Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 7 December 2015

G.O Ms : 105 - துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு - தெளிவுரை அளித்து அரசானை வெளியீடு ( நாள் : 10/2015)வேலூரின் இளம் விஞ்ஞானி!


வேலூர் சத்துவாச்சாரியில் இயங்கி வரும் ஹோலி க்ராஸ் மெட்ரிக் மேனிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் இளம் விஞ்ஞானியான ஜி. ஸ்ருதிசரஸ்வதி, கடந்த அக்டோபர் மாதம் நாமக்கல் மாவட்டத்தில் நடந்த 'இன்ஸ்பியர் அவார்டு' அறிவியல் கண்காட்சியில், தனது மூன்று விதமான கண்டுபிடிப்புகளை சமர்ப்பித்தார். அதனை ஆய்வு செய்த விஞ்ஞானிகளால், மாநில அளவில் முதல் மாணவியாக தேர்வுசெய்யப்பட்டு தங்கப்பதக்கம் வென்றார்.
கண்டுபிடிப்புகள் பின்வருமாறு:
1.வாகனம் செல்லும்போது உணறிகள் (Sensor) மூலமாக தானாகவே மின்சாரம் சேமிக்கும் கருவி. சாலைபகுதியில் வாகனம் அல்லது மனித நடமாட்டம் இருக்கும்போது சாலை ஓரங்களில் இருக்கும் மின்விளக்கு தானாக ஒளிரும். மாறாக எந்தவித நடமாட்டம் இல்லாதபோது ஒளிராது. இதுவே உணறிகள்(Sensor) மூலம் கட்டுப்படுத்தும் கருவி.
2. சாலை விபத்துகளை தடுக்க, சிவப்பு விளக்கு எறிந்தாலும் சில வாகனங்கள் சென்றுவிடுவதுண்டு இதனை தடுக்க, உணறிகள் (Sensor) மூலமாக தானியங்கி தடை உண்டாக்கும் கருவி சாலையில் பொருத்தப்பட்டிருக்கும். பச்சை விளக்கு ஒளிரும்போது தானாக அந்த தடை மறைந்துவிடும்.
3. அவசர ஊர்தி (Ambulance) மற்றும் தீயணைப்பு (Fire-Engine) வாகனம் செல்லும்போது, சாலையில் வைக்கப்பட்டிருக்கும் IR Transmitter (உணறிகள்) மூலமாக வாகன நெரிசல் இல்லாமல் செல்ல பச்சை விளக்கு தானாக ஒளிரும். இதனால் தடையின்றி வாகனம் செல்லும்.
மாநில அளவில் தேர்வான இளம் விஞ்ஞானிகளுக்கான ஆய்வு கூட்டம், வருகின்ற 5,6 மற்றும் 7-ம் தேதிகளில், இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள IIT வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த அறிவியல் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு, தனது கண்டுபிடிப்புகளை சமர்ப்பிக்க உள்ளார் ஸ்ருதி சரஸ்வதி

சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் மேலும் 2 நாட்கள் விடுமுறை; பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செவ்வாய் மற்றும் புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் இடைவிடாது பெய்த கனமழையை தொடர்ந்துமீட்பு பணிகளும் நிவாரணங்களும் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த நிலையில் பள்ளி, கல்லூரி வளாகங்களை தூய்மைப்படுத்த வேண்டிய பணி உள்ளதால் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

தேர்வுகள் ஒத்திவைப்பு

அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் டிசம்பர் 14 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அம்பேத்கர் சட்டக் கல்லூரி தேர்வுகள் டிசம்பர் 13 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.இதே போல் தன்னாட்சி அதிகாரம் கொண்ட கல்லூரிகளைத் தவிர, பிற கல்லூரிகளின் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக பதிவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மாற்று ஆவணங்கள் வழங்க பள்ளி மற்றும் கல்லூரிகளில் சிறப்பு முகாம்கள்: மாற்று ஆவணங்கள் வழங்க ஏற்பாடு:


வெள்ளத்தின் காரணமாக பொதுமக்கள் தங்களது நிலம் மற்றும் வீட்டு மனைப் பட்டா, கல்வி சான்றிதழ், எரி வாயு இணைப்பு அட்டை, ஆதார் அடையாள அட்டை,வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்குப் புத்தகம், நிலம் / வீட்டு கிரையப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை இழந்துள்ளனர் என தகவல் கிடைக்க பெற்றுள்ளதைத் தொடர்ந்து, மேற்சொன்ன ஆவணங்களை இழந்துள்ள பொது மக்களுக்கு அவற்றின் நகல்களை உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறப்பு முகாம்கள்:

இதற்காக சிறப்பு முகாம்கள் வருவாய் வட்டங்களிலும், கல்வி சான்றிதழ்களுக்கு, பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் வருகின்ற 14.12.2015 முதல் இரண்டு வாரங்களுக்கு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இம்முகாம்களில், தமிழ்நாடு அரசின் பல்வேறு துறை அதிகாரிகளும், மத்திய அரசின் தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று ஒரு வாரத்திற்குள்ளாக நகல்ஆவணங்களை கட்டணமின்றி வழங்குவர்.

சிறப்பு முகாம்களில் மட்டுமன்றி, பொதுமக்கள் விண்ணப்பங்களை பொது சேவைமையங்கள் மூலமாகவும் கொடுத்து நகல் ஆவணங்களைப் பெறலாம். தமிழ்நாடு பத்திரப் பதிவுச் சட்டம் 1908 பிரிவு 57(5)-ன்படி, இச்சிறப்பு முகாம்களில் விண்ணப்பித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிலம்/வீட்டுமனை சொத்து தொடர்பான பத்திர நகல்கள் யாவும்மூல ஆவணங்களாகக் கருதப்படும்.ஆட்டோ ஒட்டுநர்கள் பலர் ஒட்டுநர் உரிமச் சான்று மற்றும் வாகனப் பதிவுச் சான்று ஆகியவற்றை இந்த மழை வெள்ளத்தால் இழந்துள்ளனர். இந்த ஆவணங்களும் இதே நடைமுறைப்படி வழங்கப்படும்.மழை வெள்ளத்தால் சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.5000/-ம், குடும்பத்திற்கு 10 கிலோ அரிசியும் வழங்க ஏற்கெனவே ஆணையிட்டதன் அடிப்படையில் இந்த நிவாரண உதவிகள் துரிதமாக வழங்கப்பட்டு வருகின்றன"

துப்புரவுப் பணியாளர்களுக்கு ரூ.2000 ஊக்கத் தொகை: தமிழக அரசு அறிவிப்பு


இரவு, பகல் என்று பாராமல் கடுமையாக உழைக்கும் சென்னை மாநகர துப்புரவுப் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், சிறப்பு ஊக்கத் தொகையாக 2,000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பான அறிக்கையில்,

"சென்னை மாநகராட்சியில் வெள்ளம் வடிந்த இடங்களில் சுகாதாரத்தைப் பேணுவதற்காக மாநகராட்சி துப்புரவுப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.வெளிமாவட்டங்களிலிருந்து 2,000 துப்புரவுப் பணியாளர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சிப் பகுதியில் தற்பொழுது 25,000 துப்புரவுப் பணியாளர்கள் துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள குப்பைகளை விரைந்து அகற்றும் பொருட்டு மேலும் 5,000 துப்புரவுப் பணியாளர்கள் பிற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வரவழைக்கப்படுவர்.மேலும், தேவைக்கேற்ப சென்னை மாநகரத்தில் துப்புரவுப் பணியாளர்கள் தினக்கூலி அடிப்படையில் பணி அமர்த்தப்படுவர். அவர்களுக்கு நாளொன்றுக்கு 300 ரூபாய் வழங்கப்படும். இந்த அடிப்படையில் துப்புரவுப் பணியாளராக பணியாற்ற விரும்புவோர் சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

சென்னை மாநகர துப்புரவுப் பணியாளர்கள் கடந்த பல நாட்களாக குப்பைகளை அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இரவு, பகல் என்று பாராமல் கடுமையாக உழைக்கும் அவர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்த துப்புரவுப் பணியாளர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக 2,000 ரூபாய் வழங்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் குடிசை வீடுகளை இழந்தவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய்: முதல்வர் அறிவிப்பு


தமிழகத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் குடிசை வீடுகளை இழந்தவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், குடிசை வீடுளை இழந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டித்தரப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும் இதர குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியாகவும் 10 கிலோ அரிசி மற்றும் வேட்டி சேலை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

7-வது ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்தினாலும் நிதிப்பற்றாக்குறை இலக்கை எட்டுவோம்: நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை.


நிதிப்பற்றாக்குறையை பற்றி கவலைப்படவில்லை. 7வது சம்பள கமிஷனின் பரிந்துரையை நிறை வேற்றினாலும், நிதிப்பற்றாக்குறை இலக்கை எட்ட முடியும் என்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். அதே சமயத்தில் ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்தும் பட்சத்தில் ஆண்டுக்கு 1.02 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் செலவு என்பதையும் அருண் ஜேட்லி ஒப்புக்கொண்டிருக்கிறார்.

டெல்லியில் நடந்த விழாவில் இவ்வாறு கூறினார் மேலும் அவர் கூறியதாவது. தனிப்பட்ட முறையில் நிதிப்பற்றாக்குறை இலக்கு குறித்த கவலை எனக்கு இல்லை. மத்திய அரசு நிதி நிலைமையை மேம்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நடப்பு நிதி ஆண்டில் நிதிப்பற்றாக்குறை 3.9 சதவீதமாக கட்டுப்படுத்தப்படும் என்றும்இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறோம். 2016-17ம் நிதி ஆண்டில் 3.5 சதவீதமாகவும், 2017-18 நிதி ஆண்டில் 3 சதவீதமாகவும் குறைக்க திட்டமிட்டிருக்கிறோம். செலவுகளைக் குறைப்பதன் மூலம் நிதிப்பற்றாக்குறையை குறைக்கலாம் அல்லது வரி வருமானத்தை அதிகப்படுத்துவதன் மூலம் குறைக்கலாம்.இதனால் நிதிப் பற்றாக்குறை குறித்த சந்தேகம் நிலவுகிறது. நாங்கள் நிதிப்பற் றாக்குறை இலக்கை எட்டுவோம். அரசாங்க ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் களின் சம்பளம் என்பது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும் என்பது பொதுவான விதி ஆகும்.

ஆனால் ஊதிய குழுவின் பரிந்துரையை அமல் படுத்தும் பட்சத்தில் ஆரம்ப காலத்தில் முதல் இரு வருடங் களில் இந்த எல்லையை தாண்டு வதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் மூன்றாவது மற்றும் நான்காவது வருடங்களில் ஜிடிபி மதிப்பு உயரும் பட்சத்தில் மீண்டும் 2.5 சதவீதம் என்ற வரம்புக்குள் சம்பளம் மற்றும் பென்ஷனை கொண்டு வர முடியும் என்று அருண் ஜேட்லிதெரிவித்தார். பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டி யலிடப்பட்ட, பொதுத்துறையை சேர்ந்த 2,000 நிறுவனங்களில் பெண் இயக்குநரை நியமனம் செய்யவில்லை என்று மத்தியஅரசு தெரிவித்திருக்கிறது. புதிய கம்பெனி சட்டத்தின் படி நிறுவனங்களின் இயக்குநர் குழுவில்குறைந்தபட்சம் ஒரு பெண் இயக்குநராவது இருக்க வேண்டும் என்பது விதி ஆகும்.கம்பெனி விவகாரத்துறை அமைச்சர் அருண் ஜேட்லி மக்கள வையில் எழுத்து பூர்வமாக தெரிவித்த பதிலில் கூறியதாவது. பட்டியலிடப்பட்ட நிறுவனங் களில் 1,707 நிறுவனங்களில் பெண் இயக்குநர்கள் இல்லை. இதில் பொதுத்துறை நிறுவனங் களும் அடக்கம்.

அதேபோல பட்டியலிடப் படாத பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் 329 நிறுவனங்களில் பெண் இயக் குநர்கள் இல்லை என்று தெரிவித் திருக்கிறார்கள். பெண் இயக்குநர்கள் இல்லாத நிறுவனங்களில் பெண் இயக் குநர்களை நியமிக்குமாறு பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணை யமான செபி, மத்திய அரசை கேட்டிருக்கிறது என்று ஜேட்லி கூறினார்.

மாணவர்கள் இடைநிற்றலைத் தடுக்க குடும்பத்தினரின் அத்தியாவசியதேவையை பூர்த்தி செய்யத் திட்டம்


விருதுநகர் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு சிறப்பு பயிற்சி மையங்களில் பயின்று வரும் மாணவர்கள் இடைநிற்றலைத் தடுக்க, அவர்களது குடும்பத்தினரின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்ய திட்டமிட்டு அதற்கான களஆய்வு தொடங்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் தீப் பெட்டி, பட்டாசு ஆலைகள், செங் கல்சூளை ஆகிய இடங்களில் ஏராளமான குழந்தைத் தொழிலா ளர்கள் பணியாற்றி வந்தனர்.

அவர்களைக் கண்டறிந்து மீட்டு சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்த்து கல்வி வழங்க விருதுநகர் மாவட்டத்தில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை மூலம் கடந்த 1986-ல் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் தொடங்கப்பட்டது.இதன் மூலம் விருதுநகர் மாவட் டத்தில் சிவகாசி பகுதியில் இரு ளாண்டிபுரம், தையலர் காலனி, நேருஜி நகர், சிலோன் காலனி, அண்ணா காலனி, விளாம்பட்டி, சுபாஷ்சந்திரபோஸ் காலனி, திரு வள்ளுவர் காலனி, திருத்தங்கல், எம்.ஜி.ஆர். காலனி, எஸ்.என்.புரம், வத்திராயிருப்பு அருகே மேலபாளையம், மடவார்வளாகம், சாத்தூர் அருகே ஓ.மேட்டுப்பட்டி, படந்தாள், மேட்டமலை, அருப்புக் கோட்டை அருகே பாலவனத்தம், திருவில்லிபுத்தூர் அருகே மங்கா புரம் ஆகிய 18 இடங்களில் செயல் பட்டு வரும் சிறப்பு பயிற்சி மையங் களில் 9 முதல் 14 வயதுக்குட்பட்ட 414 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இச்சிறப்பு பயிற்சி மையங்களில் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் கல்வி பயிற்றுவிக்கப்பட்டு மாணவர்கள் அருகில் உள்ள அரசு முறைசார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு வருகின் றனர். விருதுநகர் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு இதுவரை 10,560 மாணவர்கள் பயிற்சியளிக் கப்பட்டு முறைசார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். 2015-16-ம் கல்வி ஆண்டில் மட்டும் 231 மாணவ, மாணவிகள் முறைசார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு சிறப்பு பயிற்சி மையங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.150 கல்வி உதவித் தொகையாக மத்திய அரசு வழங்கி வருகிறது. மேலும் மதிய உணவு, மதிய உணவுடன் வாரம் 5 முட்டைகள், பாடப்புத்தகங்கள், விளையாட்டுப் பொருட்கள், கல்வி உபகரணங்கள் அனைத்தும் இலவசமாகவே வழங்கப்படுகின்றன.கல்வியோடு மாணவர்களுக்கு தையல், கூடை பின்னுதல், கம்பளி நூல் பின்னுதல், பூக்கள் பின்னுதல் போன்ற தொழிற்கல்வி பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.ஆனாலும், இச்சிறப்பு பயிற்சி மையங்களில் பயிலும் மாணவர் களில் சுமார்65-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து பயிற்சி மையங்களுக்கு வருவதில்லை. சிறப்புப் பள்ளி ஆசிரியர்கள் இடைநின்ற மாணவர் களின் வீடுகளுக்குச் சென்று மாணவர் மற்றும் குடும்பத்தாரின் அத்தியாவசிய தேவைகள் என்ன என்பதை அறியும் வகையில் தற் போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இது குறித்து தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட அலுவலர்கள் மற்றும் வளர்ச்சிப் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது:மாணவர்கள் இடைநிற்றலுக்கு குடும்பச் சூழ்நிலையே முக்கிய காரணம். எனவே, ஒவ்வொரு குடும்பத்தையும் நேரில் சந்தித்து அவர்களது தேவைகள், பிரச்சி னைகள் ஆகியவற்றை அறிவதற் காகவே இந்த கள ஆய்வு மேற் கொள்ளப்படுகிறது.

வறுமையில் உள்ள மாணவ ரின் குடும்பத்துக்கு முதல்கட்டமாக அவர்களது வாழ்வாதாரத்தை ஏற் படுத்தும் வகையில் இலவச கறவை பசுக்கள், வெள்ளாடுகள் வழங்கும் திட்டம், வீடு இல்லாதோருக்கு வீட்டுமனைப் பட்டா,குடியிருப்பு கட்டிக்கொடுத்தல், ஆர்வம் உள் ளோருக்கு சுயதொழில் தொடங்க கடன் வசதி, மேற்படிப்பு படிக்க விரும்புவோருக்கு கல்விக் கடன் வழங்குவது போன்று அரசு வழங் கும் நலத்திட்டங்களில் இக்குடும்பத்தினருக்கு முதல் முன்னுரிமை வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.வறுமையில் வாடும் கும்பத்தின ருக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத் திக் கொடுத்தால் குழந்தைகளை வேலைக்கு அனுப்ப வேண்டிய சூழ்நிலை ஏற்படாது. விருதுநகர் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலா ளர் இல்லாத நிலையையும், பள்ளி செல்லும் மாணவர்கள் இடைநிற்ற லையும் முற்றிலுமாக தடுத்து நிறுத்துவதற்காகவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

இவர், இப்படி:அரசு ஊழியர்கள் பிரச்னைகளை அறிந்தவர்

இவர், இப்படி:அரசு ஊழியர்கள் பிரச்னைகளை அறிந்தவர்
சமீபத்தில், ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரைகள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட போது, நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் அதிகம் முணு முணுக்கப்பட்ட பெயர், அசோக் குமார் மாத்துார், 72;

இவர் தான், ஏழாவது சம்பள கமிஷனின் தலைவர். இவர் அளித்த பரிந்துரைகளையே,

வங்கியில் தனி நபர் கடன் கிடைக்குமா? உடைமை இழந்தோர் வேண்டுகோள்

வெள்ளத்தில் உடைமைகளை இழந்து, புதிய வாழ்க்கையை துவங்க உள்ளவர்களுக்கு, வங்கிகள், தனிநபர் கடனை வழங்க வேண்டும்' என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

மழை வெள்ளத்தில், உயிர் இழந்தோர் மற்றும் காயமடைந்தோருக்கு, மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் அளிக்கின்றன. ஆனால், வீடு மற்றும் உடைமைகளை இழந்தவர்கள், புதிதாக வாழ்க்கையை துவங்க

சென்னை வெள்ளத்தில் பாஸ்போர்ட்டை இழந்தவர்களுக்கு இலவசமாக புதிய பாஸ்போர்ட்: சுஷ்மா ஸ்வராஜ்

சென்னையில் வெள்ளத்தால் சேதமடைந்த அல்லது தொலைந்து போன பாஸ்போர்ட்டுகளுக்கு பதிலாக அரசு இலவசமாக புதிய பாஸ்போர்ட்டுகளை வழங்கும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வரலாறு காணாத தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், நகரின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. வெள்ளத்தில் சிக்கி மக்கள் ரேஷன் கார்டு, பாஸ்போர்ட்

அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டிலும் வெள்ளம் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 12ஆம் வகுப்பு வரை தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் பொதுத்தேர்ச்சி வழங்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: -

வரலாறு காணாத மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகரின் சில பகுதிகளில் இன்னும் வெள்ளம் முழுமையாக வடியவில்லை

கனமழை நிவாரணப் பணி - நெகிழ வைத்த 'டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப்'

புரட்சியை மட்டுமல்ல; மனிதத்தையும் விதைக்கலாம்' என நிரூபித்திருக்கின்றன, சமூக வலைதளங்கள். பொதுவாக, 'டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப்' ஆகியவை, வேறுவேறு தளங்களில் இயங்குபவை. இந்த மூன்றையும் இணைத்திருக்கிறது, சென்னை மற்றும் கடலுாரில் பெய்த பேய் மழை.
           'லைக்' போதையில் இருக்கும் பேஸ்புக்வாசிகள் செய்த ஒரு, 'ஷேர்'; 'ரீட்விட்' போதையில் இருக்கும் டுவிட்டர்வாசிகள் செய்த ஒரு, 'ரீட்விட்', வதந்திக்கு பெயர் போன, 'வாட்ஸ் ஆப்'வாசிகளின் ஒரு, 'பார்வேர்டு மெசேஜ்', வெள்ளத்தில் சிக்கிய பலரை காப்பாற்றியுள்ளது; பலரை பசியாற வைத்து

நிவாரணப் பணியில் நீதிபதி

  சென்னை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஏற்கனவே நிதியுதவி வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு.எஸ்.நாகமுத்து, இன்று தனது வேஷ்டியை மடித்து கட்டிக்கொண்டு வெள்ள நிவாரணப் பணிகளில் நேரடியாக ஈடுபட்டார். 

       அருமை. வாழ்த்துக்கள் நீதிபதி அவர்களே. (ஏற்கனவே காஷ்மீர் வெள்ளத்தில் அம்மாநில மக்கள் பாதிக்கப்பட்ட போது, தனது நீதிமன்ற வழக்குகளில் விதிக்கப்படுகிற தண்டத்தொகைகளை (costs) காஷ்மீர் வெள்ள நிவாரணத்திற்கு வழங்க உத்தரவிட்ட மனிதாபிமானி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.)

ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு பங்களிப்பு ஓய்வூதியத் தொகையை 2 மாதத்துக்குள் வழங்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு பங்களிப்பு ஓய்வூதியத் தொகையை 2 மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஓய்வு பெற்ற ஆசிரியர்
திருச்சி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் மோகன். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நான், கடந்த 8.10.2007 அன்று திருச்சி மாவட்டம் மால்வோய் பகுதியில்

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தொழில்வரியை ரத்து செய்ய வேண்டும் அரசு அலுவலர் ஒன்றியம் தீர்மானம்

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தொழில்வரியை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய விருதுநகர் மாவட்ட கிளையின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் விருதுநகர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் விருதுநகரில் நடைபெற்றது. கூட்டத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றுவது

அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழா ஒத்திவைப்பு

சென்னை அண்ணா பல்கலையில், டிச., 11ல் நடக்க இருந்த, 36வது பட்டமளிப்பு விழா, காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும், மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பல்கலை துணைவேந்தர் ராஜாராம் தெரிவித்துள்ளார்

இந்தியாவில் படிப்பறிவு 72.98 சதவீதமாக உயர்வு; மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி தகவல்

இந்தியாவில் 1951-ம் ஆண்டில் படிப்பறிவு 18.33 சதவீதமாக இருந்தது. அது 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்போது 72.98 சதவீதமாக உயர்ந்து உள்ளது. இந்த நிலை நீடித்தால் வரும் 12-வது ஐந்தாண்டு

புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று (07/12/2015) விடுமுறை அறிவிப்பு.

புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று  (07/12/2015) விடுமுறை அறிவிப்பு.

டெல்லியில் மாசை குறைக்க அதிரடி திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் ஒற்றைப்படை எண் காருக்கே அனுமதி; மாநில அரசு அறிவிப்பு

டெல்லியில் ஜனவரி 1ம் தேதி முதல், ஒற்றைப்படை பதிவெண் கொண்ட கார்களை திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் இயக்க வேண்டும்  என்று மாநில அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் நிலவும் காற்று மாசுவை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இதன் ஒருபகுதியாக கார்களை இயக்குவதில் சில கட்டுப்பாடுகளை கொண்டு வரப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 1ம் தேதி முதல், பதிவெண்கள் அடிப்படையில்  ஒருநாள் விட்டு ஒருநாள் கார்களை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. பதிவெண்ணின் கடைசி இலக்கத்தை அடிப்படையாக வைத்து ஒற்றை மற்றும்  இரட்டை படை கணக்கிடப்படும்.

ஆனாலும், சோதனை முயற்சியாக 15 நாட்கள் இத்திட்டம் அமலில் இருக்கும் என்றும், ஒருவேளை மக்களுக்கு இடையூறு ஏற்பட்டால் புதிய விதிமுறை  நிறுத்தப்படும் எனவும் முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்நிலையில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் ஒற்றைப்படை பதிவெண் கொண்ட  கார்களை இயக்கலாம் என்று மாநில உள்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘‘ரோந்து வேன்கள்,  தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்களுக்கு தடை இல்லை. செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களில் இரட்டை படை பதிவெண் கொண்ட கார்களை  இயக்க அனுமதி வழங்கப்படும். இப்புதிய கட்டுப்பாடு டெல்லியில் உள்ள அனைத்து அமைச்சர்கள், அதிகாரிகளுக்கும் பொருந்தும். 

மேலும் இவ்விதிமுறை குறித்து pollutionfreedelhi@gmail.com என்ற இமெயில் முகவரியை தொடர்பு கொண்டு பொதுமக்கள் கருத்து  தெரிவிக்கலாம். குளிர்காலத்தில் காற்று மாசு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதை கட்டுப்படுத்த இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார். டெல்லி மாநில அரசின் இத்திட்டத்தை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் வரவேற்றுள்ளார். ‘’புதிய விதிமுறையால் காற்று மாசு  குறைந்தால், அதை நாம் பின்பற்ற வேண்டும்’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு உதவியுடன் நடக்கும் வீர, சாகச பயிற்சியில் பங்கேற்க அரசு ஊழியர்களுக்கு அழைப்பு

மத்திய பணியாளர் நலத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உடலுழைப்பு இல்லாத பணி மற்றும் பெருகி வரும் மன  அழுத்தம் ஆகியவற்றில் இருந்து விடுபட, சாகச துணிச்சல் அடங்கிய விளையாட்டுகளில் மத்திய அரசு ஊழியர்கள் பங்கேற்க வேண்டும். இதற்கான  செலவை மத்திய அரசு ஏற்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம், ஊழியர்களுக்கு சவாலை எதிர்கொள்ளும் மனோதிடம், குழுக்களாக இணைந்து  செயல்படும்போது எதையும் உஷார் நிலையில் எதிர்கொள்ளும் தகுதி, துணிச்சலான தருணங்களை சந்திக்கும் திறமை போன்றவை அதிகரிக்கும்.

மலையேற்றம், பாராகிளைடிங் சாகசங்களில் ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, இமாச்சலப் பிரதேசம் மணாலியில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய்  மலையேற்ற பயிற்சி விளையாட்டு நிறுவனம் உள்பட 6 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் மத்திய அரசு நிதியுதவியுடன் பயிற்சிகள்  அளிக்கப்படும். இதில் மத்திய அரசு ஊழியர்கள் இலவசமாக பங்கேற்கலாம்.

மலைப்பாதையில் ஓட்டம், மலை ஏறுதல், பாறைகளில் தாவுதல், கடினமான தடங்களில்  சைக்கிள் ஓட்டுதல், அலை சறுக்கு, பனி சறுக்கு, படகு  செலுத்துதல், கிளைடரில்  பறத்தல், ராட்சத பலூன்களில் பறப்பது, காடுகளில் சவாரி, பாலைவனத்தில்  சவாரி, பீச் மணலில் ஓடுவது என 7 நாட்களுக்கு  அரசு ஊழியர்களுக்கு இந்த நிறுவனங்கள் பயிற்சி அளிக்கும். 

ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் இரண்டு அதிகாரிகளும், இப்பயிற்சிகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். பயிற்சிகளுக்குச் செல்லும்  ஊழியர்களுக்கு சிறப்பு விடுப்பு அளிக்கப்படும்.

வெள்ள பாதிப்பு: சென்னையில் குவியும் நிவாரணப் பொருள்கள்- தன்னார்வலர்கள் பற்றாக்குறை

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கானோருக்கு வழங்க பல்வேறு அமைப்புகளிடம் இருந்து நிவாரணப் பொருள்கள் குவிந்து வருகின்றன.
 சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் 
 இந்த நிவாரணப் பொருள்களை தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்களின் உதவியுடன் 
 மாநகராட்சி அதிகாரிகள் பிரித்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் இடங்களுக்கு 30 லாரிகள் மூலம் ஞாயிற்றுக்கிழமை (டிச.6) முதல் அனுப்பத் தொடங்கியுள்ளனர்.
 கடும் பாதிப்பு: சென்னையில் கடந்த சில நாள்களாக பெய்த பலத்த மழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால், பொதுமக்கள் உடைமைகள் உள்ளிட்டவற்றை இழந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், உணவு, உடைகள் இல்லாமல் அவதிப்பட்டும் வருகின்றனர்.
 இந்த நிலையில் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று உணவு, உடைகள் உள்ளிட்ட பொருள்களை விநியோகித்து வருகின்றனர். வெள்ள நீர் வடியாத பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளில் தொடர்பு கொள்ள முடியாதவர்கள், நிவாரண உதவியின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
 நேரு விளையாட்டரங்கத்தில் நிவாரணப் பொருள்கள்: இந்த நிலையில் மத்திய அரசு நிறுவனங்கள், மாநில அரசு நிறுவனங்கள், பல்வேறு உணவுப் பொருள்கள் தயார் செய்யும் நிறுவனங்களில் இருந்து தயார் செய்த உணவு வகைகள், உடைகள், போர்வைகள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் குவிந்து வருகின்றன.
 சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இந்தப் பொருள்கள் பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதை தன்னார்வ இளைஞர்கள், சேவை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கான பால் பவுடர், ரொட்டி, குழந்தைகளுக்கான இனிப்பு பொருள்கள், தயார் செய்யப்பட்ட உணவுகள், புத்தாடைகள், படுக்கை விரிப்புகள், தண்ணீர் பாட்டில்கள், மருந்துப் பொருள்கள் உள்பட அனைத்துப் பொருள்கள் அடங்கிய சாக்குப் பைகளில் அடைத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக அனுப்பப்பட்டு வருகின்றன.
 இது குறித்து வெள்ள நிவாரணப் பொருள்கள் பிரித்து வழங்கும் பொறுப்பு அதிகாரியும், மாநகராட்சி துணை ஆணையாளருமான கந்தசாமி கூறியதாவது: 
 கடந்த இரண்டு நாள்களாக அரசு அலுவலகங்கள், மத்திய அரசு நிறுவனங்கள், ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் அனைத்தும் வாகனங்கள் மூலம் நேரு உள்விளையாட்டு அரங்கில் சேகரிக்கப்பட்டுள்ளன.
 இதுவரையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், உணவுப் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் ஆகியவை மூலம் ஏராளமான லாரிகளில் பொருள்கள் வந்துள்ளன. ஒவ்வொரு குடும்பத்துக்கும் தேவையான பொருள்களை சாக்குப் பைகளில் அடைக்கும் பணியில் 800-க்கும் மேற்பட்ட தன்னார்வ இளைஞர்கள், 200-க்கும் மேற்பட்ட வருவாய்த் துறை, சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 
 நிவாரணப் பொருள்கள் குறித்துப் பதிவு: எந்தெந்தப் பகுதியிலிருந்து வாகனங்களில் என்னென்ன நிவாரணப் பொருள்கள் வந்துள்ளன உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் முறையாக அலுவலர்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட பின்னரே சேகரிக்கப்படுகின்றன.
 இந்த நிவாரணப் பொருள்களை மாநகராட்சியின் 54 பகுதிகளில் ஒவ்வொரு வீடு, வீடாகச் சென்று வழங்கப்படவுள்ளது.
 இதுவரை 14,800 குடும்பத்துக்கு..: ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்த நிவாரண உதவி பணியானது பெரம்பூர், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை, மெளலிவாக்கம், மணப்பாக்கம், சைதாப்பேட்டை, வேளச்சேரி, மடிப்பாக்கம், புழுதிவாக்கம், வளசரவாக்கம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களுக்கு 30 லாரிகளில் மொத்தம் 14,800 குடும்பத்தினருக்கு நேரடியாக வழங்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் 3 நாள்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அனைவருக்கும் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டு விடும் என்றார் அவர்.
தன்னார்வலர்கள் பற்றாக்குறை
 சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்காக பல்வேறு தரப்பினரும் வழங்கிய நிவாரண பொருள்கள் லாரிகள் மூலம் குவிந்து வருகின்றன. ஒவ்வொரு குடும்பத்துக்கும் தேவையான பொருள்களை சாக்கு பைகளில் அடைக்கும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். வருவாய்த்துறை அலுவலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் நிவாரண பொருள்களை வழங்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
 இந்த நிலையில் பல்வேறு அமைப்புகளிடமிருந்து 80 லாரிகளில் குவிந்துள்ள நிவாரணப் பொருள்களை இறக்க தன்னார்வலர்கள் பற்றாக்குறை உள்ளது. அதனால் பள்ளி, கல்லூரிகளில் இருந்து நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படையைச் சேர்ந்தவர்களை அழைக்க உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடக்கக் கல்வித்துறையில் மேலாண்மை குழு பயிற்சி

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அரசு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு 2 கட்டமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,061 தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. அப்பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி ஒவ்வொரு பள்ளியில் இருந்து 6 பேர் வீதம் 6,366 பேருக்கு அளிக்கப்படும். முதற்கட்டமாக டிச., 9 முதல் டிச.,11 வரையும், 2 ம் கட்டமாக டிச., 14 முதல் டிச., 16 வரையும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
மேலாண்மை குழுவில் உள்ள தலைவர்கள், தலைமை ஆசிரி யர்கள், <உள்ளாட்சி பிரதிநிதிகள், மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 ன் முக்கியத்துவம், குழந்தைகளின் உரிமைகள், பேரிடர் மேலாண்மை, நலக்கல்வி, மேலாண்மை குழு உறுப்பினர்களின் பணி, அரசு நலத்திட்டம், பள்ளி வளர்ச்சி திட்டம் தயாரிப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படும். இதனை அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு, உதவித் திட்ட அலுவலர் சுரேஷ்குமார் தெரிவித்தனர்.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஒருமாதமாக மூடிக்கிடக்கும் பள்ளிகள்


சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பள்ளிக்கூடங்கள்ஒரு மாதமாக மூடியே கிடக்கின்றன.கடந்த மாதம் 8–ந்தேதியில் இருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட பள்ளிக்கூடங்களுக்கு மழை காரணமாக விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து பெய்த மழையால், மழையின் அளவு மற்றும் அது பெய்யும் நிலையை பொறுத்து விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது.இந்த விடுமுறை 25–ந்தேதி வரை நீடித்தது. இதன் பின்னர் மழை கொஞ்சம் விடுமுறை எடுத்துக் கொண்டதால் பள்ளிகள் திறக்கப்பட்டன.

கடந்த மாதம் 26, 27, 28 ஆகிய தேதிகளில் மட்டும்பள்ளிகள் திறக்கப்பட்டன. 28–ந்தேதி சனிக்கிழமை என்ற போதிலும் அன்று அனைத்துபள்ளிகளுமே முழு நேரமும் செயல்பட்டன.இந்த 3 நாட்களும் பள்ளிகளின் நேரமும் அதிகரிக்கப்பட்டிருந்தது. மாலை 3.30 மணிக்கு முடியும் பள்ளிகள் 4.30 மணிவரையிலும் கூடுதலாக ஒரு மணி நேரம் செயல்பட்டன.மழையும் நன்கு ஓய்ந்திருந்ததால் தொடர்ந்து பள்ளிகள் செயல்படும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 29–ந்தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம். மறுநாள் திங்கட்கிழமை (30–ந்தேதி)யில் இருந்தே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது.இந்த மாதம் (டிசம்பர்) 1–ந்தேதி அன்று யாரும் எதிர்பாராத வகையில்பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னை மாநகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.இதையடுத்து இன்று (டிசம்பர் 6–ந்தேதி) வரை பள்ளிகளுக்கு தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. அதற்குள் மழை வெள்ளம் வடிந்து விடும். நாளை (7–ந்தேதி) முதல் பள்ளிகளை திறந்துவிட வாய்ப்பு ஏற்படும் என்றே கல்விதுறை அதிகாரிகள் நினைத்திருந்தனர்.ஆனால் இன்னும் பல இடங்களில் வெள்ளம் வடியாத நிலையில், பெரும்பாலான பள்ளிகள் முகாம்களாகவே செயல்பட்டு வருகின்றன.

இதற்கிடையே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலூர், தஞ்சாவூர்,பெரம்பலூர், வேலூர், திருவண்ணமாலை, புதுக்கோட்டை, திண்டுக்கல், ராமநாதபுரம்ஆகிய மாவட்டங்களின் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், புதுச்சேரியிலும் இன்றுகாலை முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது.இதனால் கடந்த ஒரு மாதமாகவே மூடிக்கிடக்கும் பள்ளிகள் மீண்டும் திறக்கப் படுவதற்கு மேலும் காலதாமதம் ஆகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், இன்றும்  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில்உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Flash News - கனமழை : 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு (07/12/2015) விடுமுறை அறிவிப்பு.


*திருவாரூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*நாகை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*கடலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*காஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*திருவள்ளூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

*புதுச்சேரி,காரைக்கால் பள்ளிகளுக்கு விடுமுறை

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!