Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 15 November 2015

USEFUL FOR ALL CLASSES

USEFUL FOR ALL CLASSES

Opposite words

absent × present
accept × decline, refuse
accurate × inaccurate
admit × deny
advantage × disadvantage
agree × disagree
alive × dead
all × none, nothing
always × never
ancient × modern
answer × question
apart × together
appear × disappear, vanish
approve × disapprove
arrive × depart
artificial × natural
ascend × descend
attractive × repulsive
awake × asleep
backward × forward
bad × good
beautiful × ugly
before × after
begin × end
below × above
bent × straight
best × worst
better × worse, worst
big × little, small
black × white
blame × praise
bless × curse
bitter × sweet
borrow × lend
bottom × top
boy × girl
brave × cowardly
build × destroy
bold × meek, timid
bound × free
bright × dim, dull
brighten × fade
broad × narrow
calm × windy, troubled
capable × incapable
careful × careless
cheap × expensive
cheerful × sad, discouraged, dreary
clear × cloudy, opaque
clever × stupid
clockwise × counterclockwise
close × far, distant
closed × open
cold × hot
combine × separate
come × go
comfort × discomfort
common × rare
contract × expand
cool × warm
correct × incorrect, wrong
courage × cowardice
create × destroy
crooked × straight
cruel × kind
compulsory × voluntary
courteous × discourteous, rude
dangerous × safe
dark × light
day × night
dead × alive
decline × accept, increase
decrease × increase
deep × shallow
definite × indefinite
demand × supply
despair × hope
disappear × appear
diseased × healthy
down × up
downwards × upwards
dry × moist, wet
dull × bright, shiny
early × late
east × west
easy × hard, difficult
empty × full
encourage × discourage
end × begin, start
enter × exit
even × odd
export × import
external × internal
fade × brighten
fail × succeed
false × true
famous × unknown
far × near
fast × slow
fat × thin
few × many
find × lose
first × last
foolish × wise
fold × unfold
forget × remember
found × lost
friend × enemy
generous × stingy
gentle × rough
get × give
girl × boy
glad × sad, sorry
gloomy × cheerful
good × bad
great × tiny, small, unimportant
guest × host
guilty × innocent
happy × sad
hard × easy
hard × soft
harmful × harmless
hate × love
healthy × diseased, ill, sick
heaven × hell
heavy × light
here × there
high × low
hill × valley
horizontal × vertical
hot × cold
humble × proud
in × out
include × exclude
inhale × exhale
inner × outer
inside × outside
intelligent × stupid, unintelligent
interior × exterior
join × separate
junior × senior
knowledge × ignorance
known × unknown
landlord × tenant
large × small
last × first
laugh × cry
lawful × illegal
leader × follower
left × right
less × more
like × dislike, hate
limited - boundless
little × big
long × short
loose × tight
loss × win
loud × quiet
low × high
major × minor
many × few
mature × immature
maximum × minimum
melt × freeze
narrow × wide
near × far, distant
never × always
new × old
no × yes
noisy × quiet
none × some
north × south
odd × even
offer × refuse
old × young
on × off
open × closed, shut
opposite × same, similar
out × in
over × under
past × present
peace × war
permanent × temporary
plural × singular
polite × rude, impolite
possible × impossible
powerful × weak
pretty × ugly
private × public
pure × impure, contaminated
push × pull
qualified × unqualified
quiet × loud, noisy
raise × lower
rapid × slow
rare × common
regular × irregular
real × fake
rich × poor
right × left, wrong
rough × smooth
safe × unsafe
secure × insecure
scatter × collect
separate × join, together
shallow × deep
shrink × grow
sick × healthy, ill
simple × complex, hard
singular × plural
sink × float
slim × fat, thick
sorrow × joy
start - finish
strong × weak
success × failure
sunny × cloudy

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு
பிளஸ் 2 வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 7-ஆம் தேதியும், பத்தாம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 9-ஆம் தேதியும் தொடங்குகின்றன. மாநிலம் முழுவதும் பொதுவாக நடைபெறும் இந்தத் தேர்வுகளுக்கான கால அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்ககம் சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.
பிளஸ் 2 வகுப்புக்கான கால அட்டவணை விவரம்:-

*.டிசம்பர் 7 - திங்கள்கிழமை - மொழிப்பாடம் முதல் தாள்
*.டிசம்பர் 8 - செவ்வாய்க்கிழமை - மொழிப்பாடம் இரண்டாம் தாள்
*.டிசம்பர் 9 - புதன்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்
*.டிசம்பர் 10 - வியாழக்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள
*.டிசம்பர் 12 - சனிக்கிழமை - வணிகவியல், மனையியல், புவியியல்
*.டிசம்பர் 14 - திங்கள்கிழமை - கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிஷன் அண்ட் டயட்டிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங், விவசாயம், அரசியல் அறிவியல், நர்சிங் (தொழில் கல்வி), நர்சிங் (பொது), கணக்குப் பதிவியல், கணக்குத் தணிக்கை
*.டிசம்பர் 16 - புதன்கிழமை - இயற்பியல், பொருளாதாரம், பொது இயந்திரவியல், எலெக்ட்ரானிக்ஸ் எக்யூப்மென்ட், டிராப்ட்ஸ்மென் சிவில், எலெக்ட்ரிக்கல் மெஷின்ஸ் அண்ட் அப்ளையன்சஸ், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை
*.டிசம்பர் 18 - வெள்ளிக்கிழமை - வேதியியல், கணக்குப் பதிவியல், பொது இயந்திரவியல் தாள்-2, எலெக்ட்ரிக்கல் மெஷின்ஸ் அண்ட் அப்ளையன்சஸ் தாள் 2, தொழில்கல்வி மற்றும் தணிக்கை
*.டிசம்பர் 21 - திங்கள்கிழமை - உயிரியல், தாவரவயில், வரலாறு, வணிகக் கணிதம்
*.டிசம்பர் 22 -செவ்வாய்க்கிழமை - கம்யூனிக்கேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி, சிறப்பு மொழிப்பாடம் (தமிழ்), புள்ளியியல், கணக்குப் பதிவியல்மற்றும் கணக்குத் தணிக்கை, செய்முறைத் தேர்வு, தட்டச்சு (தமிழ், ஆங்கிலம்)
*.தேர்வுகள் காலை 10 முதல் 1.15 வரை நடைபெறும். இதில் முதல் 10 நிமிஷங்கள்வினாத்தாளைப் படித்துப் பார்க்கவும், அடுத்த 5 நிமிஷங்கள் விடைத்தாளில் உள்ள விவரங்களைப் பூர்த்தி செய்யவும் வழங்கப்படும்.

பத்தாம் வகுப்புத் தேர்வு அட்டவணை:

*.டிசம்பர் 9 - புதன்கிழமை - மொழிப்பாடம் முதல் தாள்
*.டிசம்பர் 10 - வியாழக்கிழமை - மொழிப்பாடம் இரண்டாம் தாள்
*.டிசம்பர் 12 - சனிக்கிழமை - ஆங்கிலம்முதல் தாள்
*.டிசம்பர் 14 - திங்கள்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள்
*.டிசம்பர் 16 - புதன்கிழமை - அறிவியல்
*.டிசம்பர் 18 - வெள்ளிக்கிழமை - சமூக அறிவியல்
*.டிசம்பர் 21 - திங்கள்கிழமை - கணிதம்

தேர்வுகள் காலை 10 மணி முதல் 12.45 மணி வரை நடைபெறும். முதல் 10 நிமிஷங்கள் வினாத்தாளைப் படித்துப் பார்க்கவும், அடுத்த 5 நிமிஷங்கள் விடைத்தாள் விவரங்களைப் பூர்த்தி செய்யவும் வழங்கப்படும்.

புயல் சின்னமாக மாற வாய்ப்பு: காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம்

புயல் சின்னமாக மாற வாய்ப்பு: காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் - சென்னை–கடலூரில் அதிக மழை பெய்ய வாய்ப்பு
வங்க கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த மண்டலம் கடலூர் மாவட்டத்தை தாக்கி கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இதன் தாக்கத்தில் இருந்து மக்கள் மீண்டு நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில் வங்க கடலில் அந்தமான் கடல் பகுதியில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி மிரட்டி வருகிறது.இதுபடிப்படியாக வலுப் பெற்று நேற்று இலங்கை அருகே தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. தொடர்ந்து அதே இடத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நீடிக்கிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் புதுவையிலும் தமிழ்நாடு முழுவதும் 3நாட்களுக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும்.இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:–

தென்மேற்கு வங்ககடலில் இலங்கைக்கு அருகே தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கிறது. அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (புயல் சின்னம்) மாற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் கடலோர மாவட்டங்களிலும் உள் மாவட்டங்களிலும் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும்.இன்று தொடங்கி செவ்வாய்க்கிழமை வரை 3 நாட்களுக்கு அதிக அளவு மழை பெய்யும். புதன்கிழமைக்கு பின் மழையின் அளவு படிப்படியாக குறையும்.கடல் காற்று மணிக்கு 50 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்.

தமிழ்நாட்டில் அதிகப்பட்சமாக நாகை மாவட்டம் ஆணைக்காரன் சத்திரம் என்ற இடத்தில் 18 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. தமிழகத்தில் சராசரியாக 35 செ.மீ. மழை பெய்துள்ளது. இன்னும் 10 செ.மீ. மழை பெய்தால் அது இயல்பான மழை அளவாகும். இந்தசராசரி மழைக்கூட எல்லா இடத்திலும் பெய்த மழை அல்ல. ஒரு இடத்தில் அதிகமாகவும் மற்றொரு இடத்தில் குறைவாகவும் பெய்துள்ளது.இவ்வாறு ரமணன் கூறினார்.புயல் சின்னத்தை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் இன்று காலை முதலே மீண்டும் மழை கொட்டத் தொடங்கியது. தொடர்ந்து இடைவிடாது மழை கொட்டி வருகிறது.இதனால் கடலூர் மாவட்டம் மீண்டும் கடுமையான சேதத்தை எதிர்நோக்கி உள்ளது. அங்கு அதிகாரிகள் மற்றும் போலீசார், தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு கொண்டுவர படகுகளும் தயாராக உள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிக்கு மாற்றப்பட்டு வருகிறார்கள்.புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடைந்துள்ளது.சென்னை, கடலூர் மட்டுமல்லாது புதுவையிலும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் விழுப்புரம், காஞ்சீபுரம், திருவள்ளூர், தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, ஈரோடு, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, சேலம், தர்மபுரி, கோவை, நீலகிரி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.இதனால் அணைகள் ஏரி, குளங்களில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது வருகிறது. இதுவரை 468 பெரிய ஏரிகள் நிரம்பியுள்ளன

பெட்ரோல் டீசல் விலை உயர்வு

பெட்ரோல் டீசல் விலை உயர்வு
பெட்ரோல் விலை லிட்டருக்கு 37 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 87 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையுயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

11,000 மாணவர்கள் பங்கேற்ற ஓவியப் போட்டி: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெறுகிறது

11,000 மாணவர்கள் பங்கேற்ற ஓவியப் போட்டி: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெறுகிறது
மதுரை சர்வேயர் காலனியில் உள்ள மகாத்மா மாண்டிச்சோரி பள்ளியில் குழந்தைகள்தின விழாவையொட்டி மகாத்மா பள்ளிகள், பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை சார்பில் ஆந்திர மாநிலத்தின் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த ‘கலாம்காரி’ஓவியம் வரையும் போட்டி நேற்று நடைபெற்றது. இதற்கு மதுரை பாத்திமா கல்லூரி முதல்வர் பாத்திமா மேரி, உயர் நீதிமன்ற நோட்டரி வழக்கறிஞர் திரவிய நாதன் நடுவர்களாக இருந்தனர்.

இதில் மதுரையில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 11,156 மாணவ, மாணவியர் ஒரே இடத்தில் அமர்ந்து கலாம்காரி ஓவியம் வரைந்தனர்.இதற்கு முன் இவ்வளவு அதிகமான குழந்தைகள் ஒரே இடத்தில் அமர்ந்து இந்த குறிப்பிட்ட ஓவியத்தை வரைந்ததில்லை. அதனால், இந்த ஓவிய நிகழ்ச்சி லிம்கா சாதனைக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இது குறித்து இந்த ஓவியப் போட்டியின் ஒருங்கிணைப்பாளர் பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் பள்ளிகளுடைய சூப்பர் டீச்சர் சியாமளா தேவி கூறுகையில், “தமிழ்நாட்டுக்கு தஞ்சை ஓவியம் எவ்வளவு முக்கியவம் வாய்ந்ததோ அதுபோல், ஆந்திரத்துக்கு கலாம்காரி ஓவியம் கலாச்சார முக்கியம் வாய்ந்தது.

ஆண்டுதோறும் எங்கள் நிர்வாகம் ஒவ்வொரு மாநிலங்களின் கலாச்சாரம், பண்பாடு சார்ந்த ஓவியங்களை குழந்தைகள் தெரிந்து கொள்ள அவர்களுக்கு இந்த ஓவியப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.இதற்கு முன் பிகார், ராஜஸ்தான், தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களுடைய ஓவியங்கள், கிளாசிக் பெயிண்டிங் உள்ளிட்டவை குறித்து 9 முறை ஓவியப்போட்டிகள் நடந்துள்ளன. இந்த 9 ஓவிய நிகழ்ச்சிகளும் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது என்றார்.

வேலூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர்திருமதி.சபீதா

வேலூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர்திருமதி.சபீதா
கனமழை - வேலூர் மாவட்ட சிறப்பு அதிகாரியாக பள்ளிக்கல்வித் துறைமுதன்மை செயலர் திருமதி.சபீதா அவர்கள் நியமனம்.

அடுத்த மூன்று நாட்களுக்கு மாவட்டம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொள்ள ஏதுவாக அவரின் பயணத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது

ஆசிரியர்- மாணவர் விகிதம் 1:22 என்ற அளவுக்கு உள்ளது என்று பள்ளிக் கல்வித் துறைச் செயலர் டி.சபிதா.

ஆசிரியர்- மாணவர் விகிதம் 1:22 என்ற அளவுக்கு உள்ளது என்று பள்ளிக் கல்வித் துறைச் செயலர் டி.சபிதா.
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்- மாணவர் விகிதம் 1:22 என்ற அளவுக்கு உள்ளது என்று பள்ளிக் கல்வித் துறைச் செயலர் டி.சபிதா கூறினார்.குழந்தைகள் தின விழா, டாக்டர்எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும் விழா சென்னையில் சனிக்கிழமைநடைபெற்றது.

இதில், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும், சிறந்த நூலகர்களுக்கான எஸ்.ஆர்.அரங்கநாதன் விருதுகளையும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.விழாவில் தலைமை வகித்து, டி.சபிதா பேசியது:பள்ளி மாணவர்களுக்கான 14 வகையான நலத்திட்டங்களுக்காக தமிழக அரசு இதுவரை ரூ.15 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.தரமான கல்வியை வழங்க எத்தகைய கட்டமைப்பு வசதிகள் தேவை என்பதை அறிந்து அதற்கான நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது.அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள், சுற்றுச்சுவர்கள், கழிப்பறைகள் என உள்கட்டமைப்பு வசதிகளுக்காக மட்டும் ரூ.3 ஆயிரம் கோடியை தமிழக அரசு வழங்கியது. இதனால், நல்ல உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய பள்ளிகளில் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.குக்கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களையும் பள்ளிகளுக்கு அழைத்து வருவதற்காக போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனால் பள்ளிகளுக்கு வராமல் இருந்த 57 ஆயிரம் மாணவர்களில் 48 ஆயிரம் பேர் பள்ளிகளுக்கு வந்துள்ளனர்.மத்திய அரசின் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ்2010-11-ஆம் ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 344 உயர்நிலைப் பள்ளிகளுக்கான கட்டடங்களைக் கட்ட ரூ.380 கோடியை முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கீடு செய்துள்ளார். இந்தப் பள்ளிகளுக்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.இந்தத் திட்டத்தின்படி, தரம் உயர்த்தப்பட்ட மேலும் 810 பள்ளிகளுக்கு கட்டடம் கட்டுவதற்காக மொத்தம் ரூ.1,268 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்- மாணவர் விகிதம் 1:22 என்ற அளவுக்கு உள்ளது என்றார் அவர்.அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி: பாடப் புத்தகங்களை படிப்பதோடு நின்றுவிடக் கூடாது. நிறையப் புத்தகங்களைப் படிக்க வேண்டும். குழந்தைகள் தினத்தன்று குழந்தைகளைக் கொண்டாடும் அதேவேளையில், நம்முள் உள்ள குழந்தைத் தன்மையையும் கொண்டாட வேண்டும் என்றார்.

தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் மைதிலி ராஜேந்திரன், பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இயக்குநர்க.அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன், மெட்ரிக். பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை உள்ளிட்டோரும் பேசினர்

தலைமையிடத்தில் தங்கி இருக்க வேண்டும்: மழையால் கல்வி அதிகாரிகளுக்கு கிடுக்கிப்பிடி

தலைமையிடத்தில் தங்கி இருக்க வேண்டும்: மழையால் கல்வி அதிகாரிகளுக்கு கிடுக்கிப்பிடி
'தொடர் மழை எதிரொலியாக, பள்ளி மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரிகள்,மாவட்ட தலைமையிடத்தில் தங்கியிருக்க வேண்டும்' என, மாவட்ட தொடக்ககல்வி அலுவலர்களுக்கு, மாநில தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், வடகிழக்கு பருவமழையால் பல மாவட்டங்களில் பலத்த சேதம் அடைந்த நிலையில், பள்ளி மாணவரின் நலன் தொடர்பாக, முன்னேற்பாடு குறித்து, அனைத்து தொடக்க கல்வி அலுவலர்களுக்கும், மாநில தொடக்க கல்வி இயக்குனர், சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: பள்ளிகளின் மேற்கூரையில், மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டால், உடனடியாக அதை சரி செய்ய வேண்டும்.பள்ளிகளுக்கு அருகில் ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகள் இருந்தால், அதன் அருகில் மாணவ, மாணவியர் செல்லாத வகையில் ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். உணவு இடைவேளை, காலை, மாலை நேரங்களில் மாணவ, மாணவியரின் வருகை எண்ணிக்கையை சரிபார்க்க வேண்டும். பள்ளி வளாகத்தில் மின் கசிவு ஏற்பாடாத வகையில் பராமரிக்க வேண்டும். பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டி, கழிப்பறை ஆகியவற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.தொற்று நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில், குடிநீரை காய்ச்சி குடிக்க வலியுறுத்தல் வேண்டும். பருவ மழை நீடிக்க வாய்ப்புள்ளதால், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், அவர்களின் தலைமையிடத்தில் கட்டாயம் தங்கியிருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு எழுதுவோர் பட்டியல் தயாரிக்க உத்தரவு

பிளஸ் 2 தேர்வு எழுதுவோர் பட்டியல் தயாரிக்க உத்தரவு
பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை, நவ., 16க்குள் தயாரிக்க கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 2016 மார்ச்சில், பொது தேர்வு நடத்த தேர்வு துறை ஆயத்தமாகி வருகிறது.

இதற்காக தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரித்து ஆன்-லைனில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இதில் மாணவரின் பெயர், போட்டோ, பிறந்த தேதி, தந்தை, தாய் பெயர், ஜாதி, மதம், ஆதார் எண் போன்ற விவரங்கள் இடம்பெறுகின்றன. அந்த பெயர் பட்டி யலை மாணவர்கள் சரிபார்த்த பின், வகுப்பு ஆசிரியர் ஒப்புதல் வழங்குகின்றனர்.தவறு இல்லாத மதிப்பெண் பட்டியல் வழங்குவதற்காக மிக கவனமாக நடந்து வரும் இப்பணியை வரும் நவ., 16 க்குள் முடித்து தேர்வு துறைக்கு அனுப்ப வேண்டும்.இதேபோல் ஏப்ரலில், ௧௦ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவர்கள் பட்டியலையும் தயாராக வைத்திருக்க வேண்டும் என அனைத்து மேல்நிலை, மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களுக்கு பள்ளி கல்வித்தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது

மழைக்காலத்தில் மாணவர்களுக்காக 15 பாதுகாப்பு நடவடிக்கைகள்

மழைக்காலத்தில் மாணவர்களுக்காக 15 பாதுகாப்பு நடவடிக்கைகள்

மழைக்காலங்களில் மாணவர்களைப் பாதுகாக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

* நீர்நிலைகளில் உடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் மாணவர்கள் ஆறு, ஏரி, குளங்களுக்கு வேடிக்கை பார்க்கச் செல்ல வேண்டாம்.

* தொடர் மழையின் காரணமாக பள்ளியில் சுற்றுச்சுவர் மிகுந்த ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே, சுற்றுச்சுவரிலிருந்து 20 அடி தூரத்துக்கு மாணவர்கள் செல்லாதவாறு தடுப்புகள் ஏற்படுத்த வேண்டும்.

* மழை காரணமாக சில வகுப்பறைகள் பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்தகைய அறைகளை பயன்படுத்தக் கூடாது. அவற்றை பூட்டிவைக்க வேண்டும்.

* மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா, மின்கசிவு, மின்கோளாறு ஏதேனும் உள்ளனவா என்பதை ஆய்வுசெய்ய வேண்டும். தேவைப்பட்டால் மின் இணைப்பை தற்காலிகமாக துண்டித்துக்கொள்ளலாம். அத்துடன் மின்சார வாரியத்தை தொடர்பு கொண்டு மின் கோளாறுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

* பள்ளி வளாகத்தில் பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டி, நீர்த்தேக்க தொட்டிகள் இருந்தால், அவை மூடப்பட்ட நிலையில் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

* மாணவர்கள் விடுமுறை நாட்களில் ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். விடுமுறை காலங்களில் நீர்நிலைகளுக்கு அருகே வேடிக்கை பார்க்க செல்லக் கூடாது. இதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

* மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும்போதும், திரும்பும்போதும் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும் வழியை தவிர்க்க வேண்டும்.

* சாலையில் செல்லும்போது பழுதடைந்த அல்லது அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொடுவதோ அல்லது அருகே செல்வதோ கூடாது. மாணவர்கள் சாலையில் மழைநீர் கால்வாய்கள் இருக்கும் இடங்கள் வழியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

* பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் மரங்கள் ஏதேனும் இருந்தால் உடனடியாக அவற்றை அகற்ற வேண்டும்.

* சுவிட்சுகள் சரியாக உள்ளனவா, மழைநீர் படாத வண்ணம் இருக்கின்றனவா என்பதை தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

* மாணவர்களைக் கொண்டு மின்சாதனங்களை இயக்கக் கூடாது.

* பள்ளியில் உள்ள கட்டிடங்களின் மேற்கூரைகள் உறுதியாக உள்ளனவா என்பதை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். மேற்கூரையில் மழைநீர் தேங்கா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* பள்ளி வளாகத்தில் கட்டிட பராமரிப்பு பணிகள் மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு மாணவர்கள் செல்ல தடை விதிக்க வேண்டும். பள்ளங்களைச் சுற்றி பாதுகாப்பான தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* மழையில் இருந்து காத்துக்கொள்ள மரங்களின் கீழ் ஒதுங்கக் கூடாது என்றும் அவ்வாறு ஒதுங்கினால் இடி, மின்னலால் ஆபத்து நேரிடக்கூடும் என்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

* பருவகால மாற்றங்களால் ஏற்படக்கூடிய டெங்கு, சிக்குன் குனியா போன்ற காய்ச்சல்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மாணவர்களுக்குத் தேவையான அறிவுரைகள் வழங்க வேண்டும். காய்ச்சல் இருந்தால் காலதாமதம் செய்யாமல் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும்

கல்விச்சிறகுகளின் கல்வித்தலைப்புச் செய்திகள்

கல்விச்சிறகுகளின் கல்வித்தலைப்புச் செய்திகள்
📚📚📚📚📚📚📚📚📚
📚10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்பாடம் கட்டாயம் -கூட்டுத்தொகையிலும் மாற்றம்

📚பிளஸ் 2 தனித் தேர்வு: நவம்பர் 16 முதல் விண்ணப்பிக்கலாம்

📚கல்வியியல் கல்லூரி பல இருந்தும் திறமையான ஆசிரியர் இல்லையே: NCERT மண்டல இயக்குனர் வேதனை

📚151 பள்ளி கட்டடம் இடிக்க வேலூர் கலெக்டர் உத்தரவு

📚தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையில் 188 காலி பணியிடங்கள்

📚வேடந்தாங்கலில் குவிந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள்

📚வேலூர் மாவட்டத்தில் 12 துணை தாசில்தார் மாற்றம்

📚வகுப்பறையில் மழை கொட்டியதால் பள்ளிக்கு பூட்டு போட்ட பெற்றோர்

📚ரூ.1,500 கோடி மதிப்பில் அரக்கோணத்தில் அதிநவீன விமானம்:

📚இ-சேவை மையங்களில் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

📚மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் பள்ளிக் கல்வி எதிர்நோக்கும் அபாயங்கள்

📚இனி மாணவர்கள் தேர்வெழுதிய விடைத்தாள்கள் பெற்றோர் பார்வைக்கு

📚நாளை முதல் அனைத்து சேவைகளுக்கும் சேவை வரி அரை சதவீதம் உயர்வு

📚கல்விச்செய்திகளின் விரிவான விவரங்களுக்கு
www.rkkalvisiragukal.blogspot.com
📚📚📚📚📚📚📚📚📚

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!