Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 25 November 2015

இந்திய அரசமைப்பு சட்ட நாள் உறுதிமொழி

அனைத்து வகை பள்ளிகளிலும் 26-11-2015 அன்றைய நாளினை இந்திய அரசமைப்பு சட்டத்தின் நாளாக(Constitution Day) அனுசரித்து உறுதிமொழி ஏற்றல்

திருவள்ளூர் மாவட்டம்: சில பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும். வெள்ளநீர் வடியாத சில இடங்களில் உள்ள பள்ளிகள் மட்டும் நாளை செயல்படாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ஆவடி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள அரசு உறைவிட மேல்நிலைப் பள்ளி, மணவாளன்நகர், அயனம்பாக்கம், முகப்பேர் மேற்கு, திருவொற்றியூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, முகப்பேர் கிழக்கில் உள்ள ஆண்கள், பெண்கள் பள்ளி, சுபரெட்டிபாளையம், நாபாளையம் ஆதிதிராவிடர் பள்ளி, புங்கத்தூர் ஆதிதிராவிடர் பள்ளி ஆகிய பள்ளிகள் மட்டும் நாளை இயங்காது என மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்க ஏற்பாடு

மழைக்காலங்களில் ஏற்படும் காய்ச்சல், தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் இன்று முதல் 5 நாட்களுக்கு நிலவேம்பு குடிநீர் இலவசமாக வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

நிலவேம்பு குடிநீர் இன்று முதல் வரும் 29-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. இது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சித்த மருத்துவப் பிரிவுகள்,என தமிழகம் முழுவதும் 1,061 இடங்களில் அளிக்கப்படுகிறது.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்று நோய்கள் வராமல் தடுப்பதற்காக, 9 வகையான மூலிகைகள் கலந்து நிலவேம்பு குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.
10 ஆம் வகுப்பு அறிவியல் பாடநூல் (2015 - 2016) பிழை திருத்தம்தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் , நேரடியாக MA பட்டம் பெற்றவர்களுக்கு என்ன என்ன இழப்புகள் ஏற்படும் என்பதற்காக , கேட்கப்பட்ட கேள்விகளும் , அரசு கல்வித் துறை பதில்களும்.DSE Proceedings 2476967 Date:16/03/1993-தற்காலிக பட்டச்சான்று அளித்து ஊக்க ஊதியம் பெறுதல்7th Pay: ஊதியக் குழு பரிந்துரை-225 மடங்கு உயர்வு

இறுதி வாக்காளர் பட்டியல் இணையத்தில் வெளியீடு : தேர்தல்அலுவலர் அறிவிப்பு


தமிழகத்தில் பெயர் சேர்த்தல் திருத்தம் குறித்த வாக்காளர் பட்டியல் இறுதிபடுத்தபட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வீடு தோறும் சோதனைக்கு வரும் வாக்கு சாவடி அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என தேர்தல் அலுவலர் கேட்டு கொண்டுள்ளார்.

இது குறித்து மாநில தேர்தல் அலுவலர் அறிவிப்பு:தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் 2016ம் ஆண்டு வருகிறது. ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் சரிபார்த்து வெளியிட்டு வருகிறது. இதற்காக தமிழகம் முழுதும் பல்வேறு முகாம்களை நடத்தி வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டது. இதற்காக முகாம்களில் பொதுமக்கள் பெயர் சேர்த்தல் , நீக்கம், மாற்றம், விலாச மாற்றம், புதிய வாக்காளர் சேர்ப்பு ஆகியவற்றுக்காகபடிவங்கள் வழங்கப்பட்டது.இதனடிப்படையில் இறுதி படிவங்கள் கடந்த செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 24 வரை பெறப்பட்டது. மேலும் எஸ்.எம்.எஸ், ஈமெயில் மூலமும் பெறப்பட்ட விபரங்கள் அனைத்தும் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்களால் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டது.

இதற்கான இறுதிகட்ட ஆய்வை மேற்கொள்ள வாக்கு சாவடி அதிகாரிகள் வீடுதோறும் வர உள்ளனர்.அவர்களுக்கு வாக்காளர்கள் ஒத்துழைப்பு அளிக்கும் படி கேட்டுகொள்கிறோம்.மேலும் இதற்கான விபரங்களை தேர்தல் ஆணைய இணையதளமான election.tn.gov.in என்ற தளத்தில் பார்க்கலாம். மேலும் வாக்காளர்கள் தங்கள் செல்போன் எண்களை அளித்தால் அவ்வப்போதைய தகவல்கள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

10ம் வகுப்பு துணைத்தேர்வு இன்று மறுகூட்டல் ரிசல்ட்


பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுக்கான மறுகூட்டல் முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பத்தாம் வகுப்பில், செப்டம்பர் மற்றும் அக்டோபரில் நடந்த துணைத்தேர்வு முடிவுகள், ஏற்கனவே வெளியிடப்பட்டு உள்ளன. இத்தேர்வில், மறுகூட்டலில் விண்ணப்பித்தோருக்கான மதிப்பெண்கள், www.tndqe.in என்ற இணையதளத்தில், இன்று மாலை, 4:00 மணிக்கு வெளியிடப்படும்.பதிவெண் இல்லாத மாணவர்களுக்கு, மதிப்பெண்ணில் மாற்றம் இல்லை என, எடுத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இளைஞர் படையினருக்குநவ.29ல் எழுத்துத்தேர்வு


தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படையினருக்கு, 29ம் தேதி, எழுத்துத்தேர்வு நடக்கிறது.தமிழக போலீசில், போலீசாருக்கு உறுதுணையாக செயல்பட, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, சிறப்பு காவல் இளைஞர் படையினர் தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்கள், தங்களை போலீசாராக அறிவிக்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடுத்ததை அடுத்து, சில மாதத்திற்கு முன், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.இந்நிலையில், தமிழகம் முழுவதும், 29ம் தேதி, சிறப்பு காவல் இளைஞர் படையினருக்கான எழுத்துத்தேர்வை, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்துகிறது. அதற்கான நுழைவுச்சீட்டு, இளைஞர் படையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.தேர்வில் வெற்றி பெறுபவர்கள், தமிழக போலீசாராக மாற்றப்படுவர் என, போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏழாவது சம்பள கமிஷன் சம்பள உயர்வு பரிந்துரையால் பணித்திறன் அதிகரிக்கலாம்!


மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரை மகிழ்ச்சி அளிக்கும். மத்திய அரசு ஊழியர்கள், 48 லட்சம் பேர் மட்டுமின்றி, பென்ஷன் பெறுவோரும் பயனடைவர். இந்த பரிந்துரையை அரசிடம் தயாரித்து சமர்ப்பித்த நீதிபதி மாத்துாரின் நுாற்றுக்கணக்கான பக்கங்கள் கொண்ட அறிக்கையில், சில புதிய அணுகுமுறைகள் பரிந்துரைக்கப் பட்டுள்ளன.

இதன்படி, கடைநிலை ஊழியர் சம்பளம், மாதத்திற்கு, 18 ஆயிரம் ரூபாய். மத்திய அரசின் கேபினட் செயலர் அந்தஸ்தில் இருப்போருக்கு,மாதச் சம்பளம், 2.25 லட்சம் ரூபாய். அரசு ஊழியர் சம்பளம், 16 சதவீதம் உயரும். அதே போல பென்ஷன் உயர்வு, 24 சதவீதமாகும்.அடுத்த நிதியாண்டில் அமலாகும் வாய்ப்புள்ள இந்த பரிந்துரையால், அரசுக்கு ஆண்டுக்கு, 1.02 லட்சம் கோடி செலவாகும். இதில் ரயில்வேத் துறை தன் ஊழியர்களுக்கு, 28,450 கோடியை தர நேரிடும். இது, அரசின் நிதிப் பற்றாக்குறையை அதிகரிக்காது என, தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது.மேலும், முந்தைய ஆறாவது சம்பளக் கமிஷன் பரிந்துரை ஏற்கப்பட்டு, அதன் பலன்கள் காலதாமதமாக தந்ததால், அரசுக்கு ஏற்பட்ட கூடுதல் செலவினம் போல, இத்தடவை வராது.இந்த அறிக்கையில் மொத்தமுள்ள அரசு ஊழியர்களில், 29 சதவீதம் பேர், 50 முதல், 60 வயதுள்ளவர்கள். சில ஆண்டுகளில் இவர்கள் ஓய்வு பெறுவதால், மத்திய அரசு ஊழியர்கள் எண்ணிக்கை குறையும்.

இதை அரசு எளிதாக நிரப்பும் என்றாலும், அடுத்தடுத்த பதவி உயர்வு மூலம் பணியாளர்களை நிரப்பும் நடைமுறையால், நிர்வாகம் சிறப்படையுமா என்பது குறித்து இனி அரசு முடிவு எடுக்கலாம். ஏனெனில், திறன்மிக்கவர்களை அரசுப் பணியில் அமர்த்த கமிஷன் ஆலோசனைதெரிவித்திருக்கிறது.சமீபத்தில் உயர் அதிகாரிகள் ஆற்றும் பணிகளில் ஊழல் முறைகேடு இருப்பின், உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அறிவித்திருக்கிறது. ஏற்கனவே மத்திய அரசு, 'சி அண்டு டி பிரிவு சேர்க்கையில் நேரடித்தேர்வு கிடையாது' என, அறிவித்திருக்கிறது.இப்பிரிவில் பணியாற்றுவோருக்கு இனி மாதச் சம்பளம், 18 ஆயிரம் என்பதும், மற்ற அரசு பணிச்சலுகைகள் இருப்பதும், அரசு வேலை மீது அதிக ஈர்ப்பு ஏற்படுத்தும். அதேபோல, ஐ.ஏ.எஸ்., பதவியில் சேரும் ஒருவர், இனி மாதச்சம்பளம், 50 ஆயிரத்துக்கு குறையாமல் பெறலாம்.மற்ற சம்பளப்படிகள் ஒழங்குபடுத்தப்பட்டது நல்ல அணுகுமுறையாகும். ஆனால், பணியில் இருப்போர் திறமையை அளவிடும் நடைமுறை வரப்போவது நிச்சயம்.ஏற்கனவே குறித்த நேரத்தில் பணிக்கு வருவது, கோப்புகளை காத்திருக்காமல் அனுப்புவது, சிவப்பு நாடா அணுகுமுறைக்கு தடை கொண்டு வரும் முயற்சிகளாகும்.

நிரந்தர வேலை, ஓய்வு பெற்ற பின் பென்ஷன் என்ற கருத்து மேலோங்கும் போது, கட்டுப்பாடு வளையத்திற்குள் பணியாளர்கள் வரலாம்.அமெரிக்காவில், லட்சம் பேருக்கு மேல் உள்ள அரசு ஊழியர் எண்ணிக்கைசதவீதத்தை ஒப்பிட்டால், அதில் மூன்றில் ஒரு பங்கு கூட இங்கு இல்லை என்ற வாதம் சரியானதல்ல.இத்தடவை துணை ராணுவப் பணியில் இருப்பவர்களுக்கு கணிசமான சம்பள உயர்வு தருவது, உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்த உதவிடும்.இச்சம்பள உயர்வு விலைவாசி உயர்வை அதிகரிக்கும் என்பதை விட, நாடு முழுவதும் பலரது வாங்கும் சக்தி திறனையும், சேமிப்பையும் அதிகரிக்கும். இது, இன்றைய இந்தியப் பொருளாதாரம் சமநிலை பெற உதவும்.

மாநில அரசுகள் இதை அமல்படுத்தும் போது, நிதிச் சுமை ஏற்படும் என்றாலும், வளர்ச்சிப் பணிகள் தவிர, கவர்ச்சியாக அளிக்கும் மானியங்களை குறைத்தால் சமாளிக்கலாம். அரசு பணியாளர்கள் பலரது ஊழல் ஆதரவு மனோபாவம் குறைவதற்கு, சம்பள உயர்வு உதவ வேண்டும்.சராசரி ஆயுள் அதிகரித்ததால், இனி வரும் காலங்களில் பென்ஷன் சுமை பெரிதாகலாம். அதற்கு மத்திய அரசு புதிய அணுகுமுறைகளை கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம்.

அரசு அலுவலகங்களில் சி.சி. டி.வி. கேமரா: 2 மாதங்களுக்குள்முடிவெடுக்க அரசுக்கு உத்தரவு

அரசு அலுவலகங்களில் சி.சி. டி.வி. கேமரா: 2 மாதங்களுக்குள்முடிவெடுக்க அரசுக்கு உத்தரவு
இடைத்தரகர்களால் நடைபெறும் ஊழலைத் தடுப்பதற்கு அனைத்து அரசு அலுவலகங்களிலும் சி.சி. டி.வி. கேமரா பொருத்தக் கோரிய மனுவை 2 மாதங்களுக்குள் தமிழக அரசு முடித்து வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.இதுதொடர்பாக கோவை நுகர்வோர் குரல் அமைப்பைச் சேர்ந்த என்.லோகு தாக்கல் செய்த மனு விவரம்:

அரசு அலுவலகங்களுக்குள் அங்கீகாரமில்லாதவர்கள் ஆவணங்களைக் கையாளவும்அனுமதிக்கப்படுகின்றனர். இதனால், ஆவணங்கள் பாதுகாப்பில்லாமல், காணாமல் போகவும் வாய்ப்புள்ளது. இதனால் பாதிப்புக்குள்ளாவது பொதுமக்கள்தான்.இதுபோன்றவர்கள் நுழைய கடுமையான கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை என்பதால், இடைத்தரகர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். எனவே, அரசு அலுவலகங்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.எனவே, ஊழலைத் தடுக்கவும், இடைத்தரகர்களை அடையாளம் காணவும், அவர்கள் எந்த அதிகாரியை சந்திக்கிறார்கள் என்பதைக் கண்டறியவும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் சி.சி. டி.வி. கேமராக்களை பொருத்த உத்தரவிட வேண்டும்என கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி புஷ்பா சத்ய நாராயணா ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவு:இது தமிழக அரசின் கொள்கை முடிவுக்கு உள்பட்டது. மனுதாரின் கோரிக்கை மனுக்களை சட்டவிதிகளின்படி இரண்டு மாதங்களுக்குள் அரசு முடித்து வைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்கள் கணக்கெடுப்பு


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் எத்தனை பேர் என்பது குறித்து தமிழகம் முழுவதும் தீவிரமாக கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டது. மழை வெள்ளத்தில் பள்ளி மாணவர்களின் பாடபுத்தகங்கள், நோட்டுகள் சேதமடைந்துள்ளன.எனவே, பாதிக்கப்பட்ட பகுதி களில் மாணவர்களுக்கு உடனடியாக இலவச பாடபுத்தகங்கள், நோட்டுகள், ஒரு செட் சீருடை ஆகியவற்றை வழங்க முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, தங்கள் மாவட்டங் களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பற்றிய விவரங்களை வகுப்பு வாரியாக கணக்கிட்டு உடனடியாக தேவையான பாட புத்தகங்கள், நோட்டுகள், சீருடை ஆகியவற்றை வழங்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மாவட்டத்தில் உபரியாக புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் இருந்தால் அவற்றை பயன்படுத்திக் கொள்ளுமாறும், கூடுதல் தேவை இருப்பின் உடனடியாகதொடக்கக் கல்வி இயக்ககத்துக்கும் பள்ளிக்கல்வி இயக்ககத்துக்கும் பட்டியல் அனுப்புமாறும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி, மாநிலம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில்உள்ள மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் (அனைவருக்கும் கல்வி திட்டம்), மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோர் கணக்கெடுத்து வருகின்றனர்

தொடர் கனமழை எதிரொலி; பள்ளிகள் தொடர் விடுமுறையால் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு? கல்வித்துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனை

தொடர் கனமழை காரணமாக பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்க கல்வித்துறை அதிகாரிகள் தீவிரமாகஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அரையாண்டு தேர்வுகள்

பொதுவாக பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகளை டிசம்பர் மாதம் 2 மற்றும் 3-வது வாரங்களில் நடத்திவிட்டு 4-வது வாரம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகள் அளிக்கப்படுவது வழக்கம்.ஆனால் நடப்பாண்டு வடகிழக்கு பருவ மழையின் காரணமாக தொடர் கனமழை பெய்து சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் குடியிருப்புகளில்மழை வெள்ளம் புகுந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.மழை வெள்ளம் காரணமாக கடந்த 12-ந்தேதி முதல் பள்ளி, கல்லூரிகளுக்கும் தொடர்விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.ஒரு சில பகுதிகளில் பள்ளி மாணவர்களின் நோட்டு புத்தகங்களும் மழை வெள்ளத்தில் சேதமடைந்தன. இதனால் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நலன் கருதி புத்தகங்களை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.தற்போது விட்டு விட்டு மழை பெய்து வருவதால் பெரும்பாலான பள்ளி மைதானங்களில் மழை வெள்ளம் தேங்கி கிடப்பதால் வகுப்பறைகளும், கழிவறைகளும் சேதமடைந்தன.இந்தநிலையில் ஒரு சில பள்ளிகள் அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களை குறைத்து விடுமுறை நாட்களை சரி செய்யவும் திட்டமிட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.இதுகுறித்து கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் கூறியதாவது:-

பள்ளி நிர்வாகங்கள்

கனமழை தொடர்ந்து 15 நாட்களுக்கு மேலாக பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களின் எண்ணிக்கையை குறைத்து அந்த நாட்களில் பள்ளிகளை நடத்த சில பள்ளி நிர்வாகங்கள் முடிவு செய்துள்ளனர்.தவிர்க்க முடியாத காரணங்களால் விடுமுறை அளிக்கும் பட்சத்தில் 5-ம் வகுப்புக்கு கீழே உள்ள வகுப்புகளுக்கு வேலை நாட்களை ஈடுகட்ட கூடுதலான நாட்கள் வகுப்புகள் நடத்தப்படுவதில்லை.சில பள்ளி நிர்வாகங்கள் பெற்றோர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அரையாண்டு விடுமுறையில் வெளியூர் செல்லும் திட்டங்களை தீட்ட வேண்டாம். விடுமுறை நாட்களை ஈடுகட்டுவதற்காக அந்த நாட்களில் நாங்கள் பள்ளிகளை நடத்த உள்ளோம் என்று கூறுகின்றனர்.ஒரு சில பள்ளிகள் பெற்றோர்களுக்கு போன் செய்து கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு ஒரு சில நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்படும் மற்ற நாட்களில் வகுப்புகள் நடத்தப்படும் என்கின்றனர்.

விடுமுறையை குறைக்க திட்டம்

விடுமுறை நாட்களை குறைப்பதை விட, தினமும் கூடுதலாக ஒரு மணிநேரம் வகுப்புகளை நடத்தி விடுமுறை நாட்களை அதில் கழிக்கலாம். 10 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடக்கவிருப்பதால் கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும். பெற்றோர்கள் அரையாண்டு விடுமுறை நாட்களை குறைக்காமல், முழு ஆண்டு தேர்வு விடுமுறையை குறைக்கவும் திட்டமிட்டு உள்ளனர்.இவ்வாறு கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் கூறினர்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு?

வடகிழக்கு பருவ மழையால் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிதாக நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டு பாடங்களை முறையாக வழங்கி அவற்றை கற்று தருவதற்கு ஆசிரியர்களுக்கு போதிய கால அவகாசம் தேவைப்படுகிறது. இதனால் அரையாண்டு தேர்வை டிசம்பர் மாதம் இறுதியில் அல்லது ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை நாட்களை சேர்த்து விடப்படும். ஆனால் இந்த ஆண்டு பண்டிகைக்கு மட்டும் விடுமுறை அளித்துவிட்டு சனிக்கிழமை உள்பட அனைத்து நாட்களிலும் பள்ளிகளை நடத்த திட்டமிட்டு உள்ளோம்.இருந்தாலும் மழை நின்றால் தான் பள்ளிகள் திறப்பு தேதி குறித்து முறையாக அறிவிக்க முடியும். அதுவரை எதுவும் கூற இயலாது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

ஐந்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் தவறான விளக்கம்

ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்த அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள்

🌻வண்ணத்துப்பூச்சிகளின் உருமாற்றம் குறித்து 5-ம் வகுப்பு அறிவியல் பாட புத்தகத்தில் தவறான விளக்கம் கூறப்பட்டுள்ளதாக மதுரை அரசுப் பள்ளி மாணவர்கள் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தனர்.

🌻வானிலை மற்றும் காலநிலையை புரிந்து கொள்வோம் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு 23-வது தேசிய மாநாடு நடைபெற உள்ளது.

🌻 இதற்காக மாவட்ட அளவிலான தேர்வு மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

🌻 இதில் 20 அரசு பள்ளிகள், 15 மெட்ரிக் பள்ளிகள், 10 சி.பி.எஸ்.இ பள்ளிகள் என மொத்தம் 150 அறிவியல் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

🌻 400 மாணவர்கள் கலந்து கொண் டனர்.

🌻ஆய்வுக்காக நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள முத்துப் பட்டி பல்கலைக்கழக அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் காலநிலைகளும், பள்ளி வளாக பூச்சிகளும் என்ற தலைப்பை தேர்வு செய்தனர்.

🌻இந்த அணியில் 2 மாணவர்கள், 3 மாணவிகள் இடம் பெற்றிருந்தனர்.
🌻வண்ணத்துப்பூச்சிகளின் வளர்ச்சி நிலை குறித்து அவர்கள் ஆய்வு செய்தனர். 5-ம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் கூறப்பட்டிருந்த செய்முறை விளக்கத்தை மாணவர்கள் உபயோகித்தனர்.

🌻 ஆனால், அவற்றை உபயோகித்து பார்த்தபோது வண்ணத்துப்பூச்சி உருமாறவில்லை.

🌻 எனவே, புத்தகத்தில் தவறான தகவல் இடம் பெற்றிருப்பதாக மாணவர்கள் தாங்கள் சமர்ப்பித்த ஆய்வு கட்டுரையில் கூறியிருந்தனர்.

♦இது குறித்து ஆசிரியை மலர்செல்வி கூறியது:

🌻வாயகன்ற கண்ணாடி பாட்டிலை எடுத்துக் கொள்ளுங்கள். வண்ணத்துப்பூச்சி முட்டையுடன் கூடிய எருக்கஞ்செடி யின் இலையை பாட்டிலில் போடுங்கள். பின்பு மெல்லிய துணியால் பாட்டிலின் வாயை கட்டுங்கள். முட்டைகள் முழு வண்ணத்துப்பூச்சியாக வெளிவரும்
வரை நாள்தோறும் பாட்டிலை உற்றுநோக்குங்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

🌻இதை செய்து பார்த்தோம். முட்டை, லார்வா, கூட்டுப்புழு ஆகிய நிலைகளை கடந்து வண்ணத்துப்பூச்சியாக உருமாற 28 முதல் 30 நாள் ஆகும்.

🌻 எருக்கஞ் செடியின் இலையானது ஒரு வாரத்தில் காய்ந்து போகிறது. எனவே முட்டையை எடுத்து பாட்டிலில் வைத்து பரிசோதித்தபோது வண்ணத்துப்பூச்சியாக உருவாகவில்லை.

🌻 கூட்டுப்புழுவாக மாறிய 4 நாட்களுக்கு பின்னர் பாட்டிலில் வைத்தால்தான் வண்ணத்துப்பூச்சியாக உருமாறுகிறது.

🌻 ஆனால், புத்தகத்தில் முட்டையை எடுத்து பரிசோதித்தால் வண்ணப்பூச்சி உருவாகிறது என தவறான தகவல் இடம் பெற்றுள்ளது.

🌻வண்ணத்துப்பூச்சிகளின் இனப்பெருக்கமானது செப்டம்பர் மாதத்துக்கு பின்னர் தான் நடைபெறுகிறது.

🌻 ஆனால் முதல் பருவத்தேர்வு புத்தகத்திலேயே வண்ணத்துப்பூச்சி குறித்த தகவல் இடம் பெற்றுள்ளதால் மாணவர்கள் பெரும்பாலும் செய்முறை செய்வதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன என்றார்.
www.rkkalvisiragukal.blogspot.com
📚📚📚📚📚📚📚📚📚

நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க, பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வி இயக்குனர் உத்தரவு

பள்ளி வளாகங்களில், கிருமி நாசினி தெளித்து, நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க, பள்ளிக் கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக, பொது சுகாதார இயக்குனர் குழந்தைசாமியின் ஆலோசனையின் படி, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பள்ளிகளின் குடிநீர் அமைப்புகள், பம்புகள், தொட்டிகளில், நோய் கிருமி தேங்கி பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, 'பிளீச்சிங் பவுடர்' மூலம் சுத்தம் செய்ய வேண்டும்

பள்ளி வளாகங்களில், குப்பை தேங்காமல் உடனே அகற்ற வேண்டும்

கொசு உற்பத்தியை தடுக்க, பயன்படுத்தாத பொருட்களை உடனே அகற்ற வேண்டும்

நீர்த்தேக்கம் உள்ள இடங்களின் அருகில், மாணவ, மாணவியர் செல்லாமல் தடுப்புகள் ஏற்படுத்த வேண்டும்

நோய் தொற்று ஏற்படாமல், அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் சுகாதார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

பள்ளி வளாகங்கள், வகுப்பறைகளில் மின் சாதனங்கள் மற்றும் மின் கட்டமைப்புகளை சோதனை செய்து, மின் கசிவு ஏற்படாமல் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று
📚📚📚📚📚📚📚📚📚
📚சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்

📚இந்தோனேஷிய ஆசிரியர் தினம்

📚ஆல்பிரட் நோபல், டைனமைட்டுக்கான காப்புரிமம் பெற்றார்(1867)

📚சுரிநாம் விடுதலை தினம்(1975)

📚பொஸ்னியா ஹெர்செகோவினா தேசிய தினம்(1943)
www.rkkalvisiragukal.blogspot.com
📚📚📚📚📚📚📚📚📚

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!