Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 26 October 2015

பள்ளிகளில் பழுதடைந்த சுவர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு

பள்ளிகளில் பழுதடைந்த சுவர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு

வட கிழக்குப் பருவமழை தொடங்க உள்ளதையடுத்து, பள்ளிகளில் உள்ள பழுதடைந்த சுவர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:- பருவ மழை தொடங்க உள்ளதையடுத்து, பள்ளி மாணவர்களின் பாதுகாப்பில் பள்ளிக் கல்வி அலுவலர்களும், தலைமையாசிரியர்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

பள்ளி வளாகத்தில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டிகள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர்த் தொட்டிகள் ஆகியன மூடப்பட்ட நிலையில் உள்ளனவா என உறுதி செய்ய வேண்டும். மழைக்காலங்களில் மாணவர்கள் மரங்களின் கீழ் ஒதுங்கக் கூடாது எனவும், இடி, மின்னல் ஆபத்து குறித்தும் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் உள்ள உயர் மின் அழுத்த மின் கம்பங்கள், அறுந்து தொங்கும் கம்பங்கள் இருந்தால் அவை உடனடியாக அகற்றப்பட வேண்டும். சிதிலமடைந்த கட்டடங்கள், சுவர்கள், அறிவியல் ஆய்வுக் கூடங்கள், துண்டித்த நிலையில் உள்ள மின்சார கம்பிகள் இல்லாதவாறு தலைமை ஆசிரியர்கள் அவ்வப்போது ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பள்ளிகளில் விழும் நிலையில் உள்ள மரங்கள், பழுதடைந்த சுவர்கள், வகுப்பறை, கழிவறை, சுற்றுச்சுவர்கள் இருந்தால் அவை உடனடியாக அகற்றப்பட வேண்டும். பள்ளி வளாகத்தில் கட்டடப் பணிகள், புதிய கட்டடங்கள் கட்டும் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு மாணவர்கள் செல்லத் தடை விதிக்கவும் பள்ளங்களைச் சுற்றிப் பாதுகாப்பான தடுப்பு அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி வளாகத்துக்குள் வரும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் தலைமையாசிரியர்களால் எடுக்கப்பட வேண்டும் என அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.

அறிவியல் எக்ஸ்பிரஸ்’

தமிழ்நாட்டில் 5 இடங்களுக்கு ‘அறிவியல் எக்ஸ்பிரஸ்’வருகிறது

அறிவியல் தொழில்நுட்பம், இயற்கை வளங்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பது தொடர்பானவிழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் இயக்கப்படும் “அறிவியல்எக்ஸ்பிரஸ்' ரயில் கடந்த 2007-ம் ஆண்டு முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த ஆண்டு தட்பவெப்ப நிலை மாற்றம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளது. தட்பவெப்ப நிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள், தடுக்கும் முறைகள், இயற்கையை பாதுகாப்பது தொடர்பாக கண்காட்சி, படங்கள் ஆகியவை ரயிலில் இடம்பெற்றுள்ளன.அறிவியல் எக்ஸ்பிரஸ் கடந்த 15-ம் தேதி புதுடெல்லியில் புறப்பட்டது.

20 மாநிலங்களில் சுமார் 20 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு பயணிக்கும் அறிவியல் எக்ஸ்பிரஸ், தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு மார்ச் 3-ம் தேதி வேலூர் வழியாக வந்து கும்பகோணம், ராமேஸ்வரம், புதுக்கோட்டை, திருநெல்வேலிஆகிய 5 இடங்களில் மொத்தம் 17 நாட்கள் நிறுத்தி வைக்கப் படும்.
-RK KALVI

மாணவர்களின் வாசித்தல் பயிற்சிக்கான செயல்பாட்டிற்கு உதவும் புத்தகங்கள்

மாணவர்களின் வாசித்தல் பயிற்சிக்கான செயல்பாட்டிற்கு உதவும் புத்தகங்கள்
📚📚📚📚📚📚📚📚📚
1. 7 தலை நகரம் (விகடன் பிரசுரம் )
2..கிறு கிறு வானம்
3. அக்கடா
4. சிரிக்கும் வகுப்பறை (வம்சி பதிப்பகம் )
5. நீள நாக்கு
6. தலையில்லாத பையன்
7. எனக்கு ஏன் கனவு வருது
8. லாலி பாலே
9. எழுதத் தெரிந்த புலி
10. காசுக்கள்ளன்
11. பம்பழாமபம்
12. கால் முளைத்த கதைகள்(உயிர்மை பதிப்பகம் )
13. சாக்ரடீஸின் சிவப்பு நூலகம் (உயிர்மை )
14. ஆலிஸின் அற்புத உலகம் (வம்சி )
15. 8கால் குதிரை
16. பட்டாம்பூச்சிகள் எங்கே (விஷ்ணு புரம் சரவணன் )
17. காணாமல் போன சொற்கள் (உதய சங்கர் )
18. மந்திர கிரீடம்
19. குட்டன் ஆடு
20. குவா...குவா...குஞ்சு வாத்து
21. ஜிமாவின் கைபேசி

((  சித்திரக்கதைகள் ))

22. பெர்டினன்
23. குட்டித்தாத்தா
24. மந்திர விதைகள்
25. அழகிய பூனை
-RK KALVI
📚📚📚📚📚📚📚📚📚

RK KALVI SIRAGUKAL-

✅✅✅✅✅✅✅✅✅
RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS
📚📚📚📚📚📚📚📚📚

📚ஆசிரியர்களுக்கு பொது மாறுதல்,பதவி உயர்வு கலந்தாய்வு

📚மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு விருதுகள்: நவம்பர் 12-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

📚நீர்நிலைகளோடு, கலையையும் காப்பாற்றும் முயற்சி: ஆறு, குளங்களைக் காக்க பொம்மலாட்டப் பிரச்சாரம் - ஊர் ஊராகச் செல்லும் கோவை ஆசிரியர்

📚ஆர்.கே.நகர் புதிய ஐடிஐ-ல் சேர நவம்பர் 11-க்குள் விண்ணப்பிக்கலாம்

📚11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு ஊக்கப் பயிற்சி திருவண்ணாமலையில் இன்று தொடக்கம்

📚புதிய பள்ளி தொடங்க விண்ணப்பிக்கலாம்

📚ஆசிரியர்களுக்கு ஒழுக்கம் கற்றுத்தர சிறப்பு பயிற்சி

📚லேப்- - டாப் பெற்ற மாணவர்களின் விவரங்களை கேட்ட கல்வித்துறை

📚சிறப்பு ஆசிரியர்கள் பணியிடம் நிரப்ப பதிவு மூப்பு பரிந்துரை

📚முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

📚மீன்வளத் துறையில் பணி: விண்ணப்பிக்க அழைப்பு

📚'ஆன்லைனில்' ஆர்.டி.ஐ., மனு மத்திய தகவல் ஆணையர் தகவல்

📚1,500 காலிப் பணியிடங்கள்: தள்ளாடுது கருவூலத்துறை

📚டிச.,2ல் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்

📚தலைமை ஆசிரியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட ஓய்வூதியப் பயன்களை வழங்க வலியுறுத்தல்

📚தமிழகத்தில் 1800 டுபாக்கூர் நர்சிங் பள்ளிகள் செயல்படுகின்றன.
📚📚📚📚📚📚📚📚📚

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!