Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 10 November 2015

கல்வி முறையை மாற்ற தலாய்லாமா வலியுறுத்தல்

கல்வி முறையை மாற்ற தலாய்லாமா வலியுறுத்தல்
''சர்வதேச அளவில், கல்வி முறையை மாற்ற, இளைய தலைமுறையினர் முயற்சிக்க வேண்டும்,'' என, திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய்லாமா வலியுறுத்தினார்.மறைந்த முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம் லட்சிய இயக்கம் சார்பில், 'அப்துல் கலாம் சேவா ரத்னா' என்ற பெயரில் விருது வழங்கும் விழா, சென்னையில் நேற்று நடந்தது.

அதிக வளம்:

'மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன்' தலைவர் சிவராமன் வரவேற்புரையாற்றினார். திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய்லாமா பங்கேற்று, பல பிரிவுகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு, விருதுகளை வழங்கினார்.

விழாவில் அவர் பேசியதாவது:இந்தியாவில் தான் வளர்ச்சிக்கான அதிக வளம் உள்ளது. மதச்சார்பற்ற தன்மை மற்றும் சகிப்புத்தன்மையுடன், உலகில் தங்களுக்கே உரிய கலாசாரத்தை விட்டுத்தராமல் உள்ள, ஒரே நாடு இந்தியா. அப்படிப்பட்ட நாட்டில், மிகப்பெரிய அறிவியலாளராக, மாணவர்களின் கதாநாயகனாக திகழ்ந்த கலாமைப் பார்த்து, பலமுறை வியந்துள்ளேன்.நான் மிகவும் மதிக்கும் நபர்களில் அப்துல் கலாமும் ஒருவர். அவரைப் பலமுறை டில்லியில், ஜனாதிபதி இல்லத்தில் சந்தித்துப் பேசியிருக்கிறேன்.அவரது கனவுப்படி, செயல்திட்டம் வகுத்து அந்த பாதையில் சிறந்து விளங்கியோருக்கு, அவரது பெயரில் விருதுகள் வழங்குவது பாராட்டத்தக்கது. இந்த விருதில் அவர்களுக்கு வழங்கப்படும் பரிசுகளோ, பணமோ பெரிதல்ல. அப்துல் கலாம் பெயரில் அவர்களின் சாதனைகளை அங்கீகரிப்பது தான் முக்கியமானது.இந்த விருதை பெற்றுள்ள நீங்கள், இன்னும் அதிக அளவு கடமைக்கு ஆளாகிறீர்கள். உங்கள் செயல்களை இன்னும் சிறப்பாக தொடர வேண்டும். இந்தஅடிப்படையில், தற்போதைய கல்வி முறை, நம் இளைய தலைமுறையினருக்கும், சமூகத்துக்கும் போதுமானதாக இல்லை.எனவே, இளையதலைமுறையினர் இனி வரும் காலங்களில், அமைதியான, இதமான வாழ்க்கை முறையை, மனிதாபிமானத்தை ஏற்படுத்த, கல்வி முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விருது பெற்றவர்கள்:மரக்கன்று நடுதல் மற்றும் வளர்த்தல், நீர்நிலைகளை பராமரித்தல், துாய்மையான குடிநீர் வழங்கல், சுற்றுப்புறங்களை பசுமையாக வைத்தல், போதை மீட்பு உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்து விளங்கிய தன்னார்வ தொண்டு நிறுவனத்தினருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.'ட்ரீ பேங்க்' நிறுவனத்தைச் சேர்ந்த முல்லைவனம்; கோவை, 'சிறுதுளி' நிறுவனத்தைச்சேர்ந்த லலிதா மோகன்; விருதுநகர், ஆத்திப்பட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜன; டில்லியைச் சேர்ந்த சீனிவாசன் மற்றும் செல்லமுத்துஅறக் கட்டளையின் ராம.சுப்ரமணி யன் ஆகியோர் விருதுகளை பெற்றனர்

வாக்காளர் பட்டியலில் பிழை நீக்குவதற்கு புதிய 'சாப்ட்வேர்'

வாக்காளர் பட்டியலில் பிழை நீக்குவதற்கு புதிய 'சாப்ட்வேர்'
''வாக்காளர் பட்டியலில், முறையாக பிழைகளை மாற்ற, புதிய சாப்ட்வேர் பயன்படுத்தப்படுகிறது,'' என, தேர்தல் கமிஷன் செயலர் ராவ் கூறினார்.கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில், அவர் பேசியதாவது:

நாடு முழுவதும், சட்டசபை, லோக்சபா தொகுதிகளை ஆய்வு நடத்திசீரமைப்பதில், நிறைய சிரமங்கள் உள்ளன. அரசியல் கட்சிகள், தேர்தல்நடத்தும் அலுவலர்கள் ஒத்துழைக்க வேண்டும். லோக்சபா மற்றும் சட்டசபை தொகுதிகளில் சில, பரப்பளவில் சிறியதாகவும், மக்கள் தொகையில் அதிகமாகவும் இருக்கும்; சில மாநிலங்கள், பரப்பளவில் அதிகமாகவும், மக்கள் தொகையில் குறைவாகவும் இருக்கும். வாக்காளர்அடையாள அட்டையில், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், பெயர் நீக்கபணிகளில் அதிகாரிகள் விழிப்புடன் இருப்பது அவசியம். போதுமான ஆதாரங்களை பெற்று திருத்தம் செய்ய வேண்டும். ஒரு வாக்காளருக்கு,வெவ்வேறு முகவரிகளில், இரு வாக்காளர் அடையாள அட்டைகள் என்ற குழப்பங்கள், விரைவில் முடிவுக்கு வரும். பெயர் பிழைகளை, முறையாகமாற்றம் செய்ய, புதிய சாப்ட்வேர் பொருத்தப்பட்டுள்ளது.இவ்வாறு ராவ் பேசினார்.

சேமிப்புக் கணக்குத் தொடங்கினால் பரிசு: அஞ்சல் துறை அறிவிப்பு

சேமிப்புக் கணக்குத் தொடங்கினால் பரிசு: அஞ்சல் துறை அறிவிப்பு
செல்வ மகள், பொன் மகன் வைப்பு நிதி சேமிப்புக் கணக்குத் திட்டத்தில், கணக்குத் தொடங்குபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் எனஅஞ்சல் துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதைத் தடுக்கவும், அவர்களுக்கு உயர் கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும், மத்திய அரசால் செல்வ மகள் ("சுகன்யா சம்ரித்தி') சேமிப்புக் கணக்கு என்கிற திட்டம் தொடங்கப்பட்டது. நிகழாண்டில் ஜனவரி 30-ஆம் தேதி, நாடு முழுவதும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.அதேபோல் ஆண் குழந்தைகளிடமும் சேமிப்பு எண்ணத்தை அதிகரிக்கும் வகையில்,"பொன் மகன் வைப்பு நிதி' என்கிற திட்டம் தொடங்கப்பட்டது. மத்திய அரசால் இந்த இரண்டு நீண்ட கால சேமிப்புத் திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டன.குழந்தைகள், பெற்றோரிடம் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக, அஞ்சல் துறைத் இந்தத் திட்டத்தில் இணையும் குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கத் திட்டமிட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 13, 14 ஆகிய இரண்டு தினத்தில் அஞ்சல் நிலையத்தில் சேமிப்புக் கணக்குத் தொடங்கும் குழந்தைகளுக்கு, மறைந்த டாக்டர் அப்துல் கலாமின் சிறப்பு நினைவு அஞ்சல் தலை, முதல் நாள் அஞ்சல் உறை, அவரைப் பற்றிய விவரங்களுடன் அடங்கிய கையேடு ஆகியவை பரிசாக வழங்கப்படும்.சென்னை நகர அஞ்சல் மண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து அஞ்சல் நிலையங்களிலும், சேமிப்புக் கணக்குகளைத் தொடங்கலாம் எனவும் அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் உயர்கல்வி பயில முன் அனுமதி கட்டாயம்.

ஆசிரியர்கள் உயர்கல்வி பயில முன் அனுமதி கட்டாயம்.
தமிழகத்தில் செயல்படும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆசிரியர்கள் உயர்கல்வியை தொடர, முன் அனுமதி பெறுவது கட்டாயம் என,தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், நேரடியாக உயர்கல்வியை தொடர, அரசு தடை விதித்துள்ளது.

ஆனால், பகுதி நேரமாகவோ, தொலை துார கல்வி மையங்கள்வாயிலாகவோ உயர்கல்வியை தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு, ஊக்க ஊதியம் போன்வற்றுக்கு கல்வி தகுதிகள் மதிப்பீடு செய்யப்படுகிறது. இதன் காரணமாக, அரசு பணியில் சேரும் பலர் உயர்கல்வியை பகுதி நேரமாகவும், தொலைதுாரக்கல்வி வாயிலாகவும் தொடர்ந்து வருகின்றனர். ஆனால், துறை அனுமதி இன்றி உயர்கல்வியில்சேர்பவர்கள், பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதனால், உயர்கல்வி பயில விரும்பும் ஆசிரியர்கள் முன் அனுமதி பெறுதல் தொடர்பாகவும், யாரிடம் பெறவேண்டும் என்பது குறித்து குழப்பங்கள் எழுந்ததால், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில், கோவை மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் மூலம் தகவல்கள் பெறப்பட்டது. அதன் படி, எம்.பில்., பிஎச்.டி., போன்ற ஆராய்ச்சி படிப்புகளில் சேர்பவர்கள் துறை தலைவரான பள்ளிக்கல்வித்துறை இயக்குனரிடம் முன் அனுமதி பெற்று இருப்பது அவசியம். பி.எட்., எம்.எட்., போன்ற படிப்புகளுக்கு, பள்ளி தலைமையாசிரியரிடமே முன் அனுமதி பெற்றிருந்தால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016 ல் 7 வது சம்பளக்கமிஷன் : நகராட்சி நிர்வாகங்கள் அச்சம்

2016 ல் 7 வது சம்பளக்கமிஷன் : நகராட்சி நிர்வாகங்கள் அச்சம்
2016 ஜனவரி 1 முதல் ஏழாவது சம்பள கமிஷன் சம்பளம் பரிந்துரைப்படி சம்பளம் வழங்க வேண்டியிருப்பதால், ஏற்படும் நிதிச்சுமையை எண்ணி, நகராட்சி நிர்வாகங்கள் அச்சமடைந்து உள்ளன.

தமிழகத்தில் 148 நகராட்சிகள் உள்ளன. இவற்றின் முக்கியவருவாய் சொத்துவரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரி வசூல் மூலமே கிடைத்து வருகிறது. அவை நிர்வாகச் செலவுகளுக்கும், ஊழியர்களின் சம்பளத்திற்குமே போதுமானதாக இருந்து வருகிறது. கடந்த 2007 ல் நகராட்சிகளில்சொத்துவரி உயர்த்தப்பட்டது. வழக்கமாக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சொத்துவரி உயர்த்தப்படும். இந்த வரி உயர்வு சீராக இருந்தால், ஊழியர்களின் சம்பளம் உயரும்போது ஏற்படும் நிதிச்சுமையை சமாளிப்பது எளிது. ஆனால், 2007க்கு பின், 5 ஆண்டுகள் கழித்து 2013 ல் சொத்துவரி உயர்த்தப்படவில்லை. இதனால், நகராட்சிகளின் வருவாய் 2007 க்கு பின் உயரவில்லை.இந்நிலையில் 2016 ஜன., 1 முதல் 7 வது சம்பள கமிஷன் அடிப்படையில் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டி உள்ளது.

இந்த சம்பள உயர்வு சில மாதங்கள் கழித்து அமல் படுத்தப்பட்டாலும்,2016 ஜன., 1 யை அடிப்படையாக கொண்டு நிலுவைத்தொகை வழங்க வேண்டி இருக்கும்.வரிவருவாய் உயராத நிலையில், 7 வது சம்பளக்கமிஷனால் ஏற்படும் சம்பள உயர்வு நிதிச்சுமையை எப்படி சமாளிக்கப்போகிறோம் என்ற அச்சம் நகராட்சி நிர்வாகங்களுக்கு ஏற்பட்டுள்ளன. ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு ஏற்ப, நகராட்சியின் வரி வருவாய் உயர்வுக்குஅரசு ஏற்பாடு செய்ய வேண்டும் அல்லது அதற்கேற்ப மானியத்தொகையை வழங்க வேண்டும் என அரசிடம் வலியுறுத்தி வருகின்றன.

மழைக்கால நோய் பரவும் அபாயம் : குடிநீரை நன்கு காய்ச்சி குடிங்க...!

மழைக்கால நோய் பரவும் அபாயம் : குடிநீரை நன்கு காய்ச்சி குடிங்க...!
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. எனவே பொதுமக்கள், குடிநீரைநன்கு காய்ச்சி குடிக்க வேண்டும்; உள்ளாட்சி நிர்வாகமும், குடிநீர் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்' என, சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகம் முழுவதும் மூன்று நாட்களாக மழை கொட்டித் தீர்த்துள்ளது. மழைநீர் ஆங்காங்கே தேங்கி, சுகாதாரத்திற்கு சவால்விடும் வகையில் உள்ளது.இதுபோன்ற நேரங்களில், குடிநீரில் கழிவுநீர் கலப்பதோடு, குடிநீர் மாசு படவும் வாய்ப்பு உள்ள. அதனால், பொதுமக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என, சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி கூறியதாவது:பொதுவாக, குடிநீரை நன்கு காய்ச்சி, ஆற வைத்து குடிப்பது நல்லது. அதுவும், மழைக்காலங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தரமற்ற குடிநீர், நோய் பாதிப்புகளுக்கு காரணம் என்பதால், பொது மக்கள் உஷாராக இருக்க வேண்டும். வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில், குளோரின் அளவை பரிசோதிக்கவும், மாதிரிகள் எடுத்து பாதிப்பு உள்ளதா என கண்டறியவும், உள்ளாட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கிய பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தவும், சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

மாணவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை கிடைப்பது உறுதி

மாணவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை கிடைப்பது உறுதி:இம்மாதத்துக்குள் வழங்க கல்வித்துறை அறிவிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், இம்மாத இறுதிக்குள் ஆதார் அடையாள அட்டை வழங்கப்படும் என்ற கல்வித்துறையின் அறிவிப்பால், பள்ளி நிர்வாகத்தினர் நிம்மதியடைந்துள்ளனர்.அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெறுவதற்கும், விவரங்களை பதிவு செய்வது உள்ளிட்ட அனைத்துக்கும் ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில், திருப்பூர் மாவட்ட பள்ளிகளிலும், ஆதார் எண்கள் சமர்ப்பிக்க மாணவர்களுக்கு தீவிரமாக அறிவுறுத்தப்பட்டது. பலமுறை ஆதார் எண் இல்லாத மாணவர்கள் பெயர் பட்டியல் மட்டுமே கேட்கப்பட்டதே தவிர, ஆதார் அடையாள அட்டை இல்லாத மாணவர்களுக்கு கல்வித்துறையின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.உதவித்தொகைபெறும் மாணவர்களுக்கு ஆதார் எண் அவசியத் தேவையாக இருப்பதால், கல்வித்துறையின் சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்த கோரிக்கை விடப்பட்டது.சிறப்பு முகாம்கள்:இதன் அடிப்படையில், பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என கல்வித்துறை அறிவித்து; தற்போது, அதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டத்திலுள்ள பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கல்வித்துறை அதிகாரிகளின் முன்னிலையில் மாணவர்களுக்கு ஆதார் எண் வழங்குவதற்கான சிறப்புக்கூட்டம் நடந்தது.

22 சிறப்பு குழுக்கள்:

அதில் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் மட்டுமே, ஒரு லட்சத்து 56ஆயிரம் மாணவர்களுக்கு தற்போது வரை ஆதார் எடுக்கப்படவில்லை. அதிலும், மெட்ரிக் பள்ளிகளில்தான் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆதார் எண் இல்லை. அதிக எண்ணிக்கையில் ஆதார் எண் இல்லாத பள்ளி மாணவர்களைக்கொண்ட மாவட்டங்களில் இம்மாவட்டமும் முதன்மையாக உள்ளது.

ஆதார் அட்டை வழங்குவதற்கு, 22 சிறப்பு குழுக்கள் செயல்படுகின்றன. இதில் பெரும்பான்மையான குழுக்களை பள்ளிகளுக்கு பயன்படுத்தி, ஆதார் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்; இம்மாத இறுதிக்குள் ஆதார் அட்டை இல்லாத மாணவர்களுக்கு அட்டை வழங்கப்படும்.பள்ளி நிர்வாகத்தினரும் இந்நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தீவிரமாக ஈடுபட வேண்டும். இவ்வாறு கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS

💥💥💥💥💥💥💥💥💥
RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS
📚📚📚📚📚📚📚📚📚
📚நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

📚குரூப்-4 பதவிக்கான நேரடி நியமனம் நவ.16 முதல் கலந்தாய்வு

📚சொந்த வீடு.. கார்.. பைக் இருக்கா? அப்போ மத்திய அரசே உங்க கேஸ் மானியத்தை 'கட்' செய்யப் போகுதாம்!

📚குரூப் - 1 தேர்வு: 2.14 லட்சம் பேர் பங்கேற்பு

📚சிறப்பாசிரியர்கள் பணி நிரவலில் 'பணம்:' ஆசிரியர்கள் புகார்

📚மின் வாரியத்தில் 1,950 பேருக்கு வேலை விரைவில் வெளியாகிறது அறிவிப்பு

📚திறனாய்வு தேர்வில் தவறான விடையால் குழப்பம்

📚பட்டாசு வெடிக்கும்போது கவனம் டாக்டர்கள் எச்சரிக்கை

📚17-ல் 'சிமேட்' நுழைவு தேர்வு
📚📚📚📚📚📚📚📚📚

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!