Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 4 December 2015

Flash News - கனமழை : பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (05/12/2015) விடுமுறை அறிவிப்பு.

*கடலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
*நாகை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

பால் விநியோகம் சீரானது:ஆவின் நிறுவனம் அறிவிப்பு

சென்னையில் பால் விநியோகம் சீரானதாக ஆவின் பால் நிறுவனம் அறிவித்துள்ளது.

கன மழை காரணமாக பால் விநியோகம் முடங்கியதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். ஒரு பாக்கெட் பால்

3 மாவட்டங்களுக்கு இலவச அரசு பஸ் : தமிழக அரசு உத்தரவு

முதல்வர் ஜெயலலிதா இன்று பிறப்பித்த உத்தரவில், கனமழை காரணமாக சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கும் அரசு பஸ்களில் பயணிப்பபோர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் , ஆகிய மாவட்டங்கள் வரை செல்ல இலவசமாக இயக்கப்படும், கட்டணம் வசூலிக்கப்படாது, இந்த உத்தரவு டிசம்பர்

கனமழை - சென்னையில் நடமாடும் ATM: ஞாயிறன்று வங்கிகள் செயல்படும்!

கனமழை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு உதவிடும் வகையில், வங்கிகளின் நேரத்தை நீட்டித்தும், ஞாயிறு அன்றும் வங்கிகள் செயல்படவும் மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக நகர் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்கள் பெரிதும் துயரத்திற்கு ஆளானார்கள்.

வெள்ளத்தால் வீடு, வாகனங்கள் நாசம் ரூ.1,000 கோடியை தாண்டிய இழப்பீடு

      வெள்ளத்தில், வாகனம், வீடுகளை இழந்த பாலிசிதாரர்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு கோரி உள்ளனர்.
 
        தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், நவ., 7 முதல், கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆற்று ஓரங்களில் இருந்த வீடு, தொழிற்சாலைகளில், தண்ணீர் உட்புகுந்துள்ளது. சாலைகளில், நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களும் மழைநீரில் மூழ்கின.

இதையடுத்து, வாகனம், வீடு உள்ளிட்டவற்றை இன்சூரன்ஸ் செய்த பாலிசிதாரர்கள், இழப்பீடு கோரி அதிகளவில், இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் விண்ணப்பித்து வருகின்றனர். நேற்று வரை, 1,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு கோரியுள்ளனர்.
இதுகுறித்து, காப்பீட்டு நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:மழையால் பாதிக்கப்பட்ட பாலிசிதாரர்களின் வசதிக்கு, சென்னையில் உள்ள அரசு பொது காப்பீட்டு நிறுவன அலுவலகங்களில், தனி பிரிவு துவக்கப்பட்டு உள்ளது. இதற்காக, தனி அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு உள்ளனர். பொது மற்றும் தனியார் துறையில் உள்ள, 25 காப்பீட்டு நிறுவனங்களில், நவ., 7 முதல், நேற்று வரை, 2,000 பேர், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு கோரியுள்ளனர். இந்த எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கும்.இவ்வாறு அவர் கூறினார் .

நாளை (05/12/2015) குறுவள மைய பயிற்சி (PRIMARY CRC) தேதியில் மாற்றமில்லை

கனமழை காரணமாக அரசு விடுமுறை அறிவித்துள்ள மாவட்டங்களில் மட்டும் 5.12.2015-க்கு பதிலாக 19.12.2015-ல் Primary CRC மாற்றியமைக்கப் பட்டுள்ளது..

மற்ற அனைத்து மாவட்டங்களிலும் நாளை (5.12.2015) திட்டமிட்டபடி Primary CRC நடைபெறும்...

In AEEO-Office Block level-Teacher's Grievance day-வும்நடைபெறும்..

வெள்ளத்தில் மிதக்கும்அரசு அலுவலகங்கள்

           கன மழையால், மாற்றுத்திறனாளிகள் துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட, அரசு அலுவலகங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.சென்னை, கே.கே.நகரில், மாற்றுத்திறனாளி நலத்துறை இயக்குனரகம்; கிண்டி, திரு.வி.க., தொழிற் பேட்டையில் சமூக நலம், சத்துணவு திட்ட அலுவலகங்கள் செயல்படுகின்றன.

      கன மழையால், மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்குள் வெள்ள நீர் புகுந்தது. பல அடி உயரத்திற்கு தேங்கி உள்ள தண்ணீரால், அலுவலகத்தில் இருந்த மருத்துவ உபகரணங்கள் சேதம் அடைந்தன. அடையாறு ஆற்றின் வெள்ள பெருக்கால், சமூக நலத்துறை அலுவலகத்தில் தண்ணீர் புகுந்து, முக்கிய ஆவணங்கள் நனைந்து உள்ளன.

சுப்ரீம் கோர்ட்டின் 43வது தலைமை நீதிபதியாக தாக்குர்

சுப்ரீம் கோர்ட்டின், 43வது தலைமை நீதிபதியாக, திரத் சிங் தாக்குர், 63, நேற்று பதவியேற்றார்.சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பணியாற்றிய எச்.எல்.தத்து, நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார்.

 

         இதையடுத்து, ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில், தலைமை நீதிபதியாக, டி.எஸ்.தாக்குர் பதவியேற்றார். அவருக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.இவ்விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, சதானந்த கவுடா, ஹர்ஷவர்த்தன், ஸ்மிருதி இரானி மற்றும் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, எம்.பி.,க்கள், சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் உட்பட, பலர் பங்கேற்றனர். டி.எஸ்.தாக்குர், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்; இவரது தந்தை, டி.டி.தாக்குர், காஷ்மீர் துணை முதல்வராகவும், ஐகோர்ட் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியவர். 

கடந்த 1972ல், ஜம்மு - காஷ்மீர் ஐகோர்ட்டில், பிளீடராக பணியைத் துவக்கிய, டி.எஸ்.தாக்குர், 1994ல், கூடுதல் நீதிபதியாகவும், அதன்பின், கர்நாடகா ஐகோர்ட் நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.டில்லி, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில ஐகோர்ட்களில் நீதிபதியாக பணியாற்றிய டி.எஸ்.தாக்குர், 2009ல், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் தலைமையிலான அமர்வு தான், கிரிக்கெட் சூதாட்டம், மேற்கு வங்க சாரதா சிட் பண்ட் ஊழல், உ.பி., முன்னாள் அமைச்சர் பாபு சிங் குஷ்வஹா மீதான ஊழல் வழக்குகளில், அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள தாக்குரின் பதவிக் காலம், 2017 ஜனவரி, 4 வரை உள்ளது.

      

வெள்ளத்தில் சிக்கிய ரமணன்       சென்னையில் வெள்ளத்தில் சிக்கிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன் பாதுகாப்பாக போலீஸாரால் மீட்கப்பட்டார்.

இதுகுறித்த விவரம்: 
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநராக இருக்கும் எஸ்.ஆர்.ரமணனின் வீடு, தியாகராய நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ளது. சென்னையில் பெய்த பலத்த மழையின் காரணமாகவும், அடையாறு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாகவும் தியாகராய நகர் பகுதியில் புதன்கிழமை வெள்ளம் சூழந்தது. இதில் ரமணனும், அவரது குடும்பத்தினரும் வீட்டில் சிக்கிக் கொண்டனர். உடனே ரமணன், காவல் துறையினரைத் தொடர்பு கொண்டு உதவி கேட்டாராம். தகவலறிந்த போலீஸார், விரைந்து சென்று ரமணனை பாதுகாப்பாக மீட்டனர்.

Flash News - கனமழை : 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (04/12/2015) விடுமுறை அறிவிப்பு.


*அரியலூர் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
*திருவாரூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*விழுப்புரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*நாகை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*திருவள்ளுர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 6ம் தேதி வரை விடுமுறை விடுமுறை
*காஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 6ம் தேதி வரை விடுமுறை
*கடலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*புதுச்சேரி,காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 6ம் தேதி வரை விடுமுறை

மேலும் ஒரு காற்று அழுத்த தாழ்வு சென்னை:

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்று அழுத்த தாழ்வு நிலையால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில், கனமழை பெய்யும்' என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.வானிலை மைய இயக்குனர் ரமணன் நேற்று கூறியதாவது:

தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கும் வட தமிழகத்துக்கும் இடையே, இரு நாட்களுக்கு முன் நிலை கொண்டிருந்த காற்று அழுத்த தாழ்வு மறைந்து விட்டது. தற்போது அதே இடத்தில், புதிய காற்று அழுத்த தாழ்வு உருவாகி உள்ளது. இதனால், தமிழக டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும்.சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உண்டு.நேற்று காலை, 8:30 மணி வரை தமிழகத்தில் அதிகபட்சமாக, கடலுார் - 13; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் - 12; மதுரை மாவட்டம், பெரியாறு - 11; திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் - 9 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மீண்டும், 50 செ.மீ., மழை?'சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில், அடுத்த இரு நாட்களில், மீண்டும் 50 செ.மீ., மழை பெய்யும்' என தனியார் வானிலை மையங்கள் எச்சரித்துள்ளன.ஓய்வு பெற்ற வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஒய்.இ.ஏ.ராஜ் கூறியதாவது:

இரு தினங்களுக்கு முன் தாம்பரத்தில் 49 செ.மீ., மழையும், சென்னை மற்றும் பிற சுற்றுப் பகுதிகளில், 29 - 36 செ.மீ., மழையும் பெய்தது, மிக அதிகபட்சமானது. இதுபோன்ற நிலை எதிர்பாராமல் நடப்பது. மீண்டும் இதேபோல மழை பெய்யுமா என்பதை கணிக்க முடியாது. தற்போது நிலவும் வானிலை நிலவரப்படி, மீண்டும் மிக கனமழைக்கு வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அரசில் 7.47 லட்சம் பணியிடம் காலி:


மத்திய அரசில் 7.47 லட்சம் பணியிடம் காலி: நிதித்துறையில் 46 சதவீத பணியாளர் இல்லை
ராமநாதபுரம்,:மத்திய அரசுத்துறைகளில் 7.47 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. நிதித்துறையில் மட்டும் 46 சதவீத பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.மத்திய அரசில் 56 துறைகள், யூனியன் பிரதேசங்களின் அரசு
துறைகள் மற்றும் டில்லி போலீஸ் துறைகளில் 40.48 லட்சம் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளன. இதில் சென்ற ஆண்டு வரை 33.01 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. 7.47 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன.
அறிவியல் தொழில்நுட்பத் துறையில் 12,503 பணியிடங்களில் 5,823 காலியாக உள்ளன. இத்துறையில் அதிகபட்சமாக 47 சதவீதம் காலியாக இருக்கின்றன.
நிதித்துறையில் 1,76,260 பணியிடங்களில் 95,863 காலியாக உள்ளன. இது 46 சதவீதம். விமான போக்குவரத்துறையில் 44 சதவீதம், சிறுபான்மைத்துறை 41, பாதுகாப்புத்துறையில் 32, உணவு வழங்கல்துறை 31, வனத்துறை 37, வெளியுறவுத்துறை 34, கனரக தொழிற்சாலை 34, மனிதவள மேம்பாட்டுத்துறை 35 சதவீதம் என, அனைத்து துறைகளிலும் சராசரியாக 18 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த விபரம் 7வது ஊதியக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியிடங்களை நிரப்ப, மத்திய அரசு ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ரத்தான ரெயில்களுக்கான கட்டணம் 3 நாட்களில் திரும்ப கிடைக்கும்: தெற்கு ரெயில்வே

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால், பயணிகள் பாதுகாப்பை கருதி கடந்த மாதத்தில் 60-க்கும் மேற்பட்ட ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. இந்தநிலையில் 2 நாட்களாக பெய்யும் கன மழையினால் நேற்று 41 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

20-க்கும் மேற்பட்ட ரெயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். இதனைத்தொடர்ந்து பாதுகாப்பு கருதி ரத்து செய்யப்பட்ட ரெயில்களில் பயணம் செய்ய இருந்த பயணிகள் செலுத்திய டிக்கெட் கட்டணம் மீண்டும் திரும்ப ஒப்படைக்கப்பட உள்ளது. அதன்படி ‘ஆன்-லைன்’ மூலம் டிக்கெட் எடுத்தவர்களுக்கு அவர்கள் செலுத்திய கட்டணம் மீண்டும் அதே வங்கிக்கணக்கில் 3 நாட்களுக்குள் செலுத்தப்படும்.

ரெயில் நிலையங்களில் டிக்கெட் எடுத்திருந்தால் அங்கேயே 3 நாட்களுக்கு பிறகு டிக்கெட் கட்டணம் திரும்ப ஒப்படைக்கப்படும். இந்த தகவலை தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் டிசம்பர் 5 வரை அனைத்து ரெயில்களும் ரத்து

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சென்னையில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. விமான போக்குவரத்து மற்றும் சென்னை மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

சென்னை எழும்பூரில் இருந்து தென் மாட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டது. சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து செல்லும் ரெயில்களின் சேவையும் பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம்- திருத்தணிக்கு ரெயில்கள் பாதுகாப்பான முறையில் இயக்கப்பட்டு வருகிறது. எண்ணூர்-கும்மிடிபூண்டி மற்றும் சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே ரெயில் இயக்கப்படுகிறது.

இந்நிலையில், மழை வெள்ளம் வடியாதால் சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களின் சேவை வரும் 5-ம் தேதி வரையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கனமழை பெய்ததால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரெயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதன் காரணமாக சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் இருந்து அனைத்து ரெயில்களின் சேவையும் டிசம்பர் 5-ம் தேதி மதியம் 12 மணிவரையில் ரத்துசெய்யப்பட்டது என்று தென்னக ரெயில்வே அறிவித்து உள்ளது.

சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் இருந்து இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள், இவ்வழியாக செல்லும் சிறப்பு ரெயில்களின் சேவையும் டிசம்பர் 5-ம் தேதி மதியம் 12 மணிவரையில் ரத்து செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் மருத்து உதவிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.  மதுரை, திருச்சி ஆகிய ரெயில் நிலையங்கள் வரையிலும் மருத்துவ உதவிகள் விரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை ரெயில் நிலையங்களில் உள்ள மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது.

சென்னை எழும்பூர், சென்ட்ரல், கூடுவாஞ்சேரி, பல்லாவரம், செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை வரையில் மக்களுக்கு மருத்துவ உதவி மற்றும் பிற உதவிகளை செய்யும் வண்ணம் ரெயில்வே போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

58வது குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


CTET -FEB 2016 NOTIFICATION


அகஇ - பகுதி நேர பயிற்றுனரகளுக்கு நவம்பர் மாத ஊதியத்தை நிபந்தனையுடன் முழுவதுமாக வழங்க வேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!