Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 27 October 2015

"விழிப்புணர்வு வாரம்"

பள்ளிக்கல்வி - அனைத்து பள்ளிகள் மற்றும் பள்ளிக்கல்வி அலுவலகங்களில் 26/10/2015 முதல் 31/10/2015 வரை "விழிப்புணர்வு வாரம்" (VIGILANCE AWARENESS WEEK)கொண்டாட இயக்குநர் உத்தரவு

DSE.00468/E4/15
Dt.15.10.15
Dir instructed Observance of "Vigilance Awareness Week" 2015 in all Schools & Offices from 26.10.15 to 31.10.15 against Corruptìon.

பி.எப். தொடர்பான குறைகளை தீர்க்க நவ.11-ம் தேதி சிறப்பு முகாம்

பி.எப். தொடர்பான குறைகளை தீர்க்க நவ.11-ம் தேதி சிறப்பு முகாம்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொடர்பான புகார்கள் மற்றும் குறைகளை தீர்க்க வரும் நவம்பர் 11-ம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வரும் 31-ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில்வரும் நவம்பர் 11-ம் தேதி சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில், தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளின் வருங்கால வைப்பு நிதி தொடர்பாக நாள் கணக்கில் தீர்க்கப்படாமல் உள்ள புகார்கள் மற்றும் குறைகளுக்கு தீர்வு காணப்படும்.எனவே, இந்த சிறப்பு முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் வரும் 31-ம் தேதிக்குள் தங்களுடைய பெயர், வைப்புக் கணக்கு எண், புகார் குறித்த விவரம் உள்ளிட்ட விவரங்களை மேற்கண்ட அலுவலகத்தில் உள்ள மக்கள் தொடர்பு அதிகாரியிடம் பதிவு செய்துகொள்ள வேண்டும் என வருங்கால வைப்பு நிதி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-RK KALVI

பத்தாம் வகுப்பு தேர்வு முறையை ஏன் மாற்ற வேண்டும்?

பத்தாம் வகுப்பு தேர்வு முறையை ஏன் மாற்ற வேண்டும்?

அண்மையில் நடைபெற்ற காலாண்டுப் பொதுத்தேர்வில் 80%-க்கு குறைவாகதேர்ச்சி பெற்ற பள்ளி ஆசிரியர்களை மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநரே நேரில் சந்தித்து ஆய்வுக்கூட்டங்களை நடத்தி வருகிறார். 100% தேர்ச்சி என்பதுதான் அரசின் இலக்கு என்பதை வலியுறுத்தினார். அரசின் இந்த இலக்கை அடையவேண்டுமெனில் அலுவலர்கள் மேலிருந்து திட்டங்களைத் தீட்டுகிற போக்கை மாற்றிக்கொள்வது அவசியம்.

களத்திலுள்ள ஆசிரியர்களின் ஆலோசனைகள் கேட்கப்பட வேண்டும்; ஆய்வுக்கூட்டங்கள் என்பது அரசின் முடிவுகளை ஆசிரியர்கள் மீது திணிப்பதாக இல்லாமல், அவர்களின் கோரிக்கைகள் கேட்கப்பட்டு, அதிலுள்ள சாதக பாதகங்களை ஆராய்ந்து நடைமுறைப்படுத்திட வேண்டும்.

மாணவர்களின் தேர்ச்சி விழுக்காட்டை அதிகரிக்க வேண்டுமெனில், நடைமுறையிலுள்ள தேர்வு முறையில் மாற்றம் தேவை என்பது ஆசிரியர்களின் கருத்து.பள்ளியில் ஓர் ஆண்டு முழுவதும் கற்ற அறிவை மூன்று மணி நேரத்தில் மதிப்பிடுவது என்பதுதான் பொதுத்தேர்வு நடைமுறையாக உள்ளது. இது முழுமையான மதிப்பீடாக இருக்கமுடியாது என்பது கல்வியாளர்களின் கருத்து. அவர்களின் கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் சி.சி.இ. என்று சுருக்கமாக அறியப்படும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை.பள்ளிக் கல்வித்துறையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரைஇந்த மதிப்பீட்டு முறை தமிழகத்தில் பின்பற்றப்படுகிறது. மாணவர்களிடம்புதைந்து கிடக்கும் பல்வேறு வகையான திறமைகளை வெளிக்கொணர்வதற்கு இந்த மதிப்பீட்டு முறை பெரிதும் பயன்படுகிறது. நன்கு படம் வரையும் ஒரு மாணவர் தன் ஓவியத் திறமையைக் கொண்டு மதிப்பெண் பெறுகிறார். மரபுக் கலைகளில் ஆர்வமுடையவர்கள் தம் கலைத்திறனால் மதிப்பெண் பெறுகிறார்கள்.கைவினைக்கலை, சேவை, சுற்றுச்சூழல், விளையாட்டு, சாரணர் இயக்கும், இளம்செஞ்சிலுவைச் சங்கம், தேசிய பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றம் என அவரவர் ஆர்வத்திற்கேற்ப பாட இணைச்செயல்பாடுகளில் மதிப்பெண் பெற்று தன்னம்பிக்கையோடு கல்வி கற்கின்றனர்.

இந்த மதிப்பீடு முறை மாணவர்களிடமிருந்த தேர்வு பயத்தைப் போக்கியிருக்கிறது. எல்லா மாணவர்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அவர்களிடையே தனியாள் வேற்றுமைகள் உண்டு. இந்தப் புதிய மதிப்பீடுமுறை தனியாள் வேற்றுமைகளை கவனத்தில் கொள்வதாக இருப்பதால் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையை அளிப்பதாக உள்ளது. கல்விச் சுமையாக இல்லாமல் சுகமான ஒன்றாக மாறியுள்ளது.மேலும், மாணவர்களின் அறிவும் திறமையும் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு அவ்வப்போது மதிப்பிடப்படுகின்றன. பாட நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு பாடம் முடியும்போது, எஃப்.ஏ. எனப்படும் வளரறி மதிப்பீடுச் செயலபாடுகள் வாயிலாகவும், சிறு தேர்வுகள் மூலமும் மதிப்பீடு செய்யப்பட்டு அந்த மதிப்பீடுகள் தொகுக்கப்படுகின்றன.

அந்தப் பருவம் முடியும்போது அந்தப் பருவத்தில் கற்ற அனைத்துப் பாடங்களையும் எப்படி கற்றுள்ளனர் என்று தொகுத்தறிந்து கொள்வதற்காக தொகுத்தறி மதிப்பீடு செய்யப்படுகிறது. இவ்வாறாக மதிப்பிடுவது என்பது தொடர்ச்சியாக நடைபெறுகிறது. இதனால்தான் இது முழுமையான மதிப்பீடாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.இந்த மதிப்பீட்டு முறையில் ஒவ்வொரு பாடத்துக்கும் 100 மதிப்பெண் என்பது வளரறி மதிப்பீட்டுக்கு 40 மதிப்பெண் தொகுத்தறி மதிப்பீட்டுக்கு 60 மதிப்பெண் என்று இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றுள் வளரறி மதிப்பீடு என்பது இரு பகுதிகளாகபிரிக்கப்பட்டு ஒரு பகுதி செயல்பாடுகள் மூலமும் மற்றொரு பகுதி சிறு தேர்வுகள் மூலமும் மதிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் குறைந்ததுநான்கு மதிப்பீடுகள் உண்டு. ஒரு பருவத்தில் ஒரு மாணவர் குறைந்தது நான்கு செயல்பாடுகளும் நான்கு சிறு தேர்வுகளும் முடிக்க வேண்டும். ஒவ்வொன்றுக்கும் 10 மதிப்பெண்கள். ஆக மொத்தம் 40 மதிப்பெண்கள். ஒவ்வொன்றிலும் சிறந்த இரு மதிப்பீடுகள் கணக்கிடப்பட்டு மதிப்பெண் வழங்கப்படும்.

பருவம் முடிவில் 60 மதிப்பெண்ணுக்கான தொகுத்தறி தேர்வு நடைபெறும். இதில் மாணவர்களின் பிற திறமைகள் பாட இணைச்செயல்பாடுகள் கணக்கில் கொள்ளப்படுவதால் அனைவரும் சிறந்த மதிப்பெண் பெறுகின்றனர். அவர்களுக்குத் தன்னம்பிக்கை வளர்கிறது.இந்த மன நிலையோடு 9 ஆண்டுகள் கல்வி கற்ற ஒரு மாணவர் பத்தாம் வகுப்புக்கு வரும்போது அவரது மற்ற திறமைகளை கவனத்தில் கொள்ளாத வெறும்ஏட்டுக்கல்விக்கு மட்டுமே மதிப்பெண் அளிக்கப்படுகிறது. இந்தத் தேர்வுமுறை அவனிடமிருந்த தன்னம்பிக்கையை சீர்குலைத்து அவனிடம் தேர்வு குறித்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. அதனால் தேர்ச்சி விழுக்காடு குறைகிறது. தேர்வில் தோல்வி அடைந்த ஒரு சிலரே விடாமுயற்சியோடு மீண்டும் வெற்றி பெறுகின்றனர். அத்தோடு படிப்பை முடித்துக்கொள்வதே பலரின் வாடிக்கையாக உள்ளது.

பள்ளிக்கல்வியில் ஒன்பது ஆண்டுகள் ஒருவித மதிப்பீட்டு முறையைப் பின்பற்றிவிட்டு திடீரென 10-ஆம் வகுப்பில் வேறு ஒரு மதிப்பீட்டு முறைக்கு மாறுவது என்பது மாணவர்களுக்கு சுமையாக உள்ளது. அவர்கள் மனச்சோர்வுக்கு ஆளாகின்றனர். ஓர் ஆசிரியர் என்ற முறையில் இதிலுள்ள சிக்கல்களை நன்கு உணர முடிகிறது.எனவே, பள்ளிக்கல்வித் துறை பத்தாம் வகுப்புக்கும் மற்ற வகுப்புகளுக்கு உள்ளது போல மதிப்பீட்டு முறையை மாற்றிட வேண்டும். அல்லது அறிவியல் பாடத்திற்கு செய்முறைத்தேர்வுக்கு 25 மதிப்பெண்களும் எழுத்துத் தேர்வுக்கு 75 மதிப்பெண்களும் வழங்கியது போல் மற்ற பாடங்களுக்கும் செயல்படுத்தலாம். இதனால் அறிவியல் பாடத்தில் தோல்வி இல்லை என்னுமளவிற்கு வெற்றி பெறுவோர் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.

அதேமுறையைப் பின்பற்றி மொழிப்பாடங்களுக்கு வாய்மொழித்தேர்வுக்கு 25 எழுத்துதேர்வுக்கு 75 எனவும், கணக்கு, சமூக அறிவியல் பாடங்களுக்கு செய்முறைத் தேர்வுக்கு 25 எழுத்துத் தேர்வுக்கு 75 எனவும் மதிப்பெண் நிர்ணயம் செய்து தேர்வு முறையில் மாற்றங்களைக் கொண்டுவருவது காலத்தின் கட்டாயம்.தகவல் தொடர்புச் சாதனங்களின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும் வகையில் பாட நூல்களிலும் கற்பித்தல் முறைகளிலும் இந்த நூற்றாண்டுக்கேற்ற மாற்றங்களை கொண்டு வருவது எவ்வளவு அவசியமோ, அதே அளவு தேர்வுமுறையிலும் மாற்றங்களைக் கொண்டுவருவதும் அவசியம்.

- இரத்தின புகழேந்தி,கல்வி ஆர்வலர், தொடர்புக்கு
pugazhvdm@gmail.com

அரசு மருத்துவமனைகளில் 547 மருத்துவர்கள் பணி:

அரசு மருத்துவமனைகளில் 547 மருத்துவர்கள் பணி: ஆன்லைனில்விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 547 இடங்களுக்கு மருத்துவர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இந்த பணியிடங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் (MRB) மூலம் நிரப்பப்பட உள்ளன.

பணி: Assistant Surgeon

தகுதி:பொது மருத்துவம், பொது அறுவைச் சிகிச்சை, தடயஅறிவியல் மருத்துவம், முடநீக்கியல், குழந்தைகள் நலம், குழந்தைகள் அறுவைச் சிகச்சை, உளவியல், நரம்பியல், நரம்பியல் அறுவைச் சிகிச்சை, ரத்தநாள அறுவைச் சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை, இருதயவியல், இருதய அறுவைச் சிகிச்சை, கண் மருத்துவம், மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட 34 துறைகளில் மருத்துவ பட்டம், முதுகலை டிப்ளமோ, டிஎன்பி முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு:01.07.2015 தேதியின்படி 57க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400.

தேர்வு செய்யப்படும் முறை:எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.750. பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மற்ற பிரிவினர்களுக்கு ரூ.350.

விண்ணப்பிக்கும் முறை:http://www.mrb.tn.gov என்ற மருத்துவப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்.விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:16.11.2015

மேலும் விவரங்கள் அறிய http://www.mrb.tn.gov என்ற இணையதளத்தை பார்க்கவும்.

அரசு ஊழியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தல்

அரசு ஊழியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தல்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என ஆசிரியர் சங்க செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.பெரம்பலூரில், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் அவசர செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் காமராசு தலைமை வகித்தார்.மாநில செயலர் பிரேம்குமார், மாவட்டத் தலைவர் நாகமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்டத்தை பிளஸ்- 2 அரசு பொதுத்தேர்வில் மாநிலத்தில் 2 ஆம் இடத்தையும், எஸ்.எஸ்.எல்.சியில் மாநிலத்தில் 4 ஆம் இடத்தையும் பெறச்செய்ததோடு, மாநிலத்தில் முதன்மை மாவட்டமாக தேர்ச்சி விழுக்காட்டில் பெரம்பலூர் மாவட்டத்தைக் கொண்டுவர பல்வேறு ஆலோசனைகளை வழங்கும் ஆட்சியர் உள்ளிட்ட உயர்கல்வித்துறை அலுவலர்களை சங்கத்தின் சார்பில் பாராட்டுவது. போலி சங்கங்களின் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.

ஆசிரியர்கள் சங்க கூட்டுப் போராட்டத்தில் பங்கேற்காத பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அச்சுறுத்தல் ஏற்படுத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில், உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சங்க மாவட்டத்தலைவர் வேலு, மாவட்ட அமைப்பாளர் கு. தேசிங்குராஜன், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில அமைப்பாளர் கலியபெருமாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தீபாவளி சிறப்பு பஸ்கள்: 28ம் தேதி அறிவிப்பு

தீபாவளி சிறப்பு பஸ்கள்: 28ம் தேதி அறிவிப்பு
சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம், 28ம் தேதி நடக்கவுள்ளது. அன்றைய தினம் சிறப்பு பஸ்கள் குறித்த அறிவிப்புவெளியாகும்.

தீபாவளி பண்டிகை, நவ., 10ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக, அரசு விரைவு பஸ்களில், 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு துவங்கியது. பண்டிகை செவ்வாய்கிழமைவருவதால், பெரும்பாலானோர், 6ம் தேதி, வெள்ளிக்கிழமை இரவு முதலே சொந்த ஊர் புறப்பட்டு செல்கின்றனர்.தமிழகத்தில் ஓடும், 1,037 அரசு விரைவு பஸ்களில், முக்கிய நகரங்களில் இருந்து, தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களிலும் முன்பதிவு முடிந்து விட்டது.நவ., 6ம் தேதி துவங்கி,9ம் தேதி வரையிலான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்து விட்டன. இதே போல, 11 மற்றும், 12ம் தேதிகளில், நகரங்களுக்கு திரும்புவதற்கான முன்பதிவும் முடிந்து விட்டது. ஏற்கனவே ரயில்களிலும் முன்பதிவு முடிந்து விட்டதால், சிறப்பு பஸ்களை நம்பியே பயணிகள் உள்ளனர்.கடந்தாண்டு, தீபாவளி பண்டிகைக்கு, 10,499 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்தாண்டு, 11,540 பஸ்கள் இயக்கப்படும் என அதிகாரிகள் கூறி இருந்தனர். இந்நிலையில், தீபாவளிக்கு சிறப்பு பஸ்களை இயக்குவது தொடர்பாக, நேற்று, கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில், சென்னை மாநகர், விழுப்புரம், அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.இதுகுறித்து, போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்து, 28ம் தேதி அமைச்சர் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அன்றைய தினம் சிறப்பு பஸ்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும். இதற்கான முன்னோட்டமாக, பஸ் நிலையத்தில் ஆய்வு செய்கின்றனர்' என்றார்.

சிறப்பு ரயில்கள் அறிவிப்பு எப்போது?

சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவில், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மற்றும் கோவை, சேலம் மார்க்கத்தில் செல்லும் அனைத்து ரயில்களிலும், முன்பதிவு முடிந்து விட்டது. தீபாவளிக்கு போதிய சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி கூறியுள்ளார். பண்டிகைக்கு, 15 நாட்களே உள்ள நிலையில், சிறப்புரயில்களை காலம் தாழ்த்தாமல் அறிவிப்பது அவசியம்.

பருவ மழை ஆபத்து,முன்னெச்சரிக்கை நடவடிக்கை-பள்ளிகளுக்குஇயக்குனர் கண்ணப்பன் சுற்றறிக்கை

பருவ மழை ஆபத்து,முன்னெச்சரிக்கை நடவடிக்கை-பள்ளிகளுக்குஇயக்குனர் கண்ணப்பன் சுற்றறிக்கை
பருவமழை ஆபத்துக்களில் மாணவர்கள் சிக்காமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு, பள்ளிகளுக்கு இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.பள்ளிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் மாணவர்களின் பாதுகாப்பில் ஆய்வு அலுவலர்கள், ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்பள்ளி வளாகத்தில் நீர் தேங்கும் கிணறு, பள்ளம், கழிவுநீர் தொட்டியை மூடிவைக்க வேண்டும்மழையின் போது மரங்களின் கீழ் ஒதுங்க வேண்டாம்; இடி, மின்னல்களால் ஆபத்து ஏற்படும். விழும் நிலையிலுள்ள மரங்களை, உடனே அப்புறப்படுத்த வேண்டும் பள்ளிக்கு வரும் வழியில், வெள்ளம் வரும் ஆறு, குளங்கள் இருந்தால், அந்த வழியைத் தவிர்க்க வேண்டும்; ஆறு, ஏரி, குளங்களில் குளிப்பதைத் தவிர்க்கவும்பழுதான கட்டடம், அறிவியல் ஆய்வகங்கள், கணினி அறையிலுள்ள அறுந்த ஒயர்களை அப்புறப்படுத்த, தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் மின் சாதனங்களை இயக்க, மாணவர்களைப் பயன்படுத்தக்கூடாது .பள்ளி மேற்கூரைகளில் பழுது இல்லாமல் ஆசிரியர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்பள்ளி வளாகம் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில், அறுந்த மின்னழுத்தக் கம்பிகளை அகற்ற வேண்டும்; மாணவர்கள் அவற்றைத் தொடக்கூடாது மழையால் வேகமாக பரவும், சிக்-குன் குனியா, டெங்கு நோய்களை தவிர்க்க, மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

'இத்தகைய அறிவுரைகளை, பள்ளிகள் எப்படி மாணவரிடையே பிரகடனப்படுத்தப் போகின்றன என்கிற வழிமுறை குறித்து, தெளிவான விளக்கம் தர வேண்டும்' என்ற தொடர் கண்காணிப்புத் தகவலை, இயக்குனர்கேட்டுப் பெறவில்லை. அப்படிக் கேட்டுப் பெற்று, அது சரியாக நடைமுறைப்படுத்தப் படுகிறதா என்பதையும் கண்காணித்தால் மட்டுமே, இந்த அறிவுரைகளின் பயன், மாணவர்களை சென்றடையும்; ஆபத்துக்களையும்தவிர்க்க முடியும்.

மத்திய அரசின் குரூப் பி,சி,டி, பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு ரத்து: பிரதமர் மோடி அறிவிப்பு

மத்திய அரசின் குரூப் பி,சி,டி, பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு ரத்து: பிரதமர் மோடி அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது பல்வேறு கூட்டங்களில் பேசியநரேந்திர மோடி மத்திய அரசின் கீழ்நிலை பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வை ரத்து செய்தாக வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.இந்த நேர்முகத் தேர்வுக்கு பரிந்துரை செய்யவேண்டி, ஏழை, எளிய மக்கள் பல இடைத்தரகர்களை நம்பி ஏமாந்து வருவதாகவும், தங்கள் மகனுக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக விதவைத் தாய்மார்களும் பணத்துக் காக சிரமப்பட வேண்டியுள்ளது.

எனவே, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசின் குரூப் பி,சி,டி, பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தாமலேயே ஆட்களை நியமிக்க புதிய விதிமுறைகள் வகுக்கப்படும் எனவும் அவர் வாக்குறுதியளித்திருந்தார்.இந்நிலையில், மத்தியில் ஐக்கிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான ஆட்சி அமைந்து, பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி, ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியின் வாயிலாக மாதந்தோறும் நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார்.

நேற்று காலை 11 மணியளவில் ஒலிபரப்பான மன் கி பாத் நிகழ்ச்சியில்உரையாற்றிய மோடி, வரும் ஜனவரி மாதம் முதல் தேதியில் இருந்து மத்திய அரசின் குரூப் பி,சி,டி, பணியிடங்களுக்கு மத்திய அரசின் குரூப் பி,சி,டி, பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு முறை ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளார்.இந்த நேர்முகத் தேர்வு முறை ஊழலுக்கு வழிவகுப்பதாக இருப்ப தால், இடைத்தர கர்கள் ஏழை மக்களை கொள்ளையடித்து வருகின்றனர். சிறிய பணியிடங்களுக்கு எல்லாம் இதைப்போன்ற நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டுமா? என நான் சிந்தித்துப் பார்த்தேன். ஓரிரு நிமிடங்கள் நடத்தப்படும் இதுபோன்ற நேர்முகத் தேர்வுகளில் உளவியல்நிபுணர்கள் யாரும் கலந்து கொண்டதாக நான் கேள்விப்பட்டதே கிடையாது.

எனவே, 1.1.2016 முதல் மத்திய அரசின் குரூப் பி,சி,டி, பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு முறை ரத்து செய்யப்படும் என பிரதமர் மோடி தனது இன்றைய உரையில் குறிப்பிட்டுள்ளார்.இதேபோல், மாநில அரசுகளிலும் இளநிலை பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வு முறையை ரத்து செய்யுமாறு அனைத்து மாநில அரசு களுக்கும் மத்திய மந்திரி ஜிதேந்திரா சிங் சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார் என்பது, குறிப்பிடத்தக்கது

சிவில் சர்வீஸ் தேர்வு :அட்டவணை வெளியீடு

சிவில் சர்வீஸ் தேர்வு :அட்டவணை வெளியீடு
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் பிரதானத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.ஐ.ஏ.எஸ்., -- ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 24 வகை உயர் பதவிகளில், 1,129 காலியிடங்களை நிரப்ப, ஆகஸ்ட், 23ல், சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு நடந்தது. இதன் முடிவு கடந்த வாரம்வெளியானது. தேர்வு எழுதிய, 4.5 லட்சம் பேரில், 15 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

தமிழகத்தில், 500 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில், தேர்வு பெற்றவர்களுக்கான பிரதானத் தேர்வு, டிச., 18ம் தேதி துவங்குகிறது.டிச., 18ல் காலையில் கட்டுரைத் தாள், பிற்பகலில் ஆங்கிலம்; டிச., 19ல் பொதுப்பாடம் ஒன்று மற்றும் இரண்டு; டிச., 21ல் பொதுப்பாடம் மூன்று மற்றும் நான்கு தாள்களுக்கு தேர்வு நடக்கிறது. டிச., 22ல் காலையில், இந்திய மொழிகளுக்கான தேர்வு எழுத வேண்டும். டிச., 23ல் தேர்வுத் தாள் 1 மற்றும் 2 ஆகிய தேர்வுகள் நடக்கின்றன

பகுதி நேர ஆசிரியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருக்க முடிவு?

பகுதி நேர ஆசிரியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருக்க முடிவு?
வரும் டிசம்பர் மாதத்திற்குள் பணி நிரந்தரம் குறித்து அரசு அறிவிப்புவெளியிடவில்லையென்றால் குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருப்பது என தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் மாநில செயற்குழுக் கூட்டம் கடலுாரில் நடந்தது. மாவட்டச் செயலர் ஆதி கேசவன் தலைமை தாங்கினார்.மாநிலத் தலைவர் முருகதாஸ், நிறுவனத் தலைவர் சுந்தர் கணேஷ் பெரியசாமி முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு எஸ்.சி., - எஸ்.டி., ஆசிரியர் மற்றும் அலுவலர் நல சங்கத் தலைவர் அழகப்பன், ஜான் பிரிட்டோ, வெங்கடேசன் பங்கேற்றனர். கூட்டத்தில், வரும் டிசம்பர் மாதத்திற்குள் பணி நிரந்தரம் குறித்து அறிவிப்பு வரவில்லையென்றால் 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்களும் முதல் கட்டமாக குடும்பத்தோடு உண்ணாவிரத போராட்டமும், அடுத்த கட்டமாக தொடர் போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் பதவி உயர்வு மனுவை பரிசீலிக்க உத்தரவு

திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் பதவி உயர்வு மனுவை பரிசீலிக்க உத்தரவு
திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் பதவி உயர்வு கேட்ட மனுவைபரிசீலிக்க வேண்டும் டி.என்.பி.எஸ்.சி.க்கு, ஐகோர்ட்டு உத்தரவுதிறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு கேட்டு வழங்கப்பட்ட மனுவை 6 வாரத்துக்குள் பரிசீலிக்கவேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளருக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், வெங்கடேசன் உள்பட 4 பேர் ஒரு மனுவை தாக்கல் செய்தார்கள். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

பட்டப்படிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (டி.என்.பி.எஸ்.சி.யில்.) 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். நாங்கள் 10–ம் வகுப்பு கல்வி தகுதி அடிப்படையில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தோம். கடந்த 1996–ம் ஆண்டு தமிழக அரசு ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், ‘எங்களுக்கு தலைமை செயலகம் ஊழியர்களுக்கு இணையான சம்பளம் உள்ளிட்டவைகள் வழங்கப்படும் என்றும்,அதற்காக 5 ஆண்டுக்குள் ஏதாவது ஒரு பட்டம் பெற்றிருக்கவேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. இதனால், நாங்கள் திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றோம்.
பட்டம் செல்லும்

இந்த நிலையில், தமிழக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்த துறை செயலாளர் கடந்த 2009–ம் ஆண்டு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், 10–ம் வகுப்பு, 12–ம் வகுப்பு அதன்பின்னர் பட்டப்படிப்பு படித்த இளநிலை பட்டப்படிப்பு மட்டுமே செல்லும் என்று கூறியுள்ளார். ஆனால், 12–ம் வகுப்பு படிக்காமல் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பெற்ற பட்டம் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே, இந்த உத்தரவின்படி எங்களுக்கு பதவி உயர்வு வழங்கவேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளரிடம் மனு கொடுத்தோம். இதுவரை பரிசீலிக்கப்படவில்லை.இவ்வாறு அவர் கூறியிருந்தனர்.

பரிசீலிக்கவேண்டும்

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.சத்தியநாராயணன், மனுதாரர்களின் கோரிக்கை மனுவை தகுதி அடிப்படையில் பரிசீலித்து, தகுந்த உத்தரவை 6 வாரத்துக்குள் பிறப்பிக்கவேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!