Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 16 November 2015

2016 Holiday and Restricted Holidays

2016 Holiday and Restricted Holidays

வாட்ஸ்அப்பில் எதையும் ஷேர் செய்யுமுன்.. இதைச் செய்யுங்கள் ப்ளீஸ்!


டனடியாக ஏ பாசிட்டிவ் ரத்தம் தேவை, இலவச மருத்துவ சேவைக்கு அணுகவும், கல்வி உதவிக்கு இந்த எண்ணை அழைக்கவும், குழந்தையைக் காணவில்லை... இப்படி தினம்தினம் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என பரவிக் கொண்டிருக்கும் எத்தனையோ தகவல்களை நம்மில் பலரும் பரப்பிக் கொண்டிருக்கிறோம்.பெரும்பாலும், அது உண்மையா... பொய்யா... அல்லது அந்தத் தகவல் முற்றுப்பெற்றுவிட்டதா என எதையும் உறுதிசெய்யாமல் ஷேர் செய்பவர்கள்தான் அதிகமானோர் என்கிறது ஓர் ஆய்வு முடிவு.
அதன் விளைவு... பலருக்கும் தேவையில்லாத சங்கடங்களை உண்டுபண்ணுவதாகவே இருக்கிறது. இப்படி தேவையில்லாமல் பரப்பப்படும் தகவல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள்... உண்மையான, அவசியம் ஷேர் செய்யவேண்டிய தகவல்களைக்கூட வெறுப்பின் காரணமாக புறக்கணிப்பதும், அழிப்பதும் நடக்கிறது. 

இப்படித்தான், ஒரு மாதத்துக்கு முன்பு கண்ணில்பட்ட அதே தகவல், இன்று (நவம்பர் 13, 2015) காலையிலும் வந்து விழுந்தது. 'கோயம்புத்தூரைச் சேர்ந்த 11 வயதான குழந்தையைக் காணவில்லை’ என்றபடி குழந்தையின் பள்ளி அடையாள அட்டை மற்றும் தொடர்பு எண்களோடு, வாய்ஸ் தகவலும் வாட்ஸ்அப்பில் வந்தது. இது சரியான தகவல்தானா? எனக் கேட்டறிய அந்த எண்ணைத் தொடர்பு கொண்டு, விகடனில் இருந்து பேசுவதாகச் சொல்லி விசாரித்தோம். 

''குழந்தை ஒரு மாசத்துக்கு முன்னாடியே கிடைச்சுட்டாளுங்க. பக்கத்துல இருக்கறவங்கதான் அப்ப வாட்ஸ்அப்புல போட்டாங்க. அன்னிக்கு சாயந்திரமே, ஒரு பெரியவர் வழியில பார்த்து விசாரிச்சு, குழந்தையை வீட்டுல கொண்டு வந்துவிட்டுட்டாரு. நீங்க போன் பண்ணி கேட்டதுக்கு ரொம்ப நன்றிங்க. ஆனா, இப்படித்தான் தினமும் விடாம போன் வந்துட்டே இருக்கு. இன்னும் எத்தனை வருஷத்துக்கு வருமோ? தயவு செஞ்சு வாட்ஸ்அப்புல சொல்லி அதை டெலிட் பண்ண முடியுங்களா?'' என்று பரிதாபமாகக் கேட்டார் எதிர்முனையில் போனை எடுத்தவர். 

ஆனால், இந்த விஷயம் தெரியாமல்... இன்னும் எத்தனை பேர், இன்னும் எத்தனை வருடங்களுக்கு இதை ஷேர் செய்வார்களோ? இது ஒரு சாம்பிள்தான்... இதுபோல ஏகப்பட்ட தகவல்கள் சுழன்று கொண்டே இருக்கின்றன.
இந்த நிலை இனியும் தொடரவேண்டுமா? இதில் நாம் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். இந்த நொடியிலிருந்து, நமக்கு வரும் எந்தத் தகவலாக இருந்தாலும், நூறு சதவிகிதம் உறுதிப்படுத்திக் கொண்டே ஷேர் செய்வேன் என்று உறுதிமொழி ஏற்பதுதான். இப்படிச் செய்தால், நிச்சயம் தவறான தகவல்கள் பரவாமல் தடுப்பதோடு, உண்மையான பல நல்ல விஷயங்கள் சரிவர மக்களைச் சென்றடையும். 

என்ன செய்வோமா?!

குறைந்த காற்றழுத்தம் ஆந்திரா நோக்கி நகர்கிறது: தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும்

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:–


நேற்று தென் மேற்கு வங்ககடல் மற்றும் இலங்கையையொட்டி நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு நோக்கி நகர்ந்து தமிழகத்தின் வட எல்லையில் நீடிக்கிறது.இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது.


குறிப்பாக வட மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது.அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் வடமாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்யும் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மற்ற மாவட்டங்களிலும் சில இடங்களிலும் மழை பெய்யும். தமிழகத்தில் மழையின் அளவு படிப்படியாக குறையும்.இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து ஆந்திராசெல்ல இருக்கிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.இந்த வட கிழக்கு பருவ மழை இதுவரை 38 செ.மீ. பெய்துள்ளது. சென்னையில் 85 செ.மீ. மழை பெய்ய வேண்டும். ஆனால் 91 செ.மீ. மழை இதுவரை பெய்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார். 

கிணற்றில் சுடச்சுட கொதிக்கும் தண்ணீர்

இந்த மழையிலும் வடலூர் கிணற்றில் சுடச்சுட கொதிக்கும் தண்ணீர் வந்த அதிசயம்

வடலூரில் கிணற்றில் சுடச்சுட கொதிக்கும் தண்ணீர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் வடலூர் மணி தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 40). கார் டிரைவர் இவரது வீட்டின் பின்னால் கிணறு ஒன்று உள்ளது. இது 30 அடி ஆழம் உள்ளது. தொடர் மழையினால் அந்த கிணற்றில் தண்ணீர் நிரம்பி உள்ளது.

இன்று காலை ராஜா அந்த கிணற்றின் அருகே சென்றார். குளிப்பதற்காக கிணற்றில் இருந்து வாளியில் தண்ணீரை எடுத்தார். அப்போது அந்த தண்ணீர் சூடாக இருந்தது. அதில் இருந்து ஆவி பறந்தது. தண்ணீர் கொதிப்பதை பார்த்து  அவர் அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அவர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் இதை தெரிவித்தார். அவர்களும் விரைந்து வந்து பார்த்தனர். கிணற்றில் உள்ள தண்ணீரை வாளியில் எடுத்தார்கள். அந்த தண்ணீர் கொதிப்பதை பார்த்தார்கள். பின்னர் வாளிகளில் அந்த தண் ணீரை போட்டி போட்டு வீடுகளுக்கு எடுத்து  சென் றார்கள்.

அந்த பகுதியை சேர்ந்த ரவி என்பவர் கூறும் போது, இந்த வடலூர் பகுதி வள்ளலார் அவதரித்த பூமியாகும். இங்கு தண்ணீர் வென்னீராக மாறி உள்ளது. தண்ணீரில் விபூதி வாடை வீசுகிறது. இது அதிசயமாகும்" என்றார்.

இதுகுறித்து வடலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பார்வையிட்டார்கள்.  பின்னர் இதுகுறித்து ஆய்வு நடத்த புவியியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்கள். அவர்கள் அங்கு வந்து ஆய்வு செய்ய உள்ளனர்.
www.rkkalvisiragukal.blogspot.com
📚📚📚📚📚📚📚📚📚

சர்வதேச சகிப்புத் தன்மை தினம் – நவம்பர் 16

சர்வதேச சகிப்புத் தன்மை தினம் – நவம்பர் 16

🍁கல்வி, அறிவியல், மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை வளர்க்க, ஐ.நா.வின் ஓர் அங்கமாக யுனெஸ்கோ (UNESCO) நிறுவனம் 1945ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் 50ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் வண்ணம், வருங்காலத் தலைமுறையினரை கருத்தில் கொண்டு, அகில உலக சகிப்புத்தன்மை நாள் கடைபிடிக்கப்படவேண்டும் என்ற தீர்மானம் 1995ம் ஆண்டு ஐ.நா. பொது அவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த உறுதிமொழியின்படி 1996ம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 16ம் தேதி சர்வதேச உலக சகிப்புத் தன்மை நாளாகக் கடைபிடிக்கப்படுகின்றது.

🍁இன்றைய மக்களிடையே சகிப்புத்தன்மை இல்லாததால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அகிம்சை, சகிப்புத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும்தான் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

🍁வருங்காலச் சந்ததியினரை போர் என்ற சாபத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற தீர்க்கமான எண்ணத்துடன் ஐக்கிய நாடுகள் அமைப்பில் உள்ள பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து எடுத்துக் கொள்ளும் உறுதி மொழியாவது…’ என்று ஆரம்பமாகும் ஓர் உறுதி மொழியை ஐ.நா. அமைப்பைச் சார்ந்த அனைத்து நாட்டுப் பிரதிநிதிகளும் 1995ம் ஆண்டு எடுத்தனர்.யுனெஸ்கோ (UNESCO) நிறுவனத்தின் அடிப்படைக் கூறுகள் இவ்வுலகில் நிலைத்து நிற்க, மனிதகுலம் அறிவுப்பூர்வமாகவும், நன்னெறியின் அடிப்படையிலும் ஒருங்கிணைய வேண்டும் என்று இவ்வுறுதிமொழி எடுத்துரைக்கிறது.

‘🍁உலகில் நிலவும் பல்வேறு கலாச்சாரங்களையும் வியந்து பாராட்டி, ஏற்றுக் கொள்வதையே சகிப்புத்தன்மை என்று அழைக்கிறோம். இது வெறும் நன்னெறி கோட்பாடு மட்டும் அல்ல் மாறாக, இது சட்ட திட்டங்களாக, அரசியல் கோட்பாடுகளாக நிலை நிறுத்தப்பட வேண்டும்’ என்று இவ்வறிக்கையில் சகிப்புத்தன்மையின் இலக்கணம் வரையறுக்கப்பட்டுள்ளது.

மனிதகுலம் வாழ்வதற்குத் தேவையான அன்பு, பரிவு, ஒற்றுமை ஆகிய பல உயர்ந்த உணர்வுகளுக்கு அடிப்படையாக, குறைந்தபட்சம் சகிப்புத் தன்மையாகிலும் நம்மிடையே இருக்க வேண்டும் என்பதை நவம்பர் 16 நமக்கு நினைவுறுத்துகிறது!

கள ஆய்விற்கு உதவிய தினமலர்: கிராமப்பள்ளி மாணவி பெருமிதம்

கள ஆய்விற்கு உதவிய தினமலர்: கிராமப்பள்ளி மாணவி பெருமிதம்
'நீர் இல்லாது போகும் வரலாறு என்ற ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்க, தினமலர் நாளிதழில் வெளிவந்த கட்டுரை உறுதுணையாக இருந்தது' என ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவிகள் பெருமிதத்துடன் கூறினர்.தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் காரைக்குடி எஸ்.எம்.எஸ்.வி., பள்ளியில் நடந்த மாவட்ட அறிவியல் மாநாட்டில், 37 பள்ளிமாணவர்களின் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

இதில் திருப்புத்துார் அருகே மாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஏழாம் வகுப்பு மாணவி கிருபாஷினி தலைமையில் 'நீர் இல்லாது போகும் வரலாறு' என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டது.மாணவி கூறியதாவது:மாங்குடி கிராமத்தில் வகுப்பு ஆசிரியை அன்சர்பானு உறுதுணையுடன், மாணவர்கள் சந்தோஷ், கிருத்திகா, பாண்டிசெல்வி, ரஞ்சித் 40 நாட்கள் களஆய்வு மேற்கொண்டோம்.எங்கள் கிராமத்தில் 1991ல் 98 குடியிருப்பு இருந்தது. இணைந்து குளம் வெட்டி, ஆதாரமாக மழைநீரை சேகரித்தனர். தற்போது 135 குடியிருப்பு இருந்தும், புதிய குளங்கள் வெட்டப்படவில்லை. வெட்டிய குளமும் விளையாட்டு திடலாக உள்ளது. 80 குடும்பத்தினர் விவசாயம் செய்தனர்; தற்போது 25 குடும்பத்தினர் தான் விவசாயம் பார்க்கின்றனர். விளைநிலங்கள், மனைகளாக மாற்றப்பட்டு, மரங்கள் அழிக்கப்பட்டு வருவதால் மழை குறைந்துள்ளது.

நிலத்தடி நீர்:மழைநீர் வீணாகாமல் இருக்க மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும். எங்கள் கிராமத்தில் 45 வீடுகளில் மட்டுமே இது உள்ளது.இந்த கட்டுரை சமர்ப்பிப்பதற்குதினமலர் நாளிதழில் வெளி வந்த 'வனநாள் காப்போம்', 'சரஸ்வதி நதி எங்கே போனது' மற்றும் 'குளங்கள்' குறித்த 'என் பார்வை' கட்டுரைகள் உதவின, என்றார்.தலைமை ஆசிரியை மார்கிரெட் சாந்தகுமாரி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ராஜேஸ்வரி உடன் இருந்தனர்

பிளஸ் 2 மாணவர்களுக்கு J.E.E., தேர்வு அறிவிப்பு

பிளஸ் 2 மாணவர்களுக்கு J.E.E., தேர்வு அறிவிப்பு
பிளஸ் 2 முடிக்க உள்ளோர், உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான,ஜே.இ.இ., பொது நுழைவு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.பிளஸ் 2தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, பி.டெக்., - பி.ஆர்க்., போன்ற படிப்புகளுக்கு, ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., - ஐ.ஐ.எஸ்., உள்ளிட்ட, மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதே, மிகப்பெரிய லட்சியம்.

இந்த நிறுவனங்களில் படித்தால்,இறுதியாண்டு படிக்கும் போதே, பன்னாட்டு நிறுவனங்களில் பல லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைக்கும்.இந்தக் கல்வி நிறுவனங்கள், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில், சுயாட்சி பெற்றவை யாக உள்ளன. இவற்றில் மாணவர்களைச் சேர்க்க, தேசிய அளவில், 'ஜே.இ.இ., அட்வான்ஸ்ட்' என்ற பொது நுழைவு தேர்வு நடத்தப்படும். பிளஸ் 2 பொது தேர்வு முடிந்ததும், இந்த தேர்வை எழுத வேண்டும்.முதலில், ஜே.இ.இ., சாதாரண பொது நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகே, 'அட்வான்ஸ்ட்' தேர்வு எழுத முடியும். 'வரும் கல்வி ஆண்டுக்கான, ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் தேர்வு, 2016 மே, 22ல் நடக்கும்' என,மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு, இந்த தேர்வை, கவுஹாத்திஐ.ஐ.டி., நடத்துகிறது; இரண்டு தாள்களுக்கு தேர்வு நடக்கும்.இதில் தேர்ச்சி பெற்றால், 19 ஐ.ஐ.டி., நிறுவனங்களில் படிக்க இடம் கிடைக்கும். இந்த நிறுவனங்களில், பி.டெக்., - பி.ஆர்க்., - பி.பார்ம்., - பி.எஸ்., - பி.எம்., உள்ளிட்ட, 11 பட்டம் மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளில் சேரலாம். தேர்வு குறித்த கூடுதல் விவரங்களை,http://www.jeeadv.ac.in/index.php என்ற இணையதளத்தில் அறியலாம்

ஆபத்தான நிலையில் உள்ள வகுப்பறைகளுக்கு பூட்டு

ஆபத்தான நிலையில் உள்ள வகுப்பறைகளுக்கு பூட்டு
மழையால் பாதிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி வகுப்பறைகளுக்கு, பூட்டு போட, பள்ளி கல்வி இயக்குனர்உத்தரவிட்டுள்ளார்.பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கை:

* தொடர் மழையால், பள்ளிகளின் சுற்றுச்சுவர் ஈரப்பதத்துடன் காணப்படும். எனவே, சுற்றுச்சுவரிலிருந்து குறைந்தது, 20 அடி துாரம் வரை, மாணவர்கள் செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
* மழையால் பாதிக்கப்பட்ட வகுப்பறைகளை திறக்க வேண்டாம். அவற்றை பூட்டி, மாணவர்கள் அருகே செல்லாமல் பாதுகாக்க வேண்டும்
* மின் கசிவை கண்டறிந்து, மின் இணைப்பை தற்காலிகமாக துண்டிக்க வேண்டும
்*பள்ளி வளாகத்தில் நீர் தேங்கியிருந்தால் அதை அகற்றுவதுடன், திறந்த நிலையில் தொட்டிகள், பள்ளங்கள் இருந்தால் அவற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும
்* வெள்ளம் வரும் இடங்கள், நீர் நிலைப்பகுதிகளை தவிர்க்க மாணவர்களுக்கு அறிவுறுத்துவதுடன், 'வெள்ளத்தை வேடிக்கை பார்க்க செல்லக்கூடாது' என, எச்சரிக்க வேண்டும்
* பருவ மழையால், 'சிக்-குன் குனியா, டெங்கு' போன்ற காய்ச்சல் வராமல் முன்னெச்சரிக்கையாக இருக்க, மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

எஸ்.ஐ. தேர்வு முடிவு: இணையதளத்தில் வெளியீடு

எஸ்.ஐ. தேர்வு முடிவு: இணையதளத்தில் வெளியீடு

காவல் துறை உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ.) தேர்வு முடிவு இணையதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், 1078உதவி ஆய்வாளர்கள் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இதை எழுத 1.65 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். எழுத்து, உடற்தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டன. தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நேர்முகத் தேர்வும் நடத்தப்பட்டது. இந்த நிலையில், தேர்ச்சி பெற்றவர்களின் விவரம் www.tnusrbexams.net என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

1,093 உதவி பேராசிரியர்கள்:டி.ஆர்.பி., மூலம் நியமனம்

1,093 உதவி பேராசிரியர்கள்:டி.ஆர்.பி., மூலம் நியமனம்
அரசு கல்லுாரிகளில் காலியாகவுள்ள, 1,093 உதவி பேராசிரியர் பணியிடங்களை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மூலம் நிரப்ப, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், புதிதாக, 900பாடப்பிரிவுகள் துவக்கப்பட்டு, மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அத்துடன், 2011 முதல், 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன.புதிய கல்லுாரிகளில், தலா, ஐந்து உதவி பேராசிரியர்கள் வீதம், 60 பேரும்; புதிய பாடப்பிரிவுகளுக்கான ஆசிரியர்களும் நியமிக்கப்பட வேண்டும். இந்த அடிப்படையில், தமிழகத்தில் மொத்தம்,3,165 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இவற்றில் முதற்கட்டமாக, காலை நேர வகுப்பு களில் தற்காலிகமாக, 2,072 கவுரவ பேராசிரியர்களை, மாதம், 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் நியமிக்கவும், மீதமுள்ள, 1,093 உதவி பேராசிரியர்இடங்களுக்கு, டி.ஆர்.பி., மூலம் ஆட்களை தேர்வு செய்யவும், தமிழக உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வேலைவாய்ப்பு பதிவு மூப்பு, இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல விதிகளின் கீழ், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, உயர் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தரத்தை உயர்த்த பேராசிரியர்களுக்கு தேர்வு

தரத்தை உயர்த்த பேராசிரியர்களுக்கு தேர்வு: தனியார் பொறியியல் கல்லூரிகள் புதிய உத்தி
மாணவர் சேர்க்கை குறைந்து வருவதைத் தொடர்ந்து கல்வித் தரத்தை உயர்த்தவும், திறன்குறைந்த பேராசிரியர்களைப் பணியிலிருந்து நீக்கவும் புதிய உத்திகளை தனியார் பொறியியல் கல்லூரிகள் கையாளத் தொடங்கியுள்ளன.தேர்வுகள் மூலம் பேராசிரியர்களின் திறனைக் கண்டறிவது, அதன் மூலம் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகளை அளிப்பது போன்ற நடவடிக்கைகளை சில பொறியியல் கல்லூரிகள் இப்போதே தொடங்கியுள்ளன.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆள்குறைப்பு, ஊதியக் குறைப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் கலை, அறிவியல் பட்டப் படிப்புகள் மீதேமாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பொறியியல் படிப்புகளிலோ சேர்க்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. குறிப்பாக பி.இ. தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல், மின்னணுவியல் தொடர்பியல் போன்ற பிரிவுகளில் மாணவர் சேர்க்கை வெகுவாகக்குறைந்து வருகிறது.கடந்த 2014-15 கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய ஒற்றைச் சாளர கலந்தாய்வில் பி.இ. தகவல் தொழில்நுட்பப் பிரிவில் 5,262 இடங்களும், கணினி அறிவியல் பிரிவில் 13,987 இடங்களும், மின்னணுவியல் தொடர்பியல் பிரிவில் 19,012 இடங்கள் மட்டுமே நிரம்பின. இந்த மூன்று பிரிவுகளிலும் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் சேர்க்கை நடைபெறவில்லை.தொடர்ந்து 3 ஆண்டுகளாக இதே நிலை நீடித்ததால் 2014-15 கல்வியாண்டில் 3 பொறியியல் கல்லூரிகள் இழுத்து மூடப்பட்டன. 33 பொறியியல் கல்லூரிகளில் படிப்புகளில் இடங்களின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டன.இந்த நிலையில், 2014-15-ஆம் ஆண்டிலும் இதே நிலை நீடித்தது. 2015-16 கல்வியாண்டு ஒற்றைச் சாளர கலந்தாய்வு முடிவில் பி.இ. தகவல் தொழில்நுட்பப் பிரிவில் 5,648 இடங்களும், கணினி அறிவியல் பிரிவில் 15,056 இடங்களும், மின்னணுவியல் தொடர்பியல் பிரிவில் 18,707 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பின. இம்முறையும் இந்த 3 துறைகளிலும் 55 சதவீதத்துக்குமேல் இடங்கள் நிரம்பவில்லை. மேலும் ஒட்டுமொத்த துறைகளைப் பொருத்தவரை, 33 கல்லூரிகளில் 60 சதவீத அரசு ஒதுக்கீட்டு இடங்கள்கூட நிரம்பவில்லை. பிரபல கல்லூரிகளிலும் சேர்க்கை குறைந்தது.இதன் காரணமாக, கல்வித் தரத்தை உயர்த்துவது, ஆள்குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை சில தனியார் பொறியியல் கல்லூரிகள் தொடங்கியுள்ளன.அதிலும் சில கல்லூரிகள் சிறப்புத் தேர்வு மூலம் பேராசிரியர்களைத் தரம் பிரித்து, ஆள்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முயற்சியை மேற்கொண்டுள்ளன.

இதுகுறித்து சென்னைக்கு அருகே உள்ள பிரபல பொறியியல் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் கூறியது: மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால், படிப்பு இடங்களைக் குறைக்கவும், ஆள்குறைப்பு செய்யவும் கல்லூரி முடிவு செய்துள்ளது. அதற்காக எந்தெந்த பேராசிரியர்களை பணியில் நீட்டிக்கச் செய்வது என்பதை முடிவு செய்வதற்காக கணினி அறிவியல், மின்னணுவியல் தொடர்பியல் துறைகளில் பணிபுரியும் இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்களுக்கு அண்மையில் தேர்வு ஒன்றை கல்லூரி நடத்தியது.மூன்று கட்டங்களாக இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. முதலில் பேராசிரியர்களுக்கு தனித் தனியாகவும், பின்னர் இரண்டு பேராக சேர்த்தும், மீண்டும் தனித் தனியாகவும் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் கடினமான கேள்விகள் கேட்க்கப்பட்டன.தேர்வு முடிவில், 12 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்த இணைப் பேராசிரியர்கள்கூட பூஜ்யம் மதிப்பெண் எடுத்தனர். அடுத்ததாக, பேராசிரியர்களுக்கும், துறைத் தலைவர்களுக்கும் இந்தத் தேர்வுகளை நடத்த கல்லூரி திட்டமிட்டுள்ளது.இந்தத் தேர்வுகளில் தகுதி பெறுபவர்களுக்கு நவீன தொழில்நுட்பங்கள் குறித்த சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, பணியில் தொடர்ந்து வைத்துக்கொள்ள கல்லூரி முடிவு செய்துள்ளது. கல்லூரியின் இந்த நடவடிக்கைக்கு பேராசிரியர்களிடையே கடும் எதிர்ப்பும், அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியது:கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக சில பொறியியல் கல்லூரிகள் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக பல்கலைகழகத்துக்கும் தகவல் கிடைத்தது. ஆனால், இது அந்தக் கல்லூரிகளின் தனிப்பட்ட நடவடிக்கை. இதில் பல்கலைக்கழகம் தலையிட முடியாது. அதே நேரம், இவ்வளவு காலம் பணியாற்றிய பின்னர் அவர்களுக்கு தேர்வு நடத்தி தரத்தை ஆய்வு செய்வதைவிட, அவர்களைப் பணியில் சேர்க்கும்போதே தேர்வு நடத்தி சேர்த்திருக்க வேண்டும் என்றார்.

கல்விச்சிறகுகளின் கல்வித்தலைப்புச் செய்திகள்

கல்விச்சிறகுகளின் கல்வித்தலைப்புச் செய்திகள்
📚📚📚📚📚📚📚📚📚
📚நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர் அதே பள்ளியில் B.ED கற்பித்தல் பயிற்சி மேற்கொண்டால் (தகுதிகான் பருவம் முடிக்காத போதும்) விடுப்பு எடுக்கத் தேவை இல்லை - முழு ஊதியம் பெறலாம்

📚தமிழகம், புதுச்சேரியில் கனமழை; பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

📚TNPSC : குரூப்-4 பதவிக்கான கலந்தாய்வு இன்று  திட்டமிட்டப்படி நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

📚📚Opposite words for all classes

📚மழைக்காலத்தில் மாணவர்களுக்காக 15 பாதுகாப்பு நடவடிக்கைகள்

📚பிளஸ் 2 தேர்வு எழுதுவோர் பட்டியல் தயாரிக்க உத்தரவு

📚தலைமையிடத்தில் தங்கி இருக்க வேண்டும்: மழையால் கல்வி அதிகாரிகளுக்கு கிடுக்கிப்பிடி

📚ஆசிரியர்- மாணவர் விகிதம் 1:22 என்ற அளவுக்கு உள்ளது என்று பள்ளிக் கல்வித் துறைச் செயலர் டி.சபிதா.

📚கனமழை - வேலூர் மாவட்ட சிறப்பு அதிகாரியாக பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் திருமதி.சபீதா அவர்கள் நியமனம்.

📚11,000 மாணவர்கள் பங்கேற்ற ஓவியப் போட்டி: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெறுகிறது.

📚பெட்ரோல் டீசல் விலை உயர்வு

📚புயல் சின்னமாக மாற வாய்ப்பு: காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் - சென்னை–கடலூரில் அதிக மழை பெய்ய வாய்ப்பு

📚பிளஸ் 2, பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு

📚குழந்தை நேயப்பள்ளிகள் செயலாக்கம் பற்றிய ஆசிரியர்களுக்கான மண்டல அளவிலான கலந்துரையாடல் சென்னையில் நேற்று நடந்தது.

📚📚📚📚📚📚📚📚📚

B.ED கற்பித்தல் பயிற்சி மேற்கொண்டால் (தகுதிகான் பருவம் முடிக்காத போதும்) விடுப்பு எடுக்கத் தேவை இல்லை

நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர் அதே பள்ளியில் B.ED கற்பித்தல் பயிற்சி மேற்கொண்டால் (தகுதிகான் பருவம் முடிக்காத போதும்) விடுப்பு எடுக்கத் தேவை இல்லை - முழு ஊதியம் பெறலாம்  - RTI ((நாள் 05/10/2015))

TNPSC : குரூப்-4 பதவிக்கான கலந்தாய்வு இன்று திட்டமிட்டப்படி நடைபெறும்

TNPSC : குரூப்-4 பதவிக்கான கலந்தாய்வு இன்று  திட்டமிட்டப்படி நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப்-4 பதவிகளுக்கு நேரடி நியமனத்துக்கான முதல் கட்ட கலந்தாய்வு நவம்பர் 16 ஆம் தேதி திட்டமிட்டப்படி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சிஅறிவித்துள்ளது.குரூப்-4 பதவிகளுக்கு நேரடி நியமனத்துக்கான முதல் கட்ட கலந்தாய்வு நவம்பர் 16 ஆம் தேதி முதல் டிசம்பர் 2 ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்த உள்ளது.

இந்தப் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு 2014 டிசம்பர் 21 ஆம் தேித நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் 22 ஆம் தேதி வெளியிடப்பட்டது.அதனைத் தொடர்ந்து பணியாளர் தேர்வுக்கான முதல் கட்ட கலந்தாய்வு நாளை 16 ஆம் தேதி முதல் டிசம்பர் 2 ஆம் தேதி வரை சென்னையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடக்கிறது.இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க தகுதியானவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

அழைப்புக் கடிதம் விரைவு அஞ்சல் மூலமும், மின்னஞ்சல், குருந்தகவல் மூலமும் தகுதியானவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.கலந்தாய்வுக்கு வரத் தவறினால் மறு வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் கனமழை; பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகம், புதுச்சேரியில் கனமழை; பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகம் மற்றும் பதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.தென்மேற்கு வங்ககடலில் நிலைகொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்துவருகிறது.

சென்னையிலிருந்து 300 கிலோமீட்டருக்கு தொலைவில், இலங்கைக்கு அருகே நிலைகொண்டுள்ள இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த 12 மணிநேரத்திற்குள், தமிழகத்தின் வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் 25 செ.மீ. அளவிற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணிநேரத்திற்குள் ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று மண்டல ஆய்வு வானிலை மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்:

தென்மேற்கு வங்ககடலில் நிலை கொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வுநிலையின் காரணமாக அடுத்த 24 மணி நேரங்களுக்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும். அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஒட்டுமொத்த தமிழகத்தில் மழையளவு 35 சதவீதமாக உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார். சென்னையில் தேசிய பேரிடர் மேலாண்மை குழு:தென்மேற்கு வங்ககடலில் நிலைகொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்துவருகிறது. சென்னை உட்பட மாநிலத்தின் பலபகுதிகளில் மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு பகுதிகளில் மீட்புபணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. இதற்காக, ஆந்திராவிலிருந்து தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் 140 பேர் சென்னை வந்துள்ளனர். இவர்கள், சென்னை, விழுப்புரம், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் மீட்புப்பணிகளில் ஈடுபட உள்ளனர்.

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை:
கனமழை காரணமாக
01.திருச்சி
02.நாமக்கல்
03.விழுப்புரம்
04.திருவண்ணாமலை
05.கடலூர்
06.நாகப்பட்டினம
்07.காஞ்சிபுரம
்08.கன்னியாகுமரி
09. வேலூர்
்10.சென்னை11. திருவள்ளூர
்12.திருவாரூர்
்13.புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று  (16ம் தேதி) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.ராமநாதபுரம்மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இரண்டு நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை:

01.தர்மபுரி
02.பெரம்பலூர்
03.கரூர்
04.அரியலூர
்05.தஞ்சாவூர
்06.நீலகிரி
07.கிருஷ்ணகிரி
08.சேலம்
09. ஈரோடு
10. திருப்பூர்
மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் 34 நிவாரண மையங்கள்:

தென் மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள புயல் காரணமாக , ராமேஸ்வரத்தில் பலத்த காற்று வீசி வருகிறது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்கு 34 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு, அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தயார் நிலையில் இருப்பதாக கலெக்டர் விஜயகுமார் தெரிவித்தார் . இந்த முகாம்களை அமைச்சர் சுந்தர்ராஜன் பார்வையிட்டார்.

விமான சேவை பாதிப்பு:

சென்னையில் பெய்து வரும் மழையால் விமான சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்கிருந்து கோவை வரும் விமானம் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதே போல் கோவை - சென்னை விமானமும் பறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி, காரைக்காலில் இன்று  விடுமுறை:

வடகிழக்கு பருவமழை காரணமாக, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்துவருகிறது. இதன்காரணமாக, மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று  (16ம் தேதி) விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!