்து. அது உண்மையான கல்வி' என்றார் பாரதி.மலரைத் தேடித் தானாகத் தேனீக்கள் வரும். நல்ல கல்வியைத் தேடித் தானாக மக்கள்செல்வர். ஆனால் அங்கே திருமகள் தீராத விளையாட்டல்லவா விளையாடிக் கொண்டிருக்கின்றாள்.

பணம் இருந்தால் பக்கத்துக்கு வா என்ற நிலை. குருவிக்குத் தக்கபடி கொண்டை இருக்கணும்,ஆளுக்குத்தக்கபடி அறிவு இருக்கணும், காசுக்குத்தக்கபடி தான் நாங்க கல்வி கொடுப்போம் என்ற நிலையில், ஏழைக்கு கல்வி எட்டாக் கனியாகிப் போய்விட்டது. அப்படியும் பணம் கொடுத்தாலும் சிறந்த கல்வி கிடைக்கிறதா?பெற்றோர்களும் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைத் தர வேண்டும் என ஆசைப்படுகின்றனர். கல்வியைக் கொடுக்கும் நாம், கஷ்டம் வந்தால் அதைச் சமாளிக்கும் வழிமுறைகளை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறோமா?அறிவுத்திறனை எடை போடுமளவிற்கு ஆளுமை திறன் என்ன என்று பார்த்தோமா? ஊட்டி வளர்க்கின்ற நாம் உழைப்பின் மகத்துவத்தைத் தந்தோமா? நாம் படும்கஷ்டங்களை அவர்களிடம் பகிர்ந்து கொள்கிறோமா? அவர்களை பெட்டில் படுக்க வைத்து, நெட்டில் விளையாட விட்டு ரசிக்கின்றோம். செல்லுலாய்டு பொம்மையாக்கி வைத்துள்ளோம்,பட்டனைத் தட்டினால் எல்லாமே கிடைக்கும் என்ற மாய வலைக்குள் மாட்டி வைத்திருக்கின்றோம். மன தைரியம் நீதியைச் சொல்லிக் கொடுக்கும் நீதி போதனை வகுப்பில்லை. ஆரோக்கியத்தைத் தரும் விளையாட்டு அவர்களுக்கில்லை. உறுதியான எண்ணெங்களை உருவாக்கும் மன தைரியமில்லை. நல்ல கல்வி தருகிறோம் என்று, கிள்ளிப் போட வேண்டிய விஷயங்களைத் தான் அவர்களுக்கு அள்ளி கொடுக்கின்றோம்.கிடைத்தற்கரிய பெரும் பிறவி மனிதப் பிறவி. அதில் கல்வி கற்பது என்பது கடவுளைக் காண்பதைப் போல. அந்தக் கல்வி சிறந்த முறையில் நேர்மையான தகுதியின் அடிப்படையில் கிடைத்தால் அதைவிட இவ்வுலகில் கிடைத்தற்கரிய பெரும் பொக்கிஷம் வேறு ஒன்றுமில்லை.சிந்திப்பீர் பெற்றோர்களே! செயல்படுவீர் கல்வியாளர்களே! கல்வியால் சிறைபடாத மாணவச் செல்வங்களை உருவாக்குவோம்.

முனைவர்.கெ.செல்லத்தாய்
தலைவர், தமிழ்த்துறை
எஸ்.பி.கே. கல்லூரி,
அருப்புக்கோட்டை.
Sellathai03@gmail.com.
94420 61060

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!