Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 1 December 2015

Central Teacher’s Eligibility Test-Feb 2016


IMPORTANT INFORMATION AT A GLANCE FOR CTET - FEB 2016 

1.
a. Online  Submission  of  application  through 04.12.2015 to 28.12.2015        CTET website  www.ctet.nic.in        
b.  Last date for payment of fee through E-challan 29.12.2015  (till 03:30 PM)        or Debit/Credit Card by the candidate.       
2. Period for Online Corrections in Particulars      (No correction will be allowed in any particulars 30.12.2015 to 04.01.2016   after this  date)    

3. Final  status  of  application  Check the status of application and/or  30.12.2015    Particulars of candidate whose fee received

4. Download  Admit Card from Board’s website  25.01.2016  

5. Date of Examination  21.02.2016 Paper-II  09:30 to 12:00 PM**     Paper-I 02:00 to 04:30 PM**      

6. Centre of Examination  As indicated on the Admit Card 

7. Declaration of Results on or before.  06.04.2016

8. Dispatch of CTET Marks Statement/Certificate  05.05.2016 onwards 

9. Material to be brought on the day of examination  Downloaded Admit Card and One Photo ID     proof  (PAN Card, AADHAAR Card, Passport,     Driving Licence, Voter ID card)

10. Rough Work  All rough work  should  be done in the Test     Booklet only.

பிளஸ்–2, 10–ம் வகுப்பு பொதுத் தேர்வை முன்கூட்டியே நடத்தும் திட்டம் இல்லை: தேர்வுத்துறை இயக்குனர் தகவல்

வருகிற மே மாதம் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால்பிளஸ்–2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் முன் கூட்டியே நடத்தப்படும் என்ற தகவல் பரவி வருகிறது. மேலும் தொடர் மழையால் பள்ளிகள் 20 நாட்களாக செயல்படாமல்இருப்பதால் மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுமா? தேர்தலுக்காக முன் கூட்டியே நடத்தப்படுமா என்பது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவியிடம் மாலைமலர் நிருபர் கேட்டதற்கு அவர் அளித்த விளக்கம் வருமாறு:–

தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பள்ளிகள் திறக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.வருகிற 7–ந்தேதி பிளஸ்–2 மாணவர்களுக்கும், 9–ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கும் அரையாண்டு தேர்வு தொடங்குவதற்கான அட்டவனை தயாரிக்கப்பட்டு அதற்கான வினாத்தாள்கள் அச்சடிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு உள்ளன. தீபாவளிக்கு முன்பே வினாத்தாள்கள் பள்ளிக்கல்வி துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.மழையால்அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை தான் முறைசெய்ய வேண்டும். அரசு தேர்வுத்துறை அல்ல.

பிளஸ்–2, 10–ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தேர்வுத்துறை மூலம் நடத்தப்படுகின்றன. பொதுத்தேர்வுகள் அட்டவணைஇந்த மாதத்திற்குள் வெளியிடப்படும். பிளஸ்–2 தேர்வுகள் 11 நாட்கள் நடைபெறும். மாணவர்கள் படித்து தேர்வு எழுத வசதியாக போதிய கால அவகாசம் கொடுக்கப்படும். சட்டசபை தேர்தலுக்காக பொதுத்தேர்வுகள் முன் கூட்டியே நடத்தும் திட்டம் எதுவும் இல்லை.

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது போல மார்ச் முதல் வாரத்தில் பிளஸ்–2 தேர்வு தொடங்கி இறுதியில் முடிவடையும்.பொது தேர்வுக்கான கால அட்டவணைஅரசின் ஒப்புதல் பெறப்பட்டு வெளியிடப்படும். குறுகிய காலத்தில் தேர்வுகளை நடத்தஇயலாது. அதனால் ஒவ்வொரு தேர்விற்கும் போதிய இடைவெளி இருக்கும். மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் அரசின் ஆலோசனைப்படி பொதுத்தேர்வுகள் நடைபெறும்.முன்கூட்டியே தேர்வு நடைபெறும் கால அவகாசம் இல்லை என்று மாணவர்கள் குழப்பம் அடைய தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

அகஇ - சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் (DECEMBER- 3) -பள்ளிகளில் கொண்டாடுதல் - வழிகாட்டு நெறிமுறைகள் சார்ந்து திட்ட இயக்குனரின் செயல்முறைகள்TNPSC போட்டித் தேர்வு வினா-விடைகள்


TNPSC போன்ற போட்டி தேர்வுக்கு பயன்படும் வினா-விடைகள்  மட்டும் பதிவு செய்யப்படும் வகையில் ஒரு செயலியை உருவாக்கியுள்ளோம். போட்டித்தேர்வுக்கு   தயாராகிக்கொண்டு இருப்பவர்கள் மட்டும் இந்த செயலியை தரவிரக்கம் செய்துகொள்ளாம். இந்த செயலியின் link கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதை கிளிக் செய்து டவ்ன்லோடு செய்து கொள்ளுங்கள்

https://play.google.com/store/apps/details?id=tnpsc.vao

அடுத்த கல்வியாண்டில் தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு

அடுத்த ஆண்டில் கல்வி மேலும் செலவுமிக்கதாக மாற வாய்ப்பிருக்கிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக கடும் சேதத்தைச் சந்தித்த தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கனமழையால் பள்ளிக் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதால் கட்டண நிர்ணய கமிட்டியிடம் தனியார் பள்ளி நிர்வாகங்கள் முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூரில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளன. பள்ளிக் கட்டிடங்களுக்கு ஏற்பட்ட சேதம் காரணமாக பள்ளியின் மின் அமைப்புகள், பைப்லைன்கள், உட்பட பல சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சுகாதாரத்தை பராமரிக்கவும் சில செலவினங்கள் தனியார் பள்ளிகளுக்கு காத்திருக்கிறது.“அவ்வளவாக சேதமில்லாத பெரிய பள்ளிகள் ரூ.5 லட்சம் வரையில் செலவிட்டுள்ளது. எனவே சேதம் அதிகம் ஏற்பட்ட பள்ளிகள் மேலும் அதிக தொகை செலவிட வேண்டி வரும்” என்று பள்ளி முதல்வர் ஒருவர் தெரிவித்தார்.மாநில கல்வி ஆலோசகர் பி.புருஷோத்தமன் இது பற்றி கூறும்போது, “பெரும்பாலான பள்ளிகள் கல்விக் கட்டணத்தை உயர்த்தவுள்ளன.

சேதத்துக்கு செலவிடப்பட்ட தொகைமற்றும் பரமாரிப்பு உள்ளிட்ட செலவு விவரங்களை பள்ளி நிர்வாகத்திடமிருந்து கேட்டுள்ளோம்” என்றார்.மற்றொரு மூத்த கல்வித்துறை அதிகாரி தெரிவிக்கும் போது, “பைப்லைன், கட்டிட சேத விவரம், மின் இணைப்பு பரமாரிப்பு உள்ளிட்ட செலவு விவரங்களை சமர்ப்பிக்குமாறு பள்ளிகளிடம் கேட்டுள்ளோம். சேதத்தை சரிசெய்ய சராசரியாக பள்ளிகள் ரூ.5 லட்சம் முதல் 8 லட்சம் வரை கோரியுள்ளன.மாநில அரசு மத்திய அரசுக்கு இந்த விவரங்களை அனுப்ப வேண்டியுள்ளது” என்றார்.

டிசம்பர் மாத முக்கிய தினங்கள்

டிச.1 - எய்ட்ஸ் தினம்
 
டிச.2 - உலக அடிமைத்தொழில் ஒழிப்பு தினம்
 
டிச.2 - உலக மாசு தடுப்பு நாள்
 
டிச.3 - ஊனமுற்றோர் தினம்

டிச. 4 - தேசிய கடற்படை தினம்

டிச. 5 - உலகத் தன்னார்வலர் தினம்
 
டிச.7 - உலக விமானப் போக்குவரத்து தினம்
 
டிச.7 - கொடி நாள்
 
டிச.9 - சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம்

டிச.10 - உலக மனித உரிமைகள் தினம்
 
டிச.12 - உலக அமைதி நாள் 

டிச.13 - உலக ஆஸ்துமா தினம்

டிச. 14 - தேசிய சக்தி சேமிப்பு தினம்

டிச. 18 - சிறுபான்மையினர் உரிமை தினம்
 
டிச.20 - ஐ.நா. சர்வதேச ஒருமைப்பாடு தினம்
 
டிச.22 - உலக கணக்கு தினம் (ராமானுஜம்  பிறந்தநாள்)
 
டிச.23 - உலக விவசாயிகள் தினம்
 
டிச.24 - தேசிய நுகர்வோர் தினம்

டிச. 25 - கீழவெண்மணி நினைவு நாள்
  
டிச.26 - சுனாமி தினம்..

தமிழக அரசின் 2016 ஆண்டுக்கான விடுமுறை பட்டியல் வெளியீடு

தமிழக அரசின் 2016 ஆண்டுக்கான விடுமுறை பட்டியல் வெளியீடு

நாளை (2/12/2015) மழை காரணமாக 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

 கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு, 2.12.2015 - புதன் கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வுகள் ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்து முதலமைச்சர் உத்தரவு

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.கன மழை காரணமாக அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. வழக்கமாக பள்ளிகளில் டிசம்பர் மாதத்தில் அரையாண்டுத் தேர்வுகள் நடத்தப்படும்.

ஆனால், தமிழகத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக 3 வாரங்களாக பள்ளிகள் செயல்படாமல் விடுமுறை அறிவிக்கப்பட்டது.இதனால், டிசம்பர் 7ம் தேதி முதல் நடக்கவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் அனைத்தும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சர்வேயர்' பணியிடம்டிச.28 வரை அவகாசம்

நகர் மற்றும் ஊரமைப்புத் துறையான, டி.டி.சி.பி.,யில், காலியாக உள்ள, 98, 'சர்வேயர்' மற்றும் உதவி வரைவாளர் பணியிடங்களுக்கு, வரும் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.இப்பணியிடங்களுக்கான அறிவிப்பு, ஜூலையில் வெளியிடப்பட்டு, ஆக., 7 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.எனினும், போதிய எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வரவில்லை.

இதையடுத்து, விதிகள் தளர்த்தப்பட்டு, அவகாசம் நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. விவரங்களை, www.dtcpexam.com இணையதளத்தில் அறியலாம்.

மழை: சென்னைப் பல்கலைக்கழக தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு

மீண்டும் பலத்த மழை பெய்யத் தொடங்கியுள்ளதன் காரணமாக ஏற்கெனவே ஒத்திவைத்து மறுதேதி அறிவித்த தேர்வுகளை சென்னைப் பல்கலைக்கழகம் மறுபடியும்ஒத்திவைத்துள்ளது.சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த நவம்பர் 8-ஆம் தேதி முதல் தொடர் மழை பெய்தது.

இதனால் பல பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணாப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறுப் பல்கலைக்கழகங்கள்தேர்வுகளை ஒத்திவைத்து, பின்னர் மறு தேதிகளை அறிவித்தன.நவம்பர் 9-ஆம் தேதி முதல், 28-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிசம்பர் 1-ஆம் தேதி முதல், 14-ஆம் தேதி வரை நடத்தப்படும் என சென்னைப் பல்கலைக்கழகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.இந்நிலையில், திங்கள்கிழமை முதல் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மீண்டும் பலத்த மழை பெய்யத் தொடங்கியது.

தொடர்ந்து, 3 நாள்களுக்கு மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.இதன் காரணமாக, டிச.1, 2-ஆம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகளை மீண்டும் ஒத்திவைத்து சென்னைப் பல்கலைக்கழகம், திங்கள்கிழமை (நவ.30) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுகளுக்கான மறுத் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

பிளஸ்-2 மாணவர்களுக்கு இரு வாரங்களில் பதிவெண்கள்: விவரங்களில் பிழை திருத்தும் பணி தீவிரம்

வரும் மார்ச் மாதம் நடைபெறும் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு இரு வாரங்களில் பதிவு எண்கள் வழங்கப்பட உள்ளது. இதற்காக பிளஸ்-2 மாணவர்களின் விவரங்களில் உள்ள பிழைகளைத் திருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிளஸ்-2 மாணவர்களின் விவரங்களை பிழைகளின்றி நவம்பர் 23-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளிகளுக்கு கல்வித் துறை உத்தரவிட்டது. அதன் பிறகு, 26 வரை நீட்டிக்கப்பட்டது. இந்தப் பணி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் இப்போது நடைபெற்று வருகிறது.

அதன்பிறகு, டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் திருத்தப்பட்ட தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன. அடுத்த 2 வாரங்களில் மாணவர்களுக்கு பதிவெண் வழங்கப்பட உள்ளதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு....: இதேபோல், மார்ச்சில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்களைப் பதிவேற்றம் செய்யும் பணிகள் டிசம்பர் 10-ஆம் தேதிக்கு பிறகு நடைபெற உள்ளன. இவர்களின் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களும் இப்போது கோரப்பட்டுள்ளன.

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மாணவர்கள் விடுமுறையிலும் பள்ளிகளுக்கு வந்து தங்களது விவரங்களை சரிபார்த்துச் செல்வதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். இந்த விவரங்களை பதிவேற்றம் செய்வதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தனி பாஸ்வேர்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கு பதிவு எண் உள்ளிட்டவை இந்த மாதத்துக்குள் வழங்கப்பட்டு விடும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

அரையாண்டு தேர்வு மாற்றம்? அதேபோல், மழை விடுமுறை காரணமாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை தள்ளிவைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிகளிலேயே தேர்வுகள் நடைபெறும் என்றும் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆசிரியர்களை பயிற்சிக்கு அழைக்கும் நேரமா இது?

பாடம் நடத்தவும், தேர்வு நடத்தவும், நாளில்லாமல் ஆசிரியர்கள் திணறி வருகின்றனர்; இந்நிலையில் ஆசிரியர்களை, ஒரு மாதம் பயிற்சிக்கு வருமாறு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையில், அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம், ஆசிரியர் கல்வியியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் சார்பில், ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் தரப்படுகின்றன.

இதற்கு, மத்திய அரசிடமிருந்து, பல கோடி ரூபாய் நிதி கிடைக்கிறது.கற்றல், கற்பித்தலை தொழில்நுட்ப ரீதியாக வழங்க வேண்டும் என்பது தான், மத்திய அரசின் நோக்கம். ஆனால் இது, தமிழகத்தில், பலனில்லாத பயிற்சி திட்டங்களாக மாறிவிட்டன.தமிழகத்தில், பள்ளிக்கல்வி இயக்குனரகம், தொடக்கக் கல்வி இயக்குனரகம் ஆகியவற்றுடன், பயிற்சி அளிக்கும் மூன்று இயக்குனரகங்களின் செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப்படவில்லை.

எனவே, பாடம் நடத்துவதைப் பார்க்க ஒரு துறை; பயிற்சியை நடத்த, வேறொரு துறை என, முரண்பாடாக உள்ளது. தற்போது இரண்டாம் கல்விப் பருவத்தில், மழைக்கால விடுமுறை, பண்டிகை விடுமுறைகளுக்கு மத்தியில், அரையாண்டுத் தேர்வு நெருங்கியுள்ளது. பாடங்களை எப்படி முடிப்பது என, ஆசிரியர்கள் திணறி வருகின்றனர். இந்த நேரத்தில், ஒரு மாதம் முழுவதும் ஆசிரியர் பயிற்சிக்கான அட்டவணையை கல்வித்துறை அறிவித்துள்ளது.

* பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் எடுக்க, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூலம், டிசம்பர் முதல் வாரத்தில் பயிற்சி

* நவ., 30, டிச., 1 மற்றும் 5ம் தேதிகளில், தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு, வாசித்தல், எழுதுதலுக்கு பயற்சி

* நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, டிச., 12ல், குறுவள பயிற்சி, கணித பயிற்சி பெட்டகப் பயிற்சி, கணினி இயக்கம் மற்றும் கற்பித்தல் பயிற்சி. நவ., 30 முதல் டிச., 22ம் தேதி வரை நடக்கும் பயிற்சியில், ஆசிரியர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பிஉள்ளது

பிரசார் பாரதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான 60 காலி பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

பிரசார் பாரதியில் நிரப்பப்பட உள்ள 60 Assistant Director ((Engineering), (Jr Time Scale), (Prog),(Jr Time Scale)), Cameraman Grade II, Programme Executive (PEX), Transmission Executive (Production Asstt) போன்ற பணியிடங்களுக்கு சிறப்பு ஆட்சேர்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு இந்திய மாற்றுத்திறனாளி பிரிவினர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.01/2015 தேதி: 27.11.2015

பணி - காலியிடங்கள் விவரம்:

1. Asstt. Director (Engg.), (Jr. Time Scale)- 04

2. Asstt. Director (Prog.), (Jr. Time Scale)- 03

3. Cameraman Gr.II- 07

4. Programme Executive (PEX)- 11

5. Transmission Executive (Production Asstt.) (TREX)- 03

6. Transmission Executive (General & Production) (TREX)- 21

7. Cameraman Gr.III- 01

8. Graphic Artist- 02

9 Make-up Assistant- 01

10. Film/ Video Editor- 01

11. Library & Information Asstt.- 01

12. Floor Assistant- 01

13. Technician- 04

வயது வரம்பு: 23.12.2015 தேதியின்படி வரிசை எண் 1 - 7 பணியிடங்களுக்கு 30க்குள்ளும்,  10, 12, 13 மற்றும் 8 பணியிடங்களுக்கு 25க்குள்ளும், வரிசை எண் 11 பணிக்கு 28க்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Additional Director General (Training),

National Academy of Broadcasting and Multimedia,

Radio Colony, Kingsway, Delhi–110009.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:  (நகர்புறம்) 23.12.2015, (கிராமப்புறம்) 31.12.2015

மேலும் தகுதி, வயதுவரம்பு சலுகை, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்கள் அறிய http://www.prasarbharati.gov.in/Opportunities/Employment/Documents/PWD%20Notice.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

எஸ்பிஐ வங்கியில் 185 மேலாளர் பணிகள்: விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள 185 துணை மேலாளர், உதவி மோலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: CRPD?SCO/2015-16/7

பணி: Deputy Manager (Law) (post Code:DMLA)

காலியிடங்கள்: 40

சம்பளம்: மாதம் ரூ.31,705 - 45,950

வயதுவரம்பு: 21 - 38க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டத்துடன் சட்டத்துறைௌயில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த சட்டப்படிப்பை முடித்து இந்திய பார்கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். பொதுத்துறைவங்கிகளில் 2 ஆண்டு வழக்கறிஞர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.பணி: Assistant Manager (System) (Post Code: AMSY)

காலியிடங்கள்: 145

சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Computer Science, Computer Application, IT, Electronics, Electronics & Telecommunication, Electronics & Instrumentation போன்ற ஏதாவதொரு துறையில் பி.இ, பி.டெக் அல்லது எம்சிஏ, எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30.11.2015 தேதியின்படி கணக்கிடப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 17.01.2015

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100.

விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 12.12.2015

விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.12.2015

4 மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று 1-12-2015 விடுமுறை

காஞ்சிபுரம்,சென்னை, கடலூர் மற்றும் தி௫வள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று 1-12-2015 விடுமுறை

New education policy~2016சிறுமியை காப்பாற்றி உயிரிழந்த மாணவி

 சிக்கபல்லாப்பூர் மாவட்டம், பாள்யகெரெவில் வசித்து வந்த, கே.எஸ்.சுகன்யா, 15, அரசு உயர்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த, 28ம் தேதி, பள்ளியில் கனக ஜெயந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், தன்னுடன் படிக்கும் இரு மாணவியருடன், வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, கொத்துாருபள்ளி அருகில் உள்ள ஏரிக்கரையில், துணி துவைத்துக் கொண்டிருந்த சிறுமி, கே.பி.சுகன்யா தவறி ஏரிக்குள் விழுந்தார். இதை பார்த்த மாணவி சுகன்யா, ஏரியில் குதித்து நீந்தி, சிறுமியை காப்பாற்றினார். 
மாணவி நீந்தி கரைக்கு வர முயற்சித்தபோது, தண்ணீர் சுழலில் சிக்கினார். இதை கண்ட அவரது தோழிகள், அவரை காப்பாற்ற முற்பட்டனர். 'நீங்கள் இறங்கினால், சுழலில் சிக்கி இறப்பீர்கள். நான் உயிர் பிழைப்பது கஷ்டம். நீங்கள் நன்றாக படித்து, ஊருக்கு பெருமை சேருங்கள்' எனக் கூறியபடியே, நீரில் மூழ்கி இறந்து போனார்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று 1-12-2015 விடுமுறை

கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று 1-12-2015 விடுமுறை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று 1-12-2015 விடுமுறை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று 1-12-2015 விடுமுறை

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!