Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 25 October 2015

தலைமை ஆசிரியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட ஓய்வூதியப் பயன்களை வழங்க வலியுறுத்தல்

இலவச மடிக்கணினி திருடுபோன பள்ளிகளில் பணியாற்றிய தலைமை ஆசிரியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட ஓய்வூதிய பணப் பலன்களை உடனே வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் வலியுறுத்தியது.இந்த அமைப்பின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் மு.பொன்முடி தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ஆ.ரமேஷ், பொருளர் செ.சண்முகநாதன், அமைப்புச் செயலாளர் க.கனகராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் சந்திரசேகர் வரவேற்றார்.மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பதவி உயர்வில் உள்ள முரண்பாடுகளைக் களைய தமிழக முதல்வரின் அறிவுறுத்தல்படி அமைக்கப்பட்ட சீராய்வுக் குழு அறிக்கையை அமல்படுத்த வேண்டும், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் நவம்பர் 28-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.இலவச மடிக்கணினி திருடுபோன பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஓய்வூதியப் பணப் பலன்களை உடனே வழங்க வேண்டும்.

வேலூர் மாவட்டத்தில் தலைமை ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்தக் கூட்டத்தில் செயல் தலைவர் டி.சுப்பிரமணியன், கெளரவத் தலைவர் வா.ராதாகிருஷ்ணன், ஆலோசனைக் குழுத் தலைவர் சே.ராஜபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதிய மாவட்ட கல்வி அலுவலர்கள், பணி நிறைவு பெற்ற மாநிலப் பொறுப்பாளர்கள் இந்தக் கூட்டத்தில் கெளரவிக்கப்பட்டனர்.

நீர்நிலைகளோடு, கலையையும் காப்பாற்றும் முயற்சி:

நீர்நிலைகளோடு, கலையையும் காப்பாற்றும் முயற்சி: ஆறு, குளங்களைக் காக்க பொம்மலாட்டப் பிரச்சாரம் - ஊர் ஊராகச் செல்லும் கோவை ஆசிரியர்

அழிந்து வரும் பாரம்பரியக் கலையான பொம்மலாட்டம் மூலம் நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் கோவையைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஓவிய ஆசிரியர் ஆனந்தராஜ்.கோவை செட்டிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஓவியம் மற்றும் சாரணர் ஆசிரியர் ஆனந்தராஜ். இவர் கடந்த 20 ஆண்டு களாக ஊர் ஊராக சென்று, தமிழகத்தின் ஆறு, ஏரி, குளங்கள் மாசுபடுவது குறித்து பொம்மலாட்டக் கலை மூலம் பிரச்சாரம் செய்துவருகிறார்.


கோவையில் சமீபத்தில் ‘ஓசை’ அமைப்பின் மாதாந்திர சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கூட்டத்தில் குளங்கள் பாதுகாப்பு குறித்த பொம்மலாட்டத்தை நடத்தினார்.
இதுகுறித்து ஆனந்தராஜ் கூறியதாவது:முதன்முதலாக 1996-ல் பொள்ளாச்சி இந்திராகாந்தி வன உயிரின உய்விடம் நடத்திய கானு யிர் கணக்கெடுப்பில் களப்பணிக் குச் சென்றேன்.அப்போதுதான் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கி யத்துவத்தை உணர்ந்தேன்.கோவையில் ஒரு காலத்தில் நூற்றுக்கணக்கான குளங்கள் இருந்தன. இன்று பல குளங்கள் அழிந்துவிட்டன.
சோழர்கள் காலத்திலேயே நொய்யல் ஆற்றில் தடுப்பணைகளைக் கட்டி, கால்வாய்கள் வெட்டி அதை சுமார் 30 குளங் களுடன் இணைத்தார்கள். நொய் யல் ஆறு ஒவ்வொரு குளமாக நீரை நிரப்பிச் செல்லும். கோடை யில் ஆறு வற்றினாலும் குளங்களில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கும்.இது ‘சிஸ்டம் டேங்க்’ எனப்படும் மிகச் சிறந்த நீர் மேலாண்மைத் தொழில்நுட்பம். இன்று குளங்களும் அழிந்துவரு கின்றன. இருக்கும் சிற்சில குளங்களிலும் சாக்கடை தேங்கி நிற்கிறது. புளியக்குளம், அம்மன் குளம் ஆகிய மிகப் பெரிய குளங்கள் மண் மேடிட்டு, ஆக்கிர மிக்கப்பட்டு இன்று ஊர்களாகி விட்டன. தமிழகம் முழுவதும் இது போன்ற நிலைதான் இருக்கிறது.பொம்மலாட்டக் கலை 3 ஆயிரம் ஆண்டு வரலாறு கொண்டது. உலகெங்கும் மக்களிடம் இருந்த இந்தக் கலை, தற்போது அழி யும் நிலையில் இருக்கிறது.இந்தி யாவில் ராஜஸ்தான், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இக்கலை சற்று உயிர்ப்புடன் இருக்கிறது. ராஜஸ்தானில் இதற்கென பிரத் தியேகமாக திரை அரங்கம் இருக் கிறது. அங்குதினசரி பொம்ம லாட்டக் காட்சிகள் நடக்கின்றன. தமிழகத்தில் தஞ்சை, மயிலாடு துறை, மதுரை, சென்னையில் சில குடும்பத்தினர் மட்டுமே இக்கலையைநிகழ்த்துகின்றனர். பொருளாதார நசிவால் அவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக இதை கைவிட்டு வருகின்றனர்.
நீர்நிலைகள் அழிக்கப்படுவதை தடுக்க, அழியும் பொம்மலாட்டக் கலை மூலமாகவே விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தேன். பொம்மலாட்டக் கலையில் பல வகைகள் உள்ளன. அதில், சரம் பொம்மலாட்டக் கலையை (String Puppet) ராஜஸ்தான் சென்று கற்றேன்.நீர்நிலைகள் அழிவைத் தடுப்பது குறித்து தமிழகம் முழுவதும் ஊர் ஊராகச்சென்று பல்வேறு பொம்மலாட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன். ஆறுகளில் கழிவுகள், சாயக் கழிவுகளைக் கலப்பது, மணல் அள்ளி நிலத்தடி நீரைக் கெடுப்பது ஆகியவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.கோவை மத்திய சிறை தொடங்கி 100-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள், ஆதிவாசி கிராமங்கள், நாட்டு நலப்பணித் திட்ட முகாம்களில் இதை நடத்தி வருகிறேன். என்னிடம் இக்கலை யில் 250 மாணவர்கள் முழுமையாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.கட்டணம் பெறாமல்தான் இதை நடத்துகிறேன்.
ஒரு நிகழ்ச்சி நடத்து வதற்கு,கதாபாத்திரங்களை அசைக்க 5 பேர், பின்னணி குரல் கொடுக்க 5 பேர் என குறைந்தது 10 பேர் தேவை. வெளியூருக்கு மாணவர்களை அழைத்துச் செல் வது சிரமம் என்பதால், நான் மட்டுமே செல்வேன். உள்ளூர் நபர்களை தேர்வுசெய்து பயிற்சி அளித்து நிகழ்ச்சியை நடத்து கிறேன். இப்படி ஒவ்வொரு ஊரிலும் பலருக்கு இக்கலையை கற்றுக்கொடுப்பதால், நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பரவுவதோடு, பொம்மலாட்டக் கலையையும் அழிவில் இருந்து தடுக்க முடியும்.இவ்வாறு ஆனந்தராஜ் கூறினார்.

ஆசிரியர்களுக்கு ஒழுக்கம் கற்றுத்தர சிறப்பு பயிற்சி

ஆசிரியர்களுக்கு ஒழுக்கம் கற்றுத்தர சிறப்பு பயிற்சி
மாணவர்களுடன், ஆசிரியர்களுக்கும் ஒழுக்கத்தை கற்று கொடுக்க, வரும், 27ல், சென்னையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்கள், ஆசிரியர்கள் இடையே இணக்கமான சூழலை ஏற்படுத்தவும், மாணவர்களுக்கு பாடத் திட்டத்துடன், நற்பண்புகள் மற்றும் தனித்திறனை வளர்க்கும் வகையில் பாடம் நடத்தவும் ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஆசிரியர்களுக்கு, முதற்கட்டமாக ஒழுக்கம் மற்றும் நற்பண்பு மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படுகிறது.சென்னையில் டி.பி.ஐ., வளாகத்திலுள்ள, மாநில கல்வியியல் ஆராய்ச்சிமற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், 27, 28ல், பயிற்சி வகுப்பு நடக்கிறது.இதேபோல், அனைத்து மாவட்டங்களிலும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு, அடிப்படை கணினி அறிவை வளர்க்கும் சிறப்பு பயிற்சியை, மூன்று நாட்கள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொரு மாவட்டத்திலும், 6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும், 50 ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்.

ஆசிரியர்களுக்கு பொது மாறுதல்,பதவி உயர்வு கலந்தாய்வு

ஆசிரியர்களுக்கு பொது மாறுதல்,பதவி உயர்வு கலந்தாய்வு
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல், பதவி உயர்வு வழங்க அக்டோபர் 26, 27, 30 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவள்ளூர் மாவட்டத்தில் 2015-16ஆம் ஆண்டுக்கு அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணி புரியும் பட்டதாரிஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் நிலை-2க்கான பொது மாறுதலும், இடைநிலை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், சிறப்பாசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க கலந்தாய்வும், திருநின்றவூரில் உள்ள ஜெயா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளன.

26-ஆம் தேதி பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் நிலை-2 ஆகியோருக்கு மாவட்டத்துக்குள் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும்.வரும் 27-ஆம் தேதி ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும். வரும் 30-ஆம் தேதி இடைநிலை, உடற்கல்வி, சிறப்பாசிரியர்களில் இருந்து பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க கலந்தாய்வு நடைபெறும்.

லேப்- - டாப் பெற்ற மாணவர்களின் விவரங்களை கேட்ட கல்வித்துறை

லேப்- - டாப் பெற்ற மாணவர்களின் விவரங்களை கேட்ட கல்வித்துறை
மூன்று ஆண்டுகளாக, லேப் - டாப் பெற்ற மாணவர்களின் ஜாதி, இருப்பிடவிவரங்களை, ஒரேநாளில் வழங்க அறிவுறுத்தியதால் மாவட்ட கல்வி அலுவலக ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.தமிழகத்தில் ஆண்டுதோறும்பள்ளிக் கல்வித்துறை பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு இலவச லேப் - டாப் வழங்குகிறது.

மாநில பள்ளி கல்வித்துறை, அனைத்து முதன் மை கல்வி அலுவலகங்களுக்கும், லேப் - டாப் பெற்ற பிளஸ் 2 மாணவ -மாணவர்களின் ஜாதி, வயது, இருப்பிட விவரங்களை உடனடியாக வழங்கும்படி உத்தரவிட்டது. பள்ளி கல்வித்துறையின் இந்த திடீர் உத்தரவால் விவரங்களை சேகரிக்க முடியாமல் ஊழியர்கள் தவித்தனர். அதேபோல் 2011 முதல் 2014 வரையிலான விவரங்களை உடனடியாக வழங்கும்படி அறிவுறுத்தியதால், தினசரி பணிகளோடு இதை முடிக்க முடியாமலும் காலதாமதம் ஏற்பட்டது.இதை கண்டுகொள்ளாத மாநில கல்வித்துறை தொடர்ந்து 'போன், பேக்ஸ், இணையத்தளம் வாயிலாக உடனே விவரங்களை அனுப்ப கோரியதால் அந்தந்த முதன்மை கல்வி அலுவலக ஊழியர்கள், காலஅவகாசம் தராததால் அதிருப்தியடைந்தனர். மூத்த கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: காலாண்டு தேர்வு முடிந்து, விடைத்தாள்கள் சரிபார்ப்பு, மதிப்பீட்டுப் பணிகள் நடக்கின்றன.

இந்தப் பணிகளோடு மாணவர்களுக்கான போட்டிகள் நடக்கின்றன. வேலைப்பளு அதிகரிக்கும் சூழ்நிலையில் ஒரே நாளில் பள்ளி கல்வித்துறை, 4 கல்வி ஆண்டுகளுக்கான 'லேப் - டாப்' பெற்ற மாணவ, - மாணவியரின் விவரங்களை உடனுக்குடன் கேட்பது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. மாநில பள்ளிகல்வித்துறை அதிகாரிகள் கால அவகாசம் வழங்கி விவரங்களைபெற முன் வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

தீபாவளி முன்பணம்: ஆசிரியர்களுக்கு சந்தேகம்

தீபாவளி முன்பணம்: ஆசிரியர்களுக்கு சந்தேகம்
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுக்கு ஒரு முறை பண்டிகை முன்பணம் என, 5,000 ரூபாய் வழங்கப்படும். தீபாவளியை ஒட்டிதான், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், அதிக அளவில், முன்பணத்துக்கு விண்ணப்பிப்பர். அதேபோல், அனைத்து பள்ளிகளில் இருந்தும், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களுக்கு, விண்ணப்பங்கள்வந்துள்ளன, ஆனால், இதுவரை நிதித் துறை அனுமதி வரவில்லை. அதனால், முன்பணம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து, ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:

வழக்கமாக, தீபாவளிக்கு, 15 நாள் முன்பே, முன்பணம் வழங்கப்பட்டு விடும். ஆனால், இன்னும் நிதித் துறை ஒதுக்கீடு உத்தரவு வரவில்லை என்கின்றனர். ஏற்கனவே, அகவிலைப்படி உயர்வுக்கான, நான்கு மாத நிலுவை தொகை வழங்க வேண்டியுள்ளதால், பண்டிகை முன்பணம் கேள்விக்குறியாகி உள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

சிறப்பு ஆசிரியர்கள் பணியிடம் நிரப்ப பதிவு மூப்பு பரிந்துரை

சிறப்பு ஆசிரியர்கள் பணியிடம் நிரப்ப பதிவு மூப்பு பரிந்துரை
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு மாநில அளவிலான பதிவுமூப்பு பரிந்துரைக்கப்பட உள்ளது. தகுதியுடையோர் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அக்.,28 இல் பதிவு மூப்பு சரி பார்க்கலாம்.இது குறித்து சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுப்பிரமணியன் கூறியது:

செவித்திறனற்ற மாணவருக்கான 31 இடைநிலை ஆசிரியர் பதவிகளுக்கு இடைநிலை ஆசிரியர் பட்டயம், ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 இல் தேர்ச்சி மற்றும் செவித்திறனற்ற மாணவருக்கான ஆசிரிய பயிற்சியில் இளநிலைப் பட்டயச் சான்று பெற்றிருக்க வேண்டும். பார்வையற்ற மாணவருக்கான 31 இடைநிலை ஆசிரியர் பதவிக்கு இடைநிலை ஆசிரியர் பட்டயம், ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 இல் தேர்ச்சி மற்றும் பார்வையற்ற மாணவருக்கான ஆசிரிய பயிற்சியில் இளநிலை பட்டயச் சான்று பெற்றிருத்தல் வேண்டும். பார்வையற்ற மாணவருக்கான,11 பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடத்திற்கு பி.ஏ. அல்லது பி.எஸ்.சி., அல்லது பி.லிட்.,பட்டப்படிப்புடன் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 இல் தேர்ச்சி மற்றும் பார்வையற்ற மாணவருக்கான ஆசிரிய பயிற்சியில் முதுநிலை பட்டயச் சான்று பெற்றிருத்தல் வேண்டும்.

செவித்திறனற்ற மாணவருக்கான, 19 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு பி.ஏ., அல்லது பி.எஸ்.சி., அல்லது பி.லிட்., பட்டப்படிப்புடன் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 இல் தேர்ச்சி மற்றும் செவித்திறனற்ற மாணவருக்கான ஆசிரிய பயிற்சியில் முதுநிலை பட்டயச் சான்று பெற்றிருக்க வேண்டும்.விடுதி காப்பாளர் பணி : மேலும் துணை விடுதி காப்பாளர் பணியிடத்திற்கு இடைநிலைஆசிரியர் பட்டயச் சான்றுடன், பார்வையற்ற மாணவருக்கானருக்கான ஆசிரிய பயிற்சியில் இளநிலைப் பட்டயச் சான்று பெற்றிருக்க வேண்டும். அதேபோல், துணை விடுதிக் காப்பாளர் காலியிடத்திற்கு இடைநிலை ஆசிரியர் பட்டயச் சான்றுடன் செவித்திறனற்ற மாணவருக்கான ஆசிரிய பயிற்சியில் இளநிலை பட்டயச் சான்று பெற்றிருக்க வேண்டும் என்றார்.

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி
எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.

மற்ற அரசுப் பள்ளிகளுக்கு ஓர் முன் உதாரணமாகவும், பெருநகரங்களில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு இணையாகவும் செயல்பட்டு வருகிறது வடமணப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி.திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கத்தை அடுத்த வடமணப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது அரசுத் தொடக்கப் பள்ளி. 1926-இல்தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியில் தற்போது சுமார் 250 மாணவர்கள்பயின்று வருகின்றனர்.இந்தப் பள்ளியில் கடந்த சில ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்து காணப்பட்டது. மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க முயற்சியில் தலைமை ஆசிரியர் பொற்கொடி, ஆசிரியைகள் பூங்கொடி, ஆனந்தி, மலர்விழி, விஜயலட்சுமி, ரமணிபாய், அருணா ஆகியோர் ஒருங்கிணைப்போடு மாணவர்கள் சேர்க்கை இரண்டு ஆண்டுகளில் இரண்டு மடங்குக்கு மேல் அதிகரிக்கப்பட்டது. மேலும், இந்தக் கிராமத்தில் மாணவர்களின் வருகை கண்காணிக்கப்பட்டு பள்ளி செல்லா குழந்தைகளே இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டு உள்ளது.பெற்றோர், ஆசிரியர்கள் சந்திப்புக் கூட்டம் நடத்தப்பட்டு ஆசிரியர்கள் கூறிய பல்வேறு கல்வி சம்பந்தப்பட்ட ஆலோசனைகளின் பேரில், மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு பொருளுதவி செய்ததால், மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு ஆர்வமாக வரத் தொடங்கினர். மாணவர்கள் அனைவரும் படிக்கும் வகையில் வகுப்பறைகளில் நாற்காலிகள், எழுதும் மேஜைகள் பொருத்தப்பட்டன. அனைத்து வகுப்பறைகளும் வண்ணமயமாக அமைக்கப்பட்டன. பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் வகையில் கிராம கல்விக் குழு, பள்ளி மேலாண்மைக் குழு, கிராம மக்கள் ஒத்துழைப்போடு இலவசமாக எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டு, அதன் மூலம் கிராமப்புற மாணவர்கள் 70 பேர் ஆங்கில வழிக்கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.

மேலும், பெற்றோர் ஒத்துழைப்பால் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. மழலையர்களுக்கு விளையாட்டு வழிக் கல்வியை ஆசிரியர்கள் அளித்து வருவது பள்ளியின் மற்றொரு சிறப்பு அம்சமாகும். ஒழுக்கம், சுகாதாரம், பின்புதான் கல்வி என்ற கோட்பாடுடன் இங்கு கல்வி கற்பிக்கப்படுகிறது.பள்ளி மாணவர்களிடையே தலைமைப் பண்புகளை வளர்க்கும் விதமாக இறை வணக்கக் குழு, சுகாதாரக் குழு உள்ளிட்ட ஒன்பது குழுக்கள் அமைக்கப்பட்டு மாணவர்களிடையே நற்பண்புகள் வளர்க்கப்பட்டு வருகிறது.இறைவணக்கத்துடன் தொடங்கும் பள்ளியில் பிற்பகல் 12 மணியளவில் யோகா, தொடர்ந்து தியானப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.பிற்பகல் உணவு இடைவேளையின் போது அனைத்து மாணவர்களும் வரிசையாக நின்று "தன் சுத்தம் சுகாதாரம்' என்ற கோட்பாட்டில் சோப்பு கொண்டுகையை சுத்தம் செய்த பின்னர் சத்துணவை மாணவர்கள் உண்ணத் தொடங்குகின்றனர்.பாடங்கள் அரசு விதி முறைகளின் படியும், காணொலிக் கருவி மூலம் குறுந்தகடுகள் வாயிலாக பாடங்களுடன் பொது அறிவும் சேர்ந்து ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.அனைத்து மாணவர்களுக்கும் காய்ச்சிய குடிநீரையே பருகிட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. காலை, மாலை வேளைகளில் சிறுநீர் கழிக்கவும்,வயிற்று உபாதைகளுக்காக செல்லும் மாணவர்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் விளங்கி கை, கால்களில் சுத்தம் செய்து கொண்டு வகுப்பறைச் செல்லும் காட்சியை நேரில் காணமுடிகிறது.மாணவர்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் எழுத்துப் பயிற்சி, ஓவியப் பயிற்சி, பேசும் பயிற்சி, கணினி பயிற்சி, பன்முகத் திறன் வளர்த்தல் பயிற்சி, வாழ்க்கைக் கல்வி முறையில் நன்னெறிக் கதைகள், உடற்கல்வி, தியானம், யோகா ஆகியன பயிற்றுவிக்கப்படுகின்றன.

மாணவர்களின் படைப்புகளான ஓவியம், எழுத்துக்கள், தேசத் தலைவர்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள், வரலாற்றுப் படைப்புகள், மேப்புகள், விலங்குகள், தாவரங்கள், நாணயங்கள், எண்கள், தமிழ், ஆங்கில எழுத்துக்களின் படங்கள் அனைத்தும் ரசிக்கும் வகையில் மாணவர்களால்அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் அறிவியல் படைப்புகள் அனைத்தும் அறிவியல் ஆய்வக அறையில் காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.பல நூறு நூல்கள் கொண்ட நூலகமும் பள்ளியில் அமைக்கப்பட்டு உள்ளது.இந்த நூலகத்தில் 1-ஆம் வகுப்பு முதல் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இந்தப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.கணினியின் பயன்பாடு முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில் 3 முதல் 5-ஆம் வகுப்பு வரையில் கணினிப் பாடப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும், கணினியில் பெயின்டிங், டிராயிங், பவர் பாயின்ட் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.சிறந்த பள்ளியாக விளங்கி வருவதன் காரணமாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நூர்ஜகான், தொடக்கக் கல்வி அலுவலர்கள் இந்தப் பள்ளி ஆசிரியர்களைப் பாராட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மீன்வளத் துறையில் பணி:

மீன்வளத் துறையில் பணி: விண்ணப்பிக்க அழைப்பு
மீன்வளத் துறையில் புள்ளியியல் சேகரிப்பாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

மீன்வளத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் நிலைத்த வாழ்வாதாரத்துக்கான மீன்வள மேலாண்மைத் திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் மீன்வளம் தொடர்பான புள்ளி விவரங்களை சேகரிப்பதற்கு தாற்காலிகமாக புள்ளிவிவர சேகரிப்பு உதவியாளர் ஒருவர் ஓராண்டுக்குஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளார்.இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மீன்வள பட்டப்படிப்பு அல்லது கடல் உயிரியல் பட்டப்படிப்பு அல்லது விலங்கியல் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும், கணினியில் அடிப்படை அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.இப்பணியில் முன் அனுபவம் இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். 21 வயது முதல் 40 வயது வரையில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பல்வேறு மீனவ கிராமங்களுக்கு பயணம் சென்று மீன்வள விவரங்கள் சேகரிப்பதற்கான உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். மாத ஒப்பந்த ஊதியமாக ரூ.12 ஆயிரம் வழங்கப்படும்.எனவே தகுதியுள்ளவர்கள் தேவையான சான்றிதழ்களுடன் வரும் 29-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு மீன்வள துணை இயக்குநர் (மண்டலம்), எண்.1, ஸ்டேட்பாங்க் காலனி, செம்மண்டலம், கடலூர் என்ற முகவரியில் ஆஜராக வேண்டும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

டிச.,2ல் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்

டிச.,2ல் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்
எஸ்.பி.ஐ., வங்கியுடன் இணைந்துள்ள துணை வங்கிகளை நீக்கவும், அரசுவழிகாட்டுதல்படி கருணை அடிப்படையில் செய்யப்படும் பணி நியமனங்களைநீடிக்க வலியுறுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டிச.,2ல் நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தம் நடைபெறும் என, அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1,500 காலிப் பணியிடங்கள்: தள்ளாடுது கருவூலத்துறை

1,500 காலிப் பணியிடங்கள்: தள்ளாடுது கருவூலத்துறை
தமிழக கருவூல கணக்குத்துறையில் 1,500 பணியிடங்கள் காலியாக இருப்பதால் பணிகளை முடிக்க முடியாமல் ஊழியர்கள் தத்தளிக்கின்றனர்.தமிழகத்தில் 32 கருவூல அலுவலகங்கள், 229 சார்நிலை கருவூலங்கள் உள்ளன. இங்கு 5,186 பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

தற்போது 3,600 ஊழியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். கண்காணிப்பாளர், கணக்காளர், இளநிலை உதவியாளர், இரவு காவலர் பணியிடங்கள் பெரும்பான்மையாக காலியாக உள்ளன. தற்போதுஅவர்களுக்கு புதிய பென்ஷன் திட்டம், மருத்துவ காப்பீடு, 'இ பென்ஷன்' போன்ற பணிகள் கூடுதல் பணிகளாக வழங்கப்பட்டுள்ளன.புதிதாக சார்நிலை கருவூலங்கள் அனுமதிக்கப்பட்டாலும், அதற்குரிய பணியாளர்களை நியமிப்பதில்லை. அதேபோல் தாலுகா அலுவலகங்களுக்கு தகுந்த சார்நிலை கருவூலங்கள் இல்லை. இதனால் கருவூல ஊழியர்கள் பணிச்சுமையால் தத்தளிக்கின்றனர்.

கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்கத்தினர் கூறியதாவது: கணக்காயர் அலுவலகத்தில் இருந்து புதிய பென்ஷன் திட்டம் கருவூல கணக்குத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அதற்குரிய பணியிடங்கள் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு கருவூல அலுவலகத்திற்கும் ஒரு கண்காணிப்பாளர், 2 கணக்காளர் பணியிடங்கள் கூடுதலாக வழங்கினால் மட்டுமே பணியை முடிக்க முடியும். பென்ஷனர் எண்ணிககையும் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. பணியாளர்கள் அதிகரிக்காமல் பணியை குறித்த காலத்தில் முடிக்க அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். இதனால் மனஉளைச்சலில் உள்ளோம், என்றனர்.

'ஆன்லைனில்' ஆர்.டி.ஐ., மனு மத்திய தகவல் ஆணையர் தகவல்

'ஆன்லைனில்' ஆர்.டி.ஐ., மனு மத்திய தகவல் ஆணையர் தகவல்
''தகவல் அறியும் உரிமை சட்டப்படி, விபரங்கள் கோரும் மனுவையும், அதற்கான பதிலையும், 'ஆன்லைனில்' அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என, மத்திய தகவல்ஆணையர் யசோவர்த்தன் ஆசாத் கூறினார்.நெய்வேலி நிலக்கரி கழகமான, என்.எல்.சி., சார்பில், 'தகவல் அறியும் உரிமை சட்டம் - 2005' என்ற தலைப்பிலான கருத்தரங்கம், சென்னையில் நேற்று நடந்தது.

என்.எல்.சி., நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆச்சார்யா தலைமை வகித்தார்; தகவல் அதிகாரி ஸ்ரீதர் நன்றி கூறினார்.இதில், யசோவர்தன் ஆசாத் பேசியதாவது:தகவல்உரிமை சட்டத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 10 ஆண்டுகளில் பெருமளவு அதிகரித்துள்ளது. பிற நாடுகளும், இச்சட்டத்தை அமல்படுத்த முன்வந்துள்ளன. அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள்,அவற்றின் இணையதளங்களில், அரசின் திட்டங்கள், ஊழியர் விபரம், ஊதியம், சொத்துக்கள், திட்ட ஒதுக்கீடு, செலவினம் போன்ற தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.மொத்தம் உள்ள, 666 துறைகளை சேர்ந்த இணையதளங்களில், பெரும்பாலானவை மேம்படுத்தப்படுவது இல்லை. இதனால், தகவல் உரிமை சட்டத்தில், பொது மக்கள் கேள்வி கேட்கின்றனர். இப்படி, ஆண்டுக்கு,4.6 லட்சம் விண்ணப்பங்கள் வருகின்றன. இவற்றுக்கு, சரியான பதில்அளிக்காத நிலையில், மேல்முறையீடு செய்யப்படுகிறது. மேல்முறையீடு அதிகரிப்பதால், அவற்றை பைசல் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது.எனவே,துறை இணையதளங்களில், முழு விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்; அதன்மூலம், பொது மக்களின் கேள்விகளை குறைக்கலாம். ஏனோதானோ என பதில் அளிக்காமல், மக்கள் வரி பணத்தில் இயங்கும் துறைகள், தகவல் தருவது கடமை என, உணர வேண்டும்.தாமதமாக பதில் அளிப்பது, தகவல் மறுப்புக்கு சமம். எனவே, விரைவாக அளிக்க வேண்டும். அதற்கு, தகவல் அதிகாரிகள் முழுமையாக பயிற்சி பெற வேண்டும்; ஒவ்வொரு துறையிலும், அதற்கான ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட வேண்டும்.

மத்திய தகவல் ஆணைய உத்தரவுகள், உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை, தகவல் அதிகாரிகள் தெரிந்திருக்க வேண்டும். தகவல் கேட்டு வரும் மனுக்களில், 7.3 சதவீத மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. உரிய முறையில் அனுப்பப்படும் மனுக்களை, தள்ளுபடி செய்யக் கூடாது.தகவல் உரிமை சட்டப்படி, தபால் மூலம் மட்டுமே தற்போது, மனுக்கள் அனுப்பப்படுகின்றன. பதிலும், தபாலில் செல்வதால், தாமதம்ஏற்படுகிறது. இதை தவிர்க்க, ஆன்லைனில் தகவல் பரிமாற்றம் செய்ய ஏற்பாடு நடக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.

RK TODAY'S NEWS...

🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍
RK TODAY'S NEWS...
25:10:2015
📚📚📚📚📚📚📚📚📚
🍁மதுரையில் கற்பித்தலை கலகலப்பாக விரும்பும் ஆசிரியர்களுக்கான,
மூன்று நாட்கள் நடந்த 
நாடகப்பயிற்சி முகாம் இனிதே முடிந்தது.

🍁இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு குறித்த பரிசிலைனையில் தமிழக அரசு - புதிய திட்டம்

🍁TNPSC GROUP-2-GENERAL MATHS,SCIENCE(PRACTICS YOUR SKILL) -PART-4

🍁தமிழ்வழி பொறியியல் பட்டதாரிகளுக்கு குவியும் அரசு வேலைவாய்ப்புகள்

🍁கரூரில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க ரூ.229 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்வர் உத்தரவு

🍁ஆய்வக உதவியாளர் பணி 7 லட்சம் பேர் காத்திருப்பு

🍁அரசு பள்ளி ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல தடை

🍁2000 ஆயிரம் மாணவர்களுக்கு போட்டித்தேர்வு பயிற்சி

🍁21 வயதுக்குள்பட்டோருக்கு மதுபானங்கள் விற்கப்படாது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

🍁அரசு பஸ் முதல் பெண் டிரைவர் மாற்றுப்பணி தராததால் தவிப்பு:

🍁தேசிய கொடியில் சாதனைஉ.பி., மாநில அரசு முடிவு:

🍁சபரிமலை மண்டலப் பூஜை நவ. 16-இல் தொடக்கம்: ஜனவரி 12 வரை தரிசனத்துக்கான முன்பதிவு செய்யலாம்:

🍁தரம் உயர்த்தப்பட்ட 344 பள்ளிகளில் கட்டடங்கள் கட்டும் பணி தொடக்கம்

🍁நவ.16ம் தேதி முதல் 2ம் பருவ இடைத்தேர்வு துவக்கம்

🍁அரசு ஊழியர்களின் சம்பளத்தில் ரூ.6 ஆயிரம் குறைக்க பரிந்துரைத்த நிதித்துறையின் உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

🍁குரூப் - 2 ஏ: விண்ணப்ப தேதி நீட்டிக்கப்படுமா

🍁திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் பதவி உயர்வு கேட்ட மனுவை பரிசீலிக்க வேண்டும் டி.என்.பி.எஸ்.சி.க்கு, ஐகோர்ட்டு உத்தரவு

🍁பாடத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு! அரசுக்கு கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை

🍁ஆர்.கே. நகரில் ஐ.டி.ஐ.: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

🍁பார்வையிழந்த மாணவி சிகிச்சைக்காக தவிப்பு

🍁பள்ளி சான்றிதழில் ‘பகீர்’ மோசடி : போக்குவரத்து கழக ஊழியர் 13 பேர் அதிரடி பணிநீக்கம்
📚📚📚📚📚📚📚📚📚

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!