Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 2 December 2015

சென்னை விமான நிலையம் டிசம்பர் 6 ஆம் தேதி வரை மூடப்பட்டது

டிசம்பர் 6 ஆம் தேதி வரை அரக்கோணம் கடற்படை விமான  தளம் பயணிகள் விமான நிலையமாக செயல்படும் என அறிவிப்பு

போன் செய்தால் படகு உதவி செய்து தரும் அவசர உதவி எண்கள்

வரலாறு காணாத தொடர் கனமழையால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.அவர்களுக்கு உதவும் வகையில் அரசு, கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொண்டால் படகு உதவி செய்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
NDRF: 01124363260,9711077372
NTL boat:7708068600
OLA: 04428294121
Army: 9840295100
Navy: 04425394240

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக 30 ரூபாய் ரீசார்ஜ் செய்து விடும் ஏர்டெல்

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக 30 ரூபாய் ரீசார்ஜ் செய்து விடும் ஏர்டெல
வரலாறு காணாத கன மழையால் பாதிக்கப்பட்டு ரீசார்ஜ் கடைகளும் இல்லாமல்சரிவர இணைப்பும் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகி வரும் சென்னை வாசிகளுக்காக முன்னணி தொலை தொடர்பு நிறுவனமான ஏர்டெல் சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.இதன்படி,

சென்னையில் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் 30 ரூபாயை மினிமம் பேலன்சாக ரீசார்ஜ் செய்து விடும். (இல்லாத பட்சத்தில் 52141 என்ற எண்ணை அழைக்கலாம்.) இது மட்டுமின்றி இந்த சிறப்பு பேக்கேஜ் மூலம் 10 நிமிடங்கள் (2 நாட்கள் வேலிடிட்டி) ஏர்டெல்-ஏர்டெல் பேசிக்கொள்ளலாம். மேலும் 50 MB இண்டர்நெட் பேக்கும் இதனுடன் தரப்படுகிறது. இந்த 30 ருபாய் பணத்தை ரீசார்ஜ் கடைகள் திறக்கப்பட்ட பின் 10 ரூபாய் கடன் வாங்கும் போது கழிக்கப்படுவது போல் ரீசார்ஜ் செய்த பின்னர் கழிக்கப்படும்.மின்சார வசதி இல்லாததால் ஏற்பட்ட தடங்கல்களுக்கு வருந்துவதாகவும் ஏர்டெல் தெரிவித்துள்ளது

சென்னையில் 100 ஆண்டுகளில் இல்லாத கனமழை

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவி்ற்கு சென்னையில் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகளுக்குள் வௌ்ள நீர் புகுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மழையால் பாதித்த பகுதி மக்களுக்கு உதவ நீங்கள் தயாரா?

மழையால் பாதித்த பகுதி மக்களுக்கு உதவ ஆசிரியர்களுக்கு அரசு சிறப்பு அனுமதி அளித்தால் பாதித்த பகுதிக்கு சென்று சேவை செய்ய தயாரா?

டிசம்பர் 3, 4 ம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு

சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மழையின் காரணமாக பொது விடுமுறை அறிவிப்பு.

சென்னையில் ஒரு வாரத்திற்கு இலவச தொலைப்பேசி சேவை

சென்னையில் ஒரு வாரத்திற்கு பிஎஸ்என்எல் இலவச தொலைப்பேசி சேவை அளிக்கும் என மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

அறிவியல் விருது தேதி நீட்டிப்பு

அறிவியல் நகரம் சார்பில், 2014ம் ஆண்டுக்கான, 'தமிழ்நாடு இளம் அறிவியல் ஆய்வாளர் விருது' மற்றும், 'தமிழ்நாடு வாழ்நாள் அறிவியல் சாதனையாளர் விருது' பெற, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், டிச., 4ம் தேதி வரை, அறிவியல் நகரத்தில் பெறப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கனமழை காரணமாக, காலக்கெடு, 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவம், விதி மற்றும் விவரம், அறிவியல் நகரம் இணையதளத்தில் www.sciencecitychennai.in வெளியிடப்பட்டுள்ளது.

பிரதான முக்கியத் துறைகளில் 24 மணிநேரம் பணியாற்ற உத்தரவு

பலத்த மழை காரணமாக, பிரதான முக்கியத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் 24 மணி நேரமும் பணியாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.
வருவாய், பொதுப்பணி, நெடுஞ்சாலை, உள்ளாட்சி, சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய அரசுத் துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டும். மேலும், மேலே குறிப்பிட்ட துறைகளைச் சேர்ந்தோர் எந்தக் காரணம் கொண்டும் விடுமுறையில் செல்லக் கூடாது என உயர் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

வேலூர் மாவட்டம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

வேலூர் மாவட்டம்
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுற
தொடர் பலத்த மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று(02.12.2015) விடுமுறை- மாவட்ட ஆட்சியர் நந்தகோபால் உத்தரவு

டிசம்பர் -2 சர்வதேச அடிமை ஒழிப்பு தினம் (International Day for the Abolition of Slavery

அடிமை என்கிற நிலை இன்னும் தொடர்கிறது என்பதை ஐ.நா. சபை உறுதி செய்துள்ளது. ஆகவே 2002ஆம் ஆண்டு டிசம்பர் 18 அன்று ஒரு தீர்மானத்தின்மூலம் டிசம்பர் – 2ஐ சர்வதேச அடிமை ஒழிப்பு தினமாக ஐ.நா. அறிவித்தது. பெண்கள் மற்றும் குழந்தைகளை அடிமை முறையிலிருந்து காப்பாற்ற, தடுக்க மனித உரிமை ஆணையங்களைப் பலப்படுத்த வேண்டும் என ஐ.நா. கூறுகிறது.

மாற்றுத் திறனாளிகள் திரைப்படவிழாவுக்கு தமிழ்ப் படம் தேர்வு

இந்திய அரசால் நடத்தப்படும் முதல் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு சர்வதேச திரைப்பட விழாவிற்கு, "ஹரிதாஸ்" எனப்படும் தமிழ்த் திரைப்படம் தேர்வாகியுள்ளது.

இந்திய அரசால் நடத்தப்படும் முதல் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு சர்வதேச திரைப்பட விழாவிற்கு, "ஹரிதாஸ்" எனப்படும் தமிழ்த் திரைப்படம் தேர்வாகியுள்ளது.

மாற்றுத் திறனாளியான மகனை வளர்க்க ஒரு தந்தை தனியாக படும் சிரமத்தை இப்படம் காட்டுகின்றது. இப்படம் வசூல் ரீதியான வெற்றியையும் பெற்று, கதாபாத்திரங்களின் சிறந்த படைப்புக்கான பாராட்டுகளையும், விமர்சகர்களிடம் பெற்றிருந்தது.

ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கத்தில் உருவாகிய "ஹரிதாஸ்" என்கிற அப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டில் வெளியாகியிருந்தது. நடிகர்கள் கிஷோர், சிநேகா உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்தில், 'ஆட்டிசம்' எனப்படும் மூளை வளர்ச்சி குறைப்பாடு கொண்டிருக்கும் சிறுவனாக பிரித்விராஜ் தாஸ் நடித்திருந்தார்.

இந்த ஆண்டில் நடைபெறும் முதல் மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கவிருக்கும் ஒரே தமிழ் மொழி திரைப்படமும் இதுதான்.

இவ்விழா வருடந்தோறும் டிசம்பர் மாதத்தின் முதல் மூன்று தினங்கள் நடத்தப்படும் என, இந்திய அரசு, இவ்விழா தொடர்பான அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கி முதல் மூன்று தினங்கள் நடத்தப்படும் இந்த திரை விழா, மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச தினமான டிசம்பர் 3 ஆம் தேதியன்று நிறைவு பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மத்திய சமுக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் நடத்தப்படும் இந்த முதலாவது வருட நிகழ்ச்சியில், மொத்தமாக 40 படங்கள் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.

அவை 10 முழுநீள திரைப்படங்கள், 16 குறும்படங்கள் மற்றும் 14 ஆவணத் திரைப்படங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளிலிருந்து மொத்தமாக விண்ணப்பிக்கப்பட்டிருந்த 541 படங்களிலிருந்து, இந்த 40 படங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அத்தோடு இந்த நிகழ்ச்சியில் வகைப்படுத்தப்பட்டுள்ள மூன்று பிரிவுகளின் கீழும், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகளும், பரிசுத் தொகையும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுவார்கள். அந்த பரிசுத்தொகை மூன்று லட்சம் ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தனித்துவம் வாய்ந்த திரைவிழாவாக கருதப்படும் இந்த நிகழ்ச்சியோடு சேர்த்து, சிறப்பு விவாத பட்டறை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

கனமழை : 8 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று (02.12.2015) விடுமுறை அறிவிப்பு


*திருவண்ணாமலை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*நாகை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
*சென்னை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
*திருவள்ளூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
*காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
*விழுப்புரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
*கடலூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
*புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

ஆசிரியர் உயர்கல்வி பயிலும் பட்ட படிப்பின் தேர்வினை ,தற்செயல் விடுப்பு எடுத்து தேர்வு எழுதலாமா ??? RTI பதில்



மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு DEC 03 அன்று சிறப்பு தற்செயல்

G.O Ms 72 :சமூகநலம் - சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் DEC .3 - மாற்றுத்திறனாளிஅரசு ஊழியர்கள் 
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு DEC 03 அன்று சிறப்பு தற்செயல் விடுப்புஎடுத்துக்கொள்ளலாம்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!