Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 9 December 2015

புதிய தேர்வுக்கால அட்டவணை இணையதளத்தில் நாளை வெளியீடு:

 19-ல் தொடங்கும் டிச.12-ல் தொடங்கவிருந்த தொலைதூரக் கல்வி தேர்வுகள் - சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு
டிசம்பர் 12-ம் தேதி தொடங்கவிருந்த தொலைதூரக்கல்வி தேர்வுகள் 19-ம் தேதி தொடங்கும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பா.டேவிட்
ஜவகர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி திட்டத்தின் இளங்கலை, முதுகலை தேர்வுகள், தொழில்சார் படிப்பு தேர்வுகள், பிஎல்ஐஎஸ், எம்எல்ஐஎஸ் தேர்வுகள் டிசம்பர் 12-ம் தேதி தொடங்கவிருந்தன. இந்த தேர்வு கள் அனைத்தும் 19-ம் தேதி தொடங்கும். தேர்வுகள் வார இறுதி நாட்களில் அதாவது சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் நடைபெறும்.
திருத்தப்பட்ட புதிய தேர்வுக் கால அட்டவணை மற்றும் தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் தொலைதூரக்கல்வி நிறுவன இணையதளத்தில் (www.ideunom.ac.in) 10-ம் தேதி பதிவேற்றம் செய்யப்படும். தேர்வு தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பாக இந்த இணையதளத்தில் இருந்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு தேர்வர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடக்ககல்வி - அனைத்து வகை தொடக்கப் பள்ளிகளில் இரண்டாம் பருவத் தேர்வு ஜனவரி மாதம் நடைப்பெறும் -இயக்குனர் செயல்முறைகள்

நிதியுதவியின்றி அங்கீகாரம் வழங்கப்பட்ட பள்ளிகளில் பணிபுரிந்த காலத்தை ஊதிய நிர்ணயம் மற்றும் ஓய்வூதியம் கணக்கிட அனுமதிக்கும் அரசாணை


மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட விரும்புவோர் நிவாரணப் பொருட்களை சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் உள்ள மையத்தில் ஒப்படைக்கலாம்.- தமிழக அரசு செய்தி வெளியீடு


தமிழ்நாட்டில் 14 இடங்களில் வெள்ள முன் அறிவிப்பு மையங்கள்: மத்திய அரசு அறிவிப்பு


தமிழ்நாட்டில் 14 இடங்களில் வெள்ள முன் அறிவிப்பு மையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.தற்போது பருவமழை காலங்களில் வானிலை அறிக்கை வெளியிடப்படுகிறது. இந்த வானிலை அறிக்கையை வானொலி, தொலைக்காட்சி ஊடகங்கள், பத்திரிகைகள் வாயிலாக மக்கள் தெரிந்து

மழையால் பாதிக்கப்பட்ட 46 ஆயிரம் மாணவர்களுக்கு பாடப்புத்தகம் விநியோகம்


சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழையால் பாதிக் கப்பட்ட 46 ஆயிரம் மாணவர் களுக்கு பாடப்புத்தகங்களும், 39 ஆயிரம் பேருக்கு நோட்டுகளும், 27 ஆயிரம் பேருக்கு

டிசம்பர் 13 வரை விடுமுறை


சென்னை ,காஞ்சிபுரம், தி௫வள்ளூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு வ௫ம் டிசம்பர் 13 ந் தேதி வரை விடுமுறை

பி.எப்., சந்தாதாரர்கள் ரூ.5,000 பெறலாம்!


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, பி.எப்., எனப்படும், வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்கள், 5,000 ரூபாய் திரும்ப செலுத்தாத முன்பணம் பெறலாம்' என, பி.எப்., நிறுவனம் எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை மண்டல பி.எப்., கமிஷனர் பிரசாத் கூறியிருப்பதாவது:வெள்ளத்தால், அசையும், அசையா சொத்துகள் பாதிக்கப்பட்ட பி.எப்., சந்தாதாரர்கள், தங்கள் கணக்கில் இருந்து, திரும்பிச் செலுத்தாத வகையில், 5,000 ரூபாய் அல்லது உறுப்பினரின் பங்குத்தொகையில், 50 சதவீதத்தில் எது குறைவோ, அதை முன்பணமாக பெறலாம். வெள்ளம் பாதித்த பகுதிகள் என, தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட இடங்களில் உள்ள சந்தாதாரர்கள், உரிய அதிகாரிகளிடம் பாதிப்புக்கான சான்று பெற்று, நான்கு மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

சென்னை சந்தாதாரர்கள், இதற்கான படிவம், 31ஐ பெற்று, பாதிப்புக்கான ஆவணங்களுடன், சென்னை மண்டல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் மீது முன்னுரிமை அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

பள்ளி, கல்லூரிகள் நாளை திறக்கப்படுமா? மாணவர்-பெற்றோர் எதிர்பார்ப்பு

                 மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வியாழக்கிழமை (டிச.10) முதல் பள்ளிகள் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 ஆனால், பள்ளி-கல்லூரிகள் வெள்ள நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டுள்ளதால் அவற்றைத் தவிர்த்து மற்ற பள்ளி-கல்லூரிகள் திறக்கப்பட வாய்ப்பிருப்பதாக

நிவாரண உதவி: கோவை பள்ளி மாணவர்களின் மனித நேயம்


கோவையை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சிலர் சென்னை, கடலூர் வெள்ள நிவாரணத்துக்காக நிதியும், உதவிப் பொருட்களும் திரட்டி வந்து ஆட்சியரிடம் அளித்தனர். 10 வயதுக்குட்பட்ட இந்த மாணவர்களின் மனித நேயம், சமூகப் பார்வை, பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
பொதுமக்கள் குறைகேட்பு முகாம் கோவை

Flash News - கனமழை : 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (09/12/2015) விடுமுறை அறிவிப்பு.

சென்னை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
திருவள்ளூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
திருவாரூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
திருச்சி மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
நாகை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
தஞ்சாவூர் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
காரைக்கால் பள்ளிகளுக்கு விடுமுறை

TRB, CHENNAI : மழை வெள்ளத்தால் சேதமடைந்த TNTET தேர்ச்சி பெற்ற சான்றிதழ் மறுபடியும் DOWNLOAD செய்து கொள்ளலாம்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!