Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 1 November 2015

பொதுத்துறை ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் அறிவிப்பு

பொதுத்துறை ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் அறிவிப்பு
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தொழிலாளர்களின் முன்னேற்றமே நாட்டின் பொருளாதா வளர்ச்சியை முழுமை அடைய செய்யும். உற்பத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் தொழிலாளர் பங்கு முக்கியத்துவம் ஆகும். தொழிலார்களின் பணிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு பொதுத்துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு போனஸ் , கருணைத்தொகை வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.இதன்படி மின்சார வாரியம், அரசு போக்குவரத்து கழகம் , நுகர் பொருள் வாணிப கழகம், அரசு ரப்பர் கழகம் , தமிழ்நாடு வன தோட்ட கழகம், தேயிலை தோட்ட கழகம் , கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் , தமிழ்நாடு பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் இணையம், ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுள்ள ஊழியர்களுக்கு 8.33 போனசும், 11 .67 சதவீத கருணைத்தொகையும் சேர்த்து 20 சதவீத போனஸ் வழங்கப்படும்.

தமிழ்நாடு வாணிப கழக ஊழியர்கள், லாபம் ஈட்டும் கூட்டுறவு சங்கம், வீட்டு வசதி வாரியம் தமிழ்நாடு குடி நீர் வடிகால் வாரியம் சென்னை குடிநீர் , கழிவு நீரகற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் , உள்ளிட்ட 3 லட்சத்து 76 ஆயிரத்து 464 பேர் பயன் அடைவர். இதன்மூலம் அரசுக்கு 242 . 41 கோடி செலவாகும்.மின் வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ 2 ஆயிரமும், நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு ரூ 1500 , மாவட்ட கூட்டுறவு மற்றும் தொடக்க கூட்டுறவு பணியாளர்களுக்கு ரூ . 1500 ம் போனசாக வழங்கப்படும்.இதில் 8.33% போனசாகவும், 11.67% கருணைத்தொகையாகவும் வழங்கப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ONLINE- ல் வாக்காளர் பட்டியலில் தங்களது வாக்காளர் அடையாள அட்டையின் விவரங்களை சரி பார்த்து கொள்ள வழிமுறைகள்

ONLINE- ல் வாக்காளர் பட்டியலில் தங்களது வாக்காளர் அடையாள அட்டையின் விவரங்களை சரி பார்த்து கொள்ள வழிமுறைகள்
உங்களது

செல்லிடப்பேசியிலும் கூட பார்க்கலாம்

*www.elections.tn.gov.in/EPICSEARCH/search.aspx
என்ற இணைய தள முகவரிக்கு செல்லவும்.

*.உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவிடவும்,
உதாரணம்-TN/08/0429043

*.தேடலை சொடுக்கவும்.

*.உங்கள் விவரங்கள் மற்றும் வாக்குச்சாவடி எண் இதில் குறிப்பிடப் பட்டிருக்கும்.

*.பிறகு வாக்காளர் அடையாள அட்டை தேடல் மூலம் பெறப்பட்ட வாக்குச் சாவடி எண்ணில், உங்கள் தெரு இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து , அந்த வாக்குச் சாவடி வாக்காளர் பட்டியலை பதிவிறக்கம் செய்து , உங்கள் தொடர் எண்ணை அறியலாம் .

*.தபால் வாக்கு செலுத்த பாகம் எண் மற்றும் தொடர் எண் அவசியம்.

*.தேர்தல் பணிக்கான படிவத்திலும் இந்த விவரங்கள் கேட்கப் பட்டுள்ளது.
📚📚📚📚📚📚📚📚📚

நவம்பர் 2015 ~ முக்கிய நாட்கள்(பொது & கல்வித்துறை

நவம்பர் 2015 ~ முக்கிய நாட்கள்(பொது & கல்வித்துறை)
RK KALVI

01 மைசூர் மாகாணம் கருநாடக மாநிலமான நாள்புதுச்சேரி மாநில விடுதலை நாள்

02 பன்னாட்டு ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றத் தண்டனை ஒழிப்பு நாள்கல்லறைத் திருநாள் (RH)இடைநிலை ஆசிரியர்களுக்கான (TET) 5 நாள் அறிமுகப் பயிற்சி

03 அமெர்த்தியா சென் பிறந்த நாள

05அக்பர் ஹூமாயூனை வென்று டெல்லி சுல்தானானார்.பட்டதாரி ஆசியர்களுக்கான 2 நாள் (DIET) பயிற்சி

06பன்னாட்டு போர் & ஆயுதச் சண்டைகளிலிருந்து சூழலியல் சுரண்டலை தற்காக்கும் நாள்.

07குழந்தைகள் பாதுகாப்பு நாள்.ஆரம்பநிலை ஆசிரியர்களுக்கான குறுவளப் பயிற்சி - அறிவியல் பரிசோதனைகள்

10சமாதானம் & வளர்ச்சிக்கான உலக அறிவியல் நாள்தீபாவளி - அரசு விடுமுறை

11இந்திய கல்வி நாள்(மவுலானா அபுல்கலாம் ஆசாத் பிறந்த தினம்)தீபாவளி நோன்பு (RH)

12உலக நுரையீரல் ஒவ்வாமை நாள்பள்ளி மாணவர்களுக்கான கலை இலக்கியப் போட்டிகள்

14உலக நீரிழிவு நாள்இந்திய குழந்தைகள் நாள்(ஜவஹர்லால் நேரு பிறந்த நாள்)உயர் ஆரம்பநிலை ஆசிரியர்களுக்கான குறுவளப் பயிற்சி - போட்டித் தேர்வுத் திறன் மேம்பாடு

15உலக சாலை விபத்துகளில் பலியானோர் நினைவு நாள்சார்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்ட நாள்

16பன்னாட்டு சகிப்புத் தன்மை நாள்பட்டதாரி ஆசிரியர்களுக்கான (TET) 5 நாள் அறிமுகப் பயிற்சி

17உலக குறைப்பிரசவ விழிப்புணர்வு நாள்

19உலக தத்துவ நாள்உலகக் கழிவறை நாள்இந்திய ஒருமைப்பாட்டு நாள்(இந்திராகாந்தி பிறந்த நாள்)

20உலக குழந்தைகள் நாள்உலக திருநங்கைகள் நாள்பள்ளி ஆண்டு விழா

21உலக தொலைக்காட்சி நாள்உலக ஹலோ நாள்ஆரம்பநிலை ஆசிரியர்களுக்கான குறுவளப் பயிற்சி (உத்தேசம்)

23பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் பயிற்சி (உத்தேசம்)

24அருந்ததிராய் பிறந்த நாள்

25பன்னாட்டு பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு நாள்குருனாநக் பிறந்த நாள் (RH)

26இந்திய அரசியலமைப்பு நாள்இந்திய சட்ட நாள்

27பள்ளி விளையாட்டு விழா

29பன்னாட்டு பாலசுதீனியர் ஒற்றுமை நாள்கலைவானர் N.S.கிருஷ்ணன் பிறந்த நாள்

30வாழ்விற்கான நகரங்கள் நாள்
www.rkkalvisiragukal.blogspot.com

12 கல்லூரிகளுக்கு 'நாக்' அங்கீகாரம்

12 கல்லூரிகளுக்கு 'நாக்' அங்கீகாரம்
மத்திய நிதியுதவி பெறும் வகையில், 12 தமிழக கல்லுாரிகளுக்கு, 'நாக்' அங்கீகாரம் வழங்கப்பட உள்ளது.பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி.,யின் நிதி மற்றும் சலுகைகளை பெற, 'நாக்' எனப்படும் தேசிய தர அங்கீகார நிறுவனத்தின் தகுதி சான்றிதழ் பெற வேண்டும்.

கல்லுாரிகளின் உள் கட்டமைப்பு, மாணவர் - ஆசிரியர் விகிதம், பாடப்பிரிவுகள், தேர்ச்சி, நுாலகம் என, ஏழு வகை வசதிகளின் படி, 'நாக்' அங்கீகாரம் தரப்படுகிறது.இந்த கல்வி ஆண்டில், 12 தமிழக கல்லுாரிகள் உட்பட, நாடு முழுவதும், 146 கல்லுாரிகளுக்கு அங்கீகாரம் தர, மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.

அதன்படி சென்னையில் உள்ள, ராணிமேரி, காயிதேமில்லத் (ஆண்கள்), திருத்தங்கல் நாடார் கல்லுாரிகள் மற்றும் சத்தியபாமா அறிவியல் தொழில்நுட்பப் பல்கலை; மேல்மருவத்துார் ஆதிபராசக்தி பல் மருத்துவ கல்லுாரி; மதுரை விவேகானந்தா, உதகை அரசு ஆர்ட்ஸ், செய்யார் இந்தோ அமெரிக்கன், கோவை ஸ்ரீராமகிருஷ்ணா (பெண்கள்) கல்லுாரிகள்; நாமக்கல் ஞானமணி தொழில்நுட்ப கல்லுாரி, விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லுாரி, ஈரோடு நந்தா பிசியோதெரபி கல்லுாரி ஆகிய வற்றுக்கு, நாக் அந்தஸ்துகிடைக்கிறது

திருக்குறளை கொரிய மொழியில் வெளியிடும் பணியை பொங்கலுக்குள் முடிக்க வேண்டும்

திருக்குறளை கொரிய மொழியில் வெளியிடும் பணியை பொங்கலுக்குள் முடிக்க வேண்டும் ஜெயலலிதா உத்தரவு
திருக்குறளை கொரிய மொழியில் வெளியிடும் பணியை பொங்கலுக்குள் முடிக்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மொழி பெயர்ப்பு

கடந்த செப்டம்பர் மாதம் 29-ந்தேதி முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை தாக்கல் செய்து பேசும்போது, “தமிழ் மொழிக்கும், கொரிய மொழிக்கும் இடையே உள்ள தொடர்பின் அடிப்படையிலும், திருக்குறளை கொரிய மொழியில் மொழிபெயர்க்கவேண்டும் என்ற கொரிய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையிலும், கொரியாவில் தமிழர்களும், தமிழகத்தில் கொரியர்களும் வாழ்ந்து வருவதை கருதியும் பார்போற்றும் உலக பொதுமறையாம் திருக்குறளை கொரிய மொழியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கென ரூ.36 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் ஓரடியில் உலக மக்களுக்கேற்ற எளிய அறநெறிக் கருத்துக்களை கொண்ட தமிழ் மொழியின்அறநெறிக் கருவூலமான ஆத்திச்சூடியை சீனம் மற்றும் அரபு மொழிகளில்மொழிபெயர்த்து வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.

தமிழ் வளர்ச்சித்துறை

இந்த அறிவிப்பை வெளியிட்ட அடுத்த நாள் முதலே தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் மு.ராசாராம் தலைமையில் அதிகாரிகள் வேகமாக பணியை தொடங்கிவிட்டனர். திருக்குறள் சீனம், அரபு மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் வெளியிடப்பட்டுவிட்டது. 2 மொழிகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொழி பெயர்ப்பு நூல்கள் அச்சிடப்பட்டு சீனாவுக்கும், அரபு நாடுகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுவிட்டன.இதுமட்டும் அல்லாமல், அந்த நாடுகளில் உள்ள நூலகங்களில், இந்த நூல்களை வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தற்போது பாரதிதாசன் கவிதை நூல்கள் அரபு, சீன மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இது போல திருக்குறளை கொரிய மொழியில் மொழி பெயர்க்கவும், ஆத்திச்சூடியை அரபு, சீன மொழிகளில் மொழி பெயர்க்கவும் பணிகள் தொடங்கிவிட்டன.

பொங்கலுக்குள்...

தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் மு.ராசாராம் தலைமையிலும், சென்னையில் வாழும் கொரிய நாட்டை சேர்ந்த தமிழ் வல்லுனர் யாங், பெண் வல்லுனர் அருணா சுபா உள்பட 6 பேர்கள் கொண்ட குழு இந்த பணியை செய்து வருகிறது. இவர்கள் அனைவரும் ஆங்கிலம், கொரியா மற்றும் தமிழ் ஆகிய மும்மொழிகளையும் நன்கு கற்றறிந்தவர்கள். ஆத்திச்சூடியை அரபு மொழியில், மொழிபெயர்க்கும் பணியை உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.இதுபோல ஆத்திச்சூடியை சீன மொழியில் மொழி பெயர்க்க டாக்டர் யூகி தலைமையில் தைவான் நாட்டை சேர்ந்த நிபுணர் குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பொங்கலுக்குள் மொழி பெயர்ப்பு பணிகளை முடிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். திருவள்ளுவர் தினத்துக்குள் முடிக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கொரிய நாட்டு தூதரகம், தமிழ்நாட்டில் வாழும் கொரியர்களுக்கு தமிழை கற்பது எப்படி என்று ஒரு நூலை வெளியிட்டுள்ளது.

6,500 பணிகளுக்கு இன்று தேர்வு

6,500 பணிகளுக்கு இன்று தேர்வு
மத்திய அரசில், தபால் பிரிவு உதவியாளர், தகவல் பதிவாளர் (டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்) மற்றும் கீழ்நிலை கோட்ட எழுத்தர் ஆகிய பதவிகளுக்கு, 6,578 இடங்கள் காலியாக உள்ளன.

இந்த இடங்களை நிரப்ப, பிளஸ் 2 பாட அளவில் போட்டித் தேர்வு நவ.,1, 15 மற்றும், 22 ஆகிய தேதிகளில், மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சிமற்றும் திருநெல்வேலி மற்றும் புதுவையிலும் தேர்வு நடக்கிறது

தேர்வா - தேர்தலா என்பதில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நெருக்கடி

தேர்வா - தேர்தலா என்பதில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நெருக்கடி
தேர்தல் வருவதால், பாடங்களை விரைவில் முடிக்குமாறு, பள்ளி கல்வித் துறையும்; தேர்வு வருவதால், விரிவாக பாடங்களை நடத்துமாறு, தேர்வுத் துறையும் உத்தரவிட்டு உள்ளதால், ஆசிரியர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவங்க, 4 மாதங்களே உள்ளன. இந்த ஆண்டு தேர்வும், தேர்ச்சியும் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மாற்றம்

மாணவர்கள் புரிந்து படித்து, சிந்தித்து எழுதுவதை சோதிக்கும் வகையில், வினாத்தாள் தயாரிக்க உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.எனவே, மாணவர்கள் வழக்கமான, கேள்வி - பதிலை மட்டும் மனப்பாடம் செய்யாமல், பாடங்களை விரிவாக, முழுமையாக படிக்கும் விதமாக, பாடம்நடத்த வேண்டும் என, ஆசிரியர்களுக்கு தேர்வுத் துறைஅறிவுறுத்தி உள்ளது. அதேபோல், 2016 ஏப்ரலில், சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், ஜனவரியில் இருந்தே ஆசிரியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடவேண்டி உள்ளது; அதற்கான, பட்டியல் தயாரிக்கப்படுகிறது. எனவே, தேர்தல் பணி இருப்பதால், பாடங்களை சீக்கிரம் முடித்து, 'ரிவிஷன்'துவங்க வேண்டும் என, ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இரண்டு பக்க நெருக்கடிக்கு, அரசு ஆசிரியர்கள்ஆளாகிஉள்ளனர். தேர்வை கவனிப்பதா; தேர்தல் வேலை பார்ப்பதா என, குழப்பம் அடைந்துள்ளனர். இதில், தனியார் பள்ளிகளுக்கு, எந்த நெருக்கடியும் இல்லாததால், விடுமுறை கூட விடாமல், பாடங்களை நடத்தி முடித்து விட்டனர். தற்போது, இரண்டாவது முறையாக, பாடங்களை மீண்டும் நடத்துகின்றனர்.

குழப்பம்:

இதுகுறித்து, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:பாடங்களை புரிந்து படிக்கின்றனரா என அறியும் வகையில், கேள்வித்தாள் தயாரிப்பது, வரவேற்கத்தக்கது. அதற்கேற்ப மாணவர்களைதயார் செய்வதில், ஆசிரியர்களுக்கு சிரமம் இல்லை. ஆனால், தேர்தல் பணிக்கு பட்டியல் கேட்டு, ஆசிரியர்களை நச்சரிப்பது தான் கஷ்டமாகஉள்ளது. தேர்தல் வருவது தெரிந்தும், இந்த ஆண்டு ஆசிரியர்இடமாறுதல் கலந்தாய்வை, பள்ளி கல்வித்துறை செயலர், தாமதமாக நடத்தியுள்ளார். பணியிட மாறுதல் பெற்ற ஆசிரியர்கள், இப்போது தான் புதிய பள்ளிகளில், பாடம் நடத்த துவங்கி உள்ளனர். இரு மாதங்களுக்கு முன், ஒரு ஆசிரியர்; தற்போது, புதிய ஆசிரியர் என, மாணவர்களும் குழப்பத்தில் உள்ளனர். எனவே, தேர்தல் பணிக்கு, இப்போதே நெருக்கடிதருவதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

8ம் வகுப்பு படித்த 859 பேருக்கு வேலை

8ம் வகுப்பு படித்த 859 பேருக்கு வேலை

கால்நடை துறையில், புதிதாக, 859 கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இப்பணிக்கு மனு செய்வோர், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; 2015 ஜூலை 1ம் தேதி, 18 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும்.

இதற்கான மனுக்கள், மண்டல இணை இயக்குனர் அல்லது கோட்ட உதவி இயக்குனர் அலுவலகங்களில் கிடைக்கும்;தமிழக அரசு இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம். மனுக்களை, 11ம் தேதி வரை பெறலாம்; சமர்ப்பிப்பதற்கும், அதுவே கடைசி தேதி

சேமிப்பு கிடங்குகளில் 100 பேர் நியமிக்க முடிவு

சேமிப்பு கிடங்குகளில் 100 பேர் நியமிக்க முடிவு
தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம், 6.50 லட்சம் டன் கொள்ளளவு உடைய, 55 சேமிப்பு கிடங்குகளை நிர்வகித்து வருகிறது. இந்தக் கிடங்குகளை, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம், டாஸ்மாக், தமிழ்நாடு பாடநுால் கழகம், இந்திய உணவு கழகம், வருவாய் துறை, கூட்டுறவு சங்கங்கள், வாடகைக்கு பயன்படுத்தி வருகின்றன.

தற்போது, சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில், உதவியாளர், மேலாளர் உட்பட, 250க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.இதையடுத்து, இளநிலை உதவியாளர், 70; அலுவலக உதவியாளர், 25; டிரைவர், 5 என, மொத்தம், 100 பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசுமுடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு, நவம்பர் முதல் வாரத்தில்வெளியாகலாம்.

ஆன்லைனில்' காப்பியடித்து இனி பிஎச்.டி., வாங்க முடியாது

ஆன்லைனில்' காப்பியடித்து இனி பிஎச்.டி., வாங்க முடியாது
'ஆன்லைனில்' காப்பியடித்து, பல்கலைகளில், பிஎச்.டி., பெறும் முறைக்கு முற்றுப்புள்ளி வருகிறது. சென்னை பல்கலையில், இதற்கான புதிய சாப்ட்வேர், அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.நாடு முழுவதும், மின்னணு ஆளுமையை பலப்படுத்த, மத்திய, மாநில அரசுத் துறைகள் முயற்சிக்கின்றன.

உயர் கல்வி மற்றும் பள்ளிக்கல்வியிலும், மின்னணு ஆளுமை மற்றும் கணினி வழி பயிற்சியை கொண்டு வர, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை உத்தரவிட்டு உள்ளது.

இதையாட்டி, 'இன்பிலிப்நெட்' என்ற பெயரில், தகவல் மற்றும் நுாலக இணைப்பு மையம் சார்பில், அனைத்து கல்லுாரி மற்றும் பல்கலைகளின் புத்தகங்கள், பிஎச்.டி., ஆய்வுக் கட்டுரைகள், உயர் கல்வி தொடர்பான புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள்,http://www.inflibnet.ac.in/என்ற இணைய தளத்தில் இணைக்கப்படுகின்றன.இந்த தளம் மூலம், இனி வரும் காலங்களில், பிஎச்.டி., ஆய்வு கட்டுரைகளை சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. 300 கல்வி நிறுவனங்களின், 15 ஆயிரம் பிஎச்.டி., கட்டுரைகள் மற்றும், 50 கல்வி வெளியீட்டு நிறுவனங்களின் புத்தகங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.கடந்த சில ஆண்டுகளாக, பிஎச்.டி., ஆராய்ச்சி கட்டுரைகளில், முந்தைய கட்டுரைகளை காப்பியடித்து, புதிய கட்டுரைகள் சமர்ப்பிக்கும் பழக்கம் இருந்து வருகிறது.இதுகுறித்து, பல்கலைகள் சார்பில், விசாரணை நடந்து பல கட்டுரைகள் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளன.இந்நிலையில், இணைய தளம் மூலம், இனி,பிஎச்.டி., கட்டுரைகளை கண்டுபிடிக்க பல்கலைகளுக்கு, பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் சென்னை பல்கலை யில், இந்த திட்டம், அறிமுகமானது. சென்னை பல்கலை கட்டுப்பாட்டிலுள்ள, 120 கல்லுாரிகளின் பேராசிரியர்களுக்கு, போலி பிஎச்.டி., கட்டுரைகளை கண்டறிவது குறித்து, பயிற்சி அளிக்கப்படுகிறது. எனவே, இனி, சென்னை பல்கலையில் கட்டுரை சமர்ப்பிப்போர் முந்தைய கட்டுரைகளை காப்பியடித்தால் அதை எளிதில் கண்டுபிடித்து விட முடியும்.

ஏழை மாணவருக்கு மட்டுமே...

முறைகேடுகளை தடுக்க, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு மட்டுமே, பிஎச்.டி., உதவித் தொகை வழங்க, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. பல்கலை மற்றும் கல்லுாரி உதவி பேராசிரியர் பணியில் சேரவும், பிஎச்.டி., ஆராய்ச்சி மாணவர்கள் உதவித்தொகை பெறவும், மத்திய அரசு நடத்தும், 'நெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.அதே நேரம், மத்திய பல்கலை மற்றும் யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழுவின் சிறப்பு அந்தஸ்து பெற்ற, சீர்மிகு திறன் வாய்ந்த பல்கலைகளில், நெட் தேர்வு இல்லாமலேயே, உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இதன்படி, இளநிலை ஆராய்ச்சி மாணவர், மாதம், 25 ஆயிரம் ரூபாய்; முதுநிலை ஆராய்ச்சி மாணவருக்கு, மாதம், 28 ஆயிரம் ரூபாயுடன், 30 சதவீதம் வீட்டு வாடகையும் தரப்படும். இந்த உதவித் தொகை, பல்கலைகள் மூலமாக வழங்கப்படுகிறது.நாடு முழுவதும், 15 ஆயிரம் பேர் உதவித்தொகை பெறுகின்றனர். இதில் முறைகேடுகள் நடப்பதாக, யு.ஜி.சி.,க்கு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து, நெட் தேர்ச்சி பெறாதவருக்கு உதவியை நிறுத்த, மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு, மாணவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.இந்நிலையில், 'ஆய்வுக் கமிட்டி அமைத்து, இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும்' என, மத்திய மனிதவள அமைச்சகம் அறிவித்துள்ளது.

உதவித்தொகை வழங்கும் முறையில் வெளிப்படைத்தன்மை; மாநில பல்கலை மாணவர்களுக்கும் உதவித் தொகை; பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு மட்டும் உதவி உள்ளிட்டவை குறித்து, இந்த கமிட்டி முடிவு செய்ய உள்ளது.டிசம்பருக்குள் அறிக்கை தாக்கல் செய்ய, கமிட்டிக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதுவரை, உதவித் தொகை வழங்குவதில் மாற்றம் இருக்காது என, அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியல் கண்காட்சி போட்டி அதிகாரிகள் மீது ஆசிரியர்கள் புகார்

அறிவியல் கண்காட்சி போட்டி அதிகாரிகள் மீது ஆசிரியர்கள் புகார்
தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில், 'இன்ஸ்பையர்' விருது; ஜவஹர்லால் நேரு தேசிய விருது ஆகியவற்றுக்காக, ஒவ்வொரு ஆண்டும் தனித்தனியாக, பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது.

இதுதொடர்பாக, இயக்குனர் அலுவலகம் மூலம், சி.இ.ஓ., எனப்படும், முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது. ஆனால், அந்த தகவல்கள் பெரும்பாலான பள்ளிகளுக்கு கிடைக்காமல், ஒவ்வொரு ஆண்டும்,லட்சக்கணக்கான மாணவர்கள் ஏமாற்றம் அடைவதாக கூறப்படுகிறது.தற்போது, நேரு தேசிய விருதுக்கான அறிவியல் கண்காட்சி மாநில அளவில், டிசம்பர், 1 முதல், 3ம் தேதி வரை பெரம்பலுாரில் நடக்கிறது. பள்ளி அளவில், அக்., 16ல் நடந்தது.

கல்வி மாவட்ட அளவில், நவ., 3; வருவாய் மாவட்ட அளவில், 16ம் தேதி நடக்கிறது.ஆனால், 'இந்த விவரங்கள், பெரும்பாலான அரசு மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு தெரியவில்லை' என, ஆசிரியர்கள் புகார் கூறுகின்றனர்.'குறிப்பிட்ட சில பள்ளிகள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு மட்டுமே அனுப்பப்படுகின்றன; மற்றவர்களுக்கு மறைக்கப்படுகிறது. திறமையான மாணவர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். இணையதளம் உருவாக்கி, அதில் இந்த தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்' என்கின்றனர்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எம்.பி.,க்களின் கோட்டா உயர்கிறது:

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எம்.பி.,க்களின் கோட்டா உயர்கிறது: 6 இடங்களுக்கான சிபாரிசு 10 ஆக உயர்த்த அரசு முடிவு
கேந்திரிய வித்யாலயா' எனப்படும், மத்திய அரசுப் பள்ளிகளில், எம்.பி.,க்களுக்கான மாணவர் சேர்க்கை கோட்டா அதிகரிக்கப்படவுள்ளது. தற்போது, ஆறு மாணவர்களுக்கு சிபாரிசு செய்து வரும் எம்.பி.,க்கள், இனிமேல், 10 மாணவர்களுக்கு சிபாரிசு செய்ய, விரைவில் வாய்ப்பு ஏற்பட உள்ளது.மத்திய அரசின், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின்கீழ், நாடு முழுவதும் நடத்தப்படும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு, மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்தப் பள்ளிகளில், 'சீட்' வாங்குவது மிகவும் கடினம். இப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு, எம்.பி.,க்கள் சிபாரிசு செய்ய, 'கோட்டா' உள்ளது. அதாவது, ஆண்டுக்கு, ஆறு குழந்தைகளுக்கு, எம்.பி.,க்கள் பரிந்துரை செய்யலாம்.இதனால், தங்கள் குழந்தைகளுக்கு, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 'சீட்' கிடைக்க, ஏராளமானோர், எம்.பி.,க்களிடம் சிபாரிசு கடிதம் பெற முயற்சிப்பது வாடிக்கை.

சிபாரிசு:

ஆனால், ஆறு மாணவர்களுக்கு மட்டுமே, எம்.பி.,க்கள் சிபாரிசு செய்யமுடியும் என்பதால், தங்களைத் தேடி வரும் கட்சிக்காரர்கள் மற்றும்பொதுமக்களை திருப்தி படுத்த முடியாமல், எம்.பி.,க்கள் திணறுகின்றனர்.இதையடுத்து, தங்களுக்கான கோட்டா எண்ணிக்கையை, அதிகரிக்க வேண்டுமென, பல ஆண்டுகளாகவே, மத்திய அரசிடம், எம்.பி.,க்கள் வலியுறுத்தி வருகின்றனர்.எம்.பி.,க்களுக்கான கோட்டா, இரண்டு மட்டுமே என இருந்த நிலையில், கடந்த 2012ல் தான், இந்த எண்ணிக்கை, ஆறு ஆக உயர்த்தப்பட்டது.

பார்லி.,யில்...:

ஆனாலும், இது போதுமானதாக இல்லை என, எம்.பி.,க்கள் பலர், பார்லிமென்ட்டில் குரல் கொடுத்து வந்தனர்.மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு, எம்.பி.,க்கள் சார்பில் தரப்பட்ட நெருக்கடியை அடுத்து, இதுகுறித்து பரிசீலிப்பதாக, அத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, உறுதி அளித்திருந்தார். இந்நிலையில், கடந்த வெள்ளியன்று, இதுகுறித்து ஆலோசிப்பதற்காக, கேந்திரிய வித்யாலயா அமைப்பின் நிர்வாக இயக்குனர்கள் கூட்டம், டில்லியில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில், எம்.பி.,க்களின் மாணவர்களுக்கான சேர்க்கை கோட்டாவை,தற்போதுள்ள, ஆறுலிருந்து, 10 ஆக உயர்த்துவதற்கு ஒப்புதல் தரப்பட்டது. இதையடுத்து, வரும் குளிர்கால கூட்டத்தொடரின் போது, இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை, மத்திய அரசு வெளியிடலாம் என, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கேந்திரிய வித்யாலயாபள்ளிகள் - ஓர் பார்வை:

துவக்கம்:1963, டிசம்பர், 15
எண்ணிக்கை:இந்தியாவில், 1,796; வெளிநாடுகளில், ஏழுமாணவர்கள்:11 லட்சத்து, 48 ஆயிரத்து, 340
ஆசிரியர்கள், ஊழியர்கள்:56 ஆயிரத்து, 500

சிறப்பம்சங்கள்:
* நாடு முழுவதும் ஒரே கல்வித்திட்டம்
* இந்தி, ஆங்கில பாடத்திட்டம்
* இருபாலார் பள்ளி 6 - 8ம் வகுப்பு வரை சமஸ்கிருதம் கட்டாயம்; 12ம் வகுப்பு வரை சமஸ்கிருதம் விருப்ப பாடம்; இந்தியபள்ளிகளில் ஜெர்மன் மொழியும், வெளிநாடுகளில், பிரெஞ்ச் மற்றும் ரஷ்ய மொழிகளையும் கற்கலாம்

* சி.பி.எஸ்.இ., கல்வித்திட்டம்
தலைமையகம்:டில்லி
அமைச்சகம்:மத்திய மனிதவளத் துறை

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!