Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 29 October 2015

பிள்ளைகளிடம் சேமிப்புப் பழக்கம்: பெற்றோர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவுரை

பிள்ளைகளிடம் சேமிப்புப் பழக்கம்: பெற்றோர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவுரை
பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட உலக சிக்கன நாள் செய்தியில் கூறியிருப்பதாவது:

மக்களிடையே சிக்கன உணர்வை ஏற்படுத்தி, சேமிக்கும் பழக்கத்தை வளர்க்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30-ம் தேதி உலக சிக்கன நாளாக கொண்டாடப்படுகிறது.'இன்றைய சேமிப்பு நாளைய வாழ்வின் பாதுகாப்பு' என்பதற்கேற்ப எதிர்கால வாழ்க்கை ஒளிமயமாக திகழ பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே சேமிப்பின் அவசியத்தை எடுத்துரைக்க வேண்டும். சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்.

இதன் மூலம் சிறுகச் சிறுக சேமித்த தொகை பெருந்தொகையாகி அவசர காலங்களில் ஏற்படும் எதிர்பாரா செலவினங்களை மேற்கொள்ள உதவும்.மக்கள் தங்கள் கடின உழைப்பால் ஈட்டிய செல்வத்தை தங்கள் குடும்பத்திற்கு பயன்படும் வகையில் சிறு சேமிப்புத்திட்டங்களில் முதலீடு செய்தால், அந்த தொகைக்கு உத்தரவாதமும் எதிர்கால வாழக்கைக்கு பாதுகாப்பும் கிடைக்கும்.'சிறுகக் கட்டி பெருக வாழ்' என்பதை உணர்ந்து தமிழக மக்கள் அனைவரும் தங்கள்வாழ்வு நலம்பெற அருகில் உள்ள அஞ்சலகங்களில் தொடர் சேமிப்பு கணக்கை தொடங்க வேண்டும்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

சித்தா படிப்பில் 99 கூடுதல் இடம்

சித்தா படிப்பில் 99 கூடுதல் இடம்
சித்த மருத்துவ படிப்புகளுக்கு, கூடுதலாக, 99 இடங்கள் கிடைத்ததால், கலந்தாய்வு இரவு வரை நீடித்தது.தமிழகத்தில், ஆறு அரசு மருத்துவ கல்லுாரி கள், 21 சுயநிதி கல்லுாரிகளில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, 1,099இந்திய மருத்துவ படிப்பு இடங்கள் உள்ளன.இதற்கான கலந்தாய்வு, 25 முதல் நடந்து வருகிறது.

மூன்று நாட்களில், 1,020 இடங்கள் நிரம்பின; 79 இடங்கள் மீதம் இருந்தன.சுப்ரீம் கோர்ட்அனுமதியின்படி, 99 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு, 178 இடங்களுக்கு, நேற்று கலந்தாய்வு நடந்தது.சில இடங்கள் மறைக்கப்பட்டதாக சலசலப்பு ஏற்பட்டதால், குழப்பம் ஏற்பட்டது. 1,500 பேர் வரை குவிந்ததால், கலந்தாய்வு இரவு, 10:00 மணிக்கும் மேல் நீடித்தது.

தீபாவளி முதல் டெலிபோன் அழைப்புகளை செல்போனிலும் பெறலாம்

தீபாவளி முதல் டெலிபோன் அழைப்புகளை செல்போனிலும் பெறலாம்
பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய வசதியை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி வாடிக்கையாளர் ஒருவர் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் டெலிபோன், செல்போன் இணைப்புகளை வைத்திருக்க வேண்டும். அவர்கள், இரவு நேரத்தில் வீடு அல்லது அலுவலகத்துக்கு வரும் டெலிபோன் அழைப்புகளை செல்போனுக்கு வரும்படி மாற்றிக் கொள்ளலாம்.

பரிசோதனை முயற்சியாக இந்த வசதியை தீபாவளி முதல் அறிமுகம் செய்ய உள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த புதிய வசதியை பெற கட்டணம் ஏதும்வசூலிக்கப்படமாட்டாது’ என்றனர்.

பள்ளி குழந்தைகளுக்கு 'ஷூ': நடிகர் விஷால் அறிவிப்பு

பள்ளி குழந்தைகளுக்கு 'ஷூ': நடிகர் விஷால் அறிவிப்பு
ஒரு, 'ஷூ' வாங்கினால், 1,000 'ஷூ'க்களை, குழந்தைகளுக்கு தானம் செய்ய முடிவு எடுத்திருப்பதாக, நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். சென்னை, புதுப்பேட்டை, புனித அந்தோணியார் நடுநிலைப் பள்ளியில், விஷால் நற்பணி மன்றம் சார்பில், நலத்திட்ட உதவி வழங்கும் விழா, நேற்று முன்தினம் நடந்தது.

நடிகர் விஷால், இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாம் சார்பில் பூங்கோதை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.விஷால் பேசியதாவது:எல்லா பள்ளி குழந்தைகளுக்கும், புத்தகம், சீருடையைப் போல், ஷூவும், சாக்சும் மிகவும் முக்கியம். மாணவர்கள் மீது பெற்றோர் மட்டுமல்ல, பொதுமக்களாகிய நாங்களும் நம்பிக்கை வைத்துள்ளோம்.

யாராவது உதவி என்று கேட்டால், நிச்சயமாக உதவ வேண்டும்; அதன் பலன், நிச்சயம் நன்மையை தரும்.படத்தில் நடிக்கும்போது, 3,000 ரூபாயில், ஷூ வாங்குவது உண்டு. படப்பிடிப்பு முடிந்ததும், அது எங்கே போகிறது என்பது எனக்கு தெரியாது; ஒரு படத்துக்காக, லட்சக்கணக்கில் செலவு செய்வது உண்டு. இனி ஒவ்வொரு முறை, ஷூ வாங்கும் போதும், 1,000 ஷூக்களை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். இதை நான் மட்டுமல்ல; மற்றவர்களும் செய்யலாம்.இவ்வாறு விஷால் பேசினார்.

தகுதி அடிப்படையில் தான் வாய்ப்புகள்: உயர்கல்வியில் இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்ய வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு கருத்து

தகுதி அடிப்படையில் தான் வாய்ப்புகள்: உயர்கல்வியில் இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்ய வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு கருத்து
உயர்கல்வி துறையில் இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்து தகுதி அடிப்படையில் வாய்ப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்தது.

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள்

உயர்கல்வியில் இட ஒதுக்கீடு முறையை அனுமதிக்க வேண்டும் என்று ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.இந்த மனுக்களின் மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் பி.சி.பந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:–

இட ஒதுக்கீடு ஆதிக்கம்

கடந்த 68 ஆண்டுகளுக்கும் மேலாக இட ஒதுக்கீடு முறையில் எந்த வகையான மாற்றமும் செய்யப்படவில்லை. தகுதியின் மீது இட ஒதுக்கீடு ஆதிக்கம் செலுத்துகிறது. இது உயர்கல்வியின் தரத்தில் சிக்கலை ஏற்படுத்தும்.எனவே தேசத்தின் நலனை கருத்தில் கொண்டும், உயர் கல்வித்துறையின் தரத்தை உயர்த்தும் நோக்கிலும் இட ஒதுக்கீடு முறையை நீக்கி விட்டு தகுதி அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். இதுதொடர்பாக எந்தவித தாமதமும் இன்றி மத்திய–மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஒத்திவைப்பு

ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் ஏற்கனவே ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு அமலில் இருப்பதால் அதற்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க முடியாது. அதே நேரம் தமிழ்நாட்டில் உயர்கல்வியில் இட ஒதுக்கீடு முறையை கொண்டு வருவதற்கு அனுமதி கோரும் மனு மீதான விசாரணை நவம்பர் 4–ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

சட்டசபை தேர்தல் பணி துவக்கம் கல்வி துறைக்கு அவசர கடிதம்

சட்டசபை தேர்தல் பணி துவக்கம் கல்வி துறைக்கு அவசர கடிதம்
தமிழக சட்டசபை தேர்தல் பணிகளை, தேர்தல் கமிஷன் துவங்கியுள்ளது. அனைத்து கல்வி நிறுவனங்களும், பள்ளிகளும், தேர்தல் பணியாற்ற உள்ள பணியாளர் பட்டியலைஅனுப்ப வேண்டும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா உத்தரவிட்டு உள்ளார்.

அனைத்து பள்ளிக்கல்வி அலுவலகங்கள், கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கு, அவர் அனுப்பியுள்ள கடிதம்: தமிழகத்தில், சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், தேர்தல் பணிகளுக்கான ஊழியர்கள் மற்றும் பணியாளர்களை தேர்வு செய்யும் பணி துவங்கியுள்ளது. எனவே, தங்கள் கல்வி நிறுவனங்களில், தேர்தல் பணியாற்ற தகுதியுள்ள ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும்அதிகாரிகளின் முழு விவரங்களை, தங்கள் நிறுவன தலைமை அதிகாரிகள் மூலம், மாவட்ட தேர்தல் துறைக்கு அனுப்ப வேண்டும். அதற்கான விண்ணப்பத்தையும், கல்விநிறுவனங்கள் பூர்த்தி செய்து, விரைவில் விவரங்கள் தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது,வாக்காளர் பட்டியல் சரிப்பார்ப்பு, ஓட்டுச்சாவடி அமைத்தல் உள்ளிட்ட பல பணிகளில், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முதற்கட்டமாக, அதன் விவரங்களை மட்டும், தேர்தல் துறைக்கு அனுப்ப உள்ளோம் என்றனர்.

ஆசிரியர்கள் கோரிக்கையை விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - பெற்றோர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்

ஆசிரியர்கள் கோரிக்கையை விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - பெற்றோர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்
'காலவரையற்ற போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதால், அரசு ஆசிரியர்கள் கோரிக்கையை விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஒருங்கிணைந்த பெற்றோர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகம் முழுவதும், ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ) சார்பில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது. இறுதியாக, அக்., 8ம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், அரசு தரப்பில் போதிய நடவடிக்கைகள் இல்லாததால், காலவரையற்ற போராட்டத்தில்ஈடுபட, ஆசிரியர்கள் திட்டமிட்டுள்ளனர். இதனால், பெற்றோர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கணபதி அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் லிங்கம் கூறுகையில், ''பள்ளி வேலைநாட்களில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவது, மாணவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிவிடும். ஆசிரியர்கள் போராட்டத்தால் மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். உடனடியாக, அரசு தலையிட்டு இச்சூழலை மாற்ற வேண்டும்,'' என்றார்.

மதுரையில் நடந்த ஆசிரியர்களுக்கான நாடகப்பயிற்சி பற்றிய செய்தி தி இந்து ஆங்கில நாளிதழ்

Theatre workshop for school teachers conducted by ‘Kalakala Vagupparai’ brought to fore the need to include theatrics as a teaching tool
A group of 20 school teachers sit cross-legged in a circle as theatre artist N. Rajkumar stands in the middle and enacts the character of a teacher in classroom. “Close your eyes and listen carefully,” he utters like a typical primary school teacher.

He drops a coin and asks the participants to crawl and pick it up by guessing the direction of the coin from the sound. “Games such as these prepare people for theatre. It is important to introduce games in a classroom to break the ice and bring students out of their cocoons,” says Rajkumar.

He wonders why classrooms follow a strict seating arrangement. “Teachers should experiment with the setup and layout of a classroom. It helps in bridging the student-teacher gap.”

“Theatre is not just about acting on a stage. It’s an inseparable part of life. We are acting every now and then – including our expressions, voice modulations and body language. The idea of theatre is to make an individual sensitive to the surroundings and as expressive as possible,” says K. Suresh, Post Graduate Teacher at a Government School. “And there is nothing better than sowing the seeds of expression in young minds. Only then they will grow up to be responsible citizens.”

‘Kalakala Vagupparai’, a forum for school teachers was formed by like-minded teachers R. Siva and Rathna Vijayan to conduct innovative workshops on teaching methodologies.

“The idea was to bring together teachers who really want to make a difference to the education system. The new crop of young teachers are thinking out of the box and we want to encourage and give them opportunities to experiment,” says Siva.

The workshop exposed participants to some well-known theatre personalities in the city and ‘Chippi Chung’, a children’s drama was staged by Nigazh Theatre.

K. Saravanan, a primary school teacher says. “Theatre in class paves way for the overall personality development of students and helps them hone skills. I have seen introvert children becoming good orators in school assemblies after the introduction of theatre activities.”

Internationally acclaimed films on teaching like ‘Beyond the blackboard’ and ‘School of Life’ were also screened for the teachers at the workshop.

எஸ்.ஆர்.எம்., பல்கலை நுழைவுத்தேர்வு அறிவிப்பு

எஸ்.ஆர்.எம்., பல்கலை நுழைவுத்தேர்வு அறிவிப்பு
இன்ஜி., மற்றும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வை, எஸ்.ஆர்.எம்., பல்கலை அறிவித்துள்ளது.இதுகுறித்து பல்கலை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலையில், 2016ம் ஆண்டு படிப்பில் சேர, 'ஆன்லைன்' நுழைவுத் தேர்வு ஏப்ரலில் நடக்கிறது.
எஸ்.ஆர்.எம்., - ஜே.இ.இ.இ., தேர்வு, ஏப்., 19 முதல், 25ம் தேதி வரை; எஸ்.ஆர்.எம்., 'கீட்' மற்றும் 'கேட்' தேர்வு ஏப்., 23, 24ல் துவங்குகின்றன.இதற்கு மாணவர் பதிவு அக்., 19ல் துவங்கியுள்ளது; மார்ச், 15ல் முடிகிறது. தேர்வு பிரிவுக்கு, மார்ச், 26 முதல், 30ம் தேதி வரை பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு, www.srmuniv.ac.in இணையதளம், admissions.india@srmuniv.ac.inமெயில் மற்றும் 044 - 2745 5510, 4743 7500 போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வினா வங்கி புத்தகம் விற்பனை தாமதம்

வினா வங்கி புத்தகம் விற்பனை தாமதம்
பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு வினாத்தாளில் மாற்றம் வரவுள்ளதால், வினா வங்கி விற்பனை தாமதமாகியுள்ளது.பள்ளி பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, நடப்பாண்டு பாடத்துடன், முந்தைய ஐந்து ஆண்டு பொதுத் தேர்வு மற்றும் தனித்தேர்வு வினாத்தாள்களுக்கான விடைகளும் கற்றுத் தரப்படும்.

இதற்காக, வினாத்தாள் வங்கி புத்தகம் மற்றும் கணித ஆசிரியர்களின் சிறப்பு தயாரிப்பான, 'கம் புக்' என்ற முக்கிய கணித வினா புத்தகம், பள்ளி கல்வித் துறையின் பெற்றோர், ஆசிரியர் கழகம் மூலம் விற்பனை செய்யப்படும்.ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் முதல் வாரத்தில், விற்பனை துவங்கும். ஆனால், இந்தஆண்டு, பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புவினாத்தாளில், புதிய கேள்விகள் இடம்பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, வினா வங்கி புத்தக விற்பனையும் இன்னும் துவங்கவில்லை. அனைத்து பள்ளிகளிலும் முழு அளவில் பாடங்களை முடிக்கும் வரை, வினா வங்கி விற்பனையை நிறுத்தி வைக்க, கல்வித்துறைமுடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

குறைந்தது எம்.எட். சேர்க்கை: தேதியை நீட்டிக்கும் கல்லூரிகள்

குறைந்தது எம்.எட். சேர்க்கை: தேதியை நீட்டிக்கும் கல்லூரிகள்
முதுநிலை ஆசிரியர் கல்வியியல் படிப்பில் (எம்.எட்.) சேர்க்கை குறைந்ததைத் தொடர்ந்து, படிப்புக்கு விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்கும் நிலைக்கு கல்லூரிகள் தள்ளப்பட்டுள்ளன.தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) புதிய வழிகாட்டுதலின்படி, பி.எட்., எம்.எட். படிப்புகளின் படிப்புக் காலம் நிகழாண்டு முதல் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுவரை ஓராண்டாக இருந்த படிப்பு தற்போது இரண்டு ஆண்டுகளாக உயர்ந்ததால் மாணவர் சேர்க்கை இந்தஆண்டு குறைந்தது.ஒவ்வொரு ஆண்டும், அரசு, அரசு உதவிபெறும் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். இடங்கள் முழுவதும் நிரம்பிவிடும் நிலையில், 2015-16 கல்வியாண்டு கலந்தாய்வு முடிவில் 100 இடங்களுக்கு மேல் சேர்க்கை நடைபெறாமல் காலியாக இருந்தன.இதுபோல் சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் சேர்க்கை நடைபெறவில்லை எனத் தகவல்கள் வெளியாகின. இதுபோல, எம்.எட்.படிப்பிலும் சேர்க்கை வெகுவாகக் குறைந்துள்ளது. பல கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்திலேயே மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக கல்லூரி முதல்வர்கள் தெரிவிக்கின்றனர்.பி.எட். கலந்தாய்வு நடத்திய சென்னை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில், மொத்தமுள்ள 50 எம்.எட். இடங்களில் 20 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். இதனால், வருகிற 30-ஆம் தேதியோடு முடிக்கப்பட இருந்த எம்.எட். சேர்க்கையை, இப்போது நவம்பர் 6-ஆம் தேதி வரை கல்லூரி நிர்வாகம் நீட்டித்துள்ளது.

இதுபோல் மேலும் சில அரசுக் கல்லூரிகளும் எம்.எட். படிப்புக்கான சேர்க்கைத் தேதியை நீட்டித்துள்ளன.இதுகுறித்து ஆசிரியர் கல்வியியல் கல்லூரி முதல்வர்கள் கூறியது:மாணவர் சேர்க்கை குறைந்ததற்கு படிப்புக் காலம் உயர்த்தப்பட்டதே காரணம். இந்த விவகாரம் தொடர்பாக நவம்பர் 2-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பிக்க உள்ள தீர்ப்புக்காக காத்திருக்கிறோம் என்றனர்.

இந்த ஆண்டு 450 பேர் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு

இந்த ஆண்டு 450 பேர் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு
இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் 450 பேருக்கு பட்டதாரி ஆசிரியர்களாக இந்த ஆண்டு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.மாநிலம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல் செய்யப்பட்டனர். இதையடுத்து, அவர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வுதிங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடத்தப்பட்டது.

இதில் மாவட்டத்துக்குள் 1,310 பட்டதாரி ஆசிரியர்களும், மாவட்டம் விட்டு மாவட்டம் 555 பேரும் இடமாறுதல் பெற்றனர்.இதையடுத்து, இப்போது 900-க்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் 450 இடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.இதற்கான ஆன்-லைன் பதவி உயர்வு கலந்தாய்வு அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாட்ஸ்அப்பில் அனுப்பும் மெசேஜ்களின் ரகசியத்துக்கு பாதுகாப்பு இல்லையா?

வாட்ஸ்அப்பில் அனுப்பும் மெசேஜ்களின் ரகசியத்துக்கு பாதுகாப்பு இல்லையா?

செக்கோஸ்லாவாகியா நாட்டின் ப்ர்னோ தொழில்நுட்ப பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் மூலமாக வாட்ஸ்அப்பில் ரகசியமான முறையில் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் குறிப்புக்கள் எங்கேயோ உள்ள அதன் கணிப்பொறிகளில் பதிவு செய்யப்படும் என்கிற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ்அப் நமது அலைபேசி எண்ணுடன், இதன் அழைப்புகளையும் பதிவு செய்து தமது கணிப்பொறிகளில் சேமித்துக் கொள்கின்றது. ஆகவே, இது ஹேக்கர்களின் கைகளில் சிக்கினால் நமது ரகசியம் எளிதில் வெளியே கசியலாம் என அச்சுறுத்தும் செய்தி தற்போது வெளியாகியுள்ளது.இந்தக் கணிப்பொறிகள் பாதுகாப்பு மிகுந்ததாகத்தான் இருக்கும் என்றாலும், இது ஒருவேளை ஹேக்கிங் செய்யப்பட்டால், நம்மைப் பற்றிய விவரங்கள் வெளியேறாமல் இருக்க ஆண்ட்ராய்டு போன்களிலிருந்து வாட்ஸ்அப் சர்வர்களில் சேமிக்கப்படும்போது, ரகசிய மொழியாக மாற்றி பாதுகாக்க ஒரு பிரத்யேக டூலை இந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

ஆகவே, இந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த சாதனத்துடன், முழு நெட்வொர்க் டிராபிக்கும் தேவை எனவும் இந்த ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.எனவே இப்போதைக்கு வாட்ஸ்அப் குறிப்புகள் பத்திரமாகவே உள்ளது. இதுதவிர இருக்கும் பல்வேறு சமூக தளங்களையும் ஆய்வு செய்தால்தான் அதன் நிலை தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது

உலகிலேயே முதன் முறையாக ரூ.999-க்கு ஸ்மார்ட்போன்

உலகிலேயே முதன் முறையாக ரூ.999-க்கு ஸ்மார்ட்போன்: இந்தியாவில் அறிமுகம்

உலகிலேயே விலை குறைந்த ஸ்மார்ட்போன் வருகிற டிசம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரூ.999-க்கு விற்பனை செய்யப்படவுள்ள இந்த ஸ்மார்ட்போனை அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும், கனடாவின் பிரபல மொபைல் மற்றும் டேப்லட் நிறுவனமான டேட்டா வைண்ட் நிறுவனமும் இணைந்துவெளியிட உள்ளது.லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் ரிலையன்ஸ் நிறுவனம் வழங்கும் ஆஃப்பர்களுடன் மட்டும் வெளிவருகிறது. மற்ற சாதாரண என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன்களை போலவே இதிலும், பேஸ்புக், வாட்ஸ்ஆப், இமெயில் வசதிகள் இருக்கும். முதல் ஒரு ஆண்டுக்கு பேஸ்புக், வாட்ஸ்ஆப் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.எனினும், 2ஜி நெட்வொர்க் மட்டுமே இந்த போனில் பதிவு செய்ய முடியும்.வரும் டிசம்பர் 28-ம் தேதி ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய் அம்பானியின் பிறந்த நாள் அன்று இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS 29-10-2015

🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS
29-10-2015
📚📚📚📚📚📚📚📚📚
📚நேற்று மதுரை உயர்நீதிமன்றத்தில் SGT to BT promotion கொடுப்பதற்கு முன் BRTE to BT CONVERSION நடத்த கோரி தடை உத்தரவுபெற தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்ககு வந்தது.இதில் அரசு தரப்பில் 4 வாரத்திற்குள் 500 BRTE to BTconversion நடத்த அரசு ஆணை விரைவில் வெளியிடப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

📚நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிமுதலாம்ஆண்டு நிறைவு பேச்சு போட்டியில்தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிமாணவி வெற்றி

📚SG TO BT பதவி உயர்வு கலந்தாய்வு 30/10/2015 அன்று நடைபெறும் - காலி பணியிட விவரங்கள் வெளியீடு - இயக்குநர் செயல்முறைகள்

📚வாட்ஸ்அப்பில் அனுப்பும் மெசேஜ்களின் ரகசியத்துக்கு பாதுகாப்பு இல்லையா?

📚30/10/2015 அன்று நடைபெறும் SG TO BT பதவி உயர்வு கலந்தாய்வு - விடுபட்ட தகுதிவாய்ந்த ஆசிரியர்களின் பெயர் சேர்த்து திருத்திய

📚PROMOTION PANEL வெளியீடு

📚Seventh Pay Commission Likely To Allow Work From Home For Disabled, Women Employees

📚உலகிலேயே முதன் முறையாக ரூ.999-க்கு ஸ்மார்ட்போன்: இந்தியாவில் அறிமுகம்

📚TET - ஆசிரியர் தகுதி தேர்வின் மூலம் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரிய வரிசை எண் அடிப்படையில் முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்க வேண்டும் - விதிகளை நடைமுறைப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

📚பள்ளிகளில் மாணவர்களை கொண்டு மின் சாதனங்களை இயக்கக் கூடாது: கல்வித்துறை உத்தரவு

📚மாணவர்களுக்கு நல் ஒழுக்கத்தை கற்பிக்க ஆசிரியர்களுக்கு புத்தகங்கள்; ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம் ஏற்பாடு

📚தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: சென்னை வானிலை மையம் அறிவிப்பு

📚G.O Ms : 169 - மாண்புமிகு முதல்வர் அவர்களின் அறிவிப்பு - துவக்க/நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் வைப்பு நிதி (TPF) கணக்குகள் மாநில கணக்க்காயயருக்கு மாற்றம் - - அரசாணை வெளியீடு

📚Tamil University Admission Notification B.Ed Admission Programme 2016:

📚ஆர்.கே.நகர் கலைக் கல்லூரி இன்று திறப்பு?

📚2500 அரசுப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: முதல்வர் தகவல்

📚குரூப்-2 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

📚கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர்கள்தற்செயல் விடுப்பு எடுக்க வற்புறுத்தல்

📚சிறப்பு ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு

📚ONLINE- ல் வாக்காளர் பட்டியலில் தங்களது வாக்காளர் அடையாள அட்டையின் விவரங்களை சரி பார்த்து கொள்ள வழிமுறைகள்

📚வாக்காளர் பெயர் சேர்ப்பு பணி எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல்

📚சென்னை பல்கலையில் 'நெட்' தேர்வு பயிற்சி

📚குறைவாக மதிப்பெண் பெறும் மாணவர்கள் நலனில் ஆசிரியர்கள் அதிக அக்கறை கொள்ள வேண்டும்-பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்
ச. கண்ணப்பன்.
📚📚📚📚📚📚📚📚📚

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!