Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 21 October 2015

நவம்பர் மாத CRC -

அகஇ - நவம்பர் மாத CRC - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 07/11/2015 அன்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 14/11/2015 அன்றும் நடைபெறும் - செயல்முறைகள்!

"வினா வங்கிகளுக்கு பதிலாக புத்தகங்களைப் படிக்க வேண்டும்'-அரசுத் தேர்வுகள் இயக்குநர் (பொறுப்பு) தண்.வசுந்தராதேவி உத்தரவிட்டுள்ளார்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வினா வங்கிகளுக்குப் பதிலாக புத்தகங்களை முழுமையாகப் படிக்குமாறு அறிவுறுத்த வேண்டும் என அனைத்துப் பள்ளிகளுக்கும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் (பொறுப்பு)தண்.வசுந்தராதேவி உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக அனைத்து மாவட்டக் கல்வித் துறை அதிகாரிகள் வாயிலாக பள்ளிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:-

மாணவர்கள், புத்தகத்தில் உள்ள கருத்துகளை முழுமையாகப் படித்து புரிந்து தேர்வுகளுக்கு தயார் செய்வதற்குப் பதிலாக, ஏற்கெனவே கடந்த பருவங்களில் வெளியான வினாக்களின் தொகுப்பை மட்டும் படித்தால் முழு மதிப்பெண் பெற்றுவிடலாம் என்ற தவறான புரிதல் மாணவர்கள் மத்தியில் இருக்கிறது.அதனால், வினாத்தாள் கட்டமைப்புக்கு உட்பட்டு புத்தகத்தில் உள்ள பகுதிகள் தொடர்பாக வினாக்கள் வரும்போது மாணவர்கள் மத்தியில் அச்சம் ஏற்படுகிறது.
இதனை களையும் பொருட்டு, அனைத்து வினாக்களுக்கும் மாணவர்கள் தன்னம்பிக்கையுடனும், முழு புரிதலுடனும் பதிலளிக்க ஏதுவாக புத்தகத்தில் உள்ள கருத்துகளை முழுமையாகப் படிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தச் சுற்றறிக்கையை அனைத்து மாணவர்களுக்கும் விநியோகிப்பதோடு,அதற்கு ஆதாரமாக பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் கையெழுத்தையும் தலைமையாசிரியர்கள் பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போனஸ் வரம்பு உயருமா? மத்திய அமைச்சரவை இன்று முடிவு

போனஸ் பெறுவதற்கான மாத ஊதிய வரம்பை உயர்த்துவது தொடர்பான சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளிக்கும்எனத் தெரிகிறது.ரூ.10,000 வரை மாத ஊதியம் பெறும் தொழிலாளர்கள் போனஸ் தொகை பெறத் தகுதியானவர்கள் என சட்டவிதிகள் உள்ளன. இந்த ஊதிய வரம்பை ரூ.21,000-ஆக உயர்த்துவதற்கான சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.அதேபோல தற்போது ரூ.3,500-ஆக உள்ள போனஸ் உச்ச வரம்பை ரூ.7,500-ஆக உயர்த்தவும் அந்த மசோதாவில் வழி வகை செய்யப்படவுள்ளது.இந்நிலையில், போனஸ் சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளிக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மின் வாரிய ஊழியர்களுக்கு 'போனஸ்' விரைவில் வெளியாகிறது அறிவிப்பு

தமிழ்நாடு மின் வாரிய ஊழியர்களுக்கு, தீபாவளி 'போனஸ்' வழங்குவது குறித்து, அதிகாரிகள் குழுவினர், கோடநாட்டில் முதல்வர் ஜெயலலிதாவை நேற்று சந்தித்துப் பேசினர். 

 
       தமிழ்நாடு மின் வாரியத்தில், உதவியாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், பொறியாளர்கள் என, 90 ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர். மின் உற்பத்தி, மின் பகிர்மானம் உள்ளிட்ட பிரிவுகளில், 10 ஆயிரம் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இதில், முதல் நிலை அதிகாரிகளான, 10 ஆயிரம் பேர் தவிர, மற்றவர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளி போனஸ் வழங்கப்படுகிறது.
 
மின் வாரிய ஊழியர்களுக்கு, 2014ல், 8.33 சதவீத போனஸ்; 11.67 சதவீத கருணை தொகை என, மொத்தம், 20 சதவீத போனஸ் வழங்கப்பட்டது. ஒருவருக்கு, 8,400 ரூபாய் வரை கிடைத்தது. ஒப்பந்த ஊழியர்களுக்கு, 2,000 ரூபாய் வழங்கப்பட்டது. நடப்பு ஆண்டில் தீபாவளி போனஸ் வழங்குவது குறித்து முடிவு எடுக்க, தலைமை செயலர் ஞானதேசிகன், மின் வாரிய தலைவர் சாய்குமார், எரிசக்தி துறை செயலர் ராஜேஷ் லக்கானி, மின் வாரிய நிதி பிரிவு அதிகாரிகள், 18ம் தேதி இரவு, விமானம் மூலம் கோவை சென்றனர். 
அன்று இரவு, கோத்தகிரியில் தங்கிய அதிகாரிகள் குழுவினர், நேற்று காலை, கோடநாட்டில், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர். 
இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழக அரசின் நிதி நிலைமை மோசமாக உள்ளது. இதனால், தொழிற்சங்கங்கள் கேட்ட, 25 சதவீதத்திற்கு பதிலாக, கடந்த ஆண்டை போல, 20 சதவீத போனஸ் வழங்கப்படும்; இதற்கு, 50 கோடி ரூபாய் செலவாகும். 
போனஸ் அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா, ஓரிரு தினங்களில் வெளியிடுவார். இவ்வாறு அவர் கூறினார்.-

பூமியை நெருங்கும் ராட்சத விண்கல்!

பூமியை நெருங்கும் ராட்சத விண்கல்!

   பூமிக்கு அபாயம் ஏற்படுத்தும் வகையில், ராட்சத விண்கல் ஒன்று, மணிக்கு 1,25,529 கி.மீ., வேகத்தில் பூமியை நெருங்கி வருகிறது. அவ்விண்கல் வரும் அக்., 31ம் தேதி(30-10-15) புவி சுற்றுவட்ட பாதையை கடக்கும் என நாசா தெரிவித்துள்ளது.
 
       கடந்த 2006ம் ஆண்டுக்குப் பிறகு பூமியை தற்போது ஒரு ராட்சத விண்கல் நெருங்கி வருவதாக நாசா அறிவித்துள்ளது. அந்த விண்கல்லுக்கு 2015 டி.பி.,145 என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது 4,99,000 கி.மீ., துாரத்தில் பூமியை, வரும் அக்., 31ம் தேதி கடக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விண்கல் சுமார் 280மீ., முதல் 620மீ., வரை விட்டம் கொண்டது. இவ்விண்கல்லை அக்.,10ம் தேதி நாசா கண்டுபிடித்தது.
மணிக்கு 1,25,529 கி.மீ., வேகத்தில் பயணிக்கும் இந்த விண்கல், பூமியை தாக்காமல் புவிசுற்றுவட்டப் பாதையை கடந்து செல்லும் என நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஒருவேளை இவ்விண்கல் பூமியில் மோதினால் கடும் விளைவுகள் ஏற்படும் எனவும், ஓசோன் மண்டலம் முற்றுலும் அழியும் எனவும், அதனால் பருவ நிலை மாற்றங்கள் நிகழும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்

TNPSC : குரூப் 2A தேர்வு தேதி மாற்றம்

TNPSC : குரூப் 2A தேர்வு தேதி மாற்றம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி-2A ல் (நேர்முக தேர்வு அல்லாத) (ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள்) உள்ளடங்கிய பல்வேறு பதவிகளுக்கான (1863) அறிவிக்கையினை 12.10.2015 அன்று வெளியிட்டிருந்தது.

மேற்படி ஒருங்கிணைந்த சார்நிலைப் பணியில், வனத்துறை, எழுதுபொருள் மற்றும் அச்சகத்துறை மற்றும் நிலஅளவை துறைகளில் உள்ள உதவியாளர் பதவி, தலைமைச்செயலகம் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உள்ள நேர்முக உதவியாளர் ஆகியவற்றில் 84 கூடுதல் பதவிகள் உள்ளடக்கியதுணை அறிவிக்கையினை இன்று (20.10.2015) வெளியிட்டுள்ளது. அவ்வறிவிக்கையில் வெளியிடப்பட்ட தேர்வு தேதியும் மாற்றப்பட்டு 24.01.2016 அன்று இத்தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்படுகின்றது.

மேலும் அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற விவரங்களில் மாற்றம் ஏதும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. .மேற்படி தேர்வுக்கு, விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வலைதளமான. www.tnpscexams.net மற்றும் www.tnpscexams.in என்ற இணையதளம் வாயிலாக மட்டுமேவிண்ணப்பிக்கலாம். 12.10.2015 அறிவிக்கையின்படி ஏற்கனவே விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்கள் மறுபடியும் விண்ணப்பிக்கத்தேவையில்லை.

தேர்விற்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டம் ஆகியன தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்த சந்தேகங்கள் இருப்பின் contacttnpsc@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

23.10.15 அன்று தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை-

23.10.15 அன்று தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
தஞ்சை மாவட்டத்திற்கு வரும் வெள்ளிக்கிழமை  23.10.15 சதயத் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை ஈடு செய்யும் நாள்  14.11.2015 -மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

காலிப் பணியிடங்களை நிரப்ப சிறப்புக் கலந்தாய்வு

காலிப் பணியிடங்களை நிரப்ப சிறப்புக் கலந்தாய்வு: முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை
தமிழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப சிறப்புக் கலந்தாய்வு நடத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் அளிக்கப்பட்டுள்ள மனு:

தமிழக அரசின் ஆணையோ, பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் எதுவும் வழங்கப்படாத நிலையில், சேரன்மகாதேவி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் ஆசிரியர்களின் வருகைப் பதிவை பதிவு செய்ய நடைமுறைப்படுத்தும் பயோ மெட்ரிக் முறையை ரத்து செய்யவேண்டும்; கடந்த ஆகஸ்ட் 2015இல் நடைபெற்ற தலைமையாசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வில் திருநெல்வேலி மாவட்டத்தில் சில அரசு மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர் பணியிடங்கள் மறைக்கப்பட்டிருந்தன. ஆனால், இதுவரை அந்தக் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாததால்பிளஸ்-2 வகுப்புகளுக்கு பாடம் போதிக்கும் முதுநிலை ஆசிரியர்களிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதனால் கூடுதல் பணிச்சுமையால் ஆசிரியர்கள் அவதிப்படுகிறார்கள். ஆகவே, விடுபட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப சிறப்புக் கலந்தாய்வு நடத்த வேண்டும்; குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடிமாவட்டங்களைச் சேர்ந்த முதுநிலை ஆசிரியர்களுக்கு 2ஆவது பொதுக் கலந்தாய்வு நடத்த வேண்டும்; இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை (அக்.19) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!