Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 9 November 2015

குரூப்-4 பதவிக்கான நேரடி நியமனத்து நவ.16 முதல் கலந்தாய்வு

குரூப்-4 பதவிக்கான நேரடி நியமனத்து நவ.16 முதல் கலந்தாய்வு
குரூப்-4 பதவிகளுக்கு நேரடி நியமனத்துக்கான முதல் கட்ட கலந்தாய்வு நவம்பர் 16 ஆம் தேதி முதல் டிசம்பர் 2 ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்த உள்ளது.
இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

இந்தப் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு 2014 டிசம்பர் 21 ஆம் தேித நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் 22 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பணியாளர் தேர்வுக்கான முதல் கட்ட கலந்தாய்வு வருகிற 16 ஆம் தேதி முதல் டிசம்பர் 2 ஆம் தேதி வரை சென்னையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.

இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க தகுதியானவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அழைப்புக் கடிதம் விரைவு அஞ்சல் மூலமும், மின்னஞ்சல், குருந்தகவல் மூலமும் தகுதியானவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கலந்தாய்வு அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பது உறுதி கிடையாது. தகுதி, காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப தேர்வு நடைபெறும்.

கலந்தாய்வுக்கு வரத் தவறினால் மறு வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரதிதாசன் பல்கலைகழகம் B.ED கலந்தாய்வு தேதி அறிவிப்பு

பாரதிதாசன் பல்கலைகழகம் B.ED கலந்தாய்வு தேதி அறிவிப்பு

புயலுக்கு பெயரை யார் தேர்வு செய்வது? பெயர் வைப்பதற்கான காரணம் என்ன?


புயலுக்கு பெயரை யார் தேர்வு செய்வது?
பெயர் வைப்பதற்கான காரணம் என்ன?

புயல் சின்னம் உருவாகும் போதெல்லாம், அதற்கு ஒரு பெயர் சூட்டப்படுவது பற்றி அனைவரும் அறிந்திருப்பார்கள். அவற்றிற்கு எவ்வாறு பெயர் சூட்டப்படுகிறது என்பதை இங்கே காணலாம்.
ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று புயல்கள் உருவானால் குழப்பம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் தான் மனிதர்களைப் போலவே புயலுக்கு பெயர் வைக்கும் முறை உருவானது.
20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆஸ்திரேலியா தான் இந்தப் பழக்கத்தை முதலில் தொடங்கி வைத்தது. ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையத்தினர் மக்களிடம் செல்வாக்கு குறைந்த அரசியல் வாதிகளின் பெயர்களை புயல்களுக்கு சூட்டியுள்ளனர். பின்னர் 1954-ஆம் ஆண்டு இந்தப் பழக்கத்தை அமெரிக்கா தொடங்கியது.
இந்தியாவைப் பொறுத்தவரை வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறை 2004-ஆம் ஆண்டில் உருவானது. இந்தியா, வங்கதேசம், மாலத்தீவு,‌ மியான்மர், ஓமன், பாகிஸ்தான், தாய்லாந்த், இலங்கை ஆகிய 8 நாடுகள் இணைந்து பெயர் பட்டியலைத் தயாரித்து வருகின்றன.
அண்மையில் அரபிக் கடலில் உருவான புயலுக்கு "மேக்" என பெயர் சூட்டப்பட்டிருந்த நிலையில்,தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலுக்கு "ரோனு " என பெயரிடப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

17-ல் 'சிமேட்' நுழைவு தேர்வு

17-ல் 'சிமேட்' நுழைவு தேர்வு
மேலாண்மை படிப்பில் சேர்வதற்கான, 'சிமேட்' என்ற தேசிய நுழைவு தேர்வு, ஜன., 17ல் நடக்கிறது.அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீ காரம் பெற்ற கல்வி நிறுவனங்களில்,மேலாண்மை படிப்பில் சேர, தேசிய அளவில், 'சிமேட்' என்ற, பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

அடுத்த ஆண்டுக்கான நுழைவு தேர்வு ஜன., 17ல் நடக்கிறது. இதற்கு, http://www.aicte-cmat.in என்ற இணைய தளத்தின் மூலம், டிச., 10 வரை, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்.

பட்டாசு வெடிக்கும்போது கவனம் டாக்டர்கள் எச்சரிக்கை

பட்டாசு வெடிக்கும்போது கவனம் டாக்டர்கள் எச்சரிக்கை
விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதால், பட்டாசு வெடிக்கும்போது கவனமாகஇருக்க வேண்டும்; காயம் ஏற்பட்டால், தண்ணீர் மட்டும் ஊற்றுங்கள்;வேறு ஏதும் தடவக்கூடாது' என, டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் தீக்காயம் மற்றும் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறைத் தலைவர் நிர்மலா பொன்னம்பலம் கூறியதாவது:

தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது வழக்கம். அதே நேரத்தில், விபத்துகள் ஏற்படாமல் வெடிப்பது அவசியம். சில ஆண்டுகளாக, விபத்துகளால் சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்றாலும், பொதுமக்கள் விழிப்போடு இருப்பது அவசியம்.

என்ன செய்யலாம்?

*திறந்த வெளியில் பட்டாசு வெடிக்க வேண்டும
்*சிறுவர்கள், பெரியோர் கண்காணிப்பில் தான் பட்டாசு வெடிக்க வேண்டும
்*ஒரு பக்கெட் தண்ணீர் அருகில் வைத்திருக்க வேண்டும
்*முதல் உதவி பெட்டி வைத்திருப்பது நல்லது
*பட்டாசு அருகில் சென்று தீ பற்ற வைக்காமல், நீண்ட குச்சியை பயன்படுத்த வேண்டும
்*குனிந்து பார்த்து பட்டாசு வெடிக்க வேண்டாம்; முகத்தில் பாதிப்பு ஏற்படும
்*காலணிகள் அணிந்திருக்க வேண்டும்; இறுக்கமான பருத்தி ஆடைகள் அணிய வேண்டும்
*தீக்காயம் ஏற்பட்டால், அந்த இடத்தில் தண்ணீர் ஊற்ற வேண்டும். உடனடியாக மருத்துவமனை சென்று சிகிச்சை பெற வேண்டும்.
என்ன செய்யக்கூடாது?

*பட்டாசுகளை சட்டைப்பைகளில் வைத்து கொண்டு செல்லக் கூடாது
*தளர்வான ஆடைகள் அணிய வேண்டாம்; எளிதில் தீப்பற்றும் பொருட்களை அருகில் வைக்க வேண்டாம்
*வீடுகளின் உள் பகுதியில் பட்டாசு வெடிக்கக்கூடாது. பட்டாசு வெடிக்கும் இடத்தில் மெழுகுவர்த்தி, கெரசின் விளக்குகளை பயன்படுத்த வேண்டாம
்*முகத்தின் அருகே, பட்டாசை கொண்டு செல்லக்கூடாது; கையில் பிடித்து பட்டாசு வெடிக்கக் கூடாது
*வெடிக்காத வெடிகளை விட்டு விடுங்கள்; மீண்டும் வெடிக்க வைக்க முயற்சிக்கக் கூடாது
*தீக்காயத்தின் மீது மை, மண், மஞ்சள் தடவக்கூடாது. முகத்தில் தீக்காயம் ஏற்பட்டால் கண்களை கசக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

திறனாய்வு தேர்வில் தவறான விடையால் குழப்பம்

திறனாய்வு தேர்வில் தவறான விடையால் குழப்பம்
தமிழகத்தில், 1.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற, தேசிய திறனாய்வு தேர்வில், ஒரு வினாவுக்கு, தவறான விடை கொடுத்திருந்ததால், மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆராய்ச்சி படிப்பு வரை,மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதற்கு இரண்டு கட்ட தேசிய திறனாய்வுத் தேர்வை எழுத வேண்டும். மாநில அளவில் தேர்ச்சி பெறும், முதல், 300 மாணவர்கள், தேசிய தேர்வு எழுதலாம். இதில், முதல், 1,000 இடங்களுக்குள் வந்தால், உதவித்தொகை கிடைக்கும்.மாநில அளவிலான முதற்கட்ட தேர்வு, நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. இதில், 6,766 பள்ளிகளைச் சேர்ந்த, 1.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். அறிவுத்திறன் தேர்வு, கல்வித்திறன் தேர்வு என, இரண்டு தாள்களுக்கு தலா, 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்தது. முதல் தாளில், 50 மதிப்பெண்களுக்கு ஆங்கில இலக்கணத் தேர்வு உண்டு.இதில், குறைந்தபட்சம், 20 மதிப்பெண்கள் பெற்றால் தான், மற்ற கேள்விகளுக்கு விடைகள் திருத்தப்படும்; தேர்விலிருந்து மாணவர் நீக்கப்படுவார்.

நேற்றைய தேர்வில், முதல் தாளில், சிந்தனை மற்றும் கணிதத் திறன் குறித்த, 25ம் எண் கேள்விக்கு, வினாத்தாளில் கொடுக்கப்பட்ட நான்கு விடைகளும் தவறாக இருந்தன.அந்தக் கேள்விக்கு, 'ரூட்' அடையாளத்துடன், 90 (√90) என்பதுவிடையாக வர வேண்டும். ஆனால், அந்த விடை கொடுக்கப்படவில்லை. அதனால், மாணவர்கள் நீண்ட நேரம் குழப்பம் அடைந்தனர். இந்த கேள்விக்கு எப்படி மதிப்பெண் வழங்கப்படும் என, தேர்வு மையத்தில் எந்த அறிவிப்பும் வழங்கப்பவில்லை.

மின் வாரியத்தில் 1,950 பேருக்கு வேலை விரைவில் வெளியாகிறது அறிவிப்பு

மின் வாரியத்தில் 1,950 பேருக்கு வேலை விரைவில் வெளியாகிறது அறிவிப்பு
மின் வாரியத்தில், புதிதாக, 1,950 ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது.தமிழ்நாடு மின் வாரியத்தில், உதவியாளர், பொறியாளர் என, 1.38 லட்சம் பணியிடங்கள் உள்ளன. இதில், 50 ஆயிரம் இடங்கள் காலி. இதனால், மின்உற்பத்தி, வினியோகம் உள்ளிட்ட பணிகளில், ஒருவரே, பலரது வேலையை செய்ய வேண்டியுள்ளது. இதையடுத்து, 1,950 காலிப் பணியிடங்களைஉடனடியாக நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான, நிதி ஒதுக்கீடு குறித்து, உயர் அதிகாரிகள்ஆலோசனை நடத்தினர். தற்போது, அந்தப் பணியும் முடிவடைந்ததால், ஊழியர்கள் நியமனம் குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது.

இதுகுறித்து, வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'உதவி பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை உதவியாளர் என, 1,950 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். இதற்கான அறிவிப்பு, தீபாவளிமுடிந்த, 10 நாளில் வெளியிடப்படும். 2016 மார்ச்சில், ஊழியர்கள் தேர்வு முடிக்கப்பட்டு விடும்' என்றனர்.

சிறப்பாசிரியர்கள் பணி நிரவலில் 'பணம்:' ஆசிரியர்கள் புகார்

சிறப்பாசிரியர்கள் பணி நிரவலில் 'பணம்:' ஆசிரியர்கள் புகார்
தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணிநிரவல் என்ற பெயரில், துாக்கி அடிக்கப்பட்டுள்ளதாக, புகார் எழுந்துள்ளது.அரசு பள்ளிகளில் பணியாற்றும், 16 ஆயிரத்து, 500 பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு, 3 முதல், 5ம் தேதி வரை பணி நிரவல் இடமாறுதல் நடந்தது. பகுதி நேர பாடப் பிரிவுகளில், காலியாக இருந்த, 3,500 இடங்களுக்கு மாற்றம்செய்யப்பட்டனர்.

இதில், விதிமீறல் கள் நடந்துள்ளதாகவும், ஒவ்வொரு ஆசிரியரும், 70 கி.மீ., நீண்ட துாரத்திற்கு அப்பால் மாற்றப்பட்டுள்ளதாகவும், சிறப்பாசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து, கலை ஆசிரியர்கள் நலச் சங்கத் தலைவர் ராஜ்குமார் கூறியதாவது:பகுதி நேர ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வில், அருகிலுள்ளஇடம் ஒதுக்க, ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கியுள்ளனர்.மாதம், 7,000 சம்பளம் பெற்று, கடனில் தவிக்கும் ஆசிரியர்களிடம், லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

குரூப் - 1 தேர்வு: 2.14 லட்சம் பேர் பங்கேற்பு

குரூப் - 1 தேர்வு: 2.14 லட்சம் பேர் பங்கேற்பு
அரசு துறைகளில் காலியாக உள்ள, 74 இடங்களை நிரப்புவதற்கான, 'குரூப் - 1' முதல்நிலைத் தேர்வில், 2.14 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழக அரசுத் துறையில், துணை கலெக்டர், காவல் துறை துணை கண்காணிப்பாளர் பணி உட்பட, 74 காலியிடங்களுக்கான, குரூப்- 1 முதல் நிலைத் தேர்வு நேற்று நடந்தது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், சென்னையில், 126 மையங்கள் உட்பட தமிழகம் முழுவதும், 725 மையங்களில் தேர்வு நடந்தது. இதில், மாநிலம் முழுவதும், 2.14 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.

டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அருள்மொழி, செயலர் விஜயகுமார் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா ஆகியோர், சென்னையிலுள்ள சில தேர்வு மையங்களை ஆய்வு செய்தனர். அருள்மொழி கூறுகையில், ''விரைவில் இந்தத் தேர்வுக்கான, 'கீ - ஆன்சர்' வெளியாகும். குரூப் - 4 பணியிடங்களுக்கான காலியிடப் பட்டியல் அரசிடமிருந்து வந்ததும் நிரப்பப்படும்,'' என்றார்.

சர்வதேச கின்னஸ் உலக சாதனைகள் தினம்

🌹இன்று (9-11-15)🌹

🌻சர்வதேச கின்னஸ் உலக சாதனைகள் தினம்🌻

(International Guinness World Records Day)

கின்னஸ் பிரிவெரி என்பவர் உலக சாதனைகளைத் தொகுத்து 1954ஆம் ஆண்டில் முதன்முதலாக கின்னஸ் புத்தகத்தை வெளியிட்டார். உலக சாதனை புரிபவர்கள் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தனர். முதன்முதலாக கின்னஸ் தினம் 2005ஆம் ஆண்டு நவம்பர் 9 இல் கொண்டாடப்பட்டது. கின்னஸ் சாதனைகளைத் தொகுத்து இத்தினத்தின்போது புத்தகமாக வெளியிடப்படுகிறது.

இடைவிடாத மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைவிடப்பட்ட மாவட்டங்கள்

இடைவிடாத மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைவிடப்பட்ட மாவட்டங்கள்

• வேலூர் மற்றும் திருவாரூர்,அரியலூர்,மாவட்ட பள்ளகளுக்கு விடுமுறை
• திருவண்ணாமலை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
• விழுப்புரம், கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை 
• கனமழை எதிரொலி: திருவள்ளூரில்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
• புதுச்சேரி, காரைக்காலில்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
• சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
• காஞ்சிபுரத்தில்  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.

RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS

💥💥💥💥💥💥💥💥💥
RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS
📚📚📚📚📚📚📚📚📚

📚கனமழை இன்று  (09/11/2015)
ஒ௫ சில மாவடங்களில் பள்ளி, கல்லூரிகளுக்குத விடுமுறை

📚பாரதிதாசன் பல்கலைகழகம் B.ED கலந்தாய்வு தேதி அறிவிப்பு

📚Central Teacher Eligibility Test(CTET) 2016 Exam Date Notification

📚தமிழகம் முழுதும் இன்று குரூப்–1 முதல்நிலை தேர்வு

📚SGT PAY 5200-20200+2800 CHANGE TO 9300-34800+4200 PAY DIFFERENT 01.10.2015

📚தீபாவளி 'லீவு': பள்ளிகளுக்கு அனுமதி

📚கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு 24 மணி நேரமும் சுழற்சிமுறையில் பணி!

📚ஆன்லைன் ஷாப்பிங்கா? கொஞ்சம் அவசர படாதீங்க?

📚5 கலை பாடங்களுக்குநவ. 18 முதல் அரசு தேர்வு

📚5 நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை:வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

📚மாணவர்களுக்கு உதவும்'மொபைல் ஆப்' வெளியீடு

📚BSNL Recruitment 2015 to Diploma Engineers – Apply Online for 147 Telecom Technical Assistant
BSNL Recruitment 2015 for 23Junior Officer Vacancy FOR B.E/B.TECH qualification

📚விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது எப்படி? தீயணைப்பு அதிகாரி செயல் முறை விளக்கம்

📚கூட்டு முயற்சியே நிறுவனத்தின் வெற்றிசர்வதேச பயற்சியாளர் பேச்சு

கனமழை இன்று (09/11/2015) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை இன்று  (09/11/2015) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

*விழுப்புரம், கடலூர்
திருவள்ளூர்,
காரைக்கால், சென்னை, காஞ்சிபுரம்
நாகை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.

RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS

💥💥💥💥💥💥💥💥💥
RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS
📚📚📚📚📚📚📚📚📚

📚கனமழை இன்று  (09/11/2015)
ஒ௫ சில மாவடங்களில் பள்ளி, கல்லூரிகளுக்குத விடுமுறை

📚பாரதிதாசன் பல்கலைகழகம் B.ED கலந்தாய்வு தேதி அறிவிப்பு

📚Central Teacher Eligibility Test(CTET) 2016 Exam Date Notification

📚தமிழகம் முழுதும் இன்று குரூப்–1 முதல்நிலை தேர்வு

📚SGT PAY 5200-20200+2800 CHANGE TO 9300-34800+4200 PAY DIFFERENT 01.10.2015

📚தீபாவளி 'லீவு': பள்ளிகளுக்கு அனுமதி

📚கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு 24 மணி நேரமும் சுழற்சிமுறையில் பணி!

📚ஆன்லைன் ஷாப்பிங்கா? கொஞ்சம் அவசர படாதீங்க?

📚5 கலை பாடங்களுக்குநவ. 18 முதல் அரசு தேர்வு

📚5 நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை:வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

📚மாணவர்களுக்கு உதவும்'மொபைல் ஆப்' வெளியீடு

📚BSNL Recruitment 2015 to Diploma Engineers – Apply Online for 147 Telecom Technical Assistant
BSNL Recruitment 2015 for 23Junior Officer Vacancy FOR B.E/B.TECH qualification

📚விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது எப்படி? தீயணைப்பு அதிகாரி செயல் முறை விளக்கம்

📚கூட்டு முயற்சியே நிறுவனத்தின் வெற்றிசர்வதேச பயற்சியாளர் பேச்சு

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!