Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 20 November 2015

Tamil Nadu Open University Term End Examination June 2015 Revaluation Results published

🌀Tamil Nadu Open University

Term End Examination June 2015 Revaluation Results published

http://www.tnou.ac.in/resultjunerv2015.htm

🌀University of Madras
Institute of Distance Education

IDE- UG & PG Exam Time Table December 2015 avail in www.ideunom.ac.in

38 நிகர்நிலை பல்கலைக்கு தடை நீங்கியதுஇரண்டு லட்சம் மாணவர்கள் நிம்மதி


'தமிழகத்தில், 10 உட்பட, தேசிய அளவில், 38 நிகர்நிலை பல்கலைகழகங்கள் தொடர்ந்து செயல்பட தடை ஏதும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட்டில், தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார குழுவான, என்.ஏ.ஏ.சி., தெரிவித்துள்ளது.

இதனால், 'அங்கீகாரம் ரத்தாகுமோ' என, அஞ்சிய, இரண்டு லட்சம் மாணவர்களின் எதிர்காலம், பிரகாசமாகியுள்ளது. கடந்த, 2010ல், 'அடிப்படை கட்டமைப்பு வசதியற்ற, 44 நிகர்நிலை பல்கலைகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்' என, மத்திய அரசுக்கு, டாண்டன் குழு பரிந்துரைத்தது. இது தொடர்பான வழக்கில், மூன்று பல்கலைகள் நீங்கலாக, 41 நிகர்நிலை பல்கலைகளைஆய்வு செய்து அறிக்கை தர, பல்கலை கழக மானியக் குழுவிற்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதில், மூன்று பல்கலைகள் அங்கீகாரம் பெற்றன.எஞ்சிய, 38 நிகர்நிலை பல்கலைகளை ஆய்வு செய்து, புதிய தரப் பட்டியலை வழங்கும்படி, என்.ஏ.ஏ.சி.,க்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு, நீதிபதிகள், தீபக் மிஸ்ரா, பிரபுல்லா சி. பந்த் ஆகியோர் அடங்கிய, சுப்ரீம் கோர்ட் அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, என்.ஏ.ஏ.சி., தரப்பில், 38 பல்கலைகளை ஆய்வு செய்த அறிக்கையை சமர்ப்பிக்கப்பட்டது. அதன் விவரம்: கடந்த, 2012ம் ஆண்டு, என்.ஏ.ஏ.சி., ஒழுங்குமுறை விதிகளின்படி, 38 நிகர்நிலை பல்கலைகளும் மதிப்பீடு செய்யப்பட்டன. அதில், அவற்றின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் திருப்திகரமாக உள்ளது தெரியவந்துள்ளது. அதனால், இந்த நிகர்நிலை பல்கலைகள் தொடர்ந்து இயங்கலாம். மேலும், இந்த பல்கலைகளின் தர வரிசைப் பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளது.

அது, இணையத்திலும் வெளியிடப்படும். இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, தர வரிசைப் பட்டியல் குறித்து ஏதேனும் குறைகள் இருந்தால், அவற்றை நிகர்நிலை பல்கலைகள் தெரிவிக்கலாம் என்று கூறிய நீதிபதிகள், வழக்கை, 2016, ஜனவரிக்கு ஒத்தி வைத்தனர்.இதன் மூலம், ஐந்து ஆண்டுகளாக தங்களின் எதிர்காலம் குறித்து, பரிதவித்து வந்த, 2 லட்சம் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் நடைபெறுவதாக இருந்த கணித திறனறித் தேர்வு தள்ளிவைப்பு


தொடர் மழை காரணமாக பள்ளி மாணவர்களுக்கான கணிதத் திறனறித் தேர்வுவருகிற நவம்பர் 29-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட அறிவியல் அலுவலர் ஜெ.ஆர்.பழனிசுவாமி வெளியிட்ட அறிக்கை:

கணித மேதை சீனிவாச ராமானுஜம் பிறந்த தினத்தை முன்னிட்டு மாவட்ட அறிவியல் மையத்தில் பள்ளி மாணவர்களுக்கு கணித திறனறித் தேர்வு வருகிற ஞாயிற்றுக்கிழமை (நவ.22) நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது.தொடர் மழை காரணமாக இந்தத் தேர்வு நவ. 29-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதுடன், தேர்வுக்கான பதிவுகள் நவ. 26ஆம் தேதி வரை நடைபெறும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசில் 122 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.


மத்திய அரசு நிறுவனங்களுக்கான 122 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பை ஸ்டாஃப் செலக்சன் கமிஷன் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: எம்டிஎஸ் எனப்படும் மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப். இவை தொழில்நுட்பம் சாராதவை.

காலியிடங்கள்: 122 தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.11.2015 மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.ssc.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

7 வது ஊதியக்குழு பரிந்துரைகளால், (primary HM)ஊதியம் எவ்வளவு உயரும்?


7 வது ஊதியக்குழு பரிந்துரைகளால், ஊதியம் எவ்வளவு உயரும்?
************************************
ஒருவரின் 01.01.2016 அன்றைய ஊதியம்: (as a primary HM)
*****************************
அடிப்படை ஊதியம்:18,470
தர ஊதியம் : 4500
மொத்தம் : 22970
*****************************
ஊதிய நிர்ணயம் : a factor of 2.57
22970 x  2.57 = 59,033
******************************
01.01.2016 இல் புதிய ஊதியம்:
*******************************
அடிப்படை ஊதியம் : 59,033   
அகவிலைப்படி : இல்லை
(ஊதியக்குழு நடைமுறை படுத்தப்பட்ட முதல் 6 மாதங்களுக்கு அகவிலைப்படி இருக்காது. ஏனெனில், விலைவாசி உயர்வு அடிப்படையில் தான் ஊதியங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆகவே 01.07.2016 முதல் அகவிலைப்படி விலைவாசி உயர்வின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வழங்கப்படும்)

வீட்டு வாடகைப்படி : 1400 x 2 = 2800
(மாநில அரசு இரண்டு மடங்காக வழங்கினால்) - (மத்திய அரசு ஊழியர்களுக்கு 10%, 20%, 30% என நகரங்களின் நிலைகளுக்கு ஏற்ப வழங்கப்படுகிறது.)

நகர ஈட்டுப்படி : 720  
(மாநில அரசு இரண்டு மடங்காக வழங்கினால்) - (மத்திய அரசு ஊழியர்களுக்கு 10%, 20%, 30% என நகரங்களின் நிலைகளுக்கு ஏற்ப வழங்கப்படுகிறது.)  

மருத்துவப்படி : 200 
(மாநில அரசு இரண்டு மடங்காக வழங்கினால்)

மொத்தம் : 62, 753

*********************************
ஊதியக்குழு அறிக்கைக்கு முந்தைய ஊதியம் :
அடிப்படை ஊதியம்:18,470
தர ஊதியம் : 4500
மொத்தம் : 22970
************************************
01.01.2016 அன்று அகவிலைப்படி 125% : 28,713
(Expect 6% DA hike from 01.01.2016)
வீட்டு வாடகைப்படி : 1400
நகர ஈட்டுப்படி :360
மருத்துவப்படி : 100
மொத்தம் : 53,543

********************

வித்தியாசம் : 9,210

********************

தோராய ஊதிய உயர்வு : 17%

7 வது ஊதியக்குழு பரிந்துரைகளால், இடைநிலை ஆசிரியருக்கு ஊதியம் எவ்வளவு உயரும்?


7 வது ஊதியக்குழு பரிந்துரைகளால், இடைநிலை ஆசிரியருக்கு ஊதியம் எவ்வளவு உயரும்?
************************************
இடைநிலை ஆசிரியர் ஒருவரின் 01.01.2016 அன்றைய ஊதியம்:
*****************************
அடிப்படை ஊதியம்: 6600
தர ஊதியம் : 2800
மொத்தம் : 9400
*****************************
ஊதிய நிர்ணயம் : a factor of 2.57
9400 x  2.57 = 24,158
******************************
01.01.2016 இல் புதிய ஊதியம்:
*******************************
அடிப்படை ஊதியம் : 24,158   
அகவிலைப்படி : இல்லை
(ஊதியக்குழு நடைமுறை படுத்தப்பட்ட முதல் 6 மாதங்களுக்கு அகவிலைப்படி இருக்காது.

ஏனெனில், விலைவாசி உயர்வு அடிப்படையில் தான் ஊதியங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஆகவே 01.07.2016 முதல் அகவிலைப்படி விலைவாசி உயர்வின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வழங்கப்படும்)

வீட்டு வாடகைப்படி : 540 x 2 = 1080
(மாநில அரசு இரண்டு மடங்காக வழங்கினால்) - (மத்திய அரசு ஊழியர்களுக்கு 10%, 20%, 30% என நகரங்களின் நிலைகளுக்கு ஏற்ப வழங்கப்படுகிறது)

மருத்துவப்படி : 200 
(மாநில அரசு இரண்டு மடங்காக வழங்கினால்)

மொத்தம் : 25,438

*********************************
ஊதியக்குழு அறிக்கைக்கு முந்தைய ஊதியம் :
அடிப்படை ஊதியம்:6600
தர ஊதியம் : 2800
மொத்தம் : 9400
************************************
01.01.2016 அன்று அகவிலைப்படி 125% : 21,150
(Expect 6% DA hike from 01.01.2016)
வீட்டு வாடகைப்படி : 540
மருத்துவப்படி : 100
மொத்தம் : 21,790

********************

வித்தியாசம் :3,648

********************

தோராய ஊதிய உயர்வு : 14

ஈரோடு: கால்நடை ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு பதிவு மூப்புபட்டியல் வெளியீடு


கால்நடை ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு பதிவு மூப்பு பட்டியலை ஈரோடுமாவட்ட வேலைவாய்ப்புத்துறை வெளியிட்டுள்ளது.இது குறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் இன்று வெளியிட்டுள்ள செய்தி:

தமிழகம் முழுவதும் 271 கால்நடை ஆய்வாளர் (பயிற்சி) பணி காலியிடங்கள் உள்ளதாக கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் இயக்குநர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சித்துறை இயக்குநர் மூலம் மாநில அளவிலான பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.07.2014அன்று 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கலாம். பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற தாழ்த்தப்பட்ட அருந்ததியர், எஸ்சி, எம்பிசி, பிசி, பிசி(முஸ்லீம்) ஆகிய இனத்தவர்கள் 46 வயதுக்குள் இருக்க வேண்டும்.இதில் எஸ்சிஏ பிரிவில் உள்ளவர்களில் 27.06.2007 வரை பதிவு செய்துள்ளவர்களும், எஸ்சி பிரிவில் 12.08.1996 வரை பதிவு செய்துள்ளவர்களும், பிசி, எம்பிசியை சேர்ந்தவர்களில் 29.12.1995 வரை பதிவு செய்தவர்களும், பிசி (முஸ்லீம்) பிரிவை சேர்ந்தவர்கள் 20.04.2007 வரை பதிவு செய்தவர்கள் உத்தேச பதிவு மூப்புக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.இதுதவிர முன்னுரிமை உள்ளவர்கள் இன வாரியாக, தேதி வாரியாக பதிவு செய்துள்ளவர்களின் பட்டியல் ஈரோடு சென்னிமலை சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பொது அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.

அறிவித்துள்ள கல்வி தகுதி உள்ளவர்கள் தங்களது அனைத்து அசல் கல்வி சான்றுகள், சாதிச்சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் தற்போதுவரை புதுப்பிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை மற்றும் அதன் ஆன்லைன் பிரிண்ட் அவுட் ஆகியவற்றுடன் வரும் நவ.23-ம்தேதி காலை 10 மணியளவில் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து தங்களது பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

IGNOU: Hall Tickets for December 2015 Term End Examination

Pay commission new pay calculator

Primary &Upper Primary CRC

Rc.No.1108/A11/SSA/2015
Primary & Upper Primary CRC
Topic: Remedial Teaching for late Bloomers
Primary CRC
State level
24.11.2015
Dt level
27.11.2015
CRC level
05.12.2015
Upper Primary CRC
State level
25.11.2015
Dt level
30.11.2015
CRC level
12.12.2015

குழந்தை நேயப்பள்ளிகள்

குழந்தை நேயப்பள்ளிகள்

Pay commission-ல் எப்படி fitment formula மூலம் புதிய ஊதியம்  கணக்கிடப்படுகிறது .........?


தற்போது D.A 119%
01-01-2016 - ல் எதிர் பார்க்கப்படும் 6% கூடுதல் D.A உடன் மொத்த D.A 125%.
Pay 100% + D.A 125%
= 225% = 2.25
# ஒரு வேளை அரசின் அளிப்பாக கூறப்படும்  15% ஊதிய உயர்வு எனில்,
F.F = 2.25 + ( 2.25 × 15% )
       = 2.58
# ஒரு வேளை தொழிற் சங்கங்களின் குறைந்த பட்ச கேட்பான 30% உயர்வு எனில்,
F.F = 2.25 + ( 2.25 × 30% )
       = 2.92
இந்த F.F ( Fitment Formula ) -ஐ நமது தற்போதைய BASIC உடன் பெருக்கினால் நமது புதிய அடிப்படை ஊதியம் கிடைக்கும்.......
கல்விச்செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள கீழ்கண்ட link யை click செய்து playstore ல் download செய்து பயன்பெறவும்.
Take a look at "Kalvisiragugal" - https://play.google.com/store/apps/details?id=kalvisirugugal3834.vinebre

7–வது சம்பள கமிஷன் சிபாரிசுகளின் முக்கிய அம்சங்கள் வருமாறு:–

7–வது சம்பள கமிஷன் சிபாரிசுகளின் முக்கிய அம்சங்கள் வருமாறு:–

*மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும். இதில், சம்பளம் 16 சதவீதமும், இதர படிகள் 63 சதவீதமும் உயர்த்தப்பட வேண்டும்

.*ஓய்வூதியதாரர்களுக்கு 24 சதவீத ஓய்வூதிய உயர்வு.

*மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் 3 சதவீத ஊதிய உயர்வு.குறைந்தபட்ச சம்பளம் ரூ.18 ஆயிரம்

*குறைந்தபட்ச சம்பளம் ரூ.18 ஆயிரமாகவும், அதிகபட்ச சம்பளம் ரூ.2 லட்சத்து 25 ஆயிரமாகவும் இருக்க வேண்டும். தற்போது, ரூ.90 ஆயிரம் சம்பளம் பெற்று வரும் மந்திரிசபை செயலாளர், இனிமேல் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் சம்பளம் பெறுவார்.

*இந்த சிபாரிசுகள், அடுத்த ஆண்டு ஜனவரி 1–ந் தேதி முதல் அமல்.*பணிக்கொடை உச்சவரம்பு, ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு. அத்துடன், எப்போதெல்லாம் அகவிலைப்படி 50 சதவீதம் உயர்கிறதோ, அப்போதெல்லாம் பணிக்கொடை உச்சவரம்பு 25 சதவீதம் உயர வேண்டும்.

*இந்த சம்பள உயர்வால், 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 52 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவார்கள். மேலும், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்களும் பலன் அடைவார்கள்.ரூ.1.02 லட்சம் கோடி கூடுதல் செலவு

*சம்பள உயர்வால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் கோடி கூடுதல் செலவாகும். (இதில், பொது பட்ஜெட்டில் ரூ.73 ஆயிரத்து 650 கோடியும், ரெயில்வே பட்ஜெட்டில் ரூ.28 ஆயிரத்து 450 கோடியும் ஏற்றுக் கொள்ளப்படும்.)

*வீட்டுக்கடன் வட்டியுடன் கூடிய வீட்டுக்கடனுக்கான உச்சவரம்பு ரூ.7 லட்சத்து 50 ஆயிரத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்வு. வட்டி இல்லாத அனைத்து கடன் திட்டங்களும் கைவிடப்பட வேண்டும்

.*ராணுவத்தினரைப் போலவே, இதர மத்திய அரசு ஊழியர்களுக்கும் திருத்தப்பட்ட ஓய்வூதிய திட்டம் அமல்.*ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிமுகம்.

*குரூப் இன்சூரன்சு திட்டத்தின் கீழ், மாதாந்திர பிடித்தம் அதிகரிப்பதுடன், காப்பீட்டு தொகையும் அதிகரிக்கப்பட வேண்டும்.

*52 படிகள் கைவிடப்பட வேண்டும். மேலும் 36 படிகள், தற்போதைய படிகளுடனோ அல்லது புதிதாக அறிமுகமாகும் படிகளுடனோ இணைக்கப்பட வேண்டும்.

*கிரேடு சம்பளம், ஒட்டுமொத்த சம்பளத்துடன் இணைப்பு.ராணுவ சேவை ஊதியம்

*ராணுவ பணியின் பல்வேறு அம்சங்களுக்காக இழப்பீடாக வழங்கப்படும் ‘ராணுவ சேவை ஊதியம்’, ராணுவத்தினருக்கு மட்டுமே நீடிக்க வேண்டும். அதன்படி, சர்வீஸ் அதிகாரிகளுக்கான ராணுவ சேவை ஊதியம், ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரத்து 500 ஆக உயரும். நர்சிங் அதிகாரிகளுக்கான ராணுவ சேவை ஊதியம், ரூ.4 ஆயிரத்து 200–ல் இருந்து ரூ.10 ஆயிரத்து 800 ஆக உயரும். போரில் ஈடுபடுத்தப்படாத ராணுவத்தினருக்கான ராணுவ சேவை ஊதியம், ரூ.1,000–ல் இருந்து ரூ.3 ஆயிரத்து 600 ஆக உயரும்

.*குறுகிய பணிக்கால அதிகாரிகள், தங்கள் பணிக்காலத்தில் 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளுக்குள் எப்போது வேண்டுமானாலும் ராணுவத்தை விட்டு வெளியேறலாம்.இவ்வாறு 7–வது சம்பள கமிஷன் சிபாரிசு செய்துள்ளது.

📚கல்விச்செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள கீழ்கண்ட link யை click செய்து playstore ல் download செய்து பயன்பெறவும்.
Take a look at "Kalvisiragugal" - https://play.google.com/store/apps/details?id=kalvisirugugal3834.vinebre

பள்ளி திறந்ததும் வகுப்பு நேரம் கூடுது


வட கிழக்கு பருவ மழை வெள்ளத்தால், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், தீபாவளிக்குப் பின், 10 வேலை நாட்கள், பள்ளி, கல்லுாரிகள் செயல்படவில்லை. வரும் 23 முதல், பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன.கடந்த ஒன்றரை மாதத்தில், 20 நாட்கள் மட்டுமே, பள்ளி, கல்லுாரிகளில் பாடங்கள் நடத்தப்பட்டுள்ளன. மற்ற நாட்களில், பண்டிகை விடுமுறை, மழை விடுமுறை விடப்பட்டு விட்டது.

இதனால், பெரும்பாலான பாடங்கள் இன்னும் முடிக்கப்படவில்லை.இதனால், பாடங்களை முடிக்க ஆசிரியர்கள், கல்வித் துறையினர் திட்டமிட்டுள்ளதாவது:

* மழைக்காக விடுமுறை விடப்பட்ட மாவட்டங்களில், பள்ளிகளுக்கு, மதிய இடைவேளை நேரத்தைக் குறைத்து; மாலை நேரத்தில், கூடுதல் நேர பாடப்பிரிவு ஒதுக்கி பாடங்கள் நடத்தப்படும
்* சனிக்கிழமைகளில், 1ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பள்ளிகள்முழு நேரம் இயக்கப்படும
்* மழையால், கல்லுாரிகளில் தேர்வுகள் ரத்தாகி உள்ளதால், தேர்வு நாட்களை குறைத்து, மற்ற நாட்களில், கூடுதல் பாட வேளைகள் ஏற்படுத்தப்படும்.

பிளஸ் 2 தேர்வுக்கு நவ., 27 வரை விண்ணப்பிக்கலாம்


நவ.20-பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க, கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மார்ச் மாதம் நடக்கவுள்ள, பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுத விரும்பும்தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க, நவ., 27 வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுத் துறையின் சேவை மையங்களுக்கு நேரில் சென்று, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

உதகையில் பள்ளிகள் விடுமுறை


கனமழை காரணமாக உதகை,குன்னூர்,குந்தா,கோத்தகிரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

வரலாற்றில் இன்று : November 20

வரலாற்றில் இன்று :
November 20

**யுனிசெஃப் குழந்தைகள் தினம்

**வியட்நாம் ஆசிரியர் தினம்

**மைக்ரோசாஃப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டது(1985)

**உக்ரேன் குடியரசாக அறிவிக்கப்பட்டது(1917)

**ஜெர்மனியின் நாணயம் பேப்பியர்மார்க், ரெண்டென்மார்க் ஆல மாற்றப்பட்டது(1923)

நவம்பர் – 20

ஆப்பிரிக்க தொழில்மயமாக்கல் தினம்

(Africa Industrialization Day)

ஆப்பிரிக்கா இயற்கை வளம் நிறைந்த நாடு. கடுமையாக உழைக்கும் தொழிலாளர்கள் நிறைந்த நாடு. ஆனால் தொழில் வளர்ச்சி ஏற்படாததால் பஞ்சம், பசி, பட்டினி போன்றவை நிரந்தரமானதாக உள்ளது. வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், வன்முறை, உணவுப் பஞ்சம் போன்ற மிகப் பெரிய சவால்கள் உள்ளன. ஆகவே ஆப்பிரிக்காவின்மீது ஐ.நா. தனிக்கவனம் செலுத்தி நவம்பர் 20ஐ ஆப்பிரிக்க தொழில்மயமாக்கல் தினமாக அறிவித்தது.

சர்வதேசக் குழந்தைகள் தினம்
(Universal Children’s Day)

ஐ.நா. பொதுச்சபை குழந்தைகளின் நலனையும், உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் 1954ஆம் ஆண்டில் குழந்தை உரிமைகள் சட்டத்தைக் கொண்டுவந்தது. வறுமை, எட்ய்ஸ் போக்கவும், குழந்தைகளுக்கு வராமல் தடுக்கவும், யுனிசெஃப் முயன்று வருகிறது. குழந்தைகளின் நலனைப் பாதுகாக்க ஐ.நா. சபை 1954ஆம் ஆண்டில் நவம்பர் 20ஐ சர்வதேசக் குழந்தைகள் தினமாக அறிவித்தது.

நவம்பர் - 20 சர்வதேசக் குழந்தைகள் தினம்

நவம்பர் - 20
சர்வதேசக் குழந்தைகள் தினம்
(Universal Children’s Day)

📚ஐ.நா. பொதுச்சபை குழந்தைகளின் நலனையும், உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் 1954ஆம் ஆண்டில் குழந்தை உரிமைகள் சட்டத்தைக் கொண்டுவந்தது. வறுமை, எட்ய்ஸ் போக்கவும், குழந்தைகளுக்கு வராமல் தடுக்கவும், யுனிசெஃப் முயன்று வருகிறது. குழந்தைகளின் நலனைப் பாதுகாக்க ஐ.நா. சபை 1954ஆம் ஆண்டில் நவம்பர் 20ஐ சர்வதேசக் குழந்தைகள் தினமாக அறிவித்தது.

ஆண்டுக்கு 40 நாள் விடுமுறை உ.பி., அரசு ஊழியர்களுக்கு ஜாலி

உ.பி.,யில், இந்தாண்டுக்கான அரசு விடுமுறை, 40 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உ.பி.,யில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது; இங்கு, சூரியனுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும், 'சத்' திருவிழா மிகவும் பிரபலம்.
இதுவரை, இந்த திருவிழாவுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது இல்லை. முதல் முறையாக, இந்தாண்டு, அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து,இந்தாண்டில், அரசு விடுமுறை, 40 நாட்களாக அதிகரித்துஉள்ளது.இதுகுறித்து, உ.பி., அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:உ.பி.,யில், சில ஆண்டுகளுக்கு முன்வரை, ஆண்டுக்கு, 20 நாட்கள் மட்டுமே, அரசு விடுமுறை தினமாக இருந்தது. சமாஜ்வாதி அரசு பதவியேற்றதும், பல்வேறு சமூகத்தினரின் ஓட்டு வங்கியை குறிவைத்து, அந்தந்த சமூகம் சார்ந்த தலைவர்களின் பிறந்த நாட்களை, அரசு விடுமுறை நாட்களாக அறிவித்துள்ளது. விடுமுறை நாட்கள் அதிகரித்துள்ளதால், அரசு நிர்வாக பணிகளில் தேக்க நிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.தமிழகத்தில், இந்தாண்டுக்கான அரசு விடுமுறை, 24 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

7 th PAY COMMISSION - PAY BAND DETAILS

7 th PAY COMMISSION - PAY BAND DETAILS

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!