Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 29 November 2015

Age No Bar For YOGA


Flash News : பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை (30/11/2015) விடுமுறை

  • கடலூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
  •  புதுச்சேரி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

BHARATHIAR UNIVERSITY B.Ed Admission Notification

2 Years B.Ed Programme (2016-18) through the School of Distance Education

>Applications are issued from -02.12.2015

>Last Date for the receipt of filled in applications- 31.03.2016

>Entrance Examination- 24.04.2016

>Cost of Application-Rs.500

www.b-u.ac.in

அரசுப் பள்ளி ஆசிரியரால் துயர் நீங்கிய கிராமம்: தற்கொலை எண்ணத்திலிருந்து தன்னம்பிக்கை பெற்ற மக்கள்

           திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகேயுள்ள காளாச்சேரி மேற்கு கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்புவரை, மாதம் ஒருவர் பூச்சி மருந்து குடித்தும், தூக்கிட்டும், மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துக்கொண்டும் தற்கொலை செய்துகொண்டனர். பல்வேறு காரணங்களால் மக்கள் எடுத்து வந்த இந்த தவறான முடிவை மாற்றி, பொதுமக்களிடம் தன்னம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார் அரசுப் பள்ளி ஆசிரியர் ஆனந்த்.
காளாச்சேரி மேற்கு கிராமத்தில் வசிக்கும் 2 ஆயிரத்துக்கும் மேற் பட்ட மக்களிடம் புத்துணர்ச்சியை ஏற்படுத்தி மாற்றத்தை உருவாக்கியது குறித்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஆனந்த் (30) விவரிக்கிறார்: நான் இந்தப் பள்ளியில், 2012-ல் பணிக்குச் சேர்ந்தேன். சின்னச் சின்ன காரணங்களால் பல மாணவர்களின் தாய் அல்லது தந்தை தற்கொலை செய்துகொண் டதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இந்த நிலையில், பள்ளியில் முதன் முதலாக ஆண்டு விழா நடத்த திட்டமிட்டு அதன்படி நடைபெற்ற விழாவில் மாணவர்களை வைத்து ஒரு நாடகத்தை நடத்தினோம்.
தாயும், தந்தையும் தற்கொலை செய்துகொண்டுவிடவே வேறு வழி யில்லாத மகன் பிச்சை எடுப்பதாக ஒரு காட்சியை அந்த நாடகத்தில் வைத்திருந்தோம். மறுநாள் ஊர் பெரியவர்கள் பள்ளிக்கு வந்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக நாடகம் நடத்தியதற்காக என்னை யும் சக ஆசிரியர்களையும், மாண வர்களையும் பாராட்டினர். இந்த பாராட்டு எனக்கு ஒரு உத்வேகத்தை கொடுத்தது.
பின்னர் அந்த ஊரில் உள்ள இளைஞர்களுடன் பேசி, தற் கொலைகளைத் தவிர்க்க தன்னம் பிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டோம். ஊரில் தற்கொலை செய்துகொண்டவர்கள் குறித்த விவரத்தைச் சேகரித்தோம். அடுத்த ஓரிரு மாதங்களில் வீதி நாடகம் ஒன்றை அரங்கேற்றினோம். தற் கொலை செய்துகொண்டவர்களின் பட்டியலை அதில் வாசித்தபோது ஊர் மக்கள் மலைத்துப் போயினர்.
இதைத்தொடர்ந்து விடுமுறை நாட்களில் வீடுவீடாகச் சென்று, ‘தற்கொலையும், அதன்பிறகு ஏற் படும் பிரச்சினைகளும்’ என்ற கருத்தை மையமாகக் கொண்டு பேசி மக்களிடம் தன்னம்பிக்கையை வளர்த்தோம்.
இப்போது, இந்த ஊரில் கடந்த 3 ஆண்டுகளாக எவரும் தவறான முடிவுக்கு வர வில்லை. இந்த மாற்றத்துக்கு இங் குள்ள மாணவர்கள்தான் முதல் காரணம் என்று அவர் கூறினார்.
பள்ளி மாணவர்களிடம் கேட்ட போது, “ஆனந்த் சாருடன் வீடு வீடாகச் சென்று நாங்கள் விழிப் புணர்வையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தினோம். இது குறித்து ஒரு ப்ராஜெக்ட் தயா ரித்து, அதை தமிழக அரசுக்கு அனுப்பினோம். அரசு, ‘ஐ கேன்’ விருதுக்குப் பரிந்துரைத்தது. 2013-ல் குஜராத்தில் இந்த விருது எங்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து 2014-ல் 2 விருதுகள், 2015-ல் ஒரு விருது என தொடர்ந்து 3 ஆண்டுகளில் 4 விருதுகளை நாங்கள் பெற்றோம்.
வரும் டிசம்பர் 2-ம் தேதி குஜராத் மாநிலத்தில் குழந்தை கள் அறக்கட்டளை சார்பில் நடைபெறவுள்ள கருத்தரங்கத்தில் கலந்துகொள்ள உள்ளோம்” என்றனர்.
இப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர் ஆனந்த் ஆகியோரை தன்னலமற்ற சேவையாளர்கள் எனத் தேர்வு செய்துள்ள நடிகர் லாரன்சின் ‘அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை’ ரூ.1 லட்சம் பரிசாக வழங்கியுள்ளது. இந்த நிதியைக்கொண்டு கொரடாச்சேரி அரசு மகளிர் பள்ளிக்கு ரூ.52 ஆயிரம் மதிப்பில் நாப்கின் எரியூட்டும் இயந்திரம், மேலராதாநல்லூர் பள்ளிக்கு சின்டெக்ஸ் வாட்டர் டேங்க் ஆகியவற்றை வாங்கித் தந்துள்ளதாக ஆசிரியர் ஆனந்த் தெரிவித்தார்.

30 லட்சம் பேருக்கு காஸ் மானியம் 'கட்!'

         இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு, தமிழகத்தில், 1.60 கோடி வீட்டு சமையல்காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர் உள்ளனர். மத்திய அரசு, மானிய செலவை குறைக்க, ஜனவரி மாதம், நேரடி மானிய திட்டத்தை அறிமுகம் செய்தது.இத்திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர், சந்தை விலையில், சிலிண்டர் வாங்க வேண்டும். பின், அதற்கான மானியம், அவரின் வங்கி கணக்கில் வரவுவைக்கப்படும். தற்போது, ஆண்டுக்கு, 12 சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.         மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ., - தொழிலதிபர்கள் என, வசதி படைத்த பலர், மானிய விலை சிலிண்டரை பயன்படுத்தி வருகின்றனர். இதை தடுக்க, வருமான வரி செலுத்துவோருக்கு, மானியம் ரத்து செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:நாட்டில், 16 கோடி காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர் உள்ளனர். இதில், ஐந்து கோடி பேர், ஆண்டுக்கு, 20 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுகின்றனர். ஆனால், தற்போது, 36 லட்சம் பேர் மட்டும் தான், காஸ் மானியத்தை விட்டு கொடுத்துள்ளனர். வசதியானவர்கள், விட்டு கொடுக்கும் மானியத்தை பயன்படுத்தி, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு, இலவசமாக சிலிண்டர் வழங்கப்படுகிறது. தமிழகத்தில், 30 லட்சம் பேர், வருமான வரி செலுத்தி வருகின்றனர். ஆனால், 1 சதவீதம் பேர் கூட, மானியத்தை விட்டு கொடுக்கவில்லை. எனவே, வருமான வரி செலுத்துவோருக்கு, மானிய சிலிண்டரை நிறுத்த, மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

தடக் தடக் கைத்தறி... கற்றுக்கொள்ள நாங்க ரெடி!

''ஸ்கூலுக்குப்போய் தறி நெய்யப்போறோம். நீங்களும் வர்றீங்களா ஆன்ட்டி?'' என ஜாலியாகக் கிளம்புகிறார்கள் சுட்டிகள்.
 சென்னை, திருவான்மியூர், கேஸ்கேட் மான்டிசோரி பள்ளி  (Cascade Montessori School) வளாகத்தில் நுழையும்போதே, 'தடக் தடக்... தடக் தடக்’ என  தாள லயத்தோடு வரவேற்கிறது, கைத்தறி நெய்யும் ஓசை.
கிராஃப்ட் அறைக்குள் தறியில் உட்கார்ந்து அழகாக நெய்து கொண்டிருக்கிறார், சுட்டிகிரண்.
''ஓ... எங்களுக்கு முன்னாடியே வந்துட்டியா?' என்றபடி  இணைந்துகொண்டார்கள்  பருண் மற்றும் சிருஷ்டி.
அங்கிருந்த ராட்டையில், இருவரும் வண்ண நூலைச் சுற்றத் தொடங்க, பழைய துணியில் மிதியடி தயாரிக்கும் மும்முரத்தில் இருந்தார் நீல் ஷஷாங்க்.இன்னும் சிலர் வந்துசேர்ந்ததும், கலகலப்பானது ஹால்.
''சிருஷ்டி, அந்தக் குச்சி ராட்டினத்தைச் சுத்து.''
''பருண், நூல் கட்டையை உள்ளே கொடுத்து வாங்கு...'' என  உற்சாகக் குரல்கள்.
''பார்த்து, பொறுமையா செய்ங்க' என்று அவர்களை  வழிநடத்திய மணி, ''நான், ஆந்திர மாநிலம், புத்தூரில் தலைமுறை தலைமுறையா நெசவு நெய்யும் குடும்பத்தில் பிறந்தவன். சேலை, வேட்டி, லுங்கி, சுடிதார் எல்லாம் நெய்வேன். இந்த ஸ்கூலின்  கருணா மேடம், கைத்தறியில் பிஹெச்.டி பண்ணியிருக்காங்க. மாணவர்களுக்கு, கைத்தொழிலின் பெருமை தெரியணும்னு இந்த வகுப்பைத் தொடங்கினாங்க.  சனிக்கிழமைகளில் பயிற்சி நடக்கும்' என்றார்.
பொதுவாக, தறி போடுவதற்கு 13 அடிக்கு 9 அடி இடம் தேவை. ஆனால், நான்குக்கு நான்கு அடிகளிலேயே தறியைப் போட்டு அசத்தி இருக்கிறார் மணி. ஆர்வம் உள்ள பெற்றோர்களுக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் கைத்தறி வகுப்பு நடக்கிறது.
''இதெல்லாம் நாங்க நெய்ததுதான் ஆன்ட்டி'' என்று கலர், கலர் துணிகளைக் காட்டிய சுட்டிகளின் முகங்களில் மலர்ச்சி.
''பெரிய தறியில் உட்கார்ந்து நெய்வதற்குக் கால் எட்டாத எங்களை மாதிரி குட்டிப் பசங்களுக்கு, இந்த போர்ட்டபிள் கைத்தறி. இதில், 10 விதமான துணிகளை நெய்யலாம். எங்கே வேணும்னாலும் சுலபமாக நகர்த்திட்டுப் போகலாம். இன்னும் கொஞ்ச நேரத்துல கர்ச்சீஃப் ரெடியாகிடும்' நடைவண்டியைவிட கொஞ்சம் பெரியதாக இருந்த தறியைக் காட்டி சொன்னார்கள், அனன்யா மற்றும் மஹின்.
பெரிய தறியில் நெய்துகொண்டிருந்த கிரண், ''இங்கே வந்து பாருங்க ஆன்ட்டி. கலர்ஃபுல்லான நீள மேட் (விரிப்பு) இது. ரெண்டு வாரத்துக்குள் தயாரிச்சுடுவோம். முதலில், நூலை இழைகளாகப் பிரிச்சுக்கணும். கர்ச்சீஃப், துண்டு மாதிரி சின்னத் துணிகளுக்கு 1,500 இழைகள் வேணும். புடைவைக்கு 4,000 இழைகள் வேணும் ஆன்ட்டி'' என்று அனுபவ  நெசவாளியாகப் பேசினார்.
கிரணும் ஹரீஷும் நூல் சுற்றுவது, ராட்டினம் சுற்றுவது, நெய்வது என எல்லாவற்றிலும் எக்ஸ்பர்ட்.
2011-ல் இந்தப் பள்ளியைத் தொடங்கிய வித்யா சங்கர், 'ரிலீஃப் ஃபவுண்டேஷன்’ என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர். கிராமப்புற ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக, வாலன்டியர்களின் உதவியுடன் சேவை செய்துவருகிறார்.
"குழந்தைகளின் கண்கள், கைகள், மனம் மூன்றும் ஒன்றிணைந்து செயல்படும் போதுதான் மூளையின் வளர்ச்சி நன்றாக இருக்கும். அந்தக் கைகளுக்கும் மூளைக்கும் வேலை கொடுக்கும் நடனம், பாட்டு, தையல், சமையல், தோட்டக்கலை ஆகியவற்றை சொல்லிக்கொடுக்கிறோம். இந்தப் பயிற்சியில் ரொம்ப ஆர்வமா ஈடுபடுறாங்க. சனிக்கிழமைகளில் 100 சதவிகிதம் அட்டென்டண்ஸ் இருக்கும். எட்டு மாதப் பயிற்சி அடிப்படையில், ராஜாஜி பவனில் நடக்கும் 'டையிங் அண்ட் ப்ரின்டிங்’ என்ற இரண்டு வாரப் பயிற்சிக்கு எங்க பள்ளியிலிருந்து மூன்று பேர் தேர்வாகி இருக்காங்க'' என்ற வித்யா சங்கரின் குரலில் பெருமிதம்.
''ஸ்விம்மிங், மியூஸிக் கிளாஸ்னு நிறைய ஸ்பெஷல் கிளாஸூக்குப் போயிருக்கோம். ஆனா, இந்த வீவிங் கிளாஸ் எங்களுக்கு ரொம்ப வித்தியாசமா இருக்கு. இந்த கிளாஸூக்கு வந்த பிறகுதான், நாம போடும் டிரெஸ் எப்படி உருவாகுது, இதுக்காக எத்தனை பேர் உழைக்கிறாங்கன்னு புரிஞ்சது. கைத்தறியின் அருமையையும் தெரிஞ்சுக்கிட்டோம்' என்கிறார்கள் சுட்டிகள்.
விடைபெற்றுக் கிளம்பியபோது, சுவரில் மாட்டியிருந்த, ராட்டினத்தில் நூல் நூற்கும் காந்தி தாத்தா சிரித்தார்.
''நான், சாஃப்ட்வேர் இன்ஜினீயர். என் பசங்க ஸ்ருஷ்டி, ஸ்ரேயஸ் ரெண்டு பேருமே இங்கே வீவிங் கத்துக்கிறாங்க. துணி நெய்யக் கத்துக்கிறதோட, நாம் தினமும் அணியும் டிரெஸ், எப்படி நெய்து வருதுங்கிற கான்செப்ட் அவங்களுக்குள்ள போனா, அதுவே போதும். இப்போ, வீட்டில் எந்த துண்டுத் துணியைப் பார்த்தாலும், 'இதை எப்படி நெய்திருக்காங்க, என்ன கலர் யூஸ் பண்ணியிருக்காங்க, டபிள் கலரா போட்டிருக்காங்களா, சிங்கிள் கலரா’னு பேசிக்கிறாங்க. துணியை வேஸ்ட் பண்ணக் கூடாது என்கிற விழிப்புஉணர்வும் வந்திருக்கு. அதுவே பெரிய சந்தோஷம்தான்'' என்று முகம் மலரப் பேசுகிறார், பெற்றோர்களில் ஒருவரான ஷங்கர் ஆனந்த்.

திருநங்கையர்களுக்கான இலவச ஐஏஎஸ் தேர்வு பயிற்சி வகுப்புகள் ஈரோட்டில் தொடக்கம்

திருநங்கையர்களுக்கான ஐ.ஏ.எஸ். தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் தனியார் அமைப்பு ஒன்றின் ஏற்பாட்டில் ஈரோட்டில் தொடங்கப்பட்டன.

யங் இந்தியா என்ற அந்த அமைப்பின் மூலம் நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்பில், முதற்கட்டமாக மூன்று திருநங்கைகளுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.

பயிற்சி வகுப்பு தொடக்க நிகழ்ச்சியில் அரசு தேர்வாணைய முன்னாள் தலைவர் நட்ராஜ் மற்றும் உதவி ஆய்வாளராக பதவி ஏற்க உள்ள திருநங்கை பிரித்திகாயாஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வரும் காலங்களில் திருநங்கையர்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்த இது போன்ற பயிற்சி மையங்கள் உதவியாக இருக்க வேண்டும் என திருநங்கை பிரித்திகாயாஷினி கேட்டுக்கொண்டார்.

SLAS தேர்வு- தமிழ் வினாத்தாள் 2013 - 2014
உதவி பேராசிரியர் தேர்வு:பட்டதாரிகள் ஓராண்டு காத்திருப்பு

அரசு இன்ஜி., கல்லுாரி உதவி பேராசிரியர் பணிக்கு எழுத்து தேர்வு அறிவித்து ஓராண்டாகியும் தேர்வு நடத்தாததால், விண்ணப்பதாரர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.தமிழகத்திலுள்ள இன்ஜி., மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளில், காலியாக இருந்த, 139 உதவி பேராசிரியர் பணியிடத்தை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கடந்த, ஜூலையில் அறிவிப்பு வெளியிட்டது.
முதுகலை பட்டத்துடன், எம்.பில்., ஸ்லெட், நெட், முடித்தவர்கள் என, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரிகள், விண்ணப்பித்திருந்தனர். இதற்கான எழுத்து தேர்வு, கடந்த, 2014, அக்டோபரில் நடத்தப்படும் என அறிவித்து, அதற்கான பாடத்திட்டமும் ஆன்லைனில் வெளியிட்டிருந்தனர். ஆனால், எம்.பில்., மட்டும் முடித்தவர்கள், உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கூடாது என, ஸ்லெட், நெட் முடித்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.அதேசமயம், 2009க்கு முன், எம்.பில்., படிப்பு முடித்தவர்களுக்கு ஸ்லெட், நெட் தேவையில்லை என, மற்றொரு வழக்கும் தொடரப்பட்டது. தற்போது, ஓராண்டுக்கு மேல் ஆகியும் எழுத்து தேர்வு பற்றி எந்த அறிவிப்பு வெளியாகவில்லை.
இதுகுறித்து, விண்ணப்பதாரர்கள் கூறும்போது, 'ஸ்லெட், நெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே, உதவி பேராசிரியாக பணியாற்ற முடியும்' என, நீதிமன்றம் தீர்ப்பு அளித்துவிட்டது. ஆனாலும், இன்னும் தேர்வு குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை,'என்றனர்.இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, 'சட்டப்பிரச்னைகள் தீர்க்கப்பட்டு, அரசிடமிருந்து அனுமதி வந்தால் தேர்வு அறிவிக்கப்படும்,' என்றனர்.

இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு குவிகிறது


திருக்குறள் போட்டியில் சாதனை: மாணவர்களுக்கு பார்லிமென்ட்டில் பாராட்டு


ஆசிரியர்கள் மறியல் போராட்டம்டிச., 1ல் மனு அளிக்க 'ஐாக்டோ' முடிவு


ஆசிரியர்களின், 15 அம்ச கோரிக்கை குறித்தும், டிச., 28ம் தேதி மறியல் போராட்டம் குறித்தும், வரும் 1ம் தேதி ஜாக்டோ நிர்வாகிகள், தலைமைச் செயலகத்தில் மனு அளிக்க உள்ளனர். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து, மத்திய அரசுக்கு இணையான இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம், ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு சட்டம், தமிழை முதல் பாடமாக்க அரசாணை உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழுவான ஜாக்டோ, கடந்த பிப்ரவரி முதல் போராட்டம் நடத்துகிறது.

அக்., 8ல் ஜாக்டோ நடத்திய, மாநில அளவிலான வேலை நிறுத்தத்தால், பள்ளிகள் செயல்படாமல் முடங்கின. ஆனாலும், அரசு அவர்களை அழைத்து பேச்சு நடத்தவில்லை. இந்நிலையில், அடுத்த கட்டமாக டிச., 28 முதல் 30 வரை தொடர் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து, வரும் 1ம் தேதி தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வி முதன்மை செயலரை, ஜாக்டோ உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் சந்தித்து, மனு அளிக்க உள்ளனர். அதன்பின், அரசு தரப்பில் பேச்சு நடத்தினால் போராட்டத்தை வாபஸ் பெற, ஆசிரியர் குழு முடிவு செய்துள்ளது

இன்று கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் பிறந்த நாள்


தமிழ் திரைப்படத்துறையில் ‘கலைவாணர்’ என அழைக்கப்பட்ட என். எஸ். கிருஷ்ணன் அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர் ஆவார். நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்க வைத்தவர். “சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கு சொந்தமானது சிரிப்பு” என்ற பாடல் ஒன்றே என். எஸ். கலைவாணரின் நகைச்சுவைக் கலந்த சிந்தனைக்கு எடுத்துக்காட்டாகும். தமிழ் சுனிமா உலகில் நகைச்சுவைக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, பிறர் மனதைப் புண்படுத்தாமல் நகைச்சுவைகளைக் கையாளும் அற்புதக் கலைஞன். தமிழில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே இணையற்ற நகைச்சுவை நடிகராக விளங்கிய இவர், உலகப் புகழ்பெற்ற சார்லி சாப்ளின் போல, சிரிப்புடன் சிந்தனையையும் கலந்து கொடுத்தவர். ஒரு நாடகக் கலைஞனாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு இந்திய சினிமா வரலாற்றிலேயே நகைச்சுவையில் அறிவுபூர்வமான பல கருத்துக்களை விதைத்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, சுமார் ஐம்பது ஆண்டுகளைக் கடந்து, சினிமா ரசிகர்களின் மனதில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும், அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றியப் பங்களிப்பினை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: நவம்பர் 29, 1908

பிறப்பிடம்: நாகர்கோயில், தமிழ்நாடு மாநிலம், இந்தியா

பணி: நடிகர், பின்னணிப் பாடகர் மற்றும் எழுத்தாளர்  

இறப்பு: ஆகஸ்ட் 30, 1957

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

அவர், 1908  ஆம் ஆண்டு நவம்பர் 29  ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள “நாகர்கோவிலுக்கு” அருகில் ஒழுங்கினசேரி என்ற இடத்தில், ‘சுடலையாண்டி பிள்ளை’, என்பவருக்கும், ‘இசக்கியம்மாலுக்கும்’ மகனாக ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை

மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால், கல்வி என்பது அவருக்கு எட்டாக்கனியாகவே போய்விட்டது. நான்காம் வகுப்புடன் தன்னுடைய பள்ளிப்படிப்பைப் நிறுத்துக்கொண்ட அவர், சிறுவயதிலேயே நாடகக் கொட்டையில் தின்பண்டங்கள் விற்கத் தொடங்கினார். நாளடைவில் நாடகங்கள் அவரை மிகவும் ஈர்த்ததால், ஒரு நாடகக்குழுவில் சேர்ந்து சிறிதுகாலம் நடித்து வந்தார். அதன் பிறகு தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து ஒரு நாடகக்குழுவை தொடங்கிய என். எஸ். கிருஷ்ணன் அவர்கள், பல நாடகங்களை இயக்கியும் நடித்தும் வந்தார்.

சினிமா பயணம்

தன்னுடைய நாடகக் குழு மூலம் பல நாடகங்களை மேடையில் அரங்கேற்றி வந்த அவர், திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. இவர் நடித்த முதல் படம் ‘சதிலீலாவதி’. இருந்தாலும், திரைக்கு முதலில் வந்த படம் ‘மேனகா’ என்ற திரைப்படம் ஆகும். பெரும்பாலும், சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி, அதையே நாடகத்திலும், திரைப்படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுவந்த அவர், தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். குறுகிய காலத்திற்குள் சுமார் 150 –க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த அவர், நகைச்சுவையில் புதிய மறுமலர்ச்சியையை ஏற்படுத்தி விட்டார். மேலும், இவருடைய மனைவி மதுரம் அவர்கள், ஒரு பிரபலமான நடிகை என்பதால், இருவரும் இணைந்து பல படங்களில் நடித்தனர். தமிழ் சினிமா வரலாற்றில் நகைச்சுவையை, சினிமா காட்சிகளாக மட்டுமின்றி, பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தார். சொந்தக் குரலில் கருத்தாழமிக்க பல பாடல்களைப் பாடியுள்ள இவர் ‘பணம்’, ‘மணமகள்’ போன்ற திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

சிரிக்க வைத்த மாபெரும் சிந்தனையாளர் கலைவாணர்

இவருடைய நகைச்சுவைக் காட்சிகள் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், வாழ்வியலை ஒரு சில நொடிகளிலேயே புரிய வைக்கும் ஆற்றலை உண்டாக்கியவையாகும். யார் மனதையும் புண்படுத்தாமல், நகைச்சுவை மூலமாக சிந்தனை மிகுந்த கருத்துக்களை வெளிப்படுத்தினார். அறிவியல் கருத்துக்களையும், தன்னுடைய நகைச்சுவை வாயிலாக வெளிப்படுத்தியவர். பல சீர்த்திருத்த கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர். குறிப்பாகச் சொல்லப்போனால் என். எஸ். கிருஷ்ணன் அவரகள், சாதாரண நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல, தன்னுடைய சிரிப்பால் அனைத்து மக்களையும் சிந்திக்க வைத்தவர். இதானால் தான் இவருக்கு “கலைவாணர்” என்ற பட்டம் 1947 ஆம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள நடராஜா கல்வி கழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.

அவர் நடித்த சில திரைப்படங்கள்

‘சதிலீலாவதி’, ‘அம்பிகாபதி’, ‘சந்திர காந்தா’, ‘மதுரை வீரன்’, ‘காளமேகம்’, ‘சிரிக்காதே’, ‘உத்தம புத்திரன்’, ‘சகுந்தலை’, ‘ஆர்யமாலா’, ‘கதம்பம்’, ‘மங்கம்மா சபதம்’, ‘ஹரிச்சந்திரா’, ‘ஹரிதாஸ்’, ‘பர்மா ராணி’, ‘பவளக்கொடி’, ‘பைத்தியக்காரன்’, ‘சந்திரலேகா’, ‘நல்லத்தம்பி’, ‘மங்கையர்க்கரசி’, ‘தம்பிதுரை’, ‘பவளக்கொடி’, ‘ரத்னகுமார்’, ‘மங்கம்மாள்’, ‘வனசுந்தரி’, ‘பணம்’, ‘அமரக்கவி’, ‘காவேரி’, ‘டாக்டர் சாவித்திரி’, ‘முதல் தேதி’, ‘ரங்கோன் ராதா’, ‘பைத்தியக்காரன்’, ‘ஆர்ய மாலா’, ‘மங்கையர்க்கரசி’, ‘ராஜா ராணி’, ‘பவளக்கொடி’, ‘சகுந்தலை’, ‘மணமகள்’, ‘நல்லகாலம்’, ‘ராஜா தேசிங்கு’.

அவர் பாடிய சில பாடல்கள்

‘ஜெயிலுக்குப் போய் வந்த’, ‘பணக்காரர் தேடுகின்ற’, ‘ஆசையாக பேசிப்பேசி’ (பைத்தியக்காரன்), ‘ஒண்ணுலேயிருந்து’, ‘இடுக்கண் வருங்கால்’ (முதல் தேதி), ‘சங்கரியே காளியம்மன்’ (ரங்கோன் ராதா), ‘காட்டுக்குள்ளே’, ‘ஒரு ஏகாலியைப்’, ‘ஆரவல்லியே’ (ஆர்யா மாலா), ‘கண்ணா கமலக் கண்ணா’, ‘கண்னேந்தன்’ (கண்ணகி), ‘இருக்கிறது பார் கீழே’ (மங்கையர்க்கரசி), ‘கண்ணே உன்னால்’, ‘சந்திர சூரியன்’ (அம்பிகாபதி), ‘தீனா..மூனா.. கானா…’ (பணம்), ‘உன்னருளால்’, ‘என் சாண் உடம்பில்’ (ரத்னமாலா), ‘சிரிப்பு இதன் சிறப்பை’ (ராஜா ராணி), ‘வாதம் வம்பு பண்ண’, ‘காசிக்குப் போனா கருவுண்டாகுமென்ற’ (டாக்டர் சாவித்திரி), ‘நித்தமும் ஆனந்தமே’, ‘விஜய காண்டிபா வீரா’, ‘அன்னம் வாங்கலையோ’, ‘இவனாலே ஓயாதத் தொல்லை’ (பவளக்கொடி), ‘இன்னுக்கு காலையில’, ‘வெகுதூரக்கடல் தாண்டி’ (சகுந்தலை), ‘நல்ல பெண்மணி’, ‘ஆயிரத்திதொள்ளாயிரத்தி’, ‘சுதந்திரம் வந்ததுண்ணு’ (மணமகள்), ‘சும்மா இருக்காதுங்க’ (நல்லகாலம்).

தேசபக்தி

பாரதத்தின் தந்தை எனப் போற்றப்படும், மகாத்மா காந்தியின் தீவிர பற்றாளராக விளங்கிய என். எஸ். கிருஷ்ணன் அவர்கள், காந்தியடிகளின் மறைவுக்குப் பின்னர், அவருடைய நினைவைப் போற்றும் வகையில், அப்பொழுதே ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் தமது சொந்தப் பணத்தினை செலவிட்டு, தன்னுடைய ஊரில் அவருக்கு நினைவுத்தூண் எழுப்பினார்.

கலைவாணரின் சிந்தனையில் உதிர்ந்த ஒரு துளி

1957 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் அண்ணாவின் சார்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்த தேர்தலில், அண்ணாவை எதிர்த்து ஒரு மருத்துவர் போட்டியிட்டார். அப்பொழுது காஞ்சிபுரத்தில் நடந்த கூட்டத்தில், அவர், பேசுகையில் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை அந்த மருத்துவரை பற்றியே புகழ்ந்து பேசிவந்தார். இறுதியில், ‘இவ்வளவு நல்லவரை நீங்கள் சட்டசபைக்கு அனுப்பினால் உங்களுக்கு வைத்தியம் பார்ப்பது யார்? அதனால் டாக்டரை உங்கள் ஊரிலேயே வைத்துக்கொள்ளுங்கள், சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான அறிஞர் அண்ணாவை சட்டசபைக்கு அனுப்புங்கள்’ என முடித்தார்.

இல்லற வாழ்க்கை

1931 ஆம் ஆண்டு நாகம்மை என்னும் பெண்மணியைத் திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு, ஒரு முறை “வசந்தசேனா” படப்பிடிப்பிற்காக புனேவிற்கு சென்ற போது, டி. எம். மதுரம் என்ற நடிகையுடன் காதல் வயப்பட்ட இவர், விரைவில் திருமணமும் செய்துக்கொண்டனர். இவர் திருச்சியிலுள்ள ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ஆவார். பின்னர், டி. எம். மதுரத்தின் தங்கை வேம்பு என்பவரை மூன்றாம் மனைவியாக மணம் புரிந்தார். நாகம்மைக்கு கோலப்பன் என்னும் மகனும், டி. எம். மதுரத்திற்கு ஒரு பெண் குழந்தையும், வேம்புக்கு நான்கு மகன்களும், இரண்டு மகள்களும் பிறந்தனர்.

கொலைக் குற்றச்சாட்டு

இந்து நேசன் பத்திரிக்கை ஆசிரியர், லட்சுமி காந்தன் கொலை வழக்கில் அப்பொழுது பிரபல கதாநாயகனாக இருந்த தியாகராஜ பாகவதருடன் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். சுமார் 30 மாதங்கள் சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்ட என். எஸ். கிருஷ்ணன் அவர்கள், மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கினார். இந்நிகழ்வு, இவரின் கலைப் பயணத்திற்கு ஒரு கரும்புள்ளியை ஏற்படுத்தினாலும், தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் “கலைவாணர்” எனப் புகழப்பட்டார்.

மறைவு

நகைச்சுவையில் புதிய புரட்சியை ஏற்படுத்திய என். எஸ் கிருஷ்ணன் அவர்கள், 1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி, தன்னுடைய நாற்பத்தொன்பதாவது வயதில் காலமானார். தமிழ்நாடு அரசு, அவரது நினைவாக, சென்னையில் உள்ள அரசு அரங்கத்திற்கு, ‘கலைவாணர் அரங்கம்’ எனப் பெயர் சூட்டியது.

தமிழ் சினிமாவில் பல கலைஞர்கள் உருவாகி, சாதித்து, மறைந்திருக்கலாம், ஆனால், என். எஸ். கலைவாணரைப் போல், நகைச்சுவையில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களைத் திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக்கூறியவர் எவரும் இல்லை. கருத்துக்களை வழங்குவதில் மட்டும் இவர் வள்ளலாக இருந்துவிட வில்லை, தமது வாழ்க்கையிலும் ஆயிரக் கணக்கானவர்களுக்குப் பணத்தை வாரி வழங்கிய அற்புத மனிதர் ஆவார். உண்மையை சொல்லப்போனால், என். எஸ். கிருஷ்ணன் அவர்களை நகைச்சுவை நடிகர் என்ற வட்டத்துக்குள் அடைத்துவிட முடியாது, சிரிப்பு மொழியில் சீர்திருத்த விதிகளைத் தூவிய மாபெரும் சிந்தனையாளர். காலங்கள் மாறினாலும், திரைப்படத்துறையில் மாற்றங்கள் பல நிகழ்ந்தாலும், என். எஸ். கலைவாணர் அவர்கள் நூற்றாண்டுகள் பல கடந்தும், கலையுலகில் சாகா சரித்திர நாயகனாக வாழ்ந்துவருகிறார் என்பதில், எந்தவித ஐயமும் இல்லை.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!